Jump to content

மூடப்பட்டுள்ள தூத்துக்குடி தொழிற்சாலை ஊழியர்களின் நிலைமை என்ன?


Recommended Posts

மூடப்பட்டுள்ள தூத்துக்குடி தொழிற்சாலை ஊழியர்களின் நிலைமை என்ன?

S-02Page1Image0001-866ae401db828e667506ebcc46d64c0e6cbc61c9.jpg

 

தூத்­துக்­கு­டியில் இயங்கி வந்த வேதாந்தா குழு­மத்தின் ஸ்டெர்லைட் தொழிற்­சாலை போராட்­டங்­களால் மூடப்­பட்­டுள்ள நிலையில், அதை மீண்டும் திறந்து இயங்கச் செய்­ய­வேண்­டு­மென்று, போராட்­டங்கள் நடத்­தி­ய­வர்­க­ளா­லேயே கோரிக்கை விடுக்கும் நிலை தோன்­றி­யுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கி­றது.

ஸ்டெர்லைட் தொழிற்­சாலை மூடப்­பட்­டதால், தொழிலை இழந்த தொழி­லா­ளர்கள் வரு­மானம் எது­வு­மில்­லாமல், உண­வுக்கு வழி­யின்றி தடு­மாறும் நிலை ஏற்­பட்­டுள்­ளது. எனவே மூடப்­பட்­டுள்ள தொழிற்­சா­லையைத் திறந்து மீண்டும் இயங்கச் செய்­வதால், தமது வாழ்­வா­தா­ரத்­துக்­கான வரு­மா­னத்தைப் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்­கு­மென்று அவர்கள் நினைக்­கின்­றார்கள்.

தொழிற்­சா­லையை மீண்டும் திறக்க வேண்­டு­மென கோரி சிலர் மாவட்ட கலெக்­ட­ரிடம் மகஜர் ஒன்றை கைய­ளித்து, வேண்­டுகோள் விடுத்­துள்­ள­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.

தூத்­துக்­குடி ஸ்டெர்லைட் தொழிற்­சா­லை­யி­லி­ருந்து வெளி­ய­கற்­றப்­படும் கழி­வு­களால் சுற்­றாடல் மாச­டை­வ­துடன் அதனை அண்­மித்­துள்ள பகு­தி­களில் வாழும் மக்கள் புற்­றுநோய் உட்­பட பல்­வேறு நோய்த்­தாக்­கங்­க­ளுக்கு உள்­ளா­வ­தாக தெரி­வித்து, நீண்ட நாட்­க­ளாக எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டங்கள் நடத்­தப்­பட்டு வந்­தன. ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­ட­வர்கள் தொழிற்­சாலையை மூட வேண்டும் என்று வலி­யு­றுத்தி வந்­த­துடன், இதன் ஒரு முக்­கிய கட்­ட­மாக கடந்த மே மாதம் 22 ஆம் திகதி தூத்­துக்­குடி மாவட்ட கலெக்டர் அலு­வ­ல­கத்தை முற்­று­கை­யிடும் ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

இதன் போது அங்கு இடம் பெற்ற வன்­மு­றையைத் தொடர்ந்து, பொலிஸார் நடத்­திய துப்­பாக்கிப் பிர­யோ­கத்தில் 13 பேர் உயி­ரி­ழந்­தனர். நூற்­றுக்­க­ணக்­கானோர் காய­ம­டைந்­தனர். பலர் கைது செய்­யப்­பட்­டனர். தூத்­துக்­கு­டியே அல்­லோல கல்­லோ­லப்­பட்­டது. பொது­மக்கள் அச்சம், பயம் என்­ப­வற்­றுக்கு மத்­தியில் வீடு­க­ளுக்­குள்­ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்­பட்­டது.

இத­னை­ய­டுத்து ஸ்டெர்லைட் தொழிற்­சாலை தமி­ழக அர­சினால் சீல் வைத்து மூடப்­பட்­டது. அத்­துடன் இனி எப்­போதும் திறக்­கப்­ப­ட­மாட்­டாது எனவும் அறி­வித்தல் விடுக்­கப்­பட்­டது.

ஸ்டெர்லைட் தொழிற்­சாலை மூடப்­பட்­டதால் ஏற்­பட்­டுள்ள எதிர்­வி­ளை­வுகள் பற்­றிய தக­வல்கள் தற்­போது வெளி­வ­ரு­வ­துடன், அங்கு வேலை செய்த தொழி­லா­ளர்கள் எவ்­வித வரு­மா­னமும் இன்றி, வாழ்க்­கையை நடத்­து­வ­தற்கு பெரும் இன்­னல்­களைக் கொண்­டுள்­ள­தாக தெரிய வரு­கி­றது. இந்தத் தொழிற்­சாலை மூடப்­பட்டு சுமார் ஒன்­றரை மாத­மா­கின்­றது. எனவே, இந்தத் தொழிற்­சா­லையின் தொழி­லா­ளர்கள் மட்­டு­மன்றி, இத­னுடன் தொடர்­பு­டைய தொழில்­து­றையைச் சேர்ந்­த­வர்­களும் பாதிப்படைந்­துள்­ளனர்.

ஸ்டெர்லைட் தொழிற்­சா­லையில் சுமார் 1100 பேர் நேர­டி­யாக தொழில் வாய்ப்­பு­களை பெற்­றுள்­ள­துடன், 5000 மேற்­பட்டோர் ஒப்­பந்த அடிப்­ப­டை­யி­லான ஊழி­யர்­க­ளா­கவும் பணி­யாற்­று­கின்­றனர். இது­த­விர ஸ்டெர்லைட் தொழிற்­சாலை உற்­பத்­தி­க­ளுடன் தொடர்­பு­டைய சேவை­யா­ளர்கள், குறிப்­பாக, விநி­யோ­கஸ்­தர்கள், லொறி உரி­மை­யா­ளர்கள், சார­திகள், உத­வி­யா­ளர்கள் என சுமார் 19,000 க்கும் மேற்­பட்டோர் தொழில் வாய்ப்­புக்­களை பெற்­று­வந்­த­தாகத் தெரி­ய­வ­ரு­கி­றது.

தொழிற்­சாலை பகு­தியில் ஹோட்டல், கடைகள், சிற்­றூண்டிச் சாலைகள், பொது வர்த்­தக நிலை­யங்கள் நடத்தி வந்­த­வர்­களும் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர்.

ஸ்டெர்லைட் தொழிற்­சா­லையை மூடி­வி­ட­வேண்டும் என்ற தீர்­மா­னத்­துக்கு வந்­த­வர்கள் ஏறக்­கு­றைய 25 ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்­ட­வர்கள் தமது தொழில், வரு­மானம் என்­ப­வற்றை இழக்­கப்­போ­கி­றார்கள் என்­ப­தையும், எனவே, அவர்­க­ளுக்­கான மாற்­றுத்­தொழில், வரு­மானம் என்­ப­வற்றை எவ்­வாறு பெற்­றுக்­கொ­டுப்­பது என்­பது பற்­றியும் சிந்­தித்­தி­ருக்­க­வில்லை. குறித்த 25 ஆயிரம் பேரும் தொழில் மற்றும் வரு­மா­னத்தை இழப்­பதால் அவர்­களில் தங்­கி­வாழும் பெற்­றோர்கள், உடன்­பி­றப்­புக்கள், மனைவி, பிள்­ளைகள் போன்­றோரும் பெரிதும் பாதிக்­கப்­ப­டு­வார்கள் என்­ப­து ­பற்றி யோசிக்­கா­ம­லேயே, தொழிற்­சா­லையை மூட­வேண்டும் என்று போராட்டம் நடத்தி மூடப்­பட்­டதை எந்த வகை­யிலும் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்றே சமூக ஆர்­வ­லர்கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றனர்.

தொழிற்­சா­லையை மூட­வேண்­டு­மென்ற கோரிக்­கையை முன்­வைத்­த­வர்கள் போராட்டம் நடத்­து­வ­தற்­கான ஏற்­பா­டு­களைச் செய்­த­வர்கள் எவரும், தற்­போது தொழிலை இழந்து வரு­மா­னத்­துக்கு தவிர்த்துக் கொண்­டி­ருக்கும் தொழி­லா­ளர்­க­ளையோ, ஊழி­யர்­க­ளையோ சந்­தித்துப் பேசு­வது இல்­லை­யென்றும் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தெரி­விக்­கின்­றனர்.

ஸ்டெர்லைட் தொழிற்­சா­லையை மூடி­வி­ட­வேண்டும் என்று ஒட்­டு­மொத்த தூத்­துக்­குடி மக்­களும் குரல் எழுப்­ப­வில்லை. மூடக்­கூ­டாது என்று குரல் கொடுத்­த­வர்­களும், அமைப்­புக்­களும் கூட இருக்­கின்­றன. துறை­முக ஊழி­யர்கள் சங்கம், லொறி ஓட்­டு­நர்கள் சங்கம் போன்ற சில அமைப்­புக்கள் ஏற்­க­னவே தொழிற்­சா­லையை மூடக்­கூ­டாது என்று தெரி­வித்து வந்தன.

எவ்­வா­றெ­னினும், ஸ்டெர்லைட் தொழிற்­சா­லையை மூடி­வி­ட­வேண்டும் என்று ‘மக்கள் அதி­காரம்’, ‘புரட்­சி­கர இளைஞர் முன்­னணி’, ‘நாம் தமிழர்’ போன்ற அமைப்­புக்­களே மக்­களைத் தூண்­டி­விட்­ட­தாக விசா­ர­ணை­களை மேற்­கொண்­டு­வரும் அதி­கா­ரிகள் தெரி­வித்­துள்­ளனர். எனினும், அதில் எந்­த­வித உண்­மையும் இல்லை. மக்கள் சுய­மா­கவே கிளர்ந்­தெ­ழுந்து தொழிற்­சா­லையை மூட­வேண்டும் என்று போராட்டம் நடத்தி­ய­தாக, குறித்த அமைப்­புக்­களின் சார்­பா­ன­வர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

ஸ்டெர்லைட் தொழிற்­சாலை 1996 இல் ஆரம்­பிக்­கப்­பட்­டது. இங்கு தூத்­துக்­குடி மற்றும் திரு­நெல்­வேலி ஆகிய மாவட்­டங்­களைச் சேர்ந்­த­வர்­களே அதி­க­ளவில் வேலை செய்­கின்­றனர். இந்த நிலையில் பெரும்­பா­லான ஊழி­யர்கள் தொழிற்­சா­லையில் பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் திருப்­தி­க­ர­மாக உள்­ள­தாக தெரி­வித்­துள்­ளனர். தொழிற்­சாலை கழி­வுகள் அனைத்தும் சிறந்த முறையில் சுத்­தி­க­ரிக்­கப்­ப­டு­வ­தா­கவும், நோய்கள் பர­வு­வ­தற்­கான சூழல் எது­வு­மில்­லை­யென்றும் குறிப்­பிட்­டுள்­ளனர்.

ஆனாலும் கூட, கடந்த காலங்­களில் 82 தட­வைகள் மேற்­படி தொழிற்­சா­லையில் விஷ­வாயுக் கசி­வுகள் ஏற்­பட்­ட­தாக தமி­ழக அரசு குற்­றஞ்­சாட்­டி­யி­ருந்­த­துடன், அதனால், தொழிற்­சா­லையை அண்­மித்த பகு­தியில் வசித்த மக்கள் பாதிப்­புக்­குள்­ளா­ன­தா­கவும் தக­வல்கள் தெரி­விக்­கின்­றன. முன்னாள் முதல்வர் ஜெய­ல­லி­தாவின் ஆட்­சிக்­கா­லத்தில் (30/03/2013) மாதக் கட்­டுப்­பாட்டு வாரிய அதி­கா­ரிகள் இந்தத் தொழிற்­சாலை செயற்­பாட்டை நிறுத்தி சீல் வைக்கும் நட­வ­டிக்­கை­யிலும் ஈடு­பட்­ட­தாக அந்தத் தகவல் மேலும் தெரி­விக்­கின்­றது.

எனினும் இந்­திய பிர­த­ம­ராக இருந்த மன்­மோகன் சிங் ஆட்­சிக்­கா­லத்தில், இந்­திய உச்ச நீதி­மன்றம் இந்த தொழிற்­சாலை மீண்டும் இயங்­கு­வ­தற்கு அனு­ம­தி­ய­ளித்­தது.

ஸ்டெர்லைட் தொழிற்­சா­லையில் செம்­புக்­கம்பி, உலோகப் பொருட்கள் மற்றும் கந்­தக அமிலம், பொஸ்­பரிக் அமிலம் உள்­ளிட்ட பல பொருட்கள் உற்­பத்தி செய்­யப்­ப­டு­வ­துடன் உள்­நாட்டின் ஏனைய தொழிற் ­துறை­க­ளுக்கு விநி­யோ­கிப்­ப­துடன், வெளி­நா­டு­க­ளுக்கும் ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்­றது. இந்­தி­யா­வுக்கு வரு­மா­னத்தை ஈட்­டித்­தரும் நிறு­வ­னங்­களில் ஒன்­றாக ஸ்டெர்லைட் உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

ஸ்டெர்லைட் நிறு­வனம் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து பல­வ­கை­யான தாதுப் பொருட்­களை இறக்­கு­மதி செய்யும் அதே­வேளை, அதன் பல உற்­பத்­தி­க­ளையும் வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­கி­றது. இதற்கு தூத்­துக்­கு­டி­யி­லுள்ள வ.உ.சிதம்­ப­ரனார் துறை­முகம் பெரும் உத­வி­யாக இருக்­கி­றது.

   (10 ஆம் பக்கம் பார்க்க)

மூடப்பட்டுள்ள...

(2ஆம் பக்கத் தொடர்ச்சி)

துறை­மு­கத்­துக்கு பெரும் வரு­மானம் கிடைப்­ப­துடன், தொழில் வாய்ப்­புக்­களும் கிடைத்து வரு­கின்­ற­தென துறை­முகத் தொழி­லாளர் சங்கம் ஏற்­க­னவே தெரி­வித்­தி­ருந்­தது.

தொழிற்­சாலை மூடப்­பட்டால் அதனை நம்பி இருக்கும் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தொழி­லா­ளர்கள் மற்றும் ஊழி­யர்கள், குடும்­பங்கள் பெரும் பாதிப்­புக்­குள்­ளாகும் அபாயம் இருப்­ப­தா­கவும் சுட்­டிக்­காட்­டப்­ப­டு­கி­றது.

இதே­வேளை, ஸ்டெர்லைட் தொழிற்­சா­லையை மூடு­வ­தற்கு, தமிழ் நாடு மாசு கட்­டுப்­பாட்டு (வாரியம் சபை மேற்­கொண்ட முடி­வுக்கு எதி­ராக, டெல்­லி­யி­லுள்ள தேசிய பசுமை தீர்ப்­பா­யத்தில் வேதாந்­தா–ஸ்­டெர்லைட் நிர்­வாகம் மனு ஒன்றை தாக்கல் செய்­தி­ருந்­தது. தமிழ் நாடு மாசு கட்­டுப்­பாட்டுச் சபை­யினால் ஸ்டெர்லைட் தொழிற்­சா­லையை மூடு­வ­தற்கு எடுக்­கப்­பட்ட தீர்­மா­னத்தை மீள் பரி­சீ­லனை செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

அத்­துடன் உலகத் தரத்­தி­லான பாது­காப்பு நட­வ­டிக்­கைகள் தொழிற்­சா­லையில் செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும், அங்கு தீங்கை ஏற்­ப­டுத்தும் வகை­யி­லான மாசு வெளி­யா­வ­தில்­லை­யெ­னவும், எனவே, தொழிற்­சா­லையை மீண்டும் இயங்கச் செய்­வ­தற்­கான அனு­மதி வழங்­கப்­ப­ட­வேண்டும் என்றும் சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருந்­தது.

கடந்த ஏப்ரல் மாதம் மாசு கட்­டுப்­பாட்டுச் சபை, மேற்­படி தொழிற்­சாலை இயங்­கு­வ­தற்­கான அனு­ம­திப்­பத்­திரம் (2018–2020 காலப்­ப­குதி) வழங்க மறுப்புத் தெரி­வித்­தி­ருந்­தது. இதற்கு எதி­ராக மேற்­படி நிறு­வனம் இந்த மனுவை சமர்ப்­பித்­தி­ருந்­தது.

இத­னி­டையே, ஸ்டெர்லைட் தொழிற்­சாலை மூடப்­பட்­டதை எதிர்த்து, வேதாந்த குழுமம் சார்பில், தேசிய பசுமை தீர்ப்­பா­யத்தில் தொட­ரப்­பட்­டி­ருந்த வழக்கு கடந்த வியா­ழ­னன்று விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

தொழிற்­சா­லையை பரா­ம­ரிப்­ப­தற்­காக அனு­மதி வழங்­க­வேண்டும் என்ற அடிப்­ப­டையில், இடைக்­கால நிவா­ரணம் வழங்க வேண்டும் என்று ஸ்டெர்லைட் நிறு­வனம் மனு­வி­னூ­டாக கோரிக்கை விடுத்­தி­ருந்­தது. எனினும் அந்தக் கோரிக்கை தீர்ப்­பா­யத்தால் ஏற்­றுக்­கொள்­ளப் ­ப­ட­வில்லை.

ஏற்­க­னவே, சென்னை உயர் நீதி­மன்­றத்தில் ஸ்டெர்லைட் தொழிற்­சாலை தொடர்­பான வழக்கு விசா­ரணை எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டுள்ள நிலையில், தற்­போது தேசிய பசுமை தீர்ப்­பா­யத்­திலும் இவ்­வி­டயம் குறித்து அணு­கி­யுள்­ளதன் மூலம், ஒன்­றுக்கும் மேலான சட்ட நிறு­வ­னங்­களை, ஒரே நேரத்தில் அணு­கு­வ­த­னூ­டாக சட்­டத்தை மேற்­படி நிறு­வனம் முறை­கே­டாகப் பயன்­ப­டுத்­து­வ­தாக, தமி­ழக அரசு சார்பில் வாதி­டப்­பட்­டது.

அத்­துடன் தமி­ழக அரசு முன்­ன­றி­விப்­புகள் எது­வு­மின்றி, தொழிற்­சா­லையை மூடி­யுள்­ள­துடன், மின்­சாரம், நீர் விநி­யோகம் என்­ப­வற்றை துண்­டித்­ததன் கார­ண­மாக தொழிற்­சா­லையை பரா­ம­ரிக்க முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ள­தாக ஸ்டெர்லைட் தொழிற்­சாலை தரப்பு வழக்­க­றிஞர் அங்கு சுட்­டிக்­காட்­டி­ய­துடன் தொழிற்­சா­லையை பரா­ம­ரிப்­ப­தற்கு மட்டும் இடைக்­கால அனு­மதி வழங்­கப்­ப­ட­வேண்­டு­மென்று தீர்ப்­பா­யத்­திடம் வேண்­டுகோள் விடுத்­த­போதும், அது ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

இது­தொ­டர்பில் பதில் வழங்­கு­வ­தற்கு 10 நாட்கள் அவ­காசம், தமி­ழக அர­சுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. தொடர்ந்து வழக்கு விசா­ரணை எதிர்­வரும் 18 ஆம் திக­திக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளது. வழக்கு விசா­ரணை எவ்­வாறு அமை­யப்­போ­கி­றது என்­பது பற்றி அறிந்து கொள்­வ­தற்கு சம்­பந்­தப்­பட்ட தரப்­புக்கள் மட்­டு­மன்றி, முழு தமி­ழ­கமும் காத்­தி­ருக்­கின்­றது.

எவ்­வா­றெ­னினும் இவ்­வி­ட­யத்தில் சகல தரப்­பி­னரும் இணைந்து தீவி­ர­மாக ஆராய்ந்து, நல்­ல­தொரு முடி­வினை எடுக்­க­வேண்டும். தூத்­துக்­குடி மக்கள் நடத்­திய போராட்­டத்தின் உண்­மை­த்தன்மை, அதன் பின்­ன­ணி ­பற்றி ஆரா­யப்­ப­ட­வேண்டும்.

13 பேர் உயி­ரி­ழந்­ததைத் தொடர்ந்து தமி­ழக அர­சினால் மூடப்­பட்டு, சீல் வைக்­கப்­பட்ட ஸ்டெர்லைட் தொழிற்­சாலை நிரந்­த­ர­மாக மூடப்­படப் போகின்­றதா?

அப்­ப­டி­யானால் தொழிற்­சா­லையில் பணி­பு­ரிந்த ஊழி­யர்கள், தொழி­லா­ளர்கள் போன்றோர் நிரந்­த­ர­மாகத் தொழிலை இழக்கவேண்டுமா? அவர்களுக்கு தமிழக அரசு தொழில் வழங்குமா? நிவாரணங்கள் வழங்குமா? அவர்களது குடும்ப உறுப்பினர்களின் வாழ்வாதாரத்துக்குக்கு எவ்வாறான நிவாரணம் வழங்கப்போகிறது? என்ற கேள்விகள் எழுகின்றன.

தொழிற்சாலையை மூடுவதற்கான உத்தரவைப் பிறப்பிப்பதற்கு முன்னர், இதுபோன்ற பின்னணிகளை ஆராய்ந்து, தமிழக அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். அதாவது சாதக பாதக நிலைமைகள் பற்றி ஆராய்ந்திருக்க வேண்டும்.

தூத்துக்குடியில்தான் கூடங்குளம் அணுசக்தி நிலையமும் அமைந்திருக்கிறது. சாதாரண இரும்பு– உருக்குத் தொழிற்சாலையில் வெளியாகும் மாசுக்களை விட, மிகவும் வீரியம் கொண்ட அதிபயங்கரமான ஆபத்துக்களை விளைவிக்கும் மாசுக்கள் அணுசக்தி நிலையத்திலிருந்து வெளியாகும் தன்மை காணப்படுகிறது. ஆனால், அங்குகூட அதி உயர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதை கவனத்திற்கொள்ளவேண்டும்.

எனவே, இரும்பு, செம்பு, உருக்கு தொழிற்­சா­லை­களில் அதி­ந­வீன பாது­காப்பு முறை­மை­களை ஏற்­ப­டுத்தி பொது­மக்­க­ளுக்கு தீங்கு விளை­விக்­கா­த­படி தகுந்த நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­வது அவ­சியம்.

ஸ்டெர்லைட் தொழிற்­சாலை நிர்­வா­கத்­துக்கு சார்­பாக செயற்­ப­டு­வ­தை­விட, அந்தத் தொழிற்­சாலை மூடப்­பட்­டுள்­ளதால் அங்கு தொழில்­பு­ரிந்த ஊழி­யர்­களின் தொழில், குடும்பம், வாழ்­வா­தாரம் என்­ப­வற்றை சிந்­தித்துப் பார்த்து அவர்­க­ளுக்கு நல்லதொரு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-07-08#page-2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.