Jump to content

யாழில் பெண்கள் மகாநாடு நாளை ஆரம்பம்


Recommended Posts

யாழில் பெண்கள் மகாநாடு நாளை ஆரம்பம்

 

 
 

யுத்தத்தின் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் என்ற தலைப்பிலான சர்வதேச பெண்கள் மகாநாடு நாளை 21 ஆம் திகதியும் நாளை மறுதினம் 22 திகதியும் யாழ்ப்பாண பொது நூலகத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து இரண்டு தினங்கள் நடைபெறுகிறது. 

இந்த நிகழ்வின் பெண்கள் தொடர்பான ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படுவதோடு எதிர்காலத்தில் பெண்கள் தொடர்பான அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் கொள்கை வகுப்பிற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்படவுள்ளன.

யாழ். மாவட்ட அரசசார்பற்ற நிறுனங்களின் இணையம் இந்த ஆய்வு மகாநாட்டை ஒழுங்கு செய்து நடத்துகிறது. முப்பதிற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் பல்வேறு நாடுகளிலுமிருந்து வருகைதந்து தமது ஆய்வுக்கட்டுரைகளைச் சமர்ப்பிக்கிறார்கள்.

ஆய்வு மகாநாட்டின் ஆய்வுத் தொடக்கவுரை பிரதமமந்திரியின் பாரியார் பேரிசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க நிகழ்த்தவுள்ளார். தொடக்க நிகழ்விற்கு யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ரட்ணம் விக்னேஸ்வரன் அவர்கள் பிரதமவிருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளார். 

நிகழ்விற்கு யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் விசேடவிருந்தினராகவும். தமிழ்நாட்டின் எத்திராஜ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆர்.மல்லிகா சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார்.

ஆய்வு மகாநாட்டின் இறுதிநாள் சான்றிதழ் வழங்கும் வைபவத்தில் வடக்குமகாண முதலமைச்சர்  சி.வி.விக்னேஸ்வரன் பிரதமவிருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார். கிழக்கு பல்கலைக்கழகத்தைச் சார்ந்த கலாநிதி சாந்தி கேசவன், மாற்றுத்தினாளி பெண்கள் அமைப்பைச்சார்ந்த வெற்றிச்செல்வி மற்றும் தமிழ்நாட்டின் திறந்த பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஆனந்தகிருஸ்ணன் செந்தில்வேல் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து சிறப்பிக்கிறார்கள். 

உலகெங்கிலும் தமிழர்தொன்மை சார் ஆய்வுகளை மேற்கொள்ளும் தமிழ்நாட்டைச் சேர்ந்த சிவ பாலசுப்பிரமணியம் ( ஒரிசா பாலு )  சிறப்புரை நிகழ்த்தவுள்ளார். ஆய்வு மகாநாட்டில் எட்டுத் தலைப்புக்களில் அறுபது ஆய்வுகள் சமர்ப்பிக்கப்படுகின்றன. உள்நாட்டிலும், வெளிநாடுகளையும் சேர்ந்த 83 ஆய்வாளர்கள் இதில் பங்குகொள்கிறார்கள். 

பால்நிலை சமத்துவம், பெண்களின் பொருளாதாரம் மற்றும் வலுவூட்டல், பெண்களின் உளசமூக மேம்பாடு, சமூகக்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு, பெண்களும் ஊடகமும், கட்டிளமைப்பருவத்தினரும் மாறிவரும் சூழலும் என்ற தலைப்புக்களில் ஆய்வுகள் சமர்ப்பிக்கப்படவுள்ளன. 

மகாநாட்டில் பங்கு கொள்ளவிரும்புபவர்கள் 0212223668 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பதிவுகளை மேற்கொள்ளலாம். என நிகழ்வு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

http://www.virakesari.lk/article/36941

Link to comment
Share on other sites

போருக்குப் பின்னர் பெண்களின் சூழல்- யாழ்ப்பாணத்தில் மாநாடு!!

IMG_2176-750x430.jpg
 
 
 

போருக்குப் பின்னரான சூழலில் பெண்களின் தலைமைத்துவம் மற்றும் வலுவூட்டல் என்ற தலைப்பிலான பன்னாட்டுப் பெண்கள் மகாநாடு யாழ்ப்பாணம் பொது நூலக கேட்போர் கூடத்தில் இன்று காலை ஆரம்பமானது.

மாணவிகளின் நடன நிகழ்வுடன் ஆரம்பமானமாநாட்டில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பதில் துணைவேந்தர் சுதாகரன், மாவட்டச் செயலர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் மேலதிக மாவட்டச் செயலர் சுகுணரதி தெய்வேந்திரம் உட்பட துறை சார்ந்த பெண்கள் பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பெண்கள் தொடர்பான ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படுவதோடு, எதிர்காலத்தில் பெண்கள் தொடர்பான அபிவிருத்தித்திட்டங்கள் மற்றும் கொள்கைவகுப்பிற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்படவுள்ளன.

 

நிகழ்வில் நடனமாடிய பாடசாலை மாணவர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

விருந்தினர்களுக்கு மாநட்டினை நினைவுகூறும் நினைவுச் சின்னங்களும் வழங்கப்பட்டன. இந்த மாநாடு நாளையும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IMG_2145-750x430.jpgIMG_2170-750x430.jpgIMG_2173-750x430.jpgIMG_2176-750x430.jpgIMG_2183-750x430.jpgIMG_2204-750x430.jpg

http://newuthayan.com/story/14/போருக்குப்-பின்னர்-பெண்களின்-சூழல்-யாழ்ப்பாணத்தில்-மாநாடு.html

Link to comment
Share on other sites

பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­முறை கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை – மைத்­திரி ரணில் யாழ்ப்­பா­ணத்­தில் ஆதங்­கம்!!

 

IMG_2176-1-750x430.jpg

 
 
 

இலங்­கை­யின் சட்­டத்­தில் பெண்­கள் பாது­காப்­புத் தொடர்­பாக அதி­க­ள­வான நடை­மு­றை­கள் இருந்த போதி­லும் தற்­போது, இடம்­பெ­றும் பெண்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­து­வற்கு எந்த நட­வ­டிக்­கை­யும் மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தில்லை என்­பது வருத்­தத்­துக்­கு­ரி­யது.

இவ்­வாறு தலைமை அமைச்­ச­ரின் பாரி­யா­ரும், பேரா­சி­ரி­ய­ரு­மான மைத்­திரி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.

போரின் பின்­ன­ரான சூழ­லில் பெண்­க­ளின் தலை­மைத்­து­வம் மற்­றும் வலு­வூட்­டல் என்ற தலைப்­பி­லான பன்­னாட்­டுப் பெண்­கள் மாநாடு யாழ்ப்­பா­ணம் பொது­நூ­லக கேட்­போர் கூடத்­தில் நேற்று ஆரம்­ப­மா­னது.

 
 

யாழ்ப்­பாண மாவட்ட அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளில் இணை­யத்­தின் ஏற்­பாட்­டில் நேற்று ஆரம்­ப­மான இந்த மாநாடு, இன்­றும் நடை­பெ­ற­வுள்­ளது. மாநாட்­டின் மாலை நிகழ்­வில் தலைமை அதி­தி­யா­கக் கலந்து கொண்ட, தலைமை அமைச்­ச­ரின் பாரி­யார் மைத்­திரி ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேலும் தெரி­வித்­த­தா­வது,

பெண்­க­ளின் பாது­காப்பு, பெண்­ணி­யக் கோட்­பா­டு­கள் எல்­லோ­ருக்­கும் பொது­வாக அமை­ய­வேண்­டும். போரின் பின்­னர் வடக்­கில் பெண்­க­ளின் உரி­மை­கள் மீறப்­பட்­டி­ருக்­கின்­றன. பெண்­களை வலு­வூட்­டும் செயற்­பாடு அர­சி­யல் உள்­ளிட்ட சகல வழி­க­ளி­லும் பல­வீ­ன­மா­கவே இருக்­கின்­றது. பெண்­களை வலு­வூட்­டும் செயற்­பா­டு­க­ளுக்கு போதி­ய­ளவு உத­வி­கள் கிடைக்­கப் பெறு­வ­தில்லை.

முத­லா­வது பெண் தலைமை அமைச்­சரை உரு­வாக்­கிய நாடு இலங்கை. இந்­தச் சிறப்பு இருந்­தா­லும், இன்று பெண் தலை­வர்­களை உரு­வாக்­கு­வது மிகக் குறை­வாக இருக்­கின்­றது.

225 நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளில் 15 பேரே பெண் உறுப்­பி­னர்­க­ளா­கக் காணப்­ப­டு­கின்­ற­னர். அதி­லும் யாழ்ப்­பா­ணத்தை பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தி ஒரு பெண் பிர­தி­நி­தியே காணப்­ப­டு­கின்­றார். பெண் தலை­வர்­கள் உரு­வாக வேண்­டிய கட்­டா­யம் காணப்­ப­டு­கி­றது.

பால்­நிலை சமத்­து­வம் தொடர்­பில், ‘ஜென்­டர் செல்’ என்ற திட்­டத்­தின் மூலம் முக்­கி­ய­மாக அனைத்­துப் பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளி­லும் காணப்­ப­டும் பகி­டி­வ­தை­களை கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்டு வரும் நோக்­கில் எந்த நேரத்­தி­லும் பகிடி வதை சம்­பந்­த­மான முறைப்­பா­டு­க­ளைச் செய்­யக் கூடி­ய­வாறு உமா குமா­ர­சாமி என்­ப­வ­ரின் நெறி­யாள்­கை­யில் திட்­ட­மொன்று அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது – என்­றார்.

இந்த நிகழ்­வில், வர­வேற்­பு­ரை­யினை மக­ளிர் அபி­வி­ருத்தி நிலை­யத்­தின் பணிப்­பா­ளர் திரு­மதி சறோஜா சிவ­சந்­தி­ரன் வழங்­கி­னார். தலைமை உரை­யினை, அரச சார்­பற்ற நிறு­வ­னங்­க­ளின் இணைத் தலை­வர் தே.தேவா­னந்த் வழங்­கி­னார்.

‘வளர்ந்த நாடு­கள் ஆய்­வு­க­ளுக்­கா­கப் பெருந்­தொ­கைப் பணத்தை செல­வி­டு­கின்­றன. ஆனால் வளர்­முக நாடு­கள் அவ்­வாறு செய்­வ­தில்லை. வளர்ந்த நாடு­கள் எம்­மைப் பற்றி ஆய்வு நடத்தி முடிவு சொல்­லும் நிலை­யி­லேயே நாங்­கள் இருக்­கின்­றோம்’ என்று யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக் கழக விரி­வு­ரை­யா­ளர் திரு­மதி தே.ஜனனி தெரி­வித்­தார்.

யாழ்ப்­பா­ணத்­தில் 30 ஆயி­ரத்­துக்­கும் மேற்­பட்ட பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­கள் இருப்­ப­தாக, யாழ்ப்­பாண மாவட்­டச் செய­லக மேல­திக மாவட்­டச் செய­லர் திரு­மதி சுகு­ண­ரதி தெய்­வேந்­தி­ரம் தெரி­வித்­தார்.

போருக்­குப் பின்­னர் பெண்­கள் எல்லா நேர­மும் கண்­கா­ணிக்­கப்­ப­டு­கின்­றார்­கள் என்­ப­தைத்­தான் சகல போர்­க­ளும் உணர்த்துவ­தாக, இந்­தி­யப் பல்­க­லைக்­க­ழக விரி­வு­ரை­யா­ளர் திரு­மதி டி.ஆர்.அரங்க மல்­லிகா தெரி­வித்­தார்.

நேற்­றைய முத­லாம் நாள் நிகழ்­வில், 7 ஆய்­வு­ரை­கள் முன்­வைக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

http://newuthayan.com/story/09/பெண்­க­ளுக்கு-எதி­ரான-வன்­முறை-கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை-மைத்­திரி-ரணில்-யாழ்ப்­பா­ணத்­தில்-ஆதங்­கம்.html

Link to comment
Share on other sites

எமது உரி­மைக்­கான குரல்­கள் -ஓங்கி ஒலித்­துக் ­கொண்­டி­ருக்­கும் -வடக்கு முத­ல­மைச்­சர்!!

12644872_1123871167623025_59124174913953
 
 
 
 

நாங்­க­ளும் இந்த நாட்­டின் இறை­மை­யுள்ள குடி­மக்­க­ளாக எமது பிர­தே­சங்­க­ளில் எம்மை நாமே ஆளக்­கூ­டிய முறை­யில் வாழ வழி­யி­டப்­பட வேண்­டும் எனக் கோரி­னால் நாங்­கள் பிரி­வினை கோரு­கின்­றோம் என்று ஒப்­பாரி வைக்­கின்­றார்­கள். தொடர்ச்­சி­யான இவர்­க­ளின் அழுத்­தங்­கள் ஒரு­நாள் ஓய்­வுக்கு வரும். அது­வரை எமது உரி­மைக்­கான குரல்­கள் ஓங்கி ஒலித்­துக்­கொண்­டே­யி­ருக்­கும். இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

போரின் பின்­ன­ரான சூழ­லில் பெண்­க­ளின் தலை­மைத்­து­வம் மற்­றும் வலு­வூட்­டல் என்ற தலைப்­பி­லான பன்­னாட்­டுப் பெண்­கள் மாநாடு யாழ்ப்­பா­ணம் பொது­நூ­லக கேட்­போர் கூடத்­தில் நேற்­று­முன்­தி­னம் ஆரம்­ப­மா­னது. நேற்று இரண்­டா­வது நாளா­க­வும் நடை­பெற்­றது. நேற்று மாலை இடம்­பெற்ற நிகழ்­வில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

உத­வி­கள் சொற்­பம்

 

போருக்­குப் பின்­ன­ரான காலத்­தில் இங்கு நடை­பெ­று­கின்ற பல்­வேறு பிரச்­ச­னை­க­ளுக்கு முகம் கொடுக்;க வேண்­டிய நிலை­யில் இந்­தப் பகு­தி­யில் உள்ள பெண்­கள் இருக்­கின்­றார்­கள். இவ்­வா­றான மக்­க­ளுக்கு வட­மா­காண சபை­யி­னால் வழங்­கப்­ப­டு­கின்ற உத­வி­கள் மிகச் சொற்­பமே. மலை­ய­ளவு தேவைக்கு தினை­ய­ளவு உதவி என்ற கணக்­கி­லேயே அமைந்­தி­ருக்­கின்­றது எமது உத­வி­கள்.

இவர்­க­ளின் தேவை­கள் பற்­றி­யும் இவர்­களை சமு­தாய நீரோட்­ட­து­டன் மீள இணைத்து முன்­னெ­டுத்­துச் செல்­லக் கூடிய வகை­யி­லும் உத­வித் திட்­டங்­களை எம்­மு­டன் சேர்ந்து அறி­மு­கம் செய்­யும்­படி கொழும்பு அரசை நாம் மீண்­டும் மீண்­டும் வலி­யு­றுத்தி வரு­கின்ற போதும் அவர்­கள் அதைக் கண்டு கொள்­வ­தா­கத் தெரி­ய­வில்லை. அர­சி­யல் ரீதி­யா­கத் தமக்கு உத­வக்­கூ­டி­ய­வர்­க­ளைத் தேடிக்­கண்டு பிடித்து உத­வி­கள் செய்­யப்­பார்க்­கின்­றார்­கள்.

இது போன்ற அரச சார்­பற்ற நிறு­வ­னங்­கள் பாதிப்­புற்ற மக்­கள் பற்றி ஆய்­வு­களை பல கோணங்­க­ளில் இருந்­தும் மேற்­கொண்டு தமது அறிக்­கை­களை பக்­கச்­சார்­பின்றி சமர்ப்­பிப்­ப­தன் மூலம் பாதிப்­புற்ற மக்­கள் சம்­பந்­த­மான விட­யங்­களை வெளிச்­சத்­திற்கு கொண்டு வரு­வ­து­டன் அர­சிற்­கும் அழுத்­தங்­க­ளைப் பிர­யோ­கிப்­ப­தற்கு உத­வி­யாக இருக்­கும்.

பெண்­களை வலு­வூட்­டும் போது வெறுந் தொழில்­க­ளில் அவர்­களை ஈடு­ப­டுத்­து­வதை மட்­டும் அது குறிக்­காது. அவர்­க­ளுக்­காக அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­டும் செயற்­திட்­டங்­கள் எந்த அள­வுக்கு அவர்­க­ளது வாழ்க்­கையை, வாழ்க்­கைத்­த­ரத்தை மாற்­று­கின்­றன என்­ப­தை­யும் நாங்­கள் அவ­தா­னிக்க வேண்­டும். வலு­வூட்­டல் எம்மை பிழை­யான வழி­க­ளுக்கு இழுத்­துச் செல்­லாது பார்த்­துக் கொள்ள வேண்­டும். வலு­வூட்­டல் சமூக மேம்­பாட்­டுக்கு இட­ம­ளிக்க வேண்­டுமே ஒளிய சமூக சீர­ழி­வு­க­ளுக்கு இடம் அளிக்­கக்­கூ­டாது.

அடி­மைத்­த­னம்

அடுத்து எமது பொது­வான அர­சி­யல் விட­யங்­க­ளைப் பற்றி ஓரிரு வார்த்­தை­கள். இந்த நாட்­டின் பூர்­வீ­கக் குடி­கள் தமிழ் மக்­கள். அவர்­கள் இன்று ஒடுக்­கப்­பட்ட ஒரு சிறு­பான்மை இன­மாக வாழ­வேண்டி வந்­துள்­ளது. பெரும்­பான்மை இனத்­த­வர்­கள் கூறு­கின்ற அனைத்து விட­யங்­க­ளுக்­கும் தலை­யாட்­டிப் பொம்­மை­க­ளாக தலை­யாட்­டிக்­கொண்டு தமிழ் மக்­கள் வாழ வேண்­டு­மென அரசு எதிர்­பார்க்­கின்­றது.

நாம் எமது ஒவ்­வொரு தேவை­க­ளை­யும் போரா­டிப் பெற­வேண்­டிய சூழ்­நி­லை­யி­லேயே இன்று இருக்­கின்­றோம். தமி­ழர்­கள் கைகட்டி வாய்­பொத்தி இருக்­க­வேண்­டும். இல்­லை­யேல் அவர்­கள் அனை­வ­ரை­யும் அண்டை நாடு­க­ளுக்கு துரத்­தி­வி­ட­வேண்­டும் என்று நாடா­ளு­மன்­றத்­தி­லும் வெளி­யி­லும் கூச்­சல் போடு­கின்­றார்­கள் சிலர். அவர்­கள் மீது அரசு நட­வ­டிக்­கை­கள் எடுப்­ப­தில்லை. தற்­செ­ய­லாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் அவர்­கள் ஏதோ கூறி­விட்­டார் என்­ப­தற்­காக அமைச்­சுப் பத­வி­கள் பறிப்பு, குற்­றத் தடுப்­புப் பிரி­வின் விசா­ர­ணை­கள் என அனை­வ­ரும் இணைந்து கொண்டு நட­வ­டிக்­கை­க­ளில் ஈடு­ப­டு­கின்­றார்­கள். இந்த நிலை­கள் தொட­ரக்­கூ­டாது – என்­றார்.

ஆய்­வுக் கட்­டு­ரை­கள்

மாநாட்­டின் இறு­தி­நா­ளான நேற்று, 5 பகு­தி­க­ளாக இரண்டு தளங்­க­ளில் நிகழ்வு இடம்­பெற்­றது. 312 ஆய்­வுக் கட்­டு­ரை­கள் சமர்ப்­பிக்­கப்­பட்­டன. மாநாட்­டில் ஆய்­வுக் கட்­டு­ரை­க­ளைச் சமர்ப்­பித்த அனை­வ­ருக்­கும் வட­மா­காண முத­ல­மைச்­ச­ரால் சான்­றி­தல் வழங்கி மதிப்­ப­ளிக்­கப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.

http://newuthayan.com/story/09/எமது-உரி­மைக்­கான-குரல்­கள்-ஓங்கி-ஒலித்­துக்-­கொண்­டி­ருக்­கும்-வடக்கு-முத­ல­மைச்­சர்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.