Jump to content

தீர்வை மையப்படுத்தி ஒன்றுபடவேண்டும்


Recommended Posts

தீர்வை மையப்படுத்தி ஒன்றுபடவேண்டும்

sf-0901854d1f3c30d0908e1adc951aebc43b66bf41.jpg

 

விஜ­ய­கலா மகேஸ்­வரன் பிர­பா­க­ர­னையும் ரணி­லையும் புகழ்ந்து ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவைக் குறை­கூ­றி­யி­ருக்­கிறார். இவர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வட­மா­காண அமைப்­பா­ள­ராக இருந்­த­போதே இவ்­வாறு நடந்து கொண்­டி­ருக்­கிறார். ஒரு அரச வைப­வத்தில் அமைச்­சர்­க­ளுக்கும் அதி­கா­ரி­க­ளுக்கும் முன்­னி­லையில் அவர் இவ்­விதம் புலி­களைப் பாராட்­டி­யி­ருக்கின்றார்.

 உண்­மையில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் வட­மா­காண அமைப்­பாளர் தடை­செய்­யப்­பட்ட புலி­களைப் பாராட்­டு­வ­தென்­பது அந்தக் கட்­சிக்கு தெற்கில் பாரிய பாதிப்­பையே ஏற்­ப­டுத்­தி­விடும். 2020 ஆம் ஆண்டு ரணிலின் ஆட்சி அமைந்தால் வடக்கு புலி­களின் கையில் சென்­று­விடும் எனப் பேரி­ன­வா­திகள் கூறும் நிலைக்கு அடித்­தளம் இட்­டு­விடும் என்­பது தெரிந்­தி­ருக்க வேண்டும். இதனால் மஹிந்­த­வுக்கு அதி­க­பா­ராட்டும் கிடைத்து விடும். அவர் ஜனா­தி­ப­தி­யாக இருந்­ததால் தான் புலிகள் அழிந்­தார்கள். இல்­லா­தி­ருந்தால் வடக்கு ,கிழக்கு ரணிலால் புலி­க­ளுக்கே தாரை வார்த்துக் கொடுக்­கப்­பட்­டி­ருக்கும் எனப் பேரி­ன­வா­திகள் நினைக்­கலாம் அல்­லவா?

இதனால் ஏற்­ப­ட­வி­ருக்கும் பாதிப்பைத் தவிர்க்­கவே விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனை விசா­ரிக்க ஐக்­கிய தேசிய கட்­சியே ஒழு­காற்றுக் குழுவை நிய­மித்­தி­ருக்­கி­றது. அமைச்­சர்­க­ளான அகிலவிராஜ்­கா­ரி­ய­வசம், கபீர் ஹாஷிம், தலதா அத்து­க்கோ­ரள, ரஞ்சித் மத்­தும பண்­டார ஆகிய நால்­வ­ரையும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நிய­மித்­துள்ளார். விரை­வான அறிக்­கையை சமர்ப்­பிக்­கும்­படி அவர் இந்த ஒழுக்­காற்று விசா­ரணைக் குழு­விடம் வேண்­டி­யுள்ளார். சிங்கள வாக்கு வங்கியை காப்பாற்றுவதற்காக ஐ.தே.க. விசாரணை நடத்துகிறது.

விஜ­ய­கலா மகேஸ்­வரன் புலிகள் வேண்டும் என்­கிறார். சி.வி.விக்­னேஸ்­வரன் இரா­ணுவம் வேண்டாம் என்­கிறார். அர­சியல் வியூ­க­மின்றி உணர்ச்சி வசப்­பட்ட விஜ­ய­க­லா­வையும் விக்­னேஸ்­வ­ர­னையும் சேர்த்து பேரி­ன­வா­திகள் சிண்டு முடித்து விடு­வார்கள். வழ­மை­யாக சி.வி. விக்­னேஸ்­வ­ரனின் கருத்­துக்கு மாற்­றுக்­க­ருத்­துக்­கூறி சுமந்­தி­ரனும் கூட விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனை சரி காண்­பதில் விக்­னேஸ்­வ­ர­னோடு ஒன்­று­பட்­டி­ருக்­கிறார். எனினும் சம்­பந்தன் அதை சரி­கா­ண­வில்லை. ஆனாலும் வடக்கு கிழக்கு தமிழ் மக்­களின் மன­உ­ணர்வு விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னையே சார்ந்து நிற்­கு­மாயின் தமிழ் மக்­களின் ஆத­ர­வுக்­கு­ரிய அடித்­த­ளத்தை பல­வீ­னப்­ப­டுத்­தி­விடும். அது சி.வி.விக்­னேஸ்­வரன், கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலம் சிவா­ஜி­லிங்கம், அனந்தி சசி­தரன் ஆகி­யோ­ருக்கு வாய்ப்­பா­கி­விடும். அந்த அடிப்­ப­டையில் அவர்­களை மிகைக்க சுமந்­திரன் இந்த நிலைப்­பாட்டை கையாள்­வது விவேகம் என நினைக்­கிறார் என நான் நம்­பு­கிறேன்.

  உண்­மையில் விஜ­ய­கலா மகேஸ்­வரன் புலி­களைச் சேர்ந்­த­வரே அல்ல. ஐக்­கிய தேசியக் கட்­சியின் வட­மா­காண அமைப்­பாளர். இவர் எடுத்த எடுப்பில் ஏன் ஒரே­யடி­யாக புலி­களைப் புகழ்ந்து மீண்டும் அவர்கள் தலை­தூக்க வேண்டும் என்றார். இது இவ­ரது கட்டு மீறிய மனக்­கி­லே­சத்தின் வெளிப்­பாடு என்றே நான் நினைக்­கிறேன். உணர்ச்சி வசப்­பட்டு, தன்­னிலை மறந்து இவர் கூறிய இந்த சொற்­களால் மட்டும் இவர் புலி­யா­கி­வி­டு­வாரா? அண்­மையில் ஒரு பிக்கு ஒரு கூட்­டத்தில் உரை­யாற்­று­கையில் முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் 2020 ஆம் ஆண்டு ஜனா­தி­பதித் தேர்­தலில் வெற்றி பெற்று நாட்டை ஹிட்­லர்போல் ஆள­வேண்டும் என்­றாரே எப்­படி ஹிட்லர் போல் ஆளு­வது? 19 ஆம் ஷரத்­துப்­படி பாரா­ளு­மன்­றத்­தோடு அதி­கா­ரத்தைப் பகிர்ந்­து­கொண்டு ஹிட்லர் ஆகி­வி­ட­மு­டி­யுமா? புலிகள் மீண்டும் உரு­வாக வேண்டும் என விஜ­ய­கலா மகேஸ்­வரன் கூறி­யதால் தமிழ் ஆயதக் குழுக்கள் உரு­வா­கி­வி­டாது. யதார்த்­த­மாக இதைப்­பார்ப்­போ­மாயின் இத்­த­கைய குழுக்­களை இந்­தி­யாவே உரு­வாக்கி வளர்த்து அழித்­தி­ருக்­கி­றது. இந்­தியா நினைத்தால் மட்­டுமே அதற்கு வாய்ப்பு உண்டு. ஜே. ஆரின் அடக்கு முறை­யாலும் தமி­ழ­கத்தின் கடும் அழுத்­தத்­தாலுமே வடக்கு கிழக்கு தமி­ழரின் தற்­காப்­புக்­காக இந்­தியா தமிழ் குழுக்­க­ளுக்கு பயிற்­சி­யையும் ஆயு­தங்­க­ளையும் பணத்­தையும் வழங்­கி­யது.

தமிழர் வழங்­கிய மக்­க­ள் ஆணையை 1979 ஆம் ஆண்டு ஜே.ஆர்.நிரா­க­ரித்­ததும் வடக்கு கிழக்கு தமிழ் எம் பிக்­களை பாரா­ளு­மன்­றத்­தி­லி­ருந்து அவர் வெளி­யேற்­றி­யதும் வெறும் கண்­து­டைப்­புக்­காக மாவட்டச் சபைத் தீர்வைக் கொண்டு வந்த பின் யாழ். மாவட்­டத்தில் அத்­தேர்­தலை 1981 ஆம் ஆண்டு குழப்­பி­ய­டித்­ததும் யாழ் நூல­கத்­துக்குத் தீவைக்­கப்­பட்­டதும் 1983 ஆம் ஆண்டு கொழும்பில் தமிழர் கொடூ­ர­மா­கத்­தாக்­கப்­பட்­டதும் இதில் இந்­தியா தலை­யிடக் கார­ண­மா­கி­யது.

அது இவற்றை எதிர்த்த போதேல்லாம் இணைக்­கப்­பாட்­டுக்கு வரு­வ­தாக ஜே.ஆர்.மேலெ­ழுந்­த­வா­ரி­யாகக் காட்­டிக்­கொண்ட போதும் இந்­தியா வழங்­கிய தற்­காப்பு ஏற்­பாட்டைத் தகர்க்­கவே முனைப்பு காட்­டிக்­கொண்­டி­ருந்தார். முதலில் தற்­காப்பு நிலையில் தமி­ழர்­களை இருக்­கச்­செய்து பிறகு இலங்கை அரசை இணக்­கப்­பாட்­டுக்குக் கொண்டு வரலாம் என்றே இந்­தியா நினைத்­தி­ருக்­கலாம்.

 எனினும் ஜே.ஆரின் பாணி வேறா­ன­தாகும். வலிமை கூடிய சக்­தி­யிடம் முரண்­ப­டாது இணங்கிப் போய் பிறகு உரு­மாற்­றி­வி­டுவார், இதை நன்கு தெரிந்­தி­ருந்­த­தால்தான் தமிழ்ப் போரா­ளிகள் இந்­தியா ஜே.ஆரோடு சுய இணக்கம் காண்­பதில் முரண்­பட்­டார்கள். எனினும் ஜே.ஆர் தமிழ்­போ­ரா­ளி­களைத் தனி­மைப்­ப­டுத்தி இந்­தி­யா­வோடு இணக்கம் கண்டு தனக்கு ஏற்­ற­படி தீர்வை மாற்­றி­ய­மைத்தார்.

  எப்­ப­டியும் இலங்­கை­தானே தீர்வை வழங்க வேண்டும். எனவே ஜே. ஆரின் இணைக்­கத்­தோ­டுள்ள தீர்வே ஊசிதம் எனக் கருதி இந்­தியா ஜே.ஆரை முதன்­மைப்­ப­டுத்தி அவ­ரோடு இணைந்து ஒரு தீர்வை 13 ஆம் ஷரத்­தாக முன்­வைத்­தது. அந்த ஷரத்து பல்­லின வடி­வத்தைக் கொண்­டி­ருப்­பினும் கூட இலங்­கையின் யாப்பு பேரி­ன­வ­டி­வத்­துடன் இருந்­ததால் ஒரு ஷரத்தால் முழு­யாப்­பையும் உரு­மாற்ற முடி­ய­வில்லை. இதைநான் முன்பும் கூறி­யி­ருக்­கிறேன்.

 இந்­நி­லை­யால்தான் இலங்­கைக்கு கடும்­ அ­ழுத்­தத்தைக் கொடுத்து சாதித்­தபின் இந்­தி­யாவை இணங்கச் செய்­யலாம் என தமிழ்ப்­போ­ரா­ளிகள் நினைத்­தி­ருக்­கலாம் இந்­நி­லையில் இலங்­கை­யோடு மட்டும் பேசி தமிழ்ப் போரா­ளி­க­ளி­ட­மி­ருந்து ஆயு­தங்­களைக் களைய இந்­தியா முன் வந்­ததை தமிழ்ப்­போ­ரா­ளிகள் சகிக்­க­வில்லை. எப்­படி என் யுக்தி அவர்­க­ளுக்­குள்­ளா­கவே மோதலை ஏற்­ப­டுத்தி விட்டேன் என ஜே.ஆர் பெரு­மிதம் கொண்டார்.

 தமிழ்ப் போரா­ளிகள் இந்­திய சமா­தானப் படை­யோடு நேர­டி­யாக மோதி­னார்கள். இந்­திய சமா­தானப் படையை வெளி­யேற்­றவும் வடக்கு –கிழக்கு மாகாண சபையைக் கலைக்­கவும் தமிழ் போரா­ளி­க­ளுக்கு ஜனா­தி­பதி பிரே­ம­தாச வழங்­கிய ஆயுத மற்றும் பொரு­ளு­த­வியால் தமிழ்­போ­ரா­ளிகள் மேலும் வலிமை பெற்­றார்கள். ஏற்­க­னவே ஜே.ஆர் இந்­திய சமா­தானப் படையை தமிழ் போரா­ளி­க­ளோடு மோத வைத்­ததன் மூலம் தமிழ் போரா­ளி­க­ளுக்கு சிறந்த யுத்த பயிற்­சியும் கிடைத்­தி­ருந்­தது. என்ன வேடிக்கை 1978 ஆம் ஆண்­டுக்குப் பின் ஜே.ஆர் ஜன­நா­யகத் தமிழ் தலை­வர்­களைப் பாரா­ளு­மன்­றத்தை விட்டும் அகற்றி விட்டு 1984 ஆம் ஆண்டு ஆயுதம் தரிந்த தமிழ்ப்­போ­ரா­ளி­க­ளோடும் பேச்­சு­வார்த்தை நடத்­தி­னாரே அதற்கும் ஒரு­படி மேலே சென்று பிரே­ம­தாச தமிழ்ப்­போ­ரா­ளி­க­ளுக்கு உதவினார்.

13 ஆம் ஷரத்தை அச்­சு­றுத்­தியே, இந்­தியா இலங்­கையின் யாப்­புக்குள் திணித்­த­தாக பிர­தமர் பிரே­ம­தாச எண்­ணி­யது போலவே அது தம்மைப் பலிக்­க­டா­வாக்கி இந்­தியா இயற்­றி­யது எனத் தமிழ்­போ­ரா­ளி­களும் நினைத்­தனர். இதனால் பிரே­ம­தா­ச­வுக்கும் பிர­பா­க­ர­னுக்கும் வட­கி­ழக்கு மாகாண சபையைக் கலைக்கும் விட­யத்­திலும் I.P.K.F.எனும் இந்­திய சமா­தானப் படையை விரட்­டு­வ­திலும் இணக்­கப்­பாடு ஏற்­பட்­டது. அப்­ப­டி­யானால் இலங்­கையின் சுய­நிர்­ண­யத்­தையும் இறை­மை­யையும் ஜே.ஆர். அட­கு­வைத்­தாரா அவற்றை மீட்­டெ­டுக்கத் தமிழ்ப் போரா­ளி­கள் பிரே­ம­தா­ச­வுக்கு உத­வி­னரா?- மண்டை சொறிகிறது. ஆயுதம் தரித்த தமிழ் போரா­ளி­க­ளுக்கு ஒத்­து­ழைப்பு வழங்­கிய ஐக்­கிய தேசியக் கட்­சியால் ஏன் இப்­போது இல­கு­வாக ஜன­நா­யகத் தமிழ்த் தலை­வர்­க­ளோடு பேசி­மு­டிக்க முடி­ய­வில்லை? சந்­தி­ரி­காவின் காலத்தில் பிராந்­திய ஒன்­றி­யத்தின் மூலம் தமிழர்­ பி­ரச்­சி­னைக்குத் தீர்­வு­காண முற்­பட்ட ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சியால் இரண்டு கட்­சி­களும் கலந்த அரசில் இது முடி­ய­வில்­லையே ஏன்?

 74% வீத சிங்­கள மக்கள் வாழும் இலங்­கையில் ஜன­நா­யக ரீதியில் ஒரு­போதும் பல்­லினத் தீர்வை காண­மு­டி­யாது என்­பதா? ஆயுதம் மூலம் தமிழ் போரா­ளிகள் தீர்வு கண்டால் தான் உண்டு என்­பதா? நாம் ஜன­நா­ய­கத்தை வெல்ல வைக்க வேண்டும். ஆயு­தத்தைத் தோற்­க­டிக்க வேண்டும். ஆயுத முனைப்பு பக்­கச்­சார்பு தீர்­வை­யே­தரும் . ஜன­நா­யகம் இரு­பக்க தீர்­வையும் தரும். ஆயு­தத்தால் தற்­காக்­கலாம் அல்­லது அடர்ந்­தே­றலாம். ஆனால் அது தரும் தீர்வு திணிக்­கப்­பட்­ட­தா­கவும் நிரந்­த­ர­மற்­ற­தா­கவும் பின்னால் வேறு கோணத்தில் பிரச்­சி­னையைத் திசை திருப்பக் கூடி­ய­தா­க­வுமே இருக்கும். இதே நிலை தொடர்ந்தும் நீடிக்­கு­மானால் பாரிய அழி­வுக்கே அது வழி­கோலும். சுய தீர்­மா­னத்தின் அடிப்­ப­டையில் இலங்­கையால் இலங்கை –இந்­திய ஒப்­பந்­தத்தை நீர்த்­துப்­போகச் செய்ய முடி­யாது. ஒரு முறை இதில் மஹிந்த ராஜபக் ஷ முனைப்புக் காட்­டி­யதை இந்­தியா எதிர்த்­தது. அதன்­படி வடக்கு கிழக்கு விட­யத்தில் இந்­தி­யாவின் கூட்டுப் பங்கும் இருக்­கவே செய்­கி­றது. நிலப்­ப­ரப்பு இலங்­கை­யு­டை­ய­தா­யினும் அங்­குள்ள தமிழ் மக்­களின் தனித்­துவ விட­யத்தில் இந்­தி­யாவின் இணக்கப்­பாடும் வேண்டும்.

  இதன் மூலம் தற்­காப்­புக்­காகத் தமிழ் போரா­ளி­க­ளுக்கு இந்­தியா ஆயுதம் கொடுத்த நிலை­மாறி அந்த பொறுப்பை இந்­தி­யாவே ஏற்­றுக்­கொண்­டது என்­றா­கி­றது. தமிழ் ஆயுதப் போரா­ளிகள் தனி­யான ஓர் அர­சையும் நாட்­டை­யுமே குறி­யாகக் கொண்­டி­ருந்­தார்கள். அவற்றின் படி சுய­நிர்­ணய தனி இறைமைக் கோரிக்­கை­க­ளையே முன்­வைத்­தி­ருந்­தார்கள்.

இத்­த­கைய அவர்­களின் கோரிக்­கைகள் 1976ஆம் ஆண்டு வட்­டுக்­கோட்­டையில் தந்தை செல்வா முன்­வைத்­த­துதான். எனினும் இக்­கோ­ரிக்­கைகள் ஜன­நா­யக அடிப்­ப­டை­யி­லேயே முன்­வைக்­கப்­பட்­டி­ருந்­தன. இவை மக்­க­ளா­ணையை தேர்தல் மூலம் பெற்ற பின் 1977 ஆம் ஆண்டு பத­வி­யேற்ற ஜே.ஆர் அரசு ஜன­நா­ய­கத்தை விட்டும் வெளி­யேற்றி ஆயுத அடக்கு முறைக்கு உட்­ப­டுத்­தி­ய­தா­லேயே ஆயுத அடிப்­ப­டையைப் பெற்­றன. ஓர் ஆயுதக் குழு முழு­மை­யான நாடா­காது. எனவே முழு­மை­யா­கவே ஆயு­தத்தை நம்­பாமல் வியூ­கத்­தோடு பல்­வேறு வகை­க­ளிலும் முயன்­றி­ருக்க வேண்டும் என்­பது உண்­மைதான்.

 எனி­னும்­கூட ஆயுதப் போராட்டம் அதி­லேயே முனைப்­புடன் இருக்­க­க்கூ­டி­ய­தாகும். 100 வீத சிங்­களப் படை­வீ­ரர்­களும் 100 வீத தமிழ் ஆயுதப் போரா­ளி­களும் தாயக விடு­தலை, மண் மீட்பு எனும் நோக்­கங்­க­ளோடு நேர­டி­யாக மோதினால் நிலை என்ன? பேர­ழிவே ஏற்­படும். சாதா­ரண மக்­களின் மத்­தியில் போரா­ளி­களும் சீரு­டை­க­ளின்றி போரிட்டால் பாரிய உயிர்ச்­சேதம் தவிர்க்க முடி­யா­த­தா­கி­விடும். மனித வேலி அமைத்தல், சிறு­வர்­களைப் படையில் சேர்த்தல், வெள்ளைக் கொடி தூக்­கி­யோரைச் சுடுதல், அத்­தி­யா­வ­சி­ய­மான உணவு தண்ணீர், மருந்து ஆகி­ய­வற்றைத் தடுத்தல், கைதி­களைத் தடுத்து வைத்தல், சிறிய ஆயுதக் குழு­வோடு நாட்டின் இரா­ணுவம் போர் புரிதல், சாதா­ரண ஆயு­தங்­களை எதிர்த்து ஒரு நாட்­டோடு மறு­நாடு மோது­வது போல் கன­ரக ஆயு­தங்­க­ளோடு மோதினால் என்­னாகும்? மிகப்­பா­ரிய பேர­ழி­வையே வடக்கு கிழக்கு தமி­ழர்கள் அடைந்­தார்கள். இதைச் செய்த மஹிந்த ராஜபக் ஷ சர்வ­தேச ரீதியில் போர்க்­குற்­றத்தில் அகப்­பட்­டாலும் கூட சிங்­களப் பெரும்­பான்­மை­யினர் மத்­தியில் தேசிய வீர­ரா­கவே மதிக்­கப்­ப­டு­கிறார்.

பிரி­வினை, தனி­நாடு எனும் புலி­களின் கோரிக்­கை­க­ளுக்கு இந்­தி­யாவின் ஆத­ர­வில்லை என்­ப­தற்­கா­கவே தந்தை செல்­வாவின் முக்­கிய ஆத­ர­வா­ள­ரான சம்­பந்தன் உயர்­நீ­தி­மன்­றத்தில் பிரி­வினைக் கோரிக்­கையை கைவிட்டு விட்­ட­தாக சத்­தி­யப்­பி­ர­மாணம் செய்­தி­ருந்தார். 

ஐ.நா வாலோ சர்­வ­தே­சத்­தாலோ கூட இலங்­கைக்கு ஒரு யாப்பை இயற்­றிக்­கொ­டுக்க முடி­யாது. ஐ.நா ஒவ்­வொரு நாட்­டுக்கும் யாப்பு தயா­ரித்­துக்­கொ­டுக்கும் நிறு­வ­ன­மல்ல. அந்­தந்த நாடு­களே தத்­த­மக்­கு­ரிய யாப்­பு­களை சுய­மா­கவே இயற்­றிக்­கொள்ள வேண்டும். யாப்பு விட­யத்தில் சர்­வ­தே­சமும் கூட ஒரு நாட்­டுக்குள் தலை­யி­ட­மு­டி­யாது. அது அந்­தந்த நாடு­க­ளுக்கே உரிய தனிப்­பட்ட உரி­மை­யாகும்.

  அந்த வகையில் இலங்­கையில் வாழும் 74 வீத சிங்­கள மக்கள் இணங்­காமல் அரசால் சிறு­பான்­மை­க­ளுக்கு அதி­காரப் பர­வலை வழங்கும் யாப்பை இயற்­றவே முடி­யாது. ஏனெனில் தற்­போ­துள்ள யாப்பின் படி பாரா­ளு­மன்­றத்தில் மூன்றில் இரண்டு பங்­கினர் அங்­கீ­க­ரித்­தால்தான் ஒரு யாப்பை இயற்­றிக்­கொள்ள முடியும். சர்­வ­ஜன வாக்­கெ­டுப்­பிலும் கூட மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு வேண்டும்.

 அதனால் தான் சம்பந்தனும் ரணிலும் மைத்திரியும் கண்டு இது பற்றி பேசிய போது அவர் மகிந்தவைக் கண்டு பேசுமாறு கூறியிருந்தார். அந்த வகையில் தற்போதிருக்கும் சூழ்நிலையில் மகிந்தவின் ஆதரவும் கிடைத்தாலன்றி தீர்வு சாத்தியமில்லை என்றாகிறது அல்லவா? இதை அடிப்படையாக வைத்து தமிழினத்தை அழிவுக்குட்படுத்திய போர்க்குற்றவாளியான மகிந்த ராஜபக் ஷவைக் காண சம்பந்தன் போனார் எனக் கூறலாமா? மைத்திரிபால சிறிசேன ஐநாவில் போர்க்குற்றத்தை ஏற்றுக் கொண்டு 30/1 ஆம் நிபந்தனைகளைப் பெற்றுக்கொண்டு இணை அனுசரணைக்கு இணங்கி இரு தவணைகளை பெற்றுக் கொண்டிருந்தாலும் கூட மகிந்த ராஜபக் ஷவின் ஒத்துழைப்பு இன்றேல் எதுவும் முடியாத நிலையே இப்போது தென்படுகிறது.

  படைவீரர்கள் மீதான போர்க்குற்றச் சாட்டும் விசாரணையும் தண்டனையும் அரசியல் தீர்வுக்குப் பாரிய முட்டுக்கட்டையைப் போட்டுவிடும். அதனால் தான் அரசியல் தீர்வை முன்னிலைப்படுத்தியிருக்கிறார்கள் என நினைக்கிறேன். அதற்கும் கூட மகிந்தவிடமே போக வேண்டும் என்பது ஒரு இக்கட்டான சூழல்தான். எனினும் மைத்திரியும் ரணிலும் மகிந்தவிடயம் தங்கி உள்நாட்டு சர்வதேச பொறுப்புக்களை நிறைவேற்றாவிடின் மூவருமே அதற்குப் பொறுப்பாவார்கள். தீர்வு ஏற்படின் வடக்கிலிருந்து இராணுவமும் அகலும். அதிகாரப்பரவலும் அமையும். வாழ்வாதாரங்களும் கிடைக்கும். எனவே தீர்வை மையப்படுத்தியே அனைவரும் ஒன்றுபட்டு நிற்கவேண்டும்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-21#page-4

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.