Jump to content

ஈழப் பிரச்சினை பற்றிய சினம்கொள் திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படத்திற்கான விருது


Recommended Posts

ஈழப் பிரச்சினை பற்றிய சினம்கொள் திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படத்திற்கான விருது

image-7.png?resize=552%2C413

 
ஈழப் பிரச்சினை பற்றிய திரைப்படமான சினங்கொள் திரைப்படத்திற்கு சிறந்த அறிமுகத் திரைப்படற்கான கல்கத்தா சர்வதேச திரைப்பட விருது வழங்கப்பட்டுள்ளது. ஈழத்தை பூர்வீகமாக கொண்டு, தற்போது கனடாவில் வசித்து வரும் ரஞ்சித் ஜோசப் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
 
இந்தப் படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை ஈழக் கவிஞர் தீபச்செல்வன் எழுதியுள்ளார். படத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர். என்.ஆர். ரகுநந்தன்  இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவுப் பணியை மாணிக்கம் பழனிக்குமாரும் படத்தொகுப்பை அருணாசலமும் ஆற்றியுள்ளார்.
 
அரவிந்த் மற்றும் நர்வினி டெரி நடித்துள்ள இந்தப் படம், 2009இற்குப் பின்னரான சூழலில் முன்னாள் போராளி ஒருவரின் வாழ்க்கையை பற்றியதாக உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஈழத்தில் பதிவு செய்யப்பட்ட இந்தப் டபம் ஈழப் பிரச்சினை குறித்த புரிதலை தெளிவாக்கும் ஒரு கலைப்படைப்பு என்று படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் கூறியுள்ளார்.
 
இலங்கையை சேர்ந்த தமிழ் சிங்கள கலைஞர்களுடன் தமிழகம், இந்திய கலைஞர்களும் இணைந்து இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

http://globaltamilnews.net/2018/86307/

Link to comment
Share on other sites

  • 10 months later...
  • 1 month later...

பà®à®®à¯ à®à®¤à¯à®à¯ à®à¯à®£à¯à®à®¿à®°à¯à®à¯à®à®²à®¾à®®à¯: 1 நபரà¯, à®à®°à¯ மறà¯à®±à¯à®®à¯ à®à¯à®³à¯à®¸à¯ à®à®ªà¯

இங்கிலாந்து, பிரான்ஸ், நோர்வே, சுவிட்சர்லாந்தில் சினம்கொள் சிறப்பு திரையிடல்கள்!

ஈழப் பிரச்சினையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட, சினம்கொள் திரைப்படம், இங்கிலாந்து, நோர்வே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து முதலிய நாடுகளில் சிறப்பு திரையிடல்களைக் காணவுள்ளது. அண்மையில் கனடாவில் இந்த திரைப்படத்தின் சிறப்பு திரையிடல் இடம்பெற்றிருந்தது.

கனேடிய திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இத் திரைப்படம் இந்த மாதம் 20ஆம் திகதி இங்கிலாந்திலும் 21ஆம் திகதி சுவிட்சர்லாந்திலும் 27ஆம் திகதி நோர்வேயிலும், 28ஆம் திகதி பிரான்ஸிலும் திரையிடப்படவுள்ளது.

கனடாவை சேர்ந்த ரஞ்சித் ஜோசப் இந்தப் படத்தை இயக்கியுள்ள இந்தப் படத்திற்கான வசனம் மற்றும் பாடல்களை ஈழக் கவிஞர் தீபச்செல்வன் எழுதியுள்ளார். படத்திற்கு தமிழகத்தை சேர்ந்த பிரபல இசையமைப்பாளர். என்.ஆர். ரகுநந்தன் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவுப் பணியை மாணிக்கம் பழனிக்குமாரும் படத்தொகுப்பை அருணாசலமும் ஆற்றியுள்ளார்.

அரவிந்த் மற்றும் நர்வினி டெரி நடித்துள்ள இந்தப் படம், 2009இற்குப் பின்னரான சூழலில் முன்னாள் போராளி ஒருவரின் வாழ்க்கையை பற்றியதாக உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஈழத்தில் பதிவு செய்யப்பட்ட இந்தப் டபம் ஈழப் பிரச்சினை குறித்த புரிதலை தெளிவாக்கும் ஒரு கலைப்படைப்பு என்று படத்தின் இயக்குனர் ரஞ்சித் ஜோசப் கூறியுள்ளார்.
றந்த அறிமுகத் திரைப்படற்கான கல்கத்தா சர்வதேச திரைப்பட விருதைப் பெற்ற இந்த திரைப்படம், இந்திய அரசின் தணிக்கை பிரிவால் 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதுடன், இந்திய திரைப்பட விருதுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சேர்ந்த தமிழ் சிங்கள கலைஞர்களுடன் தமிழகம், இந்திய கலைஞர்களும் இணைந்து இந்தத் திரைப்படத்தில் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை விரைவில், இந்த திரைப்படம், இலங்கை உட்பட உலகமெங்கும் விரைவில் வெளியாகவுள்ளது.

Link to comment
Share on other sites

  • 5 months later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.