Jump to content

"ஓ  வாவ்" Wow

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"என்னடி வழமையா இந்த நேரத்தில் வாலை ஆட்டிகொண்டு ஒடி வருவாய் என்ன இன்றைக்கு பேசாமல் படுத்திருக்கிறாய்"

" ஒவ்வோரு நாளும் சாம்பாறும் சோறும் தின்று நாக்கு மறந்து போய்விட்டதடி"

"வாவன் அந்த காம்புக்குள்ள போய் சாப்பிடுவம் நல்ல மாட்டிறைச்சி கறி கிடைக்கும்"

"போடி நான் வரவில்லை ம‌யிலரின்ட கடுவனை உவங்கள் தானே போட்டுத்தள்ளினவங்கள்"

" அந்த மயிலரின்ட கடுவனை போட்டு தள்ளினதுக்கும் உன்ட சாப்பாட்டுக்கும் என்னடி சம்பந்தம்"

"ஊ ஊ ஊ "

"என்னடி தப்பா கேட்டுப்போட்டேன் என்று ஊளையிடுகின்றாய்"

"அன்று செக்கல் நேரம் நானும் மையிலரின்ட கடுவனும் மையிலரின்ட அடிவளவுக்குள்ள மினக்கெட்டுக்கொண்டு நின்றனாங்கள் ஊஊஊஊ"

"சும்மா ஊளையிடாமல் விசயத்திற்கு வா"

"எங்களை கண்ட மையிலரின்ட கடைசி கல்லை வீச கடுவன் என்னை இழுத்து கொண்டு பொட்டுக்காலை ஓடிட்டான்"

"பிறகு"

"பெட்டைநாய் என்று சொல்லி எங்களை வீடுகளுக்குள்ள எடுக்கமாட்டாங்கள் தானே, கோயில் வளவும் முற்சந்தியும் தானே  எங்கன்ட இருப்பிடம்"

"இப்பவும் அதே நிலைதான் எங்களுக்கு"

"விசயம் முடிய வழமையா கடுவன் வீட்டை போய்விடுவான் அவனின்ட கெட்ட காலம் அன்றைக்கு அறுவான்களின்ட காம்ப் பக்கம் போய்விட்டான்"

 "அதுக்கென்ன போனால், நான் ஒவ்வொரு நாளும் அங்க போய் தானே சாப்பிடுறன்"

"அந்த காலத்தில‌ சிங்கம், புலி விளையாட்டு இந்த மண்ணில் நடந்தது"

"வாவ் அப்படி அடர்ந்த காடாவா இருந்தது"

"போடி விசரி ...உந்த மனிதாபம் பேசும் மனிதர்கள் எங்களை நாய்பிறவிகள் என்று திட்டிக்கொண்டு தாங்கள் தங்களுக்குள்ள சுடுப்பட்டவன்கள்"

"புரியல்ல"

"அது சொன்னால் புரியாது அனுபவிச்சவனுக்குத்தான் தெரியும்,

அந்த சுடுபாட்டில மையிலரின்ட கடுவன் பரலோகம் போய்ட்டான்

ஊஊஊஊஊஊ அதன் பின்பு சிங்கங்களின்ட கூடாரப்பக்கம் நான் தலைவைத்தும் படுப்பதில்லை"

"  ம‌யிலரின்ட கடுவன் போனபின்பு நீ தனியவே இருந்த நீ"

"போடி விசரி நாங்கள் என்ன மனித பிறவியே கலாச்சாரம் பண்பாடு என்று ஒற்றையோடு இருக்க...மயிலரின்ட கடுவன் வந்து போகும் பொழுதே, பொன்னரின்ட கடுவன்,பர்வதத்தின் கடுவன் என்று ஒரு பட்டியல் இருந்தது"  .

.."..வாவ்,"

"பிறகு ஏன் ம‌யிலரின்ட கடுவனுக்கு ஒரு பீலிங்கொட பிலிம் காட்டுகின்றாய்"

"அவனின்ட சா ஒரு வீண் சாவு என்ற பீலிங்க் தான் அது போக நேற்று

மயிலரின்ட கடக்குட்டியை கண்டனான் "

.."..வாவ்,"

"அடியே நீ எப்படி இங்கிலிஸ் படிச்சனீஎல்லாத்துக்கும் வாவ் ,வாவ் என்று கொண்டுநிற்கிறாய் எங்க‌ன்ட பரம்பரை சத்தமான வள்,வள் என்பது மறந்து போச்சு உனக்கு",

"உந்த கனடா,அவுஸ்ரேலியா,இங்கிலாந்து போன்ற நாட்டிலிருந்து வாரவையளின்ட வாரிசுகளிட்டத்தான்"

"என்ன உனக்கு மட்டும் அவையள் தனியா வகுப்பு எடுத்தவையளோ"

"சும்மா பகிடிவிடாத அக்கா...அவையள் கிணற்றை கண்டால் வாவ் என்கினம்,ஆடு,மாடுகளை கண்டால் வாவ் எங்கினம்"

"அது சரி மயிலரின்ட கடக்குட்டியை  எங்க க‌ண்டனீ? அவன்கன்ட பழைய வீட்டிலயோ" "

"சிங்கம் புலி விளையாட்டில மண்ணையும் வீட்டையும் விட்டிட்டு ஒடி போனவங்கள் தானே...இப்ப சொந்தகாரங்களுக்கு வாடைக்கு கொடுத்து போட்டு ஒரு அறையை தங்களுக்கு என வைச்சிருக்கிறாங்கள்"

"அப்ப அங்க தான் வந்து நிற்கினம் என்று சொல்லுறாயோ அக்கா"

"ஓம் ஓம் வைரவர் பொங்கலுக்கு பிள்ளை குட்டியோட வந்திருக்கினம் ,எங்களை கண்டால் அடிக் நாயே என்று கல்லால் அடிப்பாங்கள் அதே நேரம் பொங்கலும் வைப்பாங்கள் பர‌தேசிகள்"

"எங்கன்ட தலைவிதி அப்படி அக்கா"

"வாவ் உன்னை அடையாளம் கண்டிருப்பானே"

"சீ சீ என்கன்ட பரம்பரையில் நான் தான் இவ்வளவு காலம் இருக்கிறேன் அது அவன்களுக்கு தெரியாது நான் செத்திருப்பன் என்று நினைத்து கொண்டிருக்கினம்"

"அது சரி உங்களுக்கு எத்தனை வயசு"

"வயசை சொன்னால் நாவூறு பட்டுப்போடும்"

"மையிலரின்ட கடைசி கலியாணம் க‌ட்டினது  விடுப்புராணியின் மகளைத்தான்,இரண்டு குட்டிகளும் இருக்கு"

"அப்படியே அக்கா! விடுப்புராணியின்ட வீட்டுக்கு பக்கத்து சந்தையில் நடந்த செல் வீச்சிலதான் எங்கன்ட மாமா,தாத்தா ,அப்பா எல்லாம் செத்து போனவையள் என்று  அம்மா  சொன்னவ"

" ஒம் ஒம்,அது ஒரு சோகமான நாள்,.. அந்த காலத்தில விடுப்பு ராணியின்ட சந்தை பக்கம் இருக்கிற கடுவங்களை மையிலர்வீட்டு பக்கம் இருக்கிற கடுவன்கள் தங்கட ஏரியாவுக்குள் வரவிடாமாட்டாங்கள் "

"ஏன் அக்கா",

"எல்லாம் எங்களை மாதிரி பெட்டைகளை இழுத்து கொண்டு திரிகின்ற போட்டி தான்"

"இவன்களும் அங்க போக ஏலாது அவன்களும் இங்க வர ஏலாது ஒரே நாய் பாடு என்று சொல்லுறீயள்"

"நாங்கள் மட்டுமல்ல அப்ப  விடுப்புராணியின்ட ஆட்கள் மையிலரின்ட ஆட்களை கலியாணம் கட்டமாட்டினம்"

"பிறகு எப்படி உவையள் மட்டும் கட்டியிருக்கினம்"

"எல்லாம் வெளிநாட்டுக்கு போன பின்பு அவையளுக்குள்ள கனக்க மாற்றம் வந்திருக்கு"

"அப்படியே"

"நேற்று அவங்களின்ட வீட்டு வாசற்படியில் படுத்திருந்தனான்,மையிலரின்ட பேத்தி ஒடி வந்து என்னை கட்டி பிடிச்சு ஏய் பியூட்டி வட் இஸ் யு அ நேம்  என்று கொண்டு நிற்குது"

"ஓ  வாவ்"

"இப்ப எங்களை உள்நாட்டுகாரர் கட்டி பிடிப்பதிலும் பார்க்க வெளிநாட்டுகாரர் அதிகம் கட்டிபிடிக்கினம்..... வாவ் வாவ் வாவ்"

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நரியை பரியாக்கியவருடைய வழித்தோன்றலே நச்சென்று இருக்கு அக்கம் பக்கம் எல்லோரையும் வயிரவர் வாகனமாக்கியது......!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, putthan said:

----"பெட்டைநாய் என்று சொல்லி எங்களை வீடுகளுக்குள்ள எடுக்கமாட்டாங்கள் தானே, கோயில் வளவும் முற்சந்தியும் தானே  எங்கன்ட இருப்பிடம்"

"இப்பவும் அதே நிலைதான் எங்களுக்கு"

------

"  ம‌யிலரின்ட கடுவன் போனபின்பு நீ தனியவே இருந்த நீ"

"போடி விசரி நாங்கள் என்ன மனித பிறவியே கலாச்சாரம் பண்பாடு என்று ஒற்றையோடு இருக்க...மயிலரின்ட கடுவன் வந்து போகும் பொழுதே, பொன்னரின்ட கடுவன்,பர்வதத்தின் கடுவன் என்று ஒரு பட்டியல் இருந்தது"  .

------

.."..வாவ்,"

"அடியே நீ எப்படி இங்கிலிஸ் படிச்சனீஎல்லாத்துக்கும் வாவ் ,வாவ் என்று கொண்டுநிற்கிறாய் எங்க‌ன்ட பரம்பரை சத்தமான வள்,வள் என்பது மறந்து போச்சு உனக்கு",

"உந்த கனடா,அவுஸ்ரேலியா,இங்கிலாந்து போன்ற நாட்டிலிருந்து வாரவையளின்ட வாரிசுகளிட்டத்தான்"

"என்ன உனக்கு மட்டும் அவையள் தனியா வகுப்பு எடுத்தவையளோ"

"சும்மா பகிடிவிடாத அக்கா...அவையள் கிணற்றை கண்டால் வாவ் என்கினம்,ஆடு,மாடுகளை கண்டால் வாவ் எங்கினம்"

------

"ஓம் ஓம் வைரவர் பொங்கலுக்கு பிள்ளை குட்டியோட வந்திருக்கினம் ,எங்களை கண்டால் அடிக் நாயே என்று கல்லால் அடிப்பாங்கள் அதே நேரம் பொங்கலும் வைப்பாங்கள் பர‌தேசிகள்"

"எங்கன்ட தலைவிதி அப்படி அக்கா"

"வாவ் உன்னை அடையாளம் கண்டிருப்பானே"

"சீ சீ என்கன்ட பரம்பரையில் நான் தான் இவ்வளவு காலம் இருக்கிறேன் அது அவன்களுக்கு தெரியாது நான் செத்திருப்பன் என்று நினைத்து கொண்டிருக்கினம்"

"அது சரி உங்களுக்கு எத்தனை வயசு"

------

" ஒம் ஒம்,அது ஒரு சோகமான நாள்,.. அந்த காலத்தில விடுப்பு ராணியின்ட சந்தை பக்கம் இருக்கிற கடுவங்களை மையிலர்வீட்டு பக்கம் இருக்கிற கடுவன்கள் தங்கட ஏரியாவுக்குள் வரவிடாமாட்டாங்கள் "

"ஏன் அக்கா",

"எல்லாம் எங்களை மாதிரி பெட்டைகளை இழுத்து கொண்டு திரிகின்ற போட்டி தான்"

"இவன்களும் அங்க போக ஏலாது அவன்களும் இங்க வர ஏலாது ஒரே நாய் பாடு என்று சொல்லுறீயள்"

"நாங்கள் மட்டுமல்ல அப்ப  விடுப்புராணியின்ட ஆட்கள் மையிலரின்ட ஆட்களை கலியாணம் கட்டமாட்டினம்"

"பிறகு எப்படி உவையள் மட்டும் கட்டியிருக்கினம்"

"எல்லாம் வெளிநாட்டுக்கு போன பின்பு அவையளுக்குள்ள கனக்க மாற்றம் வந்திருக்கு"

"அப்படியே"

"நேற்று அவங்களின்ட வீட்டு வாசற்படியில் படுத்திருந்தனான்,மையிலரின்ட பேத்தி ஒடி வந்து என்னை கட்டி பிடிச்சு ஏய் பியூட்டி வட் இஸ் யு அ நேம்  என்று கொண்டு நிற்குது"

 "ஓ  வாவ்"

"இப்ப எங்களை உள்நாட்டுகாரர் கட்டி பிடிப்பதிலும் பார்க்க வெளிநாட்டுகாரர் அதிகம் கட்டிபிடிக்கினம்..... வாவ் வாவ் வாவ்"

 Bildergebnis für தà¯à®°à¯  நாயà¯à®à®³à¯   Bildergebnis für தà¯à®°à¯  நாயà¯à®à®³à¯

சிரிப்பதற்கும், சிந்திப்பதற்கும்....  மினக்கெட்டு, அழகாக...  எழுதப்பட்ட   அருமையான கதை புத்தன்.  :grin: ? ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோணான் தோட்டத்தில....எட்டு மூலைப் பட்டம் பறக்கிற மாதிரி....இருக்குது....புத்தனுடைய கற்பனை!

அதுவும்....சும்மா...பறக்காமல்.....பனை நாரில...செய்த விண் கட்டின மாதிரி...ஒரே ஆரவாரம்!

மனித வாழ்க்கையும்....நாய்களின் வாழ்க்கையைப் போல அமைந்திருக்கலாம்!

பல பிரச்சனைகள் தோன்றாமலே போயிருக்கும்!

குறிப்பாக....சாதிப் பிரச்சனை.....சொத்துப் பிரச்சனை....கௌரவப் பிரச்சனை...என்று பல பிரச்சனைகள் இல்லாமலே வாழ்ந்திருக்கலாம்! 

மொத்தத்தில் அருமையான கதை.....புத்தனின் போக்கிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எழுதப்பட்டுள்ளது!

இன்னும் சிரித்து முடியவில்லை!

Link to comment
Share on other sites

Quote

 ம‌யிலரின்ட கடுவன் போனபின்பு நீ தனியவே இருந்த நீ"

"போடி விசரி நாங்கள் என்ன மனித பிறவியே கலாச்சாரம் பண்பாடு என்று ஒற்றையோடு இருக்க...மயிலரின்ட கடுவன் வந்து போகும் பொழுதே, பொன்னரின்ட கடுவன்,பர்வதத்தின் கடுவன் என்று ஒரு பட்டியல் இருந்தது"  .

.."..வாவ்,"

சிரித்து  முடியவில்லை.tw_tounge_xd:tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

large.jpg

புத்தனின் கதை சம்மருக்கு ஊருக்கு போய் பீலாக் காட்டுபவர்களையும் நமது சமூகத்தின் பரிணாம மாற்றங்களையும் தத்ரூபமாகக் கொண்டுவந்துள்ளது.

வாவ்! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது அண்ணா. அண்மையில் ஊருக்குப் போய்வரச் சந்தர்ப்பம் கிடைத்தது. ஊரில் தெருவெல்லாம் கட்டாக்காலி நாய்கள், ஒவ்வொரு சைசில், எலும்பும் தோலுமாய்ப், பார்க்கவே ஒருபக்கம் அருவருப்பும் இன்னொரு பக்கம் பரிதாபமாகவும் இருந்தது. இங்கே கட்டாக்காலி நாய்களைக் கண்டறியாத எனது மகள், " அப்பா, ஏன் நாயெல்லாம் இப்படி வருத்தக்காரர் மாதிரி ரோட்டில நிக்கினம், உவைக்கு வீடுகள் இல்லையோ ?" என்று கேட்டாள். நான், "உதுகளுக்கு வீடில்லை, ரோட்தான் வீடு" என்று சொல்லவும், நான் ஒஸ்ரேலியா போய் ஆர் எஸ் பி ஸி ஏ இட்டச் சொல்லி உவ எல்லாரையும் சிட்னிக்குக் கொண்டுவரப்போறன் அப்பா எண்டு சொன்னாள். நான் எதுவும் பேசவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ragunathan said:

அப்பா, ஏன் நாயெல்லாம் இப்படி வருத்தக்காரர் மாதிரி ரோட்டில நிக்கினம், உவைக்கு வீடுகள் இல்லையோ ?" என்று கேட்டாள். நான், "உதுகளுக்கு வீடில்லை, ரோட்தான் வீடு" என்று சொல்லவும், நான் ஒஸ்ரேலியா போய் ஆர் எஸ் பி ஸி ஏ இட்டச் சொல்லி உவ எல்லாரையும் சிட்னிக்குக் கொண்டுவரப்போறன் அப்பா எண்டு சொன்னாள். நான் எதுவும் பேசவில்லை.

நாயின் கதையைக் கேட்டே மனம் உடைந்த பிள்ளை ஒட்டுமொத்த தமிழரின் கதையை முழுவதும் அறிந்தால் எப்படி துடிக்கும்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாவ்.... வாழ்க்கையில, மதில் ஏறிப்  பாயுற நாயை... இது வரை காணவில்லை.?
அது எத்தனை தரம் முயற்சி செய்து,  தான் நினைத்த காரியத்தை செய்து விட்டது. 
உண்மையில்... சரியான  கெட்டிக்கார நாய். ?
காணொளி இணைப்பிற்கு..  நன்றி ஈழப் பிரியன். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்கொள்ளா காட்சிகளை கண்முன் நிறுத்திய புத்தனுக்கு ஒரு வாவ் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தமிழ் சிறி said:

வாவ்.... வாழ்க்கையில, மதில் ஏறிப்  பாயுற நாயை... இது வரை காணவில்லை.?
அது எத்தனை தரம் முயற்சி செய்து,  தான் நினைத்த காரியத்தை செய்து விட்டது. 
உண்மையில்... சரியான  கெட்டிக்கார நாய். ?
காணொளி இணைப்பிற்கு..  நன்றி ஈழப் பிரியன். ?

நாய்....கெட்டிக்கார நாய்...தான்!

இருந்தாலும்....அது பிறந்த மண்ணின் குணமும்...அது தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, புங்கையூரன் said:

நாய்....கெட்டிக்கார நாய்...தான்!

இருந்தாலும்....அது பிறந்த மண்ணின் குணமும்...அது தான்!

சத்தியமா இதை நான் எழுத‌ வேணும்  என்று நினைத்தேன் நீங்கள் எழுதிவிட்டிங்கள்

11 hours ago, குமாரசாமி said:

கண்கொள்ளா காட்சிகளை கண்முன் நிறுத்திய புத்தனுக்கு ஒரு வாவ் :cool:

வருகைக்கும் பாரட்டுக்கும் நன்றிகள் கு.சா அண்ணா

14 hours ago, தமிழ் சிறி said:

வாவ்.... வாழ்க்கையில, மதில் ஏறிப்  பாயுற நாயை... இது வரை காணவில்லை.?
அது எத்தனை தரம் முயற்சி செய்து,  தான் நினைத்த காரியத்தை செய்து விட்டது. 
உண்மையில்... சரியான  கெட்டிக்கார நாய். ?
காணொளி இணைப்பிற்கு..  நன்றி ஈழப் பிரியன். ?

ஊர் நாய் என்று சொல்லுறது உதுக்குத்தான்.....சிலந்தியின் கதையை நன்றாக படித்திருக்கிறது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, ஈழப்பிரியன் said:
 
காணோளி இணைப்புக்கு மிக்க நன்றிகள் ஈழப்பிரியன் ...மிகவும் அருமையான காணோளி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/25/2018 at 10:59 AM, ragunathan said:

நன்றாக இருக்கிறது அண்ணா. அண்மையில் ஊருக்குப் போய்வரச் சந்தர்ப்பம் கிடைத்தது. ஊரில் தெருவெல்லாம் கட்டாக்காலி நாய்கள், ஒவ்வொரு சைசில், எலும்பும் தோலுமாய்ப், பார்க்கவே ஒருபக்கம் அருவருப்பும் இன்னொரு பக்கம் பரிதாபமாகவும் இருந்தது. இங்கே கட்டாக்காலி நாய்களைக் கண்டறியாத எனது மகள், " அப்பா, ஏன் நாயெல்லாம் இப்படி வருத்தக்காரர் மாதிரி ரோட்டில நிக்கினம், உவைக்கு வீடுகள் இல்லையோ ?" என்று கேட்டாள். நான், "உதுகளுக்கு வீடில்லை, ரோட்தான் வீடு" என்று சொல்லவும், நான் ஒஸ்ரேலியா போய் ஆர் எஸ் பி ஸி ஏ இட்டச் சொல்லி உவ எல்லாரையும் சிட்னிக்குக் கொண்டுவரப்போறன் அப்பா எண்டு சொன்னாள். நான் எதுவும் பேசவில்லை.

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்....எல்லாத்திலயும் முன்னேற்றம் உண்டு ஊரில், ஆனால் தெரு நாய்களுக்கு அதே நிலை தான் ....கிளிநோச்சியில் இவற்றுக்கு ஒரு காப்பகம் அமைக்கும் முயற்சியில் ஒருவர் இறங்கியுள்ளார் வெற்றி அடையும் என நம்புவோம்...

On 7/25/2018 at 7:40 AM, கிருபன் said:

large.jpg

புத்தனின் கதை சம்மருக்கு ஊருக்கு போய் பீலாக் காட்டுபவர்களையும் நமது சமூகத்தின் பரிணாம மாற்றங்களையும் தத்ரூபமாகக் கொண்டுவந்துள்ளது.

வாவ்! 

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள்

On 7/25/2018 at 2:41 AM, Kavi arunasalam said:

3_FF42_BD5-_B4_EB-4_B62-9_D97-10_B24_C04

நன்றிகள் கவி ....மிகவும் அருமையான சித்திரம்....

On 7/24/2018 at 3:57 PM, nunavilan said:

சிரித்து  முடியவில்லை.tw_tounge_xd:tw_blush:

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் Nuna

On 7/24/2018 at 2:13 PM, கந்தப்பு said:

வாவ் வாவ் , நான் கதையைச் சொன்னேன்

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் அப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/24/2018 at 4:29 AM, suvy said:

நரியை பரியாக்கியவருடைய வழித்தோன்றலே நச்சென்று இருக்கு அக்கம் பக்கம் எல்லோரையும் வயிரவர் வாகனமாக்கியது......!  tw_blush:

வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் மிக்க நன்றிகள் சுவே

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பச்சை புள்ளிகளை வழங்கி அருமையான கருத்துக்களையும் காணோளிகளையும் இணைத்த அனைவ‌ருக்கும் நன்றிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கதை. புத்தனுக்கு ஒரு வாவ் ?

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

சிரிக்க மட்டுமல்ல சிந்திக்கவும் வைக்கும் அருமையான ஓர் உருவகக் கதை. புத்தனுடைய எழுத்து நடை பிரமாதம்.  நல்லதொரு சிந்தனை பாராட்டுக்கள் புத்தன்.

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

நாய்க்கதை மிக்க அருமையாக இருக்கு புத்தா ?

வாசிச்ச பிறகும் சிரிச்சு முடியேல்லை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?

      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 3 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 31 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.