Jump to content

வழக்குகளுக்கு வெடி... தேர்தலுக்கு ரெடி! - தினகரன் மாஸ்டர் பிளான்


Recommended Posts

வழக்குகளுக்கு வெடி... தேர்தலுக்கு ரெடி! - தினகரன் மாஸ்டர் பிளான்

1097_thumb.jpg

 

 

 

தினகரன் அணி எம்.எல்.ஏ-க்களின் நீதிமன்றப் போராட்டங்கள், ஒவ்வொரு கட்டத்திலும் ஏதோ ஓர் இடத்தில்போய் முட்டிக்கொள்ள... கிட்டத்தட்ட விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டார் தினகரன். அவரின் ஆதரவு எம்.எல்.ஏ-க்களுக்கும் அதிருப்தி ஏற்பட, கொஞ்சம் ஆடித்தான் போனார். தன் தளபதியாக தினகரன் நினைத்துக்கொண்டிருந்த தங்க தமிழ்ச்செல்வன், வெளிப்படையாகவே எதிர்ப்பைக் காட்ட ஆரம்பிக்க, மிகவும் நெருக்கடியான நிலைக்கு உள்ளானார். இந்நிலையில், தினகரன் தரப்பில் தற்போது திடீர் உற்சாகம் தென்பட ஆரம்பித்துள்ளது. ‘‘ஏதாவது ஓர் அதிரடி ஆட்டம் ஆடியே ஆகவேண்டும் என்கிற கட்டாயத்தில் சிக்கிக்கொண்டுவிட்ட தினகரன், தற்போது ஒரு மாஸ்டர் பிளானுடன் ரெடியாகிவிட்டார்’’ என்று தெம்பாகக் கூற ஆரம்பித்துள்ளனர் அவரின் ஆதரவாளர்கள்.

18 எம்.எல்.ஏ-க்கள் பதவிநீக்க வழக்கில், உச்ச நீதிமன்றத்திலிருந்து தினகரன் தரப்புக்குச் சாதகமான தீர்ப்புதான் வழங்கப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதியாக, சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நீதிபதி விமலா, தினகரன் தரப்பினரின் கோரிக்கைக்கு ஏற்ப மாற்றப்பட்டு, நீதிபதி சத்யநாராயணா நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இவர் வழங்கப்போகும் தீர்ப்புப் பாதமாக வந்தால்கூட, மேற்கொண்டு சட்டப்போராட்டத்தில் இறங்காமல், காலியாக இருக்கும் அந்த 18 தொகுதிகளிலும் தேர்தலை எதிர்கொள்வதுதான் தினகரனின் திட்டம். கூடவே நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் பணிகளை எதிர்கொள்ளும் வகையில், தமிழகம் முழுக்கத் தொகுதிப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டிருப்பது தினகரன் கூடாரத்தின் உற்சாகத்தைக் கூட்டியுள்ளது! 

p3b_1530255365.jpg

உச்ச நீதிமன்றத்தை நாடியது ஏன்?

இதுகுறித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டியனிடம் பேசினோம். அவர், “சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை தாமதம் செய்யப்படுவதாகக் கருதினோம். வழக்கை விசாரிக்க மூன்று மாதங்கள் மட்டும் எடுத்துக்கொண்ட உயர் நீதிமன்றம், தீர்ப்பைச் சொல்ல நான்கு மாதங்களுக்கு மேல் எடுத்துக்கொண்டது. அப்படி வந்த தீர்ப்பும் ஒரு முடிவான தீர்ப்பாக இல்லாமல், மாறுபட்ட தீர்ப்பாக இருந்தது. அதன்பிறகு, மூன்றாவது நீதிபதியை நியமிக்க ஒரு வாரத்துக்கு மேல் ஆனது. இப்படியே போனால், அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டமன்றத் தேர்தல் வரும்வரை முடிவே வராது என்று நினைத்தோம். 18 தொகுதிகளிலும் சேர்த்து, 50 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் உள்ளனர். அந்தத் தொகுதிகளின் பிரச்னைகளைக் கவனிக்க எம்.எல்.ஏ-க்கள் இல்லாத நிலை உள்ளது. எனவே, மக்கள் நலனைக் கருத்தில் கொண்டும், இந்த வழக்கை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கத்துடனும்தான்,உச்ச நீதிமன்றத்தை அணுகினோம்.

உச்ச நீதிமன்றம், மிகச் சரியான தீர்ப்பை வழங்கியுள்ளது. உயர் நீதிமன்றம் நியமித்த மூன்றாவது நீதிபதியை மாற்றியது ஒரு சிறப்பான அத்தியாயம் என்றால், மூன்றாவது நீதிபதியாக யார் விசாரிக்க வேண்டும் என்பதையும் உச்ச நீதிமன்றமே தீர்மானித்திருப்பது நீதித்துறை வரலாற்றில் முதன்முறை என்றுதான் சட்ட வல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த உத்தரவால் தேவையற்ற காலதாமதம் தவிர்க்கப்பட்டுள்ளது. மூன்றாவது நீதிபதி அளிக்கப்போகும் தீர்ப்பு, எங்களுக்குப் பாதகமாக இருந்தால், மேற்கொண்டு சட்டப்போராட்டம் நடத்தப்போவதில்லை. காலியாக உள்ள 18 தொகுதிகளில் உடடினயாகத் தேர்தல் நடத்துமாறு தேர்தல் ஆணையத்தில் முறையிடுவோம். அதில் காலதாமதம்  ஏற்பட்டால், நீதிமன்றத்தை நாடுவோம்” என்று சொன்னார்.

p3a_1530255392.jpg

மாஸ்டர் பிளான்!

18 எம்.எல்.ஏ-க்கள் தொகுதியில் தேர்தல் என்றாலும் சரி... நாடாளுமன்றத் தேர்தல் என்றாலும் சரி... அதைச் சந்திக்கும் அளவுக்கு நிர்வாகிகளை நியமித்து வருகிறார் தினகரன். ஏனென்றால், தினகரனின் டெல்லி சோர்ஸ் மூலம் நாடாளுமன்றத் தேர்தல் பற்றிய தகவலும் அங்கிருந்து வந்ததாம். அதனால்தான், வழக்கு வாய்தாக்களை ஒதுக்கி வைத்துவிட்டு, தேர்தல் வேலைகளைப் பார்ப்போம் என்று சுறுசுறுப்பாகி உள்ளாராம் தினகரன். புதுச்சேரி உள்ளிட்ட 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்துவிட்டார். மூன்று அல்லது நான்கு தொகுதிகளுக்கு தலா ஒரு சீனியரை மேற்பார்வை செய்யும் பொறுப்பிலும் ஆட்களை நியமித்துவிட்டார். சந்தடியில்லாமல் தேர்தல் வேலை தொடங்கிவிட்டது. இந்தப் பணியில், தகுதி நீக்கப்பட்ட 18 எம்.எல்.ஏ-க்களையும் சேர்த்துள்ளார் தினகரன். அவர்களும் உற்சாகத்துடன் தேர்தல் பணியை ஆரம்பித்துவிட்டனர். ஆனால், இந்த 18 பேரின் பெயர்களை அதிகாரபூர்வமாக அறிவித்தால், அதன் மூலமாக வழக்கு விசாரணையில் பாதகம் ஏற்பட வாய்ப்புள்ளது என்று சட்ட நிபுணர்கள் சொன்னதால், அவர்களின் பெயர்களை வெளிப்படையாக அறிவிக்காமல் அடக்கியே வாசிக்கிறாராம் தினகரன்.

எடப்பாடி டெபாசிட் காலி!

தினகரனின் மாஸ்டர் பிளான்களில் மற்றொன்று... வரும் தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, அவரது சொந்தத் தொகுதியிலேயே மண்ணைக் கவ்வ வைப்பதுதான். எடப்பாடியின் சொந்த ஊராட்சியான நெடுங்குளத்திலேயே தினகரனின் ஆட்கள் களமிறங்கியுள்ளனர். இதுபற்றி அறிந்துகொள்வதற்காக எடப்பாடி பகுதியில் விசிட் அடித்தோம். திரும்பிய பக்கமெல்லாம், ‘மாற்றம் தேவை... தமிழகம் தலைநிமிர்ந்திட உறுப்பினராவீர். -எடப்பாடி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் சேர்க்கை இயக்கம்’ என்கிற ஸ்டிக்கர்களும், போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. மொபைல் போன் வாங்குவதற்காக வீதிகளில் வைக்கப்பட்டிருக்கும் பெரிய குடைகள் போல, ஆங்காங்கே குடைகளை அமைத்துப் புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் வேலை ஜரூராக நடந்துகொண்டிருந்தது.

எடப்பாடியில் இந்த வேலைகளை ஒருங்கிணைத்துக்கொண்டிருப்பவர், தினகரன் கட்சியைச் சேர்ந்த தாம்பரம் நாராயணன். ஏற்கெனவே, ஜனதா தளம் கட்சியின் இளைஞர் பிரிவு மாநிலத் தலைவர், காங்கிரஸ் கட்சியில் மாநிலப் பொதுச்செயலாளர் ஆகிய பதவிகளை வகித்த தாம்பரம் நாராயணனிடம் பேசியபோது, ‘‘2016-ல் அ.தி.மு.க-வில் இணைந்தேன். இப்போது, அ.ம.மு.க-வில் அம்மா பேரவையின் மாநிலத் துணைச் செயலாளராக உள்ளேன். உறுப்பினர் சேர்க்கைப் பணிக்காக 234 தொகுதிகளிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எடப்பாடி தொகுதிக்கு நான் பொறுப்பாளர். நகர, ஒன்றிய, பேரூர், ஊராட்சி, ஊராட்சி கிளைகளில் உள்ள மக்களின் எண்ணிக்கை மற்றும் அவர்களின் வாழ்வாதாரம் என அனைத்துப் புள்ளிவிவரங்களையும் திரட்டியுள்ளோம். அனைத்து ஒன்றியங்களிலும் செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளை அழைத்து, ‘தன்னம்பிக்கைக் கூட்டம்’ நடத்தியுள்ளோம். நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்களின் புகைப்படங்களுடன் பட்டிதொட்டியெல்லாம் போஸ்டர்கள் ஒட்டி, நோட்டீஸ்களை விநியோகித்துள்ளோம்.

p3_1530255352.jpg

உள்ளூர் நிர்வாகிகள் மிகுந்த உற்சாகத்துடன் வேலை செய்கிறார்கள். கிராமம் கிராமமாகச் சென்று முகாம்கள் அமைத்துப் பணியாற்றுகிறோம். வீடு வீடாகத் துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கிறோம். மக்களுடன் உரையாடி, அவர்களை எங்கள் இயக்கத்தில் உறுப்பினர்களாகச் சேர்க்கிறோம். அதிகாலை 5 மணிக்குத் தொடங்கும் பணி, இரவு 10 மணி வரை தொடர்கிறது. குக்கிராமங்கள், பஸ் நிலையங்கள், சந்தைகள், நூலகங்கள், கல்லூரிகள் என எதையும் நாங்கள் விட்டுவைக்கவில்லை. மூன்று வாரங்களில் 40 ஆயிரம் உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டோம். விரைவில் எடப்பாடி தொகுதியில் ஒரு லட்சம் உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. வரும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி டெபாசிட் காலி’’ என்று சொன்னார் உறுதியான குரலில்.

தினகரன் தரப்பின் இந்த அதிரடி வேலைகளை முறியடிக்கும் வகையில், அரசாங்க பலத்தை எதிரிகள்மீது பிரயோகப்படுத்த ஆரம்பித்துள்ளதாம் எடப்பாடி தரப்பு. ஆளுங்கட்சியாயிற்றே... முதலமைச்சர் தொகுதியாயிற்றே என்று சொல்லி தினகரன் பக்கம் வருவதற்கு ஆரம்பத்தில் பலரும் தயங்கியுள்ளனர். அதையெல்லாம் உடைத்து, பலரையும் சேர்த்துள்ளது தினகரன் தரப்பு. அப்படி வந்தவர்களை இப்போது மிரட்டி, மறுபடியும் அ.தி.மு.க-வுக்கேக் கொண்டு செல்லும் வேலைகள் நடக்கின்றனவாம். ‘‘மாதேஷ் என்பவர் எடப்பாடி நெடுஞ்சாலையில் தாபா கடை வைத்திருந்தார். இவர், எங்கள் தரப்புக்கு உறுப்பினர் சேர்க்கையில் கடுமையாக வேலை செய்துள்ளார். மிரட்டிப் பார்த்தும் பணியாததால், அதிகாரிகளை வைத்து அவரது கடையை மூட வைத்துவிட்டார்கள். ஆனாலும், எங்கள் பக்கம்தான் நிற்கிறார் மாதேஷ். இதுபோல பல கதைகள் இருக்கின்றன’’ என்று சொல்லும் தாம்பரம் நாராயணன்,‘‘ஆர்.கே. நகர் தொகுதியில் அண்ணன் காட்டிய அதே அதிரடியை, தமிழகம் முழுக்கவே காட்டப்போகிறோம். எடப்பாடியில் புறப்பட்ட இந்தப் புயல், 234 தொகுதிகளிலும் விரைவில் சுழன்றடிக்கும்’’ என்று குஷியுடன் சொன்னார்.

ஆனானப்பட்ட சசிகலாவுக்கே டேக்கா கொடுத்தவர்; டெல்லியையே கன்ஃப்யூஸ் செய்து தன்பக்கம் திருப்பியவர் என்ற பெருமைகளைக் கொண்ட எடப்பாடி பழனிசாமி, அத்தனை எளிதில் வீழ்வாரா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

https://www.vikatan.com

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • அவர் இப்பவே யப்பான் துணைமுதல்வர்தான். எத்தனையோ கிண்டல்கள்>கேலிகளுக்கு மத்தியில்தான் சீமான் தமிழ்நாட்டின் 3வது கட்சியாக வளர்ந்துள்ளார்.ஏனைய கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைத்துத்தான் போட்டி போடுகின்றன. ஒருவருக்கும் தனித்து நிற்க தைரியமில்லை. இன்று சீமான் கூட்டணிக்கு இணங்கினால் மற்றைய கட்சிகளை விட அதிக இடங்களில் போட்டிய முடியும். நக்கல் செய்பவர்கள் நையாண்டி செய்பவர்கள் நாம்தமிழர்களுக்கு எதிராக சின்னத்தை முடக்கி சதிசெய்தவர்கள் எல்லோயைும் மீறி நாம் தமிழர்வளர்ந்து கொண்டிருக்கிறது என்ற யதார்த்தம் எல்லோருக்கும் தெரியும். அது யாழ்களத்தின் நாம்தமிழர் கட்சி எதிர்ப்பாளர்களுக்கும் நன்னு தெரியும். சீமான் பேச்சில் எங்காவது குறை கண்டு பிடித்து நக்கல் செய்வர்கள் மற்றைய கட்சிகள் 100 வீதம் உத்தமமான மக்கள் சேவை செய்யும் கட்சிகள் என்று நிளனத்து கொள்கிறார்கள் போலும்.தடைகளைத்தாண்டித்தான் வளரணும். 
    • நான் அண்ண‌ன் சீமானை ஆத‌ரிக்க‌ முழு கார‌ண‌ம் எம் தேசிய‌ த‌லைவ‌ர் மேல் இருந்த‌ ப‌ற்றின் கார‌ண‌மாய்............2009க்குபிற‌க்கு  ப‌ல‌ த‌டைக‌ளை தாண்டி இளைய‌த‌லைமுறை பிள்ளைக‌ளுக்கு த‌லைவ‌ர‌ ப‌ற்றி எவ‌ள‌வோ சொல்லி இருக்கிறார் இவ‌ர் ம‌ட்டும் இல்லை என்றால் க‌லைஞ‌ர் செய்த‌  வேத‌னைக‌ளை கொடுமைக‌ளை  சாத‌னை என்று மாற்றி சொல்லி இருப்பின‌ம் திராவிட‌ கும்ப‌ல்............கால‌மும் நேர‌மும் எப்போதும் ஒரே மாதிரி இருக்காது அண்ணா...........இன்னும் 10வ‌ருட‌ம் க‌ழித்து இந்த‌ உல‌கில் என்ன‌னென்ன‌ மாற்ற‌ம் வ‌ரும் என்று உங்க‌ளுக்கும் தெரியாது என‌க்கும் தெரியாது..................சீன‌ன் பாதி இல‌ங்கையை வாங்கி விட்டான் மீதி இல‌ங்கையை த‌ன் வ‌ச‌ப் ப‌டுத்தினால் அதுயாருக்கு ஆவ‌த்து..............இதோ பிர‌பாக‌ரனின் ம‌க‌ள் வ‌ந்து விட்டா ஈழ‌த்து இள‌வ‌ர‌சியின் தோட்ட‌ சிங்க‌ள‌ இராணுவ‌த்தின் மீது பாயும் என்று சொன்ன‌ காசி ஆன‌ந்த‌னை ஏன் இன்னும் ம‌த்திய‌ அர‌சு அவ‌ரை கைது செய்ய‌ வில்லை.................இப்ப‌டி ப‌ல‌ சொல்லிட்டு போக‌லாம் கால‌ நீர் ஓட்ட‌த்தில் மாற்ற‌ங்க‌ள் மாறி கொண்டே இருக்கும்...............    
    • ஏன் தமிழ் பாடசாலைகளில் படிக்கவில்லை என்பது தான் கேள்வி??  தமிழ் மட்டுமல்ல ஏனைய படங்களையும் தமிழ்மொழி மூலம் படிக்க வேண்டும்  இவரின் பிள்ளைகள் அனைத்து படங்களையும் ஆங்கில மொழியில் படிக்கிறார்கள் என்பது தெளிவு 
    • இல்லை. இங்கே கூற்று, எது முதன்மை கற்பித்தல் மொழி என்பதுதான். தமிழ், தமிழ் என தொண்டை கிழிய கத்தும் சீமான், பிள்ளைகளை தமிழில் முதன்மை மொழியாக்கி படிப்பித்து விட்டு…. ஆங்கிலத்தை வீட்டில் வைத்து சொல்லி கொடுத்தால் அது நியாயம்.  
    • 2013 மார்ச் மாதத்தில் திமுக   விலகியது நீங்கள் சொன்னது சரி. ஆனால் நான் எமுதியது கலைஞர் கூடா நட்பு பற்றி சொன்னது பற்றி.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.