Jump to content

தினேஷ் வெளியேற்ற்ப்பட்டார்:இரவோடு இரவாக IBC இலிருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊடகவியலாளர்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தினேஷ் வெளியேற்ற்ப்பட்டார்:இரவோடு இரவாக IBC இலிருந்து பணி நீக்கம் செய்யப்படும் ஊடகவியலாளர்கள்

ibctamil-300x169.jpgஉடகத் துறையில் நீண்ட வரலாற்றைக்கொண்ட ஊடகவியலாளர் தினேஷ் குமார் ஐ.பி.சி (IBC)தமிழ் தொலைக்காட்சியில்ருந்து நீக்கப்பட்டார். அவரது நிகழ்ச்சிகள் அனைத்தையும் நிறுத்துமாறு கட்டளையிட்ட ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியின் நிர்வாகம் ஓர் இரவிற்குள் இந்த முடிவை எடுத்திருந்தது. இன்று சனிக்கிளமை நடைபெறவிருந்தத நேருக்கு நேர் நிகழ்ச்சியை நிறுத்துமாறு பணித்த ஐ.பி.சி தமிழ், இறுதியாக நடைபெற்ற அவரது நேரலை நிகழ்ச்சி ஒன்றின் பின்னர் நீக்கப்பட்டார்.

ஜி.ரி.வி மற்றும் தீபம் தொலைக்காட்சி சேவைகளிலும் ஊடகவியலாளராகப் பணியாற்றிய தினேஷ், அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார்.

தினேஷ் இற்கு முன்னதாக ஐ.பி.சி இல் பணியாற்றிய பல முழு நேர ஊடகவியலாளர்களும் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

இன்று, புலம்பெயர் நாடுகளில் தொழில் முறை ஊடகவியலாளர்கள், ஐ.பி.சி இல் மட்டுமே தங்கியிருக்க வேண்டிய நிலை தோன்றியுள்ளதால், இவர்களின் அடிப்படை வாழ்க்கை இன்று கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு தீபம் தொலைக்காட்சியினை உள்வாங்க முற்பட்ட இன்றைய ஐ.பி.சி தொலைக்காட்சியின் உரிமையாளர், அம்முயற்சியில் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக ஐ.பி.சி என்ற வானொலியைக் கொள்வனவு செய்து அதனை ஐ.பி.சி தொலைக்காட்சியாக மாற்றினார்.

தமிழ் வின் உட்பட அதனோடு இணைந்த பல்வேறு இணையங்களையும் அண்மையில் உரிமையாக்கிக்கொண்ட ஐ.பி.சி நிர்வாகம் இன்று புலம்பெயர் தமிழ் ஊடகக் ‘கோப்ரட்’ ஆக மாற்றம் பெற்றது.

ஆரம்பத்தில் பல்வேறு ஊடகங்களிலிருந்த ஊடகவியலாளர்களையும் உள்வாங்கிக்கொண்ட ஐ.பி.சி, படிப்படியாக அவர்களின் வேலை நேரங்களைக் குறைக்க ஆரம்பித்தது. வேலைக் குறைப்பின் பின்னரும், வேறு தொழில் சார் ஊடகங்கள் அற்ற நிலையில், ஐ.பி.சி இல் தொங்கிக்கொண்டு வாழ்கை நடத்த வேண்டிய நிலைக்கு ஊடகவியலாளர்கள் உந்தப்பட்டனர்.

ஊடகவியலாளர்கள் மத்தியிலிருந்தோ மக்கள் மத்தியிலிருந்தோ எதிர்ப்புக்கள் எதுவும் வெளியாகாத நிலையில் தமது ஊழியர்கள் நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்ய ஐ.பி.சி ஆரம்பித்தது.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊடகவியளார்களின் வெற்றிடத்தை நிரப்ப, மலிந்த கூலியில் புதிய ஊடகவியலாளர்களை உள்வாங்கிக்கொண்ட ஐ.பி.சி, தனது யாழ்ப்பாண கிளையைப் பயன்படுத்தியும், நிகழ்ச்சிகளைத் தயாரிக்க ஆரம்பித்துள்ளது.

தவிர, அரசியல் நிகழ்ச்சிகளை பொழுது போக்கு நிகழ்ச்சிகளாக மாற்றி, புதிய மாற்றங்களையும் ஐ.பி.சி தொலைக்காட்சி உருவாக்க ஆரம்பித்துள்ளது.

ஒரு இரவிற்குள் ஐ.பி.சி இலிருந்து தினேஷ் நீக்கப்பட்டமைக்கான காரணங்கள் எதனையும் முன்வைக்காத ஐ.பி.சி உரிமையாளர்கள், ஐ.பி.சி இன் கொள்கை வரபு ஒன்றைத் தயாரித்த பின்னர் தினேஷ் ஐ தொடர்பு கொள்வதாகக் கூறியுள்ளனர்.

ஐ.பி.சி இலிருந்து ஊடகவியலாளர்கள் தொடர்ந்து நீக்கப்படுவதற்கு எதிரான போராட்டங்கள் எதுவும் இதுவரை நடத்தப்படவில்லை எனினும் புலம்பெயர் அமைப்புக்களின் ஊடகக் குரலாக தினேஷ் போன்றவர்கள் இதுவரை செயற்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://inioru.com/ibc-tamil-overnight-redundancies/

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த வரையில் தினேஷ் பகுதி நேர தொகுப்பாளர். முழு நேர உழைப்பாளர் இல்லை.

IBC radio, GTV, oru paper, thamilan போன்ற ஊடகங்களின் காலத்தில் இருந்தே தொகுப்பாளர்கள், ஒருபோதுமே இந்த வேலைகளை நிரந்தர வருமானம் தரும் ஒரு வேலையாக கருதவில்லை.

ILC radio எனும்  ஊடகம் சகலருமே தொண்டு அடிப்படையில் வேலை செய்தனர், செய்கின்றனர். 

ஆரம்பத்தில் subscription மூலம் வருமானம் பார்த்த GTV முதலில் இலவசமாகியது. அதனால் தீபம் வேறு வழி இன்றி இலவசமாகியது. 

இன்றய தேதியில் விஜய், supersinger நிகழ்ச்சி காரணமாக ubscription மூலம் வருமானம் பார்க்கிறது. ஏனையவை விளம்பரத்தினை மட்டுமே நம்பி உள்ளன.

இந்த நிலையில் செலவைக் குறைக்க யாழ்ப்பாணம் போனது ஐபிசி. இது lebera சார்பு ஊடகம். 

மறுபுறம் லைக்கா சார்பில் ஆதவன் இயங்குகிறது.

இந்த இரு நிறுவனங்களில், முதலில் ஊடகத்துறையினை முக்கியமாக ஐபிசி யை லபக்கியது lebera.

வேலை நிறுத்தம் போராடடம் செய்யுமளவுக்கு, ஊடக வியலாளர்களும் பெரும் தொகையில் இல்லை. ஊடக நிலையங்களும் பெரிய நிதி நிலையில் இல்லை.

மேலும் வேலை நிறுத்தம் செய்யுமளவுக்கு சட்டத்தில் அனுமதிக்கும், பதிவான தமிழ் ஊடகவியலாளர் சங்கமும் இல்லை.

வெளியே நின்று முதலாளி ஒழிக என்றால், public nusense case ல் போலீஸ் கொண்டு போகும்.

அடுத்ததாக, தமிழ் நாட்டு சினிமா என்னும் அரைத்த மாவினையும், இலங்கை அரசியல் என்னும் போரடித்த விடயத்தினையும் போட்டு கடாசினால் மக்கள் எங்கே வந்து கேட்கப் போகின்றனர்.

ஊடகவியலில் பல அருமையான விடயங்கள் உள்ளன. இங்கே பல விடயங்களை தயாரித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழும் நாடுகளில் விற்க முடியும். 

சில வருடங்களுக்கு முன்னர், ஐபிசி காரர்கள் கமெராவை தூக்கிக் கொண்டு ஸ்காட்லாந்து போன்ற பல பகுதிகளுக்கு சென்றார்கள். இதனையே தொடர்ந்து செய்து, தமிழக tv நிலையங்களுக்கு கொடுத்து barter முறையில் நிகழ்ச்சிகளை வாங்கி போட்டிருக்கலாம்.

free lancing முறையில் தினேஷ் போன்ற ஊடகவியலாளர்கள் தாமே நிகழ்ச்சிகளை எடுத்து, tv நிலையங்களுக்கு கொடுத்து பணம் பார்க்கலாமே.

பிபிசி கூட இந்த முறையில் தான் நிகழ்ச்சிகளை வாங்குகிறது. Mr Khan, Baskar, Meera போன்றவர்கள் கூட இவ்வாறே உழைக்கின்றனர்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு இலட்சம் புலம்பெயர் தமிழர்கள் இருந்தும்... அவர்களுக்கு என்று ஒரு வலுவான ஊடகமே கிடையாது. அங்கும் புடுங்குப்பாடுகளும்.. காட்டிக்கொடுப்புகளும்.. விட்டிட்டு ஓடுதல்களும்.. விரட்டியடித்தல்களும் தான்.

ஐ ரி என்.. ரி ரி என்...ஜி ரி வி.. தீபம்.. ஐ பி சி.. ஆதவன்.. இப்படின்னு... ஆயிரத்தெட்டு முளைச்சதும் அழிஞ்சதும்... இதே ஆக்களின் நிலையில்லாத மனப்பான்மையால் தான்.

தமிழர்களின் காணப்படாத ஒரு காரணியான ஒற்றுமை என்பதே.. இத்தனைக்கும் காரணமாகும். அதுக்கு முதல் காரணம்.. சுயநலம். 

எமது அழிவுகளுக்கு நாமே தான் காரணம்.. என்பதற்கு இவை நல்ல உதாரணம். ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தினேஷ் நீக்கம்: ஐபிசி தமிழ் தொலைக்காட்சியின் ஒப்புதல் வாக்குமூலம்!

ibctamil-300x169.jpg

ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சியிலிருந்து அதன் பிரதான ஊடகவியலாளர் தினேஷ் நீக்கப்பட்ட சம்பவம் புலம்பெயர் சூழலில் பல்வேறு தளங்களில் விவாதப் பொருளாக மாற்றமடைந்துள்ளது. தினேஷ் இற்கு முன்பதாகவே பல ஊடகவியலாளர்கள் உள்வாங்கப்பட்டு திடீரெனப் பதவி நீக்கம் செய்யப்பட்டனர். கருணாகரன், இரவி அருணாசலம், யோகா தினேஷ், பவித்ரா, அனாஸ்… போன்றவர்களின் இறுதியில் தினேஷ் இன் பதவி நீக்கம் முக்கியத்துவம் பெற்றமைக்கு இரண்டு பிரதான காரணங்களை உண்டு, முதலாவதாக தினேஷ் வெளியேற்றப்பட்ட போது அது ஐ.பி.சி இன் கொள்கை சார்ந்த பிரச்சனையாக முன்வைக்கப்பட்டது. ஏனையவர்கள் வெளியேற்றப்பட்ட போது அல்லது வேலை நேரக் குறைப்புச் செய்யப்பட்ட போது ஐ.பி.சி இழப்பில் இயங்குவதாகவும் அதனை ஈடு செய்வதற்காக அந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மாறாக தினேஷ் இன் வெளியேற்றம் தொலைக்காட்சி நிர்வாகத்தின் கொள்கை சார்ந்த பிரச்சனையாக முன்வைக்கப்பட்டது மட்டுமன்றி, நிர்வாகம் தனது கொள்கையை வரையறுத்த பின்னர் தினேஷை தொடர்பு கொள்வதாகவும் கூறப்பட்டது.

இரண்டாவதாக தினேஷ் முழுவதுமாக அரசியல் கோட்பாடு சார்ந்த விவாத நிகழ்ச்சிகளையே நடத்தி வந்தார். அதிலும் பொதுவாக இலங்கை அரசிற்கு எதிரானதும், சில வேளைகளில் அதிகாரவர்க்கத்திற்கும் எதிரான நிகழ்ச்சிகளே விவாதப் பொருளாக்கப்பட்டிருந்தன.

இறுதியாக 11.07.2018 நடைபெற்ற புது வெளிச்சம் விவாத நிகழ்ச்சியில் தினேஷ் இன் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போது ஐ.பி.சி தொடர்பான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டதால் மறு நாளே தினேஷ் நீக்கப்பட்டார். அதே நாளில் பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பிற்கு தயார் செய்யப்பட்ட மற்றொடு விவாதம் ஐபிசி தொடர்பாகப் பேசாத போதும் அது ஒளிபரப்பப்படாமல் இருட்டடிப்புச் செய்யப்பட்டது. அந்த ஒளிப்பதிவில் கலந்து கொண்ட அனைவரையும் ஐபிசி அவமானப்படுத்தியுள்ளது என்பது வேறு விடையம்.

தினேஷ் இன் வெளியேற்றம் என்பது பல்வேறு சந்தேகங்களைத் தோற்றுவிக்கிறது. முதலாவதாக இது கொள்கை அடிப்படையிலான வெளியேற்றம் என்பதால், முன்னதாக வெளியேற்றப்பட்டவர்களும் அதே அடிப்படையிலேயே நீக்கப்பட்டிருந்தாலும், பொருளாதாரக் காரணங்களே அதற்குக் காரணம் எனக் கூறப்பட்டதா என்ற சந்தேகம்.

இனி, நீக்கப்பட்டமைக்கான காரணம் கொள்கை அடிப்படையிலானது என ஐபிசி நிர்வாகம் பொத்தாம் பொதுவில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தாலும், குறிப்பாக எந்தப்பகுதியை அது சார்ந்திருக்கிறது என்பதை குறிப்பிடவில்லை.

முதலில், சுய நிர்ணைய உரிமைக்கான போராட்டம் சார்ந்ததா, ஊடக சனநாயகம் சார்ந்ததா, அதிகாரவர்க்க எதிர்ப்பு தொடர்பானதா என்ற குறிப்பான விளக்கத்தை ஐபிசி இடமிருந்து பெற்றாகவேண்டும்.

அதனை ஐபிசி தெளிவுபடுத்தினால் அதன் நிர்வாகத்தின் மீது சமூக ஊடகங்களில் எழுப்பப்படும் தேவையற்ற சந்தேகங்களை தவிர்க்க முடியும்.

ஐபிசி தொடர்பான மேலும் தரவுகளுடனான பதிவுகளை வெளியிடுவதற்கும் முன்பதாக வெளிப்படையான உரையாடலுக்கு ஐபிசி இன் ஏனைய ஊடகவியலாளர்களையும், நிர்வாகத்தையும் இனியொரு சார்பில் அழைக்கிறோம்.
ஊடகங்களின் நம்பகத்தன்மையை ஐபிசி கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறது என்றால், அதன் இன்றைய ஊடகவியலாளர்களின் மவுனம்அருவருப்பானது.


தொடரும்..

 

http://inioru.com/ibc-tamil-london/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, பெருமாள் said:

ibc என்றால் என்னங்க ? 

Ãhnliches Foto

:306_earth_africa: international broadcasting corporation.எண்டு நினைக்கிறன்.:307_earth_asia: ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, தமிழ் சிறி said:

international broadcasting corporation

தமிழ் சனம் புழங்கும் இடத்தில் ஒரு பத்து பேரை ibc கேட்பது உண்டா என்று கேட்டு பாருங்கோ பத்தில் எட்டு நான் கேட்ப்பது போல் கேட்க்குங்கள் இந்த எண்ணிக்கை லாச்சப்பல் போன்ற இடங்களில் ஐந்து ஆறாகும் பாதி சனத்துக்கு இந்த ரேடியோ என்ன உளறுது எண்டே தெரியாது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/19/2018 at 10:35 AM, nedukkalapoovan said:

....தமிழர்களின் காணப்படாத ஒரு காரணியான ஒற்றுமை என்பதே.. இத்தனைக்கும் காரணமாகும். அதுக்கு முதல் காரணம்.. சுயநலம். 

எமது அழிவுகளுக்கு நாமே தான் காரணம்.. என்பதற்கு இவை நல்ல உதாரணம். ?

தமிழ் நாட்டிலும் இதே நிலைதான்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

தமிழ் சனம் புழங்கும் இடத்தில் ஒரு பத்து பேரை ibc கேட்பது உண்டா என்று கேட்டு பாருங்கோ பத்தில் எட்டு நான் கேட்ப்பது போல் கேட்க்குங்கள் இந்த எண்ணிக்கை லாச்சப்பல் போன்ற இடங்களில் ஐந்து ஆறாகும் பாதி சனத்துக்கு இந்த ரேடியோ என்ன உளறுது எண்டே தெரியாது .

 

On 7/17/2018 at 11:30 PM, Nathamuni said:

----அடுத்ததாக, தமிழ் நாட்டு சினிமா என்னும் அரைத்த மாவினையும், இலங்கை அரசியல் என்னும் போரடித்த விடயத்தினையும் போட்டு கடாசினால் மக்கள் எங்கே வந்து கேட்கப் போகின்றனர்.

ஊடகவியலில் பல அருமையான விடயங்கள் உள்ளன. இங்கே பல விடயங்களை தயாரித்து, உலகெங்கும் உள்ள தமிழர்கள் வாழும் நாடுகளில் விற்க முடியும். ----

பெருமாள்...  சுமார் 25 வருடங்களுக்கு முன்பு  ஐரோப்பாவில் தமிழ் வானொலி, தமிழ் தொலைக்காட்சி  எல்லாம் தொடங்கிய போது, மிகுந்த குதூகாலத்துடனும், பெருமையுடனும் எல்லாவற்றையும் கேட்டேன். 
ஓரிரண்டு  வருடங்களில்... வெறுத்துப் போய் விட்டது.

மேலே... நாதமுனி எழுதிய மாதிரி, அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருப்பார்கள்.
புதிதாக, சொந்தமாக எதனையுமே... சித்திக்கத் தெரியாத  ஊடகங்கள் தான்... இந்த ஊடகங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IBC வாங்கப் பட்டதான் நோக்கமே, lebera போன் நிறுவன புரொமோஷன் வேலைகளுக்காகத்தான். முன்னர் வைத்திருந்த சக்தி properties நிறுவன உரிமையாளர் சத்தியமூர்த்தி, ஈலிங் ஈழபதீஸ்வரர் கோவில் நிருவாகி மீதி சட்டத்துக்கு அமைவாக அல்லாமல் ஒரு செய்தி சொன்ன விடயத்தில், புரொக்டர் நோட்டீஸ் வந்ததும், சடாரென காலில் விழுந்து மன்னிப்பு கேட்க்காமல், வீம்பு பிடித்து, நீதிமன்று சென்று, நஷ்டஈடு, செலவு என 1மில்லியன் இழந்தார்.

நொந்த போயிருந்த அவரிடம், lebera வின் மூன்று உரிமையாளர்களின் ஒருவரான பாஸ்கரனின் முதலீட்டில், அடிமாட்டு விலைக்கு IBC வானொலி lebera வினால் காதும், காதும் வைத்தது போல் வாங்கப் பட்டது.

இப்போது lebera கைமாறி விட்டதால், அடிப்படை நோக்கம் மாறி விட்டது..... இலாபம் இல்லாவிடில், IBC யினை தொடர்ந்து வைத்திருக்க வேண்டிய தேவை பாஸ்கரனுக்கு இருக்க முடியாது.

இதுதான் இந்த அதிக சம்பளம் அல்லது ஊதியம் பெறுபவர்களை கழட்டி விடுகிறார்கள். 

இது புரியாமல், ஆச்சோ, போச்சோ, அப்படியோ, இப்படியோ, தினேஷை அனுப்பியாச்சு, இனி யாரோ என்று இன்னுமொரு மீடியாகராக்கள் கூப்பாடு போடுகினம்.

முதலாளி, சிம்பிளா சொல்லுவார்... தினேஷை வச்சிருக்கிறம்.... மாதாமாதம் ஒரு 10 புவுணாவது தாருங்கோவன்....

உது யாவாரம்:  கலை, சேவை, லொட்டு, லொசுக்கு எல்லாம் பிறகு...

youtube channel நேற்று வந்தவர்கள் எல்லாம் ஆரம்பித்து பணம் பார்க்கிறார்கள். முக்கியமாக விளம்பரங்கள் மூலமாக. 

விகடன்.காம் சும்மா ஒரு சேனல் ஆரம்பித்து, வந்த வியூகளை (பார்வை) பார்த்து அரண்டு போய் இப்போது தினமும் நடத்துகிறார்கள். பார்வையாளர்கள் கூடும்போது விளம்பர வருமானம் அதிகமாகும்.

தினேசுடன் ஒருமுறை பேசும் போது தனது வீட்டில், காராஜில் ஒரு ஸ்டூடியோ செட்டப் செய்துள்ளதாக சொன்னார். அப்போதே சொன்னேன்.... நீங்களே, அங்கேயோ அல்லது வேறு இடத்திலோ இந்த பிரமுகர்களை வரவழைத்து அரசியல் நிகழ்ச்சிகளை நிகழ்த்தி, TV நிலையங்களுக்கு கொடுக்கலாமே என்று. 

இன்றும் கூட அதே போல செய்ய முடியும். youtube channel ஆரம்பித்து பணம் பார்க்லாமே.

இன்னுமொரு இழுத்து மூடப் பட்ட TV நிருவாகி ஒருவருக்கு சொன்னேன். பிபிசி, itv போன்ற நிறுவங்களின் நிகழ்ச்சிகளை, பிரித்தானியாவுக்குள் மட்டும், ஆங்கிலம் இல்லாத வேறு மொழிகளில் மறு ஒளிபரப்ப வழி ஒன்று இருக்கிறது. விசாரியுங்கள் என்றேன்.

மறுநாள் காலையில், வேறு நிர்வாகிகளுடன் பேசினேன், பெரும் ஆர்வமாக உள்ளார்கள். நீங்களே அது தொடர்பில் கடிதங்களை எழுதி உதவ முடியுமா என்றார். 

அவர்கள், நிறுவனத்தினை முன்னேறுவதிலும் பார்க்க, அடுத்த மாதம் சம்பளம் வருமோ என்பதில் குறியாக இருந்ததை அவதானிததால் ஆளை விடுங்கடா சாமி என்று சொல்லி விட்டேன்.

இவர்களது சேவை குறித்து ஒருவர் சொன்னார். பிட்டு அல்லது இடியப்பம். கொஞ்சம் வித்தியாசமாக உக்காந்து யோசிக்கினமாம் என்று, பிட்டும், இடியாப்பமும் சேர்ந்த கலவன்.... கடைசில இரண்டும் அரிசி மா தான் என்கிறார். எவ்வளவு உண்மை.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ஐ.பி.சி தமிழ், வெளிவராத உண்மைகளும் உறைந்து போன ஊடகங்களும்

 

ibctamil-news-300x200.jpgதமிழ்த் தேசியத்தின் பெயராலும், இனப்படுகொலையின் பெயராலும் லைக்கா நிறுவனம் தமிழ் மக்களை ஏமாற்றவில்லை. வெறும் இலாப வெறி மட்டுமே அந்த நிறுவனத்தின் குறிக்கோள். லைக்கா நிறுவனத்தின் வர்த்தகத் தொடர்புகள் இலங்கை இனப்படுகொலையின் சூத்திரதாரி ராஜபக்சவின் கொல்லைபுறம் வரைக்கும் நீட்சியடைந்த போதே இனியொரு விசாரணை ஆரம்பமானது.
இன்று அதே கொல்லைப்புறத்தில் தேசியத்தின் பெயராலும், மக்கள் சேவையின் பெயராலும் லெபாரா நிறுவனம் தனது இலாப வேட்கைகைக்காகக் கூடுகட்டிக்கொண்ட போது அதன் மறுபக்கத்தில் ஐ.பி.சி (IBC) தொலைக்காட்சியின் கோர முகமும் வெளித்தெரிய ஆரம்பித்தது.

லெபாரா(LEBERA) நிறுவனத்தின் விற்பனை தொடர்பான தகவல்கள் பிரதானப்படுத்தப்பட வேண்டிய தகவலாக இல்லை என்றாலும், அந்த வியாபார யுக்திகளைக் கடந்து செல்லமுடியாத அளவிற்கு லெபாரா நிறுவனம் தனது பிரச்சாரத்தைப் புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியிலும் ஈழத்திலும் முடுக்கி விட்டிருந்தது.

ஆக, லெபாரா விற்பனை செய்யப்பட்ட ‘விடுகதையிலிருந்தே’ இக் குறிப்பின் முதலாம் பாகத்தை ஆரம்பிக்க வேண்டிய துயரம் தவிர்க்கமுடியாதது. புலம்பெயர் நாடுகளில் லெபாரா தொலைபேசி நிறுவனம் மில்லியன் கணக்கில் வியாபாரம் செய்யதது. புலம்பெயர்ந்து வாழும் வெளி நாட்டவர்கள் தமது நாடுகளுக்கு அழைப்பு ஏற்படுத்திக்கொள்ள மலிவான விலையில் கைத் தொலைபேசி அட்டைகளைத் தயாரித்து விற்பனை செய்துவந்த லெபாரா நிறுவனம் அதன் முன்னோடியான லைக்காவிற்குப் போட்டியாக ஆரம்பிக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டின் இறுதியில் லெபாரா நிறுவனம் சீன நிறுவனம் ஒன்றிற்கு 300 மில்லியன்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் வெளியாகின என்பதை விட பிரச்சாரம் செய்யப்பட்டது என்பதே உண்மை.

அது விற்பனை செய்யப்பட்டது சுவிட்சர்லாந்து நாட்டிலுள்ள பல்மேரியம் (Palmarium) என்ற முதலீட்டு நிறுவனத்திற்கே என்பதும், ஆங்கில ஊடகங்களைப் பொறுத்தவரையில் முடிச்சவிழ்க்கப்பட்ட விடுகதை. ஈழத் தமிழர்களுக்கு ஊடகங்கள் என்று எதுவும் இல்லை. சமூக வலைத் தளங்களில் தமது நண்பர் வட்டத்திற்கு தெரியப்படுத்தும் வகையில் குறுந்தகவல்களை எழுதுவதையே ஊடகப் புரட்சி என்று நம்பும் அவல நிலையில் இவ்வாறன தகவல்களை ஐ.பி.சி போன்ற பல் தேசிய கோப்ரட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருட்டடிப்புச் செய்யப்படுகிறது. லெபாரா நிறுவனத்தீன் உரிமையாளரால் ஆரம்பிக்கப்பட்ட இன்றும் அதனோடு தொடர்புடைய பண மூலதனத்திலேயே இயங்கும் ஐ.பிசி இடம் உண்மைகள் உறைந்து போயுள்ளன.

இன்று சர்வதேச தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு விற்பனை கிடையாது. ஸ்மார்ட் போன் இல் கிடைக்கும் செயலிகளைப் பயன்படுத்தியே உலகம் முழுவதையும் இணைந்துக்கொள்கிறார்கள் அதன் பயனர்கள். ஆக, புலம்பெயர் தமிழர்கள் மத்தியிலிருந்து தோன்றிய லைக்கா லெபாரா போன்ற நிறுவனங்கள் வேறு தொழில்களில் ஈடுபட ஆரம்பித்துஇந்த நிலையில் லெபாரா நிறுவனத்தை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை.

இந்த நிலையில் பல மில்லியன்கள் இழப்பில் அந்த நிறுவனத்தை இழுத்து மூட வேண்டிய சூழல் ஏற்பட்டிருந்தது.

அப்போது தான், பல்மேரியம் என்ற ஏற்னவே இயங்கிக்கொண்டிருந்த முதலீட்டு நிறுவனத்திற்கு புதிய உரிமையாளர்கள் இருவர் வருகின்றனர். முன்னை நாள் அமெரிக்கப் பிரசையான சூசானி ஆர்சேர்(Suzanei Archer) மற்றும் ரபேல் ஔரெபெச் (Raphael Auerbach) ஆகிய இருவரும் லெபாரா விற்பனை செய்யப்படுவதற்கு சற்று முன்னான காலப்பகுதிய் பல்மேரியத்தை உரிமையாக்கிக் கொள்கின்றனர்.

பின்னதாக, இலாபத்தில் இயங்கமுடியாத வியாபாரச் சூழலிலிருந்த லெபாராவை வாங்குவதாக முடிவெடுத்து அதற்குரிய பணமான 420 மில்லியன் யூரோக்களை தேடுவதற்கான முயற்சியில் பல்மேரியம் ஈடுபடுகிறது. முதலில் பல்மேரியம் லொபாராவை வாங்குவதற்கான பணத்தில் ஆரம்பச் சொத்தான 85 மில்லியனை லெபாராவே வழங்கக எஞ்சிய பணத்தை வங்கிகளின் அல்லது முதலீட்டு நிறுவனங்களின் பண முறிகளாகவும் திரட்டப்படுகிறது. லெபாரா இலாபத்தில் இயங்கும் நிறுவனமாகக் காட்டப்படுகிறது.

லக்சம் பேர்க்கில் பதிவு செய்ய்யபட்ட எல்.பி.ஆர். இன்வெஸ்ட்மென்ட்(LBR investments) என்ற நிறுவனம் இதனிடையே தோன்றுகிறது. இதன் உரிமையாளர்கள் லெபாராவின் உரிமையாளர்களே. இதைவிட எல்.பி.ஆர். மீடியா(LBR media) என்ற நிறுவனம் தோன்றுகிறது. ஐ.பி.சி தொலைக்காட்சி, பல்மேரியம், எல்.பிஆர். இன்வெஸ்ட்மன்ட் என்ற சிக்கலான வலைப்பின்னல், செல்வம்(CELVAM) என்ற மற்றொரு நிறுவனத்தின் தொடர்பு எல்லாம் நன்கு கச்சிதமாகத் திட்டமிடப்பட்டவை எனினும், “வாங்கியவரும் விற்றவரும் ஒரே ஆள் தான்” என்று பைனான்சியல் ரைம்ஸ் சொல்கிறது.

இவ்வாறான சிக்கலான பின்புலத்திலிருந்தே ஐ.பி.சி தொலைக்காட்சி உதிக்கிறது. அதன் பிறப்பு மர்மங்கள் நிறைந்தது. தமது நிதி மோசடிகளை மறைப்பதற்கு லெபாரா இலங்கை அரசிற்கும் அதனை இயக்கும் ஏகபோக அரசுகளுக்கும் சேவைசெய்ய ஒப்புக்கொண்டதன் வெளிப்பாடே ஐபிசி தொலைக்காட்சியின் தோற்றம் என்ற சந்தேகங்களின் முன்னதாக யாழ்ப்பாணத்தில் இயங்கும் ஒரே ஐந்து நட்சத்திர விடுதியான ஜெட்விங் வந்து போகிறது.
இலங்கையின் இன்றைய சனாதிபதி மைத்திரிபால சிரிசேன (குறிப்பு:தமிழ்த் தேசியவாதி அல்ல)வால் திறந்து வைக்கப்பட்ட யாழ்ப்பாணம் ஜெட்விங் ஹோட்டேலின் அதிகபடியான பங்குகள் லெபாராவினுடையது. ஹெர்பேர்ட் கூரே என்ற சிங்கள வர்த்தகர் ஜெட்விங்(Jetwink) இன் ஏனைய ஹொட்டேல் களின் பிரதான உரிமையாளர். மகிந்த மற்றும் பசில் ராஜபக்சக்களுக்கு நெருக்கமான கூரே, லெபாரா உரிமையாளர்களுடன் ஏற்பட்ட நெருக்கமான வியாபார ஒப்பந்தத்தில் உருவானது தான் ஜெட்விங் இன் யாழ்ப்பாணக் கிளை.

ibc-300x258.pngஜெட்விங் ஹொட்டேல் திறப்புவிழா 2016 ஆம் ஆண்டில் நடைபெற்ற வேளையில் லெபாராவின் உரிமையாளர்களில் ஒருவரான லியோன் மைத்திரிபால சிரிசேன, மிலிந்த மொரகொட சகிதம் கல்ந்துகொண்டார்.

ஜெட்விங் ஹொட்டேல் அமைந்துள்ள இடத்திலிருந்து சில மைல்கள் தொலைவிலேயே ‘தமிழ்த் தேசியம் வளர்க்கும்’ ஐபிசி இன் நிகழ்ச்சிக் கலையகமும் அமைந்துள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார வானொலியாக 2000ம் ஆண்டு ஆரம்பங்கள் வரை இயங்கிவந்த ஐபிசி, 2015 ஆம் ஆண்டில் லெபாரா நிறுவனத்தின் முதலீட்டில் வாங்கப்பட்டது. ஐபிசி இல் தொடர்ந்து பணியாற்றிய பரா பிரபா என்ற ஊடகவியலாளர் இடைத் தரகராகச் செயற்பட ஐபிசி லெபாரா உரிமையாளர்களில் ஒருவரான பாஸ்கரனின் முதலீட்டில் உருவானாலும் அதன் சட்டரீதியான உரித்து நிராஜ் பேர்னாட் டேவிட் என்பவரின் பெயரிலேயே பதிவாகியிருக்கிறது.

இத்த நிறுவனத்தின் பின்னணியில் உள்ள முதலீட்டு நிறுவனமே லெபாரா உரிமையாளரால் கட்டுப்படுத்தப்படுகிறது.

ஐபிசி தொலைக்காட்சி நிறுவனம் தோன்றிய போது, “தமிழர்களுக்கான ஒரே தொலைக்காட்சி”, தமிழ்த் தேசியம் என்றெல்லாம் புகழ் பாடப்பட்டது.

இனிமேல் பல்மேரியம். எல்.பி.ஆர். பைனான்ஸ், லெபாரா, ஐ.பி.சி லெபாரா மீடியா, செல்வம்,இலங்கை அரசு போன்ற விரிவான தகவல்கள் ஊடாக இக் கட்டுரை பயணிக்கும்.

இன்னும் வரும்…

http://inioru.com/ibc-tamil-the-hidden-truth/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
    • 39 சீட்டில் 49 இடத்தில் நாம் தமிழர் வெல்லவேண்டியது. அநியாயமாக சின்னத்தை மாத்தி அத்தனை தொகுதியையும் இழக்க வைத்துள்ளார்கள். திமுக 39 தொகுதியிலும் டிபாசிட் இழக்கும் என நினைக்கிறேன். மார்க்கம், டொரெண்டோ கிழக்கு, ஈஸ்ட்ஹாம், பிரெண்ட் நோர்த், பெர்லின் மத்தி தொகுதிகளில் நாம் தமிழர் முன்னிலையில் என சொல்கிறன கருத்து கணிப்புகள்.   சின்னக் கருணாநிதி. #அன்றே #சொன்னார் #கோஷான்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.