Jump to content

2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்!


Recommended Posts

2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்!

 

``2019 உலகக்கோப்பை வரை நான் சர்வைவ் ஆவேன் என நினைக்கிறீர்களா?'' என்று தோனி மீண்டும் கேட்க, ``ஆமாம்... நிச்சயமாக'' என்றார் பத்திரிகையாளர். ``நீங்களே சொல்லிவிட்டீர்கள். நான் இனி எதுவும் சொல்வதற்கில்லை'' என்று ஓய்வுபற்றி எழுந்த கேள்வியை மிகவும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு, ஓய்வுபற்றிய கேள்விகளுக்கு அப்போது முற்றுப்புள்ளிவைத்தார் தோனி. ஆனால், கடந்த ஓராண்டாகவே தோனியின் பர்ஃபாமென்ஸ் கேள்விக்குள்ளாகிவருகிறது.

2019 உலகக் கோப்பை அணியில் தோனி... வேண்டும் 5 காரணங்கள்... வேண்டாம் 5 காரணங்கள்!
 

``2019 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்றால் தோனி தன்னுடைய ஆட்ட முறையை மாற்றிக்கொள்ளவேண்டும். அவர் இன்னிங்ஸை பில்ட் செய்ய வேண்டும். ஆனால், கடந்த ஓராண்டாகவே அவர் இதைச் சரிவரச் செய்யவில்லை'' - இந்திய அணியில் தோனியின் இருப்பு குறித்து இப்படிச் சொல்லியிருக்கிறார் இந்தியாவின் முன்னாள் கேப்டன் செளரவ் கங்குலி. 

2016 மும்பையில் நடைபெற்ற 20/20 உலகக்கோப்பை  அரை இறுதிப்போட்டியில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியிடம் தோல்வியடைந்தது இந்தியா. கேப்டன் தோனி ஆட்டம் முடிந்ததும் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருவர் ``இனி தொடர்ந்து விளையாட விரும்புகிறீர்களா?'' எனக் கேட்க, சிரித்துக்கொண்டே அந்தப் பத்திரிகையாளரை தன் அருகில் உள்ள இருக்கையில் உட்காரவைத்து கேள்விகள் கேட்க ஆரம்பித்தார். ``நான் ஓய்வுபெற வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்களா" என தோனி கேட்க, பத்திரிகையாளர் ``இல்லை... ஓய்வுப்பற்றி தெரிந்துகொள்ள கேட்டேன்'' என்றார். ``இந்தக் கேள்வி இந்தியப் பத்திரிகையாளர்களிடம் இருந்துதான் எதிர்பார்த்தேன். ஆனால், நீங்கள் கேட்டுவிட்டீர்கள்'' என்றவர், ``நான் ஓடுவதைப் பார்த்தீர்களா... நீங்கள் என்னை அன்ஃபிட் என நினைக்கிறீர்களா'' எனக் கேட்க, ``இல்லை'' என்று மறுத்தார் பத்திரிகையாளர். ``2019 உலகக்கோப்பை வரை நான் சர்வைவ் ஆவேன் என நினைக்கிறீர்களா?'' என்று தோனி மீண்டும் கேட்க, ``ஆமாம்... நிச்சயமாக'' என்றார் பத்திரிகையாளர். ``நீங்களே சொல்லிவிட்டீர்கள். நான் இனி எதுவும் சொல்வதற்கில்லை'' என்று ஓய்வுபற்றி எழுந்த கேள்வியை மிகவும் சாமர்த்தியமாக எதிர்கொண்டு, ஓய்வுபற்றிய கேள்விகளுக்கு அப்போது முற்றுப்புள்ளிவைத்தார் தோனி.

ஆனால், 2019 உலகக்கோப்பையில் தோனி விளையாடுவாரா என்கிற கேள்விகள் இப்போது மீண்டும் எழ ஆரம்பித்திருக்கின்றன. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி 2 போட்டிகளிலும் மிகவும் பொறுமையாக விளையாடினார் என்பதனால் மட்டுமே இந்தக் கேள்விகள் எழவில்லை. கடந்த ஓராண்டாகவே இவரின் பர்ஃபாமென்ஸ் கேள்விக்குள்ளாகிவருகிறது.  

 

 

2019 உலகக்கோப்பையில் தோனி விளையாட வேண்டுமா... ஏன் விளையாட வேண்டும்.... ஏன் விளையாடக் கூடாது?

 

dhoni

தோனி ஏன் விளையாட வேண்டும்!

1. 2017 ஜூலை முதல் 2018 ஜூலை வரை தோனியின் பர்ஃபாமென்ஸை கணக்கில் எடுத்துக்கொள்வோம். கடந்த ஒரு வருடத்தில் 23 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார் தோனி. இதில் மொத்தமாக 604 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் தோனியின் அதிகபட்ச ஸ்கோர் 79 ரன்கள். ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சென்னையில் நடந்த போட்டியில் 88 பந்துகளில் 79 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தார் தோனி. கடந்த ஒரு வருடத்தில் 4 அரை சதங்கள் அடித்திருக்கிறார். 8 போட்டிகளில் நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருந்திருக்கிறார். நான்காவது, ஐந்தாவது டவுனில் வந்து இவ்வளவு ரன்கள் அடிப்பது என்பதே சாதனைதான். அதுவும் பல போட்டிகளில் 30-40 ரன்கள் என முக்கியமான நேரத்தில் ரன்கள் சேர்த்திருக்கிறார். அதனால் 2019 உலகக்கோப்பை அணியில் ஆறாவது டவுன் பேட்ஸ்மேனாக தோனி இருப்பது அணிக்கு பலமாகவே இருக்கும்.  

 

 

2. தற்போதைய இந்திய அணியில் சீனியர் வீரர் தோனிதான். 2011 உலகக்கோப்பையை வென்ற அனுபவம், 2015 உலகக்கோப்பையில் அரை இறுதிவரை அழைத்துச்சென்ற அனுபவம் எனத் தற்போதைய கேப்டன் விராட் கோலியை வழிநடத்த அணிக்குள் தோனியைத் தவிர வேறு ஆள் இல்லை. முன்னாள் கேப்டனாகவும், சீனியர் வீரராகவும் ஃபீல்டிங் பொசிஷன்ஸ், பெளலிங் ரொட்டேஷன், இக்கட்டான நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவுகள் என எல்லாவகையிலும் கோலிக்கு ஃபீல்டில் உதவியாக நிற்கக்கூடிய அத்தனை தகுதிகளும் தோனிக்கு மட்டுமே இருக்கிறது. 

 

dhoni

 

3. தோனியின் பேட்டிங் வேகம் குறைந்திருக்கலாம். ஆனால் அவரின் ஸ்டம்ப்பிங் வேகமும், எகிறி துடித்துப் பிடிக்கும் கேட்ச்களின்  வேகமும் ஒரு மில்லி செகண்ட்கூட குறையவில்லை. இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் வின்சியை அவர் ஒற்றைக்கையால் ரன் அவுட் செய்த வேகமே தோனியின் பர்ஃபாமென்ஸுக்கு சமீபத்திய நல் உதாரணம். இன்றுவரை இந்தியாவின் பெஸ்ட் விக்கெட் கீப்பர் தோனிதான். இதை யாரும் மறுக்கமுடியாது. அதேபோல ஸ்டம்ப்புக்குப் பின்னாலிருந்து எதை ரிவியூ கேட்கவேண்டும், எதைக் கேட்கவேண்டாம் என்பதைச் சரியாகக் கணித்து சொல்வதிலும் தோனியை மிஞ்ச ஆள் இல்லை. டிசிஷன் ரிவியூ சிஸ்டம் என்பதை தோனி ரிவியூ சிஸ்டம் என்று சொல்லும் அளவுக்கு தோனியின் கணிப்புகள் என்றுமே பொய்யானதில்லை. இது கோலிக்கு மிகப்பெரிய ப்ளஸ். 

4. கிரிக்கெட் வாழ்க்கையில் தனது கடைசி வருடத்தில் இருக்கிறோம் என்பதை தோனியும் உணர்ந்தே இருக்கிறார். இன்னும் ஒரு வருடத்தில் 2019 உலகக்கோப்பை முடிந்திருக்கும். அதுவரை தன்னை ஃபிட்டாக வைத்துக்கொள்ளத்தான் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார் தோனி. யோ-யோ டெஸ்ட் உட்பட அத்தனை ஃபிட்னஸ் தேர்வுகளிலும் தோனி ஆல் பாஸ்தான். தோனிக்கு ஃபிட்னஸ் தடையாக இருக்காது என நம்பலாம்.

5. இதுவரை 321 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார் தோனி. நான்காவது அல்லது ஐந்தாவது டவுனில் விளையாட வந்து 10,000 ரன்களுக்கும் மேல் ஒருநாள் போட்டிகளில் அடித்திருக்கிறார். இந்தியாவின் மிகச்சிறந்த ஃபினிஷர் தோனி எனக் கொண்டாடப்பட்டவர். இங்கிலாந்தில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வேகமாக ஆடவில்லை என்பதற்காக அவரைக் கடுமையாக விமர்சிப்பது என்பது சரியான முடிவாக இருக்காது. உலகக்கோப்பை வென்று தந்த கேப்டனுக்கு பிரஷரைக் குறைத்து அவரை ஆட்டத்தில் கவனம் செலுத்தவைக்கவேண்டும்.

 

dhoni

2019 உலகக்கோப்பையில் தோனி ஏன் விளையாடக் கூடாது?

1. மேனேஜ்மென்ட் மந்திரங்களில் தோனி சொன்ன முக்கியமான ஒன்று `ஹார்சஸ் ஃபார் கோர்ஸஸ்' தியரி.  2011 உலகக்கோப்பை முடிந்து அந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியா சென்றது இந்திய அணி. சச்சின், ஷேவாக், கம்பீர் என உலகக்கோப்பையில் விளையாடிய அத்தனை சீனியர்களும் அந்த அணியில் இருந்தனர். ஆனால், 2015 ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருக்கும் உலகக்கோப்பையை காரணம் காட்டி, அதற்கு ஏற்றாற்போல் அணியைத் தயார் செய்ய விரும்புகிறோம் என்றார் தோனி. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த சீரிஸில் சச்சின், ஷேவாக், கம்பீர் என மூவரையுமே ரொட்டேஷன் பாலிசி, ஹார்ஸஸ் ஃபார் கோர்சஸ் தியரிப்படி விளையாடவைப்பதாக குறிப்பிட்டார். அதாவது மூன்று சீனியர் பேட்ஸ்மேன்களுமே ஒரே மேட்சில் விளையாட மாட்டார்கள். பிட்ச்சின் தன்மையைப் பொறுத்து ஒரு போட்டியில் சச்சின், ஒரு போட்டியில் ஷேவாக் என மாற்றப்பட்டார்கள். 100 சதங்கள் அடித்த, உலகிலேயே அதிக ரன்கள் குவித்த சச்சினை உட்காரவைப்பதற்கு தோனி சொன்ன காரணம் 2015 உலகக்கோப்பை. அதேபோலத்தான் தோனிக்கு 2019 உலகக்கோப்பை முன் வந்து நிற்கிறது. 2019 உலகக்கோப்பைக்குத் தகுதியான முழுமையான அணி இருக்கவேண்டும் என்று அவர் நினைத்தால், அவர் 2012-ல் எடுத்தே அதே பரீட்சார்த்த முறைகளை கோலி எடுப்பதற்கும் முழு  ஒத்துழைப்பைத் தரவேண்டும். 

2. 2019 உலகக்கோப்பைக்கு முன்னதாக ஐபிஎல் போட்டிகள் நடைபெறவிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸின் முகமே தோனிதான். அதனால் அவர் கட்டாயம் சென்னை விளையாடும் அத்தனை ஐபிஎல் போட்டிகளிலும் விளையாட வேண்டியிருக்கும். அதில் அவருடைய பர்ஃபாமென்ஸ் மிகவும் கவனிக்கப்படும். அதில் சொதப்பினால் அவர் பாசிட்டிவ் எனர்ஜியை இழக்க நேரிடும். அதேசமயம் இரண்டு மாதம் தொடர்ந்து விளையாடுவது என்பது 38 வயதில் அவருக்கு ஓவர் பிரஷராகவே இருக்கும். ஐபிஎல் முக்கியமா, உலகக்கோப்பை முக்கியமா என்று யோசிக்கவோ, உலகக்கோப்பைக்காக ஐபிஎல்-லை விட்டுத்தரும் இடத்திலோ தோனி இல்லை என்பதே உண்மை. 

 

தோனி

3. கடந்த ஓர் ஆண்டாகவே தோனியின் ஸ்ட்ரைக் ரேட் குறைந்துவிட்டது. கடந்த வாரம் லார்ட்ஸ் மைதானத்தில் ஏன் அப்படி விளையாடினார் என்று தோனியாலேயே இன்றுவரை காரணம் சொல்லமுடியவில்லை. இந்த ஆண்டில் இதுவரை 9 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். இதில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. ஸ்பின்னர்களை சிறப்பாகச் சமாளிக்கக்கூடிய அவர், இங்கிலாந்தில் மொயின் அலி, ரஷித்தின் பந்துகளை எதிர்கொண்ட விதம் பல கேள்விகளை எழுப்புகிறது. அடுத்த ஆண்டு இதே இங்கிலாந்து ஆடுகளங்களில்தான் உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இந்த ஸ்லோ ஆட்டம் நிச்சயம் அவருக்குக் கைகொடுக்காது. 

4. இந்தியாவின் டாப் 4 பேட்ஸ்மேன்களில் எந்த சர்ச்சையும் இல்லை. ஐந்து, ஆறாவது இடங்கள்தாம் இன்னும் செட் ஆகாமல் இருக்கின்றன. தோனிக்கான சரியான ரீப்ளேஸ்மென்ட்டாக தினேஷ் கார்த்திக் இருக்கிறார். ஃபிட்டாக இருக்கிறார், ஃபார்மில் இருக்கிறார். இங்கிலாந்து கண்டிஷனில் விளையாட சரியான பேட்ஸ்மேனும்கூட. அதனால் தோனி சொன்ன ரொட்டேஷன் பாலிசிபடியே இனி அடுத்துவரும் ஒருநாள் போட்டிகளில் தோனியையும், தினேஷ் கார்த்திக்கையும் மாற்றி மாற்றி கோலி பயன்படுத்தலாம். இந்த பர்ஃபாமென்ஸின்படி 2019 உலகக்கோப்பை அணியில் தோனி நீடிக்கவேண்டுமா இல்லையா என்பதை முடிவெடுக்க வேண்டும்.

5. ரிஷப் பன்ட், கேஎல் ராகுல், தினேஷ் கார்த்திக் என விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்கள் மூன்றுபேர் வரிசையில் காத்திருக்கிறார்கள். இளைஞர்களுக்கு வழிவிடவேண்டிய பொறுப்பு தோனிக்கு இருக்கிறது. ரிஷப் பன்ட் அல்லது கே.எல் ராகுலுக்குக் கூடுதல் பொறுப்பாக விக்கெட் கீப்பர் இடத்தைக் கொடுக்கும்போது ஷ்ரேயாஸ் ஐயரை போன்ற சாலிட் பேட்ஸ்மேன்களை ஐந்தாவது டவுன் பேட்ஸ்மேனாக முயற்சி செய்து பார்க்கலாம்.

 இந்த ஆண்டின் இறுதியில் ஆஸ்திரேலியாவுக்குச் செல்ல இருக்கிறது இந்திய அணி. ஆஸ்திரேலிய சீரிஸ் தோனிக்கு மிகப்பெரிய சோதனையாக இருக்கும். டெஸ்ட் போட்டிகளிலிருந்து முறையாக ஓய்வை அறிவித்து வெளியேறவில்லை என்றாலும் சரியான நேரத்தில் முடிவெடுத்துவிட்டார் தோனி. ஒருநாள், டி20 போட்டிகளிலிருந்தும் அவர் ஓய்வை அறிவிக்கவேண்டிய காலம் இப்போது நெருங்கிவிட்டது. 

விமர்சனங்களுக்குத் தன் பர்ஃபாமென்ஸால் பதில் சொல்பவர் தோனி... இந்தமுறையும் பர்ஃபாமென்ஸால் பதில் சொல்வார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள்!

https://www.vikatan.com/news/sports/131407-2019-worlcup-why-dhoni-should-play-why-dhoni-shouldnt-play-the-worldcup.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.