Jump to content

தேசத்தின் புயலான- நெருப்பு மனிதர்கள்!!


Recommended Posts

தேசத்தின் புயலான- நெருப்பு மனிதர்கள்!!

 

 

Miller-painting-1200x520-750x430.jpeg

 
 

“மற்­ற­வர்­கள் இன்­புற்­றி­ருக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கத் தன்னை இல்­லா­தொ­ழிக்­கத் துணி­வது தெய்­வீ­கத் துற­வ­றம். அந்­தத் தெய்­வீ­கப் பிற­வி­கள்­தான் கரும்­பு­லி­கள்.”- தேசி­யத் தலை­வர் –

தமி­ழீழ விடு­த­லைப் போராட்ட வர­லாற்­றின் ஞாப­கப் பக்­கங்­க­ளுள், தமிழ் மக்­கள் மறந்­தி­ருக்க முடி­யாத சாவுக்கு விலங்­கிட்ட மனி­தர்­க­ளின் நினை­வு­களை தந்த மாதம் ஜூலை.பல சம்­ப­வங்­கள் நினை­வாக நீண்டு விரிக்­கின்ற போதும் 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 05 ஆம் திகதி, ஒப்பற்ற திருநாளாய் விளங்கி, தேசப் புயல்­க­ளின் வீர வர­லாற்றை கண்­ணீர் பூக்­க­ளால் சுகந்­தம் செய்­கின்­றது. கரும்­புலி கப்­டன் மில்­ல­ரின் உயிர் தியா­கம் தனை விடு­த­லை­யின் சொரூ­ப­மாக்கி உரிமை வேட்­கை­யின் தரி­ச­னங்­களை தாய் தேச­மெங்­கும் சூட்­டு­கின்­றன.

இரா­ணுவ ஆக்­கி­ர­மிப்பு
1987 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யில் தமி­ழர் தேச­மெங்­கும் சிங்­கள இரா­ணு­வத்­தின் பிர­சன்­னம் அதி­க­மாக இருந்­தது. கொடுங்­கோல் ஆட்­சி­யின் வழி எங்­கும் தீராத அரா­ஜ­கங்­கள் நிகழ்ந்­தன.வட­ம­ராட்சி நெல்­லி­யடி மகா­வித்­தி­யா­லத்­தி­லும் சிங்­க­ளப்­ப­டை­யி­னர் குவிக்­கப்­பட்­டி­ரு
ந்­த­னர்.வட­ம­ராட்­சி­யில் மேற்­கொள்­ளப்­பட்ட ‘லிப­ரே­சன் ஒப்­பி­ரே­சன்” இரா­ணுவ நட­வ­டிக்கை மூலம் தாம் பெற்­றுக்­கொண்ட வெற்­றி­யின் குதூ­க­லிப்­பில் சிங்­க­ளம் திழைத்­தி­ருந்­தது. வட­ம­ராட்சி வாழ் மக்­கள் அக­தி­க­ளாக வெளி­யே­றி­யி­ருந்­த­னர். இதற்­குச் சமாந்­த­ர­மாக சிங்­க­ளத் தலை­மை­கள் 2009 களில் பெற்ற களிப்­பினை போன்­ற­தான ஓர் வெற்றி முழக்­கத்தை கொழும்­பி­லும் இன­வாத வெறித்­த­னத்­தின் சாட்­டு­த­லாய் கொண்­டாடி மகிழ்ந்­தி­ருந்­த­னர்.

 

நெல்­லி­ய­டிப் படைத்­த­ளம்
மீதான தாக்­கு­தல்
இந்த சந்­தர்ப்­பத்­திலே நெல்­லி­ய­டிப் படைத்­த­ளத்தை அழித்து இந்த ஈனப் பிற­வி­க­ளின் இறு­மாப்பை தகர்த்­தெ­றிய வேண்­டும், எமது உறு­தியை நிலை­நாட்ட வேண்­டும் என்ற தீர்­மா­னத்தை தேசி­யத்­த­லை­வர் கொண்­டி­ருந்­தார்.அந்த விருப்­பம் தேசப்­பு­ய­லாக மாற்­றம் கொண்­டது. தியா­கம் எனும் நற்­பணி செய­லு­ரு­வம் பெற்­றது.நெல்­லி­ய­டிப் படைத்­த­ளம் மீதான தாக்­கு­தல் குறித்த அனைத்­து தயார்­ப­டுத்­தல்­க­ளும் நிறை­வு­று­கின்­றன.

தேசப்­பு­ய­லாக,விடு­த­லை­யின் வீர­னாக கப்­டன் மில்­லர் தேர்வு செய்­யப்­பட்­டான்.ஜூலை மாதம் 5ஆம் திகதி இரவு 7.00மணி 3 நிமி­டங்­கள், கந்­தக மேனி­ய­னாய் வெடி மருந்­து­களை சுமந்­த­படி கப்­டன் மில்­லர் பய­ணித்த வாக­னம் இரா­ணுவ முகா­மிற்­குள் பாய்ந்­தது. தியா­கம் எனும் சுதே­சம் எங்­கும் வீசி­யது. விடி­ய­லின் சுகந்­தம் தனை தேசத்­தி­டம் பரி­ச­ளித்­தது. நூற்­றுக்­க­ணக்­கான இரா­ணு­வத்­தி­னரை அழித்­தொ­ழித்து பல­நூறு படை­யி­னரை விழுப்­புண் அடை­யச் செய்து ஆண­வத்­தின் மாயையை தீயிட்­டுக் கொளுத்­தி­யது. விடு­த­லை­யின் பய­ணத்­தில் புதிய வர­லாற்­றுப் பக்­கங்­களை உரு­வ­கித்­தது.

இப்­போ­தும் தியா­கத்­தின் சுவா­ச­மாய் அந்த நினை­வு­கள் எங்­கும் பரந்து கிடக்­கி­றது. நல் மனி­தங்­க­ளிடை சிந்­த­னை­யின் ஒளிர்­வாய் சுடர்­வி­டு­கின்­றது.விடு­த­லை­யின் எண்­ணம் தனை நித்­திய சாத­கம் செய்­கி­றது.
ஆம், போரி­யல் வர­லாற்­றிலே இவ்­வா­றான தாக்­கு­தல் ஒன்று முதன் முத­லாக நிகழ்த்­தப்­பட்­டது இதுவே முதல் தடவை.மில்­லர் கரும்­பு­லித் தாக்­கு­தல் நடத்தி இன்­று­டன் 31 ஆண்­டு­கள் கடந்­து­வி­டு­கின்­றது. விடு­தலை உணர்­வோடு நடந்­து­கொள்­ளப் பணிக்­கி­றது.ஞாப­கங்­க­ளிடை மீளாத வசந்­தங்­களை வசந்­த­னாக,அந்த நாமம் சூடிக் கொண்ட புனி­த­மாக (தி)யாகம் செய்­கி­றது.

வாழ்­கைப் பய­ணம்
யாழ்ப்­பா­ணம் கர­வெட்டி பிர­தே­சத்தை சேர்ந்­த­வன் கப்­டன் மில்­லர்.இவ­னு­டைய இயற்­பெ­யர் வல்­லி­பு­ரம் வசந்­தன். தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் அமைப்­பில் ஒரு முக்­கிய உறுப்­பி­ன­ராக விளங்­கி­னான். 1966 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் முத­லாம் திகதி தாய் மண்­ணில் தவழ்ந்த இவன் விடு­தலை இலட்­சி­யத்­தில் முதல் கரும்­பு­லி­யாக மாற்­றங்­கொண்­டான். விடு­த­லைப் போ­ராட்ட வர­லாற்­றின் திருப்­பு­மு­னை­யாக அமைந்­து­விட்­டான்.

மில்­லர் குடும்­பத்­திலே இரண்­டா­வது மகன்.துடி­யாட்­ட­மா­ன­வன்.வாக­னங்­களை ஓட்­டு­வ­தில் திற­மை­யா­ன­வன்.தகப்­ப­னார் வல்­லி­பு­ரம் இலங்கை வங்­கி­யின் ஊழி­ய­ராக கடமை புரிந்­த­வர்.

விடு­த­லைப் பய­ணம்
தேசத்­தின் மீது கொண்ட பற்­று­று­தி­யால் விடு­த­லைப் பய­ணத்­திலே தன்னையும் ஓர் அங்கத்தவனாக இணைத்­துக் கொண்­ட­ான் மில்லர்.குறிப்­பாக தமிழ் மக்­க­ளின் மூல­த­ன­மான கல்­வி­யின் திருச் சொரூ­ப­மான, அறி­வூட்­டத்­தின் பொக்­கி­ச­மான யாழ்ப்­பா­ணம் பொது நூல­கத்­தின் மீதான தீயி­டல் சம்­ப­வம், அதே போன்று தமிழ் மக்­கள் மீது கட்­ட­விழ்த்­து­ வி­டப்­பட்ட இனக் கல­வ­ரம் என்­பன அவனை முற்­றாக தமிழ் மக்­க­ளின் விடு­த­லை­யின் பால் ஈர்த்­து­ விட்­டது.அதற்­கான இலட்­சிய உறுதி கொண்ட திட­மான பாதை­யிலே அங்­கத்­து­வ­னாக சேர்ப்­பித்­தது.

தாய் மண்­மீ­தும் தன் மக்­கள் மீதும் கொண்ட அள­வற்ற பாசம் என்­ப­தும், தன் இன விடு­த­லை­யின் மீதான நேசம் என்­ப­தும் முகம் மறைத்து முக­வரி மறைத்து எத்­த­னையோ பெரும் தாக்­கு­தல்­களை நடத்தி சாதனை படைக்­க­வும், தமி­ழன் என்ற வீரத்­தின் நிமிர்­வினை உலக நாடு­க­ளின் மத்­தி­யிலே அற்­பு­தம் செய்­தி­ட­வும் ஆரம்­ப­மாக அமைந்­து­விட்­டது இவ­னது தற்­கொ­டை­யெ­னும் தியா­கம்.இதனை தமி­ழ­ராய் நினை­வு­ கொள்­ளும் இந்த நன்­நாள் புனி­த­மா­னது.

கரும்­பு­லி­க­ளின் தியா­கம்
அந்­த­வ­கை­யிலே விடு­த­லைப் போராட்­டத்­தின் ஒவ்­வொரு திருப்­பு­மு­னை­க­ளி­லும் கரும்­பு­லி­க­ளின் தியா­கம் உயர்ந்து நிற்­கின்­றது.இவர்­க­ளின் தியா­கப் பாதை­கள் என்­பது 2000 ஆம் ஆண்டு கட்­டு­நா­யக்கா வான்­ப­டைத்­த­ளம் மீதான தாக்­கு­த­லாக,தென்­ப­கு­தி­யில் பல நிழற்­க­ரும்­பு­லிப் பாய்ச்­ச­லாக,2007 ஆம் ஆண்டு அனு­ரா­த­பு­ரம் வான்­ப­டைத்­த­ளம் மீது எல்­லா­ளன் வடி­வ­மாக, 2009 ஆம் ஆண்டு வானோடி கரும்­பு­லி­க­ளின் பறத்­த­லாக சிறந்­தி­ருக்­கி­றது.தமி­ழீழ வர­லாற்­றிலே தமி­ழ­னின் வீரத்தை உரி­மை­யின் மீதான பற்­று­த­லாக சாட்­டு­தல் செய்து நிற்­கின்­றன.

விடி­ய­லின் பாதை­க­ளைச்
சீர் செய்ய முன்­ன­கர்­வோம்
ஆக,தமி­ழர் விடு­த­லைப் போராட்­டத்­தின் தடைநீக்­கி­க­ளாக,உயி­ரா­யு­த­மாக,இலட்­சி­யத்­தின் இரும்பு மனி­தர்­க­ளாக உட­லோடு கந்­த­கம் சுமந்து எதி­ரி­யின் ஆண­வத்தை தகர்த்­த­ழித்த இந்த மனி­தர்­களை மறந்­து­விட முடி­யாது.இவர்­கள் புரிந்த சாத­னை­களை நினைந்து அற்­பு­தம் காண வேண்­டும்.அழி­யாத சுடர்­கள் எங்­கும் ஒளிர்­கின்­றன.

http://newuthayan.com/story/15/தேசத்தின்-புயலான-நெருப்பு-மனிதர்கள்.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.