Jump to content

ஜூலை இன்னும் கறுப்பாகவே இருக்கிறது தமிழர்களுக்கு.

Recommended Posts

தமி­ழர் வாழ்­வில்- குரு­தித்­து­யர் படிந்த கறுப்பு ஜூலை இன்று!!

black-july-456d-750x430.jpg

இலங்­கைத் தமி­ழர் வாழ்­வைப் புரட்­டிப் போட்ட, மறக்­கவோ -– மன்­னிக்­கவோ முடி­யாத கொடுந்­து­யர் நாள் இன்­றா­கும். வர­லாற்­றில் ‘ஆடிக் கல­வ­ர­மாக’ அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்ட கறுப்பு நாள் இன்­றா­கும். 35 ஆண்­டு­க­ளுக்கு முன்­னர் சிங்­க­ளப் பேரி­ன­வா­தி­கள் ஆடிய கோரத் தாண்­ட­வத்­தில் சிக்­குண்டு தமி­ழி­னம் சின்­னா­பின்­ன­மா­கிய நாள் இன்று.

1983ஆம் ஆண்டு ஜூலை மாதம் திரு­நெல்­வே­லி­யில் சிங்­கள இரா­ணு­வத்­தி­னர் மீது தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளால் அதி­ர­டித் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. 13 இரா­ணு­வத்­தி­னர் உயி­ரி­ழந்­த­னர். அவர்­க­ளது உடல்­கள் தென்­ப­கு­தி­யில் அடக்­கம் செய்­யப்­ப­டும்­போது, அப்­போது ஆட்­சி­யி­லி­ருந்த ஐக்­கிய தேசி­யக் கட்சி அர­சி­னால் கல­வ­ரம் தூண்டி விடப்­பட்­டது.

தென்­ப­கு­தி­யில் வாழ்ந்த தமிழ் மக்­கள் துரத்­தித் துரத்தி அடித்து விரட்­டப்­பட்­ட­னர். தமிழ் மக்­க­ளின் வீடு­கள் சிங்­க­ளக் காடை­யர்­க­ளால் எரி­யூட்­டப்­பட்­டது. தென்­ப­கு­தி­யில் தமிழ் மக்­கள் வர்த்­த­கத்­தில் கொடி­கட்­டிப் பறந்­த­னர். இந்­தக் கல­வ­ரத்­தின் போது தமிழ் மக்­க­ளிள் வர்த்­தக நிலை­யங்­கள் இருந்த தடம் தெரி­யா­மல் அழிக்­கப்­பட்­டது.

கொடூ­ரக் கல­வ­ரத்­தில் சிக்கி பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமிழ் மக்­கள் சாவைத் தழு­வி­னர். பல நூற்­றுக் கணக்­கா­னோர் காய­ம­டைந்­த­னர். பல­கோடி ரூபா பெறு­ம­தி­யான தமிழ் மக்­க­ளின் சொத்­துக்­கள் எரித்­துச் சாம்­ப­ராக்­கப்­பட்­டது. சிறைச்­சா­லை­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் கண்­கள் பிடுங்­கப்­பட்டு, உடல் சிதைக்­கப்­பட்டு கோர­மா­கக் கொல்­லப்­பட்­ட­னர்.

ஈழத் தமி­ழர்­க­ளின் ஆயு­தப் போராட்­டம், இந்­தக் கல­வ­ரத்­து­டன் உத்­வே­கம் பெற்­றது. தமி­ழர்­க­ளின் வர­லாற்­றைத் திருப்­பிப் போட்ட, குரு­திக் கொப்­ப­ளங்­க­ளால் நினை­வு­களை எழு­திய கறுப்பு ஜூலை இன்று. மறக்க முடி­யாத மன­வ­டுவை ஏற்­ப­டு­திச் சென்ற கறுப்பு ஜூலை­யின் 35 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்­வு­கள் இன்று நடை­பெ­ற­வுள்­ளன.

http://newuthayan.com/story/09/தமி­ழர்-வாழ்­வில்-குரு­தித்­து­யர்-படிந்த-கறுப்பு-ஜூலை-இன்று.html

Link to comment
Share on other sites

கோர­மான மன­வ­டுக்களை பதிந்து தமி­ழர்­களின் மனங்­களிலிலிருந்து இன்னும் மறை­யாத கறுப்பு ஜூலை

கறுப்பு ஜூலை கல­வரம் அல்­லது 83 கல­வரம் என சாதா­ர­ண­மாகக் குறிப்­பி­டப்­படு­கின்ற 1983 ஆம் ஆண்டின் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் நடை­பெற்று 35 வரு­டங்கள் ஆகின்­றன. மூன்­றரை தசாப்­தங்கள் கடந்­து­விட்ட போதிலும், அந்த வன்­மு­றை­களின் கோர­மான மன­வ­டுக்கள் பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­களின் மனங்­களில் இருந்து இன்னும் மறை­ய­வில்லை. 

black-july.jpg

இருப்­பினும், சிங்­கள மக்­களின் ஆவே­சத்தைக் கிளப்­பி­ய­தனால் ஏற்­பட்ட ஓர் இனக்­க­ல­வ­ர­மாக அதனை நோக்­கு­கின்ற ஒரு போக்கும் நில­வு­கின்­றது. உண்­மை­யி­லேயே, அர­சியல் ரீதி­யாகத் திட்­ட­மிட்டு தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக அரங்­கேற்­றப்­பட்ட இன ஒடுக்­கு­மு­றையின், இன அழிப்பு நட­வ­டிக்­கையின் மிக மோச­மான ஆரம்ப நிகழ்­வாக அது வர­லாற்றில் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது. 

37633103_10209914931984653_2746965167311

தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக 1956, 1958, 1977, 1981 ஆகிய ஆண்­டு­களில் பேரி­ன­வா­தி­க­ளி­னதும், பேரின ஆட்­சி­யா­ளர்­க­ளி­னதும் ஆசிர்­வா­தத்­துடன் வளர்ச்சிப் போக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்ட வன்­முறைச் சம்­ப­வங்­களின் போக்கில், அடுத்த கட்­ட­மா­கவே, 1983 கறுப்பு ஜூலை வன்­மு­றைகள் அரங்­கேற்­றப்­பட்­டன என்­பதை ஊன்றிக் கவ­னிப்­ப­வர்­களால் புரிந்து கொள்ள முடியும்.  

அது மட்­டு­மல்­லாமல், நீண்­ட­கால இன அழிப்பு நட­வ­டிக்­கை­களை நன்கு திட்­ட­மிட்ட வகையில் பேரி­ன­வாத அர­சி­யல்­வா­திகள் தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­வ­தற்­கு­ரிய பிள்­ளையார் சுழி­யா­கவும் அது பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

ஆனால், சிங்­கள மக்கள் மத்­தியில் அது, திடீர் ஆவே­சத்­தினால் ஏற்­பட்ட ஒரு மன எழுச்சி சார்ந்த நிகழ்­வாக மாறிப்­போ­யுள்­ளது. மறக்­கப்­பட்­டு­விட்­டது என்­று­கூடச் சொல்­லலாம். தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக காலத்­துக்குக் காலம் முன்­னெ­டுக்­கப்­பட்ட இன­வன்­முறை தாக்­கு­தல்­களின் உள்­நோக்­கத்தை, அவற்றில் மறைந்­துள்ள இன­வாத ஒடுக்­கு­முறை அர­சி­யலின் தாற்­ப­ரி­யத்தை தமிழ்த் தரப்­பி­னரில் சிலர் இன்னும் சரி­யாகப் புரிந்து கொள்­ள­வில்லை. அதன் கார­ண­மா­கவே, கறுப்பு ஜூலை வன்­முறைச் சம்­ப­வத்தை, திடீர் ஆவேச மன எழுச்­சிக்கு உள்­ளாகி செயற்­ப­டு­வதை இயல்­பாகக் கொண்ட சிங்­கள மக்­களின் உணர்ச்சி வசப்­பட்ட ஓர் எதிர்­வினைச் செய­லா­கவே அவர்கள் நோக்­கு­கின்­றார்கள். 

அந்த வகையில் 83 கறுப்பு ஜூலை வன்­மு­றை­களை மீண்டும் மீண்டும் நினை­வு­கூர்­வதும், அது­பற்றி சிந்­திப்­பதும், நாட்டின் நல்­லி­ணக்­கத்­திற்கும், இன ஐக்­கி­யத்­திற்கும் பாத­க­மா­கவே அமையும் என்றும் அவர்கள் சித்­த­ரிக்­கவும் முற்­ப­டு­கின்­றார்கள்.

yimg_p0VVxJ.jpg

யாழ்ப்­பாணம் திரு­நெல்­வே­லியில் 13 சிங்­கள இரா­ணு­வத்­தி­னரை விடு­த­லைப்­பு­லிகள் ஒளித்­தி­ருந்து தாக்கிக் கொலை செய்­ததன் விளை­வாக எழுந்த, ஓர் உணர்ச்­சி­க­ர­மான திடீர் ஆவே­சத்தின் எதிர் நட­வ­டிக்­கை­யா­கவே, 83 கறுப்பு ஜூலை வன்­முறைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­ற­தா­கவே, பெரும்­பான்­மை­யான சிங்­கள மக்­களால் பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

சிங்­கள மக்கள் அனை­வ­ருமே தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றை­களில் ஈடு­ப­ட­வில்லை என்­ப­தையும், சிங்­கள மக்­களில் பெரு­ம­ள­வானோர், தங்கள் இனத்தைச் சார்ந்த குண்­டர்­க­ளினால் தாங்­களும் தாக்­கப்­ப­டுவோம் என்ற அச்­சத்­துக்கு மத்­தி­யிலும், பாதிக்­கப்­பட்ட தமி­ழர்கள் பல­ருக்கு அப­ய­ம­ளித்து, ஆபத்­துக்­களில் இருந்து பாது­காத்து அனுப்பி வைத்­தார்கள் என்­ப­தையும் இந்தப் பார்­வைக்கு ஆதா­ர­மாக அவர்கள் முன்­வைக்­கின்­றார்கள். இது, சாதா­ரண சிங்­கள மக்கள் மத்­தியில் அர­சியல் ரீதி­யான ஒரு பிர­சார கருத்­தா­கவும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.  ஆனால், ஏற்­க­னவே திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்­ப­டையில் வெகு நேர்த்­தி­யாக நடத்தி முடிக்­கப்­பட்ட ஓர் இனப்­ப­டு­கொலை நட­வ­டிக்­கையே 83 கறுப்பு ஜூலை வன்­முறை என்­பதே உண்மை.

என்ன நடந்­தது, எப்­படி நடந்­தது?

தமி­ழர்கள் செறிந்து வாழ்­கின்ற இலங்­கையின் வடக்கே பலாலி இரா­ணுவ தளத்தில் இருந்து, யாழ்ப்­பாணம் நக­ரத்தை நோக்கிச் சென்ற இரா­ணுவ வாகனத் தொட­ரணி ஒன்றை திரு­நெல்­வேலி தபால் பெட்டிச் சந்­தியில் பதுங்­கி­யி­ருந்த விடு­த­லைப்­பு­லி­களின் அணி­யொன்று தாக்­கி­யதில் 13 இரா­ணு­வத்­தினர் கொல்­லப்­பட்­டனர். இலங்­கையின் இலகுக் காலாட்­ப­டையைச் சேர்ந்த லெப்­டினன் தர இரா­ணுவ அதி­கா­ரி­யா­கிய வாஸ் குண­வர்­தன அவர்­களில் முக்­கி­ய­மா­னவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்தச் சம்­பவம் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி இரவு 11.30 மணி­ய­ளவில் நடை­பெற்­றது. 

நான்கு வாக­னங்­களைக் கொண்­டி­ருந்த அந்த இரா­ணுவ வாகனத் தொட­ர­ணியின் முன்னால் சென்ற இரா­ணுவ ஜீப் வண்டி விடு­த­லைப்­பு­லி­களின் கண்­ணி­வெடித் தாக்­கு­தலில் சிக்கி வெடித்­துச் சித­றி­யது. பின்னால் வந்த இரா­ணுவ ட்ரக் உள்­ளிட்ட வாக­னங்­களில் இருந்த இரா­ணு­வத்­தினர் மீது முற்­றுகைத் தாக்­கு­தலைத் தொடுத்த விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் இடையில் மோதல் ஏற்­பட்­டது, சம்­பவ இடத்­தி­லேயே 13 இரா­ணு­வத்­தினர் கொல்­லப்­பட்­டனர். இரண்டு பேர் படு­கா­ய­ம­டைந்து, பின்னர் மர­ண­ம­டைந்­தனர். விடு­த­லைப்­பு­லிகள் தரப்­பிலும் உயிர்ச்­சேதம் ஏற்­பட்­டி­ருந்­தது. 

நள்­ளி­ரவு நேரத்தில் இடம்­பெற்ற இந்தச் சம்­பவம் பற்­றிய தக­வல்கள் சிங்­க­ள­வர்கள் கொல்­லப்­பட்­ட­தாக பெரி­து­ப­டுத்­தப்­பட்ட அளவில் நாட்டின் தென்­ப­குதி எங்கும் சிங்­கள மக்கள் மத்­தியில் பரப்­பப்­பட்­டது, 

மறுநாள் காலை பத்­தி­ரி­கை­களில் தலைப்புச் செய்­தி­யாக இந்தச் சம்­பவம் பிர­சு­ர­மா­கி­யி­ருந்­தது. கொல்­லப்­பட்­ட­வர்­களின் பெயர் விப­ரங்கள் அந்தச் செய்­தியில் விப­ர­மாக வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன. செய்தித் தணிக்கை இருந்த போதிலும், யாழ்ப்­பா­ணத்தில் 13 சிங்­க­ள­வர்கள் கொல்­லப்­பட்­டார்கள் என்ற வகையில் எவ்­வாறு செய்தி பிர­சு­ர­மா­வ­தற்கு செய்தித் தணிக்கை அதி­காரி டக்ளஸ் லிய­னகே அனு­ம­தித்தார்? வன்­மு­றைகள் வெடிப்­ப­தற்கு வழி­ச­மைக்கும் வகையில் இவ்­வாறு செய்தி வெளி­யிட அனு­ம­திப்­பதன் மூலம் செய்தித் தணிக்கை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் என்ன பயன் இருக்­கின்­றது என்று ஜூலை வன்­மு­றைகள் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பிய அப்­போ­தைய கல­வான தொகுதி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் முத்­தெட்­டு­வே­கம வின­வி­யி­ருந்தார். 

அக்­கா­லப்­ப­கு­தியில் தமிழ் இளை­ஞர்­களின் ஆயுதப் போராட்டம் அங்­கொன்றும் இங்­கொன்­று­மான தாக்­கு­தல்­களே இரா­ணு­வத்தின் மீது மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தன. ஆனால் திரு­நெல்­வேலிச் சந்­தியில் இடம்­பெற்ற தாக்­கு­த­லி­லேயே 13 இரா­ணு­வத்­தினர் ஒரே தட­வையில் கொல்­லப்­பட்­டி­ருந்­தனர். 

அர்ப்­ப­ணிப்­போடு மிகத் துணி­க­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்ட போதிலும், ஆயுதப் போராட்­டத்தை அப்­போது அதி­கா­ரத்தில் இருந்த ஜே.ஆர் ஜய­வர்­தன அரசு பெரி­தா­கவோ முக்­கி­யத்­துவம் மிக்­க­தா­கவோ கரு­த­வில்லை. அத்­த­கைய ஒரு சூழலில் நள்­ளி­ரவு வேளையில் இரா­ணுவ வாகனத் தொட­ரணி மீது கண்­ணி­வெடித் தாக்­கு­த­லுடன் நடத்­தப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டுத் தாக்­கு­தலில் ஓர் அதி­காரி உட்­பட 13 பேர் கொல்­லப்­பட்­டமை ஒரு வகையில் அர­சாங்­கத்தை அதிர்ச்சி அடை­யவே செய்­தி­ருந்­தது. இரா­ணு­வத்­தி­ன­ரா­கிய 13 சிங்­க­ள­வர்கள் விடு­த­லைப்­பு­லி­க­ளினால் கொல்­லப்­பட்­டார்கள் என்­பது சிங்­கள மக்­க­ளையும் பதட்­ட­ம­டையச் செய்­தி­ருந்­தது. 

july_1983.jpg

இவ்­வாறு அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டி­ருந்த அதிர்ச்­சியும் சிங்­கள மக்கள் மத்­தி­யி­லான பதட்­டமும், ஏற்­க­னவே திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த இன அழிப்பு நட­வ­டிக்­கைக்­கான வன்­மு­றை­களைத் தூண்­டி­வி­டு­வ­தற்கு அப்­போ­தைய ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­திற்கு வாய்ப்­பாக அமைந்­து­விட்­டது. அதற்கு உறு­து­ணை­யாக இரா­ணு­வத்­தினர் மீதான யாழ்ப்­பாணத் தாக்­கு­த­லை­ய­டுத்து, பௌத்த பிக்­கு­க­ளையும் சாதா­ரண சிங்­கள மக்­க­ளையும் விடு­த­லைப்­பு­லிகள் கொல்லப் போகின்­றார்கள் என்றும், தலை­ந­கரில் தாக்­குதல் நடத்­து­வ­தற்­காக விடு­த­லைப்­பு­லிகள் கொழும்­புக்குள் ஊடு­ரு­வி­விட்­டார்கள் என்றும் பெரிய அளவில் பொய்ப்­பி­ர­சா­ரமும் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டி­ருந்­தது. 

தாக்­கு­தல்­களில் கொல்­லப்­பட்ட படை­யி­ன­ரு­டைய உடல்கள் அவர்­க­ளு­டைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­வதே வழக்கம். ஆனால், தேசிய பாது­காப்புச் சபையின் தீர்­மா­னத்­திற்கு அமைய அந்த நடை­முறை அப்­போது கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. இத­னை­ய­டுத்து, விடு­த­லைப்­பு­லி­களின் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­டி­ருந்த 13 இரா­ணு­வத்­தி­ன­ரது உடல்­க­ளுக்கும் வழ­மைக்கு மாறாக ஒரே இட­மாக, பொரளை கனத்தை மயா­னத்தில் இறு­திக்­கிரி­யைகள் செய்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. ஆனால் குறிப்­பிட்ட நேரத்­திற்கு அந்த உடல்கள் அங்கு வந்து சேர­வில்லை. மிகுந்த தாமதம் ஏற்­பட்­டி­ருந்­தது. 

இதனால், அந்த இறு­திக்­கி­ரி­யை­களில் கலந்து கொள்­வ­தற்­காக அங்கு 24 ஆம் திகதி காலை முதல் கூடத் தொடங்கி பதட்­டத்­துக்கு உள்­ளா­கி­யி­ருந்த சிங்­கள மக்கள் மத்­தி­யி­லேயே விடு­த­லைப்­பு­லிகள் பற்­றிய அச்­சந்­தரும் வகை­யி­லான பொய்ப்­பி­ர­சாரம் செய்­யப்­பட்­டி­ருந்­தது. அந்த மக்­களின் பதட்ட உணர்வும் விடு­த­லைப்­பு­லிகள் தாக்க வந்­து­விட்­டார்கள் என்ற அச்ச உணர்வும் அவர்­களை ஆத்­தி­ர­ம­டையச் செய்­த­துடன், தமிழ் மக்கள் மீது தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தற்குத் தூண்­டி­விட்­டி­ருந்­தது.

கட்­டுக்­க­டங்­காமல் வெடித்த வன்­மு­றைகள்  

குண்­டர்கள் தாக்­கு­தல்­களில் ஈடு­ப­டு­வ­தற்கும், சிங்­கள மக்­களின் பதட்­டத்­தையும், அச்­சத்­தையும் நீடிக்கச் செய்­வ­தற்கும் உதவும் வகையில் விடு­த­லைப்­பு­லிகள் தாக்­கு­தல்கள் நடத்தப் போகின்­றார்கள் என்ற சாராம்­சத்தில் பொய்ப்­பி­ர­சா­ரங்கள் நாடெங்­கிலும் முடுக்­கி­வி­டப்­பட்­டி­ருந்­தன.

இதனால் கொழும்பில் மட்­டு­மல்­லாமல், கண்டி உட்­பட நாட்டின் பல முக்­கிய நக­ரங்­க­ளிலும் மலை­யகம் உட்­பட தமி­ழர்கள் கலந்து வாழ்ந்த தென்­ப­குதி மாவட்­டங்­க­ளிலும் பர­வ­லாக வன்­மு­றைகள் வெடித்­தி­ருந்­தன. தமி­ழர்­க­ளுக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலை­யங்கள், தொழிற்­சா­லைகள், வீடுகள், வாக­னங்கள், என்­பன தீயிட்டு கொளுத்­தப்­பட்­டன. எல்லா இடங்­க­ளிலும் கொள்­ளை­யி­டப்­பட்­டவை போக மிஞ்­சி­யவை பெற்றோல் ஊற்றி எரிக்­கப்­பட்­டன. 

கத்­திகள், கம்­பு­க­ளுடன், பெற்றோல் கொள்­க­லன்­களை ஏந்­திய கும்­பல்கள் கூட்டம் கூட்­ட­மாக நாட்­டையும் மக்­க­ளையும் பாது­காக்க கொஞ்ச பெற்றோலும் எண்­ணெயும் தாங்கோ என்று  கோஷ­மிட்­ட­வாறு வன்­மு­றைகளில் ஈடு­பட்­டி­ருந்­தன. கட்­ட­டங்கள் எதுவும் அடித்து நொறுக்­கப்­ப­ட­வில்லை. கட்­ட­டங்கள் மீது குண்டுத் தாக்­கு­தல்கள் எதுவும் நடத்­தப்­ப­ட­வில்லை. முழு­மை­யாக சொத்­துக்­க­ளுக்கும் உடை­மை­க­ளுக்கும் சேதம் விளை­விக்­கப்­பட்­டன. இந்த வன்­மு­றை­களில் பெரிய அளவில் உயிர்ச்­சே­தங்­களும் ஏற்­பட்­டன. பெரும் எண்­ணிக்­கை­யா­ன­வர்கள் அக­தி­க­ளா­கினர். 

பல தினங்கள் தொடர்ந்த வன்­மு­றை­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக அர­சாங்கம் ஊர­டங்கு சட்­டத்தைப் பிறப்­பி­த்­தி­ருந்­தது, ஆனால் ஊர­டங்கு வேளை­யிலும் குண்­டர்கள் தடுப்பார் எவ­ரு­மின்றி சுதந்­தி­ர­மாக வன்­செ­யல்­களில் ஈடு­பட்­டி­ருந்­தார்கள். ஊர­டங்கை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக   ஆயு­தந்­த­ரித்து கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பொலி­ஸாரும் படை­யி­னரும், வேடிக்கை பார்த்துக் கொண்­டிருந்­த­னரே தவிர, வன்­மு­றையில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களைக் கட்­டுப்­ப­டுத்­தவே இல்லை.

Black-July-e1406180204600.jpg 

நிலை­மையைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்கு, வன்­மு­றை­களில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் மீது பொலி­ஸாரும் படை­யி­னரும் ஏன் துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­ய­வில்லை என டைம்ஸ் ஒவ் இந்­தியா பத்­தி­ரிகை, அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜய­வர்­த­ன­விடம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நேர்­காணல் ஒன்­றின்­போது வின­வி­யது.

'படை­யி­ன­ரிடம் பெரிய அளவில் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான உணர்வு ஏற்­பட்­டி­ருந்­தது என நான் நினைக்­கிறேன். கலகத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தினால், அது சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­யாகப் போய்­விடும் என்றும் அவர்கள் (படை­யினர்) உணர்ந்­தி­ருந்­தார்கள். உண்­மை­யி­லேயே சில இடங்­களில் அவர்கள், அவர்­களை (கல­கக்­கா­ரர்­களை) ஊக்­கு­வித்­தி­ருந்­ததை நாங்கள் கண்டோம்.....' என ஜனா­தி­பதி பதி­ல­ளித்­தி­ருந்தார்.   

வெலிக்­கடை சிறைச்­சாலைப் படு­கொ­லைகள்

கறுப்பு ஜூலை வன்­மு­றை­களைத் தூண்­டி­விட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்ற இரா­ணு­வத்தின் மீதான யாழ்ப்­பாணம் திரு­நெல்­வேலி தாக்­கு­த­லை­ய­டுத்து, ஜூலை சம்­பவ இடத்­திற்கு விரைந்த படை­யினர் அந்தச் சூழ­லிலும், ஏனைய இடங்­க­ளிலும் கண்­மூ­டித்­த­ன­மாக நடத்­திய தாக்­கு­தல்­களில் மாத்­திரம் 50க்கும் மேற்­பட்ட பொது­மக்கள் கொல்­லப்­பட்­டார்கள்.

இரா­ணு­வத்தின் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கும், இரா­ணு­வத்­தினர் உயி­ரி­ழந்­த­மைக்கும் அளிக்­கப்­பட்ட முக்­கி­யத்­துவம், பொது­மக்கள் பாதிக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்கப்பட­வில்லை. அந்த சம்­ப­வங்கள் பற்­றிய தக­வல்கள் இருட்­ட­டிப்பு செய்­யப்­பட்­டி­ருந்­தன. அதனால் ஊட­கங்­களின் ஊடாக உண்மை நிலை­மையை உட­னுக்­குடன் அறிய முடியா சூழல் ஏற்­பட்­டி­ருந்­தது. 

அப்­போது கொழும்பில் இருந்த வெளி­நாட்டு செய்­தி­யா­ளர்கள் கடு­மை­யாகக் கண்­கா­ணிக்­கப்­பட்­டார்கள். அவர்கள் தங்­க­ளு­டைய ஹோட்டல் அறை­களில் இருந்து வெளியில் வரு­வ­தற்கும் சில நாட்கள் அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருந்­தது. கட்­டுப்­பா­டு­களை மீறிச் செயற்­பட்ட வெளி­நாட்டுச் செய்­தி­யா­ளர்கள் நாட்டில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட சம்­ப­வமும் இடம்­பெற்­றி­ருந்­தது.

கொழும்பு உட்­பட நாட்டின் பல இடங்­க­ளிலும் மட்டும் வன்­மு­றைகள் தலை­வி­ரித்­தா­ட­வில்லை. குட்­டி­மணி, தங்­கத்­துரை உள்­ளிட்ட முக்கிய தமிழ் அர­சியல்கைதிகள் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த வெலிக்­கடைச் சிறைச்­சா­லை­யிலும், வன்­மு­றைகள் ஊடு­ரு­வி­யி­ருந்­தன. சிறைச்­சா­லைக்­குள்ளே இருப்­ப­வர்­க­ளுக்கு ஊரடங்கு சட்டம் இருந்­தாலும் ஒன்­றுதான் இல்­லா­விட்­டாலும் ஒன்­றுதான். ஏனெனில் சிறைச்­சாலை நடை­மு­றை­களும் சட்ட விதி­களும் கடு­மை­யா­ன­வை­தானே? குறிப்­பிட்ட நேரத்தில் மாத்­திரம் குறிப்­பிட்ட தேவை­க­ளுக்­காக மட்­டுமே அவர்கள் அடைக்­கப்­பட்­டுள்ள சிறைக்­கூட அறை­களில் இருந்து வெளியில் அவர்­க­ளுக்­கென அனு­ம­திக்­கப்­பட்ட பிர­தே­சத்­திற்குள் செல்ல முடியும். 

37706899_10209914930384613_7424080996699

இந்த நிலையில், ஜூலை 23 ஆம் திகதி பிற்­பகல் 2.30 மணி இருக்கும். ஊர­டங்கு சட்டம் வெளியில் நடை­மு­றையில் இருந்­தது. வெலிக்­கடை சிறைச்­சா­லையில் பல்­வேறு குற்றச் செயல்­க­ளுக்­காக சிறை­வாசம் அனு­ப­வித்த சிங்­களக் கைதிகள் அவர்கள் அடைக்­கப்­பட்­டி­ருந்த அறை­களில் இருந்து வெளியில் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டார்கள். அவர்கள் குழுக்­க­ளாகப் பிரிந்­தார்கள். கத்­திகள், விறகு கட்­டைகள், இரும்­புக்­கம்­பிகள் என்­பன அவர்­க­ளு­டைய கைகளில் இருந்­தன. தமிழ் அர­சியல் கைதிகள் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பகு­தி­களை நோக்கி அவர்கள் ஆக்­ரோ­ஷ­மாகச் சென்­றார்கள். 

அப்­போது அங்கு குட்­டி­மணி, தங்­கத்­துரை ஆகிய மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்­த­வர்கள் உள்­ளிட்ட 73 தமிழ் அர­சியல் கைதிகள் அங்கு வைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். பனா­கொட இரா­ணுவ முகாமில் வைக்­கப்­பட்­டி­ருந்த முக்­கிய தமிழ் அர­சியல் கைதிகள் இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­னர்தான் வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு மாற்­றப்­பட்­டி­ருந்­தார்கள். 

காட்­டு­மி­ராண்­டித்­தனம்

வெலிக்­கடை சிறைச்­சா­லையின் மாடியில், அந்தக் கைதிகள் அடைக்­கப்­பட்­டி­ருந்த மண்­ட­பங்கள், அறை­களின் கத­வு­களை அடித்து உடைத்துக் கொண்டு கும்­ப­லாகச் சென்ற சிங்­களக் கைதிகள் கூச்­ச­லிட்­ட­வாறு உட்­பி­ர­வே­சித்­தார்கள். என்ன நடக்­கின்­றது என்று உணர்ந்து கொள்­வ­தற்கு முன்பே அங்­கி­ருந்த தமிழ் அர­சியல் கைதிகள் அடித்தும் முறித்தும், வெட்­டியும் கொத்­தியும் சரிக்­கப்­பட்­டார்கள். நிரா­யு­த­பா­ணி­க­ளான அந்த சிறைக்­கை­திகள் மூர்க்­கத்­த­ன­மாக தாக்­கப்­பட்­ட­துடன், குற்­று­யிரும், குலை உயி­ரு­மாக அங்­கி­ருந்து, வெளியில் இழுத்து வந்து அந்­தக்­கட்­டி­டத்­திற்­குள்ளே மைதானம் போன்ற வெளியில் போட்டு கூடி­நின்று அவர்­களை மேலும் தாக்கிக் குத­றி­னார்கள். 

தாங்கள் இறந்த பின்னர் மல­ரப்­போகும் ஈழத்தைக் காண வேண்டும் என்­ப­தற்­காக தங்­க­ளு­டைய கண்­களைத் தானம் செய்­தி­ருந்த தங்­கத்­துரை, குட்­டி­மணி ஆகி­யோரின் கண்கள் பிய்த்து எடுக்­கப்­பட்டு கால்­களில் போட்டு மிதிக்­கப்­பட்­டன. அதனைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்­த­வர்கள் வெற்றி கோஷ­மிட்டு ஆர­வாரம் செய்­தார்கள். இந்த சம்­ப­வத்தில் 35 தமிழ் அர­சியல் கைதிகள் கோர­மாகக் கொல்­லப்­பட்­டார்கள். 

இந்த சம்­ப­வத்தின் பின்னர் ஒரு நாள் மிகுந்த பதட்­டத்­துடன் கழிந்­தது. இறந்­த­வர்கள் போக எஞ்­சி­யி­ருந்த தமிழ் அர­சியல் கைதிகள் தங்­க­ளுக்கு என்ன நடக்­குமோ என்று அச்­சத்தில் உறைந்து போயி­ருந்­தார்கள். இருப்­பினும் தங்­க­ளுக்கு உணவு உண்­ப­தற்­காக வழங்­கப்­பட்­டி­ருந்த தட்­டுகள், போர்த்திக் கொள்­வ­தற்­காக வழங்­கப்­பட்­டி­ருந்த போர்­வைகள் அங்­கி­ருந்த மேசையின் மரக்­கால்கள் என்­ப­வற்றை ஆயு­தங்­க­ளாகக் கொண்டு முடிந்த அளவில் போரா­டு­வ­தற்குத் தயா­ராக இருந்­தார்கள். அந்த நிலையில் 27 ஆம் திகதி இரண்­டா­வது நாளாக, தமிழ் அர­சியல் கைதிகள் மீது சிங்­களக் கைதிகள் தமது காடைத்­த­ன­மான தாக்­கு­தல்­களை நடத்­தி­னார்கள். 

இந்தத் தாக்­கு­த­லின்­போது, இல­குவில் தமிழ்க் கைதி­களை அவர்­களால் முதல் நாளைப் போன்று வெளியில் இழுத்துச் செல்ல முடி­ய­வில்லை. போராட்­டத்தின் பின்னர் இழுத்துச் செல்­லப்பட்ட, காந்­தி­யத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜ­சுந்­தரம் உள்ளிட்ட 18 பேர் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மாக அடித்துக் கொல்­லப்­பட்­டார்கள். 

சிறைச்­சா­லைக்­குள்ளே நடை­பெற்ற இந்த மிரு­கத்­த­ன­மான தாக்­கு­தல்கள் குறித்தும், தண்­டனைக் கைதிகள் உள்­ளிட்ட தமிழ் அர­சியல் கைதிகள் படு­கொலை செய்­யப்­பட்­டமை குறித்தும், அர­சாங்கம் எந்­த­வி­த­மான சட்ட நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­க­வில்லை. நீதித்­து­றையின் பொறுப்பில் சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் நேரடி கண்­கா­ணிப்பில் வைக்­கப்­பட்­டி­ருந்த 53 தமிழ் அர­சியல் கைதிகள் படு­கொலை செய்­யப்­பட்­டமை மிக மோச­மான மனித உரிமை மீற­லாக வர­லாற்றில் பதி­வா­கி­யி­ருக்­கின்­றதே தவிர, அத்­த­கைய சம்­ப­வங்கள் மீண்டும் இடம்­பெ­றாத வகையில் சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டவே இல்லை.

37661386_10209914931784648_5608872399723

கறுப்பு ஜூலை வன்­மு­றை­க­ளின்­போது இடம்­பெற்ற கொள்ளை, படு­கொ­லைகள், தீவைப்பு போன்ற குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­ட­வர்கள் அடை­யாளம் காணப்­ப­டவில்லை. இந்த வன்­மு­றை­களின் பின்னர், ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி, வெலிக்­கடை சிறைச்­சாலை சம்­ப­வங்கள் குறித்து எதிர்க்­கட்­சி­யினர் பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பினர். அந்த மோச­மான சம்­ப­வங்­களைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு ஏன் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என அவர்கள் வின­வினர்.

அதற்கு, 'ஒரு சிங்­களக் கைதியும் கூட அந்த சம்­ப­வத்தில் கொல்­லப்­பட்­டாரே.....' என்­பதே அப்­போ­தைய பிர­தமர் பிரே­ம­தா­சவின் பதி­லாக இருந்­தது என்று பாரா­ளு­மன்ற கூட்­டப்­ப­திவில் - ஹேன்­சார்டில் பதி­வா­கி­யுள்­ளது. 

கறுப்பு ஜூலை வன்­மு­றைகள் அர­சாங்­கத்தைக் கவிழ்ப்­ப­தற்­காக மூன்று அர­சியல் கட்­சிகள் சர்­வ­தேச சதித்­திட்­டத்தின் ஊடாக சதி செய்­தி­ருக்­கின்­றன என்று அர­சாங்கம் அறிக்கை வெளி­யிட்­டி­ருந்­தது. 

ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­தன நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரையில், நாட்டின் ஜனா­தி­ப­திக்கும், அர­சாங்­கத்­திற்கும் எதி­ராக வன்­மு­றை­யான மனங்­கொண்­ட­வர்­க­ளாகத் தூண்­டி­வி­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை நக்­ஸ­லைட்­டுகள் என்­ற­ழைக்­கப்­ப­டு­கின்ற குழு­வினர் மேற்­கொண்­டி­ருந்­தனர் என்­ப­தற்­கான சான்­றுகள் கிடைத்­துள்­ளன என்று தெரிவித்திருந்தார். 

அப்­போ­தைய ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும், அர­சாங்­கமும் கறுப்பு ஜூலை சம்­ப­வங்­களின் உண்­மை­யான நிலை­மை­களை மறைத்து திசை­தி­ருப்­பு­கின்ற நட­வ­டிக்­கை­களில் பகி­ரங்­க­மா­கவே ஈடு­பட்­டி­ருந்­தார்கள் என்­பதை அவர்கள் அப்­போது தெரி­வித்­தி­ருந்த கருத்­துக்கள் பட்­ட­வர்த்­த­ன­மாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தன. 

கறுப்பு ஜூலையின் பின்­ன­ரான நிலை­மைகள்

கறுப்பு ஜூலை வன்­மு­றைகள் பற்­றிய உண்­மையைக் கண்­ட­றி­வ­தற்­கான விசா­ர­ணைகள் காலம் தாழ்த்­தியே நடத்­தப்­பட்­டன. இருப்­பினும் அந்த விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­பட்ட உண்­மை­களும், கற்­ற­றிந்த பாடங்­களும் அத்­த­கைய வன்­மு­றைகள் மீண்டும் இடம்­பெ­றாத வகையில் தடுப்­ப­தற்கும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நியா­யமும் நியா­ய­மான இழப்­பீடும் வழங்­கப்­ப­டு­வ­தற்கு வழி­வ­குக்­க­வில்லை. மாறாக சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய தமிழ் மக்கள் மீது நடத்­தப்­பட்ட 83 ஜூலை மாத இன­வெறித் தாக்­கு­தலைப் போன்றே மூன்று தசாப்­தங்­க­ளுக்குப் பின்னர் நாட்டின் இன்­னு­மொரு சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய முஸ்­லிம்கள் மீது மத ரீதி­யான தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. ஒன்­றுக்கும் மேற்­பட்ட முறை­களில் பல்­வேறு கார­ணங்­களை முன்­வைத்து இந்தத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. 

நாட்­டையும் சிங்­கள மக்­க­ளையும் சர்­வ­தேச ரீதியில் தலை­கு­னியச் செய்த 83 கறுப்பு ஜூலை வன்­மு­றை­களைப் போன்ற சம்­ப­வங்­களின் ஊடாக சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய தமிழ் மக்­களை இன­ரீ­தி­யாக ஒடுக்கி ஓர் இனச்­சுத்­தி­க­ரிப்பை மேற்­கொள்­வதை பேரி­ன­வாத அர­சி­யல்­வா­தி­களும் அர­சியல் தலை­வர்­களும் தவிர்த்­துள்­ளார்கள். மாறாக, அர­சியல் ரீதி­யாக நுணுக்­க­மான மாற்று வழி­களின் ஊடாக இன­ச்­சுத்­தி­க­ரிப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதை மரபு ரீதி­யான வழி­மு­றை­யாகக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

37646435_10209914932064655_5246375407594

இந்த வகை­யி­லேயே தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­கான போராட்டம் பயங்­க­ர­வா­த­மாகச் சித்­த­ரிக்­கப்­பட்டு அண்டை நாடா­கிய இந்­தியா மற்றும் அமெ­ரிக்கா உள்­ளிட்ட சர்­வ­தேச நாடு­க­ளையும் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடு­க­ளையும் உத­விக்கு நாடி, அவர்­களின் இரா­ணுவ, பொரு­ளா­தார உத­வி­களின் மூலம் விடு­த­லைப்­பு­லி­களை மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் இரா­ணுவ ரீதி­யாக அழித்து ஒழித்­தது. 

யுத்தம் முடி­வ­டைந்த பின்­னரும், இனப்­பி­ரச்­சி­னைக்கும் ஏனைய எரியும் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வு­களைக் காணாமல் சாக்கு போக்­கு­களைக் கூறியும் நொண்­டிச்­சாட்­டுக்­களை முன்­வைத்தும் அர­சுகள் காலம் கடத்தி வரு­கின்­றன. அத்­துடன் தமிழ் மக்­களின் தாயக மண்ணை அப­க­ரித்தும்,  புத்தர் சிலை­க­ளையும் பௌத்த விகா­ரை­க­ளையும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் இடங்­களில் நிர்­மா­ணித்தும் சிங்­களக் குடி­யேற்­றங்­களை அமைத்தும் இனப்­ப­ரம்­பலை தலை­கீழாக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. 

இந்த நட­வ­டிக்­கைகள்   83 கறுப்பு ஜூலையின் திட்டமிட்ட வன்முறை சார்ந்த இனஅழிப்பு நடவடிக்கைகளாக அல்லாமல், இராஜதந்திர நகர்வுகளாகவும் அரசியல் தந்திரோபாயச் செயற்பாடுகளாகவும் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு கறுப்பு ஜூலையே ஆரம்ப சுழியிட்டிருந்தது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.  

http://www.virakesari.lk/article/37089

Link to comment
Share on other sites

1983 ஜுலை 23: ஈழத் தமிழ் இனத்தின் நெஞ்சில் காயாத இரத்தம்!

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்..

july-83.jpg

கறுப்பு ஜுலை எனப்படும் ஆடிக்கலவரம் நடந்து 35 வருடங்களாகின்றன. கறுப்பு ஜுலையை அனுபவித்த தமிழனால் மட்டுமல்ல கறுப்பு ஜுலைக் காலத்தில் வாழ்ந்த தமிழனால் மட்டுமல்ல எவராலும் மறக்க முடியாதபடி நெஞ்சில் பெரும் காயமாக ஆறாமல் ஆடிக்கலவரம் இருக்கிறது. ஈழத் தமிழ் மக்களிடத்தில் இந்தக் கறுப்பு ஜுலைதான் வரலாற்றை திருப்பிப் போடத் தொடங்கியது. இனவெறி வன்முறைகளும் படுகொலைகளும் உரிமை மறுப்புக்களுமே தமிழ் மக்களிடத்தில் ஆறாக காயங்களை நெஞ்சில் உருவாக்கியது. தமிழ் இனத்திற்கு விடுதலையும் நாடும் உரிமையும் தேவை என்கிற அவசியத்தை ஏற்படுத்தியது.

இலங்கைத்தீவும் ஈழமும் வெடித்து இரண்டு நிலங்கள் என்ற தேசங்களாக உள்ளன என்ற உண்மையை உணர்த்தியது. சிங்களவர்களுடன் தமிழர்கள் ஒரு பொழுதும் சேர்ந்து வாழ முடியாது என்கிற அனுபவக் கொடுமை நிகழ்ந்தது. கறுப்பு ஜுலையின் சாட்சியங்கள் இன்றும் நமக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கறுப்பு ஜுலைக் காலத்தில் குழந்தைகளாயும் கருவுற்றும் இருந்தவர்கள் இன்றும் நமது மத்தியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒவ்வொரு தமிழரும் தனக்கு புத்தி ஏற்படுகிற காலத்தில் தனது இனத்தை குறித்து அறியத் தொடங்கும் காலத்தில் கறுப்பு ஜுலையைத்தான் முதலில் படிக்கிறார். ஈழத் தமிழ் இனம் எதிர் கொண்ட வரலாற்றின் மிகப் பெரும் பயங்கரத்தை படிப்பவர்கள் எல்லோரது நெஞ்சும் உடைந்து போகின்றன.

1983 ஜுலை 23ஆம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகள் திருநெல்வேலிப் பகுதியில் இலங்கை இராணுவத்தை இலக்கு வைத்துத் தாக்குதல் ஒன்றை நடத்தியிருந்தார்கள். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனோடு லெப்.கேணல் கிட்டு, லெப்.கேணல் விக்டர், லெப்.கேணல் பொன்னம்மான், லெப்.கேணல் அப்பையா, லெப்பினன் செல்லக்கிளி அம்மான், மேஜர் கணேஸ் உட்பட்ட போராளிகள் தாக்குதிலில் ஈடுபட்டார்கள். இலங்கை இராணுவத்தினருக்கு எதிராக சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வந்த புலிகள் முதன் முதலில் திருநெல்வேலியில் நடத்திய தாக்குதல் இராணுவத்தினருக்குப் பெரும் இழப்பைக் கொடுத்தது. பலாலியில் இருந்து விடுதலைப் புலிகளை தாக்கும் திட்டத்துடன் வந்த இராணுவ அணியினரை இலக்கு வைத்து புலிகள் தாக்குதலை நடத்தினர். கண்ணிவெடித் தாக்குதலையும் துப்பாக்கிப் பிரயோகத்தையும் நடத்தியிருந்தார்கள். இந்த தாக்குதல் சமரில் 13 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள்.

இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான இந்தத் தாக்குதலில் விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினரான செல்லக்கிளி அம்மான் கொல்லப்பட்டிருந்தார். விடுதலைப் புலிகள் மேற்க் கொண்ட இந்தத் தாக்குதலை அடுத்து கொல்லப்பட்ட இராணுவத்தினரின் சடலங்கள் கொழும்பிற்குக் கொண்டு செல்லப்பட்டன. தமிழர்கள் சிங்களவர்களை கொன்று விட்டார்கள் என்று கொதித் தெழுந்த சிங்களக் காடையர்கள் கொழும்பில் தமிழர்கள் வாழ்ந்த இடங்கள் எங்கும் தேடித் தேடி அழிக்கத் தொடங்கினார்கள். கொழும்பு நகரமே ஈழத் தமிழர்களின் இரத்தத்தில் நனைந்தது.

கொழும்பில் வாழ்ந்த தமிழ் மக்களுக்கு எதிர்பாராத வகையில் இந்த வன்முறை மேற்கொள்ளப்பட்டது. கொழும்பு நகரில் வேரோடியிருந்த அவர்களின் வாழ்க்கை பலமாகவும் செழிப்பாகவும் இருந்தது. தமிழர்களோடு தமிழர்களிடமிருந்த வர்த்தக நிறுவனங்களும் வீடுகளும் இலக்கு வைக்கப்பட்டன. தமிழர்கள் தெருத் தெருவாக பிடித்து வெட்டியும் அடித்தும் கொல்லப்பட்டார்கள். தமிழர்களின் வீடுகளைத் தேடிச் சென்று காடையர்கள்படுகொலைகளை நிகழ்த்தினார்கள். வர்த்தக நிலையங்களை அடித்து நொருக்கி எறித்தார்கள். வன்முறைத் தாக்குதல்களில் தமிழர்களின் சொத்துக்களையும் சூறையாடினார்கள். கொழும்பில் உயிரைக் காக்க தமிழர்கள் அலைந்தார்கள்.

மத நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் உயிரை காக்க தஞ்சமடைய தமிழர்கள் ஓடினார்கள். சிங்களக் காடையர்களோ தமிழர்களை விரட்டி விரட்டி வெட்டிக் கொன்றார்கள். வயது முதிர்ந்தவர்கள் முதல் அனைவரும் இரக்கமற்ற முறையில் துன்புறுத்தி கொல்லப்பட்டார்கள். சிங்களக் காடையர்களுடன் புத்த பிக்குக்களும் பொல்லுத்தடிளுடனும் வாட்களுடனும் தமிழர்களைத் தேடித் தேடிக் வெட்டி அடித்துக் கொல்ல அலைந்தார்கள். சுற்றிச் சுற்றி நடத்தப்பட்ட இந்தப் படுகாலை ஈழத் தமிழர்களை உலுப்பிப் போட்டது. தமிழ் இனத்தில் பெரும் காயத்தை கீறியது.

இந்த வன்முறை நாட்களில் இலங்கை முழுவதும் வன்முறைகள் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஜுலை 24 மற்றும் 25ஆம் நாட்களில் இராணுவத்தினரால் படுகொலைகள் நடத்தப்பட்டன. திருநெல்வேலிப் பகுதியில் 51 தமிழர்கள் புலிகள் என்ற பேரில் படுகொலை செய்யப்பட்டார்கள். இதைப்போலவே வெலிக்கடைச் சிறைச்சாலையிலும் தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டார்கள். 53 தமிழ் அரசியல் கைதிகள் சக சிங்களக் கைதிகளால் துன்புறுத்திப் படு கொலை செய்யப்பட்டார்கள். ஜுலை 25 அன்று 33 கைதிகளும் ஜுலை 28 அன்று 18 கைதிகளும் படுகொலை செய்யப்பட்டார்கள். இந்தப் படுகொலையின் பொழுதே குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் முதலிய போராளிகளும் படுகொலை செய்யப்பட்டனர். சிறைச்சாலையும் தமிழர்களின் இரத்தத்தில் நனைந்தது.

இந்த இனப் படுகொலை யாவும் மிகவும் திட்டமிட்டே மேற் கொள்ளப்பட்டிருக்கிறது. தமிழ் இனத்தை அழித் தொழிக்கவும் இலங்கைத்தீவிலிருந்து துடைத் தெறியவும் ஈழத் தமிழர்களின் அரசியலை முடக்கவும் இந்தப்படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது. இது ஒரு அரிசியல் படுகொலையாகவே நடந்திருக்கிறது. சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக ஈழப் போராட்டம் மலர்ந்திருந்த அந்த நாட்களில் போராட்டத்தை முடக்கவே இந்தப்படுகொலை அப்போதைய அரசால் மிகத் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டது. சுகந்திர இலங்கை எனக் கூறப்பட்ட காலத்தின் பின்னர் தமிழர்களின் அரசியலை முடக்கவும் இலங்கைத் தீவிலிருந்து தமிழர்களைத் துடைக்கவும் இத்தகைய வன்முறைத் தாக்குதல்கள் முன்னதாகவே தொடங்கிவிட்டன. அதன் உச்ச கட்டமாக கறுப்பு ஜுலை அரங்கேறியது.

ஈழ – இலங்கை அரசியல் நில முரண்பாட்டை கறுப்பு ஜுலைப் படுகொலையின் இரத்தம் தெளிவாக பிரித்து வரைந்திருக்கிறது. இலங்கைத்தீவை சிங்களவர்களிடம் வெள்ளையர்கள் கையளித்து விட்டுப் போனதிலிருந்து தமிழர்களுக்கான அரசியல் மற்றும் உரிமை நிராகரிப்புக்கள் ஏற்படத் தொடங்கின. தமிழர்கள் உரிமையற்றவர்களானார்கள். தமிழர்களிடத்தில் இருந்து சிறியளவான அரசியல் இடங்களும் சிங்கள ஆளும் தரப்புக்குப் பிரச்சினையாக இருந்தது. தமிழ் அரசியல்த் தலைவர்கள் சிறுபான்மைத் தமிழர்களின் உரிமைகளை கோரி வந்த சூழலில் தமிழர்களும் சிங்களவர்களும் ஒன்றாக இருந்த பிரதேசங்களில் ஒடுக்முறைகளும் இன வன்முறைகளும் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டன. இலங்கைக்கு சுகந்திரம் கிடைத்தது என்ற பொழுது சிங்களவர்கள் தமிழர்ளை அழிக்கத் தொடங்கினார்கள்.

1948இல் இலங்கை சுதந்திரமடைந்ததைத் தொடர்ந்து தனிச்சிங்களச்சட்டமும் பௌத்த மயமாக்கலும் பிரகடனப் படுத்தப்பட்ட வேளை தமிழர்கள்மீதான வன்முறைகளும் ஒடுக்குமுறைகளும் மிகச் சாதாரணமாகத் தொடங்கப்பட்டது. 1956இல் ஈழத் தமிழர்களுக்கு எதிரான முதலாவது இனவெறி வன்முறை தாக்குதல் கல்லோயா குடியேற்றத்த திட்டத்தில் அரற்கேற்றப்பட்டது. இதில் 150 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்hர்கள். சிங்கள மொழியை ஆட்சி மொழியாக அறிவித்தத்தைத் தொடர்ந்து தமிழ் அரசியல் தலைவர்கள் சாத்வீக போராட்டத்தில் ஈடுபட்ட பொழுது அவர்கள்மீதும் வன்முறைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்தே கல்லோயா குடியேற்றத்திட்டதில் இனவெறி வன்முறை வெடித்தது. இந்தத் தாக்குதலும் ஈழப் போராட்டத்தின் அவசியத்தை தமிழர்களுக்கு உணர்த்தி அவர்களின் தாயகம் பற்றிய அக்கறையை ஏற்படுத்தியது.

மீண்டும் 1958இல் இனக்கலவரம் வெடித்தது. பொலனறுவையில் தொடங்கி கொழும்புவரை நடந்த இந்த இனவெறித்தாக்குதலில் 300 தமிழர்கள் கொல்லப்பட்டார்கள். இந்தத் தாக்குதலின் பொழுது தமிழர்களும் திருப்பி சிங்களவர்களைத் தாக்கத் தொடங்கியிருந்தார்கள். கத்திகளுடனும் பொல்லுகளுடன் வந்த சிங்களக் காடையார்கள் தமிழர்களை வெட்டி, குத்தி தீயிட்டு எரித்தார்கள். இதனைத் தொடர்ந்து 1974இல் யாழ்ப்பாணத்தில் நடந்த உலகத் தமிழராய்ச்சி மாநாட்டின் பொழுது 11 பேர் இலங்கை காவல்துறையினரால் படுகொலை செய்யப்பட்டார்கள். 1977இல் மீண்டும் நடத்தப்பட்ட இனவெறித் தாக்குதலில் 500க்கு மேற்பட்டவர்கள் சிங்களக் காடையர்களால் கொல்லப்பட்டார்கள். இதில் அநுராதபுரம் பகுதியில் தொடரூந்திற்காக நின்ற மக்களும் வெட்டிச் சாய்த்துக் கொல்லப்பட்டார்கள்.

இதனுடைய தொடர்ச்சியான வன்முறையாக 1981இல் யாழ்ப்பாண நூல் நிலையம் எரிக்கப்பட்டது. தென் கிழக்காசியாவில் மிகப் பெரிய நூலமாக 97 ஆயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்களுடன் இருந்த யாழ் நூலகம் ஈழத் தமிழ் மக்களின் வரலாற்று, பண்பாட்டு, அறிவுப் பொக்கிசமாக விளங்கியது. அந்த யாழ் நூலகத்தை 31 மே 1981 அன்று சிங்களக் காடையர்கள் தீயிட்டு எரித்து அழித்தார்கள். தமிழர்கள்மீதான வன்முறைகள், அரசியல் நோக்கங்களுக்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்ததைத் போலவே யாழ் நூலக தீயிடலும் அரசியல் பழி வாங்கலாக நடத்தப்பட்டது. இந்த வன்முறையில் யாழ் நூலகத்துடன் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.

இலங்கைத் தீவில் தமிழர்கள்மீது மேற்கொள்ளப்பட்ட இனவெறிப் படுகொலைகள், வன்முறை நடவடிக்கைகள் எல்லாமே தமிழர்கள்மீதான அரசியல் உரிமை மறுப்பிற்காகவும் ஒடுக்குமறைக்காகவுமே மேற்கொள்ளப்பட்டன. அதனுடைய உச்சக் கட்ட வன்முறையாக நிகழத்தப்பட்ட கறுப்பு ஜுலை ஏற்கனவே அந்தக் காலப் பகுதியில் அப்போதைய அரசால் திட்டமிடப்பட்டிருந்தது.

திருநெல்வேலியில் விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலை அடுத்து எதிர்பார்க்கப்பட்ட வன்முறை அரங்கேற்றப்படடது. தமிழ் அரசியல் போக்கை மழுங்கடித்து ஈழத் தமிழர்களின் உணர்வின் கூர்மையை மழுங்கடித்து சிங்களப் பேரினவாத ஆட்சியை தமிழர்கள்மீது திணிக்கவே இந்த வன்முறைகள் நடத்தப்பட்டன. பேரினவாத அரசியலுடன் தமிழ் அரசியல் தலமைகள் நடத்திய போராட்டத்தின் தோல்வி நிலையிலும் தமிழர்கள்மீதானபடுகொலைக்கு எதிராகவுமே விடுதலைப் புலிகளும் ஏனைய போராளி இயக்கங்களும் தேற்றம் பெற்றன. தனி ஈழம் என்கிற போராட்டமுமு; பரிணமித்தது.

இலங்கையை ஆண்டு வந்த ஒவ்வொரு அரசும் தமிழர்கள்மீது வன்முறைகளையும் படுகொலைகளையும் திணித்து தமிழ் அரசியலை ஒடுக்குவதில் ஒரே விதமாகவே செயற்பட்டார்கள்., செயற்பட்டு வருகிறார்கள். கறுப்பு ஜுலையுடன் தமிழர்கள்மீதான வன்முறைப் படுகொலைகள் முடிந்து போகவில்லை. 1987இல் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தை ஒப்பிரேசன் லிபிரேசன் என்ற நடவடிக்கையின் மூலம் கைப்பற்றும் தாக்குதல் யுத்தத்தை இலங்கை இராணுவம் தொடங்கியது. ஆதன் பிறகு யுத்தச் சமர்கள் மூலமாகவும் தமிழிழனப் படுகொலை மிக அதிரகித்து. அதன் பின்னர் தமிழர்கள் புலிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டு தொடர் படுகொலைகளில் அழிக்கப்பட்டார்கள். அந்தபடுகொலை இன்றைய காலம் வரை தொடர்நகிறது.

வல்வை நூலகப் படுகொலை, குமுதினிப் படுகொலை, அம்பாறை உடும்பன் குளம் படுகொலை, கொக்கட்டிச் சோலைபடுகொலை 1987, வீரமுனைப் படுகொலை, சத்துருக் கொண்டான் படுகொலை, யாழ் நாகர்கோவில் சிறுவர்படுகொலை, நவாலி தேவாலயப்படுகொலை, களுத்துறை சிறைச்சாலைப் படுகொலை, பிந்துணுவோவா படுகொலை, செஞ்சோலைப் படுகொலை போன்றவைகளுடன் இவைகளுக்கு இடையிலான இராணுவ நடவடிக்கையின்படுகொலைகள் உதிரியாகவும் தொகுதியாகவும் நடந்துள்ளன. அத்தோடு நான்காம் ஈழப் போரில் மட்டக்களப்பு 2006படுகொலைகள், யாழ்ப்பாணப் படுகொலைகள், வன்னிப் போர்ப் படுகொலைகள் 2006-2009மே, அதன் பின்னரானபடுகொலைகளும் என்று ஈழத் தமிழ் இனம் படுகொலைகளால் எச்சரிக்கப்பட்டு உரிமை மறுக்கப்பட்டு அழித் தொழிக்கப்படும் நடவடிக்கை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. இதுவே வரலாற்றுத் துயரமாகவும் தொடர்கிறது.

1983 ஜூலை இனப்படுகொலை நடந்து இன்று முப்பத்திரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இன்று வரையில் தமிழ் இனத்தை அழிப்பது தொடர்பில் இலங்கையை ஆண்ட எந்தவொரு சிங்கள அரசுக்கும் குற்ற உணர்வு வரவில்லை. மாறாக தொடர்ந்தும் ஒவ்வொரு அரசுகளும் இனப்படுகொலைகளையே ஒன்றை ஒன்று விஞ்சி மேற்கொள்கிறது. முப்பது வருடங்களாக ஏற்படாத நல்லிணக்கமும் புரிதலும் இனி எப்போது ஏற்படும்? இன்னமும் ஈழத் தமிழர்கள் அழித்தொழிக்கபபட வேண்டியவர்களாகவும் எந்த ஒரு உரிமையுமற்றவர்களாகவே ஒடுக்கப்படுகின்றனர். முப்பது வருடங்களாக ஒடுக்கி அழிக்கும் ஒரு தரப்போடு இணைந்து வாழச் சொல்வது என்பது இனப்படுகொலைகளினால் அழிந்து போகச் சொல்வதே.

இவை எல்லாமே இணைந்த தேசத்தில் சிங்கள தேசம் ஈழ மக்களுக்கு உரிமைகளை பகிரவும் சமமாக நடத்தவும் மறுத்திருக்கும சூழ்நிலையை மாத்திரம; உணர்த்தவில்லை. சிங்கள தேசம் இந்தப் படுகொலைகள் யாவற்றையும் நிறுத்தத் தயாரில்லை என்பதையும் தமிழ் மக்களை ஒழித்தே தீருவோம் என்பதில் கொண்டிருக்கும் தீவிரத்தையுமே நமக்கு உணர்த்துகின்றன. இவ்வளவு படுகொலைகளையும் செய்தவர்கள் இன்னமும் ஒடுக்கி அழிக்க மூர்க்கத்தோடு இருக்கும்போது ஒடுக்கப்படும் ஒரு இனம் இதையெல்லாம் எவ்வாறு மன்னிப்பது? ஒடுக்கி அழிக்கப்புடும் தரப்பு நல்லிணக்கத்திற்கு தயாரில்லை என்றபோது நல்லிணக்கம் என்பதே இன அழிப்பு எனும்போது இழந்த தேசத்தை மீள நிறுவி வாழ்வதே ஒரு இனத்திற்கு பாதுகாப்பானது.

இலங்கைத் தீவில் தமிழ் இனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட கறுப்பு ஜுலை படுகொலை நிகழ்வும் அதற்கு முன்னரான நிகழ்வுகளும் தெற்கிலிருந்த தமிழர்களை வடக்கு கிழக்கு நோக்கி செல்லத் தூண்டியது. அவர்கள் சிங்களப்பகுதிகளை விட்டு தமிழர் பகுதிகளுக்கு வந்தார்கள். இலங்கைத்தீவு இரண்டாக உடைந்தது. மலையகத் தமிழர்களில் கணிசமானவர்களும் வடக்குக் கிழக்கை வந்தடைந்தார்கள். தெற்கில் கட்டவிழ்த்து விடப்பட்டபடுகொலைகள் வடக்கு கிழக்கில் யுத்தம் என்ற பேரில் மேற்கொள்ளப்பட்டன. எனினும் தமிழர்களுக்கு அவர்களது நிலம் தேவை என்பதையும் உரிமை தேவை என்பதையும் விடுதலை வேண்டும் என்பதையும் கறுப்பு ஜுலையினால் ஏற்பட்ட துயரம் வலிமையாக வரைந்திருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கடந்தென்ன என்றும் ஈழத் தமிழ் இனத்தின் நெஞ்சில் காயாத இரத்தமாக கறுப்பு ஜுலையும் வலித்துக் கொண்டுதானிருக்கிறது.

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://globaltamilnews.net/2018/88892/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

DixC8uyUEAAexkn.jpg

Up in Smoke

The Rio 35 years after Black July

GROUNDVIEWS

Ratnarajah Navaratnam was 14 when his father, Appapillai, opened Navah Cinema in 1951. This was soon to be followed by the Rio Cinema in 1965. The Rio Hotel came more than a decade later, in time to host the Non-Aligned Summit of August 1976. The family also had the Trio Cinema in Dehiwala, Gem in Ragama and Rio in Jaffna. Until the distribution of film was brought under the National Film Corporation, the chain not only brought quality English films to the island, but also distributed them to other cinemas for display.

For decades, the Rio Cinema and Hotel towered over Kumaran Ratnam Road in Kompannaveediya. Once a state-of-the art theatre, red and blue neon lights illuminated its exterior, with a Todd-AO projection system bringing to life the country’s first 70 mm film screen within its walls.

Then, it was a blackened shell, hollowed out by looting and fire in the July riots of 1983.

Soon, there may be nothing at all.

After three decades of hosting poorly-attended screenings, scattered photo shoots and art exhibitions, the owner of the Rio complex—the cinema, hotel, and attached Navah Cinema—has put the property on the market. In the fast-developing neighborhood, it’s unlikely that the new owners will preserve the historic theatre, leaving the Rio, like many other markers of this dark chapter in our history, likely to be erased.

Browse map for key locations in the vicinity of the Rio, and Mr. Navaratnam’s movements in July of 1983, seeking help and safety during the riots.

Currently working as the Rio’s manager, Navaratnam recalls with joy the important place Rio held in the hearts and minds of the community. It was a landmark. An evening at the movies at the Rio made for a special occasion or celebratory outing for many families.

‘Parents, children, grandparents, they would all come’ he said. ‘I know people who saw Sound of Music 15 times, you know, Alamo, South Pacific, many times over.’

Mr. Navaratnam shows where there used to be red and blue lights illuminating the exterior of the hotel. He points out President Gopallawa and a young Chandrika Bandaranaike in the photo of the cinema’s first screening.

Navaratnam jokes that the cinema was like a ‘golden ticket’ for the family. One mention to any government officer and tasks that would have otherwise dragged on were completed in minutes. He tells of his classmates complaining that they couldn’t study because of all the free movie passes he gave them, passes that he would claim were given to his school master when his father questioned him about them at the end of each month.

On July 23 1983, Navaratnam was home with his family at their house in Thimbirigasyaya. He suddenly saw flames across the junction from his window — a fleet of buses, owned by his father-in-law, had been set alight. A few minutes later, his father-in-law called; a mob was at the gates of their house, demanding to be let in.

Navaratnam and a close friend went out to get help, leaving his wife and two small daughters at home. They rushed to the Cinnamon Gardens police station, asking for someone to come and deter the rioters.

’We have no police available here.’

The officer at the station seemed, Navaratnam says, both unable and unwilling to help. ‘If you can find a patrol car somewhere, ask them to come and help you,’ he had told the two men. They asked the officer if the station could radio someone in.

‘No we can’t.’

They then went to the army post at Radio Ceylon & Rupavahini premises, the present day Sri Lanka Broadcasting Corporation. The soldiers there said they couldn’t leave their posts, despite the house being a few metres from where they were on duty.

Navaratnam returned home, anxious about leaving his wife and kids alone. His father-in-law’s house was looted for days and partially burned. Later, he was told by friends and neighbors that among the mobs were some Tamil thugs who joined in on the looting, with Buddhist monks occasionally leading the charge.

The exterior of the Rio hotel, juxtaposed with murals painted on its walls in recent years. The Defence Services College, for which several families were evicted from their homes, is seen in the back in red and yellow.

Scroll over the photo for immersive, interactive narration.

A Sinhalese friend helped Navaratnam and his family move to the Holiday Inn, now called the Ramada hotel, to take refuge. Later that night, from the upper floor windows, he saw smoke rising in the distance, as fire consumed the Rio complex. By the end of the riots, the Rio Cinema and the Trio Cinema in Dehiwala were completely burned. The Navah Cinema’s interior was gutted by flames. The Rio hotel, though not set ablaze, was looted entirely.

It was five days later, on July 28th, in a now widely-criticised speech, that President J.R. Jayawardena spoke to the nation. There was no official inquiry into who was responsible for initiating the riots, and no one was punished by the law. The government gazetted to establish the Rehabilitation Of Persons, Properties And Industries Authority (REPPIA) to compensate victims.

Scroll over the photo for immersive, interactive narration.

The Sri Lanka Insurance Corporation, the sole insurance provider at the time, found a way to evade a proper payout to affected persons. They claimed that the buildings had lost value over the years, and that the owners were overvaluing them. ‘Finally, with insurance and the money they gave for all the damages, we couldn’t even put the roof of the Rio cinema alone,’ Navaratnam said.

Side-entrance of the Navah Cinema on New Ferry Lane.

It was hard for the Navaratnam family to square these experiences with the goodwill they thought they had with their neighbors and community. The elder Navaratnam was an active philanthropist, who his son says ‘helped all communities.’ He lent out his car, one of the few in the area at the time, to people who needed it for funerals and weddings. Houses for people from the nearby Wekanda mosque, a school for the Holy Rosary Church, supporting Holy Rosary Tamil School and donating money to several Buddhist temples in the area, including the Gangaramaya—they were surrounded by a community that they supported, and who were grateful for their help.

‘He felt more hurt, by the fact that he was part of the society here, and that still they did this, to burn down ... forty, forty-five years of hard work, go[ing] up in smoke in one night,’ says Navaratnam.

Having been brought up in a diverse community that did not distinguish people based on ethnicity or religion, he was taken aback when people justified the destruction of their property and hard work just because ‘they were Tamil.’

Though the affected communities and underlying contexts are different, Navaratnam’s memories, of the riots themselves, the response, and the aftermath, echo some of the experiences of residents of areas in the Kandy district after the anti-Muslim riots of March 2018, and that of those in Aluthgama before that.

Navaratnam is reluctant to say that law enforcement didn’t intervene, despite his own experience during 1983. Following a wave of violence targeting Muslims in more recent years, CCTV footage and eyewitness video captured on smartphones have shown officers standing by, unwilling to intervene.

Just as the Navaratnams were targeted for being ‘well to do,’ despite their history of generosity, the Muslims in Kandy also reported that the mobs featured some familiar faces. Their targets included people known by locals to have had a successful shop, money on hand to loan, or a trishaw that could be called on in an emergency.

Muslims say there has also been a lack of support from the government in the process of rebuilding after the riots, with compensation not being nearly enough to buy new equipment, restock stores, and rebuild walls. Reparations are being doled out unsystematically, accompanied by impractical requests from the authorities for plans, blueprints and valuations.

The Rio was rented out after the riots in July 1983, when the Navaratnams went overseas for a short while. In the meantime, the cinema was rebuilt in late 1984, and reopened in 1986. By the time Navaratnam returned in 1987, it was nothing like it used to be. It wasn’t just a matter of money, Navaratnam said; the pain of losing decades of work made it hard to think of fully starting over.

‘When you see things like that happening, your whole heart doesn’t really come back in rebuilding again,’ he said.

Today, the Rio is running without a profit, operating almost solely because Navaratnam can’t bring himself to let go of his staff. He wishes he could restore the cinema to its old glory. But given the area’s high property values, it made more sense to sell the property.

Navaratnam sees some irony in his family’s decades-long dedication to Kompannaveediya, and his decision to leave it now. He recalls his father often being asked why he didn’t move to a wealthier area.

‘No, this is where my grandfather started, my father, we all did our businesses here. Let’s work on this area,’ the elder Navaratnam had said. ‘My father also said that this area would be very valuable one day and see, his words have come true now.’

Scroll over the photo for immersive, interactive narration.

The area around Rio has seen some of the most dramatic effects of Colombo’s post-war efforts to become a ‘modern’ city. From 2010 to 2013, hundreds of families living in what is termed ‘low-income housing’ in Kompannaveediya had their land seized by the government and were forcibly evicted from their homes. Residents battled in court for the right to compensation: Some were mandatorily resettled—without compensation, and for a fee of Rs.100,000/ which the current regime has promised to repay—in high-rises in Dematagoda, several kilometers away. Others were offered the choice of compensation, or money for rent while awaiting apartments in the high-rises that are being built, with many delays, around their former homes.

Meanwhile, huge new development projects, such as Cinnamon Life, One Colombo, and Destiny Mall & Residency are steadily rising to the sky.

Even if some residents return, Kompannaveediya will never be the same. A good deal of them may not want or be able to stay in the high-rises, so different from labyrinth of close-knit communities they lost.

‘Who will live here now?,’ Mr. Navaratnam asks. With the existing development projects promising ‘luxury apartments,’ and the government’s ambition to create more ‘world class’ buildings, the demographics of Kompannaveediya will likely shift away from the poor and lower middle class Tamil and Muslim families who have lived there for decades and witnessed its history.

Several other iconic historical structures of the area have been destroyed to make room for this development, including the Castle Hotel and the de Soysa buildings more recently. Most likely, Navaratnam says, whoever buys the Rio will demolish it completely, and a luxury commercial or apartment building might take its place.

Scroll over the photo for immersive, interactive narration.

As the area changes and the Rio is sold, Navaratnam says it is inevitable that memories of the riots too will fade.

‘Will people forget ’83? In a sense, yes. But not the minority community,’ he says. The Tamil community, for whom the riots are not only the source of trauma and pain, but a moment that changed the trajectory of so many of their lives, through violence and displacement.

‘Everyone just left,’ he says, taking stock of family and friends who left the island in the migration of minorities that increased after 1983, having begun with the exclusionary 1956 Sinhala Only Act. Educated and skilled Tamils who had the means were able to leave the country for foreign shores. Because of the brain drain, compounded with the ensuing conflict, Navaratnam says J.R. Jayawardena’s accomplishments in economic policy prior to 1983 were reversed, and set the country back decades in terms of development. ‘Minorities tend to work harder’ in order to overcome discrimination set out in legislation itself, he says, ‘and yet with all that we wondered why we were not getting the same chances, same opportunities as Sinhalese people.’ With the insecurities the violence brought, anywhere seemed like a better option that Sri Lanka.

 A sticker on the panel marking Navaratnam’s office says ‘those who protect the Dhamma see the Buddha.’

Many Sri Lankans, he says, particularly Sinhalese, don’t see Black July as a tipping point between peace and war, or understand that it was the culmination of oppressive state structures and a history of violence against Tamils.

‘If we didn’t have the ’83 riots, I don’t think the LTTE would have the presence and impact that it did at all,’ he said, referring to how the riots dramatically increased recruitment for Tamil separatist groups including the LTTE. The situation created a loss of faith in political solutions, and researchers say it was responsible for ‘legitimising the Tamil militancy like never before.’

He notes that violence against the Tamils began long before 1983, with riots recorded in 1977 against up-country Tamils and Tamils living in the East.

‘If you go and talk to [people], and ask, ‘Do you know why [the war] happened?’ People will tell you [the LTTE] wanted to conquer the country and break the country into two. Those in the South don’t know why the LTTE did that, how it came about, none of that.’

After the end of the conflict, he says that the widespread narrative is that Tamils had been ‘controlled.’ ‘Seeing Muslims doing well in business, is a new threat to Buddhists’ he says. Perceived economic discrepancies, those usually not grounded in fact, instill fear in the Sinhalese. Fear that, Navaratnam says, is easily exploited by political actors, who use language and divisions to play on this fear.

He worries that a rising sense of tension will cause more migration, not just of Muslim people who feel unsafe in their homes but of Sinhalese people witnessing the social instability, and people who feel there is no future in a country constantly erupting in violence.

‘The riots of Aluthgama and Kandy have been, by magnitude, smaller than those of July 1983,’ Navaratnam says, confined to a locality, and for that reason he remains cautiously optimistic that history is not about to repeat itself. There are enough people who aren’t willing to accept fearmongering and intimidation. And now, he said, ‘the world is watching us much more closely.’

After the Rio property sells, Navaratnam said he might try to restart the family’s cinema brand with a multiplex theater.

‘Rio, Navah, and Trio, three names,’ he said, ‘in my father’s memory.’

Diw23ORUEAIaGVI.jpg

Link to comment
Share on other sites

திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட கறுப்பு ஜூலை கலவரம்

01-b37f833db116cad6cf582fdf8a153e66631ae19d.jpg

பி.மாணிக்­க­வா­சகம்

கறுப்பு ஜூலை கல­வரம் அல்­லது 83 கல­வரம் என சாதா­ர­ண­மாகக் குறிப்­பி­டப்­படு­கின்ற 1983 ஆம் ஆண்டின் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றைகள் நடை­பெற்று 35 வரு­டங்கள் ஆகின்­றன. மூன்­றரை தசாப்­தங்கள் கடந்­து­விட்ட போதிலும், அந்த வன்­மு­றை­களின் கோர­மான மன­வ­டுக்கள் பாதிக்­கப்­பட்ட தமி­ழர்­களின் மனங்­களில் இருந்து இன்னும் மறை­ய­வில்லை. 

இருப்­பினும், சிங்­கள மக்­களின் ஆவே­சத்தைக் கிளப்­பி­ய­தனால் ஏற்­பட்ட ஓர் இனக்­க­ல­வ­ர­மாக அதனை நோக்­கு­கின்ற ஒரு போக்கும் நில­வு­கின்­றது. உண்­மை­யி­லேயே, அர­சியல் ரீதி­யாகத் திட்­ட­மிட்டு தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக அரங்­கேற்­றப்­பட்ட இன ஒடுக்­கு­மு­றையின், இன அழிப்பு நட­வ­டிக்­கையின் மிக மோச­மான ஆரம்ப நிகழ்­வாக அது வர­லாற்றில் பதி­வா­கி­யி­ருக்­கின்­றது. 

தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக 1956, 1958, 1977, 1981 ஆகிய ஆண்­டு­களில் பேரி­ன­வா­தி­க­ளி­னதும், பேரின ஆட்­சி­யா­ளர்­க­ளி­னதும் ஆசிர்­வா­தத்­துடன் வளர்ச்சிப் போக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்ட வன்­முறைச் சம்­ப­வங்­களின் போக்கில், அடுத்த கட்­ட­மா­கவே, 1983 கறுப்பு ஜூலை வன்­மு­றைகள் அரங்­கேற்­றப்­பட்­டன என்­பதை ஊன்றிக் கவ­னிப்­ப­வர்­களால் புரிந்து கொள்ள முடியும்.  

அது மட்­டு­மல்­லாமல், நீண்­ட­கால இன அழிப்பு நட­வ­டிக்­கை­களை நன்கு திட்­ட­மிட்ட வகையில் பேரி­ன­வாத அர­சி­யல்­வா­திகள் தொடர்ச்­சி­யாக மேற்­கொள்­வ­தற்­கு­ரிய பிள்­ளையார் சுழி­யா­கவும் அது பயன்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றது.

ஆனால், சிங்­கள மக்கள் மத்­தியில் அது, திடீர் ஆவே­சத்­தினால் ஏற்­பட்ட ஒரு மன எழுச்சி சார்ந்த நிகழ்­வாக மாறிப்­போ­யுள்­ளது. மறக்­கப்­பட்­டு­விட்­டது என்­று­கூடச் சொல்­லலாம். தமிழ் மக்­க­ளுக்கு எதி­ராக காலத்­துக்குக் காலம் முன்­னெ­டுக்­கப்­பட்ட இன­வன்­முறை தாக்­கு­தல்­களின் உள்­நோக்­கத்தை, அவற்றில் மறைந்­துள்ள இன­வாத ஒடுக்­கு­முறை அர­சி­யலின் தாற்­ப­ரி­யத்தை தமிழ்த் தரப்­பி­னரில் சிலர் இன்னும் சரி­யாகப் புரிந்து கொள்­ள­வில்லை. அதன் கார­ண­மா­கவே, கறுப்பு ஜூலை வன்­முறைச் சம்­ப­வத்தை, திடீர் ஆவேச மன எழுச்­சிக்கு உள்­ளாகி செயற்­ப­டு­வதை இயல்­பாகக் கொண்ட சிங்­கள மக்­களின் உணர்ச்சி வசப்­பட்ட ஓர் எதிர்­வினைச் செய­லா­கவே அவர்கள் நோக்­கு­கின்­றார்கள். 

அந்த வகையில் 83 கறுப்பு ஜூலை வன்­மு­றை­களை மீண்டும் மீண்டும் நினை­வு­கூர்­வதும், அது­பற்றி சிந்­திப்­பதும், நாட்டின் நல்­லி­ணக்­கத்­திற்கும், இன ஐக்­கி­யத்­திற்கும் பாத­க­மா­கவே அமையும் என்றும் அவர்கள் சித்­த­ரிக்­கவும் முற்­ப­டு­கின்­றார்கள்.

யாழ்ப்­பாணம் திரு­நெல்­வே­லியில் 13 சிங்­கள இரா­ணு­வத்­தி­னரை விடு­த­லைப்­பு­லிகள் ஒளித்­தி­ருந்து தாக்கிக் கொலை செய்­ததன் விளை­வாக எழுந்த, ஓர் உணர்ச்­சி­க­ர­மான திடீர் ஆவே­சத்தின் எதிர் நட­வ­டிக்­கை­யா­கவே, 83 கறுப்பு ஜூலை வன்­முறைச் சம்­ப­வங்கள் இடம்­பெற்­ற­தா­கவே, பெரும்­பான்­மை­யான சிங்­கள மக்­களால் பார்க்­கப்­ப­டு­கின்­றது. 

சிங்­கள மக்கள் அனை­வ­ருமே தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக வன்­மு­றை­களில் ஈடு­ப­ட­வில்லை என்­ப­தையும், சிங்­கள மக்­களில் பெரு­ம­ள­வானோர், தங்கள் இனத்தைச் சார்ந்த குண்­டர்­க­ளினால் தாங்­களும் தாக்­கப்­ப­டுவோம் என்ற அச்­சத்­துக்கு மத்­தி­யிலும், பாதிக்­கப்­பட்ட தமி­ழர்கள் பல­ருக்கு அப­ய­ம­ளித்து, ஆபத்­துக்­களில் இருந்து பாது­காத்து அனுப்பி வைத்­தார்கள் என்­ப­தையும் இந்தப் பார்­வைக்கு ஆதா­ர­மாக அவர்கள் முன்­வைக்­கின்­றார்கள். இது, சாதா­ரண சிங்­கள மக்கள் மத்­தியில் அர­சியல் ரீதி­யான ஒரு பிர­சார கருத்­தா­கவும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.  ஆனால், ஏற்­க­னவே திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த ஒரு நிகழ்ச்சி நிரலின் அடிப்­ப­டையில் வெகு நேர்த்­தி­யாக நடத்தி முடிக்­கப்­பட்ட ஓர் இனப்­ப­டு­கொலை நட­வ­டிக்­கையே 83 கறுப்பு ஜூலை வன்­முறை என்­பதே உண்மை.

என்ன நடந்­தது, எப்­படி நடந்­தது?

தமி­ழர்கள் செறிந்து வாழ்­கின்ற இலங்­கையின் வடக்கே பலாலி இரா­ணுவ தளத்தில் இருந்து, யாழ்ப்­பாணம் நக­ரத்தை நோக்கிச் சென்ற இரா­ணுவ வாகனத் தொட­ரணி ஒன்றை திரு­நெல்­வேலி தபால் பெட்டிச் சந்­தியில் பதுங்­கி­யி­ருந்த விடு­த­லைப்­பு­லி­களின் அணி­யொன்று தாக்­கி­யதில் 13 இரா­ணு­வத்­தினர் கொல்­லப்­பட்­டனர். இலங்­கையின் இலகுக் காலாட்­ப­டையைச் சேர்ந்த லெப்­டினன் தர இரா­ணுவ அதி­கா­ரி­யா­கிய வாஸ் குண­வர்­தன அவர்­களில் முக்­கி­ய­மா­னவர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்தச் சம்­பவம் 1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23 ஆம் திகதி இரவு 11.30 மணி­ய­ளவில் நடை­பெற்­றது. 

நான்கு வாக­னங்­களைக் கொண்­டி­ருந்த அந்த இரா­ணுவ வாகனத் தொட­ர­ணியின் முன்னால் சென்ற இரா­ணுவ ஜீப் வண்டி விடு­த­லைப்­பு­லி­களின் கண்­ணி­வெடித் தாக்­கு­தலில் சிக்கி வெடித்­துச் சித­றி­யது. பின்னால் வந்த இரா­ணுவ ட்ரக் உள்­ளிட்ட வாக­னங்­களில் இருந்த இரா­ணு­வத்­தினர் மீது முற்­றுகைத் தாக்­கு­தலைத் தொடுத்த விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கும் இரா­ணு­வத்­தி­ன­ருக்கும் இடையில் மோதல் ஏற்­பட்­டது, சம்­பவ இடத்­தி­லேயே 13 இரா­ணு­வத்­தினர் கொல்­லப்­பட்­டனர். இரண்டு பேர் படு­கா­ய­ம­டைந்து, பின்னர் மர­ண­ம­டைந்­தனர். விடு­த­லைப்­பு­லிகள் தரப்­பிலும் உயிர்ச்­சேதம் ஏற்­பட்­டி­ருந்­தது. 

நள்­ளி­ரவு நேரத்தில் இடம்­பெற்ற இந்தச் சம்­பவம் பற்­றிய தக­வல்கள் சிங்­க­ள­வர்கள் கொல்­லப்­பட்­ட­தாக பெரி­து­ப­டுத்­தப்­பட்ட அளவில் நாட்டின் தென்­ப­குதி எங்கும் சிங்­கள மக்கள் மத்­தியில் பரப்­பப்­பட்­டது, 

மறுநாள் காலை பத்­தி­ரி­கை­களில் தலைப்புச் செய்­தி­யாக இந்தச் சம்­பவம் பிர­சு­ர­மா­கி­யி­ருந்­தது. கொல்­லப்­பட்­ட­வர்­களின் பெயர் விப­ரங்கள் அந்தச் செய்­தியில் விப­ர­மாக வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தன. செய்தித் தணிக்கை இருந்த போதிலும், யாழ்ப்­பா­ணத்தில் 13 சிங்­க­ள­வர்கள் கொல்­லப்­பட்­டார்கள் என்ற வகையில் எவ்­வாறு செய்தி பிர­சு­ர­மா­வ­தற்கு செய்தித் தணிக்கை அதி­காரி டக்ளஸ் லிய­னகே அனு­ம­தித்தார்? வன்­மு­றைகள் வெடிப்­ப­தற்கு வழி­ச­மைக்கும் வகையில் இவ்­வாறு செய்தி வெளி­யிட அனு­ம­திப்­பதன் மூலம் செய்தித் தணிக்கை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் என்ன பயன் இருக்­கின்­றது என்று ஜூலை வன்­மு­றைகள் தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பிய அப்­போ­தைய கல­வான தொகுதி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சரத் முத்­தெட்­டு­வே­கம வின­வி­யி­ருந்தார். 

அக்­கா­லப்­ப­கு­தியில் தமிழ் இளை­ஞர்­களின் ஆயுதப் போராட்டம் அங்­கொன்றும் இங்­கொன்­று­மான தாக்­கு­தல்­களே இரா­ணு­வத்தின் மீது மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தன. ஆனால் திரு­நெல்­வேலிச் சந்­தியில் இடம்­பெற்ற தாக்­கு­த­லி­லேயே 13 இரா­ணு­வத்­தினர் ஒரே தட­வையில் கொல்­லப்­பட்­டி­ருந்­தனர். 

அர்ப்­ப­ணிப்­போடு மிகத் துணி­க­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்ட போதிலும், ஆயுதப் போராட்­டத்தை அப்­போது அதி­கா­ரத்தில் இருந்த ஜே.ஆர் ஜய­வர்­தன அரசு பெரி­தா­கவோ முக்­கி­யத்­துவம் மிக்­க­தா­கவோ கரு­த­வில்லை. அத்­த­கைய ஒரு சூழலில் நள்­ளி­ரவு வேளையில் இரா­ணுவ வாகனத் தொட­ரணி மீது கண்­ணி­வெடித் தாக்­கு­த­லுடன் நடத்­தப்­பட்ட துப்­பாக்கிச் சூட்டுத் தாக்­கு­தலில் ஓர் அதி­காரி உட்­பட 13 பேர் கொல்­லப்­பட்­டமை ஒரு வகையில் அர­சாங்­கத்தை அதிர்ச்சி அடை­யவே செய்­தி­ருந்­தது. இரா­ணு­வத்­தி­ன­ரா­கிய 13 சிங்­க­ள­வர்கள் விடு­த­லைப்­பு­லி­க­ளினால் கொல்­லப்­பட்­டார்கள் என்­பது சிங்­கள மக்­க­ளையும் பதட்­ட­ம­டையச் செய்­தி­ருந்­தது. 

இவ்­வாறு அர­சாங்­கத்­திற்கு ஏற்­பட்­டி­ருந்த அதிர்ச்­சியும் சிங்­கள மக்கள் மத்­தி­யி­லான பதட்­டமும், ஏற்­க­னவே திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த இன அழிப்பு நட­வ­டிக்­கைக்­கான வன்­மு­றை­களைத் தூண்­டி­வி­டு­வ­தற்கு அப்­போ­தைய ஐக்­கிய தேசிய கட்சி அர­சாங்­கத்­திற்கு வாய்ப்­பாக அமைந்­து­விட்­டது. அதற்கு உறு­து­ணை­யாக இரா­ணு­வத்­தினர் மீதான யாழ்ப்­பாணத் தாக்­கு­த­லை­ய­டுத்து, பௌத்த பிக்­கு­க­ளையும் சாதா­ரண சிங்­கள மக்­க­ளையும் விடு­த­லைப்­பு­லிகள் கொல்லப் போகின்­றார்கள் என்றும், தலை­ந­கரில் தாக்­குதல் நடத்­து­வ­தற்­காக விடு­த­லைப்­பு­லிகள் கொழும்­புக்குள் ஊடு­ரு­வி­விட்­டார்கள் என்றும் பெரிய அளவில் பொய்ப்­பி­ர­சா­ரமும் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டி­ருந்­தது. 

தாக்­கு­தல்­களில் கொல்­லப்­பட்ட படை­யி­ன­ரு­டைய உடல்கள் அவர்­க­ளு­டைய சொந்த ஊருக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­வதே வழக்கம். ஆனால், தேசிய பாது­காப்புச் சபையின் தீர்­மா­னத்­திற்கு அமைய அந்த நடை­முறை அப்­போது கடைப்­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. இத­னை­ய­டுத்து, விடு­த­லைப்­பு­லி­களின் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­டி­ருந்த 13 இரா­ணு­வத்­தி­ன­ரது உடல்­க­ளுக்கும் வழ­மைக்கு மாறாக ஒரே இட­மாக, பொரளை கனத்தை மயா­னத்தில் இறு­திக்­கிரி­யைகள் செய்­வ­தற்­கான ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன. ஆனால் குறிப்­பிட்ட நேரத்­திற்கு அந்த உடல்கள் அங்கு வந்து சேர­வில்லை. மிகுந்த தாமதம் ஏற்­பட்­டி­ருந்­தது. 

இதனால், அந்த இறு­திக்­கி­ரி­யை­களில் கலந்து கொள்­வ­தற்­காக அங்கு 24 ஆம் திகதி காலை முதல் கூடத் தொடங்கி பதட்­டத்­துக்கு உள்­ளா­கி­யி­ருந்த சிங்­கள மக்கள் மத்­தி­யி­லேயே விடு­த­லைப்­பு­லிகள் பற்­றிய அச்­சந்­தரும் வகை­யி­லான பொய்ப்­பி­ர­சாரம் செய்­யப்­பட்­டி­ருந்­தது. அந்த மக்­களின் பதட்ட உணர்வும் விடு­த­லைப்­பு­லிகள் தாக்க வந்­து­விட்­டார்கள் என்ற அச்ச உணர்வும் அவர்­களை ஆத்­தி­ர­ம­டையச் செய்­த­துடன், தமிழ் மக்கள் மீது தாக்­கு­தல்­களை நடத்­து­வ­தற்குத் தூண்­டி­விட்­டி­ருந்­தது.

கட்­டுக்­க­டங்­காமல் வெடித்த வன்­மு­றைகள்  

குண்­டர்கள் தாக்­கு­தல்­களில் ஈடு­ப­டு­வ­தற்கும், சிங்­கள மக்­களின் பதட்­டத்­தையும், அச்­சத்­தையும் நீடிக்கச் செய்­வ­தற்கும் உதவும் வகையில் விடு­த­லைப்­பு­லிகள் தாக்­கு­தல்கள் நடத்தப் போகின்­றார்கள் என்ற சாராம்­சத்தில் பொய்ப்­பி­ர­சா­ரங்கள் நாடெங்­கிலும் முடுக்­கி­வி­டப்­பட்­டி­ருந்­தன.

இதனால் கொழும்பில் மட்­டு­மல்­லாமல், கண்டி உட்­பட நாட்டின் பல முக்­கிய நக­ரங்­க­ளிலும் மலை­யகம் உட்­பட தமி­ழர்கள் கலந்து வாழ்ந்த தென்­ப­குதி மாவட்­டங்­க­ளிலும் பர­வ­லாக வன்­மு­றைகள் வெடித்­தி­ருந்­தன. தமி­ழர்­க­ளுக்குச் சொந்­த­மான வர்த்­தக நிலை­யங்கள், தொழிற்­சா­லைகள், வீடுகள், வாக­னங்கள், என்­பன தீயிட்டு கொளுத்­தப்­பட்­டன. எல்லா இடங்­க­ளிலும் கொள்­ளை­யி­டப்­பட்­டவை போக மிஞ்­சி­யவை பெற்றோல் ஊற்றி எரிக்­கப்­பட்­டன. 

கத்­திகள், கம்­பு­க­ளுடன், பெற்றோல் கொள்­க­லன்­களை ஏந்­திய கும்­பல்கள் கூட்டம் கூட்­ட­மாக நாட்­டையும் மக்­க­ளையும் பாது­காக்க கொஞ்ச பெற்றோலும் எண்­ணெயும் தாங்கோ என்று  கோஷ­மிட்­ட­வாறு வன்­மு­றைகளில் ஈடு­பட்­டி­ருந்­தன. கட்­ட­டங்கள் எதுவும் அடித்து நொறுக்­கப்­ப­ட­வில்லை. கட்­ட­டங்கள் மீது குண்டுத் தாக்­கு­தல்கள் எதுவும் நடத்­தப்­ப­ட­வில்லை. முழு­மை­யாக சொத்­துக்­க­ளுக்கும் உடை­மை­க­ளுக்கும் சேதம் விளை­விக்­கப்­பட்­டன. இந்த வன்­மு­றை­களில் பெரிய அளவில் உயிர்ச்­சே­தங்­களும் ஏற்­பட்­டன. பெரும் எண்­ணிக்­கை­யா­ன­வர்கள் அக­தி­க­ளா­கினர். 

பல தினங்கள் தொடர்ந்த வன்­மு­றை­களைக் கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்­காக அர­சாங்கம் ஊர­டங்கு சட்­டத்தைப் பிறப்­பி­த்­தி­ருந்­தது, ஆனால் ஊர­டங்கு வேளை­யிலும் குண்­டர்கள் தடுப்பார் எவ­ரு­மின்றி சுதந்­தி­ர­மாக வன்­செ­யல்­களில் ஈடு­பட்­டி­ருந்­தார்கள். ஊர­டங்கை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக ஆயு­தந்­த­ரித்து கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்த பொலி­ஸாரும் படை­யி­னரும், வேடிக்கை பார்த்துக் கொண்­டிருந்­த­னரே தவிர, வன்­மு­றையில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்­களைக் கட்­டுப்­ப­டுத்­தவே இல்லை. 

நிலை­மையைக் கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வரு­வ­தற்கு, வன்­மு­றை­களில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் மீது பொலி­ஸாரும் படை­யி­னரும் ஏன் துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­ய­வில்லை என டைம்ஸ் ஒவ் இந்­தியா பத்­தி­ரிகை, அப்­போ­தைய ஜனா­தி­பதி ஜய­வர்­த­ன­விடம் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி நேர்­காணல் ஒன்­றின்­போது வின­வி­யது.

'படை­யி­ன­ரிடம் பெரிய அளவில் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான உணர்வு ஏற்­பட்­டி­ருந்­தது என நான் நினைக்­கிறேன். கலகத்தில் ஈடு­பட்­டி­ருந்­த­வர்கள் மீது துப்­பாக்கிச் சூடு நடத்­தினால், அது சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கை­யாகப் போய்­விடும் என்றும் அவர்கள் (படை­யினர்) உணர்ந்­தி­ருந்­தார்கள். உண்­மை­யி­லேயே சில இடங்­களில் அவர்கள், அவர்­களை (கல­கக்­கா­ரர்­களை) ஊக்­கு­வித்­தி­ருந்­ததை நாங்கள் கண்டோம்.....' என ஜனா­தி­பதி பதி­ல­ளித்­தி­ருந்தார்.   

வெலிக்­கடை சிறைச்­சாலைப் படு­கொ­லைகள் 

கறுப்பு ஜூலை வன்­மு­றை­களைத் தூண்­டி­விட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்ற இரா­ணு­வத்தின் மீதான யாழ்ப்­பாணம் திரு­நெல்­வேலி தாக்­கு­த­லை­ய­டுத்து, ஜூலை சம்­பவ இடத்­திற்கு விரைந்த படை­யினர் அந்தச் சூழ­லிலும், ஏனைய இடங்­க­ளிலும் கண்­மூ­டித்­த­ன­மாக நடத்­திய தாக்­கு­தல்­களில் மாத்­திரம் 50க்கும் மேற்­பட்ட பொது­மக்கள் கொல்­லப்­பட்­டார்கள்.

இரா­ணு­வத்தின் மீது நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லுக்கும், இரா­ணு­வத்­தினர் உயி­ரி­ழந்­த­மைக்கும் அளிக்­கப்­பட்ட முக்­கி­யத்­துவம், பொது­மக்கள் பாதிக்­கப்­பட்ட சம்­ப­வங்­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்கப்பட­வில்லை. அந்த சம்­ப­வங்கள் பற்­றிய தக­வல்கள் இருட்­ட­டிப்பு செய்­யப்­பட்­டி­ருந்­தன. அதனால் ஊட­கங்­களின் ஊடாக உண்மை நிலை­மையை உட­னுக்­குடன் அறிய முடியா சூழல் ஏற்­பட்­டி­ருந்­தது. 

அப்­போது கொழும்பில் இருந்த வெளி­நாட்டு செய்­தி­யா­ளர்கள் கடு­மை­யாகக் கண்­கா­ணிக்­கப்­பட்­டார்கள். அவர்கள் தங்­க­ளு­டைய ஹோட்டல் அறை­களில் இருந்து வெளியில் வரு­வ­தற்கும் சில நாட்கள் அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருந்­தது. கட்­டுப்­பா­டு­களை மீறிச் செயற்­பட்ட வெளி­நாட்டுச் செய்­தி­யா­ளர்கள் நாட்டில் இருந்து வெளி­யேற்­றப்­பட்ட சம்­ப­வமும் இடம்­பெற்­றி­ருந்­தது.

கொழும்பு உட்­பட நாட்டின் பல இடங்­க­ளிலும் மட்டும் வன்­மு­றைகள் தலை­வி­ரித்­தா­ட­வில்லை. குட்­டி­மணி, தங்­கத்­துரை உள்­ளிட்ட முக்கிய தமிழ் அர­சியல்கைதிகள் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த வெலிக்­கடைச் சிறைச்­சா­லை­யிலும், வன்­மு­றைகள் ஊடு­ரு­வி­யி­ருந்­தன. சிறைச்­சா­லைக்­குள்ளே இருப்­ப­வர்­க­ளுக்கு ஊரடங்கு சட்டம் இருந்­தாலும் ஒன்­றுதான் இல்­லா­விட்­டாலும் ஒன்­றுதான். ஏனெனில் சிறைச்­சாலை நடை­மு­றை­களும் சட்ட விதி­களும் கடு­மை­யா­ன­வை­தானே? குறிப்­பிட்ட நேரத்தில் மாத்­திரம் குறிப்­பிட்ட தேவை­க­ளுக்­காக மட்­டுமே அவர்கள் அடைக்­கப்­பட்­டுள்ள சிறைக்­கூட அறை­களில் இருந்து வெளியில் அவர்­க­ளுக்­கென அனு­ம­திக்­கப்­பட்ட பிர­தே­சத்­திற்குள் செல்ல முடியும். 

இந்த நிலையில், ஜூலை 23 ஆம் திகதி பிற்­பகல் 2.30 மணி இருக்கும். ஊர­டங்கு சட்டம் வெளியில் நடை­மு­றையில் இருந்­தது. வெலிக்­கடை சிறைச்­சா­லையில் பல்­வேறு குற்றச் செயல்­க­ளுக்­காக சிறை­வாசம் அனு­ப­வித்த சிங்­களக் கைதிகள் அவர்கள் அடைக்­கப்­பட்­டி­ருந்த அறை­களில் இருந்து வெளியில் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டார்கள். அவர்கள் குழுக்­க­ளாகப் பிரிந்­தார்கள். கத்­திகள், விறகு கட்­டைகள், இரும்­புக்­கம்­பிகள் என்­பன அவர்­க­ளு­டைய கைகளில் இருந்­தன. தமிழ் அர­சியல் கைதிகள் அடைத்து வைக்­கப்­பட்­டி­ருந்த பகு­தி­களை நோக்கி அவர்கள் ஆக்­ரோ­ஷ­மாகச் சென்­றார்கள். 

அப்­போது அங்கு குட்­டி­மணி, தங்­கத்­துரை ஆகிய மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருந்­த­வர்கள் உள்­ளிட்ட 73 தமிழ் அர­சியல் கைதிகள் அங்கு வைக்­கப்­பட்­டி­ருந்­தார்கள். பனா­கொட இரா­ணுவ முகாமில் வைக்­கப்­பட்­டி­ருந்த முக்­கிய தமிழ் அர­சியல் கைதிகள் இரண்டு வாரங்­க­ளுக்கு முன்­னர்தான் வெலிக்­கடை சிறைச்­சா­லைக்கு மாற்­றப்­பட்­டி­ருந்­தார்கள். 

காட்­டு­மி­ராண்­டித்­தனம்

வெலிக்­கடை சிறைச்­சா­லையின் மாடியில், அந்தக் கைதிகள் அடைக்­கப்­பட்­டி­ருந்த மண்­ட­பங்கள், அறை­களின் கத­வு­களை அடித்து உடைத்துக் கொண்டு கும்­ப­லாகச் சென்ற சிங்­களக் கைதிகள் கூச்­ச­லிட்­ட­வாறு உட்­பி­ர­வே­சித்­தார்கள். என்ன நடக்­கின்­றது என்று உணர்ந்து கொள்­வ­தற்கு முன்பே அங்­கி­ருந்த தமிழ் அர­சியல் கைதிகள் அடித்தும் முறித்தும், வெட்­டியும் கொத்­தியும் சரிக்­கப்­பட்­டார்கள். நிரா­யு­த­பா­ணி­க­ளான அந்த சிறைக்­கை­திகள் மூர்க்­கத்­த­ன­மாக தாக்­கப்­பட்­ட­துடன், குற்­று­யிரும், குலை உயி­ரு­மாக அங்­கி­ருந்து, வெளியில் இழுத்து வந்து அந்­தக்­கட்­டி­டத்­திற்­குள்ளே மைதானம் போன்ற வெளியில் போட்டு கூடி­நின்று அவர்­களை மேலும் தாக்கிக் குத­றி­னார்கள். 

தாங்கள் இறந்த பின்னர் மல­ரப்­போகும் ஈழத்தைக் காண வேண்டும் என்­ப­தற்­காக தங்­க­ளு­டைய கண்­களைத் தானம் செய்­தி­ருந்த தங்­கத்­துரை, குட்­டி­மணி ஆகி­யோரின் கண்கள் பிய்த்து எடுக்­கப்­பட்டு கால்­களில் போட்டு மிதிக்­கப்­பட்­டன. அதனைச் சுற்றி நின்று வேடிக்கை பார்த்­த­வர்கள் வெற்றி கோஷ­மிட்டு ஆர­வாரம் செய்­தார்கள். இந்த சம்­ப­வத்தில் 35 தமிழ் அர­சியல் கைதிகள் கோர­மாகக் கொல்­லப்­பட்­டார்கள். 

இந்த சம்­ப­வத்தின் பின்னர் ஒரு நாள் மிகுந்த பதட்­டத்­துடன் கழிந்­தது. இறந்­த­வர்கள் போக எஞ்­சி­யி­ருந்த தமிழ் அர­சியல் கைதிகள் தங்­க­ளுக்கு என்ன நடக்­குமோ என்று அச்­சத்தில் உறைந்து போயி­ருந்­தார்கள். இருப்­பினும் தங்­க­ளுக்கு உணவு உண்­ப­தற்­காக வழங்­கப்­பட்­டி­ருந்த தட்­டுகள், போர்த்திக் கொள்­வ­தற்­காக வழங்­கப்­பட்­டி­ருந்த போர்­வைகள் அங்­கி­ருந்த மேசையின் மரக்­கால்கள் என்­ப­வற்றை ஆயு­தங்­க­ளாகக் கொண்டு முடிந்த அளவில் போரா­டு­வ­தற்குத் தயா­ராக இருந்­தார்கள். அந்த நிலையில் 27 ஆம் திகதி இரண்­டா­வது நாளாக, தமிழ் அர­சியல் கைதிகள் மீது சிங்­களக் கைதிகள் தமது காடைத்­த­ன­மான தாக்­கு­தல்­களை நடத்­தி­னார்கள். 

இந்தத் தாக்­கு­த­லின்­போது, இல­குவில் தமிழ்க் கைதி­களை அவர்­களால் முதல் நாளைப் போன்று வெளியில் இழுத்துச் செல்ல முடி­ய­வில்லை. போராட்­டத்தின் பின்னர் இழுத்துச் செல்­லப்பட்ட, காந்­தி­யத்தைச் சேர்ந்த டாக்டர் ராஜ­சுந்­தரம் உள்ளிட்ட 18 பேர் காட்­டு­மி­ராண்­டித்­த­ன­மாக அடித்துக் கொல்­லப்­பட்­டார்கள். 

சிறைச்­சா­லைக்­குள்ளே நடை­பெற்ற இந்த மிரு­கத்­த­ன­மான தாக்­கு­தல்கள் குறித்தும், தண்­டனைக் கைதிகள் உள்­ளிட்ட தமிழ் அர­சியல் கைதிகள் படு­கொலை செய்­யப்­பட்­டமை குறித்தும், அர­சாங்கம் எந்­த­வி­த­மான சட்ட நட­வ­டிக்­கை­க­ளையும் எடுக்­க­வில்லை. நீதித்­து­றையின் பொறுப்பில் சிறைச்­சாலை அதி­கா­ரி­களின் நேரடி கண்­கா­ணிப்பில் வைக்­கப்­பட்­டி­ருந்த 53 தமிழ் அர­சியல் கைதிகள் படு­கொலை செய்­யப்­பட்­டமை மிக மோச­மான மனித உரிமை மீற­லாக வர­லாற்றில் பதி­வா­கி­யி­ருக்­கின்­றதே தவிர, அத்­த­கைய சம்­ப­வங்கள் மீண்டும் இடம்­பெ­றாத வகையில் சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டவே இல்லை.

கறுப்பு ஜூலை வன்­மு­றை­க­ளின்­போது இடம்­பெற்ற கொள்ளை, படு­கொ­லைகள், தீவைப்பு போன்ற குற்­றச்­செ­யல்­களில் ஈடு­பட்­ட­வர்கள் அடை­யாளம் காணப்­ப­டவில்லை. இந்த வன்­மு­றை­களின் பின்னர், ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி, வெலிக்­கடை சிறைச்­சாலை சம்­ப­வங்கள் குறித்து எதிர்க்­கட்­சி­யினர் பாரா­ளு­மன்­றத்தில் கேள்வி எழுப்­பினர். அந்த மோச­மான சம்­ப­வங்­களைத் தடுத்து நிறுத்­து­வ­தற்கு ஏன் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வில்லை என அவர்கள் வின­வினர்.

அதற்கு, 'ஒரு சிங்­களக் கைதியும் கூட அந்த சம்­ப­வத்தில் கொல்­லப்­பட்­டாரே.....' என்­பதே அப்­போ­தைய பிர­தமர் பிரே­ம­தா­சவின் பதி­லாக இருந்­தது என்று பாரா­ளு­மன்ற கூட்­டப்­ப­திவில் - ஹேன்­சார்டில் பதி­வா­கி­யுள்­ளது. 

கறுப்பு ஜூலை வன்­மு­றைகள் அர­சாங்­கத்தைக் கவிழ்ப்­ப­தற்­காக மூன்று அர­சியல் கட்­சிகள் சர்­வ­தேச சதித்­திட்­டத்தின் ஊடாக சதி செய்­தி­ருக்­கின்­றன என்று அர­சாங்கம் அறிக்கை வெளி­யிட்­டி­ருந்­தது. 

ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி ஜனா­தி­பதி ஜே.ஆர்.ஜய­வர்­தன நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரையில், நாட்டின் ஜனா­தி­ப­திக்கும், அர­சாங்­கத்­திற்கும் எதி­ராக வன்­மு­றை­யான மனங்­கொண்­ட­வர்­க­ளாகத் தூண்­டி­வி­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை நக்­ஸ­லைட்­டுகள் என்­ற­ழைக்­கப்­ப­டு­கின்ற குழு­வினர் மேற்­கொண்­டி­ருந்­தனர் என்­ப­தற்­கான சான்­றுகள் கிடைத்­துள்­ளன என்று தெரிவித்திருந்தார். 

அப்­போ­தைய ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும், அர­சாங்­கமும் கறுப்பு ஜூலை சம்­ப­வங்­களின் உண்­மை­யான நிலை­மை­களை மறைத்து திசை­தி­ருப்­பு­கின்ற நட­வ­டிக்­கை­களில் பகி­ரங்­க­மா­கவே ஈடு­பட்­டி­ருந்­தார்கள் என்­பதை அவர்கள் அப்­போது தெரி­வித்­தி­ருந்த கருத்­துக்கள் பட்­ட­வர்த்­த­ன­மாக வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தன. 

கறுப்பு ஜூலையின் பின்­ன­ரான நிலை­மைகள்

கறுப்பு ஜூலை வன்­மு­றைகள் பற்­றிய உண்­மையைக் கண்­ட­றி­வ­தற்­கான விசா­ர­ணைகள் காலம் தாழ்த்­தியே நடத்­தப்­பட்­டன. இருப்­பினும் அந்த விசா­ர­ணை­களில் கண்­ட­றி­யப்­பட்ட உண்­மை­களும், கற்­ற­றிந்த பாடங்­களும் அத்­த­கைய வன்­மு­றைகள் மீண்டும் இடம்­பெ­றாத வகையில் தடுப்­ப­தற்கும் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு நியா­யமும் நியா­ய­மான இழப்­பீடும் வழங்­கப்­ப­டு­வ­தற்கு வழி­வ­குக்­க­வில்லை. மாறாக சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய தமிழ் மக்கள் மீது நடத்­தப்­பட்ட 83 ஜூலை மாத இன­வெறித் தாக்­கு­தலைப் போன்றே மூன்று தசாப்­தங்­க­ளுக்குப் பின்னர் நாட்டின் இன்­னு­மொரு சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய முஸ்­லிம்கள் மீது மத ரீதி­யான தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. ஒன்­றுக்கும் மேற்­பட்ட முறை­களில் பல்­வேறு கார­ணங்­களை முன்­வைத்து இந்தத் தாக்­கு­தல்கள் நடத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. 

நாட்­டையும் சிங்­கள மக்­க­ளையும் சர்­வ­தேச ரீதியில் தலை­கு­னியச் செய்த 83 கறுப்பு ஜூலை வன்­மு­றை­களைப் போன்ற சம்­ப­வங்­களின் ஊடாக சிறு­பான்­மை­யி­ன­ரா­கிய தமிழ் மக்­களை இன­ரீ­தி­யாக ஒடுக்கி ஓர் இனச்­சுத்­தி­க­ரிப்பை மேற்­கொள்­வதை பேரி­ன­வாத அர­சி­யல்­வா­தி­களும் அர­சியல் தலை­வர்­களும் தவிர்த்­துள்­ளார்கள். மாறாக, அர­சியல் ரீதி­யாக நுணுக்­க­மான மாற்று வழி­களின் ஊடாக இன­ச்­சுத்­தி­க­ரிப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வதை மரபு ரீதி­யான வழி­மு­றை­யாகக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். 

இந்த வகை­யி­லேயே தமிழ் மக்­களின் அர­சியல் உரி­மைக்­கான போராட்டம் பயங்­க­ர­வா­த­மாகச் சித்­த­ரிக்­கப்­பட்டு அண்டை நாடா­கிய இந்­தியா மற்றும் அமெ­ரிக்கா உள்­ளிட்ட சர்­வ­தேச நாடு­க­ளையும் சீனா, பாகிஸ்தான் போன்ற நாடு­க­ளையும் உத­விக்கு நாடி, அவர்­களின் இரா­ணுவ, பொரு­ளா­தார உத­வி­களின் மூலம் விடு­த­லைப்­பு­லி­களை மஹிந்த ராஜ­பக் ஷ அர­சாங்கம் இரா­ணுவ ரீதி­யாக அழித்து ஒழித்­தது. 

யுத்தம் முடி­வ­டைந்த பின்­னரும், இனப்­பி­ரச்­சி­னைக்கும் ஏனைய எரியும் பிரச்­சி­னை­க­ளுக்கும் தீர்­வு­களைக் காணாமல் சாக்கு போக்­கு­களைக் கூறியும் நொண்­டிச்­சாட்­டுக்­களை முன்­வைத்தும் அர­சுகள் காலம் கடத்தி வரு­கின்­றன. அத்­துடன் தமிழ் மக்­களின் தாயக மண்ணை அப­க­ரித்தும்,  புத்தர் சிலை­க­ளையும் பௌத்த விகா­ரை­க­ளையும் தமிழ் மக்கள் செறிந்து வாழும் இடங்­களில் நிர்­மா­ணித்தும் சிங்­களக் குடி­யேற்­றங்­களை அமைத்தும் இனப்­ப­ரம்­பலை தலை­கீழாக்கும் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. 

இந்த நட­வ­டிக்­கைகள் 83 கறுப்பு ஜூலையின் திட்டமிட்ட வன்முறை சார்ந்த இனஅழிப்பு நடவடிக்கைகளாக அல்லாமல், இராஜதந்திர நகர்வுகளாகவும் அரசியல் தந்திரோபாயச் செயற்பாடுகளாகவும் முன்னெடுக்கப்படுகின்றன. இவற்றுக்கு கறுப்பு ஜூலையே ஆரம்ப சுழியிட்டிருந்தது என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.  

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-23#page-4

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: car and outdoor

Image may contain: one or more people, people walking and outdoor

Image may contain: 1 person, child and outdoor

Image may contain: 3 people, people standing and night

1983/ஜூலை/23,
அன்று காலை மணி எட்டு முப்பது, 
கொழும்பு, கொம்பனித்தெரு, 
ஊர் பாடசாலையில் நான், 
என் தாய் விரைந்தோடிக் கொண்டு வருகிறாள் 
என்னை அள்ளி எடுத்துக்கொண்டு பாடசாலை வாசல் வழிவருகிறாள். 
சக மாணவ மாணவிகளின் பெற்றோர் கூட்டத்தை விலக்கிக்கொண்டு வீடுநோக்கி ஓட்டமும் நடையுமாய் செல்லும்போது நான் கேட்டேன், 
'ஏன் அம்மா இன்னக்கி நேரத்தோட இஸ்கூல் விட்டுடாங்க" என்று. "சண்ட ஐயா சண்ட" "வா சுருக்கா போவோம்" என கூறிக்கொண்டு வேக வேகமாக நடந்தாள் என் தாய். நானோ பயத்தில், "யாருமா சண்ட" "அப்பா எங்கம்மா" என்று வினவவும் வீடு வந்து சேரவும் சரியாக இருந்தது.

வீட்டினுள் அப்பாவைக் காணோம். கூச்சலும் அலறல் சத்தமும் தூரத்திலிருந்து என்காதில் ஒலிக்க பயம் பற்றிக்கொண்டது. "அம்மா" "யாருமா சண்ட" "அப்பாவ சண்ட" "எங்கம்மா அப்பா"

கலக்கத்தோடு தாயும் அத்தைகளும் வாசெல் நோக்க வேலைக்கி சென்ற அப்பாவும், வங்கி சென்ற சித்தப்பாவும் இன்னும் வீடு திரும்ப வில்லை. ஊரார்களால் செய்யக்கொடுக்கப்பட்ட நகைகளையும் தங்கத்தையும் அவசர அவசரமாக நில அறையில் ஆச்சி பதுக்கி கொண்டிருந்த வேலை வீட்டின் பின் கதவு தட தட என தட்டப்பட்டதும் வீட்டுப் பெண்களுன் நானும் உறைந்தே பொய் விட்டோம். மீண்டும் தட தட சத்தத்தோடு அம்மா, அக்கா, என்ற குரல் வந்தது. அது சித்தப்பாவின் குரல். அப்பாட எல்லோருக்கும் மூச்சு திரும்பியது அவர் உள்ளே வந்ததும் அப்பா எங்கே சித்தப்பா? என நான் கேட்க, அண்ணன் இன்னும் வரவில்லையா என்று அவர் வினவ ஒரு பெரிய பாரங்கள் வீட்டின் முன் கதவை பலமாக தாக்கியது. அதை தொடர்ந்து "அடே பாலா வெளியே வாடா தமுள வே---மவனே" என கத்தினான் ஒருவன். அது வெறு யாருமில்லை. அதே தெருவில் வாழும் ஒரு சோனகன் [முஸ்லீம்] தான். அதே நேரம் "அடோவ் ரமீஸ் கமே உன்ட கெரி வெட கரன்ன எபா உத்தோ" [அடேய் ரமீஸ் உள்ளூர் காரனுக்கு கைவரிசைய காட்டதே பு--ம-னே] என எதிர் வீட்டு சிங்கள மனிதர் சத்தம் போட அந்த சோனகன் தெருச் சந்தியில் இருந்த யாழ்ப்பாணத்தவரின் சைவக் கடையை நோக்கி ஓடுகிறான். பகல் பன்னிரண்டு மணி தாண்டி என் தந்தை வீடு திரும்பினார். அன்று காலை இந்தியா செல்ல விமான நிலையம் சென்ற என் தாத்தா ஒருவர் ஊர் போய்ச் சேர வில்லை களனி ஆற்றில் பிணமாக மிதந்து கொண்டிருந்தார்.

ஜூலை கலவரம் சில சிங்கள அரசியல் வாதிகளாலும் அரசியல் காய் நகர்த்துவோராலும் திட்டமிட்டு செய்யப்பட்ட சதி. இது சில தமிழ் அரசியல் வாதிகளுக்கு முன்னரே தெரிந்திருந்தும் அவர்களால் தமிழ் மக்கள் காக்கப் படவும்மில்லை, எச்சரிக்கப் பாடவும் இல்லை.

அநேகமாக அசலூர் சிங்கள சண்டியர்களையும் காடையர்களையும் கொண்டே ஜூலை கலவரம் அரங்கேற்றப்பட்டது. உள்ளூர் வாசிகளால் அல்ல. ஆனால் முழுக்க முழுக்க உள்ளூர் சோனகர்கள் தம் அக்கம் பக்கத்து தமிழர்களை சூறையாடி திடீர் பணக்காரர்கள் ஆகியது கண்கூடு.

நரியோடொரு நரி கூடிட உறவாகிய பந்தம் 
நெருபாயுதம் தனை தாங்கிய கரு வேங்கைகள் எம் சொந்தம் 
நர மாமிச உரி ஊனர்கள் வெறி ஆணைகள் இடுமோ 
தலை ஆட்டியே வரி வேங்கைகள் தொழுதே பனி செய்யுமோ 
தகுமோ இது முறையோ உலகின் இயல் இதுவோ 
அடிப்போம் நிலம் பிடிப்போம் வெடிப்போம் பகை அறுப்போம்

என்று இன உணர்வுக்காக கவிப்படினாலும் அது வெறும் உணர்வுடன் மட்டுமே... 
இனியும் ஒரு யுத்தம் வேண்டாம். 
இனியும் நம் வீரத் தமிழ் இளைஞர்களை மாவீரர்கள் ஆக்க வேண்டாம். 
போதும் தமிழர்களே நீங்கள் தமிழர்களுக்கு செய்த உதவி. 
போதும் தமிழர்களே நீங்கள் தமிழர்களுக்கு செய்த துரோகம். 
போதும் தமிழர்களே நீங்கள் தமிழர்களை பிரித்தாண்ட விதம் 
போதும் போதும்.

இதை ஏன் கூறுகிறேன் என்றால்: சிங்களன் தமிழனை கொன்றொழிக்கும் பொது அவன் நம்மை கொழும்பான்,மலயகத்தான், யாழ்பாணத்தான், மட்டக்களப்பான், என்று பிரித்து பார்க்க வில்லை. தமிழன் என்றே பார்த்தான். கொன்றழித்தான்.

ஆனால் கலவரம் முடிந்து அடுத்த நாள் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு அமைக்கப்பட்ட கேம்பை இந்த வெக்கம் கெட்ட தமிழன் எப்படி பிரித்து கொண்டான் தெரியுமா. யாழ்பாணத்தானுக்கு தனியாக, மன்னார் காரனுக்கு தனியாக, திருகோணமலை காரனுக்கு தனியாக, பிரித்துக்கொண்டார்கள்.

முழு உலகமும் வியந்தது நம் தமிழனின் வீரம் கண்டு. 
அந்த வீர மரபில் பிறந்த எம் வீர வேங்கைகளை காவு கொடுத்ததும் ஈழத்தின் வீழ்ச்சிக்கும் முதன்மை காரணி இவர்களின் இந்த பிரித்தாளும் பிரதேச வாச குணமே.

மீண்டு ஒருமுறை வீரம் போதித்து எம் இளைய தலைமுயை காவு கொடுக்க வேண்டாம். இவர்களுக்கு போதிக்க வேண்டியது வீரத்தை அல்ல ஒற்றுமையை. முதலில் ஒற்றுமையை வளர்ப்போம். 
நம் வீரம் எங்கும் போய்விடாது அது நம் இரத்தத்தில் ஊறியது.

ஒற்றுமையே வலிமை. 
ஒற்றுமையே வலிமை. 
ஒற்றுமையே வலிமை. 
Rivet Raj

Link to comment
Share on other sites

கறுப்புயூலை இனச்சங்காரம் 35 ஆண்டுகள்……

1983 இல் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் யூலை 23 ஆந்திகதியான இன்றுஇரவு ஒரு கண்ணி வெடித்தாக்குதல் இடம்பெற்றபின்னர் மறுநாள் அதிகாலை தமிழ்மக்களுக்குகறுப்பு யூலையுடன் விடிந்தது.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

திருநெல்வேலி தாக்குதலால் தான் 83 கலவரங்கள் ஆரம்பிக்கப்பட்டதாகபொதுவாக கூறப்படுகிறது.ஆயினும் உண்மையில் இந்த தாக்குதலை ஒரு காரணமாக வைத்து ஏற்கனவேதிட்டமிட்டபடி கொழும்பு உட்பட்ட பகுதிகளில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

சிறிலங்காவின் ஆட்சி அதிகார மேலாதிக்க அனுசரணையுடன் திட்டமிட்டவன்முறைகள் 1983 இல் தான் முதன்முறை வெடிக்கவில்லை.

அதற்கு முன்னரும் 1956-1958-1974-1977 என ஆண்டாண்டுகாலம் அவ்வப்போதுதமிழ்மக்களுக்கு எதிராக அவை வெடித்திருந்தன.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

ஆயினும் 83 இல் வெடித்த இந்த கறுப்புயூலையின் நாசகாரம் இலங்கையின்வரலாற்றில் மிக ஆழமாக பதிந்ததமைக்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது.

அன்று ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஜே. ஆர். ஜெயவர்த்தனவே போர்என்றால் போர் சமாதானம் என்றால் சமாதானம் என தமிழ்மக்களை பார்த்து உச்சக்கட்டமாக முழங்கியிருந்தார்.

625.0.560.350.390.830.053.800.670.160.91.jpg

கறுப்பு யூலை வன்முறைகளில் கொழும்பு உட்பட மூவாயிரத்துக்கு மேற்பட்டதமிழமக்கள் கொல்லப்பட்டனர். தமிழர்களுக்கு சொந்தமான பல நிறுவனங்கள் அழிக்கபட்டு பல்லாயிரம்கோடி சொத்தழிவு ஏற்பட்டது. பல்லாயிரம் பேர் ஏதிலிகளாக்கப்பட்டனர்.

ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் கணக்கில் கறுப்பு யூலையில் கொல்லபட்டதமிழ்மக்களின் தொகை வெறும் 358 பேர் மட்டுமே.

இப்போது 35 வருடங்களுக்குப்பின்னர் இலங்கைக்கு இன்னொரு கறுப்புயூலைநினைவு வந்திருக்கிறது.

https://www.ibctamil.com/srilanka/80/103650

23ம் திகதி 'கருப்பு ஜுலை' யாருக்கு? தமிழருக்கா- சிங்களவருக்கா?

Image

'கறுப்பு ஜுலை தினம்' என்று வருடா வருடம் ஜுலை 23ம் திகதியை நினைவு கூர்ந்து வருகின்றோம்.

ஆனால், சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழர் மீதான அந்த திட்டமிட்ட 'இன அழிப்பு' 1983ம் ஆண்டு ஜுலை மாதம் 24ம் திகதி இரவுதான்தான் ஆரம்பமானது - 23ம் திகதி அல்ல என்று வாதிடுகின்றார்கள் சில நோக்கர்கள்.

1983ம் ஆண்டு ஜுலை மாதம் 24ம் திகதி இரவு கொழும்பு டி.எஸ். சேனநாயக்க மாவத்தையிலுள்ள 'நாகலிங்கம் ஸ்டோஸ்' என்ற தமிழ் கடை மீதான தாக்குதலுடன்தான் தமிழர்கள் மீதான வன்முறை ஆரம்பமானது.

எனவே ஜுலை 23ம் திகதிக்குப் பதிலாக 24ம் திகதியையே 'கருப்பு ஜுலை' தினமாக தமிழ்கள் நினைவுகூறவேண்டும் என்பது அந்த தரப்பினது வாதமாக இருக்கின்றது.

ஜீலை 23ம் திகதி தமிழ் மக்கள் மீதான திட்டமிட்ட வன்முறை எதுவும் நடைபெற இல்லை. சிறிலங்கா இராணுவத்தின் பதில் தாக்குதல் நடவடிக்கை அல்லது பழிவாங்கும் தாக்குதல் நடவடிக்கைதான் நடைnhற்றது. சிறிலங்கா தேசத்தின் திட்டமிட்ட இன அழிப்பு ஜுலை 24ம் திகதிதான் ஆரம்பமானது.

இவ்வாறு, அந்த தமிழ் ஆர்வலர்கள் ஒரு வாதத்தை முன்வைத்து வருகின்றார்கள்.

ஊடகப் பரப்பில் பெரிதாகப் பேசப்படாத, அதேவேளை இன அழிப்பு என்கின்ற விடயத்தில் கனிசமான தாக்கத்ழத ஏற்படுத்தக்கூடியதான இந்த வாதம் பற்றி நாம் சற்று ஆழமாகப் பார்ப்பது நல்லது என்று நினைக்கின்றென்.

1983ம் ஆண்டு ஜுலை 23 ஆம் திகதி; இரவு 11.35 மணி அளவில். தமிழீழ விடுதலைப்புலிகள் சிறிலங்கா இராணுவத்தின் வாகனத்தின் மீது ஒரு அதிரடித் தாக்குதலை மேற்கொடார்கள்.

"4-4 பிராவோ" என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்பட்ட சிறிலங்கா இராணுவத்தின் வீதி உலா அணி மீது, யாழ்ப்பாணம் திருநெல்வேலி பிரதேசத்தில் வைத்து மேற்கொள்ளப்பட்ட அந்த அதிரடித் தாக்குதலில் ஒரு அதிகாரி உட்பட மொத்தம் 13 சிறிலங்கா இராணுவத்தினர் கொல்லப்பட்டார்கள்.

23ம் திகதி இரவு 11.35 மணியளவில் இந்தச் சம்பவம் நடைபெற்று சுமார் 1 மணி நேரத்திற்குப் பின்னர் சம்பவ இத்திற்கு விரைந்த மேலதிக இராணுவத்தினர், அப்பிரதேசத்தில் வீட்டில் இருந்த சுமார 51 அப்பாவிப் பொதுமக்களை படுகொலை செய்து, தமது கோபத்தை தீர்த்துக்கொண்டார்கள்.

இதில் இரண்டு விடயங்கள் குறிப்பிடத்தக்கது.

முதலாது, ஜுலை 23ம் திகதி நடைபெற்றது சிறிலங்கா இராணுவத்தினர் மீதான விடுதலைப்புலிகளின் தாக்குதல் மாத்திரம்தான்.

24ம் திகதி அதிகாலை 12.30 மணிக்குப் பின்னர்தான் தமிழ் மக்கள் மீதான சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல் நடைபெற்றுள்ளது.

ஆக, ஜுலை 23ம் திகதி தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு நடைபெற்றதா என்ற கேள்விக்கு- இல்லை என்றேதான் பதில் காணப்படுகின்றது.

அடுத்தது, நிருநெல்வேலி மற்றும் மாணிப்பாய் பிரதேசங்களில் ஜுலை23ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் அல்லது ஜுலை 24ம் திகதி அதிகாலையில் சிறிலங்கா இராணுவத்தினர் மேற்கொண்ட தாக்குதல் என்பதை, திட்டமிட்ட ஒரு இன அழிப்பு நடவடிக்கை என்ற வரையறைக்குள் கொண்டுவருவது மிகுந்த சிரமம் என்று சில மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றார்கள்.

ஒரு இனத்தை இல்லாது ஒழிக்கும் நோக்கத்தோடு இராணுவத்தின் அந்தத் தாக்குதல் நடைபெற்றது என்பதற்கு அப்பால், தமது சக இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதனால் கோபம் கொண்ட இராணுவத்தினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான ஒரு நடவடிக்கை என்ற ரீதியில்தான் கூடியவரை அந்தத் தாக்குதல் அணுகப்படும் என்று கூறுகின்றார்கள் மனித உரிமை ஆர்வலர்கள்.

விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா இராணுவத்திற்கும் இடையில் நடைபெற்ற சண்டையில் இடைநடுவில் அகப்பட்டுக்கொண்டவர்கள், புலிகளின் நடவடிக்கைக்கு உதவியவர்கள், புலிகளால் பாதுகாப்புக் கேடயங்களாகப் பாவிக்கப்பட்டவர்கள் அல்லது கொல்லப்பட்டவர்கள் அனைவருமே விடுதலைப் புலிகள், என்று - கொல்லப்பட்ட அந்த அப்பாவித் தமிழர்களை சிறிலங்கா அரசாங்கம் கூறுவதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

தமது நன்பர்களின் இழப்பால் போபமுற்ற படையினர், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் மேற்கொண்ட ஒரு தாக்குதல் என்று அந்தத் தாக்குதலை உலகமும், சட்டமும் பார்ப:பதற்கும் சந்தர்ப்பம் இருக்கின்றது.

எனவே, யாழ் நகரில் நடைபெற்ற அந்தத் தாக்குதல் இன அழிப்பு என்கின்ற வரையறைக்குள் வராமல் நழுவிவிடுவதற்காக ஆபத்துக்கள் நிறையவே இருக்கின்றன.

ஆனால், ஜுலை 24ம் திகதி இரவு கொழும்பில் தமிழ் மக்களுக்கு எதிராக ஆரம்பமான நடவடிக்கைகள் அப்படிப்பட்டதல்ல.

சிறிலங்கா அரசினால், அதன் அரச தலைமையினால் திட்டமிடப்பட்டு, சிறிலங்காவின் ஆழும் அமைச்சர்கள் பலரது நேரடி வழி நடாத்தலில், சிறிலங்கா படையினரின் பாதுகாப்புடன், சிங்கள இனத்தவரால், தமிழரை அழிக்கும் நோக்குடன், தமிழ் மக்களின் அன்றாட வாழ்வியலில் இடையூறு செய்யும் நோக்குடன், தமிழரின் பொருளாதாரம், கல்வி என்பனவற்றை சிதைக்கும் நோக்குடன் திட்டமிட்ட அiடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஒரு விடயம்தான்- கொழும்பிலும், தென் இலங்கையிலும் மேற்கொள்ளப்பட்ட தமிழருக்கு எதிரான அந்த வன்முறை நடவடிக்கைகள்.

ஒரு இன அழிப்பு என்ற வரையறைக்குள் மிக இலகுவாகக் கொண்டுவந்து பொருத்திவிடக்கூடிய பல சாதகமான அம்சங்கள் இதில் இருக்கின்றன.

அதாவது, ஜுலை 24ம் திகதிக்குப் பிந்திய சம்பவங்களை நாம் கணக்கில் எடுத்தால் மாத்திரம்தான் இதில் சாதகமான விடயங்கள் தமிழருக்கு இருக்கின்றன.

ஆனால், ஜுலை 23ம் திகதியை நாங்கள் கருப்பு ஜுலையாக அனுஷ;டிக்கின்ற பொழுது, மனித உரிமைகள் விடயத்தில் தமிழருக்குச் சாதகமான விடயங்கள் பெரிதான இல்லை என்றே கூறவேண்டும்.

அந்த நாளில் விடுதலைப்புலிகள் என்ற ஒரு ஆயுத போராட்ட அமைப்பு ஒரு அரசாங்கத்தின் உத்தியோபூர்வ இராணுவத்தின் மீது நடாத்திய தாக்குதல் என்பது மாத்திரம்தான் பதிவில் இருக்கின்றது.

இன அழிப்பு தினம் என்று 23 ஜுலையை அடையாளப்படுத்துவதில் உள்ள பாதகமான அம்சம் இது என்பதில் சந்தேகம் இல்லை.

ஜீலை 23ம் திகதி என்பது சிங்களவருக்கு அல்லது சிங்களப் படையினருக்கு அல்லது சிங்கள அரசாங்கத்திற்கு வேண்டுமானால் ஒரு 'கருப்பு' தினமாக இருக்கலாம்.

ஏனென்றால் சிங்கள வரலாற்றில் தமிழர் தரப்பு திருப்பி அடித்து ஒரு மிகப் பெரிய இழப்பை சிங்களத்திற்கு ஏற்படுத்திய முதலாவது சம்பவம் என்று அன்றைய சம்பவத்தை குறிப்பிடலாம்

https://www.ibctamil.com/articles/80/103659

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.