நவீனன்

அப்பாவை தேடித் தாருங்கள் ; கண்ணீரில் நனைந்தது மண்டபம்

Recommended Posts

அப்பாவை தேடித் தாருங்கள் ; கண்ணீரில் நனைந்தது மண்டபம்

2009 இல்  அருட்தந்தையுடன் சரணடைந்த எனது அப்பாவை தேடித்தாருங்கள் என ஒன்பது வயது சிறுமியொருவர் காணாமல்போனோர் அலுவலக அதிகாரிகளிடம் உருக்கமான கோரிக்கையொன்றினை முன்வைத்துள்ளார்.

c1.jpg

இன்று கிளிநொச்சி கூட்டுறவு  மண்டபத்தில் இடம்பெற்ற காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலக அதிகாரிகளுக்கும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களுக்குமிடையிலான சந்திப்பின்போதே குறித்த சிறுமி மேற்கண்ட கோரிக்கையை காணாமல் ஆக்கப்பட்ட அலுவலக அதிகாரிகளிடம் விடுத்துள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் அருட்தந்தை பிரான்சிஸ் ஜோசப்புடன் விடுதலை புலிகளின் உறுப்பினர்கள் உட்பட பலர் சரணடைந்திருந்தனர். இவர்களை இராணுவத்தினர் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் ஏற்றிச் சென்றிருந்தனர்.

இதன்போது விடுதலைப்புலிகளின் திரைப்பட பிரிவில் கடமையாற்றிய திலக் என்பவரும் சரணடைந்திருந்தார்.  இவ்வாறு சரணடைந்த திலக் என்பவரின் ஒன்பது மகளே இன்று மிக  உருக்கமாக தனது அப்பாவை தேடித்தாருமாறும் தான் இதுவரை அப்பாவின் முகத்தை பார்க்கவில்லை என்றும் கோரிக்கை விடுத்திருந்தார்.

c3.jpg

c2.jpg

இதன்போது கூட்டுறவு மண்டபத்திலிருந்த கிராம அலுவலர்கள்  உட்பட பலர் கண்ணீர்விட்டு அழுதமை குறிப்பிடத்தக்கது.

http://www.virakesari.lk/article/36625

 • Sad 1

Share this post

Link to post
Share on other sites

மகளே ! 2009 க்குப் பின்னர்தான் இந்தியப் பெருங்கடலில் உப்பின் அளவு கூடியது. அதன் காரணம், அக்கரையில் நீ பெருக்கிய கண்ணீரும் இக்கரையில் நான் வடித்த கண்ணீரும் தானடி.

 • Like 3

Share this post

Link to post
Share on other sites

சரணடைந்தவர்களை கொன்றது போர்க்குற்றம் இல்லை என்றும் சிலர் இங்கு வாதாடுகிறார்கள். சில மனிதருக்கு ஆறாம் அறிவு ஏன் உள்ளது என்ற கேள்வியும் எழுகிறது.

Share this post

Link to post
Share on other sites
4 hours ago, nunavilan said:

சரணடைந்தவர்களை கொன்றது போர்க்குற்றம் இல்லை என்றும் சிலர் இங்கு வாதாடுகிறார்கள். சில மனிதருக்கு ஆறாம் அறிவு ஏன் உள்ளது என்ற கேள்வியும் எழுகிறது.

போர்க் கைதிகளைக் கூட எவ்வாறு நடத்த வேண்டும் என ஐ.நா. வகுத்து 150 வருடங்கள் கூட ஆகவில்லை. குறைந்தது 20 நூற்றாண்டுகள் முன்னர் இதனை வகுத்த புறநானூற்று நாகரிகத்திற்குரியது தமிழினம். இன்னும் நாகரிகம் அடையாத மனிதர்களை  'ஆறறிவற்ற ஜீவன்கள் ' என்பதன்றி வேறு  என்ன சொல்வது ?

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
6 hours ago, nunavilan said:

சரணடைந்தவர்களை கொன்றது போர்க்குற்றம் இல்லை என்றும் சிலர் இங்கு வாதாடுகிறார்கள். சில மனிதருக்கு ஆறாம் அறிவு ஏன் உள்ளது என்ற கேள்வியும் எழுகிறது.

சரண் அடைந்தவர்களை மட்டுமல்ல, சரண் அடையாமல் கைப்பற்றப்பட்டவர்களை கூட கொலை செய்வது குற்றம். போரின்போது இது இடம்பெற்றால் போர்க்குற்றம். போர்க்குற்றவாளிகளில் முக்கியமானவரும் அடையாளம் கானப்படக்கூடியவரும் இந்த குற்றங்களை செய்யுமாறு உத்தரவிட்டவர்கள். இலங்கை போரில் இவர்களை உலகறியும். இந்த போர்க் குற்றங்களுக்கு தண்டனை கிடைக்கும்வரை அல்லது ஒரு  நீதி மன்றம் அவற்றில் இருந்து விடுவிக்கும் வரை கோத்தபாயாவின் அமெரிக்க குடியுரிமையை அமெரிக்க அரசு தக்க வைத்துக்கொள்ளும் என்று மகிந்த ராஜபக்சவுக்கு தெரிவித்ததாக செய்திகள் வந்து இருந்தன. ஆனால் கோத்தபாயா அமெரிக்கா வந்த போது இந்த அமெரிக்க குடிமகனை கைது செய்யவில்லை. இவ்வாறு கைது செய்வதற்கு பிடிவிறாந்து ஒரு நீதிமன்றால் வழங்கப்பட்டு இருந்தால் கைது செய்யப்பட்டு இருப்பான். இங்கே இருக்கும் தமிழர் அமைப்புக்களால் இந்த பிடிவிறாந்தை பெற முடியவில்லை. அதற்கு தேவையான ஆதாரங்களோ பணமோ இருக்கவில்லை. கோத்தபாய அமெரிக்க குடிமகனாக இருப்பதாலும் சீன சார்பு அமெரிக்க எதிர்ப்பு அரசியல் செய்வதாலும் இந்த சாத்தியம் உள்ளது.

மற்ற ஸ்ரீ லங்கா போர் வீரர்கள், ஆயுததாரிகள், அரசியல்வாதிகள் போர்க்குற்றவாளிகளாக இருந்தாலும் ஸ்ரீ லங்காவில் அவர்கள் இருக்கும்வரை வேறு எந்த நாடும் அங்கு பொலிசையோ இராணுவத்தையோ அனுப்பி அவர்களை கைது செய்யாது. இதற்கு காரணம் அந்த நாடுகள் அப்படி செய்ய முனைந்தால் ஸ்ரீ லங்கா போலிசும் இராணுவமும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தும். மேலும் அதற்கான செலவையும் உயிர் இழப்புகளையும் பொலிசை அனுப்பிய நாட்டு மக்கள் எதிர்ப்பார்கள். அவ்வாறான முடிவு எடுத்த அரசியல்வாதி தனது பதவியை இழப்பார். ஆகவே இலங்கை போர்க்குற்றங்களுக்கு தண்டனை வழங்கும் சாத்தியம் மிகவும் குறைவு.

அடிப்படியில் இரண்டு தேவைகள் உள்ளன. ஈழத்தமிழர் தான் இவற்றை தயார் படுத்த வேண்டும்:

 1. போர்க்குற்றவாளிகளை கைது செய்து, விசாரணை நடத்தி சிறையில் வைத்து சாப்ப்பாடு போட பணம் - பல கோடிகள் செலவாகும்.
 2. போர்க்குற்றவாளிகளை கைது செய்து கொண்டுவர உயிரை இழக்கவும் தயாரான ஒரு இராணுவம் - இது தனியார் இராணுவமாகவும் இருக்கலாம். 

இவற்றை தயார் படுத்த்தினால் சில நாடுகள் ஆதரவு தரக்கூடும். இவை இரெண்டும் இன்று தமிழ் மக்களிடம் இல்லை. இவை பற்றி கருத்து சொல்லும் தமிழர்களை கூட நான் அறியவில்லை. ஆகவே இலங்கை போர்க்குற்றங்களுக்கு தண்டனை கிடைக்கும் சாத்தியம் மிகவும் குறைவு.

Edited by Jude
 • Like 1

Share this post

Link to post
Share on other sites
Quote

போர்க்குற்றவாளிகள் உயர்ஸ்தானிகளாக பல நாடுகளில்  வேலை பார்க்கிறார்கள். அவர்களே தண்டனை எதுவும் பெறாமல  சுதந்திரமாக உள்ளனர்.

மிலோசவிச் தானாக சிறைக்குள் வந்து குந்தி இருப்பார் என நான் நினைக்கவில்லை,

https://www.theguardian.com/world/2006/mar/11/warcrimes

Share this post

Link to post
Share on other sites
3 hours ago, nunavilan said:

போர்க்குற்றவாளிகள் உயர்ஸ்தானிகளாக பல நாடுகளில்  வேலை பார்க்கிறார்கள். அவர்களே தண்டனை எதுவும் பெறாமல  சுதந்திரமாக உள்ளனர்.

 1. இந்த நாடுகள் இவர்களை போர்க்குற்றவாளிகள் என்று ஏன் ஏற்றுகொள்ளவில்லை?
 2. அந்த நாட்டு நீதிமன்றங்களில் குற்றம் சாட்டும் தமிழ் அமைப்புகள் இவர்களை கைது செய்யுமாறு ஏன்  வழக்கு போடவில்லை?
 3. இந்த போர்க்குற்றவாளிகளை சிறையில் அடைப்பதில் தமிழ் அமைப்புக்களுக்கு உண்மையிலேயே ஆர்வம் இருந்தால் வழக்கு போட்டு இருப்பார்களே?
3 hours ago, nunavilan said:

மிலோசவிச் தானாக சிறைக்குள் வந்து குந்தி இருப்பார் என நான் நினைக்கவில்லை,

https://www.theguardian.com/world/2006/mar/11/warcrimes

மிலோசவிச்சை   பிடிப்பதற்கும், வழக்கு நடத்துவதற்கும் சிறையில் அடைப்பதற்கும் ஆகிய செலவை யார் வழங்குகிறார்கள்?

இவற்றை எல்லாம் இலவசமாக நலன் விரும்பிகள் தமது செலவில் செய்கிறார்கள் என்றா சொல்கிறீர்கள்?

அப்படி பார்த்தாலும், ஈழத்தமிழருக்கு இப்படி இலவசமாக உதவக்கூடிய நலன் விரும்பிகள் யார் ? எவரும் இல்லை.

Edited by Jude

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now