Jump to content

தோனி மிகச்சிறந்த பினிஷர்; திறமையைச் சந்தேகப்படுவது துரதிர்ஷ்டம்: கோலி காட்டம்


Recommended Posts

தோனி மிகச்சிறந்த பினிஷர்; திறமையைச் சந்தேகப்படுவது துரதிர்ஷ்டம்: கோலி காட்டம்

 

 
DHONI

இந்திய அணி வீரர் எம்எஸ் தோனி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய காட்சி   -  படம்: ராய்டர்ஸ்

 தோனி மிகச்சிறந்த பினிஷர், அவர் ஒரு போட்டியில் சரியாக விளையாடாமல் போனதற்காக அவரின் திறமையை மீண்டும், மீண்டும் சந்தேகப்படுவது துரதிர்ஷ்டமானது என்று தோனிக்கு ஆதரவாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணியை 86 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

 

முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் குவித்தது. 323 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 236 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 86 ரன்களில் தோல்வி அடைந்தது.

மிகச்சிறந்த பினிஷர் என்று கிரிக்கெட் உலகில் அடைமொழியுடன் அழைக்கப்படும் தோனி, நேற்றைய ஆட்டத்தில் 59 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். தோனியின் வழக்கமான பேட்டிங்கை காண வந்திருந்த இந்திய ரசிகர்கள், தோனியின் மந்தமான ஆட்டத்தால், பெரும் அதிருப்தி அடைந்தனர். அதுமட்டுமல்லாமல் அரங்கில் இருந்தவாறே தோனிக்கு எதிராக விமர்சனமும் செய்தனர்.

மிகச்சிறந்த பினிஷர் என்று அறியப்படும் தோனி, கடந்த 2 ஆண்டுகளாகவே மிகவும் நெருக்கடியான கால கட்டத்தில் அழுத்தத்தைத் தாங்கி, அணியை வெற்றிக்குக் கொண்டு செல்வதில் தடுமாறி வருகிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினால் மட்டுமே கடைசி நேரத்தில் தோனி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்கிறார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடாத பட்சத்தில் அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்வதில் தோனி நெருக்கடியைத் தாங்குவதில்லை என்று புகார் எழுந்து வந்தது. இது நேற்றைய ஆட்டத்தில் ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படையாகக் கூறினார்கள்.

போட்டி முடிந்த பின் இது குறித்து இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

vkjpg

இந்தியஅணியின் கேப்டன் விராட் கோலி

 

''தோனி ஒரு போட்டியில் கூட சிறப்பாக விளையாடாவிட்டாலும் அவரின் பேட்டிங் திறமை, பினிஷிங் திறமை குறித்து மீண்டும், மீண்டும் கேள்வியாக எழுகிறது. ஒரு வீரரைக் குறித்து உடனுக்குடன் முடிவுக்கு வருவது துரதிர்ஷ்டம். அதிலும் தோனி போன்ற சிறந்த வீரரைக் குறித்து உடனடியாக முடிவெடுத்துவிடக்கூடாது.

தோனி சிறப்பாக விளையாடும்போதெல்லாம், சிறந்த பினிஷர் என்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடிய ரசிகர்கள், அவர் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடாவிட்டாலும் கூட விமர்சிப்பது எந்தவிதத்தில் நியாயம்?

தோனி மிகச்சிறந்த அனுபவம் வாய்ந்தவர், ஆட்டத்தை எந்த நேரத்திலும் மாற்றும் திறமை படைத்தவர். ஆனால், சில நேரங்களில் அவருக்கு ஆட்டம் எடுபடாமல் போகலாம். அதற்காக ஒட்டுமொத்தமாக சரியில்லை என்று ஒதுக்கிவிட முடியாது. தோனியின் பேட்டிங் திறமை மீது துளியும் நம்பிக்கை குறையவில்லை. அனைத்து வீரர்கள் மீதும் இதே நம்பிக்கைதான் வைத்திருக்கிறோம்.

உலகக்கோப்பைக்கு இன்னும் ஒரு ஆண்டுக்கும் குறைவான காலமே இருப்பதால், தோனி போன்ற அனுபவம் வாய்ந்தவர்கள், போட்டியின் நுணுக்கங்களை அறிந்தவர்கள் அவசியம் தேவை. ஆனால், நெருக்கடியான காலகட்டத்தில் அவரின் பேட்டிங் தோல்வி அடையும்போது இதுபோன்ற விமர்சனங்கள் எழுகின்றன.

நாங்கள் இந்தப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தைதான் வெளிப்படுத்தினோம், தொடக்கத்தை அளித்தோம். பேட்டிங்குக்கு நல்ல ஆடுகளமாக இருந்தாலும், மெதுவான ஆடுகளமாக இருந்தது. 3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்ததுதான் ஆட்டத்தின் திருப்புமுனையாகவும், நெருக்கடியும் அளித்தது. இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிறப்பாகப் பந்துவீசினார்கள்.

மொயின் அலி, ரஷித் சிறப்பாகப் பந்து வீசினார்கள். 30 ஓவர்களுக்கு மேல் பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பந்துவீச்சு அமைந்திருந்தது.''

இவ்வாறு விராட் கோலி தெரிவித்தார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் இருந்து தோனியின் பேட்டிங் திறமை ஒருநாள் போட்டிகளில் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பி வருகிறது. கடந்த செப்டம்பரில் இருந்து 13 முறை பேட்டிங் செய்துள்ள தோனி, 267 ரன்கள் மட்டுமே சேர்த்துள்ளார். அதில் தோனியின் சராசரி 29.66 ஆகும். அதேசமயம், ஒருநாள் போட்டியில் தோனியின் ஸ்டிரைக் ரேட் 78 ஆகும். அவரின் பேட்டிங் வரிசை 7 அல்லது 6க்கு செல்வதன் காரணமாகவே அவரால் சிறப்பாக செயல்பட முடியவில்லை.

ரோஹித் சர்மா, தவண், கோலி, ராகுல், ரெய்னா ஆகியோருக்குப் பின் 6-வது வீரராக தோனி களமிறங்குகிறார். இதில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் யாரேனும் ஒருவர் ஒரு போட்டியில் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் நடுவரிசையில் பேட் செய்பவர்களுக்கு ரன் அடிக்கும் வாய்ப்பு குறைவுதான்.

ஒருவேளை டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சொதப்பும்போது, நடுவரிசையில் பேட் செய்யும் ரெய்னா, தோனி, ஹர்திக் ஆகியோர் நெருக்கடியைச் சமாளித்து பேட் செய்ய வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகிறார்கள். இதில் ஏதாவது ஒரு போட்டியில் விளையாடாத தோனியின் பேட்டிங்கை விமர்சிப்பதும், கேள்விக்கு உள்ளாக்குவதும் நியாயமில்லை என்று சில ரசிகர்களும் தங்கள் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

http://tamil.thehindu.com/sports/article24425010.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

சோடை போகிறதா தோனியின் பேட்டிங் திறமை? -ரசிகர்களின் விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா?

 

 
dhoni%20booed

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் தோனி ஆட்டமிழந்து வெளியேறிய காட்சி   -  படம்: ராய்டர்ஸ்

கிரிக்கெட்டின் தாய்வீடு என்று அழைக்கப்படும், லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில், தோனி நேற்று சிறப்பாக பேட் செய்யாத காரணத்தால், அவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

இங்கிலாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில், இந்திய அணி 86 ரன்களில் தோல்வி அடைந்தது. முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 322 ரன்கள் சேர்த்தது. 323 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 236 ரன்கள் சேர்த்து 86 ரன்களில் தோல்வி அடைந்தது.

 

இந்தப் போட்டியில் தோனி 58 பந்துகளைச் சந்தித்து 37 ரன்கள் மட்டுமே சேர்த்தார். அதிரடியான ஆட்டத்துக்கும், கடைசி நேரத்தில் களமிறங்கிய ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துவைக்கும் திறமை கொண்ட தோனி நேற்று சொதப்பலாக பேட் செய்தது ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது.

தோனி நேற்றைய போட்டியில் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டார், 37 ரன்களில் இரு பவுண்டரிகள் மட்டுமே சேர்த்திருந்தார்.

உலகளவில் தோனிக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கும் நிலையில், நேற்றைய போட்டியில் தோனியை ரசிகர்களில் ஒருபகுதியினர் விமர்சித்தது வியப்பாக இருக்கிறது என்று இங்கிலாந்து வீரர் ஜோயி ரூட் ஆச்சர்யத்துடன் தெரிவித்துள்ளார்.

அதேசமயம், ரசிகர்கள் தோனியைக் கிண்டல் செய்து, விமர்சித்த விஷயம் தனக்குத் தெரியாது என்று யஜுவேந்திர சாஹல் தெரிவித்துள்ளார்.

msjpg
 

46-வது ஓவர் தொடங்கும் முன்புவரை ஆட்டம் சிறப்பாகத்தான் சென்றது. அடுத்த 30 பந்துகளில் 110 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், டேவிட் வில்லியின் ஓவரில் முதல் 4 பந்துகளில் தோனி ரன் அடிக்காமல் டாட்பந்து விட்டது ரசிகர்களை எரிச்சலடையச் செய்தது.

பிளங்கெட்டின் ஓவருக்கு முன், கூல்டிரிங்ஸ், தண்ணீர் குடித்த தோனி, சர்துல் தாக்கூர், அக்சர் படேலை பேட்டை கொண்டு வரச் செய்து பேட்டை மாற்றினார். இதனால், அடுத்து அதிரடி ஆட்டம் இருக்கப்போகிறது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், 47-வது ஓவரின் முதல் பந்தில் டீப் மிட் விக்கெட்டில் கேட்ச் கொடுத்து தோனி ஆட்டமிழந்தார். இது ரசிகர்களை மேலும் காட்டமடையச் செய்து, தோனியை சத்தமிட்டு விமர்சித்தனர்.

இது குறித்து யஜுவேந்திர சாஹலிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ’’தோனி பேட்டை மாற்றும் போது பதிலி வீரர்களிடம் என்ன கூறினார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால், ஹர்திக் பாண்டியா ஆட்டமிழந்த பின், தோனிக்கு ஆதரவாக ஆட பேட்டிங்கில் சிறந்த வீரர்கள் யாருமில்லை. நான், குல்தீப், உமேஷ் மட்டுமே இருந்தோம். அப்படி இருக்கையில், தோனிக்குதான் நெருக்கடி அதிகமாகி இருக்கும். இதற்கு முன் தோனி அதிகமாக பேட் செய்யவில்லை, அப்படி இருக்கும்போது, அதில் அடித்து ஆட முற்பட்டு விக்கெட்டை இழந்திருக்கலாம்’’ எனத் தெரிவித்தார்.

கிரிக்கெட் உலகில் விமர்சனங்களுக்கு அதிகமாக இடம் கொடுக்காத வீரர்களில் தோனி மிக முக்கியமானவர். அவ்வாறு விமர்சனங்கள் தனது திறமை மீது எழுந்தபோதெல்லாம் அதற்கான தகுந்த பதிலடிகளை தோனி கொடுத்து வந்துள்ளார். டெஸ்ட் போட்டியில் சிறப்பாகச் செயல்படவில்லை, தலைமை சரியில்லை என்று ரசிகர்களில் ஒருதரப்பினராலும், கிரிக்கெட் விமர்சகர்களாலும் பேசப்பட்ட நிலையில், யாரும் எதிர்பாராத நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஓய்வு அறிவித்தார் தோனி.

அதேபோன்ற நிலைமை கிரிக்கெட்டின் தாய்வீடு என்றழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் ரசிகர்கள் தோனி மீது விமர்சனங்களை வைத்துள்ளனர். இதற்கு தோனி, சரியான பதிலடி கொடுப்பாரா என்பது அடுத்த போட்டியில் தெரியும்.

http://tamil.thehindu.com/sports/article24425066.ece?utm_source=HP&utm_medium=hp-tsothers

Link to comment
Share on other sites

தோனியின் பேட்டிங்கால் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி: கவுதம் கம்பீர் காட்டம்

 

 
Gambhir-Dhoni

தோனியுடன் கம்பீர் : கோப்புப்படம்

 தோனி களமிறங்கி தன்னை நிலைப்படுத்திக் கொள்ள அதிகமான நேரம் எடுத்துக்கொள்வதாலும், அதிகமான பந்துகளை வீணாக்குவதாலும் மற்ற பேட்ஸ்மேன்களுக்குத்தான் அதிகமான நெருக்கடி ஏற்படுகிறது என்று மூத்த வீரர் கவுதம் கம்பீர் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இதில் கடைசி இரு போட்டிகளிலும் தோனி தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்திவில்லை.

   
 
 

2-வது போட்டியில் தோனி 58 பந்துகளைச் சந்தித்து 37 ரன்களும், 3-வது போட்டியில் 66 பந்துகளைச் சந்தித்து 42 ரன்களும் சேர்த்தார் தோனி. ரன்களைச் சேர்க்க அதிகமான பந்துகளை தோனி எடுத்துக்கொண்டார்.

dhojpg

3-வது ஒருநாள் போட்டியில் தோனி பேட் செய்த காட்சி: படம் உதவி ட்விட்டர்

 

இரு போட்டிகளிலும் தோனி களமிறங்கும்போது, அடுத்தடுத்து விக்கெட்டுகள் பறிபோனதால், இக்கட்டான நிலையில் இருக்கும் அணியை நிலைநிறுத்த தோனி நீண்டநேரம் எடுத்துக்கொண்டார் என்று தோனிக்கு சாதகமாக கருத்துகள் வைக்கப்பட்டன. ஆனால்,  வழக்கமான தோனி களமிறங்கினால், கடைசி 10 ஓவர்களில் களத்தில் அனல் பறக்கும், அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் செல்லும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாகும். ஆனால், கடந்த இருபோட்டிகளிலும் அதற்கு மாறாக இருந்தது.

தோனியின் இந்த பேட்டிங் முறை குறித்து மூத்த வீரர் கவுதம் கம்பீர் இந்திய அணியின் இங்கிலாந்து பயணம் குறித்த திறனாய்வுப் பேட்டியில் கடுமையாகச் சாடியுள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது:

''இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி இரு ஒருநாள் போட்டிகிளிலும் தோனி விளையாடிய விதம் அவரின் வழக்கமான ஆட்டத்தை விட்டு விலகி இருந்தது. களத்தில் தன்னை நிலைப்படுத்திக் கொள்வதற்காக ஏராளமான டாட் பால்களை தோனி சந்தித்தார். ரன்கள் எடுப்பதில் தோனி அக்கறை காட்டவில்லை.

தோனி இதுபோன்ற மந்தமாகவும், அதிகமான டாட் பந்துகளை விட்டு பேட் செய்வது அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்குத்தான் அழுத்தத்தையும், நெருக்கடியையும் கொடுக்கும்.

கடந்த இருபோட்டிகளிலும் தோனியின் விளையாட்டை நான் குறை கூறவில்லை. அவர் இன்னும் அதிகமான உத்வேகத்துடன் பந்துகளை வீணாக்காமல், சுறுசுறுப்பாக பேட் செய்ய வேண்டும். ஒருவீரர் களத்திற்கு வந்தவுடன் தன்னை நிலைப்படுத்திக்கொள்ள அதிகமான நேரத்தையும், பந்துகளையும் வீணாக்கக்கூடாது.

GambhirDhonijpg
 

தோனி களமிறங்குவதே எதிரணியின் பந்துவீச்சை அடித்துச் சிதறடிப்பதற்குத்தான். ஆனால், தோனி தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் விளையாடுவது வேதனைக்குரியதாகும்.

இங்கிலாந்து அணியின் மொயின் அலியும், அதிர் ரஷித்தும் சிறப்பாகப் பந்து வீசினார்கள். தோனிக்கு நெருக்கடி அளிக்கும் விதத்தில் அவர்களின் பந்துவீச்சு இருந்தது. தோனி இதற்கு முன் இதுபோன்று அதிகமான டாட் பந்துகளையும், பந்துகளை வீணாக்கியும் நான் பார்த்தது இல்லை. தோனி பேட்டிங் மீது அதிகமான கவனத்தை செலுத்த வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்தாகும்.

தோனி களத்தில் இருந்தால், கடைசி 10 ஓவர்கள் மிகுந்த ஆக்ரோஷமாக பேட் செய்யக்கூடியவர். ஆனால், இந்த விஷயம் கடந்த போட்டிகளிலும் எங்கு சென்றது எனத் தெரியவில்லை. தோனி தனது வழக்கமான பாணியில் பேட் செய்திருந்தால், அணியின் ஸ்கோர் 280 ரன்களை எட்டி இருக்கும்.

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் முதல் ஒருநாள் போட்டியில் ஆடிய விதத்தைப் பார்த்திருந்தால் புரியும். அதேபோன்ற ஆக்ரோஷமான பேட்டிங்கை தோனி வெளிப்படுத்துவது அவசியம்.''

இவ்வாறு கம்பீர் தெரிவித்தார்.

https://tamil.thehindu.com/sports/article24458746.ece

 

 

 

தோனி இளைஞராகவே இருப்பாரா? தோல்விக்கான காரணம் என்ன?- சொல்கிறார் சேவாக்

 

 
Dhoni-Sehwag

விரேந்திர சேவாக், எம்.எஸ். தோனி : கோப்புப்படம்

தோனி எப்போதும் இளைஞராகவே இருப்பாரா, அவருக்கும் வயதாகிக் கொண்டிருக்கிறது. அதன் எதிரொலிதான் இங்கிலாந்து தொடரில் ரன் சேர்க்க அவர் சிரமப்பட்டார் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி தோல்வி அடைந்தது. இந்தத் தோல்வியில் அனைவராலும் விமர்சிக்கப்படும் முக்கிய விஷயம், தோனியின் ஆமை வேக பேட்டிங் ஆகும்.

 

கடைசி இரு போட்டிகளில் அவர் பேட்டிங் செய்த விதம் ரன்களைச் சேர்க்க முடியாமல் சிரமப்பட்டதையே காட்டியது. 2-வது போட்டியில் 59 பந்துகளில் 37 ரன்களையும், 3-வது போட்டியில் 66 பந்துகளுக்கு 42 ரன்களையும் தோனி சேர்த்தார்.

பந்துகளை அதிகமாக எதிர்கொண்டு ரன்களைக் குறைவாகச் சேர்த்தார் என்று தோனி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன. இது தொடர்பாக அனுபவ வீரர் சுனில் கவாஸ்கர் கூட தோனியின் விளையாட்டைக் கிண்டல் செய்திருந்தார்.

அதில், லார்ட்ஸ் மைதானத்தில் தோனி 37 ரன்கள் அடித்ததைப் பார்த்தபோது, நான் 136 பந்துகளுக்கு 36 ரன்கள் எடுத்தேன். இதை மைதானத்தில் சேர்த்த நினைவு வந்துவிட்டது. அதுபோல் மிகவும் மெதுவாக தோனி பேட் செய்தார் என்று கிண்டலடித்திருந்தார்.

இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோல்விக்கான காரணம் குறித்து முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பல்வேறு காரணங்களைக் கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது:

''இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்ததற்கு முக்கியக் காரணம் பேட்ஸ்மேன்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படாததே. முக்கியமான பேட்ஸ்மேன்களான தோனி, விராட் கோலி, ஷிகர் தவண், ரோஹித் சர்மா ஆகியோர் எதிர்பார்த்த அளவுக்கு ரன்களைக் குவிக்கவில்லை. அவர்களின் பங்களிப்போடு ஒப்பிடும்போது அனைவரும் குறைந்தபட்சம் 30 முதல் 40 ரன்கள் குறைவாகச் சேர்த்துள்ளனர்.

விராட் கோலி, தோனி, தவண், ரோஹித் ஆகியோர் இன்னும் சிறப்பாக பேட் செய்ய முயன்றிருந்தால், ரன்கள் சேர்ந்திருக்கும். அதேசமயம் பந்துவீச்சாளர்களும் இங்கிலாந்து அணிக்கு நெருக்கடி கொடுக்கும் விதத்தில் வீசி இருக்கலாம். அதிலும் தோல்வி அடைந்துவிட்டனர்.

புவனேஷ்வர் குமார 3-வது போட்டியிலும் காயத்தோடுதான் களமிறங்கினார், இப்போதும் காயத்தோடுதான் இருக்கிறார். அவரால் எப்படி சிறப்பாகப் பந்துவீசி இருக்க முடியும். இந்த முறை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் மோர்கன், ரூட் ஆகியோர் குல்தீப், சாஹர் பந்துவீச்சை நன்கு எதிர்கொள்ளப் பழகிவிட்டனர். என்னைப் பொறுத்தவரை இங்கிலாந்துடனான தோல்விக்கு இந்திய அணியின் பேட்மேன்களே காரணம் என்று கூறுவேன்.

mssewagjpg
 

இந்திய அணி 4-வது மற்றும் 5-வது இடத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேன்கள் யார் என கண்டுபிடிக்க முடியாமல் திணறியது. தினேஷ் கார்த்திக்கை களமிறக்கலாமா அல்லது தோனியைக் களமிறக்கலாமா என்று குழப்பத்துடன் இருந்தது.

நீங்கள் நினைப்பதுபோல் தோனி பழைய மாதிரி இளைஞராக இல்லை. அவருக்கும் முதுமை வந்துவிட்டது, வயதாகிக் கொண்டிருக்கிறது. உண்மையில் தோனி, பொறுப்பேற்று அணியைக் கடைசிவரை கொண்டு சென்றிருக்க வேண்டும். ஏராளமான டாட் பந்துகளை ரன்களாக மாற்றி இருக்க வேண்டும். ஆனால், அனைத்தையும் இப்போது இருக்கும் தோனியால் செய்ய முடியவில்லை.''

இவ்வாறு சேவாக் தெரிவித்தார்.

முன்னாள் வீரர்கள் கம்பீர், சேவாக், கவாஸ்கர் ஆகியோர் தோனிக்கு வயதாகிக் கொண்டிருக்கிறது என்பதைச் சூசகமாக அறிவித்து வருகிறார்கள். ஆனால், அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி 2019-ம் ஆண்டு உலகக்கோப்பைப் போட்டி வரை தோனி அணியில் தொடர்வதில் மாற்றமில்லை என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

https://tamil.thehindu.com/sports/article24459925.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் தான் பிழையா சொல்லிட்டேன் போல‌ ஆனால் இந்த‌ காணொளி ரிக்ரொக்கில் பார்த்து இருக்கிறேன் முந்தி இந்த‌ மாத‌ காணொளி என்றால் என்னில் தான் த‌வ‌று  த‌வறுக்கு ம‌ன்னிப்பு கேட்க்கிறேன் நான் ரிக்ரொக் பார்ப்ப‌தே 2மாத‌த்துக்கு ஒருக்கா என‌து போனில் ரிக்ரொக் ஆப் இல்லை  த‌ம்பி த‌ங்கைச்சி இவ‌ர்க‌ளின் வீடியோக்க‌ள் பார்க்க‌  சில‌ ம‌ணி நேர‌ம் பார்த்து விட்டு மீண்டும் ரிக்ரொக் ஆப்பை அழிச்சு போடுவேன்.........................
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Riyan Parag 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         KKR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Jos Buttler 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Jasbirsingh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK
    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.