Jump to content

மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் இல்லாத உலகக் கோப்பையின் பெஸ்ட் லெவன்! #WorldCup


Recommended Posts

மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் இல்லாத உலகக் கோப்பையின் பெஸ்ட் லெவன்! #WorldCup

 

ரொனால்டோ..? மெஸ்ஸி..? நெய்மர்..? யாருமே இல்ல இவர்தான் இந்த உலகக் கோப்பையின் சூப்பர் ஸ்டார். 19 வயதுதான். ஆனால், தன் தடத்தை மிக அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டார் கிலியன் எம்பாப்பே

மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் இல்லாத உலகக் கோப்பையின் பெஸ்ட் லெவன்! #WorldCup
 

'ஃபிஃபாவின் உலகக் கோப்பை லெவன்' என ஒரு புகைப்படம் வைரலாகி இருக்கிறது. பாலினியோ, லோவ்ரன், ஆஷ்லி யங், நெய்மர் என ஏகப்பட்ட சர்ச்சையான தேர்வுகள். இது ஒருபுறமிருக்க, 'கோல்டன் பூட் ஜெயிச்ச ஹேரி கேன் எங்க' எனக் கதறுகிறார்கள் இங்கிலாந்து ரசிகர்கள். கோல்டன் பூட் வாங்கிய அவரும் இல்லை, கோல்டன் க்ளவ் வாங்கிய கோர்ட்வாவும் இல்லை. ஆனால், 'இந்த லெவன் ஃபிஃபாவின் வலைதளத்தில் பதிவிடப்படவே இல்லை. யாரோ கிளப்பிவிட்டது என்கிறது' ஒரு தரப்பு. சரி அது உண்மையோ இல்லையோ, நம் பெஸ்ட் லெவன் என்ன? பார்த்துவிடுவிடுவோம். 

உலகக் கோப்பை

முதலில் யார் யார் இந்த அணியில் இருக்கிறார்கள் என்பதைப் பார்க்கும் முன், எதன் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்வது என்பதை அலசுவது முக்கியம். இங்கிலாந்து ரசிகர்கள் சொல்வதுபோல் கோல்டன் பூட் விருது வென்றதற்காக ஒரு வீரரை சிறந்த அணியில் சேர்த்துவிட முடியுமா? நிச்சயம் இல்லை. கோல்களின் எண்ணிக்கையோ, கோப்பை வென்றதையோ வைத்து மட்டும் ஒரு வீரரின் செயல்பாடை அளவிட முடியாது. 

 

 

ஒவ்வொரு போட்டியிலும் அந்த வீரர் எப்படியான பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார், அணியின் ஆட்டத்தில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறார் என்பவை முக்கியமாக கவனிக்கப்படவேண்டிய விஷயங்கள். எண்ட் ப்ராடக்ட் முக்கியம்தான். ஆனால், அவை மிகமுக்கியமானவை. அதனால் ரிசல்ட் மூன்றாம் பட்சம்தான். இதுதான் இந்த அணியைத் தேர்வு செய்ததில் நம் நிலைப்பாடு. ஒரே அணியைச் சேர்ந்த பல வீரர்கள் வரக்கூடாது என்பதில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதனால் இந்த அணிக்கும், FIFA தேர்ந்தெடுக்கும் அணிக்கும், மற்றவர்கள் தேர்ந்தெடுக்கும் அணிக்கும் வித்தியாசங்கள் இருக்கலாம், இருக்கும்.

கோர்ட்வா

கோல்கீப்பர் : திபாட் கோர்ட்வா (பெல்ஜியம்)

அதிக கிளீன் ஷீட்களுக்காக `கோல்டன் க்ளவ்' வென்ற கோர்ட்வாதான் நம் கோல்கீப்பர் சாய்ஸ். லோரிஸ் 2 கிளீன் ஷீட்கள் வைத்திருந்தாலும், save செய்ததில் அவரை மிஞ்சுகிறார் இந்த செல்சீ வீரர். இந்த உலகக் கோப்பையில் 27 Save செய்து முதலிடத்தில் இருப்பதும் அவர்தான். இவருக்கு இனையாக டென்மார்க் கோல்கீப்பர் கேஸ்பர் ஸ்மெய்சல் சிறப்பாகவே செயல்பட்டார். ஆனால், பிரேசில் அணிக்கு எதிரான அந்த பெர்ஃபாமன்ஸ் போதும், கோர்ட்வா இந்த இடத்தைப் பிடிப்பதற்கு!

டிஃபண்டர்கள்

டியாகோ லக்ஸல்ட்

லெஃப்ட் பேக் : டியாகோ லக்ஸல்ட் (உருகுவே)

சொல்லப்போனால் இந்தத் தொடரில் லெஃப்ட் பேக் வீரர்கள் யாரும் மிகச் சிறந்த பெர்ஃபாமன்ஸ் கொடுக்கவில்லை. மார்செலோ, ஜோர்டி ஆல்பா போன்றவர்களின் செயல்பாடு சுமார்தான். மற்றபடி இந்த பொசிஷனில் சிறப்பாக ஆடியது லூகாஸ் ஹெர்னாண்டஸ், லக்ஸல்ட், குரோஷியாவின் ஸ்ட்ரினிச் ஆகியோர். ஹெர்னாண்டஸ் அட்டாக்கில் சிறப்பாக செயல்பட்டாலும், டிஃபன்ஸிவ் ஏரியாவில் கொஞ்சம் குறைகள் இருந்தது. அந்த டிஃபன்ஸிவ் குறைகள் லக்ஸல்ட் ஆட்டத்தில் பெரிதாக இல்லை. 4 போட்டிகளில் 2 க்ளீன் ஷீட்கள். 1 கோலும் அடித்துள்ளார். ஃபிரான்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் முடிந்தவரை எம்பாப்பேவை கட்டுக்குள் வைத்திருந்து சிறப்பாக செயல்பட்டார். 

வரேன்

சென்டர் பேக் : ரஃபேல் வரேன் (ஃபிரான்ஸ்)

தொடக்கத்தில் ஏரியல் பால்களில் ஃபிரான்ஸ் அணி தடுமாறியிருந்தாலும், தன்னுடைய சிறப்பான வழிநடத்துதலால் அணிக்கு புது நம்பிக்கை பாய்ச்சினார் வரேன். மிகவும் இளம் டிஃபன்ஸிவ் யூனிட். அதை 25 வயதான அவர்தான் வழிநடத்தவேண்டும். அந்த நெருக்கடியை மிகச் சிறப்பாகச் சமாளித்தார்  இந்த ரியல் மாட்ரிட் நாயகன். இந்தத் தொடரால் இவரது மதிப்பு பல மடங்கு உயரும். 4 கிளீன் ஷீட்களோடு டிஃபன்ஸுக்கு மட்டுமல்லாமல், அரையிறுதியில் வின்னிங் கோலடித்து, அனைத்து ஏரியாக்களிலும் உதவினார். 

உலகக் கோப்பை

சென்டர் பேக் : யெர்ரி மினா (கொலம்பியா)

இந்த இடத்துக்குப் பல வீரர்கள் தகுதியானவர்கள். குரோஷியாவின் விடா, பிரேசிலின் தியாகோ சில்வா, உருகுவே கேப்டன் கோடின் என எல்லோருமே மிகச் சிறப்பாக செயல்பட்டனர். ஆனால், கொலம்பியா அணியை பல நேரங்களில் ஆபத்பாந்தவனாகக் காப்பாற்றிய இளம் டெர்ரி மினாதான் நமது சாய்ஸ். முக்கியமான கடைசி கட்டங்களில் கோலடித்து, இந்த உலகக் கோப்பையில் அதிக கோல்கள் (3) அடித்த டிஃபண்டர் என்ற பெருமையைப் பெற்றுள்ள இந்த இளம் வீரருக்கு பார்சிலோனா அணியில் மிகச் சிறந்த எதிர்காலம் காத்திருக்கிறது. 

ட்ரிப்பியர்

ரைட் பேக் : கீரன் ட்ரிப்பியர்

இந்தத் தொடரின் மிகச் சிறந்த டிஃபண்டர். கடந்த ஆண்டுவரை பெரிதாக இங்கிலாந்து அணிக்கு ஆடவேயில்லை. ஆனால், கிடைத்த வாய்ப்புகளையெல்லாம் சிறப்பாகப் பயன்படுத்திக்கொண்டார். அதுவும் விங் பேக் ரோலில், ஒரு விங்கர் போலவே விளையாடினார். இங்கிலாந்து வீரர்கள் அவ்வப்போது பேட்டரி டவுன் ஆனாலும், 120 நிமிடங்களும் ஓடிக்கொண்டே இருந்தார். தன் ஒவ்வொரு ரன்னிலும், எதிரணியைக் கலங்கடித்தார். கிராஸ்கள், கார்னர்கள் எல்லாவற்றிலும் எதிரணிக்கு சொப்பனமாக விளங்கினார். அரையிறுதியில் ஒரு சூப்பர் கோலும் அடித்து அசத்தினார். 

நடுகள வீரர்கள்
 

கான்டே

டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்டர் : என்கோலோ கான்டே (ஃபிரான்ஸ்)

'கான்டே பாரு, கான்டே பாரு.. மெஸ்ஸியைத் தடுத்த கான்டே பாரு; என்ற ரேஞ்சுக்கு ஃபிரான்ஸ் வீரர்களே உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு இவரைப் புகழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அப்படியொரு பெர்ஃபாமன்ஸ். கடந்த 3 ஆண்டுகளாக கொஞ்சம் கூட தொய்வில்லாத ஆட்டம். இரண்டு பாக்சுகளுக்குமிடையே சளைக்காமல் இன்ஜின் போல் ஓடுகிறார். ரவுண்ட் ஆஃப் 16 போட்டியில் மெஸ்ஸியை, அரையிறுதியில் ஹசார்ட், டி ப்ருய்னையெல்லாம் தன் கன்ட்ரோலிலேயே வைத்திருந்தார் கான்டே. ஃபிரான்ஸின் வெற்றிக்கு இந்த செல்சீ வீரரின் பங்களிப்பு ஈடு இணையற்றது. 

மோட்ரிச்

அட்டாகிங் மிட்ஃபீல்டர் : லூகா மோட்ரிச் (குரோஷியா)

2018 உலகக் கோப்பையின் சிறந்த வீரர். 32 வயதிலும் சளைக்காமல் ஓடி பட்டையைக் கிளப்பினார் மோட்ரிச். சில வீரர்களின் செயல்பாடுகள் ரசிகர்களை inspire செய்யும். ஆனால், ஒருசில ஜாம்பவான்களின் ஆட்டம்தான் சக வீரர்களை ஈர்க்கும். அப்படியொரு ஆட்டம் ஆடினார்  இந்த ரியல் மாட்ரிட் மாஸ்ட்ரோ. சில போட்டிகளில் அட்டாக்கிங் மிட்ஃபீல்டர் ரோலில், சில போட்டிகள் டிஃபன்ஸிவ் மிட்ஃபீல்டர் ரோலில் என கலந்துகட்டி அடித்தார். அர்ஜென்டினா அணிக்கெதிரான இவரது ஆட்டம், வெற்றியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த அணியின் எழுச்சியையும் குரோஷியாவுக்குப் பரிசாக வழங்கியது. விளைவு - குரோஷியா தங்கள் தேசத்து கால்பந்தின் வரலாற்றை திருத்தி எழுதியிருக்கிறது. 

கொடினியோ

அட்டாகிங் மிட்ஃபீல்டர் : ஃபிலிப் கொடினியோ (பிரேசில்)

'நெய்மர்... நெய்மர்... நெய்மர்' என்று களமிறங்கிய பிரேசில் அணிக்கு ஆபத்வாந்தவனாக அமைந்தது கொடினியோதான். ஸ்விட்சர்லாந்து அணிக்கெதிராக இவரது கோல்தான் அணியைக் காப்பாற்றியது. கோஸ்டா ரிகாவின் டிஃபன்ஸை உடைக்க முடியாமல் 90 தடுமாறிய அணியை ஸ்டாப்பேஜ் டைமில் வெற்றி பெற வைத்ததும் இவர்தான். பிரேசிலுக்கு எதிரான காலிறுதியில், நெய்மர் இடது பக்கம் வித்தை காட்டுகிறேன் என்று பொசஷனை இழக்க, இவர் கடைசி வரை கோல் போஸ்டை டார்கெட் செய்துகொண்டே இருந்தார். பாஸிங், ட்ரிபிளிங் என எல்லா ஏரியாவிலும் அந்த அணிக்கு நம்பிக்கை கொடுத்தார். 

முன்கள வீரர்கள்
 

ஈடன் ஹசார்ட்

லெஃப்ட் விங் : ஈடன் ஹசார்ட் (பெல்ஜியம்)

ஹசார்டின் ட்ரிபிளிங் எதிரணியின் டிஃபன்ஸையெல்லாம் திக்குமுக்காட வைத்தது. டைரக்ட் பிளே, கவுன்ட்டர் அட்டாக் என ஒவ்வொரு ஏரியாவிலும் தன் அணியின் பெர்ஃபாமன்ஸை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றார் செல்சீயின் நம்பிக்கை நாயகன். கொம்பனியின் காயத்தால் கேப்டன் பதவியை ஏற்று அணியை சிறப்பாக வழிநடத்தவும் செய்தார். குறிப்பாக ஜப்பான் அணிக்கெதிரான போட்டியில் 2 கோல்கள் பின்தங்கியிருந்த தன் அணியை மிகச் சிறந்த கம்பேக் கொடுக்கவைத்தார் ஹசார்ட். 2 கோல்கள், 2 அசிஸ்ட்கள் செய்தவர், 3 போட்டிகளில் ஆட்டநாயகன் விருது வென்று அசத்தினார். 

எம்பாப்பே

ரைட் விங் : கிலியன் எம்பாப்பே (ஃபிரான்ஸ்)

ரொனால்டோ..? மெஸ்ஸி..? நெய்மர்..? யாருமே இல்லை, இவர்தான் இந்த உலகக் கோப்பையின் சூப்பர் ஸ்டார். 19 வயதுதான். ஆனால், தன் தடத்தை மிக அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டார் எம்பாப்பே. கால்பந்தின் கடவுள் பீலே செய்த சாதனைகளை தன் முதல் உலகக் கோப்பையில் இவரும் நிகழ்த்தியுள்ளார். அர்ஜென்டினா அணிக்கெதிராக இவர் அடித்த 2 கோல்கள், அதுவரை மந்தமாகப் பயணித்த ஃபிரான்ஸ் அணியின் கியரை மாற்றியது. அதுமட்டுமல்லாமல், 19 வயதில்... உலகக் கோப்பை ஃபைனலில் கோல்... இதற்கு மேல் என்ன வேண்டும்? தொடரின் சிறந்த இளம் வீரர் விருது பெற்றிருக்கும் எம்பாப்பே, அடுத்த உலகக் கோப்பைக்குள் ஜாம்பவான் அந்தஸ்து பெற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. 

கிரீஸ்மேன்

ஸ்ட்ரைக்கர் : ஆன்டோனி கிரீஸ்மேன் (ஃபிரான்ஸ்)

முதல் போட்டிக்குப் பிறகு கிரீஸ்மேன் நம்பர் 10 ரோலில்தான் விளையாடினார். இளமை நிறைந்த அந்த அணியின் முன்களத்தைத் தன் அனுபவத்தால் மிகச் சிறப்பாக வழிநடத்தினார். இவர் அடித்த 4 கோல்கள், இந்த அணியில் இவருக்கான இடத்தைப் பெற்றுத் தரவில்லை. ஃபிரான்ஸ் அணியின் ஆட்டத்தில் இவர் ஏற்படுத்திய தாக்கம்! எதிரணி வேகமாக முன்னேறும்போது ஆட்டத்தின் வேகத்தைக் குறைப்பது, எம்பாப்பேவை, டிஃபன்ஸில் பங்கெடுக்க வைத்தது என பொசஷன் தங்களிடம் இல்லாதபோது மிகச்சிறப்பாக ஆட்டத்தில் ஒரு தாக்கம் ஏற்படுத்தினார் கிரீஸ்மேன். அவரது இந்த குவாலிடிதான் கோல்டன் பூட் வென்ற ஹேரி கேனை அடுத்த இடத்துக்குத் தள்ளி அணியில் இடம் இல்லாமல் செய்துவிட்டது. 

இவர்கள் தவிர்த்து, காஸ்பர் ஸ்மெய்சல், லூகாஸ் ஹெர்னாண்டஸ், ஹேரி கேன், பால் போக்பா, கெவின் டி ப்ருய்னே, டீகோ கோடின் போன்ற வீரர்களும் குறிப்பிடப்படவேண்டியவர்கள்.

https://www.vikatan.com/news/sports/131286-fifa-world-cup-best-xi-consists-none-of-the-worlds-top-trio.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.