Jump to content

விடுதலைப் புலிகளை அழிக்க உதவிய 5 நாடுகள்- இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- இரா.சம்பந்தன்!!


Recommended Posts

விடுதலைப் புலிகளை அழிக்க உதவிய 5 நாடுகள்-  இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- இரா.சம்பந்தன்!!

 

 

Capture-280-750x430.jpg

 
 
 

இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகைளை 5 நாடுகள் இலங்கை அரசுக்கு உதவி புரிந்தன. அதன் காரணத்தாலேயே இலங்கை அரசு வெற்றி பெற்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

வடக்கு முதலசமைச்சர் இதுவரை ஆற்றிய உரைகளின் தொகுப்பாக நீதியரசர் பேசுகிறார் எனும் நூல் வெளியீடு யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய 5 நாடுகளும்  விடுதலைப் புலிகளை அழிக்க உதவின. இந்த நாடுகள் புலிகளை தடை செய்து, செய்த உதவியினாலேயே இலங்கை வெற்றி பெற சந்தர்ப்பம் கிடைத்தது.

 

விடுதலைப்புலிகளை அழிக்கும் போது, தமிழ் மக்களின் இனப்பிரச்சனையைத் தீர்ப்பதாக பன்னாட்டு  சமூகம் வாக்களித்திருந்தது. ஆனால் இலங்கை அரசு இனப்பிரச்சினை தீர்விற்கு முயற்சிக்கவில்லை. தனது பொறுப்பில் இருந்து பன்னாடு தவற முடியாது.

தமிழ் மக்கள் ஒற்றுமையின் மூலமாக, இந்த நாட்டின் ஆட்சியாளர் யார் என்பதை தீர்மானிக்கும் வல்லமையையுடையவர்கள் என்பதை 2015 ஆம் ஆண்டில் நிரூபித்துள்ளோம். அந்த ஒற்றுமை தொடர வேண்டும். சில பிரச்சனைகள் இருக்கலாம். அதை நாம் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். ஆனால் நாம் ஒற்றுமையாக நிற்க வேண்டும். என்றார்.

http://newuthayan.com/story/13/விடுதலைப்-புலிகளை-அழிக்க-உதவிய-5-நாடுகள்-இலங்கை-அரசின்-வெற்றிக்கு-அதுவே-காரணம்-இரா-சம்பந்தன்.html

Link to comment
Share on other sites

'விடுதலைப் புலிகளின் போராட்டத்தில் நீதியும், நியாயமும் உள்ளது' - சம்மந்தன்

கோப்புப்படம்படத்தின் காப்புரிமைSENA VIANAGAMA Image captionகோப்புப்படம்

"உலகின் வல்லரசு நாடுகள் நடத்திய கூட்டுச் சதியினாலேயே தமிழ் மக்களின் உரிமைக்காக நியாயமானதும், நீதியானதுமான தீவிர ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த விடுதலைப் புலிகளின் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது," என நாட்டின் எதிர் கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தெரிவித்தார்.

இந்தியா, அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம், ஐக்கிய ராஜ்ஜியம், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளே இக்கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக சம்மந்தன் கூறியுள்ளார்.தேசிய இனப் பிரச்சினைக்கான தீர்வினை முன்வைப்பதாக இலங்கை அரசு, அவ்வல்லரசு நாடுகளுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையினாலேயே ஆயுதப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது என்றும் அவர் தகவல் வெளியிட்டார். யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் ஆற்றிய உரையின் தொகுப்பில் உருவாகிய "நீதியரசர் பேசுகிறார்" என்ற நூல் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும், "தமிழீழ விடுதலைப் புலிகள் தமிழ் மக்களுடைய உரிமைகளுக்காக தீவிரமாக ஆயுதப் போராட்டத்தை நடத்தியிருந்தார்கள். அந்த முயற்சியில் அவர்கள் வெற்றிபெறவில்லலை" என்று அவர் குறிப்பிட்டார்.

"தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டத்தில் நீதியும், நியாயமும் உள்ளது. அதை எவரும் மறுக்க முடியாது" என்றார் அவர்.

விடுதலை புலிகள்

"தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை, அவர்களின் உரிமைகள், உரித்துகள் வழங்கப்படவில்லை என்ற அடிப்படையில்தான் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இப்போராட்டத்தை எல்லோரும் ஏற்றுக்கொண்டார்கள். சர்வதேச சமூகம் கூட ஏற்றுக்கொண்டது." "ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவருவதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு உதவி செய்தது. குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம், ஜக்கிய ராஜ்ஜியம், கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவருவதற்கு உதவியது." "இதனால்தான் இந்த நாடுகள் அனைத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்டார்கள். பயங்கரவாத இயக்கமாக சித்தரிக்கப்பட்டார்கள். ""பல விதங்களில் அவர்கள் முடக்கப்பட்டார்கள். இந்த சர்வதேச நாடுகளின் செயற்பாடுகளை கொண்டுதான் இலங்கை அரசாங்கம் அவர்களை தோற்கடித்தது. இதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்," என்று அவர் குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளை அழிப்பதற்கு சர்வதேச சமூகம் இலங்கை அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவை வழங்கியது. இந்த நிலையில்தான் இலங்கை அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு நியாயமான அரசியல் தீர்வினை நாட்டில் ஏற்படுத்துவோம் என்று வாக்குறுதியை கொடுத்திருந்தது என்று அவர் பேசினார். "தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இலங்கை அரசாங்கம் அரசியல் தீர்வு தொடர்பில் பல்வேறு முன்மொழிவுகளை முன்வைத்திருந்தது. ஆனால் அவ்வாறான தீர்வு முன்மொழிவை தருவதற்கு அரசாங்கம் இன்று பின்னிற்கின்றது," என்று சம்மந்தன் கூறியுள்ளார்."இதனை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். இந்த நிலையில்தான் சர்வதேச சமூகத்திற்கு பாரிய கடமை உள்ளது. இலங்கை தமிழ் மக்களுடைய பிரச்சினைக்கு நியாயமான நிரந்தரமான தீர்வினை முன்வைப்பதற்கு உதவுவதே சர்வதேச சமூகத்தின் கடமையாகும்.""தீர்வினை பெற்றுத்தரும் விடயத்தில் இருந்து சர்வதேச சமூகம் தவற முடியாது. அவ்வாறு தவறினால் அவர்களுடைய செயற்பாடு சர்வதேச ரீதியாக அர்த்தமற்றதாக போய்விடும்," என்றார் அவர்.

https://www.bbc.com/tamil/sri-lanka-44594359

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா அடுத்த தேர்தலுக்கான தயாரிப்பு வேலைகளில் ஈடுபடுகிறார் அதாவது வாக்குவிதை போடுகிறார் 

"விடுதலைப் புலிகளை நாம் அழித்தபின்னர் தமிழர்க்கான உரிமைகளைப் பெற்றுத்தருவோம் என ஐந்து நாடுகள் கூறியதால் பதவிக்கனவில் நாம் அவர்களை அழிப்பதற்கு இணங்கிணோம்"

எனத் தலையங்கம் இருந்தால் வரவேற்கத்தக்கது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, நவீனன் said:

விடுதலைப் புலிகளை அழிக்க உதவிய 5 நாடுகள்-  இலங்கை அரசின் வெற்றிக்கு அதுவே காரணம்- இரா.சம்பந்தன்!!

 

 

Capture-280-750x430.jpg

 ஐயா!

தெய்வமே!

இதை ஏன் இப்ப சொல்லுறியள்?

இவ்வளவுகாலம் போனாப்பிறகு  இப்ப.....இனியும் என்ன நடக்கோணும் எண்டு எதிர் பார்க்கிறியள்??????

Link to comment
Share on other sites

“பிளவுபட்டால் அழிவு தான் மிஞ்சும்” – விக்கியின் நூல் வெளியீட்டு விழாவில் சம்பந்தன்

 

cm-book-launch-sampanthan-1-300x200.jpgதமிழ் மக்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஒற்றுமையை முக்கியம் என்றும், பிரிந்து நின்று செயற்பட்டால் அழிவுதான் மிஞ்சும் என்றும் தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்.

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் உரைகள் அடங்கிய ‘நீதியரசர் பேசுகின்றார் ‘  என்ற நூல் வெளியீட்டு விழா, யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில், நேற்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

“2015 அதிபர் தேர்தலுக்குப் பின்னர் நானும், ரணிலும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்தோம். எம்மை மகிந்த ராஜபக்சவுடன் பேசுமாறு அதிபர் கூறினார். நான் பேசினேன்.

எனது தோல்விக்கு காரணம் நீ என்று மகிந்த என்னிடம் கூறினார். அது நானில்லை. எமது மக்கள் தான் காரணம். தமிழ் மக்களின் புறக்கணிக்க முடியாது. தமிழ் மக்களின் ஆதரவைப் பெற்றால் தான் ஆட்சிக்கு வரலாம்.

தமிழ் மக்களின் தேசிய பிரச்சினைக்கு ஒரு நிரந்தர அரசியல் தீர்வு. அந்த விடயத்தை இந்த சந்தர்ப்பத்தில் வலியுறுத்திறுவது மிகப்பொருத்தமானது.

ஒரு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பதாக, அந்த நாட்டில் வாழ்கின்ற வேறுபட்ட மக்கள் மத்தியில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்பட்டு, அந்த தீர்வுகள் ஓர் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டு, நாடு சுதந்திரமடைவதற்கு முன்பதாக அவை நடைபெறும்.

ஆனால், துரதிஸ்டவசமாக சிறிலங்கா யைப் பொறுத்தவரையில் அவ்வாறான ஒரு நிகழ்வு நடைபெறவில்லை. நடைபெற்றிருந்தால், 1948 ஆம் ஆண்டு தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு தீர்வு கிடைத்திருக்கும் .

எமக்கு பூரண சுதந்திரம் வேண்டுமென கேட்டோம். நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் சோல்பரி ஆணைக்குழுவிடம் பிராந்திய ஆட்சியைக் கேட்கவில்லை. சமஸ்டியை கேட்கவில்லை. நாங்கள் 50 ற்கு 50 கேட்டோம்.

ஒரே நாட்டுக்குள், பிராந்திய ரீதியாக எந்த அதிகாரத்தையும் கேட்கவில்லை.  தமிழ்பேசும் மக்கள் மிகவும் பெரும்பான்மையாக வாழ்ந்த பிரதேசங்களில் உள்ள சுதந்திரத்தின் அடிப்படையில், இறையாண்மையின் அடிப்படையில் பிராந்திய சுயாட்சி தேவை என்பதனை கேட்கவில்லை.

பிராந்திய சுயாட்சி கேட்டிருந்தால், இந்தப் பிரச்சினை அப்போது தீர்ந்திருக்கலாம், தீரவில்லை. பிரச்சினை தொடர்கின்றது.

வடக்கு மாகாணத்தில் இன்று குடியேற்றங்கள்  இடம்பெறும் சூழலை அவதானிக்கின்றோம். அவை நிறுத்தப்படவேண்டும். பிராந்திய சுயாட்சியுடன், கணிசமான அதிகாரத்தைப் பெற்றிருந்தால், இவை அனைத்தையும் தவிர்த்திருக்க முடியும்.

இன்றைக்கு உள்ள பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டும். எதிர்நோக்க வேண்டும். நாடு முழுவதும் எல்லா மக்களைப்  பொறுத்தவரையில், எவ்வாறான விதமாக இவற்றினை அடையப் போகின்றோம்.

அனைத்துலக ரீதியாக, தமிழ் மக்கள் என்ற வகையில், குறிப்பாக வடக்கு, கிழக்கில் எவ்வாறு அணுகப் போகின்றோம். என்பதனை தீர்மானிக்க வேண்டியது அவசியம்.

மாகாணங்களும் கூடிய அதிகாரங்களைக் கேட்கின்றார்கள். காணி, சட்டம் மற்றும் ஒழுங்கு அதிகாரம் தமக்குத் தர வேண்டுமென கேட்கின்றார்கள்.

மத்தியின் தலையீடு இருக்க கூடாது, ஆளுனரின் அதிகாரம் இருக்க கூடாது என கேட்கின்றார்கள். ஆளுநர் பதவி வேண்டாமென கேட்டிருக்கின்றார்கள்.

cm-book-launch-sampanthan-1.jpg

cm-book-launch-sampanthan-2.jpgcm-book-launch-sampanthan-3.jpgcm-book-launch-sampanthan-4.jpgcm-book-launch-sampanthan-5.jpgநாங்கள் எவரையும் பகைக்க வேண்டிய அவசியமில்லை. அனைவருடனும் நட்புறவினைப் பேண வேண்டும். நியாயத்தை விளக்க வேண்டும். நீதியை விளக்க வேண்டும்.

ஏனைய நாடுகளில் பல்வேறு கலாசாரங்களுடன் எவ்விதமான ஆட்சி முறையை பின்பற்றுகின்றார்கள் என்பதனை விளக்க வேண்டும்.

எமது நிலைமைகள் தொடர்பாக தென்பகுதி மக்கள் அறிந்து வருகின்றார்கள். தென்பகுதி மக்களை அனைவரும் இனவாதிகள் என கருதக்கூடாது. இனவாதமற்றவர்களும் இருக்கின்றார்கள்.

சிறுபான்மை மக்களை யாரும் நடத்துவதற்கு இடமளிக்க கூடாது. அது அவசியமான தேவை.

இன்று அரசியலமைப்பை, உருவாக்குவதற்கு முயற்சி நடைபெற்றுக் கொண்டு வருகின்றது. அந்த முயற்சியை நடைமுறைப்படுத்தி, நிரந்தர அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியுமானால், அந்த சந்தர்ப்பத்தை இழக்கக் கூடாது.

எமது பங்களிப்பை செய்ய வேண்டும். அடிப்படை உரிமைகளை  விட்டுக்கொடுக்க முடியாது. எமது மக்களுக்கு போதிய பாதுகாப்பு, இறைமை மற்றும் தீர்வை பெற்றுக் கொடுக்கக் கூடிய வழி இருக்குமானால், அந்த சந்தர்ப்பத்தை இழக்க கூடாது. அவற்றை தெளிவாக புரிந்துகொள்ள வேண்டும்.

அனைத்துலகத்துக்கு ஒரு தார்மீக பொறுப்பு உள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகள் தமது மக்களின் விடுதலைக்காக விடுதலைப் போராட்டத்தை நடத்தினார்கள். அந்த போராட்டத்தில் வெற்றி பெறவில்லை.

அந்த முயற்சியில் நீதி இருந்தது. நியாயம் இருந்தது. அதை யாரும் மறுக்க முடியாது. தமிழ் மக்களின் உரிமைகள் வழங்கப்படவில்லை என ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதை அனைத்துலக சமூகமும் ஏற்றுக்கொண்டது.

ஆனால் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராட்டத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வருவதற்கு அனைத்துலக சமூகம் சிறிலங்கா அரசாங்கத்திற்கு உதவி செய்தது.

குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, ஜரோப்பிய ஒன்றியம், பிரித்தானியா , கனடா, அவுஸ்தரேலியா ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு உதவின.

இந்த நாடுகள் அனைத்திலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்டார்கள். பயங்கரவாத இயக்கமாக சித்தரிக்கப்பட்டார்கள். பல விதங்களில் அவர்கள் முடக்கப்பட்டார்கள்.

இந்த அனைத்துலக நாடுகளின் செயற்பாடுகளை கொண்டுதான் சிறிலங்கா அரசாங்கம் அவர்களை தோற்கடித்தது. இதனை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கம் அனைத்துலக  சமூகத்துக்கு ஒரு வாக்குறுதியை கொடுத்தது. நியாயமான அரசியல் தீர்வை ஏற்படுத்துவோம் என வாக்குறுதியளித்திருந்தார்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் செயற்பட்ட காலத்தில் அரசியல் தீர்வு சம்பந்தமாக, சிறிலங்கா  அரசாங்கம் பல்வேறு முன்மொழிவுகளை முன்வைத்தது.

அவ்விதமான தீர்வுக்கு இன்று பின்நிற்கின்றார்கள். இதை அனைத்துலக  சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

தமக்கு  தார்மீக கடமை இருக்கின்றதென்பதனை அனைத்துலக  சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

நீதியான நியாயமான அரசியல் தீர்வை வழங்குவதற்கு அனைத்துலக சமூகத்துக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றதென்பதனை அனைத்துலக  சமூகம் உணர்ந்து கொள்ள வேண்டும். இதிலிருந்து தவற முடியாது.

தவறினால், அவர்களின் செயற்பாடு அனைத்துலக  ரீதியாக அர்த்தமற்றதாக போய்விடும்.

எமது மக்கள், இந்த நாட்டில் ஏற்படும் ஆட்சி முறை எமக்கு உகந்ததல்ல அவை மாற்றி அமைக்க வேண்டுமென கோரியிருந்தார்கள்.

1960 ஆம் ஆண்டு முதல் எம்மீது ஆட்சி முறை திணிக்கப்பட்டது. எமது ஆதரவுடன் ஆட்சி முறை அமைக்கப்படவில்லை.

அனைத்துலக  மனித உரிமைகள் பிரகடனத்தில் புறக்கணிக்கும் செயல். அதுதான் அனைத்துலக  பிரகடனம். இதை மாற்றி அமைப்பதற்கு அனைத்துலக  சமூகம் பங்களிப்புச் செய்ய வேண்டும்.

ஒற்றுமையாக இருக்க வேண்டும். ஒருமித்து நிற்க வேண்டும். ஒரு தூணாக நிற்க வேண்டும். 2015 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலின் பின்னர், பல மாற்றங்களை ஏற்பட்டுள்ளன.

தமிழ் மக்கள் தமது ஒற்றுமையை மூலமாக நாட்டின் ஆட்சி நிர்ணயிக்க கூடியவல்லமை இருக்கின்றது. அந்த நிலைமை தொடர வேண்டும்.

தமிழ் மக்கள் தங்களுக்கான தீர்வை அடைய வேண்டுமாயின் ஒருமித்து செயற்படுவது அவசியம்.

வேறுபட்ட கருத்துக்கள் இருக்கலாம், அவற்றைப் பேசித் தீர்க்க வேண்டும். வேறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், ஒற்றுமையுடன் இருக்க வேண்டும்.

தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு, கருத்து வேறுபாடுகளை களைந்து ஒற்றுமையாக செயற்பட வேண்டும், அதனை விடுத்து பிரிந்து செயற்படுவோமாக இருந்தால் எமது மக்களை நாமே அழிப்பதாக அமையும்.“ என்றும் அவர் தெரிவித்தார்.

http://www.puthinappalakai.net/2018/06/25/news/31549

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த விக்னேஸ்வரனுக்கு அடுத்தமுறையும்  முதல்வராக வாய்ப்பு தரகூடாது என்று  வரிந்து கட்டிக்கொண்டு நிற்கும் சுமந்திரன், மாவையையும் கூட்டி வந்து முன் வரிசையில் உட்காரவைத்து..

அதே விக்னேஸ்வரனின் புத்தகத்தை வெளியிட்டு அங்கே ஒற்றுமையைபற்றி பேசி...

புலிகள்பற்றி பேசி,அவர்கள் போராட்டம்பற்றி பேசி..

ஒருவேளை நாளை கூட்டமைப்பிலிருந்து விக்னேஸ்வரன் வெளியேறினால், தமிழர்களின் ஒற்றுமையையும் ,தியாகத்தையும் மதிக்காதவர் என்பதை காண்பிக்க அவர் கையை கொண்டு அவர் கண்ணையே குத்த  அவரோட எதிரிகள் ஒன்றுகூடி அவர் புத்தகத்தை வெளியிடும் நிகழ்வா இது?

தன் பதவிவாழ, தன் கூட்டத்தவர்வாழ எந்தவித தில்லாலங்கடி சாணக்கிய அரசியலும் செய்ய தயங்காதததில்...

சம்பந்தன்  ஒரு ஈழத்து கருணாநிதி!

Link to comment
Share on other sites

இதெல்லாத்துக்கும் அடிப்படைக் காரணம் இந்தியா. அதை வெளிப்படையாக சொல்லக்கூடிய தைரியம் எங்களின் அரசியல் தலைமைக்கு இல்லை.

இப்போகூட தாங்கள் அனுமதி வழங்கிய வீட்டுத்திட்டத்தை சீனா பொறுப்பெடுத்தது கூட தெரியாது, இந்தியா வருத்தம் தெரிவித்த உடனே வெருள தெரிகிறது. 

நீங்கள் எல்லாம் எங்கள் தலைமை என்பது எங்களின் தலைவிதி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

50  வருடங்களுக்கு மேலாக

எவ்வாறு  இவரால்  இவ்வாறு  அரசியல்  செய்ய  முடிகிறது??

தமிழரின்  தலையில்  மாறி  மாறி அரைக்கமுடிகிறது

அவரது  சாணக்கியமல்ல  இது  தமிழரின்  மறதிக்குணம்

புலிகளின் பெயரை  உச்சரிக்கக்கூட  ஒரு தகுதி வேண்டும்

வாயில  வருகுது  போய்யா..........

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தனை ஏன் எல்லோரும் கடிந்து வசைபாடி சாபம் விடுகிறீர்கள் என்று என்னக்கு புரியவில்லை.

சம்பந்தனால் என்ன செய்ய முடியும்? அதுவும் புலிகள் இல்லாத  நிலையில்.

சம்பந்தன் ஒன்றை சரியாக செய்துள்ளார். அதாவது, இணைப் படுகொலையூடான புலிகளின் அழிவு ஈழத்து  தமிழ் தேசத்தின் போராட்டத்தை நிறுத்தாது, எமது தனித்துவம் சிங்களத்துக்குள் சீரழிவதை ஓர் போதும் எதிர்ப்பின்றி நடத்த முடியாது என்பதை.

இதை முதலமைச்சர் வெளிப்படடையாக, உரத்த குரலில், யாரின் மனம் கோணும் அல்லது கோணாது, ஹிந்தியை உட்பட,  என்பதை கருத்தில் எடுக்காது நிலைப்பாட்டை கூறி வருகிறார்.

சம்பந்தன் நிச்சயமாக கிந்தியாவை மற்றும் மேட்ற்குலகை அனுசரித்தே, தனது நிலைப்பாட்டை அடக்கமாக அவ்வப்போது சொல்லி வருகிறார்.

ஆனால், அண்மைய இரு முன்னெடுப்புகள், கிந்தியா மற்றும் மேட்ற்குலகிற்கு சற்று கடுந்தொனி பாணியில் தீர்வை நோக்கிய அவர்களின் கடப்பாட்டை  நினைவு படுத்துவதாக உள்ளது.

அதில், சீன 40000 வீடுகளை கட்டுவது, கிந்தியவிற்கு ஓர் மறைமுகமான ஆனால் உறைக்கும் படியான நினைவு படுத்துவது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆளாளுக்கு புத்தகமும் சுயசரிதையும் எழுதி முடித்து விடுவார்கள் அதற்குள் பல்லாயிரம் பேர் இருக்க இடமின்றி உண்ண உணவின்றியும் குடிக்க குடிநீர் இன்றியும் இறந்துவிடுவார்கள் tw_unamused:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.