Jump to content

திருமண உறவில் வன்புணர்வு: பெண்களுக்கு என்ன தீர்வு?


Recommended Posts

திருமண உறவில் வன்புணர்வு: பெண்களுக்கு என்ன தீர்வு?

 
 

திருமண உறவில் வன்புணர்வு தொடர்பான சர்ச்சை ஏன்?

வன்புணர்வுபடத்தின் காப்புரிமைAFP Image captionஉருவகப் படம்

'கணவனுக்கு தேவைப்படும்போது எல்லாம் மனைவி பாலியல் உறவுக்கு தயாராக இருக்கவேண்டும் என்பது திருமணத்துக்கான அர்த்தம் அல்ல' - இதை கூறியிருப்பது டெல்லி உயர் நீதிமன்றம்.

டெல்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு ஒன்றை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற தற்காலிக தலைமை நீதிபதி கீதா மிட்டல் மற்றும் சி. ஹரி ஷங்கர் அடங்கிய நீதிமன்ற அமர்வு இந்த கருத்தை தெரிவித்துள்ளது.

ரிட் ஃபவுண்டேஷன் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆகிய அமைப்புகள் திருமண உறவில் வன்புணர்வு தொடர்பான சட்டம் வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்திருந்தன.

இந்த பொதுநலன் வழக்கு மனு தாக்கல் செய்யப்பட்டதன் நோக்கம் பற்றி ரிட் ஃபவுண்டேஷனின் தலைவர் சித்ரா அவஸ்தியிடம் பிபிசி கேட்டறிந்தது.

பாலியல் வன்புணர்வு என்பதன் பொருள் திருமணமான பெண்களுக்கு மட்டும் பாரபட்சமாக சித்தரிக்கப்படுகிறது என்பதை சுட்டிக்காட்டுகிறார் சித்ரா அவஸ்தி.

மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் வலுக்கட்டாயமாக உடலுறவு கொண்டால் அதுவும் வன்புணர்வு தானே? திருமண உறவும், கணவன் மனைவி என்ற பந்தமும் இருந்தாலும் வன்புணர்வு செய்யப்பட்டால் அதுவும் தண்டனைக்கு உரியது என்பதை சட்டத்தில் சேர்க்கவேண்டும் என்பதே பெண்களுக்கான நீதி என்று சித்ரா கூறுகிறார்.

திருமணம்படத்தின் காப்புரிமைTHINKSTOCK

பல பெண்களின் வாழ்க்கையில் நடந்த உண்மையான சம்பவங்களை குறிப்பிட்டு அதன் அடிப்படையில் பொதுநல மனுவை தாக்கல் செய்திருக்கிறார் சித்ரா. இந்த மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிவிட்டது.

இது ஒரு பொது நலன் மனு தாக்கல் என்பதால், டெல்லியைச் சேர்ந்த ஆண்களின் உரிமைகளுக்காக பணியாற்றும் 'மென் வெல்ஃபர் டிரஸ்ட்' என்ற அமைப்பு, நீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை முன்வைத்தது.

 

 

மென் வெல்ஃபர் டிரஸ்ட்' அமைப்பின் தலைவர் அமித் லகானியின் கருத்துப்படி, 'திருமணமான பெண்களை, கணவன் எந்தவிதத்திலாவது கட்டாயப்படுத்தினால் அதற்காக பல சட்டங்கள் உள்ளன. அவர்கள் அந்த சட்டங்களின் உதவியை நாடலாம் என்ற நிலையில், திருமண உறவில் வன்புணர்வுக்காக தனிச்சட்டம் ஒன்று ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் என்ன?'

இந்த இடத்தில் ஒரு அடிப்படை கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. வன்புணர்வு மற்றும் திருமண வன்புணர்வு என்ற வார்த்தைகளுக்கு இடையில் உள்ள வேறுபாடு என்ன?

வன்புணர்வு

வன்புணர்வு என்றால் என்ன?

ஒரு பெண்ணை அவர் எந்த வயதினராக இருந்தாலும் அவரது விருப்பமின்றி -

  • அவரது உடலின் (பிறப்புறுப்பு அல்லது மலக்குடலில்) எந்த உறுப்பையும் செலுத்துவது வன்புணர்வு.
  • காம இச்சையை தணித்துக் கொள்ளும் நோக்கத்தில் பெண்ணின் அந்தரங்க உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துவது வன்புணர்வு.
  • உடலின் அந்தரங்க உறுப்பின் எந்தவொரு பாகத்தையும் பெண்ணின் வாயில் வலுக்கட்டாயமாக திணிப்பது வன்புணர்வு
  • பெண்னுக்கு விருப்பமில்லாதபோது வாய்வழியாக உறவு கொள்ள கட்டாயப்படுத்துவதும் வன்புணர்வு.
வன்புணர்வுபடத்தின் காப்புரிமைTHINKSTOCK

இந்திய தண்டனைச் சட்டத்தின் 375ஆவது பிரிவு, கீழ்கண்டவற்றை வன்புணர்வுக் குற்றம் என்று வரையறுத்துள்ளது.

1. பெண்ணின் விருப்பத்திற்கு எதிராக உறவு கொள்வது

2. பெண்ணின் விருப்பம் இல்லாமல் உறவு கொள்வது

3. பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொண்டாலும், அந்த சம்மதம் பெறுவதற்காக அந்த பெண்ணிற்கோ அவரது நெருங்கியவர்களுக்கோ கொலை மிரட்டல் விடுவது, கெடுதல் செய்வதாக பயமுறுத்துவது ஆகியவையும் வன்புணர்வே.

4. மனநிலை சரியில்லாமல் இருக்கும் பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொண்டாலும் அது வன்புணர்வே.

5. அதேபோல், எதாவது மருந்தின் மயக்கத்தில் அல்லது போதையின் தாக்கத்தில் இருக்கும் பெண்ணின் சம்மதத்துடன் உறவு கொண்டாலும் அது வன்புணர்வே.

ஆனால் இதில் ஒரு விதிவிலக்கும் உள்ளது. 18 வயதிற்குக் குறைவான மனைவியுடன் உடலுறவு கொள்வது குற்றம் என்று கடந்த ஆண்டு அக்டோபரில் உச்சநீதிமன்றம் ஒரு தீர்ப்பில் கூறியது. அதுவும் வன்புணர்வு என்ற வரையறைக்குள் அடங்கும்.

வன்புணர்வுபடத்தின் காப்புரிமைBBC SPORT

மைனரான அதாவது 18 வயதுக்கு குறைவான மனைவி, தனது கணவன் தன்னுடன் உடலுறவு கொண்டதை ஒரு ஆண்டுக்குள் புகாராக பதிவு செய்யலாம் என்று நீதிமன்றம் கூறியது.

இந்த சட்டத்தின்படி, திருமணமான பெண்ணின் (18 வயதுக்கும் அதிகமானவர்) கணவர், மனைவியின் விருப்பமின்றி உறவு கொண்டால் நிலைமை என்ன என்பது பற்றி தெளிவாக இல்லை. எனவே திருமண வன்புணர்வு பற்றி சர்ச்சைகள் எழுந்துள்ளன.

திருமணத்தில் வன்புணர்வு என்றால் என்ன?

திருமணத்தில் வன்புணர்வு செய்வது இந்திய கலாசாரத்தின்படியும், சட்டக் கண்ணோட்டத்திலும் தவறானது அல்ல.

எனவே இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி, திருமண வன்புணர்வுக்காக எந்த ஒரு விதியோ அல்லது பொருளோ இல்லை, அதாவது திருமண உறவில் இருக்கும் ஒரு பெண் பாலியல்ரீதியாக துன்புறுத்தப்பட்டால் அதற்கு தண்டனை பெற்றுத் தர சட்டம் ஏதுமில்லை.

ஆனால் பொதுநலன் மனு தாக்கல் செய்த அமைப்பான ரிட் அறக்கட்டளையின் சித்ரா அவஸ்தியின் கருத்துப்படி, மனைவியின் விருப்பத்திற்கு எதிராக கணவன் உடலுறவு கொண்டால் அது குற்றமாக கருதப்படவேண்டும்.

மேனகா காந்திபடத்தின் காப்புரிமைTWITTERMANEKAGANDHI

2016ஆம் ஆண்டு திருமண வன்புணர்வு பற்றி பேசிய, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி, "திருமண உறவில் வன்புணர்வு என்பது பற்றி மேற்கத்திய நாடுகளில் பரவலாக பேசப்பட்டாலும், இந்தியாவில் கல்வியின்மை, வறுமை, சமூகப் பழக்க வழக்கங்கள், மத நம்பிக்கைகள், திருமணத்தின் புனிதம் ஆகிய காரணங்களால் திருமண உறவில் வன்புணர்வு செய்வதை குற்றமாக்கும் சட்டத்தைக் கொண்டுவருவது கடினம்" என்று கூறினார்.

2017ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் இந்த பொதுநலன் மனு விவாதிக்கப்பட்டபோது, தனது நிலைபாட்டை முன்வைத்த மத்திய அரசு, திருமண உறவில் வன்புணர்வை குற்றமாக அறிவிப்பது என்பது, குடும்பம் என்ற நிறுவன அமைப்பைச் சிதைத்துவிடும் என்று கூறியது.

எனவே திருமண உறவில் வன்புணர்வு ஒரு குற்றச்செயல் என அறிவிக்க இயலாது என்று கூறிய மத்திய அரசு, கணவனை துன்புறுத்த மனைவி இந்த சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும் என்றும் சப்பைக்கட்டு கட்டியது.

வன்புணர்வுபடத்தின் காப்புரிமைSPL

இந்து திருமண சட்டம் என்ன சொல்கிறது?

இந்து திருமண சட்டத்தின்படி, தம்பதிகளில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் சில பொறுப்புகள் உண்டு, உரிமையும் உண்டு.

திருமணமானவர்கள், குறிப்பாக பெண்கள், தங்கள் இணையின் பாலியல் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிப்பதை கொடூரமானதாக கருதுகிறது. எனவே பாலியல் விருப்பத்திற்கு இசையாவிட்டால் அதை காரணமாக காட்டி, விவாகத்தை ரத்து செய்யலாம் என்றும் நம்பப்படுகிறது.

முரண்பாடுகள்

ஒருபுறம் வன்புணர்வு சட்டம் என்றால் மறுபுறம், இந்து திருமண சட்டம். இரண்டுமே ஒன்றுகொன்று முரண்பாடான விஷயங்களை கூறுகின்றன. இதனால், காரணமாக 'திருமண உறவில் வன்புணர்வு' பற்றி சரியான தெளிவு இல்லாமல் ஒருவிதமான குழப்பம் மக்களிடையே நிலவுகிறது.

ஆண்கள் நலச் சங்கத்தின் அமிதி லகானியின் கருத்துப்படி, வன்புணர்வு என்ற வார்த்தையை திருமண பந்தத்தில் உள்ள தம்பதிகளுக்கு பயன்படுத்துவது தவறானது; அது மூன்றாவது நபருக்கு மட்டுமே பயன்படுத்தக்கூடிய வார்த்தை என்று கூறுகிறார்.

திருமண உறவில் வன்புணர்வு செய்வதற்கான சட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில்தான், பெண்கள் குடும்ப வன்முறை போன்ற இதர சட்டங்களை பயன்படுத்துகின்றனர். அது, அவர்களின் தரப்பை வலுப்படுத்துவதற்கு பதிலாக பலவீனப்படுத்துகிறது.

வன்புணர்வுபடத்தின் காப்புரிமைTHINKSTOCK

நிர்பயா பாலியல் வன்புணர்வு வழக்கிற்கு பிறகு உருவாக்கப்பட்ட நீதிபதி வர்மா கமிட்டியும், திருமண பந்தத்தில் வன்புணர்வு செய்யப்படுவது தொடர்பாக தனிச் சட்டம் வேண்டும் என்று கூறியது. திருமணத்திற்குப் பிறகு பாலியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு தம்பதிகளின் விருப்பம் அல்லது விருப்பமின்மைக்கு மதிப்புக் கொடுத்து அதற்கான விதியை வரையறுக்க வேண்டும்.

பெண்களின் குரல்

நிபுணர்களின் கூற்றுப்படி, திருமண உறவில் வன்புணர்வு தொடர்பான தனிச் சட்டம் இல்லாத நிலையில், தங்கள் மீதான கொடுமைகளுக்கு பெண்கள் பெரும்பாலும் 498 (A) சட்டப்பிரிவை பயன்படுத்துகின்றனர்.

498 (A) பிரிவின்படி, ஒரு பெண்ணின் மனதிற்கோ நலத்தையோ அல்லது உடலுக்கோ தீங்கு செய்யும் மற்றும் தற்கொலைக்கு தூண்டும் கணவன் அல்லது அவரது உறவினர்களின் அனைத்து செயல்களும் தண்டனைக்கு உரியது.

கணவன் அல்லது அவனது உறவினர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் மூன்றாண்டுகள் சிறைதண்டனை விதிக்கப்படும்.

1983ஆம் ஆண்டின் இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 498 (ஏ) உருவான இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு, 2005 இல் "பெண்கள் பாதுகாப்புக்கான குடும்ப வன்முறை சட்டத்தை உருவாக்கியது. இதில் பெண்கள் குடும்ப வன்முறை குறித்த புகார்களை கொடுக்கலாம்.

இதில் கைது நடவடிக்கை கிடையாது என்றாலும், அபாரதம் விதிக்கப்படும்.

பெண்கள்படத்தின் காப்புரிமைYOUTUBE

இனி என்ன நடக்கும்?

திருமண உறவில் வன்புணர்வு தொடர்பாக மத்திய அரசு சட்டம் உருவாக்க வேண்டும் என கோரி கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் விவாதங்கள் தொடர்கின்றன. இந்த விஷயத்தில் அடுத்த விசாரணை ஆகஸ்ட் எட்டாம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அன்று இரு தரப்பினரும். தங்களின் வாதங்களை புதிய கோணத்தில் முன் வைப்பார்கள்.

உலகின் பிற நாடுகளில் திருமண உறவில் வன்புணர்வு தொடர்பாக இருக்கும் சட்டங்கள் பற்றியும் விவாதிக்கப்படும். விவாதங்கள் தொடர்ந்தாலும், இந்த விவகாரத்தில் இறுதி தீர்ப்பு வருவதற்கு இன்னும் சற்று காலம் எடுத்துக் கொள்ளப்படலாம்.

https://www.bbc.com/tamil/india-44902711

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னங்கப்பா கொடுமையா இருக்கு..?

தாலி கட்டிவிட்டால் கணவன், மனைவியை என்ன வேண்டுமானாலும் செய்யலாமா..?

அவளுக்கென்று விருப்பு, வெறுப்புகள் கிடையாதா..?

விருப்பமில்லாவிட்டால், விலைமாதுவென்றாலும் தொடக்கூடாது..!  அதுதானே நியாயம்..?

பெண்களை போகப்பொருளாக நினைக்கும் இந்(து)திய சமுதாயம் என்று திருந்துமோ..??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதோடா எல்லாத்தையும் ஆண்களின் தலையில் கொட்டிவிட்டு சுலபமாய் தப்பி விடுகிறீர்கள்.விவசாயத்தில் இருந்து கடினமான விளையாட்டுகள் மலையேறுதல் என்று எல்லாவற்றிலும் ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக மல்லுக்கட்டும் பெண்களுக்கு வன்முறையும் வன்புணர்சியும் தெரியவே தெரியாதாம். அவர்களுக்கு என்ன ஊரைக்கூட்டி ஒப்பாரி வைத்து விட்டு போவார்கள். நீருக்குள் மீன் அழுவதுபோல் ஆண்களின் கஷ்டம் யாருக்கு தெரியப்போகுது. ஆண்களுக்குத்தான் இதை வெளியில் சொல்வதற்கு பயம். இல்லை பயமும் ஒரு காரணமாய் இருக்கலாம் என்று சொல்ல வாறன். இந்தக்களத்தில ஒரு பெண் கூடவா துணிந்து வந்து ஆண்களுக்கு வக்காலத்து வாங்கக் கூடாது.....!  ?

Image associée

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, suvy said:

இதோடா எல்லாத்தையும் ஆண்களின் தலையில் கொட்டிவிட்டு சுலபமாய் தப்பி விடுகிறீர்கள்.விவசாயத்தில் இருந்து கடினமான விளையாட்டுகள் மலையேறுதல் என்று எல்லாவற்றிலும் ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக மல்லுக்கட்டும் பெண்களுக்கு வன்முறையும் வன்புணர்சியும் தெரியவே தெரியாதாம். அவர்களுக்கு என்ன ஊரைக்கூட்டி ஒப்பாரி வைத்து விட்டு போவார்கள். நீருக்குள் மீன் அழுவதுபோல் ஆண்களின் கஷ்டம் யாருக்கு தெரியப்போகுது. ஆண்களுக்குத்தான் இதை வெளியில் சொல்வதற்கு பயம். இல்லை பயமும் ஒரு காரணமாய் இருக்கலாம் என்று சொல்ல வாறன். இந்தக்களத்தில ஒரு பெண் கூடவா துணிந்து வந்து ஆண்களுக்கு வக்காலத்து வாங்கக் கூடாது.....!  ?

 

கீழை நாடுகளில் இந்த நிலைமைக்கு ஒரு காரணம் பாலியல் கல்வி இல்லாமையும் அதனால் அந்த விடயமாக அறிவு இல்லாமையும் ஒரு கரணம் என்கிறார்கள்.

இந்த அறிவு இல்லாமல், தினமு, பாலியல் பலாத்காரம், வன்புணர்வு என, செய்திகளிலும், மக்கள் பேசுவதையும் கேட்டு, ஒரு வித பயம் உண்டாகின்றது. திருமணத்துக்கு பின்னர் கணவர் அணுகும் போது, பயம் காரணமாக இணங்க மறுப்பதால், விரக்தியில் கணவர் வேறு வழியில் முனைய... நிலைமை மோசமாகின்றது என்றும் சொல்கின்றனர்.

நம்ம கிழக்கு பக்கமா ஏதோ நம்ம தலைமுறை வரைக்கும் பெண்கள் அடங்க்கி வாழ்ந்தாலும், இதற்கு பொருளாதார சார்பு நிலைமை கூட காரணமாகலாம், மேலை நாடுகளில் நிலைமை மோசம்.

இங்கே, பொருளாதார ரீதியிலும், படுக்கை அறையிலும் மேலாண்மை இல்லாவிடில், பறவை பறந்து விடும் என்பதால், ஆண்கள் நிலைமை கொஞ்சம் கஷடம். ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். நின்றால்.... நிலைமை கஷ்டமாம்.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலே ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் இப்பிரச்சினையை அணுகியிருப்பது நன்றாக உள்ளது. பாதிக்கப்படும் நபர்களுக்குப் பாதுகாப்பு அளிக்க சட்டங்கள் தேவையே. தவறாகப் பயன்படுத்தப்படும் அபாயம் எல்லாச் சட்டங்களிலும் உண்டு. அவ்வாறான அபாயங்களை சமூகமாகவோ தனிமனிதராகவோ சில சமயங்களில் எதிர்கொள்ளத்தான்  வேண்டும். திருமண உறவை பரஸ்பர புரிதல் மட்டுமே நிலைநிறுத்தும். சட்டம் நிலைநிறுத்தாது ; பாதுகாப்பை மட்டுமே தரும்.

Link to comment
Share on other sites

7 hours ago, Nathamuni said:

கீழை நாடுகளில் இந்த நிலைமைக்கு ஒரு காரணம் பாலியல் கல்வி இல்லாமையும் அதனால் அந்த விடயமாக அறிவு இல்லாமையும் ஒரு கரணம் என்கிறார்கள்.

மேற்கத்திய நாடுகளிலும் இவை நிறையவே இருக்கின்றன. எங்கெல்லாம் பெண்கள் தமது கணவரில் பொருளாதார ரீதியாக தங்கி இருக்கிறார்களோ அங்கெல்லாம் இது அதிகப்படியாக சாத்தியம். மேற்கத்திய நாடுகளில் இன்று பெண்கள் பெருமளவில் பொருளாதார ரீதியாக தமது கணவரில் தங்கி இல்லாததனால் இந்த வன்முறைகள் இங்கு குறைவு.

மறுவளமாக, ஆண்களை வன்முறை பாலியலுக்கு உட்படுத்தும் பெண்களும் இருக்கிறார்கள். ஆனால் ஆண்களுக்கு உடற்பலம் கூடுதலாக இருப்பதால் இந்த வன்முறை குறைவு. எனக்கு கல்வி கற்பித்த ஆசிரியர் ஒருவரின் மனைவி அவரை வீதிக்கு துரத்தி தாக்கு தாக்கு என்று தாக்குவது எமது பிரதேசத்தில் பிரபலமாக அறியப்பட்ட ஒன்று. யாரும் பார்க்காத படுக்கை அறையில் அவரது கதி இதிலும் மோசமாக இருந்தது இருக்கும். முன்னாள் பெண் போராளியை திருமணம் செய்து கட்டாய பாலியலுக்கு வேறு வழியில்லாமல் தினம் தினம் ஆளாகி மனம் பாதிக்கப் பட்டு அழுதுகொண்டு திரிந்த மென்மையான ஒருவரையும் நான் அறிவேன். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புள்ளி விவரங்களை நோக்கினால் பெண்களை ஏமாற்றி புணரும் ஆண் மிருகங்கள் தான் இந்திய சமுதாயத்தில் மிக மிக அதிகம்.. அதற்கான சிறு தீர்வாக பெண் வதை தடுப்புச் சட்டங்கள் இருந்தாலும் அவை ஏட்டளவிலேயே இருக்கின்றன..

பெண்கள், ஆண்களால் வன்முறைகுட்படுத்தப்படவில்லையெனில் ஏன் இந்த சட்டங்கள்..?

பெண் பொருளாதார ரீதியிலும், சமுதாய ரீதியிலும் ஆண்களை சார்த்திருப்பதால் இக்கொடூரம் இன்னமும் தொடர்கிறது.

 

shame-map-of-india-crime-against-women-i

 

சில நாட்களுக்கு முன் (ஜூலை 3), ராஜபாளையம் பேருந்து தரிப்பிடத்தில் காதலித்து மணந்த மனைவியை மிகக் கொடூரமாக வெட்டிக்கொன்ற காட்சிகளை பார்த்தால், எந்த உயிரும் ஆணினத்தின் மீது காரி உமிழ்வார்கள்..

இக்கொடூரக்கொலைக்கு காரணம், மனைவி தன் பெண் குழந்தையை மீட்டுத்தாருங்கள் என முறைப்பாடு செய்ததே..!

காணொளி மிகக் கொடூரமாக இருப்பதால் நாகரீகம் கருதி இங்கே இணைக்கவில்லை !

 

Tamil_Nadu_Rajapalayam.jpeg?9P4vXswSprv6

சென்னை அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் வாழ்ந்துவரும் காது கேளாத 11 வயது குழந்தையை 17 ஆண் மிருகங்கள் கூட்டுப் பாலியல் வன்முறையை கடந்த ஆறு மாதங்களாக அரங்கேற்றிய புண்ணிய உத்தமர்கள், இந்த ஆண்கள்..!

இதில் ஐந்து பேர், 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள்.. இப்படியிருக்கு, இந்திய ஆண்களின் பெண்களைப் பற்றிய பார்வை லட்சணம்..!

இதற்கு வயதான ஒருவரின் சப்பைக்கட்டு வேறை..!  இது பகிடியாக, தட்டிக்கழித்து அலட்சியமாக கடந்து செல்லும் விடயமல்ல, ஆண்டாண்டு காலமாய் 'ஆண்களே மேல்' என நம் சிந்தையில் விதைத்து சென்ற பழமைவாதி முன்னோர்களின் கொடிய சிந்தனை..

அதை இன்னமும் காவித் திரிவதை என்னவென்று சொல்வது, கொடுமைடா சாமி..!!

Sorry sir..!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ராசவன்னியன் said:

 

Sorry sir..!

 

வன்னியர், நீங்கள் சொல்வது சரி தான்...

இங்கே சட்டம் கடுமையாகப் பட்டாலும் இன்னுமொரு பிரச்னை உள்ளதே.

தமிழகத்திலேயே பாப்போம்... சீதன வன்கொடுமை சட்டம். புருசன் வீடு சரி வரவில்லையா? போலீஸ் ஸ்டேஷன் போய் ஒரு முறைப்பாடு... சீதனம் இன்னும் அதிகமா கொண்டு வா என்று கொடுமைப படுத்துறார்கள் என்று சொன்னாலே போதும்.

முன்னரும் எழுதி இருக்கிறேன். பர்மிங்காம் பகுதியில், ஒரு ஆசிய டாக்ஸி டிரைவர். தண்ணி பாட்டி, பஜாரி அம்மணி ஏறி 'வண்டிய எடு' கணக்கில உத்தரவு.

என்ன நினைத்தாரோ, கடவுள் கிருபையால், தனது சம்சுங் போனின், பேச்சு பதிவு பொத்தானை அழுத்தி இருக்கிறார்.

போய் இறங்கி, பணம் தரமுடியாது என்று சொல்லி இருக்கிறார். இவரு சத்தம் போடா... அவர் வீட்டு உள்ள போய் விட்டார். 

ஒரு மணி நேரத்தில் போலீஸ் காது செய்கிறது இவரை. அந்த பெண்ணை காரினுள் வைத்து பாலியல் வன்புணர்வு செய்தாராம்.....

குடும்பத்துக்கும் அறிவிக்க.... களேபரம்.

குடும்பம் தடுமாறி, இவரா அப்படி....அங்க இங்கே என்று.... தடுமாற.... அவர் வீடு வருகிறார்.

காப்பாத்தியது போன் பதிவு. பொய் சொன்ன பெண்ணுக்கு 18 மாதம் சிறை.

இதன் காரணமாகவே, வீட்டுக்குள் வரும் திருடனை, தாக்குவதோ, கொலை செய்வதோ இன்னும் சட்டத்தினால் அங்கீகரிக்கப் படவில்லை. ஒவ்வொரு கேசும் தனியாக விசாரித்து போலீஸ் முடிவு செய்யுமாறு வைத்துள்ளார்கள். ஏனெனில் எனக்கு ஒருவரை கொலை செய்ய வேண்டுமாயின், அவரை வீட்டுக்கு எப்படியாவது வரவைளைத்து, திருடவந்தார் கத்தியுடன்... போட்டுவிட்டேன் என்று சொல்லாம் அல்லவா...

சட்டம் என்பது அரைவேக்காடு தனமாக இருக்க கூடாது என்பதே நமக்கு சட்டம் தந்த ஐரோப்பியர் நிலைப்பாடு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு.நாதமுனி,

சட்டத்தை தவறாக பயன்படுத்தும் பெண்களும் இருக்கிறார்கள், இல்லையென்று சொல்லவில்லை.

ஆனால் இன்றும் பெரும்பாலான ஆண்களின் மனதளவில், பெண் என்பவள் தனக்கு கீழேதான், தன் விருப்படியே அனைத்திலும் அடிபணிந்து எதிர்த்துப் பேசாமல் நடக்க வேண்டும், அவளின் சுய விருப்பு, வெறுப்பெல்லாம் இரண்டாம் பட்சம்தான், படுக்கையில் ஆண் கூப்பிட்டால், பெண் மறுபேச்சில்லாமல் வரவேண்டும், தன் 'தேவை'யை உடனே பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஆண்களின் மனதில் புரையோடிப்போயுள்ளது..

இந்த எண்ணமே வீட்டு வன்முறைகளுக்கு வித்திடுகிறது..

On 7/21/2018 at 1:10 PM, நவீனன் said:

L

இந்து திருமண சட்டம் என்ன சொல்கிறது?

இந்து திருமண சட்டத்தின்படி, தம்பதிகளில் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் சில பொறுப்புகள் உண்டு, உரிமையும் உண்டு.

திருமணமானவர்கள், குறிப்பாக பெண்கள், தங்கள் இணையின் பாலியல் விருப்பத்திற்கு மறுப்பு தெரிவிப்பதை கொடூரமானதாக கருதுகிறது. எனவே பாலியல் விருப்பத்திற்கு இசையாவிட்டால் அதை காரணமாக காட்டி, விவாகத்தை ரத்து செய்யலாம் என்றும் நம்பப்படுகிறது. 

இந்த சட்டக் கொடுமையை என்னவென்று சொல்ல..?  :(

இதையும் ஆண்களே தங்கள் இச்சைக்கு ஏற்ப பல வருடங்களுக்கு முன்பு (Hindu Marriage Act 1956) வகுத்துள்ளார்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, ராசவன்னியன் said:

இதென்னங்கப்பா கொடுமையா இருக்கு..?

தாலி கட்டிவிட்டால் கணவன், மனைவியை என்ன வேண்டுமானாலும் செய்யலாமா..?

அவளுக்கென்று விருப்பு, வெறுப்புகள் கிடையாதா..?

விருப்பமில்லாவிட்டால், விலைமாதுவென்றாலும் தொடக்கூடாது..!  அதுதானே நியாயம்..?

பெண்களை போகப்பொருளாக நினைக்கும் இந்(து)திய சமுதாயம் என்று திருந்துமோ..??

விலைமாது விரும்பி வந்தால் தொட்டுடலாமா ....அவ்வளவுக்கு எல்லா ஆண்களும் அலைஞ்சு கொண்டு திரிகிறார்களா. என்னைப்போல(சுவியைப்போல்) கற்புடைய இன்னொரு ஆண் எங்குமே இல்லை என்று ஏன் ஒரு தவறான முடிவுக்கு வந்திருக்கிறீர்கள். மேலும் எந்த விலைமாது விரும்பிப்போகிறாள்.விலைபேசித்தானே போகிறாள்......!   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, suvy said:

விலைமாது விரும்பி வந்தால் தொட்டுடலாமா ....அவ்வளவுக்கு எல்லா ஆண்களும் அலைஞ்சு கொண்டு திரிகிறார்களா. என்னைப்போல(சுவியைப்போல்) கற்புடைய இன்னொரு ஆண் எங்குமே இல்லை என்று ஏன் ஒரு தவறான முடிவுக்கு வந்திருக்கிறீர்கள். மேலும் எந்த விலைமாது விரும்பிப்போகிறாள்.விலைபேசித்தானே போகிறாள்......!   

 

சுவி ஐயா,

நான் துபாயில் இருக்கும்போது பல விலைமாதுகள் என்னை பணமின்றி நெருங்கினார்கள். இலவசமாக தாங்களை அர்ப்பணிக்க தயர்ர்க இருந்தார்கள். 

ஒருபோதும் எவளையும் தொடவில்லை கடைவரை கற்பை காப்பாற்றிக்கொண்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, suvy said:

விலைமாது விரும்பி வந்தால் தொட்டுடலாமா ....அவ்வளவுக்கு எல்லா ஆண்களும் அலைஞ்சு கொண்டு திரிகிறார்களா...?

இல்லையா பின்னே..? :innocent:

பச்சிளம்குழந்தைகளை கூட புணரும் கூட்டம் அதிகமாக உள்ளபோது, விலைமாதுகளை விட்டு வைப்பார்களா?

10 minutes ago, suvy said:

என்னைப்போல(சுவியைப்போல்) கற்புடைய இன்னொரு ஆண் எங்குமே இல்லை என்று ஏன் ஒரு தவறான முடிவுக்கு வந்திருக்கிறீர்கள்...

தாங்கள் கற்புள்ள, புடம்போட்ட தங்கமணியாக இருக்கலாம், ஆனால் உள்மனதில் ஆணாதிக்க சிந்தனை உள்ளது, சார்..! rire-2009.gif

நிச்சயம் நல்ல ஆண்மகன்களும் இவ்வுலகில் உள்ளனர்.. ஆனால் எண்ணிக்கையில் அவர்கள் மிகக்குறைவு..!!

14 minutes ago, suvy said:

..மேலும் எந்த விலைமாது விரும்பிப்போகிறாள். விலைபேசித்தானே போகிறாள்......!   

வயிற்றுப் பிழைப்பிற்காக உடலை மூலதனமாகக் கொண்டு வியாபாரம் செய்தாலும், அதற்கான விலையை பேரம்பேசும் ஆண்களும், ஏமாற்றுபவர்களும் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, suvy said:

அவ்வளவுக்கு எல்லா ஆண்களும் அலைஞ்சு கொண்டு திரிகிறார்களா...?

'சுவி ஐயா' கவனத்திற்கு..!

 

தற்போதைய செய்தி.. priso.gif

19 வயது பாலியல் குற்றவாளிக்கு தூக்கு...

ஜெய்ப்பூர்: சட்டமும், நீதியும் மட்டும் இல்லையென்றால் நாட்டில் இன்னும் என்னென்ன பாவங்கள் எவ்வளவு பெருகிவரும் என தெரியாது. தண்டனை சட்டத்தை சரியாக இயற்றி, சரியான நபருக்கு சரியான நேரத்தில் அமல்படுத்தியுள்ளது ராஜஸ்தான் அரசு.

ராஜஸ்தான் மாநிலம், லட்சுமண்கர் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 7 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த மே 9-ம் தேதி தம்பதி இருவரும் குழந்தையை உறவினர் ஒருவரது வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றுவந்தனர். திரும்பி வந்து பார்க்கும்போது, அங்கே குழந்தை இல்லை. அதனால் குழந்தை எங்கே கேட்டதற்கு, பக்கத்து வீட்டு இளைஞர் தூக்கிக் கொண்டு போனதாக அந்த உறவினர்கள் பதிலளித்தனர். பக்கத்து வீட்டிலும் குழந்தையும் இல்லை, அந்த இளைஞரும் இல்லை.

rajasthan343-1532261084.jpg

அந்த வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதனால் பதறியடித்து கொண்டு பெற்றோர் ஓடிசென்றனர். அங்கு குழந்தை கதறி அழுதபடி கிடந்தது. அதன் உடலில் காயங்கள் நிறைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த பக்கத்துவீட்டு நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த இளைஞருக்கு வயது 19.

இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று தற்போது தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, 7 மாத குழந்தை என்றும் பாராமல் சிதைத்த அந்த இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், கடந்த மார்ச் மாதம்தான், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை என்ற சிறப்பு சட்டத்தை அம்மாநில அரசு கொண்டுவந்தது. சட்டம் இயற்றப்பட்ட பிறகு, அந்த மரணதண்டனைக்கு ஆளாகும் முதல் நபர் இந்த இளைஞர்தான்.

கைக்குழந்தைகளை கூட விட்டுவைக்காத காம மனிதர்கள் நாடெங்கும் பெருகிவருகின்றனர்.

இதுபோன்ற செயல்களை செய்துவிட்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்ட கயவர்களுக்கு, தன்னுடைய நிஜ ரூபத்தை சட்டம் அவ்வப்போது வெளிப்படுத்தி தண்டிக்கும்போது ஓரளவு மனநிறைவு அடைகிறது. ஆனாலும் பாதிக்கப்பட்ட சிசுக்களை நினைத்தால் மனம் கனத்துதான் போகிறது.

 

ஒன் இந்தியா - தமிழ்

Link to comment
Share on other sites

  • 2 months later...

கணவன்-மனைவிக்குள்ள இருவர் மனமும் ஒருமித்தால் தானே உறவு சிறப்பாயிருக்கும் என்பதை இருவரும் உணர்வதே பெஸ்ட்!
எனவே பெண்ணை ஆணோ அல்லது ஆணை பெண்ணோ வற்புறுத்தினால் அங்கு நல்ல உறவு அமையாது.
ஆனால் கணவன்-மனைவிக்குள்ள வன்புணர்வு என்பது பொருத்தமல்ல!

அதே நேரம், இப்படியே பெண்கள் சார்பாக சட்டங்கள் இயற்றப்பட்டு வந்தால், அதை நடுநிலையாக, மனைவி தொடர்ந்து மறுத்து வந்தால், அந்த ஆண் உடன்படும் இன்னொரு பெண்ணிடம் உறவு வைப்பதை சட்டம் அனுமதிக்க வேண்டிவரும்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, Rajesh said:

கணவன்-மனைவிக்குள்ள இருவர் மனமும் ஒருமித்தால் தானே உறவு சிறப்பாயிருக்கும் என்பதை இருவரும் உணர்வதே பெஸ்ட்!
எனவே பெண்ணை ஆணோ அல்லது ஆணை பெண்ணோ வற்புறுத்தினால் அங்கு நல்ல உறவு அமையாது.
ஆனால் கணவன்-மனைவிக்குள்ள வன்புணர்வு என்பது பொருத்தமல்ல!

அதே நேரம், இப்படியே பெண்கள் சார்பாக சட்டங்கள் இயற்றப்பட்டு வந்தால், அதை நடுநிலையாக, மனைவி தொடர்ந்து மறுத்து வந்தால், அந்த ஆண் உடன்படும் இன்னொரு பெண்ணிடம் உறவு வைப்பதை சட்டம் அனுமதிக்க வேண்டிவரும்!

கனம்.....கோட்டார் அவர்களே.....பிளீஸ் ...நோட் திஸ் போயின்ட்...!

எனது கட்சிக் காரர் கூறுவதற்குள்....நிறைய உண்மைகள் பொதிந்திருக்கின்றன!

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு ஒரு சின்ன ஆசை ......
எமக்கு தத்துவங்கள் பேசி எமக்கு பெண்கள் மீது வெறுப்பு உண்டாக்கி 
தனியாக வாழ வழி  வகுத்துவிட்டு.... தனக்கு வயது வரும்போது 
ஓடி சென்று ஒரு பெண்ணை மணமுடித்து சகலதையும் அனுபவிக்கும் 
நெடுக்கு மீது மனைவி வழக்கு போட்டு 
அவர் ஜெயிலுக்கு போவதை நான் பார்க்க வேண்டும்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/22/2018 at 7:52 AM, ராசவன்னியன் said:

'சுவி ஐயா' கவனத்திற்கு..!

 

தற்போதைய செய்தி.. priso.gif

19 வயது பாலியல் குற்றவாளிக்கு தூக்கு...

ஜெய்ப்பூர்: சட்டமும், நீதியும் மட்டும் இல்லையென்றால் நாட்டில் இன்னும் என்னென்ன பாவங்கள் எவ்வளவு பெருகிவரும் என தெரியாது. தண்டனை சட்டத்தை சரியாக இயற்றி, சரியான நபருக்கு சரியான நேரத்தில் அமல்படுத்தியுள்ளது ராஜஸ்தான் அரசு.

ராஜஸ்தான் மாநிலம், லட்சுமண்கர் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு 7 மாத பெண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த மே 9-ம் தேதி தம்பதி இருவரும் குழந்தையை உறவினர் ஒருவரது வீட்டில் விட்டுவிட்டு வெளியே சென்றுவந்தனர். திரும்பி வந்து பார்க்கும்போது, அங்கே குழந்தை இல்லை. அதனால் குழந்தை எங்கே கேட்டதற்கு, பக்கத்து வீட்டு இளைஞர் தூக்கிக் கொண்டு போனதாக அந்த உறவினர்கள் பதிலளித்தனர். பக்கத்து வீட்டிலும் குழந்தையும் இல்லை, அந்த இளைஞரும் இல்லை.

rajasthan343-1532261084.jpg

அந்த வீட்டிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு விளையாட்டு மைதானத்தில் குழந்தை அழும் சத்தம் கேட்டது. அதனால் பதறியடித்து கொண்டு பெற்றோர் ஓடிசென்றனர். அங்கு குழந்தை கதறி அழுதபடி கிடந்தது. அதன் உடலில் காயங்கள் நிறைந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு குழந்தையை தூக்கிக் கொண்டு சென்றனர். அப்போது குழந்தையை பரிசோதித்த மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து அந்த பக்கத்துவீட்டு நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த இளைஞருக்கு வயது 19.

இந்த வழக்கின் மீதான விசாரணை நடைபெற்று தற்போது தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது. அதன்படி, 7 மாத குழந்தை என்றும் பாராமல் சிதைத்த அந்த இளைஞருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால், கடந்த மார்ச் மாதம்தான், 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு மரண தண்டனை என்ற சிறப்பு சட்டத்தை அம்மாநில அரசு கொண்டுவந்தது. சட்டம் இயற்றப்பட்ட பிறகு, அந்த மரணதண்டனைக்கு ஆளாகும் முதல் நபர் இந்த இளைஞர்தான்.

கைக்குழந்தைகளை கூட விட்டுவைக்காத காம மனிதர்கள் நாடெங்கும் பெருகிவருகின்றனர்.

இதுபோன்ற செயல்களை செய்துவிட்டு கையும் களவுமாக மாட்டிக் கொண்ட கயவர்களுக்கு, தன்னுடைய நிஜ ரூபத்தை சட்டம் அவ்வப்போது வெளிப்படுத்தி தண்டிக்கும்போது ஓரளவு மனநிறைவு அடைகிறது. ஆனாலும் பாதிக்கப்பட்ட சிசுக்களை நினைத்தால் மனம் கனத்துதான் போகிறது.

 

ஒன் இந்தியா - தமிழ்

ஐயா இது மிகவும் ஆழமாக பார்க்கவேண்டிய ஒரு விடயம் 
பெண் சிசு கொலை போன்ற பாவத்துக்கு தண்டனை அனுபவிக்கப்போகும் 
காலம் இந்தியாவை நெருங்குகிறது 

இப்போ புதுச்சேரி கேரளாவை தவிர மற்ற எல்லா மாநிலத்தலும் 
பெண்கள் சனத்தொகை ஆண்களின் தொகையைவிட குறைவு 
எல்ல ஆணுக்கும் பெண் இல்லை என்பது உறுதியான முடிவு 

அதே நேரம் பாலியல் இச்சையை தூண்டும் இணையம் 
வீதியில் போகும் பெண்களின் உடை அலங்காரம் ... போன்றவை 
ஆண்களின் காமத்தை தூண்டுவதில் பெரும் பங்கு வகிக்கின்றன 

அடுத்து வடிகாலாக இருக்க கூடிய விபச்சரம் 
போலீஸ் பிடிப்பதும் விடுவதும்  என்று கள்ளன் போலீஸ் விளையாட்டுபோல 
இருப்பதால் ... ஒரு சரியான சட்ட ஒழுங்கு இன்றி ஓர் நோய் பரப்பும் 
மூலமாக அது மாறிக்கொண்டு வருகிறது.

காலம் சூழலை கருத்தில் கொண்டு சமூக விழிப்புணர்வுடன் 
அமையும் அரசுகளும் இல்லை ஊழல் லஞ்சம் என்று அரசாட்ச்சி சென்றுகொண்டு இருக்கிறது.
எல்லா வினையும் இன்னொரு பாதிப்பை இன்னொரு வடிவில் உருவாக்கிறது. 

Link to comment
Share on other sites

On 10/17/2018 at 1:20 AM, Maruthankerny said:

எனக்கு ஒரு சின்ன ஆசை ......
எமக்கு தத்துவங்கள் பேசி எமக்கு பெண்கள் மீது வெறுப்பு உண்டாக்கி 
தனியாக வாழ வழி  வகுத்துவிட்டு.... தனக்கு வயது வரும்போது 
ஓடி சென்று ஒரு பெண்ணை மணமுடித்து சகலதையும் அனுபவிக்கும் 
நெடுக்கு மீது மனைவி வழக்கு போட்டு 
அவர் ஜெயிலுக்கு போவதை நான் பார்க்க வேண்டும்.  

அடடா நெடுக்கு சொல்வதை கேட்டா தனியா இருக்க முடிவு செஞ்சீங்கள்? ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/20/2018 at 4:10 AM, Rajesh said:

அடடா நெடுக்கு சொல்வதை கேட்டா தனியா இருக்க முடிவு செஞ்சீங்கள்? ?

சிந்திச்சு முடிவு எடுக்க எங்க விடடார்கள் 
அருவெறுப்பு பதிவுகளை பகிர்ந்து 
பெண்களை கண்டாலே ஒரு அச்சத்தோடு 
விலகி செல்லும் மன நிலையை உருவாக்கி விடடார்கள் 

இனி வைரமுத்துவின் கவிதைகளை வாசித்து 
கொஞ்சம் ரசனையை மேம்படுத்துவோம் 
என்று கொஞ்சம் வாசிக்க தொடங்க 
இப்ப மீ டு என்று வந்து நிக்கிறார்கள் 

இப்ப கவிதைகளை பார்க்கவே 
நடு ரோட்டில் அவமானப்பட்டு நிற்பதுதான் 
ஞாபகத்தில் வருகிறது. 

மெல்லவும் முடியாமல் 
விழுங்கவும் முடியாமல் 
கரைகிறது இளமை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 10/16/2018 at 8:50 PM, Maruthankerny said:

எனக்கு ஒரு சின்ன ஆசை ......
எமக்கு தத்துவங்கள் பேசி எமக்கு பெண்கள் மீது வெறுப்பு உண்டாக்கி 
தனியாக வாழ வழி  வகுத்துவிட்டு.... தனக்கு வயது வரும்போது 
ஓடி சென்று ஒரு பெண்ணை மணமுடித்து சகலதையும் அனுபவிக்கும் 
நெடுக்கு மீது மனைவி வழக்கு போட்டு 
அவர் ஜெயிலுக்கு போவதை நான் பார்க்க வேண்டும்.  

அடப்பாவிகளா.. இப்படியும் ஆசைப்படுறேளே.?

நெடுக்ஸ் சமூகத்தின் சீரழிவுக்கு காரணமாக இருக்கும் பெண்களை இப்பவும் தான் கண்டிக்கிறேன்.

வன்புணர்வு என்றவுடன் ஆண்கள் தான் அதைச் செய்வார்கள் என்ற சிந்தனையோட்டத்தில் இருக்கும் சமூகங்களை என்ன செய்வது.

அண்மையில்.. இதே ஹிந்தியாவில்.. ஒரு பெண் பாலியல் கரைச்சல் கொடுத்ததன் பெயரில்.. ஒரு திருமணமான ஆண் தற்கொலை செய்து கொண்டார் என்று செய்திகள் வந்தன.

அப்படியான பெண்களை தண்டிக்க என்ன சட்டம் இருக்குது..?!

மேலும் ஆண்களின் பாலுணர்வை தூண்டும் வகையில் நடந்து கொள்ளும் பெண்களின் நடத்தைகளும் தான் பெண்கள் மீதான வன்புணர்வுக்கு ஒரு காரணி. அது தொடர்பிலும் சரியான சட்ட அமுலாக்கம் பெண்கள் மீதும் வர வேண்டும். ?

Link to comment
Share on other sites

On 10/24/2018 at 11:30 PM, Maruthankerny said:

மெல்லவும் முடியாமல் 
விழுங்கவும் முடியாமல் 
கரைகிறது இளமை. 

ம்ம்ம். நினைக்க பாவமா இருக்கு!

Link to comment
Share on other sites

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்றுதான் இதைப் பார்க்கிறேன் (சொன்னால் நம்பவேண்டும் !).

ஆணாக இருந்தாலென்ன, பெண்ணாக இருந்தாலென்ன, ஒருவரது விருப்பமில்லாமல் இன்னொருவரைத் தொடுவதென்பது வெறுமையாகத்தான் இருக்கும். எந்த உணர்வுமில்லாமல், தனக்கும் நடப்பதற்கும் தனக்கும் எந்தவிதச் சம்பந்தமும் இல்லாமல், எப்படா இது முடியும் என்று மனதிற்குள் நினைக்கும் ஒரு நிலை நிச்சயம் எவருக்கும் தேவையில்லை.

கணவனானாலும் சரி, மனைவியானாலும் சரி, இது இருவருக்கும் பொருந்தும்.

அதேபோல, எனக்கு இப்போது வேண்டாம் என்று சொல்லுவதற்கான தைரியமும், அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவமும் இருக்க வேண்டும்.

ஆணாதிக்கச் சமூகத்தில் ஆண் நினைத்தபோதெல்லாம் பெண் படுக்கையில் விழவேண்டுமென்பதும், மறுபேச்சில்லாமல் அனுசரித்துப் போகவேண்டுமென்பதும், பெண்ணின் உணர்வு பற்றி எவருக்குமே கவலை இருப்பதில்லையென்பதும் உண்மைதான். 

ஆனால், புலம்பெயர் நாடுகளில், ஆணுக்கு நிகராக சம்பாதித்து சமூகத்தில் வலம்வரும் பெண்களுக்கு தமது உணர்வுகளையும், விருப்பு வெறுப்புகளையும் துணிவாகச் சொல்லுவதற்கான சூழலை சமூகம் ஏற்படுத்துகிறது. இது நல்ல ஆரோக்கியமான விடயம் என்றுதான் நான் நினைக்கிறேன்.

பெண்ணின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஆண் நடக்கும்பொழுது வன்புணர்வுகளுக்கு இடமிருக்கப்போவதில்லை என்பதுதான் எனது கருத்து.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/21/2018 at 7:42 PM, suvy said:

இதோடா எல்லாத்தையும் ஆண்களின் தலையில் கொட்டிவிட்டு சுலபமாய் தப்பி விடுகிறீர்கள்.விவசாயத்தில் இருந்து கடினமான விளையாட்டுகள் மலையேறுதல் என்று எல்லாவற்றிலும் ஆண்களுக்கு சரிநிகர் சமானமாக மல்லுக்கட்டும் பெண்களுக்கு வன்முறையும் வன்புணர்சியும் தெரியவே தெரியாதாம். அவர்களுக்கு என்ன ஊரைக்கூட்டி ஒப்பாரி வைத்து விட்டு போவார்கள். நீருக்குள் மீன் அழுவதுபோல் ஆண்களின் கஷ்டம் யாருக்கு தெரியப்போகுது. ஆண்களுக்குத்தான் இதை வெளியில் சொல்வதற்கு பயம். இல்லை பயமும் ஒரு காரணமாய் இருக்கலாம் என்று சொல்ல வாறன். இந்தக்களத்தில ஒரு பெண் கூடவா துணிந்து வந்து ஆண்களுக்கு வக்காலத்து வாங்கக் கூடாது.....!  ?

Image associée

எல்லா இனத்திலும் பெண்களுக்கு கொடுமைகள் நடந்தாலும் ஆண்களால் வன்புணர்வு என்பதை சரியாக விளங்கிக்கொள்ளவே முடியாது அண்ணா . எம் தமிழ் சமூகத்தில் இந்தியாவைப்போன்று கொடுமைகள் இல்லை என்றாலும் பல  இடங்களில் பெண்கள் வாய் மூடி மௌனமாகவே இருக்கவேண்டி இருக்கிறது. இதில் ஆண்களுக்கு எங்கே வக்காலத்து வாங்குவது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அக்கா ஒருத்தி இருந்தவதான் பக்கத்து வீட்டில. ஆனால், நான் சின்னப்பிளை கண்டியளோ? ஒண்டும் தெரியாது!!??##

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, ragunathan said:

அக்கா ஒருத்தி இருந்தவதான் பக்கத்து வீட்டில. ஆனால், நான் சின்னப்பிளை கண்டியளோ? ஒண்டும் தெரியாது!!??##

இது குறள் மாதிரி, ஆண்களாலும் எல்லாவற்றையும் விளக்கமாய் சொல்ல முடியாது. நீங்களாய் விளக்கவுரை போட்டு புரிஞ்சுகொள்ள வேண்டியதுதான்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்படியெல்லாம் லேசில விடமுடியாது பையா ....... எப்படியும் உங்களுக்கு சந்தர்ப்பம் தராத பெரியப்பாவுக்கு கொஞ்சம் மேல நின்றால்தான் மனம் ஆறும்.......!  😂
    • மீண்டும் மீண்டும் இந்த 5% வந்து கிலியைக் கிளப்புகிறதே😂?
    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.