Jump to content

யாழ்.கோட்டையினுள் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள்


Recommended Posts

யாழ்.கோட்டையினுள் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள்

 

யாழ்.கோட்டையினுள்  மனித எலும்புக்கூட்டு எச்சங்கள்

யாழ்.கோட்டையினுள் இலங்கை இராணுவ முகாம் அமைக்கப்பட்டுவரும் இடத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அப்பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் ஆய்வு நடவடிக்கைகளின் போது அகழப்பட்ட குழியொன்றினுள் இருந்தே இந்த மனித எலும்புக்கூட்டு தொகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து அகழ்வாராட்சி பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளது.அத்துடன் இதனை மூடி விவகாரத்தை முடக்கிவிட தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் முற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.குறித்த மனித எலும்புக்கூட்டு தொகுதி தொல்லியலுடன் தொடர்புபட்டதா அல்லது அங்கு நிலைகொண்டிருந்த இராணுவத்தின் புதைகுழியாவென தெரியவரவில்லை.

முன்னதாக யாழ்.கோட்டையினை அண்மித்த துரையப்பா விளையாட்டரங்கிலும் பாரிய மனிதபுதைகுழி கண்டறியப்பட்டிருந்த போதும் கால ஓட்டத்தில் அதுவும் கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.(15)

http://www.samakalam.com/செய்திகள்/யாழ்-கோட்டையினுள்-மனித-எ/

Link to comment
Share on other sites

யாழ். கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக் கூட்டு எச்சங்கள் குறித்து புதிய தகவல் 

 

 
 

யாழ்.கோட்டையின் உட்பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளின் போது மீட்கப்பட்ட மனித எலும்பு எச்சம் போர்த்துக்கீசர் காலத்தினுடையதாக இருக்கலாம் என நம்புகின்றோம் என தொல்லியல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

IMG_8040.JPG

யாழ்.கோட்டையின்  உட்பகுதியினுள் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வு பணிகளின் போது மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டன என தகவல்கள் வெளியாகியுள்ளன. 

IMG_8046.JPG

அது தொடர்பில் கேட்ட போதே அவ்வாறு தெரிவித்தார். 

அது குறித்து மேலும் தெரிவிக்கையில் , 

IMG_8053.JPG

யாழ்ப்பாண கோட்டை அமைந்துள்ள பகுதியானது சோழர் காலத்திற்கு முற்பட்ட காலத்திற்கு முன்பாகவே யாழ்ப்பாணத்தின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அதற்கான ஆதராங்கள் சில கிடைக்க பெற்றுள்ளன. 

கோட்டை அமைந்துள்ள பகுதிகளில் கடந்தவருடம் (ஸ்கானர் மூலம் ) ஆய்வுகளை மேற்கொண்ட வேளை கோட்டை அமைந்துள்ள பகுதிகளின் கீழ் போர்த்துக்கீசர் காலத்திற்கு முற்பட்ட வரலாற்று படிமங்கள் கண்டறியப்பட்டுள்ளன. 

IMG_8059.JPG

இந்நிலையில் தற்போது அமெரிக்க பல்கலைகழகம் , யாழ். பல்கலைகழகம் , தொல்லியல் திணைக்களம் , மத்திய கலாச்சார நிலையம் என்பவற்றின் கூட்டு செயற்திட்டமாகவே இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. 

கோட்டையின் உட்புறமான மத்திய பகுதியில் முன்னதாக போத்துக்கீசர் காலத்து தேவாலயம் ஒன்று இருந்தமைக்கான சான்றுகள் கிடைக்கப்பெற்றுள்ளான. தேவாலயத்திற்கு அருகில் கிணறு ஒன்று இருந்தமைக்கான சான்றுகளும் , தேவாலய சுவர்கள் இருந்தமைக்கான சான்றுகளும் கண்டறியப்பட்டுள்ளன. 

IMG_8086.JPG

இந்நிலையிலேயே நேற்றைய தினம் அகழ்வுப் பணியின் போது மனித எழும்பு எச்சம் மீட்கப்பட்டன. அது போத்துக்கீசர் காலத்தில் அடக்கம் செய்யப்பட்டவரின் எலும்பு எச்சங்கள் என நம்புகின்றோம்.

ஏனெனில் போத்துக்கீசர் காலத்தில் இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது மேற்கு நோக்கியவாறே அடக்கம் செய்யும் பழக்கம் இருந்தது. 

IMG_8091.JPG

அதன் பின்னரான கால பகுதியில் தான் இறந்தவர்களை கிழக்கு திசை நோக்கி அடக்கம் செய்யும் பழக்கம் வந்தது. ஆகவே அவை போர்த்துக்கீசர் காலத்திற்கு உரியவையாக இருக்கலாம் என நம்புகின்றோம். 

ஆய்வு பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கு முதல் நாம் எதனையும் உத்தியோகபூர்வமாக செல்ல முடியாது. 

மீட்கப்பட்ட எலும்பு எச்சம் தொடர்பில் ஆய்வுகள் நடைபெறுகின்றன. ஆய்வுகளின் பின்னரே உத்தியோகபூர்வமாக தெரிவிக்க முடியும் என தெரிவித்தார். 

http://www.virakesari.lk/article/36780

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, நவீனன் said:

யாழ்ப்பாண கோட்டை அமைந்துள்ள பகுதியானது சோழர் காலத்திற்கு முற்பட்ட காலத்திற்கு முன்பாகவே யாழ்ப்பாணத்தின் தலைநகரமாக விளங்கியுள்ளது. அதற்கான ஆதராங்கள் சில கிடைக்க பெற்றுள்ளன. 

போத்துகீசர் யாழ்ப்பாணத்தின் பூர்வீக குடிகள் என்று சொல்லுற பிளான் போல இருக்கு....:)

Link to comment
Share on other sites

யாழ். கோட்டையில் மீட்கப்பட்ட எலும்புக்கூட்டில் தங்க மோதிரம்! கொலை என சந்தேகம்

யாழ்ப்பாணம் கோட்டை உட்பகுதியில் மீட்கப்பட்ட மனித எலும்புக்கூட்டில் இருந்து S.A எனும் எழுத்துப் பொறிக்கப்பட்ட தங்க மோதிரம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் கோட்டை உட்பகுதியில் பகுதியில் கடந்த வாரம் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த எலும்புக்கூடு போத்துக்கேயர் காலத்துக்குரியது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் மோதிரத்துடன் மீட்கப்பட்ட இந்த எலும்புக் கூடு, ஆண் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தியுள்ளது.

குறித்த மோதிரத்தில் காணப்படுகின்ற எழுத்து பொறிக்கும் முறை 1995 ஆம் ஆண்டுக்கு பின்னரே நடைமுறைக்கு வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில், 1995 ஆம் ஆண்டுக்கு பிற்பாடே குறித்த நபர் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை வலுப்படுத்தியிருப்பதாக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

 

625.0.560.320.160.600.053.800.700.160.90.jpg

 

இதேவேளை, அமெரிக்க பல்கலைக்கழகம், யாழ். பல்கலைக்கழகம், தொல்லியல் திணைக்களம், மத்திய கலாச்சார நிலையம் என்பன இணைந்து யாழ். கோட்டைப் பகுதியில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டு இருந்தது.

.ந்த எலும்புக்கூடு போத்துக்கேயர் காலத்தில் அடக்கம் செய்யப்பட்டவரின் எலும்பு எச்சங்களாக இருக்கலாம் என தொல்லியல் திணைக்கள அதிகாரி நம்பிக்கை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.tamilwin.com/community/01/188596?ref=home-feed

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஹிந்திய படை ஆக்கிரமிப்பு காலத்திலும்.. சொறீலங்கா இராணுவ ஆக்கிரம்பிப்பு காலத்திலும்.. பல அப்பாவி தமிழ் மக்கள் கொன்று அழிக்கப்பட .. புதைக்கப்பட காரணமான ஒரு இன அழிப்புச் சின்னம் தான் இது. அங்கு மனித புதைகுழிகள் இருப்பது அதிர்ச்சிக்குரிய விடயமல்ல. இந்த அழிவுகளுக்கு சொறீலங்காவும் நடைமுறை உலகும் நீதி வழங்க முன்வரும் என்று தெரியவில்லை.

அது சரி.. உந்தக் கோட்டையை கட்டினது.. ஒல்லாந்தர் என்றிச்சினம். நெதர்லாந்து.. போர் முடிஞ்ச கையோடு மக்களுக்கு உதவி செய்ய வந்ததைக் காட்டிலும்.. கோட்டையை புனரமைக்க வந்தது தான் முக்கியமாப் பட்டிச்சுது. இப்ப போர்த்துக்கீசர் கதை வருகுது. உதைப் பற்றி போர்ச்சுக்கல்.. ஒன்னும் சொல்லுறதில்லை.  ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நவீனன் said:

இந்த எலும்புக்கூடு போத்துக்கேயர் காலத்துக்குரியது என தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆராய்ச்சியாளர்மார் தங்கடை கெட்டித்தனத்தை காட்டீட்டினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.