Sign in to follow this  
நவீனன்

19 பேருக்கு விரைவில் தூக்கு – மைத்திரி எடுத்த திடீர் முடிவு!!

Recommended Posts

19 பேருக்கு விரைவில் தூக்கு – மைத்திரி எடுத்த திடீர் முடிவு!!

 

 

 

download-1-7-750x430.jpg

 
 
 

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் விபரங்களை வழங்குமாறு, அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன உரிய தரப்புக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார் என்று , அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

அரச கவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டில் இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள தூக்குத் தண்டனையை மீண்டும் நடைமுறைக்குகு் கொண்டு வருவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அரச தலைவரால் நேற்றுச் சமர்ப்பிக்கப்பட்டது.

 

இதற்கு அமைச்சரவையில் முழு ஆதரவு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கைக்காக தூக்குத் தண்டனை கைதிகளின் விபரங்கள் திரட்டப்படுகின்றன.

சிறைக்குள் இருந்தும் பிணையில் வெளிவந்தும் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட 19 பேர் இவ்வாறு தூக்குத் தண்டனைக் கைதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில், இவர்களது பெயர் விபரம் கிடைக்கப் பெற்றவுடன் தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக தீர்மானிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

http://newuthayan.com/story/15/தூக்குத்-தண்டனைக்-கைதிகள்-19-பேர்-மைத்திரி-எடுத்த-திடீர்-முடிவு.html

Share this post


Link to post
Share on other sites

ஏன் இவ்வளவு அவசரபடுனம் தூக்கில் போட ?

ஏற்கனவே சித்திரைவதை செய்வதில் சாதனை படைத்து கொண்டு இருக்கிற நாடுகளின் வரிசையில் முன்னுக்கு நிக்கினம் .

விபத்துக்களில் போட்டு தள்ளுறதை விட தூக்கில் போடுவது இலகுவாக சட்டத்தை மாத்தி தொடங்கபோயினம் போல் உள்ளது .

Share this post


Link to post
Share on other sites

மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை இலங்கை கைவிடவேண்டும்- மன்னிப்புச்சபை

 

 
 

மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை இலங்கை அரசாங்கம் கைவிடவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபை வேண்டுகோள் விடுத்துள்ளது.

போதைப்பொருள் குற்றங்களிற்காக தண்டனை விதிக்கப்பட்ட 19 பேரிற்கு மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னெடுத்துள்ளார் என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

40 வருடங்களின் பின்னர் மரணதண்டனை நிறைவேற்றத்தை மீண்டும் ஆரம்பிப்பதன் மூலம் தனது நற்பெயருக்கு பெரும் களங்கத்தை ஏற்படுத்துகின்றது என சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.

மரணதண்டனையை நிறைவேற்றும் திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிடவேண்டும்,விதிக்கப்பட்ட மரணதண்டனைகளை மாற்றவேண்டும்,மரணதண்டனையை ஒழிப்பதற்கான ஆரம்பநடவடிக்கையாக அதற்கு உத்தியோகபூர்வ தடைiயை விதிக்கவேண்டும் என சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரதி இயக்குநர் தினுசிகா திசநாயக்க தெரிவித்துள்ளார்.

death_penalty3.jpg

பிராந்தியத்தின் வேறு பல நாடுகள் ஈவிரக்கமற்ற இந்த நடைமுறையை பின்பற்றியவேளை இதனை கைவிட்டதன் மூலம் இலங்கை முன்மாதிரியாக விளங்கியதுடன் தலைமைத்துவம் வகித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பல உலகநாடுகள் மரணதண்டனையை கைவிட்டுள்ள தருணத்தில் இலங்கை பிழையான திசையில் பயணிக்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ள அவர் பயங்கரமான இந்த நடைமுறையை பின்பற்றும் சிறிய எண்ணிக்கையிலான நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைந்து கொள்ள முயல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

http://www.virakesari.lk/article/36416

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this