Jump to content

இலங்கைக்கு பதிலடி கொடுக்குமா தென்ஆப்பிரிக்கா? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்


Recommended Posts

இலங்கைக்கு பதிலடி கொடுக்குமா தென்ஆப்பிரிக்கா? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்

 

இலங்கை, தென்ஆப்பிரிக்காவுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று தொடங்குகிறது. #SriLanka #SouthAfrica

 
 
 
 
இலங்கைக்கு பதிலடி கொடுக்குமா தென்ஆப்பிரிக்கா? 2-வது டெஸ்ட் இன்று தொடக்கம்
 
கொழும்பு:

பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் தென்ஆப்பிரிக்காவை 3-வது நாளுக்குள் சுருட்டிய இலங்கை அணி 278 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கொழும்பில் இன்று (காலை 10 மணி) தொடங்குகிறது. முந்தைய டெஸ்டில் தென்ஆப்பிரிக்க அணியின் 17 விக்கெட்டுகள் சுழற்பந்து வீச்சில் தான் சரிந்தன. இந்த டெஸ்டிலும் பிற்பகுதியில் சுழற்பந்து வீச்சின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதனால் ஹெராத், தில்ருவான் பெரேரா, சன்டகன் ஆகிய சுழல்தாக்குதலை சமாளிப்பதை பொறுத்தே தென்ஆப்பிரிக்க அணி பதிலடி கொடுக்குமா அல்லது சரண் அடையுமா? என்பது தெரியும்.

ஹெராத் கூறுகையில், ‘உள்ளூரில் இந்த தொடரை வெல்வது எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்றாகும். தென்ஆப்பிரிக்க அணி உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கிறது. அவர்களை வீழ்த்தும் போது நம்பிக்கை அதிகரிக்கும். அதனால் இந்த ஆட்டம் எங்களுக்கு முக்கியமானது’ என்றார். தனிப்பட்ட முறையில் சில வீரர்கள் சாதனையின் விளிம்பில் இருக்கிறார்கள். தென்ஆப்பிரிக்க வீரர் அம்லா இன்னும் 3 ரன் எடுத்தால் 9 ஆயிரம் ரன்களையும், இலங்கையின் மேத்யூஸ் 8 ரன் எடுத்தால் 5 ஆயிரம் ரன்களையும் கடப்பார்கள். வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் ஒரு விக்கெட் எடுத்தால், தென்ஆப்பிரிக்க பவுலர்களில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றியவரான பொல்லாக்கின் (421 விக்கெட்) சாதனையை முறியடிப்பார்.இந்த டெஸ்ட் போட்டியின் ஒவ்வொரு நாளும் மழை குறுக்கிடுவதற்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக 2-வது நாளில் மழை பெய்வதற்கு 80 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://www.maalaimalar.com/News/Sports/2018/07/20015425/1177707/Sri-Lanka-vs-South-Africa-2nd-test-at-Colombo.vpf

Link to comment
Share on other sites

துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது இலங்கை : வெற்றிபெறும் முனைப்பில் இரு அணிகளும்

 

 
 

தென்னாபிரிக்க அணிக்கெதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்துள்ளது.

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக காலி மைதானத்தில்  இடம்பெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 278  ஓட்டங்களால் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்கு மிடையிலா 2 ஆவது டெஸ்ட் போட்டி இன்று கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமாகின்றது.

இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் சுரங்க லக்மால் முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தார்.

சுரங்க லக்மால் இப்போட்டியில் இலங்கை அணிக்கு தலைமை தாங்குகின்றார். அதேவேளை, சந்தகனுக்கு பதிலாக அகில தனஞ்சய அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.

http://www.virakesari.lk/article/36926

Link to comment
Share on other sites

கேசவ் மஹராஜின் சுழலில் சிக்கிய இலங்கை

dsffdf-696x464.jpg
 

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் இரண்டாவதும் இறுதியுமான போட்டி இன்று கொழும்பு SSC சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகியிருந்தது.

 

இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாளின் நிறைவின் போது இலங்கை கிரிக்கெட் அணி தமது முதல் இன்னிங்ஸ்க்காக 86 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை குவித்திருக்கின்றது.

இன்றைய நாளுக்கான இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தனுஷ்க குணத்திலக்க, திமுத் கருணாரத்ன ஆகியோர் அரைச்சதம் விளாசியிருந்ததோடு தனஞ்சய டி சில்வாவும் பெறுமதியான ஆட்டத்தை வெளிக்காட்டி வந்திருந்தார். இதேவேளை, தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு சார்பாக சுழல் வீரரான கேசவ் மஹராஜ் அதிசிறப்பான முறையில் செயற்பட்டிருந்தார்.

 

 

முன்னதாக இப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணியின் தலைவர் சுரங்க லக்மால் காலி டெஸ்ட் போட்டியைப் போன்று இந்த டெஸ்ட் போட்டியிலும் இலங்கை அணிக்காக மைதான நிலைமைகளை கருத்திற் கொண்டு முதலில் துடுப்பாட்டத்தினை தேர்வு செய்திருந்தார்.  

இப்போட்டியினை நடாத்தும் SSC சர்வதேச மைதானத்திற்கு இது 42ஆவது டெஸ்ட் போட்டி என்பதால், ஆசிய நாடுகளில் அதிக டெஸ்ட் போட்டிகள் இடம்பெற்ற கிரிக்கெட் மைதானமாக இந்த டெஸ்ட் போட்டி மூலம் SSC சர்வதேச மைதானம் மாறியிருந்தது.

காலியில் இடம்பெற்ற இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இலங்கை அணியிடம் 278 ஓட்டங்களால் படுதோல்வியடைந்த தென்னாபிரிக்க அணி இந்தப் போட்டியில், வெற்றி பெற்றால் மாத்திரமே தொடரை சமநிலைப்படுத்த முடியும் என்ற காரணத்தினால் இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்த நிலையில் இலங்கை வீரர்களை எதிர்கொண்டிருந்தது.

அந்த வகையில், முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வேகப்பந்து சகலதுறை வீரர் வெர்னோன் பிலாண்டர் மற்றும் சைனமன் சுழல் வீரர் தப்ரைஸ்  ஷம்சி ஆகியோருக்குப் பதிலாக மத்திய வரிசை துடுப்பாட்ட வீரரான தியோனிஸ் டி ப்ரெய்ன், வேகப்பந்து வீச்சாளரான லுங்கி ன்கிடி ஆகியோர் அணிக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

தென்னாபிரிக்கா  

டீன் எல்கார், அய்டன் மார்க்ரம், ஹஷிம் அம்லா, டெம்பா பவுமா, பாப் டு ப்ளேசிஸ் (அணித் தலைவர்), தியோனிஸ் டி ப்ரெய்ன், குயின்டன் டி கொக், லுங்கி ன்கிடி, கேசவ் மஹராஜ், ககிஸோ றபாடா, டேல் ஸ்டெய்ன்

மறுமுனையில் அசத்தலான வெற்றியொன்றுடன்,தொடரில் 1-0 என முன்னிலை பெற்றிருக்கும் இலங்கை அணி சைனமன் சுழல் வீரரான லக்ஷான் சந்தகனுக்கு பதிலாக அகில தனஞ்சயவுக்கு வாய்ப்பு தந்திருந்தது.

இலங்கை அணி

திமுத் கருணாரத்ன, தனுஷ்க குணத்திலக்க, தனஞ்சய டி சில்வா, குசல் மெண்டிஸ், ரொஷேன் சில்வா, நிரோஷன் திக்வெல்ல, ரங்கன ஹேரத், தில்ருவான் பெரேரா, சுரங்க லக்மால் (அணித்தலைவர்), அகில தனஞ்சய

 

 

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக திமுத் கருணாரத்ன, தனுஷ்க குணத்திலக்க ஆகியோர் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தனர்.  

மிகவும் சிறந்த முறையில் தென்னாபிரிக்க பந்துவீச்சாளர்களை முகம் கொடுத்த இரண்டு வீரர்களும் அரைச்சதங்களை விளாசி மிகவும் உறுதியான ஆரம்ப விக்கெட் இணைப்பாட்டம் ஒன்றினை தமது தரப்புக்கு வழங்கினர். அந்தவகையில்  இலங்கை அணியின் முதல் விக்கெட்டுக்காக 116 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்ட நிலையில் முதல் நாளின் மதிய போசண இடைவேளைக்கு பின்னர் இலங்கை அணியின் முதல் விக்கெட் வீழ்த்தப்பட்டிருந்தது.

இலங்கை அணியின் முதல் விக்கெட்டாக கேசவ் மஹராஜின் சுழலில் வீழ்ந்த திமுத் கருணாரத்ன தனது 16 ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினை பூர்த்தி செய்த நிலையில்  53 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.

கருணாரத்னவை அடுத்து, தனது கன்னி டெஸ்ட் அரைச்சதத்தினை பூர்த்தி செய்த தனுஷ்க குணத்திலக்கவின் விக்கெட்டும் மீண்டும் சுழலில் அசத்திய கேசவ் மஹராஜினால் வீழ்ந்தது. ககிஸோ றபாடாவிடம் பிடியெடுப்பை வழங்கிய குணத்திலக்க 6 பெளண்டரிகள் அடங்கலாக மொத்தமாக 57 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதன் பின்னர் கேசவ் மஹராஜ் தனது விக்கெட் வேட்டையை மீண்டும் தொடர்ந்தார். இம்முறை குசல் மெண்டிஸ், அஞ்சலோ மெதிவ்ஸ் ஆகியோர் மஹராஜின் இலக்குகளாக மாறியிருந்தனர். குசல் மெண்டிஸ் 21 ஓட்டங்களுடனும், மெதிவ்ஸ் 10 ஓட்டங்களுடனும் மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.

எனினும், மெதிவ்ஸ் இப்போட்டியில் பெற்றுக் கொண்ட 10 ஓட்டங்கள் அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் 5,000 ஓட்டங்களை கடந்த ஒன்பதாவது இலங்கை துடுப்பாட்ட வீரர் என்ற மைல்கல்லை அடைய போதுமாக இருந்தது.

தொடர்ந்து, முதல் நாள் தேநீர் இடைவேளையை அடுத்து தனஞ்சய டி சில்வா, ரொஷேன் சில்வா ஜோடி பொறுமையான முறையில் துடுப்பாட ஐந்தாம் விக்கெட்டுக்காக அவர்களினால் அரைச்சத இணைப்பாட்டம் (54) ஒன்று பகிரப்பட்டிருந்தது.

 

பின்னர், இந்த இணைப்பாட்டத்தை ககிஸோ றபாடா தனது வேகத்தின் மூலம் தகர்த்தார்.  இதனால் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் சிரமத்தை காட்டி வரும் ரொஷேன் சில்வா 22 ஓட்டங்களுடன் மைதானத்தை விட்டு நடந்தார். இப்போட்டியோடு சேர்த்து தனது இறுதி ஒன்பது டெஸ்ட் இன்னிங்சுகளிலும் ஏழு தடவைகள் ரொஷேன் சில்வா வேகப்பந்து வீச்சாளர்களினாலேயே ஆட்டமிழக்க செய்யப்பட்டிருக்கின்றார்.

இலங்கை துடுப்பாட்ட வீரர்களுக்கு நெருக்கடியாக அமைந்த கேசவ் மஹராஜ், தனது சுழலின் முழுப்பலத்தையும் வெளிப்படுத்தி இலங்கை அணியின் பின்வரிசை விக்கெட்டுக்களில் நான்கை மேலதிகமாக சரித்தார். இதில், அரைச்சதம் ஒன்றுடன் நம்பிக்கை  தரும் வீரராக செயற்பட்ட தனஞ்சய டி சில்வாவின் விக்கெட்டும் அடங்கும். 109 பந்துகளை எதிர்கொண்டிருந்த தனஞ்சய டி சில்வா 8 பெளண்டரிகள் உள்ளடங்கலாக 60 ஓட்டங்களை பெற்றிருந்தார். அதேநேரம், எதிர்பார்க்கப்பட்ட வீரர்களில் ஒருவரான விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரரான நிரோஷன் திக்வெல்ல வெறும் 5 ஓட்டங்களுடன் சோபிக்கத் தவறியிருந்தார்.

இதன்படி முதல் நாள் ஆட்ட நிறைவில், இலங்கை அணி 86 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 277 ஓட்டங்களை தமது முதல் இன்னிங்சிற்காக குவித்திருந்தது.

 

 
 
 
 
 
 
இன்னும் ஒரு விக்கெட் மீதமிருக்க இரண்டாம் நாளில் துடுப்பாட எதிர்பார்க்கும் இலங்கை அணிக்கு களத்தில் நிற்கும் அகில தனஞ்சய (16*) மற்றும் ரங்கன ஹேரத் (5*) ஆகியோர் நம்பிக்கை தருகின்றனர்.

இன்றைய நாளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் அரைச்சதங்களோடு ஒரு கட்டத்தில் நல்ல நிலையில் காணப்பட்டிருந்த இலங்கை அணியின் துடுப்பாட்டத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த கேசவ் மஹராஜ் 116 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை கைப்பற்றி டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்திருந்தார். இதேநேரம், கேசவ் மஹராஜின் இந்த பந்துவீச்சு வெளிநாட்டு சுழல் வீரர் ஒருவரினால் இலங்கை அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் வைத்து இன்னிங்ஸ் ஒன்றில் வெளிக்காட்டப்பட்ட சிறந்த பந்துவீச்சாகவும் அமைந்தது.

ஸ்கோர் விபரம் 

Full Scorecard

 

Sri Lanka

 

277/9 & 0/0

(0 overs)

Result

0/0 & 0/0

(0 overs)

South Africa

 

Sri Lanka’s 1st Innings

Batting         R B
Danushka Gunathilake c K.Rabada b K.Maharaj 57 107
Dimuth Karunaratne c Q.De Kock b K.Maharaj 53 110
Dananjaya de Silva lbw by K.Maharaj 60 109
Kusal Mendis c K.Rabada b K.Maharaj 21 34
Angelo Mathews c F.Du Plesis b K.Maharaj 10 24
Roshen Silva b K.Rabada 22 46
Niroshen Dickwella c F.Du Plesis b K.Maharaj 5 9
Dilruwan Perera c L.Nigidi b K.Maharaj 17 24
Akila Dananjaya not out 0 0
Suranga Lakmal c A.Markram b K.Maharaj 0 4
Rangana Herath not out 0 0
Extras
11 (lb 2, nb 1, w ?
Total
277/9 (86 overs)
Fall of Wickets:
1-116 (D Karunaratne, 34.3 ov), 2-117 (D Gunathilaka, 36.3 ov), 3-153 (K Mendis, 48.3 ov), 4-169 (A Mathews, 54.3 ov), 5-223 (R Silva, 69.6 ov), 6-238 (N Dickwella, 72.4 ov), 7-247 (D de Silva, 74.2 ov), 8-264 (D Perera, 80.1 ov), 9-264 (S Lakmal, 80.5 ov)
Bowling O M R W E
Dale Steyn 15 3 47 0 3.13
Kagiso Rabada 16 3 37 1 2.31
Lungi Ngidi 13 1 48 0 3.69
Keshav Maharaj 32 6 116 8 3.63
Aiden Markram 7 1 17 0 2.43
Dean Elgar 3 1 10 0 3.33

South Africa’s 1st Innings

 
 

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

கேசவ் மகராஜ் சாதனை

 

 
 

கொழும்பில் நடைபெறும் இலங்கை தென்னாபிரிக்க அணிகளிற்கு எதிரான  இரண்டாவது டெஸ்டில் தென்னாபிரிக்க சுழற்பந்துவீச்சாளர் கேசவ் மகராஜ் 9 விக்கெட்களை வீழ்த்தி சாதனை புரிந்துள்ளார்.

keshav-maharaj-m.jpg

போட்டியின் முதல்நாளான நேற்று எட்டு விக்கெட்களை வீழ்த்தியிருந்த கேசவ் மகராஜ் இன்று ரங்கன ஹேரத்தை ஆட்டமிழக்க செய்து தனது ஒன்பதாவது விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.

இலங்கை அணிக்கு எதிராக 9 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் தனது சொந்த மண்ணிற்கு வெளியே அதிக விக்கெட்களை வீழ்த்திய தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனை உட்பட பல சாதனைகளை கேசவ் மகராஜ் ஏற்படுத்தியுள்ளார்.

37608715_10209903764025461_4321302837163

இதேவேளை இறுதி விக்கெட்டிற்காக சிறப்பாக துடுப்பெடுதாடிய ரங்கன ஹேரத் அகில தனஞ்செயவின் உதவியுடன்  இலங்கை அணி தனது முதல் இனிங்சில் 338 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இருவரும் இறுதி விக்கெட்டிற்காக 74 ஓட்டங்களை பெற்று இலங்கையை பலப்படுத்தியுள்ளனர்.

37488643_10209903764425471_3537785748788

தொடர்ந்து துடுப்பெடுத்தாடும் தென்னாபிரிக்க அணி 20 ஓட்டங்களிற்குள் தனது முதல் மூன்று விக்கெட்களையும் இழந்துள்ளது.

http://www.virakesari.lk/article/37011

Link to comment
Share on other sites

பின்வரிசையில் அசத்திய தனஞ்சய, ஹேரத் ஜோடி; துடுப்பாட்டத்தில் தடுமாறும் தென்னாபிரிக்கா

DSC_4454-696x464.jpg
 

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் கொழும்பு SSC சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் மதிய போசண இடைவேளையின் போது, இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸை அடுத்து தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் தென்னாபிரிக்க அணி 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறி வருகின்றது.

நேற்று (20) ஆரம்பமாகியிருந்த இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடியிருந்த இலங்கை அணி தமது முதல் இன்னிங்சுக்காக தனஞ்சய டி சில்வா, தனுஷ்க குணத்திலக்க மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோரின் அரைச்சத உதவியுடன் 277 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்திருந்தது.

 

களத்தில் அகில தனஞ்சய (14*), ரங்கன ஹேரத் (5*) ஆகியோர் ஆட்டமிழக்காது நிற்க தென்னாபிரிக்க அணியின் சுழல் பந்துவீச்சாளரான கேசவ் மஹராஜ் இலங்கை அணியில் நேற்று பறிபோன ஒன்பது விக்கெட்டுக்களில் 8 விக்கெட்டை தனக்கு சொந்தமாக்கி டெஸ்ட் போட்டிகளில் அவரது சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தார்.

இன்று போட்டியின் இரண்டாம் நாளில் ஒரு விக்கெட் மீதமாக இருந்த நிலையில் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணிக்கு அகில தனஞ்சய மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தாக்குதல் முறையில் (Aggressive) முறையில் துடுப்பாடி பெறுமதியான இணைப்பாட்டம் ஒன்றுக்கு அடித்தளம் போட்டிருந்தனர்.

இந்த பின்வரிசை வீரர்களினால் போடப்பட்ட அடித்தளம் வெற்றியளிக்க இலங்கை அணியின் இறுதி விக்கெட்டுக்காக 74 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்ட நிலையில், ரங்கன ஹேரத்தின் விக்கெட்டோடு இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்தது.

இதன்படி, இலங்கை அணி தமது முதல் இன்னிங்சுக்காக 104.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களினை குவித்திருந்தது. இலங்கை அணிக்காக இறுதிவரையில் ஆட்டமிழக்காது நின்ற அகில தனஞ்சய 7 பெளண்டரிகள் அடங்கலாக 91 பந்துகளுக்கு 43 ஓட்டங்களையும், ரங்கன ஹேரத் 35 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இன்றைய நாளில் பறிபோன இலங்கை அணியின் இறுதி விக்கெட்டையும் கைப்பற்றிய கேசவ் மஹராஜ், இந்த இன்னிங்ஸில் 129 ஓட்டங்களுக்கு மொத்தமாக 9 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து, எய்டன் மார்க்ரம் மற்றும் டீன் எல்கார் ஆகியோருடன் தென்னாபிரிக்க அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.

தென்னாபிரிக்க அணிக்கு அவர்களது துடுப்பாட்ட இன்னிங்ஸில் இரண்டாவது ஓவரை வீசிய அகில தனஞ்சய டீன் எல்காரின் விக்கெட்டினை கைப்பற்றி அதிர்ச்சி ஆரம்பத்தை வழங்கினார். தனஞ்சயவின் சுழலில் வீழ்ந்த எல்கார்  இரண்டாவது ஸ்லிப் களத்தடுப்பாளரான தனஞ்சய டி சில்வாவிடம் பிடிகொடுத்து ஓட்டங்கள் எதுவுமின்றி மைதானத்தை விட்டு நடந்தார்.

 

 

இதன்பின்னர், புதிய வீரராக வந்த தியோனிஸ் டி ப்ரெய்னின் விக்கெட்டையும்  விக்கெட் காப்பாளரான நிரோஷன் திக்வெல்ல பிடியெடுக்க வெறும் 3 ஓட்டங்களுடன் அகில தனஞ்சய கைப்பற்றினார்.

தொடர்ந்து,தென்னாபிரிக்க அணியின் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான எய்டன் மார்கமின் விக்கெட்டும் ரங்கன ஹேரத்தின் பந்துவீச்சில் வீழ்ந்தது. ஹேரத்தினால் LBW முறையில் ஆட்டமிழக்கச் செய்யப்பட்ட மார்க்ரம் மூன்றாம் நடுவரின் உதவியை நாடாமலே 7 ஓட்டங்களுடன் அரங்கினை விட்டு வெளியேறினார்.

இவ்வாறாக, தமது முக்கிய மூன்று துடுப்பாட்ட வீரர்களையும் இழந்திருக்கும் தென்னாபிரிக்க அணி போட்டியின் இரண்டாம் நாளுக்கான மதிய போசணத்தை நெருங்கும் போது 11 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை இழந்து 19 ஓட்டங்களுடன் பின்னடைவான நிலையில் காணப்படுகின்றது. களத்தில் ஹஷிம் அம்லா 7 ஓட்டங்களுடனும், அணித்தலைவர் பாப் டு ப்ளேசிஸ் ஒரு ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காது நிற்கின்றனர்.

http://www.thepapare.com/

3.png&h=42&w=42

124/10 * (34.5 ov)
Link to comment
Share on other sites

பந்துவீச்சு, துடுப்பாட்டம் ஆகிய இரண்டு துறைகளிலும் அசத்திய இலங்கை

awa-696x464.jpg
 

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் கொழும்பு SSC சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்திருக்கின்றது.

இன்றைய நாளுக்கான போட்டியில் அதிசிறப்பான முறையில் சுழல் பந்துவீச்சை வெளிக்காட்டி வந்த இலங்கை அணி தென்னாபிரிக்க அணியை அவர்களது முதல் இன்னிங்ஸில் 124 ஓட்டங்களோடு கட்டுப்படுத்தியிருந்ததோடு, துடுப்பாட்டத்திலும் சிறப்பாக செயற்பட்டு தென்னாபிரிக்க அணியைவிட 365 ஓட்டங்களால் முன்னிலையுடன் இப்போட்டியில் மிகவும் வலுவான நிலையில் காணப்படுகின்றது.

 

நேற்று (20) ஆரம்பமாகியிருந்த இந்த டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடியிருந்த இலங்கை அணி தமது முதல் இன்னிங்சுக்காக தனஞ்சய டி சில்வா, தனுஷ்க குணத்திலக்க மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோரின் அரைச்சத உதவியுடன் 277 ஓட்டங்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்த போது முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்திருந்தது.

களத்தில் அகில தனஞ்சய (14*), ரங்கன ஹேரத் (5*) ஆகியோர் ஆட்டமிழக்காது நிற்க தென்னாபிரிக்க அணியின் சுழல் பந்துவீச்சாளரான கேசவ் மஹராஜ் இலங்கை அணியில் நேற்று பறிபோன ஒன்பது விக்கெட்டுக்களில் 8 விக்கெட்டை தனக்கு சொந்தமாக்கி டெஸ்ட் போட்டிகளில் அவரது சிறப்பான பந்துவீச்சினை வெளிப்படுத்தியிருந்தார்.

இன்று போட்டியின் இரண்டாம் நாளில் ஒரு விக்கெட் மீதமாக இருந்த நிலையில் தமது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணிக்கு அகில தனஞ்சய மற்றும் ரங்கன ஹேரத் ஆகியோர் தாக்குதல் முறையில் (Aggressive) முறையில் துடுப்பாடி பெறுமதியான இணைப்பாட்டம் ஒன்றுக்கு அடித்தளம் போட்டிருந்தனர்.

இந்த பின்வரிசை வீரர்களினால் போடப்பட்ட அடித்தளம் வெற்றியளிக்க இலங்கை அணியின் இறுதி விக்கெட்டுக்காக 74 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பகிரப்பட்ட நிலையில், ரங்கன ஹேரத்தின் விக்கெட்டோடு இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் நிறைவுக்கு வந்தது.

இதன்படி, இலங்கை அணி தமது முதல் இன்னிங்சுக்காக 104.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 338 ஓட்டங்களினை குவித்திருந்தது. இலங்கை அணிக்காக இறுதிவரையில் ஆட்டமிழக்காது நின்ற அகில தனஞ்சய 7 பெளண்டரிகள் அடங்கலாக 91 பந்துகளுக்கு 43 ஓட்டங்களையும், ரங்கன ஹேரத் 35 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

இன்றைய நாளில் பறிபோன இலங்கை அணியின் இறுதி விக்கெட்டையும் கைப்பற்றிய கேசவ் மஹராஜ், இந்த இன்னிங்ஸில் 129 ஓட்டங்களுக்கு மொத்தமாக 9 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இதனையடுத்து, எய்டன் மார்க்ரம் மற்றும் டீன் எல்கார் ஆகியோருடன் தென்னாபிரிக்க அணி தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்தது.

தென்னாபிரிக்க அணிக்கு அவர்களது துடுப்பாட்ட இன்னிங்ஸில் இரண்டாவது ஓவரை வீசிய அகில தனஞ்சய டீன் எல்காரின் விக்கெட்டினை கைப்பற்றி அதிர்ச்சி ஆரம்பத்தை வழங்கினார். தனஞ்சயவின் சுழலில் வீழ்ந்த எல்கார்  இரண்டாவது ஸ்லிப் களத்தடுப்பாளரான தனஞ்சய டி சில்வாவிடம் பிடிகொடுத்து ஓட்டங்கள் எதுவுமின்றி மைதானத்தை விட்டு நடந்தார்.

 

இதன்பின்னர், புதிய வீரராக வந்த தியோனிஸ் டி ப்ரெய்னும், ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான எய்டன் மார்க்ரமும் மீண்டும் சிறப்பாக செயற்பட்ட அகில தனஞ்சய, ரங்கன ஹேரத் ஆகியோரின் சுழலை தாக்குப்பிடிக்க முடியாமல் மிகவும் சொற்பமான ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தனர்.

இதனால், முன்வரிசை துடுப்பாட்ட வீரர்கள் மூவரை இழந்த நிலையில் இரண்டாம் நாளின் மதிய போசணத்தை தென்னாபிரிக்க அணியினர் அடைந்தனர். மதிய போசணத்திற்கு பின்னர் தொடர்ந்த ஆட்டத்தில் புதிய துடுப்பாட்ட வீரர்களாக இருந்த தென்னாபிரிக்க அணித்தலைவர் பாப் டு ப்ளேசிஸ், ஹஷிம் அம்லா ஆகியோர் வேகமான முறையில் துடுப்பாடி தமது தரப்பின் ஓட்டங்களை அதிகரிக்க முனைந்திருந்தனர்.

இவர்களது வேகமான துடுப்பாட்டத்தின் காரணமாக தென்னாபிரிக்க அணியின் நான்காம் விக்கெட்டுக்காக 55 ஓட்டங்கள் பகிரப்பட்டது. இலங்கை அணிக்கு சற்று நெருக்கடியாக இருந்த இந்த இணைப்பாட்டத்தை தில்ருவான் பெரேரா அம்லாவின் விக்கெட்டோடு முடிவுக்கு கொண்டு வந்தார். ஹஷிம் அம்லா 19 ஓட்டங்களுடன் ஓய்வறை திரும்பிய போதிலும், இந்த 19 ஓட்டங்களின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் 9,000 ஓட்டங்களை கடந்த மூன்றாவது தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்ட வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக மாறியிருந்தார்.

அம்லாவின் விக்கெட்டை அடுத்து சிறிது நேரத்தில் அணித்தலைவர் பாப் டு ப்ளேசிஸ் விக்கெட்டும் பறிபோனது. போராட்டமான துடுப்பாட்ட இன்னிங்ஸ் ஒன்றை வெளிப்படுத்திய டு ப்ளேசிஸ் 51 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 8 பெளண்டரிகள் ஒரு சிக்ஸர் அடங்கலாக 48 ஓட்டங்களைக் குவித்து அரைச்சதம் ஒன்றைப் பெற தவறியிருந்தார்.

பின்னர், தென்னாபிரிக்காவின் மத்திய வரிசை வீரர்கள் அகில தனஞ்சய, தில்ருவான் பெரேரா ஆகியோரின் சுழலை முகம்கொடுப்பதில் மீண்டும் சிரமத்தை எதிர்கொண்டனர். இதனால், தென்னாபிரிக்க அணி 34.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 124 ஓட்டங்களை மாத்திரமே தமது முதல் இன்னிங்சுக்காக பெற்றுக் கொண்டது.

தென்னாபிரிக்க அணியின் மத்திய வரிசையில் குயின்டன் டி கொக் மாத்திரம் குறிப்பிடும் படியாக 32 ஓட்டங்களை குவிக்க ஏனையோர் மிகவும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிக்காட்டியிருந்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பாக அகில தனஞ்சய 52 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி திறமையை வெளிக்காட்டியிருந்ததோடு, தில்ருவான் பெரேரா 4 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தார்.

இதனையடுத்து, 214 ஓட்டங்கள் என்ற ஆரோக்கியமான முன்னிலையோடு தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை அணி, ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன, தனுஷ்க குணத்திலக்க ஆகியோரின் அரைச்சத உதவியுடன் இரண்டாம் நாள் நிறைவில் 34 ஓவர்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்து 151 ஓட்டங்களுடன் காணப்படுகின்றது.

இலங்கை அணியின் இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தில், இப்போட்டியில் இரண்டாவது தடவையாக அரைச்சதம் கடந்த தனுஷ்க குணத்திலக்க 68 பந்துகளுக்கு 2 சிக்ஸர்கள் 6 பெளண்டரிகள் அடங்கலாக 61 ஓட்டங்களைப் பெற்றிருக்க, இத்தொடரில் நான்காவது தடவையாக அரைச்சதத்தை பதிவு செய்திருக்கும் திமுத் கருணாரத்ன 59 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது காணப்படுகின்றார்.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில், ஏற்கனவே சுழலில் அசத்திய கேசவ் மஹராஜ் இம்முறையும் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமது இரண்டாம் இன்னிங்ஸின் மூலம் தற்போது 365 ஓட்டங்களால் முன்னிலை பெற்றிருக்கும் இலங்கை அணி போட்டியின் நாளைய மூன்றாம் நாளில் இந்த முன்னிலையை இன்னும் அதிகரித்து தென்னாபிரிக்காவுக்கு கடும் சவாலான வெற்றி இலக்கை நிர்ணயிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோர் விபரம்

Full Scorecard

 

Sri Lanka

 

338/10 & 151/3

(34 overs)

Result

124/10 & 0/0

(0 overs)

South Africa

 

Sri Lanka’s 1st Innings

Batting         R B
Danushka Gunathilake c K.Rabada b K.Maharaj 57 107
Dimuth Karunaratne c Q.De Kock b K.Maharaj 53 110
Dananjaya de Silva lbw by K.Maharaj 60 109
Kusal Mendis c K.Rabada b K.Maharaj 21 34
Angelo Mathews c F.Du Plesis b K.Maharaj 10 24
Roshen Silva b K.Rabada 22 46
Niroshen Dickwella c F.Du Plesis b K.Maharaj 5 9
Dilruwan Perera c L.Nigidi b K.Maharaj 17 24
Akila Dananjaya not out 43 91
Suranga Lakmal c A.Markram b K.Maharaj 0 4
Rangana Herath c Dean Elgar b Keshav Maharaj 35 68
Extras
15 (b 4, lb 2, nb 1, w ?
Total
338/10 (104.1 overs)
Fall of Wickets:
1-116 (D Karunaratne, 34.3 ov), 2-117 (D Gunathilaka, 36.3 ov), 3-153 (K Mendis, 48.3 ov), 4-169 (A Mathews, 54.3 ov), 5-223 (R Silva, 69.6 ov), 6-238 (N Dickwella, 72.4 ov), 7-247 (D de Silva, 74.2 ov), 8-264 (D Perera, 80.1 ov), 9-264 (S Lakmal, 80.5 ov), 10-338 (R.Herath, 104.1 ov)
Bowling O M R W E
Dale Steyn 17 3 60 0 3.53
Kagiso Rabada 20 3 55 1 2.75
Lungi Ngidi 14.2 1 54 0 3.80
Keshav Maharaj 41.1 10 129 9 3.14
Aiden Markram 8.4 1 24 0 2.86
Dean Elgar 3 1 10 0 3.33

South Africa’s 1st Innings

Sri Lanka’s 2nd Innings

Batting         R B
MD Gunathilaka c Dean Elgar b Keshav Maharaj 61 68
D. Karunaratne not out 59 92
D.De.Silva lbw by Keshav Maharaj 0 3
BKG Mendis (runout) Aiden Markram 18 27
A Mathews not out 12 15
Extras
1 (nb 1)
Total
151/3 (34 overs)
Fall of Wickets:
1-91 (D Gunathilaka, 18.3 ov), 2-102 (De Silva, 20.2 ov), 3-136 (K Mendis, 28.4 ov)
Bowling O M R W E
KA Maharaj 17 0 90 2 5.29
Kagiso Rabada 4 0 22 0 5.50
Aiden Markram 3 1 9 0 3.00
Theunis de Bruyn 3 0 13 0 4.33
Dale Steyn 4 1 11 0 2.75
Lungi Ngidi 2 1 4 0 2.00
Dean Elgar 1 0 2 0 2.00

South Africa’s 2nd Innings

 

போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நாளை தொடரும்.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

இமாலய வெற்றியிலக்கை நிர்ணயித்தது இலங்கை

 

 
 

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸட் போட்டியின் தென்னாபிரிக்க அணி ஒரு விக்கெட்டினை இழந்து 490 என்ற ஓட்ட எண்ணிக்கையை நோக்கி துடுப்பெடுத்தாடி வருகின்றது. 

இதன்படி இன்று காலை எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமான போட்டியின் மூன்றாம் நாள் அட்டத்தை 151 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. 

இதன்படி இன்றைய தினம் களமிறங்கிய திமுத் கருணாரத்ன 85 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை லுங்கி நிட்ஜிவினுடைய பந்து வீச்சில் டீகொக்கிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். இவரையடுத்து நிதானமாக ஆட்டத்தை வெளிப்படுத்தய அஞ்சலோ மெத்தியூஸ் 71 ஓட்டங்களுடன் மஹாராஜினுடைய பந்தில் ஆட்டமிழந்தார். 

cri1.jpg

இறுதியாக இலங்கை அணி மொத்தமாக 81 ஓவர்களை எதிர்கொண்டு ஐந்து விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

தென்னாபிரிக்க அணி சார்பாக பந்துவீச்சில் கேஷவ் மஹாராஜ் 154 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்க‍ளையும் லுங்கி நிட்ஜி ஒன்பது ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினார். 

இதன்  பிரகாரம் தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 490 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட ஓட்ட எண்ணிக்கையை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பத்த தென்னாபிரிக்க அணி ஒரு விக்கெட்டினை இழந்து 42 ஒட்டங்களுடன் துடுப்பெடுத்தாடி வருகின்றது. 

http://www.virakesari.lk/article/37068

 

3.png&h=42&w=42

124 & 71/1 * (19.6 ov, target 490)
 
Link to comment
Share on other sites

வெற்றிக்கு இன்னும் 351 ஓட்டங்கள் ; தொடரை கைப்பற்றுமா இலங்கை?

 

 
 

இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 490 என்ற வெற்றியிலக்கினை நோக்கி துடுப்பெடுத்தாடி வரும் தென்னாபிரிக்க அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றுக் கொண்டுள்ளது.

ran.jpg

இதன்படி இன்று காலை எஸ்.எஸ்.சி. மைதானத்தில் ஆரம்பமான போட்டியின் மூன்றாம் நாள் அட்டத்தை 151 ஓட்டங்களுடன் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களை பெற்று துடுப்பாட்டத்தை நிறுதிக் கொண்டது.

cri2.jpg

இலங்கை அணி சார்பாக இரண்டாவது இன்னிங்ஸில் திமுத் கருணாரத்ன 12 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 85 ஓட்டங்களையும் அஞ்சலோ மெத்தியூஸ் ஏழு நான்கு ஓட்டங்கள் அடங்களாக 71 ஓட்டங்களையும் தனுஷ்க குணலதிக்க 2 ஆறு ஒட்டங்கள் 6 நான்கு ஓட்டங்கள் அடங்களாக 61 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணி சார்பாக கேஷவ் மஹாராஜ் 154 ஓட்டங்களுக்கு மூன்று விக்கெட்டுக்க‍ளையும் லுங்கி நிட்ஜி ஒன்பது ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன்  பிரகாரம் தென்னாபிரிக்க அணிக்கு வெற்றியிலக்காக 490 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட ஓட்ட எண்ணிக்கையை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பத்த தென்னாபிரிக்க அணி ஐந்து விக்கெட்டினை இழந்து 139 ஓட்டங்களை பெற்றிருந்தவேளை மூன்றாம் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்தது.

அந்த வகையில் தென்னாபிரிக்க அணி 23 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை தனது முதலாவது விக்கெட்டினை பறிகொடுத்தது. அதன்படி 14 ஓட்டங்களை பெற்றிருந்த அடீன் மர்க்ரம் ரங்கன ஹேரத்தினுடைய பந்து வீச்சிழ் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து தென்னாபிரிக்க அணிக்கு அதிர்ஷ்ட காற்று வீச ஆரம்பித்தது காரணம் அதிக படியாக ஆட்டமிழப்புக்கள் இலங்கைக்கு கைநழுவிப் போனது.

மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய தெனுஷ் டிபுரின் மற்றும் டெய்ன் எல்கர் ஜோடி 57 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டது. அதன் பின்னர் 80 ஓட்டங்களை தென்னாபிரிக்க அணி பெற்றிருந்த வேளை டெய்ன் எல்கர் தில்ருவான் பெரேராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இவரையடுத்து களமும்புகுந்த அஸீம் அம்லா அதிக நேரம் தாக்குப் படிக்காமல் 6 ஒட்டங்களுடன் ஹேரத்தினுடைய பந்தில் பொல்ட் முறையில் ஆட்டமிழந்தார். இதன் பின்னர் தென்னாபிரிக்க அணி வீரர்களின் விக்கெட்டுக்கள் அடுத்தடுத்து சரிவை எதிர்கொண்டன.

அம்லாவுக்கு அடுத்தபடியாக களம்புகுந்த அணித் தலைவர் டூப்பிளஸ்ஸி 7 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் அகில தனஞ்சயவின் பந்து வீச்சில் மெத்தியூஸிடம் பிடிகொடுத்து வெளியேற களம்புகுந்த கேஷவ் மஹாராஜ் எதிர்கொண்ட முதல் பந்திலேயே எதுவித ஓட்டங்களையும் பெறாது டக்கவுட் முறையில் ஆட்டமிழந்தார்.

இதன் காரணமாக அகில தனஞ்சயவுக்கு ஹெட்ரீக் வாய்ப்பொன்று காத்திருந்தது. இருப்பினும் அந்த வாய்ப்பினை தெம்ப பவுமா கலைத்தார். 

இறுதியாக தென்னாபிரிக்க அணி நேற்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் ஐந்து விக்கெட்டுக்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. தெனுஷ் டிபுரினும் 45 ஓட்டங்களுடனும் தெம்ப பவுமா 14 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.

இலங்கை அணி சார்பில் ரங்கன ஹேரத் 54 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் அகில தனஞ்சய 35 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும் தில்றுவான் பெரேரா 38 ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதன் பிரகாரம் தென்னாபிரிக்க அணிக்கு இன்னும் வெற்றி பெறுவதற்கு 351 ஓட்டங்கள் மாத்திரம் உள்ளது. நாளை போட்டியின் நான்காம் நாளாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

http://www.virakesari.lk/article/37073

Link to comment
Share on other sites

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா: 2ஆவது டெஸ்டின் 3ஆவது நாள்
 
 

இலங்கை, தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் 2ஆவது போட்டியின் 3ஆவது நாள், கொழும்பு எஸ்.எஸ்.சி விளையாட்டு மைதானத்தில் இன்று (22) இடம்பெற்றது. அதன்போது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. (படப்பிடிப்பு: குஷான் பத்திராஜ)

image_16f3fc1111.jpgimage_c98a587d7d.jpgimage_ec73948101.jpgimage_6df83ffd26.jpgimage_49d6b4d1d7.jpgimage_9951af23b6.jpgimage_5c4972d3e6.jpgimage_2b7e654759.jpgimage_08a18bec7a.jpgimage_767bee1b41.jpgimage_860e3502ab.jpgimage_7a43b803fb.jpgimage_ece2d9b421.jpg

  •  

இலங்கை எதிர் தென்னாபிரிக்கா: 2ஆவது டெஸ்டின் 3ஆவது நாள்

http://www.tamilmirror.lk/பிரதான-செய்திகள்/இலங்கை-எதிர்-தென்னாபிரிக்கா-2ஆவது-டெஸ்டின்-3ஆவது-நாள்/46-219384

Link to comment
Share on other sites

இலங்கை வசமானது தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடர் 

 

 
 

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 2 ஆவது டெ்ஸ்ட் போட்டியில் இலங்கை அணி 199 ஓட்டங்களால் வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரை 2 -0 எனக் கைப்பற்றியது.

cricket.jpg

இலங்கைக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது. 

இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது போட்டி காலியில் இடம்பெற்றது. இப் போட்டியில் இலங்கை அணி 278 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.

இந்நிலையில் கொழும்பில் இடம்பெற்ற 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி 199 ஓட்டங்களால் வெற்றிபெற்று 2 போட்டிகள் கொண்ட தொடரில் 2-0 என தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/37102

Link to comment
Share on other sites

மாய சுழலினால் தென்னாபிரிக்காவை வைட் வொஷ் செய்த இலங்கை

Sri-lanka-Cricket-2018-696x464.jpg
 

கொழும்பு SSC சர்வதேச மைதானத்தில் நடைபெற்று முடிந்துள்ள சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டியில், தென்னாபிரிக்காவை 199 ஓட்டங்களால் படுதோல்வியடையச் செய்த இலங்கை கிரிக்கெட் அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரினையும் 2-0 என வைட்வொஷ் செய்து கைப்பற்றியிருக்கின்றது.

 

கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியிருந்த இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தமது முதலாவது இன்னிங்ஸிற்காக 338 ஓட்டங்களினையும், தென்னாபிரிக்க அணி அவர்களது முதல் இன்னிங்ஸிற்காக 124 ஓட்டங்களினையும் குவித்திருந்தது. இதனையடுத்து, போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பாடிய இலங்கை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 275 ஓட்டங்களை பெற்று தமது துடுப்பாட்டத்தினை நிறுத்திய பின்னர், போட்டியின் நேற்றைய மூன்றாம் நாளில் தென்னாபிரிக்க அணிக்கு வெற்றி இலக்காக 490 ஓட்டங்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.

இந்த கடின வெற்றி  இலக்கினை அடைய தமது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி மூன்றாம் நாள் நிறைவில் 139 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்டிருந்தது. களத்தில் தியோனிஸ் டி ப்ரெய்ன் 45 ஓட்டங்களுடனும், டெம்பா பவுமா 14 ஓட்டங்களுடனும் நின்றிருந்தனர்.

இன்னும் 351 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் தமது இரண்டாம் இன்னிங்ஸினை இன்று போட்டியின் நான்காம் நாளில் தென்னாபிரிக்க அணி தொடர்ந்தது. தியோனிஸ் டி ப்ரெய்ன் போட்டி தொடங்கி சிறிது நேரத்திலேயே தனது அரைச் சதத்தினை பூர்த்தி செய்தார்.  இது அவருக்கு கன்னி டெஸ்ட் அரைச் சதமாகவும் இருந்தது. மறுமுனையில் டெம்பா பவுமாவும் சிறந்தமுறையில் செயற்பட்டு அவருடைய 11ஆவது டெஸ்ட் அரைச்சதத்தினை கடந்தார்.

 

இவர்களின் இணைப்பாட்டத்தினால் தென்னாபிரிக்க அணியின் ஆறாம் விக்கெட்டுக்காக இலங்கை அணிக்கு அழுத்தம் தரும் வகையில் ஒரு இணைப்பாட்டம் உருவாகியிருந்தது. 123 ஓட்டங்கள் வரையில் நீடித்த இந்த இணைப்பாட்டத்தினை இடதுகை சுழல் வீரரான ரங்கன ஹேரத் டெம்பா பெவுமாவின் விக்கெட்டோடு முடிவுக்கு கொண்டு வந்தார். இலங்கையின் விக்கெட் காப்பாளரான நிரோஷன் திக்வெல்லவிடம் பிடிகொடுத்த டெம்பா பவுமா மொத்தமாக 63 ஓட்டங்களினை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பவுமாவினை அடுத்து தென்னாபிரிக்க அணி நான்காம் நாளுக்கான மதிய போசனத்தை அடையும் போது புதிய துடுப்பாட்ட வீரராக வந்த நம்பிக்கை தரக்கூடிய குயின்டன் டி கொக்கின் விக்கெட்டினையும் ஹேரத்தின் சுழலினால்  வெறும் 8 ஓட்டங்களுடன் இழந்தது.

தொடர்ந்து, நான்காம் நாளுக்கான மதிய போசனத்தினை 7 விக்கெட்டுக்களை இழந்து 246 ஓட்டங்களுடன் தடுமாற்றமான நிலையில் அடைந்த தென்னாபிரிக்கா, மதிய போசனத்தின் பின்னர், தமது எஞ்சியிருந்த மூன்று விக்கெட்டுக்களையும் மேலதிகமான 44 ஓட்டங்களுக்குள் பறிகொடுத்தது.

இதன்படி, 86.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தமது இரண்டாவது இன்னிங்ஸில் 290 ஓட்டங்களை மாத்திரமே பெற்ற தென்னாபிரிக்க அணி பாரிய ஓட்ட வித்தியாசம் ஒன்றில் இலங்கை அணியுடன் தோல்வியினை தழுவியது.

தென்னாபிரிக்க அணியின் துடுப்பாட்டத்தில் தியோனிஸ் டி ப்ரெய்ன் அவரது கன்னி டெஸ்ட் சதத்தினை பூர்த்தி செய்து ஆறுதலளித்தார். 232 பந்துகளினை எதிர்கொண்ட டி ப்ரெய்ன் மொத்தமாக 101 ஓட்டங்களினை குவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை அணியின் பந்துவீச்சில் ரங்கன ஹேரத் மொத்தமாக 98 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது தரப்பின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பினை வழங்கியதோடு, தில்ருவான் பெரேரா மற்றும் அகில தனன்ஜய ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சுருட்டியிருந்தனர்.

போட்டியின் ஆட்ட நாயகன் விருதும், தொடர் நாயகன் விருதும் இத்தொடரில் ஒரு சதம், மூன்று அரைச்சதங்கள் என்பவற்றை விளாசி மொத்தமாக 356 ஓட்டங்களை குவித்த இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான திமுத் கருணாரத்னவிற்கு வழங்கப்பட்டது.

நான்கு நாட்களிலேயே இந்த டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றிருக்கும் இலங்கை அணி சுரங்க லக்மால் தலைமையில், தாம் விளையாடிய இறுதி மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றியினை பதிவு செய்திருக்கின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.  

தென்னாபிரிக்க அணியுடனான டெஸ்ட் தொடரினை வெற்றிகரமாக நிறைவு செய்திருக்கும் இலங்கை அணி, அடுத்ததாக அவர்களுடன் இடம்பெறவிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் மோதுகின்றது.

அந்த வகையில் இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகள் இடையிலான ஒரு நாள் தொடர் ஜூலை 29ஆம் திகதி தம்புள்ளையில் நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகின்றது.

ஸ்கோர் விபரம்

Full Scorecard

 

Sri Lanka

 

338/10 & 275/5

(81 overs)

Result

124/10 & 290/10

(86.4 overs)

South Africa

Srilanka won by 199 runs

Sri Lanka’s 1st Innings

Batting         R B
Danushka Gunathilake c K.Rabada b K.Maharaj 57 107
Dimuth Karunaratne c Q.De Kock b K.Maharaj 53 110
Dananjaya de Silva lbw by K.Maharaj 60 109
Kusal Mendis c K.Rabada b K.Maharaj 21 34
Angelo Mathews c F.Du Plesis b K.Maharaj 10 24
Roshen Silva b K.Rabada 22 46
Niroshen Dickwella c F.Du Plesis b K.Maharaj 5 9
Dilruwan Perera c L.Nigidi b K.Maharaj 17 24
Akila Dananjaya not out 43 91
Suranga Lakmal c A.Markram b K.Maharaj 0 4
Rangana Herath c Dean Elgar b Keshav Maharaj 35 68
Extras
15 (b 4, lb 2, nb 1, w ?
Total
338/10 (104.1 overs)
Fall of Wickets:
1-116 (D Karunaratne, 34.3 ov), 2-117 (D Gunathilaka, 36.3 ov), 3-153 (K Mendis, 48.3 ov), 4-169 (A Mathews, 54.3 ov), 5-223 (R Silva, 69.6 ov), 6-238 (N Dickwella, 72.4 ov), 7-247 (D de Silva, 74.2 ov), 8-264 (D Perera, 80.1 ov), 9-264 (S Lakmal, 80.5 ov), 10-338 (R.Herath, 104.1 ov)
Bowling O M R W E
Dale Steyn 17 3 60 0 3.53
Kagiso Rabada 20 3 55 1 2.75
Lungi Ngidi 14.2 1 54 0 3.80
Keshav Maharaj 41.1 10 129 9 3.14
Aiden Markram 8.4 1 24 0 2.86
Dean Elgar 3 1 10 0 3.33

South Africa’s 1st Innings

Batting         R B
Aiden Markram lbw by Rangana Herath 7 20
Dean Elgar c Dananjaya De Silva b Akila Dhananjaya 0 4
Theunis de Bruyn c Niroshan Dickwella b Akila Dhananjaya 3 8
Hashim Amla c Kusal Mendis b Dilruwan Perera 19 58
Faf du Flessis c Niroshan Dickwella b Dilruwan Perera 48 51
Temba Bavuma c Kusal Mendis b Dilruwan Perera 11 20
Quinton de Kock lbw by Akila Dhananjaya 32 31
KA Maharaj c Dimuth Karunaratne b Akila Dhananjaya 2 4
Kagiso Rabada c Anjelo Mathews b Dilruwan Perera 1 10
Dale Steyn lbw by Akila Dhananjaya 0 2
Lungi Ngidi not out 0 2
Extras
1 (nb 1)
Total
124/10 (34.5 overs)
Fall of Wickets:
1-4 (D Elgar, 1.2 ov), 2-8 (T Bruyn, 3.2 ov), 3-15 (A Markram, 8.1 ov), 4-70 (H Amla, 21 ov), 5-85 (Du Plessis, 25 ov), 6-114 (T Bavuma, 30.3 ov), 7-119 (K Maharaj, 31.5 ov), 8-124 (De Kock, 33.2 ov), 9-124 (D Steyn, 33.4 ov), 10-124 (K Rabada, 34.5 ov)
Bowling O M R W E
Dilruwan Perera 12.5 1 40 4 3.20
Akila Dhananjaya 13 2 52 5 4.00
R. Herath 9 1 32 1 3.56

Sri Lanka’s 2nd Innings

Batting         R B
MD Gunathilaka c Dean Elgar b Keshav Maharaj 61 68
D. Karunaratne c Quinton de Kock b Lungi Ngidi 85 136
D.De.Silva lbw by Keshav Maharaj 0 3
BKG Mendis (runout) Aiden Markram 18 27
A Mathews c Faf du Flessis b Keshav Maharaj 71 147
R. Silva not out 32 99
N. Dickwella not out 7 7
Extras
1 (nb 1)
Total
275/5 (81 overs)
Fall of Wickets:
1-91 (D Gunathilaka, 18.3 ov), 2-102 (De Silva, 20.2 ov), 3-136 (K Mendis, 28.4 ov), 4-199 (D Karunarathne, 48.1 ov), 5-263 (A Mathews, 79.1 ov)
Bowling O M R W E
KA Maharaj 40 4 154 3 3.85
Kagiso Rabada 8 0 42 0 5.25
Aiden Markram 7 1 18 0 2.57
Theunis de Bruyn 5 0 20 0 4.00
Dale Steyn 11 2 30 0 2.73
Lungi Ngidi 9 5 9 1 1.00
Dean Elgar 1 0 2 0 2.00

South Africa’s 2nd Innings

Batting         R B
Dean Elgar lbw by D.Perera 37 80
Aiden Markram lbw by R.Herath 14 24
Theunis de Bruyn b R.Herath 101 232
Hashim Amla b R.Herath 6 18
Faf du Flessis c Anjelo Mathews b A.Dhananjaya 7 13
KA Maharaj lbw by A.Dhananjaya 0 1
Temba Bavuma c N.Dickwella b R. Herath 63 98
Quinton de Kock lbw by R.Herath 8 12
Kagiso Rabada c A.Mathews b D.Perera 18 37
Dale Steyn c D.Gunathilake b R.Herath 6 6
Lungi Ngidi not out 4 4
Extras
26 (b 16, lb 5, nb 4, w 1)
Total
290/10 (86.4 overs)
Fall of Wickets:
1-23 (AK Markram, 8.1 ov), 2-80 (D Elgar, 23.3 ov), 3-100 (HM Amla, 30.1 ov), 4-113 (F du Plessis, 35.1 ov), 5-113 (KA Maharaj, 35.2 ov), 6-236 (T Bavuma, 73.1 ov), 7-246 (Q de Kock, 75.5 ov), 8-280 (TB de Bruyn, 84.5 ov), 9-280 (K Rabada, 85.2 ov),10-290 (DW Steyn, 86.5 ov)
Bowling O M R W E
R. Herath 32.5 5 98 6 3.02
Dilruwan Perera 30 4 90 2 3.00
Akila Dhananjaya 19 2 67 2 3.53
Suranga Lakmal 2 0 8 0 4.00
Dananjaya de Silva 2 0 5 0 2.50
Danushka Gunathilaka 1 0 1 0 1.00
 

முடிவு – இலங்கை அணி 199 ஓட்டங்களால் வெற்றி

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

இலங்கை அணியின் வெற்றியின் இரகசியம்

SAvsSL-final-test-696x464.jpg
 

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக SSC மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை அணி 199 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்று, தொடரை 2-0 என கைப்பற்றியது.

கடந்த காலங்களில் பல தோல்விகளுக்கும், சவால்களுக்கும் முகங்கொடுத்து வந்த இலங்கை அணியின் திடீர் வெற்றிக்கு என்ன காரணம்? ஆடுகளங்கள்தான் காரணம் என்றால், இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் தென்னாபிரிக்க அணியின் புவ்மா மற்றும்  தீனுஸ் டி பிரைன் ஆகியோரின் 123 ஓட்ட, இணைப்பாட்டம் எப்படி பெறப்பட்டது என்ற கேள்வி எம்முன் தோன்றுகிறது. அணியின் வெற்றிக்கு ஆடுகளங்கள் ஓரளவு காரணமாக இருந்தாலும், வீரர்களின் முழு முயற்சியே வெற்றிக்கு முக்கிய காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

 

மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டித் தொடர்களில் இலங்கை அணியின் ஆதிக்கம் சற்று குறைந்திருந்தாலும், டெஸ்ட் தொடர்களில் அவர்களது வெளிப்பாடு அணிக்கு மிகப்பெரிய நம்பிக்கை கொடுப்பதாகவே இருந்தது. 2017 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து எட்டு டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ள இலங்கை அணி நான்கு தொடர்களில் வெற்றியீட்டியும், 2 தொடர்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளதுடன், இரண்டு தொடர்களை சமநிலை செய்துள்ளது. இதில் முக்கியமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் முதன்முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றிய அணி என்ற பெருமையை, தினேஷ் சந்திமால் தலைமையிலான இலங்கை அணி பெற்றதுடன், இறுதியாக மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற வேகப்பந்துக்கு சாதகமான மைதானங்களில் போட்டியிட்டு, தொடரை 1-1 என சமப்படுத்தியமை அதிகம் பேசப்பட்ட தொடர்களாக அமைந்திருந்தன.

எனினும் இதற்கு மேலும், தென்னாபிரிக்க அணிக்கு எதிரான தொடரின் வெற்றி அதிகமாக பேசப்படுவதற்கான காரணம் கடந்த கால வரலாறுகள் தான்  என்றால் அதில் எவ்வித சந்தேகங்களும் இல்லை. தென்னாபிரிக்க அணியுடன் பத்து தொடர்களில் விளையாடியுள்ள இலங்கை அணி இரண்டு தொடர்களில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளது. இதில் ஒரு தொடரில் சமநிலையும் பெற்றிருந்தது. இந்த நிலையில் குறிப்பிட்ட மோசமான வரலாற்றை மாற்றியமைக்குமா? என்ற எதிர்பார்ப்பின் வெளிப்பாடு இன்று இலங்கை அணிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்துள்ளது. அதுவும் தரப்படுத்தலில் இரண்டாவது இடத்திலிருக்கும் தென்னாபிரிக்க அணியை, அனுபவங்கள் குறைந்த பல வீரர்களுடன் இலங்கை அணி வீழ்த்தியிருப்பது கட்டாயமாக பேசப்பட வேண்டிய ஒரு விடயம்தான்.

இவ்வாறு கடின உழைப்புடன் முன்னேறிய இலங்கை அணி வெற்றிபெற இந்த காரணங்கள் மிகப்பெரிய பங்காற்றியிருந்தன.

1. நம்பிக்கை அளித்த திமுத் கருணாரத்னவின் துடுப்பாட்டம்

இலங்கை டெஸ்ட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமான திமுத் கருணாரத்னவின் துடுப்பாட்டம் தொடர் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இவர் 2 டெஸ்ட் போட்டிகளிலும் 118.66 என்ற சராசரியில் 356 ஓட்டங்களை குவித்திருந்தார். காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இரண்டு அணிகளின் துடுப்பாட்ட வீரர்களும் தடுமாறிய நிலையில், முதல் இன்னிங்ஸில் ஆட்டமிழக்காமல் 158 ஓட்டங்களை குவித்ததுடன், இரண்டாவது இன்னிங்ஸில் 60 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றியை தனியாளாக இருந்து பெற்றுக்கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து இன்று முடிவுக்கு வந்த SSC டெஸ்ட் போட்டியில், முதல் இன்னிங்ஸில், தென்னாபிரிக்க அணியின் கேஷவ் மஹராஜ் பந்து வீச்சில் அசத்திய நிலையில், குறித்த இன்னிங்ஸில் 53 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த கருணாரத்ன, அடுத்த இன்னிங்ஸில் 85 ஓட்டங்களை பெற்று, சதத்தை தவறவிட்டார். எனினும் வெற்றிக்கான ஓட்டங்களை குவித்த இவர், தென்னாபிரிக்க தொடரில் தொடர்ச்சியாக நான்கு அரைச்சதங்களை விளாசி அசத்தினார். இதன்படி தொடர்ச்சியாக அரைச்சதம் அடித்த, இலங்கை அணியின் ஐந்தாவது வீரராகவும் இவர் பதிவானார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் உபாதை காரணமாக விளையாடாமல் இருந்த திமுத் கருணாரத்ன, உபாதையிலிருந்து திரும்பியதுடன், தனியொருவராக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்ததுடன், இலங்கை அணிக்கு தொடர் வெற்றியையும் பெற்றுக்கொடுத்தமை பாராட்டப்பட வேண்டிய விடயமாகும்.

2. ஆடுகளங்களுக்கு ஏற்ப நேர்த்தியான அணித் தெரிவு

இலங்கை அணி தொடரை 2-0 என கைப்பற்றியமைக்கு பிரதான காரணமாக அணியின் இறுதி பதினொருவர் தெரிவு செய்யப்பட்டமையை குறிப்பிட முடியும்.

 

 

அதாவது காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி, ரங்கன ஹேரத், டில்ருவான் பெரேரா மற்றும் லக்ஷான் சந்தகன் ஆகிய முதற்தர சுழல் பந்து வீச்சாளர்களுடன், ஒரே ஒரு வேகப்பந்து வீச்சாளர் சுரங்க லக்மாலை இணைத்திருந்தது. அணியின் தேர்வுக்கு ஏற்ப முதல் டெஸ்ட்டின் 17 விக்கெட்டுகள் சுழல் பந்து வீச்சாளர்களால் பெறப்பட்டது. முக்கியமாக முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாபிரிக்க அணியை 73 ஓட்டங்களுக்கு சுழல் பந்து வீச்சாளர்கள் சுருட்டியிருந்தனர்.

ஆனால் தென்னாபிரிக்க அணி தங்களுடைய மூன்று முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களை அணிக்குள் கொண்டுவந்தமையானது ஓரளவு உதவினாலும் (10 விக்கெட்டுகள்), வெற்றிக்கான வாய்ப்பினை ஏற்படுத்தவில்லை. இரண்டாவது டெஸ்ட்டில் துடுப்பாட்ட வீரர் ஒருவரை அணிக்குள் கொண்டு வந்த தென்னாபிரிக்க அணி சுழல் பந்து வீச்சாளர் ஷம்சியை கைவிட்டது. இந்த மாற்றமானது தென்னாபிரிக்க அணியின் நம்பிக்கைக்கு முட்டுக்கட்டையாகவும் இருந்தது. SSC மைதானத்தில் இலங்கை சுழல் பந்து வீச்சாளர்கள் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்த, தென்னாபிரிக்க அணி தங்களது பிழையை உணர்ந்துகொண்டு, ஏமாற்றத்துக்கு முகங்கொடுத்தது,

இலங்கை அணி தங்களுடைய முதல் போட்டியைப் போன்று அதே திட்டத்தில் களமிறங்கினாலும், இளம் சுழல் பந்துவீச்சாளர் அகில தனஞ்சயவை (7 விக்கெட்டுகள்) களமிறக்கி அதிலும் வெற்றிகண்டது.

3. சுராங்க லக்மாலின் சிறப்பான தலைமைத்துவம்

இலங்கை டெஸ்ட் அணித்தலைவர் தினேஷ் சந்திமாலின் தடையை தொடர்ந்து தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள சுரங்க லக்மால் அணியை சிறப்பாக வழி நடத்துவதை காணக்கூடியதாக இருந்தது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியிலும் சரி, காலியில் நடைபெற்ற தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலும் சரி தலைவர் என்ற ரீதியில் அவரது ஒத்துழைப்பை செவ்வனே செய்துமுடித்திருந்தார்.

காலியில் சுழல் பந்துக்கு சாதகமான மைதானத்தில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றிய லக்மால், துடுப்பாட்டத்திலும் முதல் இன்னிங்ஸில் 33 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்து, தலைவர் என்ற பொறுப்பை வெளிக்காட்டினார். தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் சுழல் பந்துவீச்சாளர்கள் மீது நம்பிக்கை வைத்த இவர், இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீசாமல் அணியை வழிநடத்தினார்.

இதேபோன்று SSC மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்  போட்டியிலும் சுழல் பந்து வீச்சாளர்களை வைத்து வியூகம் அமைத்த லக்மால், இரண்டாவது இன்னிங்ஸில் மாத்திரம் வெறும் இரண்டு ஓவர்களை வீசியிருந்தார். அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தாலும், பந்தை தனது கையில் எடுக்காமல், ஆடுகளத்துக்கு ஏற்ப பந்து வீச்சாளர்களை கையாண்டமை அவருடைய தலைமைத்துவத்தை காட்டுவதுடன், அணியின் வெற்றிக்கும் வழிவகுத்தது.

4. தென்னாபிரிக்காவை அடக்கியாண்ட சுழல் பந்துவீச்சாளர்கள்

இந்த தொடர் முழுவதும் தங்களது சுழல் மாயாஜாலத்தால் தென்னாபிரிக்காவை கதிகலங்க வைத்த இலங்கையின் சுழல் பந்துவீச்சாளர்கள் 40 விக்கெட்டுகளில், மொத்தமாக 37 விக்கெட்டுகளை தங்கள் வசப்படுத்தியிருந்தனர். இதில் காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் லக்மால் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

துடுப்பாட்ட வீரர்களுக்கு எவ்வித வாய்ப்பையும் கொடுக்காத சுழல் பந்து வீச்சாளர்கள் தென்னாபிரிக்க அணியை 73 ஓட்டங்களுக்கு சுருட்டியதுடன், 126 மற்றும் 124 என்ற குறைந்த ஓட்டங்களுக்கும் அவர்களை  திணறச் செய்தமை குறிப்பிடத்தக்க அம்சங்களாகும்.

 

 

முதல் டெஸ்ட் போட்டியில் டில்ருவான் பெரேரா அசத்த, அவருக்கு ரங்கன ஹேரத் மற்றும் சந்தகன் ஆகியோர் ஒத்துழைப்பை வழங்கினர். இதனையடுத்து நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் தனஞ்சய டி சில்வா முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி நம்பிக்கை கொடுக்க, ரங்கன ஹேரத் இரண்டாவது இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது அனுபவத்தை வெளிக்காட்டியிருந்தார்.

இந்த தொடரில் டில்ருவான் பெரேரா மொத்தமாக 16 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், ரங்கன ஹேரத் 12 விக்கெட்டுகளையும், அகில தனஞ்சய ஒரு போட்டியில் 7 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தமை இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சின் வலிமையை டெஸ்ட் போட்டிகளில் எடுத்துக்காட்டியுள்ளது.

http://www.thepapare.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.