Jump to content

ஹெல்சிங்கியில் ட்ரம்ப் புட்டின் உச்சி மாநாடு


Recommended Posts

ஹெல்சிங்கியில் ட்ரம்ப் புட்டின் உச்சி மாநாடு

 

அமெ­ரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பூகோ­ளத்தில் முதன்­மை­யான தலைவர் மட்­டு­மல்ல அண்மைக் காலங்­களில் உலகின் கவ­னத்தை பல வழி­க­ளிலும் ஈர்த்த தலைவர் என்று துணிந்து கூறலாம். கொரிய தீப­கற்­பத்தில் யுத்தம் ஒன்று வரு­குது பார் என்ற நிலை­யி­லி­ருந்து வட­கொ­ரிய அதி­ப­ருடன் சிங்­கப்­பூரில் உச்­சி­ம­ா­நாடு நடத்தி, கொரிய தீப­கற்­பத்தில் பதற்றத்தை நீக்கி, பேச்­சு­வார்த்தை நகர்­வுகள் மூலம் கொரிய பிணக்­குக்கும் வட­கொ­ரி­யாவின் அணு­ஆ­யுத அபி­ல­ாஷை­க­ளுக்கும் முடி­வு­கட்டும் இரா­ஜ­தந்­தி­ரத்தை சாமர்த்­தி­ய­மாக கையாள்­கின்றார்.வட­கொ­ரிய தலை­வ­ருடன் உச்­சி­மாநாடு நடத்­திய சூடு தணிய முன்னர் ரஷ்ய அதிபர் விளா­டிமிர் புட்­டி­னுடன் உச்­சி­மாநாடு நடத்­தப்­போ­வ­தாக செய்­திகள் அமெ­ரிக்க,ரஷ்ய தரப்­பு­க­ளி­லி­ருந்து கசிந்து உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது.அவ்­வாறே பின்­லாந்து தலை­ந­க­ரான ஹெல்­சிங்­கியில் 2018ஆம் ஆண்டு ஆடி மாதம் 16ஆம் திகதி இரு தலை­வர்­க­ளுக்­கு­மி­டையில் உச்­சி­மாநாடு காலையில் ஆரம்­ப­மா­னது. எந்த அமெ­ரிக்க ஜனா­தி­ப­திக்கும் காட்­டாத எதிர்ப்­பினை ஜனா­தி­பதி ட்ரம்பின் குடி­ய­ரசுக் கட்­சி­யினர் காட்­டினர். பிர­தா­ன­மாக 2016 அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் ரஷ்ய உள­வா­ளிகள் சம்­பந்­தப்­பட்­டி­ருந்­தனர் என்ற அமெ­ரிக்க புல­னாய்வு அமைப்­புக்­களின் புல­னாய்வு அறிக்­கைகள் பர­வ­லாக நம்­பப்­பட்ட சூழ்­நி­லையில் ஜனா­தி­ப­தியின் புட்­டி­னு­ட­னான உச்­சி­ம­ா­நாட்­டுக்கு எதிர்ப்­புக்கள் கிளம்­பின.ஹெல்­சிங்கி நகரில் பிர­ப­ல­மான ஹோட்டல் ஒன்றில் இரு தலை­வர்­களும் சந்­திக்க ஏற்­பா­டா­கி­யி­ருந்­தது. இரா­ஜ­தந்­திர, அர­சியல் வட்­டா­ரங்­களில் புட்டின் ஒத்துக் கொண்ட நேரத்­திற்கு பிர­சன்­ன­மா­க­மாட்டார் என்ற கருத்து நில­வு­கின்­றது. புட்டின் அக்­க­ருத்தைப் பொய்ப்­பிக்­க­வில்லை. அரை மணித்­தி­யாலம் பிந்­தியே, அதா­வது 10.00 மணிக்கு வர­வேண்­டி­யவர் 10.30 மணிக்கே மா­நாட்டு மண்­ட­பத்­துக்கு வருகை தந்தார். குறிப்­பிட்ட நேரத்­திற்கு பிர­சன்­ன­மானார் ஜனா­தி­பதி ட்ரம்ப், முதலில் உத­வி­யா­ளர்­க­ளின்றி இரு தலை­வர்­களும் பேசினர். சோவியத் ரஷ்யா உலக வல்­ல­ர­சாக கோலோச்­சிய காலத்தில் அமெ­ரிக்­கா­வுடன் சம­ப­ல­முள்ள நாடாக விளங்­கி­யது.

சோவியத் ரஷ்யா 1991 இல் சிதறி உடைந்து, பல நாடுகள் தனித்­தனி சுதந்­திர நாடுகளாக பிரிந்­து­விட்ட நிலையில் ரஷ்ய சம்­மே­ளனம் முன்­னைய சோவியத் ரஷ்யாவி­ட­மி­ருந்த அணு ஆயு­தங்கள் இன்­னோ­ரன்ன அதி­சக்தி மிகுந்த ஆயு­தங்­க­ளுக்கு உரித்­தா­ளி­யா­கி­யது. சோவியத் ஒன்றியத்தின் பூலோக வகி­பாகம் இன்­றைய ரஷ்ய சம்­மே­ளனத்­தை­விட முக்­கி­யத்­துவம் பெற்று விளங்­கி­யது. எனினும் அமெ­ரிக்க - ரஷ்ய தலை­வர்­களின் உச்­சி­மாநாடு இன்­றைய சம­கால அர­சியல் நிகழ்­வு­களில் எந்­த­வி­த­மா­கவும் குறைத்து மதிப்­பிட முடி­யாது. சர்­வ­தேச மோதல் நடை­பெறும் அரங்­கு­களில் அமெ­ரிக்­காவின் வகி­பாகம், ரஷ்யாவின் வகி­பாகம் முரண்­பா­டா­னவை. சிரிய நெருக்­க­டியில் அமெ­ரிக்கா,ரஷ்யா எதிர் - எதிர்த் தரப்­பு­க­ளுக்கு உத­வு­கின்­றன. அமெ­ரிக்கா சிரிய அதிபர் அசாத்தின் ஆட்சி மாற்றம் என்ற நிகழ்ச்சி நிர­லுடன் கள­மாடி வரும் வேளை ரஷ்யா சிரிய அதி­ப­ருக்கு முட்­டுக்­கொ­டுக்­கி­றது. அதே­போன்று அமெ­ரிக்கா, ஈரானை மூர்க்­கத்­த­ன­மாக எதிர்க்கும் சவூதி அரே­பி­யா­வுக்கு தொடர்ந்து ஆத­ரவு வழங்கி வரு­கின்­றது. அரபு, இஸ்ரேல் பிணக்கில் அமெ­ரிக்கா இஸ்­ரேலை அர­வ­ணைத்துச் செயற்­ப­டு­கி­றது. ரஷ்யா, அரபு தரப்­பி­னருக்கு ஆத­ரவு வழங்­கு­கின்­றது.

ஆசிய பிராந்­தி­யத்தை எடுத்துக் கொண்டால் ரஷ்யாவின் ஆத­ரவு வட­கொ­ரி­யா­வுக்கும் அமெ­ரிக்­காவின் ஆத­ரவு தென்­கொ­ரி­யா­வுக்கும் கிடைத்த சூழ்­நி­லையில் தற்­போது அமெ­ரிக்க - வட­கொ­ரியத் தலை­வர்­களின் உச்­சி­ம­ா­நாட்­டுடன் சில மாறு­தல்­க­ளுக்கு உட்­ப­டலாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. எனினும் இன்­றைய ரஷ்யா முன்­னைய சோவியத் ஒன்றியத்தின் பேரம் பேசும் பலத்­துடன் இல்­லை­யென்­பது எளிதில் விளங்­கக்­கூ­டி­ய­தாகும்.

ஆடி மாதம் 16ஆம் திகதி நடை­பெற்ற உச்­சி­ம­ா­நாட்­டுக்குப் பின்னர் இடம்­பெற்ற ஊடக சந்­திப்­புக்­களில் ஜனா­தி­பதி ட்ரம்ப் கூறிய விட­யங்கள் அமெ­ரிக்­கா­வினுள் ட்ரம்பின் குடி­ய­ரசுக் கட்­சி­யினரே நிரா­க­ரிக்கும் அள­விற்குச் சென்­றுள்­ளமை கவ­னிக்­கத்­தக்­கது.

சோவியத் ஒன்றியத்தின் தோற்­றமும் வளர்ச்­சியும் பற்றி அறிந்து கொள்­ளாமல் இன்­றைய ரஷ்யாவைப் பற்­றிய புரி­தல்­களை சரி­யாகப் பெற­மு­டி­யாது. கார்ல்மார்க்ஸ் என்ற மாமேதை ஜேர்­ம­னியைச் சேர்ந்­தவர்.அவரின் பொருள்­ மு­தல்­வாத கோட்­பாடு, மார்க்­ஸியம் என உலகம் முழு­வதும் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டது. கார்ல்மார்க்ஸ் முத­லா­ளித்­துவ முறையை ஆயு­தப்­பு­ரட்சி மூலம் ஒழித்து சம­தர்ம ஆட்­சியை நிறு­வ­வேண்­டு­மென போதித்தார். கார்ல்­மார்க்ஸின் கோட்­பா­டு­களை பின்­பற்றி ரஷ்ய நாட்டில் போல்­சிவிக் கட்­சிக்கு (கம்­யூனிஸ்ட்) தலைமை தாங்­கிய விளா­டிமிர் லெனின் என்ற இன்­னொரு மாமேதை ரஷ்யாவின் ஆயுதப் புரட்­சிக்கு தலைமை தாங்கி அப்­போது ஆட்சி செலுத்­திய ஜார் ­மன்­னனின் ஆட்­சியைக் கவிழ்த்து சோச­லிச - சம­தர்ம ஆட்­சியை மலரச் செய்தார். வர­லாற்­றா­சி­ரி­யர்கள் சோவியத் புரட்­சியை ஒக்­டோபர் புரட்சி என்று புக­ழாரம் சூட்­டினர்.

சோவி­யத்­களின் ஒன்­றி­யமே சோவியத் ரஷ்யா எனப்­பெயர் சூட்­டப்­பட்­டது. முத­லா­ளித்­துவ நாடுகள் உலகம் பூரா­கவும் ஆட்சி செலுத்­திய கால­கட்­டத்தில் உலகின் முத­லா­வது சம­தர்ம சோச­லிச அரசை அழிப்­ப­தற்­காக அமெ­ரிக்­காவின் தலை­மையில் சோவியத் அர­சுக்கு எதி­ராக முற்­றுகை இடம்­பெற்­றது. ஆனால் சோவி­யத்தின் வீர­மிகு செஞ்­சேனை அமெ­ரிக்க கூட்­டணிப் படை­களைத் தோற்­க­டித்து சோவி­யத்­ அ­ரசை மேலும் பலம்­பெற வைத்­தார்கள். சோவியத் ரஷ்யாவுடன் அமெ­ரிக்கா இரா­ஜ­தந்­திர தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­த­வில்லை. கார்த்­திகை 1933ஆம் ஆண்டில் அமெ­ரிக்கா, சோவியத் ரஷ்யாவை அங்­கீ­க­ரித்­ததன் பின்னர் இரா­ஜ­தந்­திர உற­வுகள் தாபிக்­கப்­பட்­டன.

1991 இல் சோவியத் ரஷ்யா என்ற பலம் பொருந்­திய உலக வல்­ல­ரசு சிதைந்­தது. அமெ­ரிக்க ரஷ்ய உற­வுகள் சிறப்பு நிலை அடைந்­தன. 1999 வரை உற­வுகள் சிறப்­பாக இருந்­தன. பின்னர் உறவு நிலை­களில் தேக்கம் ஏற்­பட்­டது. 90 களின் முடிவில் சேர்­பியா, கோசவா நெருக்­க­டி­களில் அமெ­ரிக்கா ரஷ்யாவின் தலை­யீட்டைக் கண்­டித்­தது. இன்­றைய ரஷ்யத் ­த­லைவர் புட்டின் முதன்­மு­த­லாக 1999 இல் ஜனா­தி­ப­தி­யானார். அவரும் அமெ­ரிக்­கா­வுடன் விட்­டுக்­கொ­டுக்கும் போக்­கினை கடைப்­பி­டிக்­க­வில்லை. அமெ­ரிக்கா ஜோர்­ஜியா, உக்ரைன் நாடு­களில் ஆட்சி மாற்றம் ஏற்­பட தலை­யிட்­டது. அமெ­ரிக்க ரஷ்ய உற­வுகள் மீண்டும் தாழ்­நி­லை­ய­டைந்­தன.

2015 இல் உக்ரைன் பிரச்­சினை உக்­கி­ர­மா­கிய போது ரஷ்யா உக்ரைன் நாட்டின் ஒரு பகு­தி­யா­கிய கிரி­மி­யாவை ரஷ்யாவுடன் இணைத்­தது. இன்­று­வரை இப்­பி­ரச்­சினை தீர்க்­கப்­ப­ட­வில்லை. ஜ – 8 கைத்­தொழில் நாடு­களின் கூட்­ட­ணி­யி­லி­ருந்து ரஷ்யா விலக்­கப்­பட்­டது. அத்­துடன் சிரி­யாவில், ஈராக்கில் அமெ­ரிக்க ரஷ்ய தரப்­புகள் எதி­ரெ­தி­ராக செயற்­பட்­டன. 2016 இல் அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் ரஷ்ய உள­வா­ளிகள் சம்பந்­தப்­பட்­டனர் என்ற புல­னாய்வு அறிக்­கைகள் இரு நாடுகளுக்­கு­மி­டையில் பிரச்­சி­னை­களை ஏற்­ப­டுத்­தி­ன.

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியின் முக்­கிய பிர­மு­கர்கள் ட்ரம்ப்– - புட்டின் உச்­சி­மா­நாட்டில் அமெ­ரிக்­காவை, உலகின் முதன்­மை­யான நாட்டை, வல்­ல­ர­சினை, அதன் அந்­தஸ்தை உயர்த்­து­வ­தற்குப் பதி­லாக தாழ்த்­தி­விட்டார் என்றும் அமெ­ரிக்க நாட்டின் பிர­சித்தி பெற்ற புல­னாய்வு நிறு­வ­னங்­க­ளான சீ.ஐ.ஏ, எப்.ஓ.ஐ ஆகிய அமைப்­புக்கள் நுட்­ப­மாகக் கண்­டு­பி­டித்த ரஷ்ய உள­வா­ளி­களின் செயற்­பா­டு­க­ளையும் உள­வா­ளிகள் எவ்­வாறு 2016 அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் தலை­யிட்­ட­மையை கண்­டு­பி­டித்­தனர் என்ற விட­யத்­திற்கு முக்­கி­யத்­துவம் அளிக்­காமல் புட்­டினைத் திருப்திப்­ப­டுத்த அமெ­ரிக்க புல­னாய்வு நிறு­வ­னங்­களை அந்தோ என்று கைவிட்டு விட்டார் என்றும் ட்ரம்­புக்கு அமெ­ரிக்கா முதன்­மை­யாகத் தெரி­ய­வில்லை, ரஷ்யாதான் முதன்­மை­யாகத் தெரிந்­துள்­ளதோ? என்றும் ரஷ்ய புல­னாய்வு நிறு­வ­னங்கள் (கே.ஜே.ஓ உள­வா­ளிகள்) அமெ­ரிக்க தேர்­தலில் தலை­யி­ட­வில்லை என்றும் அப்­ப­டி­யான கூற்­றுக்கள் பொய்­யா­னவை என ரஷ்ய ஜனா­தி­பதி கூறி­ய­வற்றை ஏற்­றுக்­கொண்­டது மட்­டு­மல்ல ரஷ்ய ஜனா­தி­பதி புட்டின் திற­மை­யா­னவர் என்றும் மிக வல்­ல­மை­யா­னவர் என்றும் அவரைப் புகழ்ந்து கூறி அமெ­ரிக்­கா­விற்கு அவ­மா­னத்தை ஏற்­ப­டுத்­தி­விட்டார் என்றும் ரஷ்யாவின் நட்­பு­ற­வுக்­காக அமெ­ரிக்­காவின் நீண்­ட­கால நட்­பு­றவு நாடு­களை மன­மு­டையச் செய்­துள்ளார் என்றும் பேச்­சு­வார்த்­தையில் அமெ­ரிக்க தலைவர் பல­வீன நிலையில் இருந்­தது இது முதல் தடவை என்றும் பல விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்­டன.ஜனா­தி­பதி ட்ரம்ப் வழ­மைபோல் தனது ட்விட்டர் பதிவில் இவற்­றை­யெல்லாம் மறுத்­துள்ளார். அமெ­ரிக்க புல­னாய்வுக் கணிப்­புக்­களை தான் ஒரு­போதும் குறைத்து மதிப்­பி­ட­வில்லை என்றும் புல­னாய்வு அமைப்­புக்கள் தொடர்ந்தும் சிறப்­பாகச் செய­லாற்­று­வ­தற்கு வெள்ளை மா­ளிகை வேண்­டிய பக்­க­பல உத­வி­களைச் செய்யும் என்றும் தெரி­வித்தார்.உலகின் முதன்மை நாடான அமெ­ரிக்கா இன்­னொரு சக்­தி­வாய்ந்த நாட்டுத் தலை­வரைச் சந்­திக்கும் போது பிராந்­திய, சர்­வ­தேச, முக்­கி­ய­மான விவ­கா­ரங்­களைப் பற்­றியே பேச வேண்டும் என்றும் சர்ச்­சை­களை உரு­வாக்­கக்­கூ­டிய விட­யங்­களைத் தவிர்ப்­பது தான் இரா­ஜ­தந்­திரம் என்றும் தெரி­வித்தார். 2016 அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் ரஷ்ய உள­வா­ளிகள் சம்­பந்­தப்­பட்­டனர் என்ற குற்­றச்­சாட்­டிற்கு சில ஊட­கங்கள் அள­வுக்கு மீறிய முக்­கி­யத்­துவம் வழங்­கு­கின்­றன என்றும் கூறினார். ட்ரம்பின் நெருங்­கிய குடி­ய­ர­சுக்­கட்சிப் பிர­மு­கர்கள் சிலர் 2016 அமெ­ரிக்க ஜனாதிபதி தேர்­தலில் ரஷ்ய உள­வா­ளிகள் சம்­பந்­தப்­பட்­டி­ருந்தால் அவ்­வி­வ­கா­ரத்­திற்கு பொறுப்­புக்­கூற வேண்­டி­யவர் முன்னாள் ஜனா­தி­பதி பராக் ஒபாமா என்று கூறினர்.

 இது இவ்­வாறு இருக்க உச்­சி­மாநாடு நடை­பெற்று மூன்றாம் நாள் வெள்ளை மா­ளிகை அதி­காரி ஒருவர் நிரு­பர்­க­ளுக்குப் பேட்­டி­ய­ளிக்­கையில், உச்­சி­ம­ா­நாட்டின் போது சிரிய அக­தி­க­ளுக்­கான மனி­தா­பி­மான உதவி, வட­கொ­ரி­யாவின் அணு­சக்தித் திட்­டங்­களை முற்­றாக இல்­லாமல் ஒழித்தல், உக்ரைன் – கிரி­மியா விவ­காரம், இஸ்­ரே­லியப் பாது­காப்பு, அமெ­ரிக்க ரஷ்ய நாடுகள் அணு ஆயு­தங்­களைக் குறைத்தல், 2016 அமெ­ரிக்க ஜனா­தி­பதி தேர்­தலில் ரஷ்ய உள­வா­ளிகள் சம்­பந்­தப்­பட்­ட­தாகக் கூறப்­படும் குற்­றச்­சாட்டு ஆகிய விட­யங்கள் பேசப்­பட்­ட­தாகத் தெரி­வித்தார்.

அர­சியல் இரா­ஜ­தந்­திர நடை­மு­றையில் இரு தலைவர்கள் உச்சிமாநாடு நடத்தினால் கூட்டறிக்கை வெளிவிடுவது வழமையானதாகும்.இவ் உச்சி மாநாடு முடிவடைந்த பின்னர் கூட்டறிக்கை வெளியிடப்பட்டாலும் மேலே கூறப்பட்ட விடயங்கள் பற்றிய தகவல் ஏதும் உள்ளடக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் வெள்ளை மாளிகை பேச்சாளரின் தலையீடு விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அமெரிக்க ஜனாதிபதி முன்னைய ஜனாதிபதிகள் போன்று அரசியல் இராஜதந்திர உரையாடல்கள், பிரகடனங்கள், பேட்டிகள் அமையவில்லை என்பது கண்கூடு. ஆனால், அவருடைய மெகா வர்த்தக அனுபவம் அரசியலில் கைகொடுக்கின்றது என்பது பின்னர் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தோன்றுகின்றது. ஒரு யுத்த அறைகூவல் விடுத்துக்கொண்டிருந்த வடகொரிய தலைவரை அமைதி காக்கச் செய்துவிட்டார். கொரிய தீபகற்பத்தில் யுத்த கோஷங்களை சற்றுத் தணித்துவிட்டார். வரலாறு கொரிய பிரச்சினையில் ஜனாதிபதி ட்ரம்பின் இராஜதந்திரத்தை பாராட்டும் என்று சில பிரபலமான பத்திரிகைகள் கருத்துத் தெரிவித்துள்ளன.

 இதே அடிப்படையில் ட்ரம்ப்– - புட்டின் உச்சிமாநாடு நோக்கப்பட வேண்டும். சிரிய நெருக்கடி, மத்திய கிழக்கு முறுகல்கள், ஆப்கான் நெருக்கடி போன்ற விடயங்களில் ஜனாதிபதி ட்ரம்பின் இராஜதந்திரம் சில முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்தலாம் என கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டன.  

ஐயம்பிள்ளை தர்மகுலசிங்கம்  
(இளைப்பாறிய பணிப்பாளர், இலங்கை வெளிவிவகார அமைச்சு.)   

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-07-21#page-5

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.