Jump to content

இங்கிலாந்து எதிர் இந்தியா டெஸ்ட் தொடர் செய்திகள்


Recommended Posts

2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அதிரடி ஆட்டம்: திணறுகிறது இந்தியா

 

 
ANDERSONjpg

2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்தின் அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி திணறி வருகிறது. அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை பறி கொடுத்துள்ளது இந்திய அணி.

பர்மிங்ஹாமில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு அருகே சென்ற நிலையில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதனால் 5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இந்திய அணி 0-1 என பின்தங்கியது.

 

இரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஆட்டம் முழுவதும் மழையால் பாதிக்கப்பட்டது. 2ம் நாள் டாஸ் சுண்டப்பட்டு ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இந்தியாவின் முன்னணி வீரர்கள் சொதப்பினர். கேப்டன் விராட் கோலி 23 ரன்னிலும், ரகானே 18 ரன்னிலும் வெளியேறினர். இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார். தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி வீரர்கள் குறைந்த ரன்களே எடுத்த நிலையில், பேர்ட்ஸ்டோ- வோக்ஸ் ஜோடி நிதானமாக ரன்களை சேர்த்தது. பேர்ஸ்டோ 93 ரன்களில் ஆட்டமிழக்க, வோக்ஸ் நிலைத்து நின்று சதம் அடித்தார்.

மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 357 ரன்கள் எடுத்திருந்தது. வோக்ஸ் 120 ரன்களுடனும், சாம் குரன் 22 ரன்களுடனும் ஆட்மிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் 4வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. வோக்ஸ், சாம் கரன் இருவரும் அதிரடியாக ஆடினர். சாம் குரன் 40 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹர்திக் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார்.

அப்போது இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்திருந்தது. இத்துடன் இங்கிலாந்து முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. கிறிஸ் வோக்ஸ் 137 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகியோர் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

சாம் கரன் 40 ரன்களில் ஹர்திக் பாண்டியா பந்து வீச்சில் அவுட் ஆனார். இங்கிலாந்து அணி 289 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது.

இதையடுத்து இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. தொடக்க ஆட்டக்காரர் முரளி விஜய் ரன் ஏதும் எடுக்காமல் ஜேம்ஸ் ஆண்டர்சன் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சிறிது நேரத்தில் லோகேஷ் ராகுலும் பெவிலியன் திரும்ப, 13 ரன்கள் எடுத்த நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்தது.

https://tamil.thehindu.com/sports/article24671225.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

 

6.png&h=42&w=42

107 & 66/6 * (32 ov)
 
Link to comment
Share on other sites

  • Replies 195
  • Created
  • Last Reply

லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் படுதோல்வி இங்கிலாந்து 2-0 என முன்னிலை

 
அ-அ+

லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா அணி 159 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்சிஸ் படுதோல்வியடைந்ததால் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. #ENGvIND

 
 
 
 
லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் படுதோல்வி இங்கிலாந்து 2-0 என முன்னிலை
 
லண்டன் :
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்னில் சுருண்டது.
 
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 396 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இந்தியா 289 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கியது. முதல் இன்னிங்சில் சொதப்பிய தொடக்க வீரர்களான முரளி விஜய் (0), லோகேஷ் ராகுல் (10) இந்த இன்னிங்சிலும் சொதப்பினார்கள்.
 
அதன்பின் வந்த புஜாரா 17 ரன்னிலும், ரகானே 13 ரன்னிலும் வெளியேறினார்கள். விராட் கோலி 17 ரன்னில் வெளியேற, அடுத்த பந்தில் தினேஷ் கார்த்திக் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதனால் இந்தியா 61 ரன்கள் அடிப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை இழந்து தத்தளித்தது.
 
201808122221392990_1_5468._L_styvpf.jpg
 
7-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியா உடன் அஸ்வின் ஜோடி சேர்ந்தார்.  இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதும் இந்த ஜோடி நீண்ட நேரம் நிலைக்கவில்லை, அணியின் ஸ்கோர் 117-ஆக இருந்த போது வோக்ஸ் வீசிய பந்தில் பாண்டியா 26 ரன்களில் எல்.பி.டபள்யூ முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
 
அடுத்து களமிறங்கிய குல்தீப் யாதவ் மற்றும் ஷமி இருவரும் ரன் ஏதும் அடிக்காமல் ஆண்டர்சன் தாக்குதலில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். 
 
இதனால் இந்திய அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 130 மட்டுமே அடித்து இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவியது. 
 
இறுதிவரை ஓரளவு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஷ்வின் 33 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். 
 
இன்ங்கிலாந்து அணி தரப்பில் ஆண்டர்சன் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் தலா 4  விக்கெட்டுக்களை கைப்பற்றினர். வோக்ஸ் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 5 போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலை வகிக்கிறது. #ENGvIND

https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/12222139/1183478/England-won-by-an-innings-and-159-runs.vpf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு தடவையும் அஸ்வினே கூடுதலான ஓட்டங்கள் எடுத்துள்ளார்.

Link to comment
Share on other sites

”வீரர்களைத் தேர்வுசெய்ததில் தவறு உள்ளது” - லார்ட்ஸ் தோல்விகுறித்து கேப்டன் கோலி

 

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், 'உமேஷ் யாதவ்-வுக்குப் பதிலாக குல்தீப் யாதவ்வை எடுத்தது தவறான முடிவு' என்று கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். 

விராட் கோலி

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி மிக மோசமான தோல்வியடைந்துள்ளது. ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தனர்.

 

 

அதனால், இந்திய அணி 100 ரன்களை எட்டுவதற்கே திணறியது. இந்தப் போட்டியில் தோல்வியடைந்ததுகுறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, 'இந்திய அணி வீரர்களைத் தேர்வுசெய்ததில் தவறு உள்ளது. உமேஷ் யாதவ்-வுக்குப் பதிலாக குப்தீப் யாதவ்வை எடுத்தது தவறான முடிவாகும். ஜோரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். நாங்கள் விளையாடிய முறையை நினைத்து பெருமைப்பட முடியவில்லை. இந்தப் போட்டி, நாங்கள் தோற்பதற்கு உரிய போட்டிதான். மழை பெய்ததால், மைதானத்தின் தன்மை மாறியுள்ளது என்று காரணம் சொல்ல முடியாது.

 

 

இங்கிலாந்து அணியினர், மைதானத்தில் வெறித்தனமாக விளையாடினார்கள். அதனால், அவர்கள் வெற்றி பெறுவதற்குத் தகுதியானவர்கள். நீங்கள், விளையாடிக்கொண்டிருந்தால், உண்மையில் மைதானத்தைப் பற்றி சிந்தனை செய்ய மாட்டீர்கள். உட்கார்ந்திருந்து மைதானத்தைப் பற்றி யோசிக்க முடியாது. சில நேரங்களில் மைதானங்கள் நமக்கு ஒத்துழைப்பு அளிக்காது. நாம், சரியான இடத்தில் பந்து வீசினாலும், சரியாக பவுன்ஸ் ஆகாது. இன்னும் ஒருசில நாள்களில் என்னுடைய உடல்நலம் சரியாகிவிடும் என்று நம்பிக்கை உள்ளது' என்று தெரிவித்தார். 

https://www.vikatan.com/news/sports/133783-virat-kohil-conceded-team-combination-was-wrong.html

Link to comment
Share on other sites

வலைப்பயிற்சியில் கூட தினேஷ் கார்த்திக் பேட்டில் பந்து படவில்லை: தோல்வி குறித்து கங்குலி வேதனை

 

 
dk

பிராட் பந்தில் எல்.பி. ஆன தினேஷ் கார்த்திக்.| ராய்ட்டர்ஸ்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 2 நாட்களில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்ததையடுத்து இந்திய அணி மீது பரிதாபத்துடன் கூடிய வேதனை எதிர்வினைகள் வெளியாகி வருகின்றன.

2வது இன்னிங்சில் 130 ரன்களுக்கு இந்திய அணி சுருண்டு ஒரு இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களில் படுதோல்வியடைந்தது, பிராட், ஆண்டர்சன் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற கிறிஸ் வோக்ஸ் 137 ரன்களையும் பேர்ஸ்டோ 93 ரன்களையும் எடுத்து இந்திய அணியிடமிருந்து ஆட்டத்தை தொலை தூரம் கொண்டு சென்றனர்.

 
 

இந்த டெஸ்ட்டில் மொத்தம் 82.2 ஓவர்கள்தான் இந்திய அணி தாக்குப் பிடித்தது, ஆண்டர்சன், பிராட் கூட்டணி 14 இந்திய விக்கெட்டுகளை சட்டைப்பையில் போட்டுக் கொண்டனர். விராட் கோலிக்கு லேசான முதுகுவலி இதனால் 5ம் நிலையில் களமிறங்கினார். அடுத்த போட்டிக்குள் சரியாகி விடும் என்கிறார்.

இந்நிலையில் இந்திய அணி தைரியமாக அடித்து ஆட வேண்டும் என்று கூறும் தாதா கங்குலி. ரிஷப் பண்ட்டை இந்திய அணியில் சேர்க்க வேண்டும் தினேஷ் கார்த்திக்கைத் தூக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

gangulyjpg
 

இது பற்றி அவர் கூறியதாவது:

இந்திய வீரர்கள் ஆட்டமிழந்த விதம் புரிந்து கொள்ள முடியாமல் இருந்தது. இன்னும் மோசம் என்னவெனில் இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் உள்ளன.

இந்திய வீரர்கள் எப்படி தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப் போகிறார்கள் என்று தெரியவில்லை. வேண்டுமானால் ஷிகர் தவனை மீண்டும் அணியில் சேர்ப்பார்கள்.

புஜாராவிடம் பேசலாம், அவர் மட்டுமே 70 பந்துகள் நின்றார், ஆனால் அணிக்குத் தேவை ரன்கள். அழுத்தத்தையும் சுமையையும் குறைக்க வேண்டுமெனில் வெறுமனே நிற்பது மட்டும் போதாது, ரன்கள் தேவை. அடித்து ஆடினால்தான் எதிர்முனையில் இருக்கும் பேட்ஸ்மெனுக்கும் தன்னம்பிக்கை வரும்.

ரிஷப் பண்ட் அணிக்கு வர வேண்டும், தினேஷ் கார்த்திக் மிக மோசமான பார்மில் இருக்கிறார். காலையில் நான் வலைப்பயிற்சியில் கார்த்திக் பேட் செய்ததைப் பார்த்தேன். வலையில் கூட அவரால் பந்துடன் மட்டையை தொடர்பு படுத்த முடியவில்லை.

மேலும் ஒரு இடது கை வீரர் அணிக்குத் தேவை, இந்திய அணியின் தோல்விகள் ரிஷப் பண்ட்டை பாதித்திருக்காது. மேலும் அவர் ஆட்டத்தின் போக்கை மாற்றக்கூடியவர்.

இவ்வாறு கூறினார் சவ்ரவ் கங்குலி.

https://tamil.thehindu.com/sports/article24675455.ece

Link to comment
Share on other sites

கோலி முதுகுவலி, விஜய், புஜாரா ராகுல், ரஹானே பார்ம், விரல்களில் அடிவாங்கிய அஸ்வின் பாண்டியா: 5-0 ஒயிட்வாஷைத் தவிர்க்குமா இந்தியா?

 

 
ravi-kholi

ரவி சாஸ்திரி, விராட் கோலி. | படம். | ராய்ட்டர்ஸ்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வேதனையான இன்னிங்ஸ் தோல்வியடைந்ததையடுத்து இந்தத் தொடரில் இந்திய அணி 5-0 ஒயிட்வாஷைத் தவிர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மொத்தமே 170.3 ஓவர்களில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இதன் மூலம் இங்கிலாந்தின் 100 ஆண்டுகால வரலாற்றில் 3வது மிகக்குறுகிய டெஸ்ட் போட்டியாகியுள்ளது. நம்பர் 1 அணிக்கு நிச்சயம் இது பெரிய அவமானகரமானத் தோல்விதான். உண்மையான முகத்தை இங்கிலாந்து இந்திய அணி வீரர்களுக்குக் காட்டியது.

   
 
 

இங்கிலாந்து தன் முந்தைய நாள் முன்னிலையான 250 ரன்களுக்குக் கூடுதலாக 39 ரன்கள் சேர்த்து 396/7 என்று டிக்ளேர் செய்ய பிறகு இந்திய அணியை 130 ரன்களுக்குச் சுருட்டியது, ஆண்டர்சன், பிராட் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

Englandjpg

கொண்டாடும் இங்கிலாந்து.   -  படம். | ஏஎப்பி,

 

முரளி விஜய் 2வது இன்னிங்சில் இன்சைடு எட்ஜில் ஆண்டர்சனின் லார்ட்ஸ் மைதான 100வது விக்கெட்டாக வெளியேறினார், இரண்டு இன்னிங்ஸ்களிலும் டக் அவுட் ஆகியுள்ளார் விஜய். கே.எல்.ராகுல் ஏதோ தன் வீட்டுக் கொல்லைப்புறத்தில் ஆடுவது போல் உள்ளே வரும் பந்தை வலைப்பயிற்சி போல் பிளிக் செய்ய முயன்று எல்.பி.ஆனார்.

அதாவது இப்போதிருக்கும் வீரர்கள் சச்சின் டெண்டுல்கரிடமோ, சேவாகிடமோ ‘பேக் அண்ட் அக்ராஸ்’ என்றால் என்ன என்பதைக் கேட்டுத் தெரிந்து கொண்டு அயல்நாட்டுப் பிட்ச்களில் ஆடினால் பயன்கிட்டும். இல்லையெனில் காலை நீட்டி நீட்டி எல்.பி., எட்ஜ் என்று ஆகிக் கொண்டிருக்க வேண்டியதுதான். இந்திய தொடக்க வீரர்கள் இந்த ஆண்டில் அயல்நாட்டில் 13 ரன்கள் என்ற சராசரியில்தான் ஆடிவருகின்றனர்.

புஜாரா 87 பந்துகள் தாக்குப் பிடித்தார், இது அவரது உத்தியின் கோளாறு, இதனை நாம் அதிக பந்துகளை எதிர்கொண்ட தீரர் என்றெல்லாம் புகழ்பாட முடியாது, 87 பந்துகளில் அவர் குறைந்தது 45-50 ரன்களையாவது எடுத்திருந்தால் ஆட்டம் வேறு விதத்தில் பயணித்திருக்க வாய்ப்பு உண்டு. ராகுல் திராவிட் ஒரு காலத்தில் இப்படித்தான் மட்டை போடுவார், அதில் எந்த ஒரு பயனுமில்லை என்பதை இயன் சாப்பல் போன்ற கிரிக்கெட் வல்லுநர்கள் கண்டித்துள்ளனர்.

கிரிக்கெட் என்பது பேட்ஸ்மென்கள் ரன் எடுக்க வேண்டும், பவுலர்கள் விக்கெட் எடுக்க வேண்டும் என்ற இரு அடிப்படையில்தான் இயங்குகிறது, மட்டையை வைத்துக் கொண்டு ஒன்றுமே செய்யாமல் நான் 5 மணி நேரம் ஆடினேன், ஆனால் அணி 100 ரன்களில் சுருண்டது என்றால் அதில் எந்த ஒரு பயனுமில்லை என்பதை திராவிட்டுக்கு யாராவது சொல்லுங்களேன் என்று இயன் சாப்பல் கூறினார், அதையேதான் இப்போது புஜாராவுக்கும் கூற வேண்டியுள்ளது.

pujara%20bowledjpg

பிராட் பந்தில் பவுல்டு ஆன புஜாரா. | கெட்டி இமேஜஸ்.

 

கடைசியில் 86 பந்துகளில் 17 ரன்கள் எடுத்து பிராடின் அதியற்புத இன்ஸ்விங்கரில் பவுல்டு ஆனார், அறிமுகமான டெஸ்ட்டிலிருந்து அதிக முறை பவுல்டு ஆன ஒரு வீரரானார் புஜாரா. காரணம் கிரீசிற்குள் இருந்த படியே குப்பைகொட்டியதுதான். கால்களை அரைகுறையாக நகர்த்துவது, மட்டையை பந்துக்கு விரைவில் இறக்க முடியாமல் மந்தகதியில் ஆடுவது இவையெல்லாம் புஜாராவின் தீர்க்க முடியா பலவீனங்கள். ரவிசாஸ்திரி போன்ற பொம்மைப் பயிற்சியாளரெல்லாம் இதற்கு ஒரு போதும் உதவ முடியாது.

ரஹானேவும், புஜாராவும் 12 ஓவர்களுக்கும் மேல் திக்கித் திணறி நின்றனர். தொடர்ந்து ரஹானேயின் எட்ஜை அச்சுறுத்திய பிராடின் பந்து கடைசியில் எட்ஜைத் தீண்டியது, ரஹானே வெளியேறினார்.

முதுகுவலியுடன் ஆடிய விராட் கோலி, வலிநிவாரணி மாத்திரைகள் எடுத்துக் கொண்டுதான் ஆடினார். கிரீஸிற்கு வெளியே நின்று கால்களை முன்னால் தூக்கிப் போட்டு பந்தைத் தீண்டி விடுவேன் என்று அச்சுறுத்தினார். சாம் கரன் இதனை முறியடிக்க விக்கெட் கீப்பரை ஸ்டம்புக்கு அருகில் அழைத்தார். அவுட் ஸ்விங்கரில் வெறும் பீட்டன் தான் ஆவார், ஆகவே இம்முறை இன்ஸ்விங்கர் வீசினால் வெளியே நிற்கும் இவர் எப்படியும் பந்தைத் தீண்டுவார் அப்போது லெக் திசையில் நமக்கு வாய்ப்பு உண்டு என்று இங்கிலாந்து மிகச்சரியாகத் திட்டமிட்டது. ஷார்ட் லெக் பீல்டரைக் கொண்டு வந்தார் பிராட். அப்போது கூட தன்னை ஒர்க் அவுட் செய்கிறார்கள் என்று ஒரு கேப்டனுக்குப் புரியவில்லை. கடைசியில் இன்ஸ்விங்கரை வீச மிகவும் மோசமாக அதனைத் தீண்டினார், ஷார்ட் லெக்கில் கேட்ச் ஆனது.

அடுத்த பந்தே தினேஷ் கார்த்திக்கிற்கு ஒரு பெரிய இன்ஸ்விங்கரை வீச கால்காப்பில் வாங்கினார், வெளியேறினார்.

பிட்ச் கடினமான பிட்ச்தான், அதனுடன் பந்துகள் சில வேளைகளில் எழும்பியும் சில சமயங்களில் தாழ்ந்தும் வெறுப்பேற்றின, பாண்டியா, அஸ்வின் போராடி ஆடினர், அஸ்வின் நல்ல உத்தியைக் கடைபிடித்தார். ஸ்கோர் செய்யும் வாய்ப்புகளை விடாமல் ஸ்கோர் செய்தனர். இந்திய அணியை 100 ரன்களைக் கடக்கச் செய்தனர். பாண்டியா, அஸ்வின் இருவருமே விரல்களில் அடிவாங்கினர். ஆனால் இருவரும் 55 ரன்களைச் சேர்த்தனர், 26 ரன்கள் எடுத்த பாண்டியா இன்ஸ்விங்கரில் எல்.பி.ஆனார். அஸ்வின் 33 ரன்கள் எடுத்து கடைசி வரை நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். குல்தீப் யாதவ், மொகமது ஷமியை ஆண்டர்சன் பவுல்டு மற்றும் எல்.பியில் வீழ்த்த இஷாந்த் ஷர்மாவை வோக்ஸ் வீட்டுக்கு அனுப்பினார், இந்திய அணி 47 ஓவர்களி 130 ரன்களுக்குச் சுருண்டது. ஆட்ட நாயகனாக கிறிஸ் வோக்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

5 டெஸ்ட்கள் கொண்ட போட்டித் தொடரில் முதல் டெஸ்ட் போட்டியில் நெருக்கமாக வந்து தோல்வியடைந்த இந்திய அணி லார்ட்ஸில் மேலும் மோசமாக ஆடி மீதமுள்ள 3 டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வியடைந்து 5-0 உதையை வாங்காமல் வெளியே வருமா என்ற அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

ஏனெனில் இனி வரும் மைதானங்கள் பிராட், ஆண்டர்சன் ஆகியோர் விக்கெட்டுகளைக் குவித்த பிட்ச்களாகும். இந்திய அணி தன் பேட்டிங் உத்தியில் கடுமையான சட்டக மாற்றத்தை நிகழ்த்தவில்லையெனில் நிச்சயம் 5-0 உதை உறுதியே.

https://tamil.thehindu.com/sports/article24675721.ece

Link to comment
Share on other sites

பவுலிங், பேட்டிங், ரன் அவுட், கேட்ச்... ஊஹூம்...: வரலாற்றில் இடம்பெற்ற இங்கி. வீரர் ரஷீத்

 

 
adil%20rashid

ரஷீத்தின் விநோத சாதனை. | ராய்ட்டர்ஸ்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்களில் வீழ்த்தியது, இந்த டெஸ்ட் போட்டியில் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் ஏதாவது பங்களிப்பு செய்துள்ளார்கள். ஆனால் இங்கிலாந்தின் லெக் ஸ்பின்னர் ஆதில் ரஷித்?

1974க்குப் பிறகு மிகப்பெரிய தோல்வியை இந்திய அணி சந்தித்துள்ளது. ஆனால் இவ்வளவு நடந்துள்ளது ஆதில் ரஷீத் இதில் ஒன்றுமே செய்யவில்லை என்பது விநோத, தனித்துவ சாதனையாகியுள்ளது. அதாவது 11 வீரர்கள் கொண்ட விளையாடும் லெவனில் இடம்பெற்று ஒன்றுமே செய்யாமல் ஒரு டெஸ்ட் போட்டியில் கப்சிப்பாக ஆடிய வகையில் ரஷீத் பெயர் வரலாற்றில் இடம்பெற்றது.

 

கடந்த 13 ஆண்டுகளில் இப்படி ஒன்றுமே செய்யாத 14ம் வீர்ராக ரஷீத் சாதனை புரிந்துள்ளார். அதாவது பேட்டிங் செய்யவில்லை, பவுலிங் செய்யவில்லை, பீல்டிங்கில் ரன் அவுட் செய்யவில்லை, கேட்ச் எடுக்கவில்லை. இப்படி ஒன்றிலுமே இடம்பெறாத 14வது வீர்ரானார் ரஷீத், ஆனால் உலக அளவில் 14வது வீரர், இங்கிலாந்தைப் பொறுத்த வரை முதல் வீரர்.

ஸ்லிப்பில் நின்றிருந்தாலாவது கேட்ச் வந்திருக்கும் பிடித்திருக்கலாம் அல்லது கேட்சை விட்டது மூலமாக ஏதாவது செய்த பட்டியலில் இடம்பெற்றிருப்பார், ஆனால் இப்படி ஒன்றுமே செய்யவில்லை என்பது ஒரு தனித்துவ விநோதமே.

இதற்கு முன்னதாக இப்படி ஒன்றுமே செய்யாத வீரர்களின் பட்டியல் வருமாறு:

பெர்சி சாப்மேன், பிரையன் வாலண்டைன், பில் ஜான்சன் (இருமுறை), அர்ஜுன் கிரிபால் சிங், நரி காண்டார்க்டர், கிரெய்க் மெக்டர்மட், ஆசிப் முஜ்தபா, நீல் மெக்கன்சி, ஆஷ்வெல் பிரின்ஸ், காரெத் பாட்டி, ஜாக் ருடால்ஃப், விருத்திமான் சஹா, தற்போது ஆதில் ரஷீத்.

எட்ஜ்பாஸ்டனில் 13 மற்றும் 16 ரன்கள் பிறகு 3 விக்கெட்டுகள் என்று இங்கிலாந்து வெற்றியில் பங்களிப்பு செய்தார் ரஷீத்.

https://tamil.thehindu.com/sports/article24677429.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் ட்ரெண்டிங் ஸ்டார் அடில் ரஷித்தான்! - அப்படி என்ன செய்தார்? #EngvInd

 
 

இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர் அடில் ரஷித் தான் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் ட்ரெண்டிங் ஸ்டார். அப்படி என்ன செய்தார் அவர்?

அடில் ரஷித்

இந்திய அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலில் டி20 மற்றும் ஒருநாள் தொடர்கள் நடைபெற்ற நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்து அணி போராடி வெற்றி பெற்ற நிலையில் லார்ட்ஸில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணியில் கூடுதல் சுழற்பந்துவீச்சாளர் சேர்த்ததே தோல்விக்குக் காரணம் என கேப்டன் கோலி தெரிவித்திருந்தார். 

 

 

இந்த நிலையில், இங்கிலாந்து அணியின் சுழற்பந்துவீச்சாளர்  ரஷித் லார்ட்ஸில் நடைபெற்றப் போட்டியில் எந்த பங்களிப்பும் செய்யவில்லை. அதாவது அவர் ஒருபந்துகூட வீசவில்லை. இங்கிலாந்து அணி தனது இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 369 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. இதனால் ரஷித் பேட் செய்யவில்லை. அதனால் அவர் ஒருபந்துகூட சந்திக்கவில்லை இந்திய அணி இரண்டு இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது, களத்தில் ரஷித் இருந்தும் அவர் கேட்ச் எதுவும் பிடிக்கவில்லை. ரன் அவுட்டிலும் அவரின் பங்களிப்பு இருக்கவில்லை. மொத்தத்தில் இங்கிலாந்து அணியின் இந்த வெற்றியில் அடில் ரஷித் எந்த பங்களிப்பும் செய்யவில்லை. இந்தப் போட்டிக்காக அவருக்கு வழங்கப்பட்டுள்ள சம்பளம், 14,000 யூரோ. அதாவது இந்திய மதிப்பில் 11 லட்சம் ரூபாய். களத்தில் 3 நாள்கள் நடப்பதுக்கு 11 லட்சம் சம்பளமா என அடில் ரஷித் தான் இப்போது ட்ரெண்டிங். 

 

 

141 ஆண்டுகள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதற்கு முன்னாள் இதுபோன்று 13 முறை நடந்துள்ளது. கடந்த 13 ஆண்டுகளில் இதுதான் முதல்முறை. கடைசியாக 2005-ம் ஆண்டில் கரேத் பேட்டி என்ற இங்கிலாந்து வீரரின் பங்களிப்பு இல்லாமல் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில்  இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.   

https://www.vikatan.com/news/sports/133816-england-spinner-adil-rasid-was-in-trending-after-second-test.html

Link to comment
Share on other sites

நெட்டிசன் நோட்ஸ்: லார்ட்ஸ் டெஸ்ட் தோல்வி - தோக்குறது கஷ்டமா இல்ல...ஆனா...

 

 
klmpng

லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துடனான இரண்டாவது டெஸ்ட்  போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் தோல்வியை அடைந்தது. இதுகுறித்து நெட்டிசன்கள் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகிறார்கள். அவற்றின் தொகுப்பு இன்றைய நெட்டிசன் நோட்ஸில்...

Madhavan.G

‏3 இன்னிங்ஸ்ல சரியா ஆடலனு ரோகித்த தூக்கினீங்களே ஆப்பீசர்

ஒருத்தன் 9 இன்னிங்ஸ் இன்னொருத்தன் 10 இன்னிங்ஸ் மகா மட்டமா ஆடிருக்கானோளே இதுக்கு என்ன பண்ண போறீங்க ஆப்பீச்சர் சட்டம் தன் கடமைய செய்யுமா பாப்போம்

அவதார்   

‏அஷ்வின மத்த ப்ளேயர்க்கு பதிலா left hand ல ஆட சொல்லிருக்கலாம்

புகழ்

மூன்றே நாளில் ஒரு டெஸ்ட் தோல்வி..சிறப்பு.

Mr. D

‏ரோஹித் டீம்ல இருந்திருந்தா தோத்ததுக்கு அவன கைகாட்டி விட்ருப்பாய்ங்க. இப்ப பேட்ஸ்மேன், பவுலர், பால்பாய் முதற்கொண்டு எல்லாரையும் குறை சொல்லிட்ருக்கானுங்க

வினோத் முனியசாமி

‏தன் தனிப்பட்ட காரணங்களுக்காக கும்ப்ளேவை பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்க வைத்து தனக்கு ஆமாம் சாமி போடும் ரவி மேஸ்திரியை அந்த பதவியில் அமர வைத்த கோலிக்கு இந்த தோல்விகளில் பெரிய பங்கு இருக்கிறது

தமிழ்®

‏தி ஆர்ட் ஆஃப் ஸ்விங் பௌலிங்

Prabhu 2.O

‏முரளி விஜய்க்கு தவானே பரவாயில்லை எனும் அளவிற்கே விஜய் பேட்டிங் இருக்கிறது. ஸ்டேட் பேங்கில் அக்கவுண்ட் ஓப்பன் பண்றதவிட இங்கிலாந்தில்  ரன் அக்கவுண்ட் ஓப்பன் பண்றது கஷ்டமா இருக்கு போல.

இத்தனை ஆண்டுகள் காத்திருப்புக்கு பிறகு கிடைத்த வாய்ப்பையும் தினேஷ் கார்த்திக்கால் பயன்படுத்தி கொள்ள முடியவில்லை. அநேகமாக அடுத்த போட்டியில் ரிஷப் பண்டுக்கு வாய்ப்பு கொடுக்கப்படலாம். அவர் சாதித்துவிட்டால் தினேஷ் கார்த்திக் ஓய்வு அறிவித்துவிடலாம்.

ElavarasanThangasamy

‏இரண்டு இன்னிங்ஸ் லயும் அஸ்வின் அடிச்சதுதான் தனிநபரின் அதிக பட்ச ஸ்கோர்    . வர்ற போற மேட்சலயும் மறுபடியும் ரொம்ப கேவலமா தோற்க போறோமா??

விஷ்வா I Viswa I

‏#அஸ்வின் முதல் இன்னிங்ஸில் 29 ரன்கள் -  இந்திய வீரர்களில் டாப் ஸ்கோரர்

இரண்டாவது இன்னிங்ஸில் 33* ரன்கள் - இந்திய வீரர்களில் டாப் ஸ்கோரர்

"ஒரு பவுலர் ரெண்டு இன்னிங்ஸிலும் டாப் ஸ்கோரராக இருப்பதற்கு மற்ற யோ யோ டெஸ்ட்டில் தேறிய பேட்ஸ்மேன் புலிகள் வெட்கப்படனும்"

வடை போச்சே..  

‏டெஸ்ட் மேட்ச்ல தோனியை  திட்னவன் எல்லாம் வரிசையா வாங்கடா..

Kailash Chandrasekar

‏தினேஷ் கார்த்திக் இங்கிலாந்தில் தமிழ் வளர்க்க மட்டுமே சென்றார் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும் !

நான் நானாக

‏இதே பவுலிங்கோட இந்தியா பக்கம் வந்துராதிங்கடா.. புஜாராவே 3 நாள் ஆடுவான்

வம்பு 2.0

‏இந்த உலகத்தில

ஆகச் சிறந்த #கோலி யா இருந்தாலும் அவனுக்கு நிகரா

ஒரு #ஆன்டர்சன்

இருக்கதான் செய்வான்!

kutty

‏கொஞ்சம் டீமை மாத்துங்க கோலி சார்

rolex Thug

‏தோக்குறது கஷ்டமா இல்ல போன தடவ மாதிரியே கேவலமா தோக்குறது தான் கஷ்டமாருக்கு

KING

அடுத்த மேட்ச்

முரளி விஜய்

தினேஷ் கார்த்திக்

ரெண்டு பேரும்

இருக்கக்கூடாது

போதும் டா

உங்க

ஆளப்போறன் தமிழன்

https://tamil.thehindu.com/opinion/blogs/article24676321.ece

Link to comment
Share on other sites

கடினமான சூழ்நிலையில் அணியை மீட்டுக் காப்பாற்றுவேன் என்று கையை உயர்த்தும் வீரர்கள் தேவை: விராட் கோலி மனம் திறப்பு

 

 
kohli

ஏமாற்றத்துடன் வெளியேறும் கோலி. | ராய்ட்டர்ஸ்.

லார்ட்ஸ் டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வியடைந்ததையடுத்து விராட் கோலி தனது ஏமாற்றத்தைத் தெரிவித்ததோடு, அணி என்ன செய்ய வேண்டு, எங்கே தவறு ஆகியவைப் பற்றி தெரிவித்துள்ளார்.

“நாங்கள் எதைப்பற்றியும் இப்போது யோசிக்கவில்லை. தென் ஆப்பிரிக்கா தொடரில் 1-2 அதிலிருந்து வலுவாகக் கட்டமைக்க வேண்டும். கடந்த 5 டெஸ்ட் போட்டிகளில் இந்த டெஸ்ட் போட்டியில்தான் முற்றிலும் நாம் வெளியேற்றப்பட்டுள்ளோம்.

 

கடினமான சூழ்நிலையை எனக்குக் கொடுங்கள், நான் அணியை அதிலிருந்து மீட்பேன் என்று கையை உயர்த்திக் கூறும் வீரர்கள் தேவை. எல்லாம் நம் மனதில்தான் உள்ளது. ஆட்டத்துடன் இதற்குத் தொடர்பில்லை. மனரீதியாகத் தயாராக இருந்தால் எந்தச் சூழ்நிலையிலும் நன்றாக ஆட முடியும். இந்தப் புலத்தில்தான் அடுத்த 4-5 நாட்களுக்குப் பணியாற்றப் போகிறோம்.

அடுத்த டெஸ்ட் போட்டிக்கு இன்னும் 4-5 நாட்கள் உள்ளன என்று யோசிக்காமல் அடுத்த டெஸ்ட் போட்டிக்கும் இன்னும் 4-5 நாட்கள்தான் உள்ளன என்று யோசிக்க வேண்டும். இது போன்ற சிறுசிறு விஷயங்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும்.

பேட்டிங்கில் பார்ட்னர்ஷிப்களே இல்லை. இந்த இன்னிங்ஸில் ஹர்திக், அஸ்வின் கூட்டணி அமைத்தனர். அதற்கு முன்பாகவும் பிறகும் ஒன்றும் நடக்கவில்லை. 60,70. 80 என்று கூட்டணி அமைத்து, அதிலிருந்து பெரிய கூட்டணி அமைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அல்லது சிறு சிறு கூட்டணிகள் கூட அணியை வலுவான நிலைக்கு இட்டுச் செல்லும்.

ஆட்டம் தொடங்கும்போது அனைவரும் பாசிட்டிவ்வாக இருப்பார்கள், ஆட்டத்துக்குத் தயார் என்று எண்ணுவார்கள். ஒவ்வொரு பேட்ஸ்மெனுமே இப்படி நினைப்பார்கள். ஆனால் களத்தில் கடினமாக மாறும்போது அதனை எதிர்கொள்ள அங்கு அவர்கள்தான் முடிவெடுக்க வேண்டும். இதில் கடுமையாகத் தோல்வி அடைந்துள்ளோம். இதில் நான் உட்பட அப்படித்தான் சோடை போய்விட்டேன்.

சிறுகச் சிறுக ரன்களைச் சேர்த்து கூட்டணி முறையில் சிந்தித்தால் அணியை கடினச் சூழலிலிருந்து மீட்க முடியும். இதைச் செய்வதற்கு கடந்த கால நிகழ்வுகளும் உண்டு, அனுபவமும் உண்டு.

தவறுகளை ஒப்புக்கொள்ள எனக்குத் தயக்கமில்லை, முதலில் தவற்றை ஒப்புக் கொண்டால்தான் திருத்திக் கொள்ள முடியும். தொடரைச் சமன் செய்யவோ அல்லது வெல்லவோ முதலில் தவறுகளை ஒப்புக் கொண்டு திருத்திக் கொள்வதுதான் வழி.

தவறுகள் செய்யவில்லை என்று மறைக்க முடியாது. அவற்றிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும். இதில்தான் அடுத்த டெஸ்ட்டிற்கு முன் எங்கள் கவனம் உள்ளது” இவ்வாறு கூறினார் விராட் கோலி.

https://tamil.thehindu.com/sports/article24679538.ece

Link to comment
Share on other sites

முன்பு வார்த்தைகளைக் கொட்டினீர்கள், இப்போதாவது வாயைத் திறந்து பேசுங்கள் சாஸ்திரி: ஹர்பஜன் பாய்ச்சல்

 

 
harbajan

ஹர்பஜன் சிங். | படம்: எம்.கருணாகரன்.

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின் இன்னிங்ஸ் தோல்வி மீதான விமர்சனங்கள் ஓய்ந்தபாடில்லை, விராட் கோலி மீதான விமர்சனங்கள் ஒரளவுக்குக் குறைந்த பிறகு தற்போது பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மீதான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ஆனால் அனைவருமே மிகவும் எச்சரிக்கையாக பிசிசிஐ-யின் பங்கு என்ன என்பதில் அசாத்திய மவுனம் காப்பதே நம் கவனத்தை ஈர்க்கிறது.

 

இந்நிலையில் ஹர்பஜன் சிங், ரவிசாஸ்திரி மீது காட்டமான விமர்சனத்தைத் தொடுத்துள்ளார்.

அதாவது இங்கிலாந்தின் வானிலை, பிட்ச் பற்றியெல்லாம் கவலையில்லை என்று ரவிசாஸ்திரி அலட்சியமாகப் பேசியதைக் குறிவைத்துத் தாக்கியுள்ளார் ஹர்பஜன் சிங்.

ஆஜ்தக் தொலைக்காட்சியில் அவர் கூறியதாவது:

பயிற்சியாளர் தன் கருத்தைப் பதிவு செய்ய வேண்டும். இன்றோ, நாளையோ அவர் பேசித்தான் ஆக வேண்டும். அவர்தான் அனைவருக்கும் பதிலளிக்கக் கடமைப்பட்டவர். இந்தியா தொடரை வென்றால் அவர் கூறிய வார்த்தைகளை திரும்பப் பெற வேண்டும். இங்கிலாந்தின் பிட்ச், வானிலை உள்ளிட்ட சூழ்நிலைகள் வித்தியாசமானதுதான் என்பதை அவர் ஒப்புக் கொண்டேயாக வேண்டும்.

நாம் எதிர்த்துப் போராட எந்த ஒரு துணிவும் காட்டவில்லை. வெற்றி பெறுவதற்கான விருப்புறுதி அங்கு இருக்கவில்லை. அதுதான் நம் இதயத்தை நொறுக்குகிறது. எந்த ஒரு சவாலையும் அளிக்காமல் சரணடைந்தோம், இது மிகவும் ஏமாற்றமளிக்கிறது.

அயல்நாடுகளில் தொடக்க வீரர்களின் நல்ல கூட்டணிதான் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் தொடக்க வீரர்கள் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் ஆடும் லெவன் மாற்றப்படுகிறது. நடுவரிசை வீர்ர்களும் நிலைபெறவில்லை.

லார்ட்ஸில் பசுந்தரை ஆடுகளம், மேகமூட்டமான வானிலை ஆனால் 2 ஸ்பின்னர்களை அணியில் சேர்க்க முடிவெடுத்தனர். இது தேவையா? உமேஷ் ஆடியிருந்தால் இங்கிலாந்து 160-170 ரன்களில் ஆட்டமிழந்திருக்கும்.

இவ்வாறு கடும் விமர்சனங்களை முன்வைத்தார் ஹர்பஜன் சிங்.

https://tamil.thehindu.com/sports/article24689519.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

அறியாமை, பொறுப்பின்மை, முட்டாள்தனம், தலைக்கனம்: இந்திய பேட்டிங் பற்றி ஜெஃப்ரி பாய்காட் பளார்.. பளார்..

 

 
boycott

இங்கிலாந்து தொடரில் இந்திய பேட்டிங் பற்றி ஜெஃப்ரி பாய்காட் கருத்துக் கூறிய போது, ‘அறியாமை, பொறுப்பின்மை, முட்டாள் தனம்’ என்றுய் சாடியுள்ளார்.

டெய்லி டெலிகிராப் பத்திரிக்கையில் எழுதியுள்ள பத்தியில் அவர் கூறியிருப்பதாவது:

 

இதுவரை இந்திய வீரர்கள் தங்களையும் தங்கள் ஆதரவாளர்களையும் தலைகுனிய வைத்துள்ளனர். பேட்டிங் அறியாமையும் பொறுபின்மையும் கூடியதுடன் முட்டாள்தனத்தின் எல்லையிலும் இருந்தது, அவுட் ஸ்விங்கர் வீசி கவர்ச்சி அழைப்பு விடுத்தால் யோசனையின்றி பேட்டைக் கொண்டு செல்வதா?

முரளி விஜர் ரக அவுட்களெல்லாம் எப்படியெனில், நேர் அவுட்ஸ்விங்கர்களையெல்லாம் மிட்விக்கெட்டில் ஆட முயன்று, பிறகு எட்ஜ் ஆனாலோ, பவுல்டு ஆனாலோ அதிர்ச்சியடைவது மூளையற்ற செயலாகும். பந்து வரும் போது எழும்பும் இடத்தில் கால்காப்பிற்கு முன்பாக மட்டையைக் கொண்டு சென்று ஆடுவது இங்கு முடியாது, இங்கு இல்லை.

இங்கிலாந்து பிட்ச் உள்ளிட்ட சூழ்நிலையில் சாதாரண ஸ்விங் பவுலர்களுக்கு எதிராகவே செய்யக் கூடாத அரிச்சுவடிகளாகும்.

அவர்கள் உட்கார்ந்து பேசி, வலைப்பயிற்சியில் பயிற்சி மேற்கொள்ளவில்லை, இங்கிலாந்தில் எப்படி வித்தியாசமாக ஆடப்போகிறோம் என்பதைத் தங்கள் மண்டைக்குள் ஏற்றிக் கொள்ளவேயில்லை.

இவர்கள் அனைவரும் மட்டையான, வறண்ட, பந்துகள் எழும்பாத இந்திய பிட்ச்களில் பேட் செய்தே பழக்கப்பட்டவர்கள். எளிதான ரன்களை குவித்தவர்கள். புதிய பந்துகள் அங்கு ஒன்றுமே ஆகாது, பந்தின் பளபளப்பும் விரைவில் தேய்ந்து விடும், அங்கு பேட்ஸ்மென்கள்தான் ராஜா, நேரடியாக எந்த ஷாட்களையும் ஆட முடியும்.

இங்கிலாந்துக்கு இந்திய அணி அலட்சியத்துடனும் தலைக்கனத்துடனும் வந்தனர். எங்கு வேண்டுமானாலும் தங்கள் இஷ்ட்கப்படி பேட் செய்ய முடியும், அந்தநாளில் எல்லாம் ஓகேயாகி விடும் என்ற நினைப்பில் வந்துள்ளனர். உங்கள் கிரிக்கெட்டை நீங்கள் தொடருக்கு முன் பணியாற்றி சரிசெய்யவில்லையெனில் அது உங்கள் முதுகில் அடித்து விடும்.

ட்ரெண்ட் பிரிட்ஜில் சுலபமாக இருக்கும் என்று கனவு காண வேண்டாம், இங்குதான் ஆண்டர்சன் பயங்கரமாக வீசுவார். நாட்டிங்கமில் ஆண்டர்சனின் பந்து வீச்சு தனிச்சிறப்பானது, ஸ்டூவர்ட் பிராடுக்கு சொந்த மண், ரசிகர்கள் அவருக்கு உரத்த ஆதரவுக்குரல் கொடுப்பார்கள்

பெரும்பாலாண அணிகள் உள்நாட்டில் வென்று வெளியே போய் தோற்பதால் டெஸ்ட் கிரிக்கெட் முட்டாள்தனமான பொருத்தமின்மையாக மாறி வருகிறது. நம்பர் 1 டெஸ்ட் அணி 2 டெஸ்ட் போட்டிகளில் படுமோசம்.

பெரிய அணிகள், பெரிய வீரர்கள் பந்துகள் ஸ்விங் ஆகின்றன என்பதற்காக லார்ட்ஸில் இந்தியா போன்று மடியக் கூடாது,, வெளிநாடுகளில் ஆடுவது எதற்காக? பல்வேறு நாடுகள், பல்வேறு பிட்ச்கள், பல்வேறு தட்பவெப்ப நிலைகளில் நம் உத்தி, நம் பொறுமை, நம் குணம், சூழலுக்கு ஏற்ப தகவமைத்துக் கொள்ளுதல் ஆகியவற்றை சோதித்துக் கொள்ளவே.

இவ்வாறு சாடினார் ஜெஃப்ரி பாய்காட்.

https://tamil.thehindu.com/sports/article24691355.ece

Link to comment
Share on other sites

ஆங்கிலேய மண்ணில் வீரர்கள் காபி அருந்தி மகிழ்கிறார்கள் போலும்: விராட் கோலி கருத்தைப் பகடி செய்து சந்தீப் பாட்டீல் கடும் சாடல்

 

 
sandeep%20patil

சந்தீப் பாட்டீல். | படம்: விவேக் பெந்த்ரே.

இங்கிலாந்து தொடருக்குச் செல்வதற்கு முன்னால் அளித்த பேட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்தில் அணியின் திட்டமென்ன என்ற கேள்விக்கு, ‘கடந்த முறையும் என்னிடம் இப்படிக் கேட்டார்கள். நான் கூறினேன் அப்படியே நடந்து சென்று காபி அருந்துவேன் என்று, பயணம் செல்லும் போது என்னுடைய சிந்தனையே வேறு, அந்த நாட்டை முழுதும் மகிழ்வுடன் சுற்றி வருவேன்’ என்று பதிலளித்தார்.

தற்போது விராட் கோலியின் அந்தப் ‘பொறுப்பற்ற’ பேச்சை சந்தீப் பாட்டீல் கடும் கேலித்தொனியுடன் சாடியுள்ளார்.

 

பொதுவாக சந்தீப் பாட்டீல் அவ்வளவாக பொதுவெளியில் பேசாதவர், ஆனால் இந்த இந்திய அணியின் மேலான ‘ஹைப்’ சாரி ரொம்ப ஓவர் என்று தோன்றியதால்தான் பத்தியில் விட்டுக் கிழித்துள்ளார்.

தி குவிண்ட் என்ற ஊடகத்துக்கு சந்தீப் பாட்டீல் எழுதிய பத்தியில் கூறியிருப்பதாவது:

முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் செயல்பாடுகளைப் பார்க்கும் போது விராட் கோலி கூறிய கருத்தை வீரர்கள் உண்மையில் சீரியஸாக எடுத்துக் கொண்டது போல் தெரிகிறது. ஆங்கிலேய மண்ணில் நல்ல காபி அருந்தி மகிழ்கிறார்கள் போலும். ஒருவருக்கும் விமர்சனங்கள் பிடிப்பதில்லை, இவ்வளவு மோசமாக ஆடும் போத் விமர்சனங்களையும் தாங்க வேண்டும். உண்மை, எதார்த்தம், விமர்சனத்தை எதிர்கொள்ள வேண்டும்.

sandeep%20patil1jpg

டிச.26, 1981, இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் பாப் வில்லிஸ் பந்தை டெல்லி டெஸ்ட்டில் ஹூக் ஷாட்டில் சிக்ஸ் அடிக்கும் சந்தீப் பாட்டீல்.

 

எங்கள் காலக்கட்டத்தில் கிரிக்கெட்டைப் பார்க்க வேண்டும், வளர்ச்சியடைய வேண்டும், கடுமையாகப் பயிற்சி செய்ய வேண்டும் என்று எங்கள் தலைகளில் ஏற்றப்பட்டிருந்தது. மூத்த வீர்ர்களைப் பின்பற்றி அவர்களைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எங்களுக்குக் கூறப்பட்டது. இங்கிலாந்துக்கு பயணித்த மூத்த வீரர்களின் ஆலோசனைகளை கேட்பதற்குப் பதிலாக விராட் கோலியின் அணி அந்நாட்டின் காபியை அருந்தி மகிழ்கிறார்கள் போலும்.

உண்மையில் இங்கிலாந்துக்கு இதற்கு முன் பயணித்த கேப்டன்களான அஜித் வடேகர், சச்சின், சவுரவ் கங்குலி, அசாருதீன் ஆகியோர் விராட் கோலி போல் முக்கியமான தொடர் குறித்து இப்படிப் பொறுப்பற்ற கருத்துகளைக் கூறவில்லை.

என்னுடைய முதல் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து, ஃபீஜி தீவுகள் பயணங்களை நினைத்துப் பார்க்கிறேன். அது நான்கரை மாதம் கொண்ட நீண்ட தொடர், ஆனால் எங்கள் கேப்டன் சுனில் கவாஸ்கர் அவரும் ஓய்வு எடுத்துக் கொள்ளவில்லை எங்களையும் ஓய்வு எடுக்க அனுமதித்ததில்லை. நான்கரை மாதங்களும் எங்கள் சிந்தனையெல்லாம் கிரிக்கெட்... கிரிக்கெட் என்பது மட்டும்தான். கிரிக்கெட்டைப் பேசினோம், கிரிக்கெட்டையே ஆடினோம்.

1982-ல் இங்கிலாந்துக்கு 2 மாத கிரிக்கெட் பயணத்திற்கும் சுனில் கவாஸ்கர் கேப்டன். அப்போதும் பிரேக் என்பதே கிடையாது. 1984 பாகிஸ்தான் தொடரும் ஒரு நீண்ட தொடர் யாரும் பிரேக் எடுத்துக் கொள்ளவில்லை. 1986-ல் கபில்தேவ் தலைமையிலான 2 மாதகால இங்கிலாந்து தொடரிலும் பிரேக் கிடையாது. விளைவு நாம் 2-0 என்று இங்கிலாந்தை வீழ்த்தினோம். நாங்கள் கிரிக்கெட் ஆடினோம், கிரிக்கெட்டை பயின்றோம், ஆனால் இப்போது கிரிக்கெட் ஆடுகிறார்கள் ஆனால் பயிற்சி இல்லை, இதன் விளைவுகள்தான் இப்போது நம் கண் முன் நிற்கிறது.

தற்போது சர்வதேச கிரிக்கெட் பயணங்கள் மிகவும் நெருக்கமாக உள்ளன. இன்று சர்வதேச கிரிக்கெட்டைத்தான் வீரர்கள் ஆடுகின்றனர், ஆனால் நாங்கள் 70களில் 80களில், 90களில் கிளப் கிரிக்கெட், அலுவலக கிரிக்கெட், உள்நாட்டு கிரிக்கெட், சர்வதேச கிரிக்கெட் ஆடினோம், ஆனால் பயிற்சியில் சமரசம் கிடையாது.

இது கிரேட் கவாஸ்கர், அமர்நாத், வெங்சர்க்கார், கபில் ஆகியோர் மட்டுமல்ல பின்னால் சச்சின், லஷ்மண், அசார், திராவிட், கும்ப்ளே ஆகியோருக்கும் பொருந்தும், சமரசமற்ற வீர்ர்கள் இவர்கள். கடந்த 4 பத்தாண்டுகளில் கிரிக்கெட் நிரம்ப மாறிவிட்டது. பயிற்சி இல்லையெனில் எதையும் சாதிக்க முடியாது. பேச்சைக் குறை, அதிகம் பயிற்சி செய், என்பதுதான் என் அறிவுரை.

இவ்வாறு அந்தப் பத்தியில் பொரிந்து தள்ளியுள்ளார் சந்தீப் பாட்டீல்.

https://tamil.thehindu.com/sports/article24696392.ece

Link to comment
Share on other sites

3-வது டெஸ்ட்டில் ரிஷப் பந்த்?: பயிற்சியளித்த தினேஷ் கார்த்திக்

 

 
pant

2 டெஸ்ட் போட்டிகளில் தோல்வியடைந்ததையடுத்து, குறிப்பாக லார்ட்ஸில் படுஇன்னிங்ஸ் தோல்வியடைந்ததையடுத்து களபலிக்கு இந்திய அணி தயாராகி வருவதாகத் தெரிகிறது.

வலைப்பயிற்சியில் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் தினேஷ் கார்த்திக் சக வீரர் ரிஷப் பந்த்திற்கு பந்துகளை வீசி பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார்.

 

லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் 3ம் நாள் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா வீசிய ஒரு பந்தை சேகரிக்கும் போது கார்த்திக் முகத்தில் வலி தெரிந்தது. ஓவர் முடிந்தவுடன் அணியின் உடற்பயிற்சியாளர் கார்த்திக்கு சிகிச்சை அளித்தார். விரல்களில் டேப் சுற்றப்பட்டது. பிறகு அவர் காயம் பெரிதாக இல்லை என்பது போல்தான் தெரிந்தது. ஆனாலும் ‘காயம் காரணமாக’ தினேஷ் கார்த்திக்கிற்குப் பதிலாக ‘இளம் ரத்தம்’ ரிஷப் பந்த்தை களமிறக்கவும் வாய்ப்பிருக்கிறது.

விக்கெட் கீப்பிங்கில் ஓரளவுக்கு பரவாயில்லையாகச் செயல்பட்ட கார்த்திக் பேட்டிங்கில் கடும் சொதப்பல். கங்குலி இவருக்கு பயிற்சியில் கூட பந்துகள் மட்டையில் படுவதில்லை என்று விமர்சித்ததும் வைரலானது. இரண்டு டக்குகளுடன் 21 ரன்களையே எடுத்தார். இருமுறை பவுல்டு ஒரு முறை எல்.பி.ஆனார்.

வலைப்பயிற்சியில் ஸ்பெஷலிட்ஸ் பேட்ஸ்மென்கள் பயிற்சிக்குப் பிறகு ரிஷப் பந்த் பேட் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்துக்கு சென்ற இந்தியா ஏ அணிக்கு ஆடிய ரிஷப் பந்த் 3 அரைசதங்களை அடித்துள்ளார், ராகுல் திராவிட் இவரது அதிரடி திறமையையும் அதே வேளையில் சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றி ஆடும் திறமையையும் விதந்தோதியுள்ளார்.

ரிஷப் பந்த் அணிக்குள் வருவாரா என்பதற்கு வழக்கம் போலவே ரவிசாஸ்திரி குழப்பவாத பதிலை அளிக்கும் போது, “சனிக்கிழமை காலை 11.00 மணி வரை பதிலுக்குக் காத்திருங்கள்” என்று கூறினார்.

இதற்கிடையே விராட் கோலியும் முழு உடல்தகுதி பெற்று டிரெண்ட் பிரிட்ஜ் சவாலுக்குத் தயாராகிவிட்டார் என்று இந்திய அணி நிர்வாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://tamil.thehindu.com/sports/article24715118.ece

Link to comment
Share on other sites

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டிற்கான இங்கிலாந்து ஆடும் லெவன் அணி அறிவிப்பு

 
அ-அ+

டிரென்ட் பிரிட்ஜ்-யில் நாளை நடைபெறும் இந்தியாவிற்கு எதிரான 3-வது டெஸ்டிற்கான இங்கிலாந்து ஆடும் லெவன் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #ENGvIND

 
 
 
 
டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டிற்கான இங்கிலாந்து ஆடும் லெவன் அணி அறிவிப்பு
 
இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜியில் நாளை தொடங்குகிறது. இதில் ஆல்ரவுண்டர்களான பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ், சாம் குர்ரான் ஆகியோரில் இருவருக்குதான் இடம் என்பதால் யார் யார் ஆடம் லெவன் அணியில் இடம்பிடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு கிளம்பியது.

பெரும்பாலான முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் மூன்று பேருடன் களம் இறங்க வேண்டும் என்ற வலியுறுத்தினார்கள். இந்நிலையில் நாளைய டெஸ்டிற்கான இங்கிலாந்து அணியில் இடம்பெறும் 11 வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

201808171942082726_1_samcurran001-s._L_styvpf.jpg

இதில் எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் அறிமுகமாகி ஆட்ட நாயகன் விருது பெற்ற சாம் குர்ரான் நீக்கப்பட்டு பென் ஸ்டோக்ஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

நாளை இந்தியாவிற்கு எதிராக விளையாடும் இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. அலஸ்டைர் குக், 2. ஜென்னிங்ஸ், 3. ஜோ ரூட், 4. போப், 5. ஜோஸ் பட்லர், 6. பேர் ஸ்டோவ், 7. பென் ஸ்டோக்ஸ், 8. கிறிஸ் வோக்ஸ், 9 அடில் ரஷித், 10. ஜேம்ஸ் ஆண்டர்சன், 11. ஸ்டூவர்ட் பிராட்.

https://www.maalaimalar.com/News/Sports/2018/08/17194208/1184527/England-recall-Ben-Stokes-for-third-Test-at-Trent.vpf

Link to comment
Share on other sites

வாழ்வா -சாவா' ஆட்டத்தில் இங்கிலாந்துடன் இன்று மோதும் இந்தியா

 

 
viru

பயிற்சியின் இடையே கேப்டன் கோலி.


வாழ்வா சாவா என்ற நிலையில் தொடரை கைப்பற்ற கட்டாயம் வென்றே தீர வேண்டும் என இங்கிலாந்துடன் மூன்றாவது டெஸ்ட் ஆட்டம் நாட்டிங்ஹாம் டிரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் சனிக்கிழமை தொடங்குகிறது.
இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்துவரும் இந்திய அணி ஏற்கெனவே டி 20 தொடரை வென்று, ஒரு நாள் போட்டித் தொடரை இழந்தது. பின்னர் 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் இரு டெஸ்ட்களில் இந்தியா தோல்வியடைந்தது. இங்கிலாந்து 2-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில் தொடரை யார் கைப்பற்றுவது என்பதை நிர்ணயிக்கும் மூன்றாவது டெஸ்ட் டிரெண்ட்பிரிட்ஜில் நடக்கிறது. இந்திய அணியின் கேப்டன் விரோட் கோலி முதுகுவலி காரணமாக அவதிப்பட்டு தற்போது குணமடைந்துள்ளார். அதே போல் காயமடைந்திருந்த அஸ்வின், ஹார்திக் பாண்டியா ஆகியோரும் தயாராகி விட்டனர்.
இந்திய அணிக்கு பலம் சேர்க்கும் வகையில் விரலில் காயமுற்று முதல் இரண்டு டெஸ்ட்களை தவறவிட்ட மிதவேகப்பந்து வேச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவும் இப்போட்டியில் விளையாடுகிறார். லார்ட்ஸ் மைதானத்தில் படுதோல்வியடைந்த நிலையில் இந்த டெஸ்டில் வென்றால் தான் தொடரை கைப்பற்றுவது குறித்து இந்திய அணி சிந்திக்க முடியும். சோபிக்காத விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு இளம் வீரர் ரிஷப் பந்த் சேர்க்கப்படுவது உறுதியாகி விட்டது.
இந்திய அணி தனது வீரர்கள் முழு உடல் தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதை நினைத்தே கவலைப்பட வேண்டியுள்ளது. லார்ட்ஸ் டெஸ்டில் 2 சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தியது இந்திய அணிக்கு பாதகத்தை ஏற்படுத்தி விட்டது. இது தவறானது என பயிற்சியாளர் சாஸ்திரி ஒப்புக் கொண்டுள்ளார்.
துவக்க வீரரான முரளி விஜய்யின் ஆட்டமும் கவலை தருவதாக உள்ளது. அவருக்கு இந்த டெஸ்டில் மேலும் ஒரு வாய்ப்பு தரப்படலாம் எனத்தெரிகிறது. ஷிகர் தவன் மீண்டும் இணைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் வரிசையில் எந்த மாறுதலும் செய்யப்படாது. உமேஷ் யாதவுக்கு வாய்ப்பு கிடைப்பதில் சந்தேகம் நிலவுகிறது.
டிரெண்ட்பிரிட்ஜ் மைதானத்தில் உள்ள பிட்ச் கடந்த 2014-இல் இருந்ததைக் காட்டிலும் மாறுபட்டுள்ளது. அப்போது நடைபெற்ற டெஸ்ட் டிராவில் முடிந்தது. இந்திய அணியின் ரன் வேட்டைக்கு உறுதுணையாக இருந்தது. முதல் நான்கு நாள்கள் மேகமூட்டத்துடன் வானிலை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிட்ச் ஸ்விங் பந்துவீச்சுக்கு உறுதுணையாக இருக்கும்.
இந்திய அணியில் புஜாரா, ரஹானே, கேஎல் ராகுல், முரளி விஜய் ஆகியோர் இன்னும் ஆடத்தொடங்கவில்லை என்ற நிலையில் உள்ளனர். இங்கிலாந்தின் ஸ்விங் பந்துவீச்சாளர்கள் ஆண்டர்சன், பிராட் ஆகியோரை எதிர்கொள்ள வேண்டும். சீரான வானிலை போன்றவை இந்திய அணியின் கவலையாக உள்ளது.
இங்கிலாந்துக்கு புதிய தலைவலி
அதே நேரத்தில் 2 டெஸ்ட் வெற்றியோடு உற்சாகமாக உள்ள இங்கிலாந்துக்கு அணி தேர்வு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற விசாரணை காரணமாக லார்ட்ஸ் டெஸ்டில் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். 
அவருக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் சேர்க்கப்பட்டார். அவர் அபார சதமடித்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதே நேரத்தில் வழக்கில் இருந்து ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டதால், அவர் மீண்டும் அணியில் சேர்க்கப்பட வேண்டும். இதனால் அணி நிர்வாகத்துக்கு சிக்கல் நிலவியது.
ஆனால் முதல் டெஸ்ட் வெற்றிக்கு வித்திட்ட சாம் கரன் விடுவிக்கப்பட்டு ஸ்டோக்ஸ் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
வேறு எந்த மாறுதலும் இங்கிலாந்து அணியில் செய்யப்படவில்லை.
உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் அணியான இந்தியா மீண்டும் வீறு கொண்டு எழுந்து நாட்டிங்ஹாம் டெஸ்டை வெல்லுமா என இந்திய ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.
விராட் கோலி கூறியது
போட்டியில் சிறப்பாக விளையாட வீரர்களின் எதிர்காலம் குறித்து நான் தற்போது எதுவும் கூற முடியாது. அவர்களுக்கு நான் எந்த உத்தரவாதமும் அளிக்கவில்லை. எங்களது முக்கிய நோக்கம் இந்த டெஸ்டில் வெல்வது தான். 
6-வது பேட்ஸ்மேனை களமிறக்க வேண்டும் என ஆலோசித்துள்ளோம். ஒவ்வொருவரும் தங்களுக்கான ஆட்டத்தை ஆட வேண்டும். ஒருவருடைய எதிர்காலம் தொடர்பாக தற்போது கவலைப்பட நேரமில்லை. பந்துவீச்சாளர்களுக்கு உதவும் வகையில் பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இருக்க வேண்டும். தங்கள் பொறுப்பை உணர வேண்டும். பும்ரா வருகை மகிழ்ச்சியைத் தருகிறது. பந்துவீச்சாளர்களை பற்றி கவலையில்லை என்றார்.

http://www.dinamani.com/sports/sports-news/2018/aug/18/வாழ்வா--சாவா-ஆட்டத்தில்-இங்கிலாந்துடன்-இன்று-மோதும்-இந்தியா-2982481.html

Link to comment
Share on other sites

இதுதான் கடைசி வாய்ப்பு... எழுந்து வா கோலி & கோ! #ENGvsIND

 
 
 

இன்றையப் போட்டி முழுக்க முழுக்க கோலி அணிக்குள் விதைக்கும் நம்பிக்கையைப் பொருத்தே வெற்றி தோல்வியை தீர்மானிக்கும். சரியான பேட்டிங் ஆர்டர், சரியான இடைவெளிகளில் பெளலிங் ரொட்டேஷன் என்று கேப்டன் கோலி இன்று ஃபார்முக்கு வந்தால் மட்டுமே இந்தியாவுக்கு வெற்றி சாத்தியம்.

இதுதான் கடைசி வாய்ப்பு... எழுந்து வா கோலி & கோ! #ENGvsIND
 

மிகப்பெரிய மன அழுத்தத்துடன் மூன்றாவது டெஸ்ட் மேட்சுக்குத் தயாராகியிருக்கிறது கோலி & கோ. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் தோல்வி. அதுவும் லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்ட் மேட்சில் மோசமான தோல்வி. இதிலிருந்து இந்திய அணி மீளவில்லை என்பதற்கு உதாரணமே, நாட்டிங்ஹாம் போய்ச் சேர்ந்த பிறகும் இரண்டு நாள் பயிற்சிக்கே இந்திய அணி வராதது. சுதந்திர தினம் கொண்டாடிய பிறகு, பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறது கோலியின் அணி.

ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட இங்கிலாந்து தொடரில், மூன்றாவது டெஸ்ட் போட்டியான நாட்டிங்ஹாம் டெஸ்ட்டில் இந்தியா வெற்றி பெற்றே ஆக வேண்டும். இல்லையென்றால் தொடரை இங்கிலாந்து கைப்பற்றிவிடும் என்பதோடு, இந்தியா தனது மனபலத்தை முழுவதும் இழந்துவிடும்.

கோலி

 

 

2014-ம் ஆண்டு இங்கிலாந்து தொடரில் லார்ட்ஸ் டெஸ்ட்டில் இந்தியா வென்றது. அந்த வெற்றிதான் அந்தத் தொடரின் படுதோல்வியிலிருந்து இந்திய அணியைச் சற்றே மீட்டெடுத்தது. ஆனால், 2018-ம் ஆண்டு இங்கிலாந்தில் இருக்கும் இந்திய அணியைப் பார்க்கும்போது வெற்றிக்கான சாத்தியங்களே இல்லாததுபோல் இருப்பதே பெரிய பலவீனம்.

 

 

இங்கிலாந்து செல்லும்முன் சம பலம் வாய்ந்த அணிகளாகவே இங்கிலாந்து - இந்தியா அணிகள் பார்க்கப்பட்டன. அதை நிரூபிக்கும் வகையில் 20/20 தொடரை இந்தியாவும், ஒருநாள் தொடரை இங்கிலாந்தும் கைப்பற்றின. அதனால் டெஸ்ட் தொடர் இன்னும் கடுமையானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முதல் இரண்டு டெஸ்ட்களிலுமே இந்திய அணியின் பேட்டிங் படுமோசமாக இருக்க, போராட்டமே இன்றி தோல்வியடைந்திருக்கிறது இந்தியா. 

முதல் டெஸ்ட்டில் பேட்டிங்கில் கெத்துகாட்டிய விராட் கோலியும், இரண்டாவது டெஸ்ட்டில் சரியாக விளையாடவில்லை. இந்திய அணியின் ஓப்பனிங் மிக மிக மோசம். இரண்டாவது டெஸ்ட்டின் இரண்டு இன்னிங்ஸிலுமே முரளி விஜய்யின் ஸ்கோர் இரண்டு பெரிய முட்டைகள்தான். இந்திய அணியின் பெளலிங் குறித்துக் கவலைப்பட பெரிதாக ஒன்றுமில்லை. ஆனால், பேட்டிங்தான் இந்தியாவின் மிகப்பெரிய பலவீனம். 

 

கோலி

அறிவிக்கப்பட்ட பிளேயிங் லெவன்!

இங்கிலாந்து, தனது பிளேயிங் லெவனை அறிவித்துவிட்டது. சாம் கரணுக்குப் பதிலாகப் பென் ஸ்டோக்ஸ் அணிக்குள் இடம்பெறுகிறார். அலெஸ்டர் குக், கீட்டான் ஜெனிங்ஸ், ஜோ ரூட், ஆலி போப், ஜானி பார்ஸ்டோவ், ஜொஸ்ஸ் பட்லர் என்பதுதான் இங்கிலாந்தின் பேட்டிங் ஆர்டர். ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் ஆல் ரவுண்டர்களாகவும்,  ரஷித், பிராடு, ஆண்டர்சன் ஆகியோர் பெளலர்களாகவும் அணியில் இடம்பிடித்திருக்கிறார்கள்.

பேட்டிங் பரிதாபங்கள்!

வழக்கம்போல கேப்டனாகப் பொறுப்பேற்றதிலிருந்து அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகளுக்கு ஒரே அணியைக் களமிறக்காத கோலி, தனது 38-வது டெஸ்ட் போட்டியிலும் வேறு அணியுடன் களமிறங்க இருக்கிறார். ஜஸ்பிரித் பும்ரா குணமடைந்திருப்பதால், உமேஷ் யாதவுக்குப் பதிலாக அவர் களமிறங்குவார். 

கோலி

இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஃபார்ம்தான் மோசமாக இருக்கிறது. அதனால், பேட்டிங் வரிசையில் இன்று பெரிய மாற்றங்கள் இருக்கும். முரளி விஜய்யின் ஓப்பனிங் பொசிஷன் இன்று நிலைக்குமா என்பது சந்தேகமே. அவருக்குப் பதிலாக ஷிகர் தவான் களமிறக்கப்படலாம். கே.எல்.ராகுல் அணிக்குள் நீடிப்பார். அதேபோல் தினேஷ் கார்த்திக்குப் பதிலாக ரிஷப் பன்ட் அணிக்குள் வருவார். ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாகக் கருண் நாயருக்கும் வாய்ப்பளிக்கப்படலாம். மற்றபடி, பெளலிங்கில் பெரிய மாற்றங்கள் எதுவும் இருக்காது. அஷ்வின், பும்ரா, இஷாந்த், ஷமி என்பதுதான் பெளலிங் அட்டாக்காக இருக்கும். 

 

 

பிட்ச்!

நாட்டிங்ஹாம் மைதானம், பேட்டிங்குக்கு சாதகமான பிட்ச்தான். அதேசமயம் ஸ்விங் பெளலிங்குக்கும் சாதகமாக இருக்கும். அதனால்தான் ஆதில் ரஷித் என்னும் ஒற்றை ஸ்பின்னருடன் இங்கிலாந்து களமிறங்குகிறது. அதேபோல் இந்தியாவும் 6 பேட்ஸ்மேன்களுடன் இந்த டெஸ்ட்டில் களமிறங்கினால்தான் அணியின் ஸ்கோரை உயர்த்த முடியும். டாஸ் வெல்லும் அணி, இங்கு ஃபீல்டிங்கைத் தேர்ந்தெடுக்கவே வாய்ப்புகள் அதிகம். 

இன்றையப் போட்டியில், முழுக்க முழுக்க கோலி அணிக்குள் விதைக்கும் நம்பிக்கையைப் பொறுத்தே வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்க முடியும். சரியான பேட்டிங் ஆர்டர், சரியான இடைவெளியில் பெளலிங் ரொட்டேஷன் என, கேப்டன் கோலி இன்று ஃபார்முக்கு வந்தால் மட்டுமே இந்தியாவுக்கு வெற்றி சாத்தியம்!

https://www.vikatan.com/news/sports/134376-this-is-the-last-chance-for-kohli-co-to-fight-back-engvsind-preview.html

Link to comment
Share on other sites

6.png&h=42&w=42

268/4 * (72 ov)

நல்ல தொடக்கத்துக்குப் பிறகு 3விக். வீழ்த்தி கோலியின் முகத்தில் வேதனையை வரவழைத்த கிறிஸ் வோக்ஸ்

 

 
woakes

புஜாரா விக்கெட்டை வீழ்த்திய கிறிஸ் வோக்ஸ். | கெட்டி இமேஜஸ்

டிரெண்ட்பிரிட்ஜ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தினால் முதலில் பேட் செய்ய அழைக்கப்பட்ட இந்திய அணி தவண், ராகுல் கொடுத்த நல்ல தொடக்கத்துக்குப் பிறகு அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்து உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்துள்ளது.

எட்ஜ்பாஸ்டன் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு அரைசதக் கூட்டணி அமைத்த தொடக்க வீரர்களாகத் திகழ்ந்தனர் ராகுலும் தவனும், இருவரும் சேர்ந்து 60 ரன்கள் கூட்டணி அமைத்தனர்.

 

ஷிகர் தவண் ஷார்ட் பிட்ச் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்துகளை தைரியமாக கட் ஷாட்கள் ஆடி 3 பவுண்டரிகள் அடித்து ஆடினார், ஜேம்ஸ் ஆண்டர்சனை இருமுறை பிளிக் செய்து அடித்த பவுண்டரிகளுடன் 7 பவுண்டரிகள் அடித்து 35 ரன்கள் எடுத்த நிலையில் வோக்ஸ் ஒரு பந்தை குட்லெந்தில் பிட்ச் செய்து குறுக்காகப் பந்தை வெளியே எடுத்தார், தவண் ஸ்கொயர் ஆனார். விளைவு எட்ஜ் ஆகி பட்லரிடம் தஞ்சமடைந்தது.

ராகுல் இவரும் கொஞ்சம் தைரியமாக ஆடினார், இவரும் 4 பவுண்டரிகளுடன் 23 ரன்கள் எடுத்த நிலையில் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசிக் கொண்டிருந்த கிறிஸ் வோக்ஸ் ஒரு பந்தை உள்ளே கொண்டுவந்தார், கடுமையாக ஸ்விங் ஆன பந்தை ராகுல் கால்காப்பில் வாங்கினார், எராஸ்மஸ் அவுட் என்றார், பேசாமல் போவதை விட்டு புஜாரா தூண்ட ரிவியூ செய்து அதையும் விரயம் செய்தார்.

rahuljpg

ராகுல். | ஏ.பி.

 

மிகவும் சாதாரண உத்திதான் வெளியே 7-8 பந்துகளை ஸ்விங் செய்து விட்டு உள்ளே ஒரு பந்தை கொண்டு வந்தால் அவுட். ஒன்று முன்னங்காலை நீட்டி ஆடியிருக்க வேண்டும், அது அவுட் ஸ்விங்காகிவிடுமோ என்ற பயம், கிரீஸிற்குள்ளேயே நிற்கிறார், இல்லையெனில் ஸ்டீவ் ஸ்மித் போல் பின்னங்காலை ஆஃப் ஸ்டம்புக்கு நகர்த்தி பந்தை கடைசி நிமிடம் வரை ஸ்விங் ஆகவிட்டு தடுத்தாடலாம், ஸ்மித் இதனை ஃபைன் லெக் பவுண்டரிக்கே அடித்தாலும் அடிப்பார்.

புஜாரா மீண்டும் 2 பவுண்டரிகளுடன் 14 ரன்கள் எடுத்து கடினமாக உழைத்தார், அவருக்கு பிராட், ஸ்டோக்ஸ், வோக்ஸ் அனைவருமே இன்ஸ்விங்கர்களை வீசி படுத்தி எடுத்தனர். ஆனால் வோக்ஸ் ஒரு ஷார்ட் பிட்ச் பந்தை வீச அதைச் சரியாகவே ஹூக் செய்யும் முடிவை எடுத்தார், ஆனால் ஷாட் சரியாகச் சிக்காமல் டீப் ஸ்கொயர்லெக்கில் ரஷீத்திடம் கேட்ச் கொடுத்தார். இந்தப் பந்துக்கு விக்கெட்டா என்று வோக்ஸ் முகத்தில் ஒரே ஆச்சரியம். அடிக்க வேண்டிய பந்துகளை அடிக்காமல் விட்டுவிடுவது, இல்லையெனில் வெகு விரைவிலேயே இப்படிப்பட்ட ஹூக் ஷாட்களை அதற்கான தீவிர பயிற்சி இல்லாமல் ஆடுவது, இதுதான் இவரது அசட்டுத்தனம். புஜாரா ஆட்டமிழந்தவுடன் கோலி முகத்தில் வேதனையின் கீற்று தெரியத் தொடங்கியது.

விராட் கோலியை இன்ஸ்விங்கரில் படுத்தி எடுத்து வருகின்றனர், பிராட் பந்து ஒன்று கால்காப்பைத் தாக்க களநடுவர் நாட் அவுட் என்றார், பிராட் ரிவியூ செய்தார், ஆனால் நாட் அவுட் தீர்ப்பு தக்கவைக்கப்பட்டது, கோலி 4 ரன்களில் உள்ளார்.

கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினார்.

https://tamil.thehindu.com/sports/article24725790.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

இங்கிலாந்தில் 16 ஆண்டுக்கு பிறகு 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கோலி - ரகானே ஜோடி

 
அ-அ+

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், 16 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் கோலி மற்றும் ரகானே ஜோடி 150 ரன்களுக்கு மேல் சேர்த்துள்ளது. #ENGvIND #INDvENG

 
 
 
 
இங்கிலாந்தில் 16 ஆண்டுக்கு பிறகு 150 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த கோலி - ரகானே ஜோடி
 
நாட்டிங்காம்:
 
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது.
 
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. இதையடுத்து, இந்தியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. உணவு இடைவேளைக்குள் இந்தியாவின் முன்னணி ஆட்டக்காரர்கள் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். முதல் நாள் உணவு இடைவேளை வரையில் இந்திய அணி 26.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 82 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 4 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
 
உணவு இடைவேளைக்கு பிறகு களமிறங்கிய ரகானே விராட் கோலிக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார். இருவரும் நிதானமாக விளையாடினர். எளிதான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டவும் தவறவில்லை.
 
விராட் கோலி தனது 18-வது அரை சதத்தை கடந்தார். அவருடன் ஆடிய ரகானேவும்  13-வது அரை சதத்தை கடந்தார். அணியின் எண்ணிக்கை 241 ஆக இருக்கும்போது, ரகானே 81 ரன்களில் வெளியேறினார். கோலியும் ரகானேவும் இணைந்து 159 ரன்கள் சேர்த்தனர்.
 

https://www.maalaimalar.com/News/Sports/2018/08/18215522/1184789/after-16-years-indias-kohli--rahane-pair-partnership.vpf

's>

V Kohli c Stokes b Rashid 97 (152b 11x4 0x6) SR: 63.81

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோலியின் துர் அதிஸ்ட்டம் 97 இல் அவுட்.

Link to comment
Share on other sites

கோலி, ரகானே அபார ஆட்டம் - இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ரன்கள் குவிப்பு

 
அ-அ+

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் கோலி மற்றும் ரகானேவின் அபார ஆட்டத்தினால் இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ரன்கள் குவித்துள்ளது. #ENGvIND #INDvENG

 
 
 
 
கோலி, ரகானே அபார ஆட்டம் - இந்திய அணி முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 307 ரன்கள் குவிப்பு
 
நாட்டிங்காம்:

இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்தியா அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், லோகேஷ் ராகுலும் இறங்கினர்.
இந்த ஜோடி மிகவும் நிதானமாக ஆடி அரை சதத்தை கடந்தது. அணியின் எண்ணிக்கை 60 ஆக இருக்கும்போது ஷிகர் தவான் 7 பவுண்டரிகளுடன் 35 ரன்களில் அவுட்டானார். அவரை தொடர்ந்து புஜாரா களமிறங்கினார்.

சிறிது நேரத்தில் பொறுமையுடன் விளையாடிய லோகேஷ் ராகுல் 23 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய புஜாராவும் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. அவர் 14 ரன்களில் வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய ரகானே விராட் கோலிக்கு சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்து விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டார்.
இருவரும் நிதானமாக விளையாடினர். எளிதான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டவும் தவறவில்லை.

தொடர்ந்து சிறப்பாக விளையாடிய விராட் கோலி தனது 18-வது அரை சதத்தை கடந்தார். அவருடன் ஆடிய ரகானேவும்  13-வது அரை சதத்தை கடந்தார். அணியின் எண்ணிக்கை 241 ஆக இருக்கும்போது, ரகானே 81 ரன்களில் வெளியேறினார்.

அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலியும் ரகானேவும் இணைந்து 159 ரன்கள் சேர்த்தனர். 16 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்தில் 150 ரன்களை குவித்த ஜோடி எனும் சாதனையை விராட் கோலி - அஜிங்க்யா ரகானே ஜோடி படைத்தது.
 
ஆனால், முதல் டெஸ்டை போலவே இந்த டெஸ்டிலும் சதம் விளாசுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 97 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரஷித் சுழலில் ஸ்டோக்சிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
 
201808182328370980_1_55454565._L_styvpf.jpg

இதைத்தொடர்ந்து, இன்றைய டெஸ்ட் மூலம் அறிமுகமான இளம் வீரர் ரிஷப் பண்ட் 6-வது விக்கெட்டுக்கு பாண்டியாவுடன் ஜோடி சேர்ந்தார். இருவரும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை நிதானத்துடன் எதிர்கொண்டு விளையாடினர்.

எனினும், இன்றைய ஆட்டம் முடிய சில நிமிடங்கள் முன்னதாக 18 ரன்கள் அடித்திருந்த பாண்டியா, ஆண்டர்சன் வீசிய 86-வது ஓவரின் கடைசி பந்தில் பட்லரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

இதனால், 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் முடிவில் 6 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு இந்திய அணி 307 ரன்களை குவித்தது. 32 பந்துகளில் 22 ரன்கள் அடித்த பண்ட் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

இங்கிலாந்து அணி தரப்பில் வோக்ஸ் 3 விக்கெட்டுக்களையும், ஆண்டர்சன், பிராட் மற்றும் ரஷித் ஆகியோர் தலா 1 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர். #ENGvIND #INDvENG

https://www.maalaimalar.com/News/TopNews/2018/08/18231827/1184800/India-and-England-at-Nottingham-Ind-3076.vpf

Link to comment
Share on other sites

தைரியமாக ஆடியதால் பிழைத்த இந்திய அணி: 3 ரன்களில் சதத்தைக் கோட்டை விட்ட கோலி; முதல் நாள் முடிவில் 307/6

 

 
kohli-rahane

சதக்கூட்டணி அமைத்த கோலி, ரஹானே. | ஏ.பி.

ட்ரெண்ட் பிரிட்ஜில் நடைபெறும் 3வது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 306 ரன்கள் எடுத்துள்ளது.

இப்படித்தான் இந்திய அணி ஆட வேண்டும் என்று இங்கிலாந்தில் எதிர்பார்க்கப்பட்டது, ஆனால் பம்மிப் பம்மி ஆடியதில் முதுகில் அடி விழுந்த பின் முதுகெலும்பு விழித்துக் கொண்டது.

 

ஷிகர் தவண் தன்னுடைய உண்மையான திறன் என்னவென்பதை உணர்ந்து கொண்டு பந்துக்காக காத்திருந்து ஆடினார். இல்லையெனில் ஐபிஎல் மட்டைப் பவுலர்களைப் போல் உலகின் சிறந்த பவுலர்களையும் ஆடி வாங்கிக் கட்டிக்கொள்வார்.

இம்முறை தவறிழைத்தது இங்கிலாந்து. ஆதில் ரஷீத்துக்குப் பதிலாக சாம் கரனை அணியில் எடுத்திருக்க வேண்டும். ஆனால் ரஷீத் சுத்த வேஸ்ட் என்று விமர்சனங்கள் எழுந்த பிறகே ரஷீத்தைத் தூக்கினால் விமர்சனங்களுக்கு அடிபணிந்ததாகி விடும், அப்படி விட்டுவிடுமா இன்றைய கோலியிச பாரம்பரியம், ஒரு வகையில் கோலியிசம் ரூட்டுக்கும் இருக்கும்தானே?

முதல் ஒருமணி நேரத்தில் விக்கெட்டை இழக்காமல் ஆடியது இந்த அணியைப் பொறுத்தவரை சாதனைதான், அதிலும் ஷார்ட் பிட்ச் பந்தை அதற்குரிய முறையில் கட் ஷாட் ஆடி 3 பவுண்டரிகளை அடித்த ஷிகர் தவண், ஜேம்ஸ் ஆண்டர்சன் அரிய தவறு இழைத்து லெக் திசையில் வீசும் போது 2 பவுண்டரிகள் அடித்து 7 பவுண்டரிகள் எடுத்த பிறகு அந்தப் பந்து எட்ஜ் ஆவதைத் தவிர வேறு வழியில்லை என்று ஆட்டமிழந்து வெளியேறினார்.

கே.எல்.ராகுல் தொடக்கக் கணங்களில் ஒன்றும் புரியாமல் ஆடினார், ஆனால் அவரும் அடிக்க வேண்டிய பந்துகளை அடிப்பதில் சோடை போகவில்லை. ஆனாலும் மிகவும் சாதாரணமான உத்தியான 5-6 பந்துகளை அவுட் ஸ்விங் செய்து விட்டு அதே லெந்தில் ஒரு பந்தை உள்ளே கொண்டு வந்தால் எல்.பி. அல்லது பவுல்டு ஆவது என்ற ரீதியில் ராகுல் வோக்ஸிடம் வெளியேறினார். புஜாராவும் 14 ரன்களுக்கு நன்றாகவே ஆடினார். கடைசியில் ஒன்றிரண்டு ஆண்டுகளாக ஆடிப்பழக்கமில்லாத ஹூக் ஷாட்டை வோக்ஸ் பந்தில் ஆடி லெக் திசையில் டீப்பில் குறிபார்த்து கையில் அடித்து வெளியேறினார். உணவு இடைவேளையின் போது 82/3 என்று கொஞ்சம் தடுமாறித்தான் போனது. கிறிஸ் வோக்ஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கோலி, ரஹானே அபாரக் கூட்டணி:

உணவு இடைவேளைக்குப் பிறகு கோலி, ரஹானே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் விராட் கோலி இருமுறை இன்ஸ்விங்கரில் கால்காப்பில் வாங்கினார். ஒருமுறை எல்.பி.காக ரிவியூவில் பிழைத்தார் கோலி.

ரஹானே தன் தவறுகளைத் திருத்திக் கொண்டு பந்தை அதன் நேர் கோட்டில் சந்தித்தார். பந்தை தன்னிடம் வரும் வரை காத்திருந்தார்.

மேலும் தைரியமாக ஆடினார், புல்ஷாட், கட்ஷாட்களை துல்லியமாக ஆளில்லாத இடங்களில் அடித்தார். குறிப்பாக பேக்ஃபுட் ஆட்டத்தை இந்திய அணியினர் மீண்டும் கண்டுபிடித்துக் கொண்டனர்.

சூழ்நிலையும் கொஞ்சம் சாதகமாக இருந்தது, சூரிய ஒளி நன்றாக இருந்தது பந்துகள் ஸ்விங் குறைந்தது, பென் ஸ்டோக்ஸ் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசி லைனுக்குத் திணறினார்.

ரஹானேயும் இருமுறை எட்ஜ் செய்தார், ஆனால் பந்து பீல்டர் கைக்குச் செல்லவில்லை. இதனையடுத்து ரஷீத்திடம் பந்து கொடுக்கப்பட்டது, ஆனால் பயனில்லை. ஆனால் ரஷீத் 5 ஓவர்கள் 29 ரன்கள் கொடுத்தார்.

கோலியும் மெதுவே தனது கவர் ட்ரைவ், ஸ்கொயர் ட்ரைவ்களைக் கண்டு கொண்டார். ட்ரைவ்கள், கட்கள், புல்கள் என்று இருவரும் அரைசதம் கடந்தனர். ரஹானே 57 ரன்களில் இருந்த போது வோக்ஸ் பந்தை ஒரு அரக்க கட் ஷாட் ஆடினார், ஆனால் ஜேம்ஸ் ஆண்டர்சன் கடினமான வாய்ப்பைத் தவறவிட்டார். பந்து பழையதாகிக் கொண்டிருந்தது. புதிய பந்து எடுப்பதற்குள் ரன்களை அடிக்க வேண்டும் என்று கொஞ்சம் ஆக்ரோஷம் காட்டினார்கள். இதில் ரஹானே 81 ரன்களில் பிராட் வீசிய பந்தை எட்ஜ் செய்து சிக்கினார், பிராடும் கொஞ்சம் ரஹானேவை ஒர்க் அவுட் செய்தார். குக் கடைசி நொடியில் இடது புறம் டைவ் அடித்து கேட்ச் எடுத்தார். ரஹானே 12 பவுண்டரிகளை அடித்திருந்தார்.

2002க்குப் பிறகு இங்கிலாந்தில் சதக்கூட்டணி அமைத்ததில் இருவரும் சேர்ந்து 159 ரன்களை 4வது விக்கெட்டுக்காக எடுத்து அணியை வலுப்படுத்தினர்.

விராட் கோலி 152 பந்துகளில் 11 பவுண்டரிகளுடன் 97 ரன்கள் சேர்த்து இன்னொரு உலகத்தர சதத்துக்குத் தயாராக இருந்த போது ரஷீத் பந்து ஒன்று திரும்பி லெக்ஸ்பின்னாக கோலி கவர் டிரைவ் முயற்சியில் எட்ஜ் செய்தார். கோலி வெளியேறினார்.

பந்து பழையதாக இருக்கும் போதே, ரஹானே ஆட்டமிழந்த பிறகே ரிஷப் பந்த்தை இறக்கியிருக்க வேண்டும், ஆனால் ஹர்திக் பாண்டியாவை இறக்கி சரியாக புதிய பந்து வரும் நேரத்தில் ரிஷப் பந்த்தை இறக்குகின்றனர், இது கூடவா ஒரு கேப்டனுக்குப் புரியாது?

ஆனால் பந்த் இறங்கியவுடன் ஆதில் ரஷீத்தை நேராக அவரது தலைக்கு மேல் தூக்கி சிக்சருக்கு அடித்தார். அறிமுகப் போட்டியில் முதல் ரன்களையே சிக்சர் அடித்து எடுத்தார் ரிஷப் பந்த். ஆனால் அதன் பிறகு பந்தை ஆடினார், விட்டார். பிறகு ஒரு அபாரமான மிட்விக்கெட் பிளிக் பவுண்டரி அடிதார். கடைசியில் 32 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

பாண்டியா 18 ரன்கள் எடுத்திருந்த போது ஆண்டர்சன் பந்தில் வழக்கமான எட்ஜ் செய்தார். பட்லர் கேட்ச் எடுத்தார். வேஸ்ட் விக்கெட். இந்தியா முதல் நாள் ஆட்டத்தில் 307/6.

https://tamil.thehindu.com/sports/article24729778.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.