Jump to content

`கடைசி இலை கீழே விழுவதற்கும் காற்று வர வேண்டும் அல்லவா?!’ - நா.முத்துக்குமார் #HBDNaMuthukumar


Recommended Posts

`கடைசி இலை கீழே விழுவதற்கும் காற்று வர வேண்டும் அல்லவா?!’ - நா.முத்துக்குமார் #HBDNaMuthukumar

 
 
 

என் சின்னஞ் சிறு தளிரே! கல்வியில் தேர்ச்சிகொள். அதே நேரம், அனுபவங்களிடமிருந்து அதிகம் கற்றுக்கொள்.

`கடைசி இலை கீழே விழுவதற்கும் காற்று வர வேண்டும் அல்லவா?!’ - நா.முத்துக்குமார் #HBDNaMuthukumar
 

`குளத்தில் சிறுநீர் கழிக்கும் சிறுவன் 
பூமியில் இருந்தபடி ஆகாயத்தை அசைக்கிறான்'.

நா.முத்துக்குமார் தனது `வேடிக்கை பார்ப்பவன்' புத்தகத்தில் இந்த ஜென் கவிதையைக் குறிப்பிட்டிருப்பார். அவர் வாழ்வை இந்த ஜென் மனநிலையில் இருந்துதான் பார்த்திருக்கிறார். நாம் காண மறந்த அல்லது கண்டு கடந்துபோன நிகழ்வுகளை தரிசனம்போல நுட்பமாக அணுகியவர் முத்துக்குமார். பெருமழைக்குப் பிறகு இலைகளில் வழியும் மழைத்துளியை, அணில்கள் சுவைத்துத் தின்னும் கொய்யாப்பழங்களை, டிராஃபிக் நிறைந்த சென்னையில் ரிக்‌ஷாக்காரர் பாடும் கானாவை என நுட்பமாக வாழ்வை ரசித்து, அதைத் தன் எழுத்துகளில் நமக்குக் கொடுத்த ஒப்பற்றக் கலைஞன் நா.முத்துக்குமார்

`சிறு புல்லில் உறங்கும் பனியில் தெரியும் மலையின் அழகோ தாங்கவில்லை...' அவர் வரிகளைப்போலவேதான் அவர் வாழ்வும். தன் அம்மா, அப்பா, மகன் குறித்து `அணிலாடும் முன்றில்' புத்தகத்தில் அவர் எழுதியவை இங்கே...

 

 

முத்துக்குமார்

அம்மா:

`அம்மா, நீ நிரந்தரமானவள். உனக்கு அழிவு இல்லை. ஆகாயம் நீ. அதில் சுற்றிச் சுடரும் சூரியன் நீ. சந்திரனும் நீயே. நட்சத்திரங்களின் நின்று ஒளிரும் பிரகாசத்திலிருந்து புலப்படுவது உன் கண்களன்றி வேறு என்ன?

 

 

 

நீயே முகிலாகவும், முகில் தூவும் மழையாகவும், மழையில் நனையும் நிலமாகவும் மலர்ந்துகொண்டிருக்கிறாய். நதியும் நீ, கரையும் நீ, கரை தாண்டி விரியும் காட்சியும் நீ!

சிறுபிள்ளை உடன் இருக்க, கார்த்திகை மாதத்தின் அந்திக் கருக்கலில் திண்ணை எங்கும் அகல்விளக்கு ஏற்றுபவளிடமும்; ஆலமரக் கிளையில் பழஞ்சேலையைத் தூளியாக்கி, கைக்குழந்தையைக் கிடத்திவிட்டு, அறுவடை வயலில் வேலைசெய்தபடி நொடிக்கொரு தடவை திரும்பிப் பார்ப்பவளிடமும்; அப்பார்ட்மென்ட் பூங்காவின் சிமென்ட் பெஞ்ச்சில் காத்திருக்கும் மகனை அலுவலகம் முடிந்து வந்து சட்டைப் புழுதியோடு அள்ளி அணைப்பவளிடமும்; பள்ளியின் மெயின் கேட் மூடிவிடக் கூடாதே என்கிற பதைப்பதைப்பில், மாநகரத்து சிக்னலில் இடுப்பில் யூனிஃபார்ம் குழந்தையோடு கடப்பவளிடமும்; புதைக்கிற மகன்களையெல்லாம் விதைக்கிற விதைகளாக எண்ணிக்கொண்டிருக்கும் ஈழத்துத் தாய்களிடமும் நான் காண்பது உன் முகம்தானே தாயே!

 

 

முத்துக்குமார்

அப்பா:

அன்புள்ள அப்பாவுக்கு...

உங்களுக்கு நான் நிறைய கடிதங்கள் எழுதியிருக்கிறேன். பெரும்பாலும் `அன்புள்ள’ எனத் தொடங்கி, `இப்படிக்கு’ என முடியும் மிகச்சிறிய கடிதங்கள்.

முதன்முறையாக என் மனதின் ஆழத்திலிருந்து இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இதை நான், நீங்கள் உயிருடன் இருந்தபோதே எழுதியிருக்கலாம். படித்துப் பார்த்து, ஒரு புன்னகையோ ஒரு துளிக் கண்ணீரோ பதிலாகக் கொடுத்திருப்பீர்கள். நிச்சயம் புன்னகைதான் உங்கள் பதிலாக இருந்திருக்கும். அப்படியெல்லாம் அழுகிற மனிதர் அல்ல நீங்கள். இப்போது யோசித்துப்பார்க்கும்போது, என்றுமே நீங்கள் அழுது நான் பார்த்ததில்லை. எந்த அப்பாக்கள், பிள்ளைகள் முன்பு அழுதிருக்கிறார்கள்?

நள்ளிரவில் வீடு வந்தாலும், தான் வாங்கிவந்த தின்பண்டங்களை மனைவி திட்டத் திட்ட... உறங்கிக்கொண்டிருக்கும் பிள்ளைகளை எழுப்பி, அப்போதே ஊட்டிவிட்டு ரசிக்கும் பாசமான அப்பாவின் முகம்; உறவினர்கள் ஒன்றுகூடும் திருமணங்களில் முன்னிரவு நண்பர்களுடன் சீட்டாடிக்கொண்டிருக்கும்போது மடியில் சென்று அமர்ந்தால், சட்டெனக் கடுமை காட்டித் துரத்திவிடும் கோபமான அப்பாவின் முகம்; மாதக் கடைசியில் யாரிடம் கடன் வாங்கலாம் என யோசித்துக்கொண்டிருக்கும் நேரத்தில் பள்ளிச் சுற்றுலாவுக்குப் பணம் கேட்டால், பதற்றமாகும் அப்பாவின் முகம் என... அப்பாக்களுக்குப் பல முகங்கள் உண்டு. அழுதுகொண்டிருக்கும் அம்மாக்களின் முகங்கள்போல பிள்ளைகளுக்கு அவ்வளவு எளிதாகக் கிடைத்துவிடுவதல்ல... அழுதுகொண்டிருக்கும் அப்பாவின் முகம்.

அப்பா... நீங்கள் உயிருடன் இருந்தபோது பல முறை பேச நினைத்து, எழுத நினைத்து, முடியாமல்போனதைத்தான் இந்தக் கடிதத்தில் எழுதப்போகிறேன். கடைசி இலை கீழே விழுவதற்கும் காற்று வர வேண்டும் அல்லவா! காலத்தின் காற்று எப்போதும் தாமதமாகத்தான் வீசும்போல. எல்லா பிள்ளைகளுக்கும் அப்பாதான் முதல் கதாநாயகன் என்பார்கள். அப்பா என்றால் அறிவு. எவ்வளவு சத்தியமான வார்த்தைகள். நீங்கள் இறந்த 18-ம் நாள், பரணில் இருந்த உங்கள் பழைய டிரங்குப் பெட்டியைக் கிளறியதில், உங்கள் நாட்குறிப்புகளைப் படிக்கும் பெரும்பேறு கிடைத்தது. யாரோ, எப்போதோ படிக்கப்போகிறார்கள் எனத் தெரிந்தே எழுதப்படுபவைதானே நாட்குறிப்புகள். காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதுபோல், அப்பா, உங்கள் அதிகப்படியான தன்னம்பிக்கைதான் என் நம்பிக்கை என்று அப்போது புலனானது. இன்று வரை உலகை எதிர்கொள்ளும் ஒவ்வொரு தருணத்திலும் உங்கள் முகத்திலிருந்தே எனக்கான உணர்ச்சியை கடன் வாங்கிக்கொள்கிறேன். இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடியில், உலகின் மூன்றாவது அறிவாளி என் கையைப் பிடித்து இழுத்து விளையாட அழைக்கிறான். அவனுக்கும் உங்கள் பெயரைத்தான் வைத்திருக்கிறேன். பெயரை உடையவன்தானே பேரன்!

முத்துக்குமார்

மகன்:  

அன்புள்ள மகனுக்கு, அப்பா எழுதுவது. இது நான் உனக்கு எழுதும் முதல் கடிதம். இதைப் படித்துப் புரிந்துகொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப் பழகிக்கொண்டிருக்கிறாய். உன் மொழியில் உனக்கு எழுத, நான் கடவுளின் மொழியை அல்லவா கற்க வேண்டும். பின்னாளில் இந்தக் கடிதத்தை மீண்டும் எடுத்துப் படித்துப் பார். உன் தகப்பன் உனக்குச் சேர்த்த ஆகப்பெரிய சொத்து இதுதான் என உணர்வாய்.

என் ப்ரியத்துக்குரிய பூக்குட்டியே! உன் மெத்தென்ற பூம்பாதம் என் மார்பில் உதைக்க... மருத்துவமனையில் நீ பிறந்ததும் உனை அள்ளி என் கையில் கொடுத்தார்கள். என் உதிரம் உருவமானதை, அந்த உருவம் என் உள்ளங்கையில் கிடப்பதை; குறுகுறு கை நீட்டி என் சட்டையைப் பிடித்து இழுப்பதை; கண்ணீர் மல்கப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

உலகிலேயே மிகப்பெரிய இன்பம் எது, தாய் மடியா? காதலியின் முத்தமா? மனைவியின் நெருக்கமா? கொட்டிக்கிடக்கும் செல்வமா? எதுவுமே இல்லை. `தம் மக்கள் மெய்த் தீண்டல் உயிருக்கு இன்பம்’ என்கிறார் வள்ளுவர். நீ என் மெய் தீண்டினாய், மெய்யாகவே மெய்யாகவே நான் தூள் தூளாக உடைந்துபோனேன். உன் பொக்கைவாய் புன்னகையில் நீ என்னை அள்ளி அள்ளி எடுத்து மீண்டும் மீண்டும் ஒட்டவைத்துக்கொண்டிருந்தாய்.

நீ அழுதாய்; சிரித்தாய்; சிணுங்கினாய்; குப்புறக் கவிழ்ந்து, தலை நிமிர்ந்து, அந்தச் சாகசத்தைக் கொண்டாடினாய், தரையெல்லாம் உனதாக்கித் தவழ்ந்தாய். தகப்பன் கைவிரல் பிடித்து எழுந்தாய். நீயாகவே விழுந்தாய். தத்தித் தத்தி நடந்தாய். தாழ்வாரம் எங்கும் ஓடினாய். மழலை பேசி, மொழியை ஆசீர்வதித்தாய்.

முத்துக்குமார்

என் பொம்முக்குட்டியே! இந்த எல்லா தருணங்களிலும் நீ நம் வீட்டுக்கு இறைவனை அழைத்து வந்தாய். என் செல்லமே! இந்த உலகமும் இப்படித்தான். அழ வேண்டும், சிரிக்க வேண்டும், சிணுங்க வேண்டும், குப்புறக் கவிழ்ந்து, பிறகு தலை நிமிர்ந்து, அந்தச் சாகசத்தைக் கொண்டாட வேண்டும். தரையையெல்லாம் தனதாக்கித் தவழ வேண்டும்; எழ வேண்டும்; விழ வேண்டும். தத்தித் தத்தி நடக்க வேண்டும். வாழ்க்கை முழுக்க இந்த நாடகத்தைத்தான் நீ வெவ்வேறு வடிவங்களில் நடிக்க வேண்டும்.

என் சின்னஞ்சிறு தளிரே... கல்வியில் தேர்ச்சிகொள். அதே நேரம், அனுபவங்களிடமிருந்து அதிகம் கற்றுக்கொள். தீயைப் படித்துத் தெரிந்துகொள்வதைவிட, தீண்டி காயம் பெறு. அந்த அனுபவம் எப்போதும் சுட்டுக்கொண்டே இருக்கும். இறக்கும் வரை இங்கு வாழ, சூத்திரம் இதுதான், கற்றுப்பார். உடலைவிட்டு வெளியேறி, உன்னை நீயே உற்றுப்பார்.'

நா.முத்துக்குமார் இந்தப் பிரபஞ்சத்தின் ஓயாத ஒளித்துகள்கள்போல நிறைந்து நம் நினைவுகளில் என்றுமிருப்பார்.

https://www.vikatan.com/news/miscellaneous/130577-namuthukumars-statement-about-his-father-mother-son.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.