Jump to content

மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளேன்- சந்தியா


Recommended Posts

மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ளேன்- சந்தியா

 

ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட  தான்  புதிதாக அச்சுறுத்தல்களையும் மிரட்டல்களையும் எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார்

ஞானசார தேரர் விவகாரம் தொடர்பிலேயே தனக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ள அவர் சமூக ஊடகங்கள் ஊடாகவே அதிக அச்சறுத்தல்கள் விடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

பேஸ்புக் ஊடாக நாளாந்தம் அச்சுறுத்தல்களும் கொலைமிரட்டல்களும் விடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

உண்மையை அறியாமல் விபரங்களை அறிந்துகொள்ளாமல் மக்கள் என்னையும் எனது பிள்ளைகளையும் உளவியல் ரீதியில் சித்திரவதை செய்கின்றனர் என சந்தியா தெரிவித்துள்ளார்.

santhiyaaaaaaaaaaaa.jpg

பொதுபலசேனாவின் ஞானசார தேரர் விவகாரத்திற்கு பின்னர் அடையாளம் தெரியாத முகப்புத்தக பயனாளர்கள் மரண அச்சுறுத்தலை விடுத்துகின்றனர் அவர்களில் பலர்  எனது கணவர் விடுதலைப்புலிகளின் உளவாளி என்ற குற்றச்சாட்டை முன்வைத்து மிரட்டல் விடுக்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தள்ளார்.

சில ஆண்கள் உண்மையை அறியாமல் ஆதரவற்ற பெண் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துகின்றனர் மகிந்த ராஜபக்சவும் கோத்தபாய ராஜபக்சவும் ஆட்சி புரிந்த வேளை இவற்றை மக்கள் மனதில் புகுத்தியுள்ளனர் அவை இன்றும் நீடிக்கின்றன.

http://www.virakesari.lk/article/35483

Link to comment
Share on other sites

ஞானசார தேரர் -எதிர் -சந்தியா எக்னலிகொட!!

 

1527161210-gnanasara-thero-found-guilty-

 
 
 

கடந்த வார­ம­ள­வில் கைதா­கி­யி­ருந்­தார் ஞான­சா­ரர். பின்னர் பிணை யில் விடுதலையாகினர். நீதி­மன்றத்தை அவ­ம­தித்­தமை, சாட்­சியை அச்­சு­றுத்­தி­யமை ஆகிய குற்­றங்­க­ளுக்­காக அவ­ருக்­குத் தண்­டனை அளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

அவ­ருக்­க­ளிக்­கப்­பட்ட தீர்ப்­பின் பின்­பான புறச்­சூ­ழல் இயல்­பாக இல்லை. அத்­தோடு இந்­தத் தீர்ப்­பின் பின்னே பல அர­சி­யல் சுழல்­கள் உரு­வா­கத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

அர­சுக்கு ஏகப்­பட்ட நெருக்­க­டி­கள்

 

இந்த நிகழ்வு நீதிக் கட்­ட­மைப்­பை­யும், அர­சை­யும், பெரும்­பான்­மைப் பலத்­தை­யும் ஒரே தளத்­தில் நிறுத்­திப் பலப்­ப­ரீட்சை நடத்­திப் பார்க்­கி­றது என்­றும் சொல்­ல­லாம். எது எப்­படி இருப்­பி­னும், ஆசார–அனுட்­டா­னங்­க­ளைக் கடைப்­பி­டிக்­க ­வேண்­டிய நிலை­யி­லுள்ள ஒரு­வர், அதற்கு முர­ணா­கச் செயற்­பாட்டு அதற்­கான தண்­ட­னையை அனு­ப­விக்க நேர்ந்­தமை கவ­லைக்­கு­ரி­யதே.

பல வரு­டங்­க­ளுக்கு முன்பு கம்­யூ­னி­சக் கட்­சி­யி­ன­ரால் ‘கம்­கரு மாவத்த’ என்று ஒரு பத்­தி­ரிகை வெளி­யி­டப்­பட்­டது. ‘கம்­கரு’ என்­பது சிங்­க­ளத்­தில் ‘தொழி­லா­ளர்’. ‘மாவத்த’ என்­பது ‘பாதை’ என்று அர்த்­தம். இந்­தப் பத்­தி­ரிகை தமி­ழி­லும் ‘தொழி­லா­ளர் பாதை’ என்ற பெய­ரில் வெளி­யி­டப்­பட்­டது.

இதை மக்­கள் மத்­தி­யில் விற்­கும்­ போது தமிழ், சிங்­கள இளை­ஞர்­க­ளும் இணைந்தே விற்­பது வழக்­கம். மலை­ய­கப் பகுதி ஒன்­றில் இதை விற்­ற­போது, இரண்டு சிங்­க­ள­வர்­க­ளும் ஒரு தமி­ழ­ரும் பொலி­சா­ரால் கைது செய்­யப்­பட்­ட­னர். சிங்­க­ளப் பத்­தி­ரி­கை­யில் உள்ள விட­யத்­தைத்­தான் தமி­ழில் எழு­தி­யுள்­ளார்­கள் என்­ப­தால் தமிழ் இளை­ஞ­ருக்­குப் பிரச்­சினை இருக்­க­வில்லை.

ஆனால், இரண்டு சிங்­கள இளை­ஞர்­க­ளை­யும் பொலி­சார் கடு­மை­யா­கத் தாக்­கி­னார்­கள். ‘அவன் தமி­ழன். அவ­னுக்கு இந்த நாட்­டில் பிரச்­சினை உண்டு. உங்­க­ளுக்கு என்­னடா பிரச்­சினை இருக்கு?’ என்று கேட்டே தாக்­கி­னார்­க­ளாம். இந்த விட­யம்­தான் புலி­க­ளின் உத்­தி­யோ­க­பூர்வ சிங்­க­ளப் பத்­தி­ரி­கை­யான ‘தேதுன்ன’ (வான­வில்) பத்­தி­ரி­கை­யின் தலைமை ஆசி­ரிய­ராக இருந்த பிர­கீத் எக்­ன­லி­கொ­ட­வுக்­கும் நிகழ்ந்­தது.

அப்­போ­தைய கடத்­த­லும், தற்­போ­தைய கைதும்

2010ஆம் ஆண்டு ஜன­வரி 24ஆம் திக­தி­யன்று (அரச தலை­வர் தேர்­த­லுக்கு இரண்டு நாள்­க­ளுக்கு முன்­னர்) கடத்­தப்­பட்­டுக் காணா­ம­லாக்­கப்­பட்­டார் பத்­தி­ரி­கை­யா­ளர் எக்­ன­லி­கொட.

எக்­ன­லி­கொ­ட­வின் மனைவி சந்­தியா தனது இரண்டு பிள்­ளை­க­ளு­டன் மிக­வும் வறு­மைப்­பட்ட சூழ­லில் காணா­ம­லாக்­கப்­பட்ட தனது கண­வ­னைத் தேடிப் போராடி வரு­கி­றார்.

அவரை 25.1.2016அன்று கொழும்பு – கோமா­கம நீதி­மன்­றத்­தில் வைத்து ஞான­சா­ர­தே­ரர் ‘உனது கண­வர் புலி’ என்று அச்­சு­றுத்­திப் பேசிய குற்­றத்­துக்­கா­க­வும், நீதி­மன்றை அவ­ம­தித்த குற்­றத்­துக்­கா­க­வுமே தற்­போது சிறைத்­தண்­ட­னையை அனு­ப­வித்­து­ வ­ரு­கி­றார். அவரை விடு­விக்­கு­மாறு பௌத்த அமைப்­புக்­க­ளும், அர­சி­யல்­வா­தி­க­ளும் அழுத்­தம் கொடுத்­து ­வ­ரு­கின்­ற­னர்.

பௌத்த அமைப்­புக்­க­ளின் வேரூன்­றல்
இலங்­கை­யில் காணப்­ப­டு­கின்ற பௌத்­தம் தேரா­வா­தம், மகா­யா­னம் என்ற இரண்டு பிரி­வு­களை உடை­யது. மகா­யான பௌத்­தம் தமிழ்­நாட்­டில் செல்­வாக்­குப் பெற்­றி­ருந்­த­தால் இலங்­கை­யில் தேரா­வாத பௌத்­தத்­துக்கே அதிக முக்­கி­யத்­து­வம் இருந்து வரு­கி­றது.

பல்­ல­வர் காலத்­தில் இந்­தி­யா­வி­லி­ருந்து இந்­துக்­க­ளால் துரத்­தப்­பட்ட மகா­யான தமிழ்ப்­பௌத்த பிக்­கு­கள் கடல் மார்க்­க­மா­கக் கந்­த­ரோ­டைப் பகு­திக்கு வந்து குடி­யே­றி­னர். இந்­தப் பிக்­கு­கள் தமி­ழர் மீது கோபம் கொண்­ட­வர்­க­ளாக இருந்­த­மை­யால் தமி­ழ­ரைப் பௌத்த மதத்­துக்கு இணைப்­ப­தில் ஆர்­வம் காட்­ட­வில்லை.

இந்­தத் தமிழ்ப் பிக்­கு­க­ளின் செயற்­பா­டு­கள் பின்­னர் ஜேத­வ­ன­ரா­மய (அநு­ரா­த­பு­ரம்) விகா­ரை­யு­டன் தொடர்பு பட்­ட­தாக இருந்­தது. மகா­வி­கா­ரை­யின் எழுச்­சி­யின் ­பின்­னர் தேரா­வாத பௌத்­தமே இலங்­கை­யில் அதி­கம் செல்­வாக்­குப்­பெற்ற மத­மாக மாறி­யது. தேரா­வாத பௌத்த பிரி­வே­னாக்­கள் (பௌத்த மதக் கல்­வி­யைப் போதிக்­கும் இடம்) பல எழுச்­சி­ய­டைந்­தன.

பௌத்த மதம் ஒரு­பு­ற­மி­ருக்க சிங்­கள பௌத்த தேசிய வாதி­க­ளின் எழுச்சி இன்­னொரு பக்­கத்­தில் சிங்­கள மக்­களை விழிப்­ப­டைய வைத்­தது. இதில் முதன்மை நப­ரா­க­வும் பிரித்­தா­னிய காலத்­தில் மிக முக்­கிய சமூக மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­ய­வ­ரா­க­வும் அநா­கா­ரிக தர்­ம­பால காணப்­ப­டு­கி­றார். பௌத்த மதத்­துக்கு உறு­து­ணை­யா­கச் செயற்­ப­டு­கின்ற பௌத்த தீவி­ர­வாத அமைப்­புக்­கள் பிக்­கு­க­ளின் தலை­மை­யி­லும், தேசி­ய­வா­தி­க­ளான சிங்­க­ள­வ­ரின் தலை­மை­யி­லும் எழுந்­தன.

இந்த எழுச்­சிக் குழுக்­க­ளுக்கு சிங்­கள இனத்­தி­ன­தும், பௌத்த மதத்­தி­ன­தும் பூர்­வீ­கப் பின்­ன­ணி­யி­லேயே உள்­ள­னர்.

பௌத்த துற­வி­களை அதி­கம் உரு­வாக்­கு­வ­தில் பிரி­வே­னாக்­கள் முக்­கிய பங்கு வகிக்­கின்­றன. தேரா­வாத மதப்­பி­ரிவை வளர்த்­தெ­டுப்­ப­தற்­கா­கச் சிங்­கள மக்­கள் தங்­கள் பிள்­ளை­க­ளில் ஒரு­வ­ரைத் துற­வி­யாக்­கத் தயா­ராக இருப்­ப­தும் அவர்­க­ளுக்­கான கல்­வியை வழங்­கப் பல பிரி­வே­னாக்­கள் தயா­ராக இருப்­ப­தும் இங்கு தெளி­வா­கக் காணக்­கூ­டிய ஒன்று.

தற்­போது இலங்கை முழு­வ­தி­லும் 794பிரி­வே­னாக்­கள் இயங்கி வரு­கின்­றன. இவற்­றில் ஒவ்­வொரு தடை­வை­யும் 62ஆயி­ரம் இளம் பிக்­கு­கள் கல்வி கற்­கும் வச­தி­கள் உள்­ளன. இவற்­றில் மூன்று படி­மு­றை­க­ளா­கப் பௌத்த மதக் கல்வி கற்­பிக்­கப்­ப­டு­கி­றது.

‘மூலிக்க’ (ஆரம்­பக் கல்வி)
இது ஐந்­து­வ­ருட காலப்­ப­கு­தி­யைக் கொண்­டது. பாளி, சமஸ்­கி­ரு­தம் , சிங்­க­ளம், ஆங்­கி­லம் என்­பன கற்­பிக்­கப்படு­கி­றது.

திரி­பீ­ட­கக் கல்வி
பௌத்த மதத்­தின் மூல நூல், மற்­றும் கணி­தம் என்­பன கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன. மேற்­ப­டிக் கல்­வி­யில் உயர்­வான கல்­வி­யைப் பெறு­வது ‘மகா’ என அழைக்­கப்­ப­டும் இந்­தக் கல்­வி­யில் ஏற்­க­னவே கற்­றுத் தேர்ந்த பாடங்­களை மேலும் விரி­வா­கக் கற்­ப­து­டன் மேல­தி­க­மாக மெய்­யி­யல், மத வர­லாறு, மொழி­யி­யல், ஆயுர்­வே­தம், வான சாஸ்­தி­ரம் ஆகி­ய­ன­வும் கற்­பிக்­கப்­ப­டு­கின்­றன.

மூன்­றா­வது நிலை­யில் மேலே குறிப்­பி­டப்­பட்ட பாட­வி­தா­னத்­தில் சித்­தி­யெய்­தி­ய­தும் உயர்­கல்­வி­யான பல்­க­லைக்­க­ழ­கக் கல்­வி­யைத் தொடர முடி­யும்.

சிறு­பான்­மை­யி­னர் ஒடுக்­கப்­ப­டு­தல்;  கத்­தோ­லிக்­கர் விதி­வி­லக்கு

மதப்­பி­ரி­வு­க­ளூ­டா­கக் கற்­றுத் தேறி­னும்  இந்த அமைப்­புக்­க­ளின் முதன்­மைச் செயற்­பாடு இலங்­கை­யின் தாம் தவிர்ந்த இனங்­களை ஒடுக்­கு­வ­தா­கவே உள்­ளது. இதில் முப்­பது ஆண்­டு­கால ஆயு­தப்­போ­ராட்­டத்­தில், வடக்­குக் கிழக்­குத் தமி­ழர் ஈடு­பட்­டி­ருந்­த­தால், தமி­ழர் மீது ‘புலி­களை அழித்­தல்’ என்­ப­தாக ஒடுக்­கு­மு­றை­கள் இருந்­தன. முஸ்­லிம்­கள் மீது பொரு­ளா­ரா­தா­ரச் சுரண்­டல் மற்­றும் பசு­வ­தை­போன்ற வழி­க­ளில் ஒடுக்­கு­மு­றை­கள் இருந்­தன.

சிங்­க­ள­வர்­க­ளில் கணி­ச­மான அளவு மக்­கள் கிறிஸ்­த­வர்­க ­ளா­க­வும், பசு, பன்றி இறைச்­சி­களை உண்­ப­வர்­க­ளாக நீண்ட கால­மாக இருந்து வரு­கின்­ற­போ­தி­லும் அவர்­க­ளுக்கு எதி­ராக இந்­தப் பௌத்த அமைப்­புக்­கள் கிளர்ந்து எழு­வ­தில்லை.

அதே­வேளை கத்­தோ­லிக்க மதத்­தின் அதி மேற்று ராணி­யா­ரான மல்­கம் ரஞ்­சித் ஆண்­டகை ‘இலங்­கை­யில் பௌத்த மதத்­துக்கே முத­லி­டம்’ என்­பதை தான் ஏற்­றுக்­கொள்­வ­தா­கக் குறிப்­பிட்­டி­ருந்­தார். அதை நோக்­கிய சார்பு அணு­கு­முறை ஒன்­றை­யும் அவர் கையாண்டு வரு­கி­றார்.

வத்­திக்­கானை மைய­மா­கக் கொண்­டுள்ள கத்­தோ­லிக்­கத்தை வீழ்த்­து­வ­தற்­காக, உல­கம் முழு­வ­தும் கத்­தோ­லிக்­கத்­துக்கு எதி­ரான ‘இவான் சலிக்­கல்’ என்ற கிறிஸ்­தவ மதச் செயற்­பாட்டை அமெ­ரிக்கா தூண்டி வரு­கி­றது. ஐரோப்­பா­வின் கத்­தோ­லிக்­கத்தை முறி­ய­டித்­துக் கிறிஸ்­த­வத்­துக்கு அமெ­ரிக்கா தலைமை தாங்­க­வேண்­டும் என்­பதே இதன் எதிர்­பார்ப்பு அந்த வகை­யில் கத்­தோ­லிக்­கத்­தைப் பாது­காப்­ப­தற்­காக இலங்­கை­யில் பௌத்­தத்­து­டன் ஒத்­துப்­போ­க­வேண்­டிய கட்­டா­ய­தேவை கத்­தோ­லிக்­கர்­க­ளுக்கு இருக்­க­லாம்.

இளம் பிக்­கு­க­ளின் பெருக்­கம் பெரும் ஆபத்து!
கொழும்­புப் பல்­க­லைக்­க­ழக அர­சி­யல்­து­றைப் பேரா­சி­ரி­ய­ரான நிர்­மல் ரஞ்­சித் தேவ­சிறி சிங்­கள பௌத்த அதி­தீ­விர தேசிய வாதம்­பற்றி எழு­திய நூலொன்­றில் பொது­ப­ல­சேன, சிங்­கள ராவய, ராவண பலய, சிங்­கலே போன்ற தீவி­ர­வாத அமைப்­புக்­க­ளில் இளம் பிக்­கு­க­ளின் அங்­கத்­து­வம் மிக­வே­க­மாக அதி­க­ரித்து வரு­கி­றது என­வும், இந்­தப் போக்­கா­னது சிங்­கள பௌத்­தர்­கள் அல்­லாத ஏனைய சிறு­பான்மை இனங்­களை அதி­கம் பாதிக்­கும் என­வும் எச்­ச­ரிக்­கி­றார். இந்த அமைப்­புக்­க­ளின் கவ­னம் சிறு­பான்மை முஸ்­லிம்­க­ளின்­மீது அதி­க­மா­கக் காணப்­ப­டு­கின்­றது.

நிர்­மல் குறிப்­பி­டும் பௌத்த அமைப்­புக்­க­ளுக்கு மேல­தி­க­மாக அண்­மை­யில் கண்டி திகன முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான கல­வ­ரத்தை ‘மகா­சொன் வல­காய’ என்ற புதிய அமைப்­பொன்று தலைமை தாங்கி மிக நேர்த்­தி­யாக நடத்­தி­ய­தாக அறி­ய­மு­டி­கி­றது. இவ்­வ­கை­யில் தான்
ஞான­சா­ர­ரும் கவ­னம் பெறு­கி­றார். ஆனா­லும் அவ­ரு­டைய அதி­தீ­விர போக்­குச் சிங்­கள பௌத்­தர்­கள் பல­ருக்­குப் பிடிப்­ப­தில்லை.

ஒரு பௌத்த துறவி சண்­டித்­த­னத்­தில் ஈடு­ப­டக்­கூ­டாது என்­பது அவர்­க­ளின் கருத்­தாக இருந்­த­போ­தி­லும் தமி­ழரோ, முஸ்­லிம்­களோ சிங்­க­ள­வர்­க­ளுக்கு எதி­ராக அல்­லது பௌத்த மதத்­துக்கு எதி­ரா­கச் செயற்­பட முனை­கின்­ற­போது ‘இதுக்கு ஞான­சா­ரர்­தான் சரி’ என்று கூறு­கின்ற அல்­லது அவ­ரது போக்கை ஏற்­றுக்­கொள்­ளு­கின்ற நிலை­யும் இல்­லா­ம­லில்லை. அத்­தோடு தற்­போ­துள்ள சூழ­லில் ஞான­சா­ரரா? அல்­லது திரு­மதி சந்­தியா எக்­னெ­லி­கொ­டவா? என்று பார்த்­தால், ஞான­சா­ர­ரின் பக்­கமே பௌத்த சிங்­க­ள­வ­ரின் செல்­வாக்கு அதி­க­மா­க­வி­ருக்­கும்.

இதை­விட அம்­பாறை மாவட்­டத்­தில் தமி­ழ­ருக்கு எதி­ரான முஸ்­லிம்­க­ளின் நட­வ­டிக்­கை­க­ளுக்­குத் தமிழ் மக்­க­ளால் முகம்­கொ­டுக்க முடி­யாத நிலை­யில் பல தமி­ழர்­கள் ஞான­சா­ரரை நேரில் சந்­தித்து அவ­ரது உத­வி­க­ளை­யும் பெற்­றி­ருக்­கி­றார்­கள். கிழக்கு மாகா­ணத்­தில் தமி­ழர்­க­ளுக்கு எதி­ரான முஸ்­லிம்­க­ளின் அத்­து­மீ­றல்­க­ளுக்கு தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் கள­மி­றங்­கு­வ­தை­விட ஞான­சா­ர­ர­ரின் ஆத­ர­வா­ளர்­க­ளும் மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ரா­மய விகா­ரா­தி­ப­தி­யும் பல விட­யங்­க­ளில் கள­மி­றங்­கி­யுள்­ள­னர். அத்­தோடு அத்தே ஞான­சா­ர­ரின் வில்­பத்­துக் காடு­களை அழிக்­கி­றார்­கள், பௌத்த மதத்தை அழிக்­கி­றார்­கள் என்ற குற்­றச்­சாட்­டுக்­குள் இந்­துக்­களோ, கிறிஸ்­த­வர்­களோ அகப்­பட்­டி­ருக்­க­வில்லை.

ஞான­சா­ரர் – கோத்­த­பாய ராஜ­பக்ச
2004ஆம் ஆண்­டில் ஓமல்கே சோபித தேர­ரால் உரு­வாக்­கப்­பட்­டதே ஜாதிக ஹெல உறு­மய என்ற அமைப்பு. இந்த அமைப்­பி­லேயே ஞான­சா­ர­ரும் இருந்­தார் பின்­னர் 2012ஆம் ஆண்­டில் ஞான­சா­ர­ரும் திலந்த விதா­னகே என்­ப­வ­ரும் இணைந்து பொது­ப­ல­சேன அமைப்பை உரு­வாக்­கி­னர். இந்த அமைப்­பின் அலு­வ­ல­கத்தை முன்­னை­நாள் பாது­காப்­புச் செய­லர் கோத்­த­பாய ராஜ­பக்­சவே திறந்து வைத்­தார்.

இத்­த­கைய அர­சி­யல் முக்­கி­யத்­து­வம் வாய்ந்த ஒரு பௌத்த அமைப்பு எப்­போ­தும் ஆட்­சி­யாளருக்­குத் தேவைப்­ப­டும் என்­றி­ருக்­கிற நிலை­யி­லேயே பத்­தி­ரி­கை­யா­ளர் பிர­கீத் எக்­ன­லி­கொ­ட­வின் மனைவி சந்­தி­யா­வைப் பேசி­ய­தற்­காக நீதி­மன்­றம் ஞான­சா­ர­ருக்­குத் தண்­டனை கொடுத்­துள்­ளது. தண்­டனை கொடுத்தே ஆக­வேண்­டும் எனும் நெருக்­க­டி­யால் ஓராண்டு கடூ­ழி­யச் சிறைத்­தண்­ட­ணையை ஆறு மாதங்­க­ளா­கச் சுருக்­க­வேண்­டிய நிலை­யும் ஏற்­பட்­டது.

தமக்­கா­கக் குரல் கொடுத்­த­வர்
தமி­ழர்­க­ளால் கைவி­டப்­பட்­டார்

சந்­தியா எக்­னெ­லி­கொட தன்னை ஞான­சா­ரர் பேசி­ய­தைப் பெண்­க­ளுக்கு எதி­ரான செயற்­பா­டா­கக் குறிப்­பிட்டு வழக்­குத் தொடர்ந்­தார். தனது கண­வ­ரைத்­தே­டும் வேலைத்­திட்­டத்­தில் அவர் திறம்­ப­டச் செயற்­பட்­டத்­காக 2017ஆம் ஆண்­டில் ‘பன்­னாட்டு ஓர்­மம் உள்ள பெண்’ என்ற விரு­தும் வழங்­கப்­பட்­டது.

பன்­னாட்டு மனித உரிமை அமைப்­புக்­கள் மற்­றும் பெண்­கள் அமைப்­புக்­கள் ஞான­சா­ரர் நீதி­மன்­றத்­தில் வைத்­துப் பேசி­யதை பெண்­க­ளுக்கு எதி­ரான பௌத்த துறவி ஒரு­வ­ரின் வன்­மு­றை­யாக வெளிக்­காட்­டி­னர். இது விட­யத்­தில் நல்ல தீர்ப்பு ஒன்றை வழங்­க­வேண்­டிய கட்­டா­யம் நீதித்­து­றைக்­கும் அர­சுக்­கும் ஏற்­பட்­டது. அத­னால் தீர்ப்­புக் கொடுத்­த­தா­க­வும் காட்டி ஒரு வரு­டத் தண்­ட­ணையை ஆறு மாதங்­க­ளுக்­குள் கழிக்­க­லாம் எனும் நிலை­யும் ஏற்­பட்­டது.

காணா­ம­லாக்­கப்­பட்ட அவ­ரு­டைய கண­வர் சிங்­கள பௌத்­தர்­க­ளைப் பொறுத்­த­வரை ஒரு ‘கறுப்பு ஆடா­கவே’ பார்க்­கப்­ப­டு­கி­றார். தேதுன்ன என்ற சிங்­க­ளப் பத்­தி­ரி­கையை (புலி­க­ளின் பரப்­பு­ரைப் பத்­தி­ரிகை) வெளி­யிட்­டது, இறு­திப்­போ­ரில் இரா­ணு­வம் இர­சா­யன ஆயு­தங்­க­ளைப் பயன்­ப­டுத்­தி­யதா? என்­ப­தைத் தேடி­யது போன்ற கார­ணங்­க­ளால் புலி­க­ளு­டன் சேர்த்து முத்­திரை குத்­தப்­பட்­டார்.

ஆனால் சந்­தி­யா­வுக்கு புலம்­பெ­யர்ந்து வாழும் தமி­ழர்­க­ளால்­கூட உத­வி­கள் கிடைப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. சந்­தி­யா­வும் இங்­குள்ள ஏரா­ளம் தமி­ழர்­கள்­போ­லவே காணா­ம­லாக்­கப்­பட்ட தனது கண­வ­னுக்கு நீதி­கோ­ரித் தனி ஒரு மனு­சி­யா­கப் போராடி வரு­கி­றார். அதில் அவர் போரா­டு­கின்ற தமிழ் மக்­க­ளி­லும் பார்க்­கச் சிறி­து­ப­டி­யா­வது முன்­னே­றி­யி­ருக்­கி­றார். இளம் பிக்­கு­க­ளின் நாய­க­னா­க­வும், போரின்­போது நாட்­டைக் காப்­பாற்­றிய இரா­ணுவச் சிப்பாய்களின் காவ­ல­னா­க­வும் செயற்­ப­டு­கின்ற ஞான­சா­ர­ரரை விட தமி­ழ­ருக்­கா­கக் குரல்­கொ­டுத்த எக்­ன­லி­கொ­டவோ அவ­ரது மனை­வி­யான சந்­தி­யாவோ சிங்­கள மக்­க­ளால், போற்­றப்­ப­டப்­பா­வ­தில்லை.

‘உன்­னு­டைய கண­வன் ஒரு புலி’ என்று சாடிய ஞான­சா­ர­ருக்கே சிங்­கள சமூ­கத்­தில் அதி­கம் வர­வேற்­புண்டு. எக்­னெ­லி­கொட கம்­கரு மாவத்த பத்­தி­ரி­கையை விற்ற சிங்­க­ள­வ­ரின் நிலை­யில்­தான் இருக்­க­மு­டி­யும். எப்­ப­டி­யி­ருப்­பி­னும் ஞானா­சா­ரர் உண்மைப் பெளத்த சமூகத்தில் பெரும் கறுப்புப் புள்ளியாக ஆகியுள்ளது.

http://newuthayan.com/story/09/ஞானசார-தேரர்-எதிர்-சந்தியா-எக்னலிகொட.html

Link to comment
Share on other sites

சந்தியாவுக்கு அச்சுறுத்தல் விடுத்த சிறிலங்கா அதிபரின் ஆலோசகர்

 

sandiya-egneligoda-300x199.jpgசிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசகராக உள்ள பௌத்த பிக்கு ஒருவரே, தனக்கு எதிராக அச்சுறுத்தல் விடுக்கும் பரப்புரையின் பின்னால் இருப்பதாக, சந்தியா எக்னெலிகொட குற்றம்சாட்டியுள்ளார்.

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியான சந்தியா எக்னெலிகொட, கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பின் போதே இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

“சமூக ஊடகங்களில் எனக்கும், எனது குடும்பத்துக்கும் தொடர்ச்சியாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருகிறது.

இந்த அச்சுறுத்தல்களை அரசாங்கம் கவனித்துக் கொள்ள வேண்டும். எனது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

எனக்கு எதிரான பரப்புரைகளின் பின்னால், சிறிலங்கா அதிபரின் ஆலோசகர் ஒருவரே இருக்கிறார். அவரது முகநூலில் அத்தகைய தாக்குதல்களை பார்வையிட முடியும்.

எனக்கு எதிரான தொடர்ச்சியான அச்சுறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும்.

நான் நாட்டைக் காட்டிக் கொடுப்பதாக குற்றம்சாட்டுகின்றனர். எனது கணவன் ஒரு விடுதலைப் புலி என்கிறார்கள்.

ஆனால் அவருக்கு அவ்வாறான எந்த தொடர்பும் இல்லை என்று எல்லா புலனாய்வு அமைப்புகளும் கண்டறிந்துள்ளன.

பிரகீத் விடுதலைப் புலிகளின் உறுப்பினரோ, அல்லது வேறு எந்த தீவிரவாத அமைப்பின் உறுப்பினரோ அல்ல என்று அவர்கள் நீதிமன்றங்களில் கூறியுள்ளனர்.

பொய்யான பரப்புரைகள் மற்றும் அச்சுறுத்தல்களின் மூலம் பிரகீத் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளை இவர்கள் நிறுத்த முற்படுகின்றனர்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2018/06/27/news/31609

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.