Jump to content

திருடிய ஆடுகளை இணையமூலம் விற்க முயன்றவர்கள் கைது…


Recommended Posts

திருடிய ஆடுகளை இணையமூலம் விற்க முயன்றவர்கள் கைது…

 

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்…

arrest.jpg?resize=794%2C542

 

திருடபட்ட ஆட்டை இணையத்தளம் மூலம் விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய முயற்சித்த மூவரை அச்சுவேலி காவற்துறையினர் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர். அது குறித்து மேலும் தெரியவருவதாது ,

அச்சுவேலி பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து கடந்த மாதம் மூன்று ஆடுகள் திருடப்பட்டு உள்ளன. அது தொடர்பில் ஆட்டின் உரிமையாளரால் அச்சுவேலி காவற்துறை நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

அந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆடுகள் விற்பனைக்கு உண்டு என ஆட்டின் படங்களை பதிவேற்றி இணையத்தளம் ஒன்றில் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது. அதனை அவதானித்த ஆட்டின் உரிமையாளர் குறித்த ஆடுகள் தன்னிடம் இருந்து திருடப்பட்டவை என்பதனை உறுதி செய்து அச்சுவேலி காவற்துறையினருக்கு தகவல் வழங்கினார்.

தகவலின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த அச்சுவேலி காவற்துறையினர், ஆடுகள் விற்பனைக்கு உண்டு என விளம்பரப்படுத்தியவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தினார்கள்.

அதன் போது குறித்த நபர் , தான் பிறிதொரு நபரிடமே ஆடுகளை 25 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கியதாக தெரிவித்தார். அதன் பிரகாரம் ஆட்டினை விற்பனை செய்த நபரை காவற்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொண்ட விசாரணையின் போது , தானும் பிரிதொருவருமாக இணைந்து அச்சுவேலி பகுதியில் ஆட்டினை திருடி மோட்டார் சைக்கிளில் அதனை வல்லை சந்தி வரைக்கும் கொண்டு சென்று , அங்கிருந்து முச்சக்கர வண்டியில் ஏற்றி நெல்லியடி பகுதிக்கு கொண்டு சென்று விற்பனை செய்ததாகவும் , தெரிவித்தார்.அதனை தொடர்ந்து அவருடன் திருட சென்ற மற்றைய நபரையும் காவற்துறையினர் கைது செய்தனர்.

திருடப்பட்ட ஆடுகளை வாங்கிய நபர் மற்றும் ஆடுகளை திருடிய இருவர் என மூவரையும் காவற்துறையினர் கைது செய்து தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

http://globaltamilnews.net/2018/87100/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடங் கொக்காமக்கா!

மாட்டிக்கினியா!! ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

அடங் கொக்காமக்கா!

மாட்டிக்கினியா!! ?

இப்ப ஆட்டு திருட்டு இண்டநெற்று வரைக்கும் வந்து வளர்ச்சியடைந்திருக்கு பாருங்கோவன் :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, தனிக்காட்டு ராஜா said:

இப்ப ஆட்டு திருட்டு இண்டநெற்று வரைக்கும் வந்து வளர்ச்சியடைந்திருக்கு பாருங்கோவன் :)

ஆடு வளர்த்தவர், ஆவென்று நிக்கிறார்.

ஆட்டையைப் போட்டவர்கள் கைரெக்கில நிக்கினம்.

காலம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, கந்தப்பு said:

அது சரி ஆடு வாங்கியவர் ஏன் கைது செய்யப்பட்டார்?

அது தான் சிறீலங்காவின் சனநாயகம், 

விசாரணை முடியவில்லை என்று காரணம் சொல்வார்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கந்தப்பு said:

அது சரி ஆடு வாங்கியவர் ஏன் கைது செய்யப்பட்டார்?

அப்பு கள்ள பொருட்களை வாங்குபவர்களை பொலிஸ் கைது செய்யலாம்......சட்டத்தில் இடமிருக்கு....தனிநபர்களிடம் பொருட்களை வாங்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

அப்பு கள்ள பொருட்களை வாங்குபவர்களை பொலிஸ் கைது செய்யலாம்......சட்டத்தில் இடமிருக்கு....தனிநபர்களிடம் பொருட்களை வாங்கும் பொழுது கவனமாக இருக்க வேண்டும்....

ம்ம் அது தான் உண்மை சில சந்தேககத்திற்கிடமான பொருட்களை வாங்குவது தவிர்ப்பது நல்லது ஆடு விற்பவனையும் ஆடு வளர்த்து விற்பவனையும் இனம் காணலாம் வளர்ப்பவன் சுலபமாக விற்கமாட்டான் ஆட்டய போட்டவ்வன் கடசி வில உங்களுக்காக என்பதற்க்காக தருகிறேன் என்பான் ( அதுவும் சில வேளைகளின் தான் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/10/2018 at 10:16 AM, நவீனன் said:

ஆடுகள் விற்பனைக்கு உண்டு என ஆட்டின் படங்களை பதிவேற்றி இணையத்தளம் ஒன்றில் விளம்பரப்படுத்தப்பட்டு இருந்தது.

 அடுத்த முறை உண்மையான ஆடுகளின் படங்களை போடமாட்டார்கள் களவு தொடர்கதையாக போகபோகுது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஆட்டய போட்டவ்வன் கடசி வில உங்களுக்காக என்பதற்க்காக தருகிறேன் என்பான் ( அதுவும் சில வேளைகளின் தான் )

“அதுதான் விலை. விக்காட்டாலும் பரவாயில்லை, பொருள் இருக்கும்”

“கெதியா சொல்லுங்க, இன்னும் இரண்டு பேர் அரை மணித்தியாலததில வருகினம்.”

உதில ஒண்டையாவது சொல்லி இருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

“அதுதான் விலை. விக்காட்டாலும் பரவாயில்லை, பொருள் இருக்கும்”

“கெதியா சொல்லுங்க, இன்னும் இரண்டு பேர் அரை மணித்தியாலததில வருகினம்.”

உதில ஒண்டையாவது சொல்லி இருப்பார்.

ம்ம் உண்மைதான் ஆனால் வைத்திருக்க முடியாது விற்றாகணும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Internet shopping யாழிலும் அமோகமாக வளர்வது நல்லது. 

களவெடுத்த ஆடுகளை ? ?  இனி dark web இல்தான் விற்கவேண்டும் போலுள்ளது?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.