Jump to content

அட்லாப்பம்.. இது காசிமேட்டு பீட்சா!


Recommended Posts

அட்லாப்பம்.. இது காசிமேட்டு பீட்சா!


 

 

kasimedu-s-version-of-a-pizza-is-atlappam

 

 

 

-அகிலா கண்ணதாசன்

இத்தாலியின் பீட்சா உணவுக்கு தமிழகத்தின் மற்ற நகரங்களைவிட சென்னையில் கூடுதல் மவுசுதான். ஆனால், அதே சென்னையின் வட பகுதியில் உள்ளூர் பீட்சா ஒன்று இருக்கிறது. அட்லாப்பம். இதுதான் எங்களூர் பீட்சா என்கின்றனர் வடசென்னைவாசிகள்.

 

காசிமேட்டுக்கு ஒரு நாள் காலை பயணம் மேற்கொண்டபோது புதுமார்க்கெட் பகுதியில் மேனகாவின் கடையைப் பார்த்தோம். கடைமுன் ஆர்வத்துடன் ஒரு சிறு கூட்டம் நின்றிருந்தது.

மேனகா முன்னால் மூன்று விறகு அடுப்புகள் அத்தனையிலும் மண் பாண்டங்கள். அடுப்பின் மீது ஒரு மண் பாணை அதனுள் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஒரு பாத்திரத்தில் அட்லாப்பத்துக்கான மாவை ஊற்றிவைக்கிறார். பின்னர் அதன் மீது மற்றொரு பாத்திரத்தை வைக்கிறார். அந்தப் பாத்திரத்தில் கங்கு நிரப்பப்பட்டிருக்கிறது.

1531134410.jpg

அவ்வப்போது அட்லாப்பம் வெந்துவிட்டதா என சோதனை செய்கிறார் மேனகா. ஒரு தருணத்தில் அது நன்றாக உப்பலாகி இருந்தது. அட்லாப்பம் உப்பிவிட்டால் வெந்துவிட்டது என்று அர்த்தம். ஒரு கரண்டியைக் கொண்டு லாவகமாக அதை வெளியில் எடுத்து செய்தித்தாளில் வைத்து தோசைக் கரண்டியால் நான்கு பாகங்களாக குறுக்கும் நெடுக்கும் கோடு போடுகிறார். பீட்சா கடையில் செய்வது போலவே. அப்புறம் என்ன வடசென்னை பீட்சா அட்லாப்பம் சாப்பிடத் தயார்.
அட்லாப்பம் சூரியன் உதிக்கும்போது ஜொலிக்கும் மஞ்சள் நிறத்தில் கமகமவென இருந்தது. கடித்தால் வெளியில் முறுமுறுவென்றும் உள்ளே மெதுவாகவும் இருந்த்து. விலை வெறும் ரூ.40/- தான். ஆனால், ஒன்று சாப்பிட்டால் போதும் வயிறு நிறைந்துவிடும்.

1531134451.jpg

அட்லாப்பத்தை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது என்ட்ரி கொடுத்த நாயகம், (மேனகாவில் மாமியார்) "இது எங்களைப் போன்ற மீனவர்கள் வீடுகளில் முன்பெல்லாம் அன்றாடம் செய்யப்படும் உணவு. அட்லாப்பம் செய்முறையை எனக்கு எனது பாட்டி சொல்லிக்கொடுத்தார். 

இதில், அரிசி மாவு, ரவை, வறுத்து திரித்த கடலை மாவு, முட்டை, நெய், எண்ணெய், ஏலக்காய், சர்க்கரை, வனஸ்பதி, சிறு துண்டுகளாக வெட்டிய தேங்காய் உலர் பழங்கள் இருக்கின்றன.

மாவை வீட்டிலேயே தயார் செய்து கொண்டுவந்துவிடுவேன். இங்கு வந்து வேகவைக்கும்போது முட்டையும் முந்திரி உலர்திராட்சை ஆகியவற்றை சேர்த்துவிடுவேன். அட்லாப்பத்தை எந்த வேளையில் வேண்டுமானால் சாப்பிடலாம். ஆனால், விறகு அடிப்பில்தான் செய்ய முடியும் என்பதால் புகை மண்டும் காரணத்தால் வீட்டில் அடிக்கடி செய்வதில்லை" என்றார்.
நாயகத்தின் கடை புதன் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும்தான் இயங்கும். நாயகத்தைத் தவிர காசிமேட்டில் இன்னும் இரண்டு கடைகள் அட்லாப்பத்துக்கென்றே இயங்குகிறதாம்.

https://www.kamadenu.in/news/cooking/3957-kasimedu-s-version-of-a-pizza-is-atlappam.html?utm_source=site&utm_medium=category&utm_campaign=category

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்கவே செமையாய் இருக்கு, தேங்காய் சொட்டு வேற, கேக் போல பிள்ளைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.