Jump to content

என்னிடம் சகல ஆவணங்களும் உள்ளது- பகிரங்கமாக வெளிப்படுத்துவேன்- அஸ்மின்!!


Recommended Posts

என்னிடம் சகல ஆவணங்களும் உள்ளது- பகிரங்கமாக வெளிப்படுத்துவேன்- அஸ்மின்!!

 

 

asmin.jpg

 
 
 
 

பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்து வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் கைத்துப்பாக்கி பெற்றுக் கொண்டமைக்கான ஆவணங்கள் அனைத்தும் என்னிடம் உள்ளன. அவற்றை அடுத்த மாகாண சபை அமர்வில் பகிரங்கப்படுத்துவேன் என்று வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்மின் தெரிவித்தார்.

வடக்கு மாகாண சபையின் அமர்வில் வடக்கு மாகாண சபையின் அமைச்சர் அனந்தி பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெற்று கைத்துப்பாக்கி வைத்திருப்பதாக பகிரங்கமாக கூறியிருந்தார். எனினும் இதனை அனந்தி மறுத்து ஊடகங்களுக்கு செய்திக்கு குறிப்பு அனுப்பியிருந்தார். இந்நிலையில் அஸ்மினை தொடர்பு கொண்டு கேட்ட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.

அமைச்சர் அனந்தி தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்காக அனுமதி கோரியுள்ளார். அதன் படி அவர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கைத்துப்பாக்கி வைத்துள்ளார். இதனை அவர் மறைக்க ஊடகங்களுக்குப் பொய்யான தகவல்களை வழங்கி வருகின்றார் என்றும் அஸ்மின் தெரிவித்தார்.

http://newuthayan.com/story/00/என்னிடம்-சகல-ஆவணங்களும்-உள்ளது-பகிரங்கமாக-வெளிப்படுத்துவேன்-அஸ்மின்.html

Link to comment
Share on other sites

3 hours ago, நவீனன் said:

 

அமைச்சர் அனந்தி தமக்கு உயிர் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி பாதுகாப்பு அமைச்சின் அலுவலகத்தில் கைத்துப்பாக்கி வைத்திருப்பதற்காக அனுமதி கோரியுள்ளார். அதன் படி அவர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கைத்துப்பாக்கி வைத்துள்ளார்.

 

இதில் உங்களுக்கு என்ன பிரச்சினை அஸ்மின்? பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் கைத்துப்பாக்கி வைத்திருப்பவர்கள் அதனை வெளியில் சொல்லக் கூடாது எனக் கூட அறிவுருத்தப்பட்டிருக்கலாம் , அவர் எல்லாம் சட்டப்படி தானே செய்கிறார். நீங்கள் ஏன் அந்த ஆவணங்களைப் பெற்றுக் கொண்டீர்கள்.........? யாருடைய ஏவலின் கீழ் செய்ற்படுகிறீர்கள்? 
தமிழைரைப் பிரித்து, அவர்களின் ஒற்றுமையை சிதைக்க வேண்டும் என  செயற்படுவர்களின்  நேரடி கைக்கூலியாக இயங்கும் உதயன் பத்திரிகையும் இப்படியான செய்திகளுக்கு அதி முக்கியதுவம் கொடுப்பார்கள்......, 

Link to comment
Share on other sites

அஸ்மினுக்கு எதிராக வழக்குத் தொடரவுள்ளேன் – அனந்தி சசிதரன்

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ananthy-sasitharan.jpg?resize=464%2C300
என்னிடம் துப்பாக்கி உள்ளதாக பொய்யான கருத்தினை வெளியிட்டுள்ள மாகாண சபை உறுப்பினர் அஸ்மினுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரவுள்ளேன் என வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்தார்.

 

யாழ்.பிரதான வீதியில் அமைந்துள்ள அவருடைய அமைச்சின் அலுவலகத்தில் இன்று புதன்கிழமை பிற்பகல் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

வடக்கு மாகாணத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர்களின் பாதுகாப்பு இப்போது கேள்விக்குறியாக உள்ளது.

வடக்கில் உள்ள ஒவ்வொரு பெண்களும் தமது பாதுகாப்பிற்காக துப்பாக்கியை வழங்குமாறும், அதனை பயன்படுத்துவதற்கு அனுமதியை தருமாறு கோரும் அளவிற்குத்தான் பெண்களின் பாதுகாப்பு நிலை உள்ளது.

குறிப்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் அஸ்வின் போன்றவர்கள் இங்கிருக்கின்ற நிலையில் துப்பாக்கி பெண்களிடம் இருக்க வேண்டும் என்ற நிலையும் தற்போது தோன்றியுள்ளது.

நான் ஆயுதத்தை அறியதவள் இல்லை. துப்பாக்கி என்னிடம் உள்ளது என்றால் அதை நிரூபிக்க வேண்டும். என்னிடம் எந்த ஆயுதமும் இல்லை. என்னுடைய கைகளும், வார்த்தைகளும்தான் என்னுடைய ஆயுதமாக உள்ளன. விசேடமாக அனுமதி பெற்று ஆயுதம் இருக்குமாக இருந்தால் வெளிப்படையாக செல்வதில் பயமில்லை.

நான், முதலமைச்சர், சிவாஜிலிங்கம், சித்தார்த்தன், கஜதீபன் போன்றவர்கள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில்தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு 2 போனஸ் ஆசனங்கள் கிடைத்தது. அந்த போனஸ் ஆசனத்தில் மாகாண சபை உறுப்பினராக வந்த அஸ்மின் பாராளுமன்ற உறுப்பினர்களின் விசுவாசத்திற்காக எங்களைப் ஆதாரம் இல்லாத அவதூறுகளையும், வாந்திகளையும் கட்டவிழ்த்துக் கொண்டிருக்கின்றார்.

இது கண்டிக்கத்தக்க விடயம்.
என்னிடத்தில் துப்பாக்கி உள்ளது என்று சொல்லியுள்ள அஸ்மின் என்னிடத்தில் இருந்து துப்பாக்கியை எடுத்து காண்பிக்க வேண்டும். அது தவிர பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கடிதம் வந்திருந்தால் அந்த அனுமதி கடிதம் வந்திருந்தால், நான் துப்பாக்கி பெற்றுக் கொண்டதற்கான ஆவணமும் இருக்க வேண்டும்.

அவ்வாறான ஆவணங்கள் இருந்தால் அவர் அதனை வெளிப்படுத்தலாம். என்னுடைய சிறப்புரிமையை அஸ்மின் மீறியது மட்டுமல்லாமல், என்னை ஆயுததாரியாக சித்தரித்திருப்பது தொடர்பில் அவருக்கு எதிரான வழக்கு ஒன்றினை பதிவு செய்ய உள்ளேன்.

நாளை என்னுடைய சட்டத்தரணிகள் கொழும்பில் இருந்து வருகைதரவுள்ளனர். அவர்களுடன் சட்ட ஆலோசனை பெற்ற பின்னர் அஸ்மினுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன் என்றார்.

http://globaltamilnews.net/2018/88323/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நேரம் கிடைக்கும் போது காங்கேசந்துறை முதல் தாமரை கோபுரம் வரை நான் எடுத்த படங்களையும் இணைக்கிறேன்.  வாசகர்கள் முடிவு செய்யட்டும். அதான் கொக்கதடில மாம்பழம் சிக்கீட்டே. மரநாய் ஏன் கிடந்து உருளுது🤣
    • இந்த வீழ்ச்சிக்கு என்ன காரணம் என எண்ணுகிறீர்கள்?
    • யாராவது தினமுரசில் அற்புதன் எழுதிய இந்த தொடரை வாசிக்காமல் விட்டிருந்தால் இந.த தொடரை நிச்சயமாக பார்க்க வேண்டும்.ஏனெனில் புலிகளுக்கு நேர் எதிரான அணியிலிருந்த ஒருவரால்த் தான் இது எழுதப்பட்டது. நான் இந்த பத்திரிகையை தொடர்ந்து வாங்கிய போது பலரும் மறைமுகமாக ஈபிடிபிக்கு ஆதரவளிப்பதாக கூறினார்கள். நிறைய பேருக்கு ஆரம்பகாலத்தில் போராட்டத்துக்கு வித்துப் போட்டவர்களையும் வித்துடலானவர்களையும் இன்னமும் தெரியாமல் இருக்கிறார்கள்.
    • தென்னாபிரிக்காவில் பேருந்து ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்துள்ளனர். அதிவேகமாக சென்ற அந்த பேருந்து செல்லும் வழியில் மாமட்லகலா என்ற இடத்தில் வேகத்தக் கட்டுப்படுத்த முடியாமல் அங்குள்ள பாலத்தில் மோதி தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு இருந்து 165 அடி பள்ளத்தில் விழுந்தது. அங்குள்ள பாறையில் விழுந்த வேகத்தில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ளது. இதில் பேருந்தில் பயணித்த 45 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அதிலிருந்தவர்களில் நல்வாய்ப்பாக 8 வயது சிறுமி மட்டும் படுகாயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்தில் பேருந்து முற்றிலும் எரிந்து நாசமானதில், அதில் இருந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு கருகிப்போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பலரது உடல்கள் பேருந்தின் அடிப்புறத்தில் சிக்கியுள்ளன. அவற்றை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தென்னாபிரிக்காவை உலுக்கியுள்ள இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அந்நாட்டின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இரங்கல் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/297513
    • மிகவும் மேலோட்டமாக விடயங்களை விளங்கிக் கொண்டு இங்கே பகிர்கிறீர்கள். மேற்கு வங்கம் பங்களாதேஸ் பிரச்சினையில் அக்கறையாக இருந்தது உண்மை தான், ஆனால் அந்த மாநிலம் சொல்லித் தான் இந்திரா பங்களாதேசைப் பாகிஸ்தானில் இருந்து பிரித்தார் என்பது தவறு. இந்திரா, பாகிஸ்தானுடன் போர் நடந்த காலப் பகுதியில், பாகிஸ்தானைப் பலவீனப் படுத்த எடுத்துக் கொண்ட முன்னரே திட்டமிட்ட ஒரு நடவடிக்கை இது. இலட்சக் கணக்கான பங்களாதேச அகதிகள் மேற்கு வங்கத்தினுள் குவிந்ததும் ஒரு சிறு பங்குக் காரணம். இந்தியாவை அமெரிக்காவின் US Trade Representative (USTR) என்ற அமைப்பு வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து அகற்றியிருப்பது உண்மை. ஆனால், இது IMF போன்ற உலக அமைப்புகளின் முடிவல்ல. இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்கும் போது, அமெரிக்காவின் USTR அமைப்பு இந்தியாவின் உற்பத்திப் பொருட்களைப் பற்றி விசாரிக்கவும், சட்டங்கள் இயற்றவும் கூடியவாறு இருக்க வேண்டும். இப்படிச் செய்ய வேண்டுமானால் இந்தியாவை இந்தப் பட்டியலில் இருந்து அகற்றினால் தான் முடியும், எனவே அகற்றியிருக்கிறார்கள். இதன் அர்த்தம் இந்தியா உலக வர்த்தகத்தில் அதிக பங்கைச் செலுத்த ஆரம்பித்திருக்கிறது என்பது தான், எனவே இந்தியா வர்த்தக ரீதியில் வளர்கிறது என்பது தான் அர்த்தம். ஆனால், மனித அபிவிருத்திச் சுட்டெண்ணைப் (HDI) பொறுத்த வரை இந்தியா இன்னும் வளர்ந்து வரும் நாடு தான். இந்தியாவை விடப் பணக்கார நாடான கட்டாரும் வளர்ந்து வரும் நாடு தான்.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.