Sign in to follow this  
நவீனன்

இலங்­கையின் சனத்­தொ­கையின் சம­கால மாற்­றங்­களும் சமூக பொரு­ளா­தார விளை­வு­களும்

Recommended Posts

இலங்­கையின் சனத்­தொ­கையின் சம­கால மாற்­றங்­களும் சமூக பொரு­ளா­தார விளை­வு­களும்

 

அரு­ளம்­பலம் பாலச்­சந்­தி­ர­மூர்த்தி  [விரி­வு­ரை­யாளர்  கோப்பாய் ஆசி­ரிய கலா­சாலை] 

இன்று உலக சனத்­தொகை தினம்

ஒரு நாட்டின் சமூ­க­பொ­ரு­ளா­தார மற்றும் அர­சியல் கல­ாசார விடயங்­களில் தாக்கம் செலுத்தும் ஒன்­றாக சனத்­தொகை விளங்­கு­கின்­றது. எமது நாட்டின் இயற்கை வளங்­களை மனித பயன்­பாட்­டிற்­காக மாற்­றி­ய­மைக்கும் மிக முக்­கிய வள­மான மனி­த­வ­ளத்­தி­னையும் இச் சனத்தொ­கையே கொண்­டி­ருக்­கின்­றது.

இலங்­கையின் குடித்­தொகை அள­வா­னது முத­லா­வது குடிக்­க­ணிப்பு இடம்­பெற்ற 1871 ஆம் ஆண்­டு­களில் 2.400 மில்­லி­யன்­க­ளாக மட்­டுமே காணப்­பட்­ட­துடன் 2011 ஆம் ஆண்டு இறுதிக் குடிக்­க­ணிப்பின் போது 20. 26 மில்­லி­யன்­க­ளா­கவும் தற்­போது 2017 ஆம் ஆண்டு மத்­திய வங்கி அறிக்­கைப்­படி 21.444 மில்­லி­யன்­க­ளாகக் காணப்­ப­டு­கின்­றது இலங்­கையின் குடித்­தொகை அள­வு­க­ளுடன் அதன் வளர்ச்சிப் போக்கை நோக்கும் போது அது படிப்­ப­டி­யாகக் குறை­வ­டைந்து செல்லும் போக்கைக் கொண்டே காணப்­ப­டு­கின்­றது 1953 ஆம் ஆண்டு இலங்­கையின் குடித்­தொகை வளர்ச்சி வீதம் 1953 ஆம் ஆண்டு 2.8 வீத­மாக ஒரு உயர் அள­வாகக் காணப்­பட்ட போதும் அதற்குப் பின்­வந்த காலங்­களில் குடித்­தொகை வளர்ச்சி குறை­வ­டைந்தே சென்­றுள்­ளது 2001 ஆம் ஆண்டு 1.2 வீத­மாக இருந்த குடித்­தொகை வளர்ச்சி வீதம் 2016 ஆம் ஆண்டு 1.1 வீத­மா­கவும் குறை­வ­டைந்து செல்­கின்­றது.

இலங்­கையின் குடித்­தொகை வளர்ச்சி வீதம் குறை­வ­டைந்து செல்­வ­துடன் பல்­வேறு குடித்­தொகைக் கார­ணிகள் செல்­வாக்­குச் ­செ­லுத்தி வரு­கின்­றது பிறப்பு வீதத்தில் ஏற்­பட்­டு­வரும் வீழ்ச்சி நிலை மற்றும் இலங்­கை­யி­லி­ருந்து வெளிநாடு நோக்­கிய குடிப்­பெ­யர்வு (தேறிய குடிப்­பெ­யர்வு-) என்­பன இவ்­வா­றான குடித்­தொகை வளர்ச்சி குறை­வ­டைந்து செல்­வ­தற்கு நேர­டி­யாக பங்­காற்­று­கின்­றது.

இலங்­கையின் குடித்­தொ­கையில் ஏற்­பட்டு வரும் முக்­கிய மாற்­ற­மாக குடித்­தொகை வய­த­மைப்பில் ஏற்­பட்டு வரும் மாற்றம் இனங்­கா­ணப்­ப­டு­கின்­றது. இம் மாற்றம் இலங்­கையின் சனத்­தொ­கையின் வயதுப் பிரி­வி­னரின் முக்­கிய மூன்று பிரி­வி­ன­ரி­டையே ஏற்­பட்டு வரு­கின்­றது.

0 – 14 வயதுப் பிரிவு ( இள­வ­யதுப் பிரிவு)

15- – 59 வயதுப் பிரிவு ( ஊழியப் படை)

60 வய­திற்கு மேல் ( முதியோர் பிரிவு )

இவ் வய­துப்­பி­ரி­வி­னரை அடிப்­ப­டை­யாகக் கொண்டே நாட்டின் பாட­சாலைக் கல்வி மற்றும் உயர்­கல்வி நட­வ­டிக்­கைகள் வேலை­வாய்ப்­புகள், முதியோர் தொடர்­பான நலத்­தே­வைகள் மற்றும் எதிர்­காலக் குடித்­தொகை எதிர்வு கூறல்கள் என்­பன மேற்­கொள்­ளப்­படு­கின்­றது.

கீழ் உள்ள அட்­ட­வணை இலங்­கையின் குடித்­தொகை வய­த­மைப்பில் ஏற்­பட்­டு­வரும் மாற்­றங்­களின் போக்­கினைக் காட்­டு­கின்­றது.

அட்­ட­வ­ணை­யின்­படி இலங்­கையின் 0 – 14 வயதுப் பிரிவை உடைய இள­வ­யதுக் குடித்­தொ­கையில் தொடர்ச்­சி­யாக வீழ்ச்சி ஏற்­பட்­டு­வ­ரு­கின்­றது. இவ்­வீழ்ச்­சிக்­கான கார­ணங்­க­ளாக கரு­வ­ள­வாக்­கத்தில் ஏற்­பட்­டு­வரும் விரை­வான வீழ்ச்­சி­யுடன் முதியோர் குடித்­தொ­கையில் ஏற்­பட்­டு­வரும் அதி­க­ரிப்பும் கார­ண­மாக அமை­கின்­றது இலங்­கையின் சமூக அமைப்பில் ஏற்­பட்­டு­வரும் மாற்றம் கார­ண­மாக குடும்பம் ஒன்றின் சரா­சரி உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை சுருங்­கி­வ­ரு­கின்­றது 2008 ஆம் ஆண்டு 4.1 ஆக இருந்த குடும்­பங்­களின் சரா­சரி உறுப்­பினர் எண்­ணிக்கை 2017 ஆம் ஆண்டு மத்­திய வங்கி அறிக்­கைப்­படி 3. 1 ஆகக் குறை­வ­டைந்து வரு­வ­தா­னது சிறிய குடும்பம் ஒன்­றினை விரும்பும் தன்­மையைக் கொண்­டி­ருப்­பது பிறப்பு வீதம் குறை­வ­டைந்து செல்­வ­தற்குக் கார­ண­மா­கின்­றது. அத்­துடன் பெண்­களின் கல்வி மட்டம் மற்றும் சரா­சரித் திரு­மண வயது என்­ப­வற்றில் ஏற்­படும் அதி­க­ரிப்பு கரு­வ­ள­வாக்­கத்தின் வீழ்ச்­சி­நி­லைக்குக் கார­ண­மா­கவும் அமைந்­துள்­ளது.

இவ்­வாறு இள­வ­ய­துப்­பி­ரிவில் ஏற்­பட்­டு­வரும் வீழ்ச்­சி­கா­ர­ண­மாக எதிர்­கா­லத்தில் நாட்டின் வளம்­மிக்க ஊழி­யப்­படை குறை­வ­டையும் நிலை காணப்­படும்

இள­­வ­ய­து­டைய குடித்­தொ­கையில் ஏற்­படும் வீழ்ச்­சியால் ஆரம்­பப்­பி­ரிவில் பாட­சா­லை­களில் சேரும் மாண­வர்­களின் எண்­ணிக்­கையில் வீழ்ச்­சி­நிலை ஏற்­பட்­டு­வ­ரு­கின்­றது தற்­போது இலங்­கையில் உள்ள சில ஆரம்பப் பாட­சா­லை­களில் மாண­வர்கள் சேர்வு வீதம் குறை­வாக இருப்­ப­தனால் பாட­சா­லைகள் மூடப்­படும் நிலை­மைகள் ஏற்­பட்டும் வரு­கின்­றது.

குறிப்­பாக வட­கி­ழக்கு உள்­ளிட்ட தமிழ் சமூ­கத்­தி­ன­ரி­டையில் இள­வ­ய­துப்­பி­ரிவில் ஏற்­பட்­டு­வரும் வீழ்ச்சி நிலை பல்­வேறு அர­சியல் சமூகப் பாதிப்­புக்­களை எதிர்­கா­லத்தில் ஏற்­ப­டுத்தும். இன­ரீ­தி­யான குடிததொகையில் தமி­ழர்கள் மூன்றாம் நிலைக்குத் தள்­ளப்­படும் நிலை ஏற்­படும்.

எனினும் இளை­யோரின் அளவில் ஏற்­படும் வீழ்ச்­சி­கா­ர­ண­மாக குறைந்த அள­வான குடும்ப எண்­ணிக்கை கொண்ட குடும்­பங்கள் தோற்றம் பெறு­வதால் அதிக முத­லீட்­டினைப் பாட­சாலைப் பிள்­ளை­களின் கல்வி நட­வ­டிக்­கைக்­காக மேற்­கொள்ளும் நிலை காணப்­படும்.

கரு­வ­ள­வாக்­கத்தில் ஏற்­படும் வீழ்ச்சி கார­ண­மாக நீண்ட காலம் பணி­யாற்­றக்­கூ­டிய பெண் ஊழி­யப்­படை ஒன்று தோற்றம் பெறும் வாய்ப்பு உரு­வா­கும்.

15- – 59 வயதுப் பிரிவு

(15-– 59) வய­திற்கு இடைப்­பட்­ட­வர்­க­ளை­யு­டைய அள­வா­னது இலங்­கையின் வய­துப்­பி­ரிவில் ஆரம்­பத்தில் குறை­வாகக் காணப்­பட்டு பின்னர் ஓர் அதி­க­ரிப்பைக் காட்­டி­னாலும் எதிர்­கா­லத்தில் இவ்­வ­யதுப் பிரி­வி­னரும் குறை­வ­டைந்து செல்லும் நிலை காணப்­ப­டு­வ­தனை அட்­ட­வணை காட்­டு­கின்­றது எனினும் ஏனைய வய­துப்­பி­ரி­வி­னரை விட ஓர் உயர் வீதத்­தினைக் கொண்ட பிரி­வாக (15- –59) வய­திற்கு இடைப்­பட்டோர் காணப்­ப­டு­கின்­றனர். இப் பிரி­வினர் நாட்டின் ஊழி­யப்­படைப் பங்­கேற்பைக் கொண்­ட­வர்­க­ளாகக் காணப்­ப­டு­வ­துடன் அவர்­களில் 15 –-19 வய­துக்­குட்­பட்ட பரு­வ­வ­யதுப் பிரி­வி­னரும் அடங்­கு­கின்­றனர் . இவர்கள் இப்­பி­ரிவில் 20வீதத்துக்கு வகை­கூ­று­ப­வர்­க­ளாகக் காணப்­படு­கின்­றனர்

இவ்­வாறு 15- – 59 வய­துக்கு இடைப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை உயர்­வாக இருப்­ப­தனால் நாட்டின் ஊழி­யப்­படை அதி­க­மாகக் காணப்­ப­டு­வதால் போதி­ய­ள­வான தொழில் வாய்ப்­புக்­களை வழங்­கா­த­வி­டத்து வேலை­யில்லாப் பிரச்­சி­னைகள் அதி­க­ரிக்கும் எனினும் இவ் ஊழி­யப்­படை சரி­யான முறையில் பயிற்­று­விக்­கப்­பட்டால் வய­த­மைப்பில் ஏற்­படும் மாற்­றத்­திற்கு ஏற்ப அதிக பொரு­ளா­தார நன்­மையை இலங்கை பெற்றுக் கொள்ளும் எனவும் கரு­தப்­ப­டு­கின்­றது.

இவ் வய­துப்­பி­ரிவில் கட்­டி­ள­மைப்­பி­ரி­வி­னரும் (15 – -19 வயது) உள்­ள­டக்­கப்­ப­டு­வதால் இவர்­க­ளுக்­கான முறை­யான உயர்­கல்வி வாய்ப்­புக்­களை வழங்­கு­வது எதிர்­கால

ஊழி­யப்­ப­டையை வள­முள்­ள­தாக்கும் இதற்கு அமைய தற்­போது இலங்­கையில் உயர்­த­ரப்­பி­ரிவில் தொழில்­நுட்பப் பிரிவின் உரு­வாக்கம், 13 வருடம் வரை­யி­லான தொழில் முறைக் கல்வித் திட்டம் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளமை, கட்­டாயக் கல்வி வயதின் எல்லை 16 வய­தாக அதி­க­ரிக்­கப்­பட்­டமை என்­பன முன்­னேற்­பா­டான திட்­டங்­க­ளாகக் கொள்ள முடியும்

 இலங்­கையின் குடித்­தொ­கையில் கட்­டி­ள­மைப்­ப­ரு­வத்­தி­னரின் அளவு ஒரு உயர்­வான கட்­டத்­தினை தற்­போது கொண்­டி­ருப்­பதால் பாலியல் தொடர்­பான பிரச்­ச­னைகள் மற்றும் தற்­கால தக­வல்­தொ­ழில்­நுட்­பத்தின் விருத்தி ஊடான சீர்­கே­டுகள் என்­ப­வற்­றினைக் கையா­ளக்­கூ­டிய பொறி­மு­றை­களை பாட­சா­லைகள் மற்றும் பெற்றோர் கொண்­டி­ருத்தல் மிகவும் அவ­சி­ய­மாகும்

60 வய­திற்கு மேற்­பட்ட பிரிவு

இலங்­கையின் குடித்­தொகை வய­த­மைப்பில் ஏற்­பட்­டு­வரும் மிகப் பிர­தான மாற்­ற­மாக 60 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­களின் குடித்­தொகை அளவு அதி­க­ரித்து வரு­வ­தாகும். இலங்­கையின் மொத்தச் சனத்­தொ­கையில் சுமார் 2.6 மில்­லியன் சனத்­தொ­கையைக் கொண்­டுள்ள முதியோர் குடித்­தெ­கை­யா­னது தொடர்ச்­சி­யாக அதி­க­ரிப்­ப­தற்கு இறப்பு வீதத்தில் ஏற்­பட்­டு­வரும் வீழ்ச்­சி­யுடன் ஆயுட்­கா­லத்தில் ஏற்­பட்­டு­வரும் அதி­க­ரிப்பு கார­ண­மாக அமை­கின்­றது. இலங்­கையின் குடித்­தொ­கையின் தற்­போ­தைய ஆயுட்­கா­ல­மா­னது 2017 மத்­திய வங்கி அறிக்­கைப்­படி 75 வய­தாகக் காணப்­ப­டு­கின்­றது. இது 2025 ஆம் ஆண்­டு­களில் ஆண்­களின் ஆயுட்­காலம் 74 வய­தா­கவும் பெண்­களின் ஆயுட்­காலம் 78 வய­தா­கவும் அதி­க­ரிக்கும் என எதிர்வு கூறப்­ப­டு­கின்­றது இவ்­வா­றான பின்­ன­ணிக்கு சுகா­தார சௌக்­கிய வச­திகள் மற்றும் நல­நோம்­பு­கை­களில் ஏற்­படும் அதி­க­ரிப்பு மற்றும் ஊட்­ட­மான உணவு நடை­மு­றைகள் மற்றும் உடற்­ப­யிற்சி, பொருத்­த­மான உண­வுப்­ப­ழக்­க­வ­ழக்கம் என்பன கார­ண­மாக அமை­கின்­றது.அத்­துடன் இள­வ­யதுக் குடித்­தொ­கையில் ஏற்­பட்­டு­வரும் வீழ்ச்­சியும் முதியோர் குடித்­தொகை வீதத்தின் அளவு அதி­க­ரிப்­ப­தற்குக் கார­ண­மா­கவும் அமை­கின்­றது. இவ்­வாறு முதியோர் குடித்­தொகை அதி­க­ரிக்கும் பண்­பா­னது இலங்கை ஒரு அபி­வி­ருத்­தி­அ­டைந்த

நாடொன்றின் குடித்­தொகைப் போக்கைக் கொண்­ட­தாக காணப்­ப­டு­வ­தாக குடிப்­புள்­ளி­யி­ய­லா­ளர்கள் கரு­து­கின்­றனர்.

60 வய­திற்கு மேற்­பட்ட முதியோர் குடித்­தொகை அதி­க­ரிப்­ப­தனால்,

முதியோர் குடித்தொ­கையில் ஏற்­பட்­டு­வரும் தொடர்ச்­சி­யான அதி­க­ரிப்­புக்­கா­ர­ண­மாக இலங்­கையின் தங்­கி­வாழ்வோர் குடித்­தொ­கையில் முதி­யோரின் பங்கு உயர்­வாகக் காணப்­படும்.

முதி­யோ­ருக்­கான நலச்­சே­வைகள் மற்றும் ஓய்­வூதியக் கொடுப்­ப­ன­வு­க­ளுக்­காக அரசு அதிக நிதி­யினைச் செல­வி­ட­நேரும் ஏற்­க­னவே முதி­யோ­ருக்­கான கொடுப்­ப­ன­வுகள் மற்றும் முதியோர் சேமிப்­புக்­கான வங்கி வட்டி வீதத்­தி­னையும் அரசு அதி­க­ரித்­துள்­ளது.

இலங்­கையில் முதி­யோரின் ஆயுட்­கால அதி­க­ரிப்­புக்­கா­ர­ண­மாக ஓய்வு பெறும் வய­தெல்லை அதி­க­ரிப்­பதால் தொழி­லற்ற பிரி­வி­ன­ருக்கு வேலை­வாய்ப்பை வழங்­கு­வதில் பிரச்­சினை காணப்­படும் ஏற்­க­னவே 55 வய­தாக இருந்த ஓய்வு பெறும் வய­தெல்லை தற்­போது 60 வய­தாக அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­துடன் எதிர்­கா­லத்தில் இது 65 வய­தாக அதி­க­ரிக்கும் நோக்­கங்­களும் காணப்­ப­டு­கின்­றது.

இலங்­கையின் குடும்ப அமைப்பில் தற்­போது தனிக்­கு­டும்­பங்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்து வரு­வதால் பிள்­ளைகள் தமது வயது முதிர்ந்த பெற்­றோரைப் பரா­ம­ரிப்­பதில் பிரச்­ச­ினை­க­ளையும் ஏற்­ப­டுத்தும்.

எவ்­வா­றெ­னினும் இவ்­வா­றான அதி­க­ரிக்கும் முதியோர் குடித்­தொகை கார­ண­மாக நாட்டின் பொரு­ளா­தார சமூ­க­நல அபி­வி­ருத்­தியில் அவர்­களின் பங்­க­ளிப்­பினைப் பெற்றுக் கொள்­வ­தற்­கான திட்­டங்­க­ளையும் குடிப்­புள்­ளி­யி­ய­லா­ளர்கள் உணர்­கின்­றனர்.

அதி­க­ரிக்கும் முதியோர் குடித்­தொ­கை­யி­ன­ரிடம் உள்ள சேமிப்­புக்­களை நாட்டின் அபி­வி­ருத்தி மற்றும் முத­லீட்டுத் தேவை­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­துதல் வேண்டும்.

ஆயுள் எதிர்­பார்க்­கையில் ஏற்­படும் அதி­க­ரிப்புக் கார­ண­மாக எதிர்­கா­லத்தில் மனித வளத்தின் நன்மை கருதி நீண்­ட­கா­லத்­திற்குப் பணி­யாற்றும் ஊழியப்படை ஒன்றினைக் கொண்டதாக வயது முதிர்ந்த குடித்தொகை ஊக்குவிக்கப்பட வேண்டும். இலங்கையின் பாடசாலைக் கல்வி நடவடிக்கையில் குறித்த சில பாடங்களுக்கான ஆசிரியர் பற்றாக்குறைக்கு ஓய்வு பெற்ற ஆசிரியர்களின் சேவை பெற்றுக்கொள்ளப்படுவது இதற்கான முன் உதாரணமாகும்.

முதியோரிடம் உள்ள வாழ்க்கை அனுப­வங்கள் மற்றும் பண்பாடுகள் என்ப­வற்றினை இளைய தலைமுறையினருக்கு பெற்றுக்கொடுக்கும் முறைகளை ஏற்படுத்தல்

இலங்கையின் வாக்காளர்களில் கணிசமான எண்ணிக்கையினராக முதியோர் தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் அரசியல் பங்களிப்பில் அதிகதாக்கத்தினை இவர்கள் கொண்டிருப்பர்

இலங்கையின் குடித்தொகையில் ஏற்பட்டுவரும் இம்மாற்றங்கள் இனரீதியான பால் அடிப்படையிலான குடித்தொகையிலும் மாற்றங்களைக் காண்பித்து வருகின்றது இலங்கையின் இனரீதியான குடித்தொகையில் தழிழர்களின் விகிதாசாரம் அதிக வீழ்ச்சியை காண்பித்து வருவது தமிழர்களின் அரசியல் மற்றும் இனரீதியான குடித்தொகை பரம்பல்கள் என்பவற்றில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் இலங்கையின் மாகாண ரீதியிலான குடித்தொகையில் மிகக்குறைவான குடித்தொகை கொண்ட மாகாணமாக வடமாகாணம் காணப்படுகின்றது அதேபோன்று மிகக் குறைவான குடியடர்த்தி கொண்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது என்பதனையும் கவனத்தில் கொள்வது முக்கியமானதாகும்.       

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-07-11#page-4

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this