Sign in to follow this  
நவீனன்

அமெரிக்கா- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் ஆரம்பம்

Recommended Posts

அமெரிக்கா- சிறிலங்கா கடற்படைகளின் கூட்டுப் பயிற்சி திருகோணமலையில் ஆரம்பம்

 

US-Naval-Special-Warfare-Forces-sl-navy-அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர்ப் படைப்பிரிவைச் சேர்ந்த படையினர், சிறிலங்கா கடற்படையினருடன் இணைந்து திருகோணமலையில் கூட்டு பயிற்சி ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.

கூட்டு ஒருங்கிணைந்த பரிமாற்ற பயிற்சி ஒத்திகை என்ற பெயரில், இந்தக் கூட்டுப் பயிற்சி இடம்பெற்று வருகிறது.

அமெரிக்க கடற்படையின் சிறப்பு போர்ப் படையினருடன், சிறிலங்கா கடற்படையின் 4 ஆவது அதிவேக தாக்குதல் படகு அணி மற்றும், சிறப்பு படகு  படையணி ஆகியவற்றைச் சேர்ந்த படையினர் இந்தக் கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

திருகோணமலையில் உள்ள சிறப்பு படகு படையணி பயிற்சி பாடசாலையில் இந்த கூட்டுப் பயிற்சி ஆரம்ப  நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.

US-Naval-Special-Warfare-Forces-sl-navy.

இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பயிற்சி மற்றும் தேவைப்பாடுகள் குறித்த பரஸ்பர புரிந்துணர்வு மற்றும் உடன்பாடுகளுக்கு கூட்டுப் பயிற்சித் திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

நிபுணத்துவ திறன் விருத்தி மற்றும் இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையிலான ஆற்றலை பரிமாறிக் கொள்ளும் நோக்கிலான இந்த கூட்டுப் பயிற்சி நான்கு வாரங்களுக்கு நீடிக்கவுள்ளது.

 

http://www.puthinappalakai.net/2018/07/19/news/31960

Share this post


Link to post
Share on other sites

புலி அழிப்புன்னு தமிழரைக் கொன்று குவிக்க.. மொத்த நாட்டையும் கூறுபோட்டு இப்படி வெளிநாடுகளுக்கு தாரை வார்ப்பதிலும்... தமிழர்களின் தாயகத்தையும் சிங்களவர்களின் தாயகத்தையும் பிரித்துப் போட்டு.. தனித்தனிய சந்தோசமாக.. வாழ்ந்திருக்கலாம்.. அமைதியான வழியில்.

கடனும் வந்திருக்காது.. அந்நியனுக்கு விலைபோக வேண்டியும் வந்திருக்காது.

சொந்த நாட்டின் குடிமக்களையும்.. குடிமனைகளையும்.. அழிக்க.. அந்நிய துணையை நாடப் போய்.. இப்ப மொத்த நாட்டையும் அந்நியர்களுக்கு கூறுபோட தயக்கமின்றி செயற்படும் சிங்களப் பேரினவாதம்.. தமிழர்களின் நிலத்தை தமிழர்களிடம் வழங்க மட்டும்.. மறுப்பது தான் வேடிக்கையாக உள்ளது. 😒

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this