Jump to content

முரண்படும் தமிழ் தலைமைகள்!


Recommended Posts



 
 
×

முரண்படும் தமிழ் தலைமைகள்!

 

 மாகாண சபை தேர்தலை இலக்­கு­வைத்து மாற்று அணி­யொன்றை உரு­வாக்க வட­மா­காண முத­ல­மைச்சர் விக்­கி­னேஸ்­வரன் தலை­மை­யி­லான குழு­வொன்று இர­க­சிய நகர்­வு­களை மேற்­கொண்டு வரு­வ­தாக ஆச்­ச­ரி­யப்­படும் தக­வ­லொன்று கசிந்­துள்ளது. வட,­கி­ழக்கின் அர­சி­யல்­போக்­கு பற்றி அக்­க­றை­கொள்­கின்­ற­வர்கள் கவனம் செலுத்தும் விவ­கா­ரங்­களில் இவ்­வாரம் முக்­கியம் பெற்ற செய்­தி­யாகக் காணப்­ப­டுகின்றது.

வடக்கு முத­ல­மைச்சர் இவ்­வா­றா­­ன­தொரு முயற்­சியில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ரு­க்கின்றாரா? இல்­லையா? இச்­செய்­தியில் உண்­மை­யுள்­ளதா? இல்­லையா என­்ப­து­ பற்­றி­ க­ரி­ச­னை­கொண்டு பார்ப்­ப­தை­விட இன்­றைய சூழ்­நி­லையில் மாற்­றுத்­த­லை­மை­யொன்று அவ­சி­ய­மா­ என்­ப­து­பற்றி தமிழ் மக்­க­ளு­டைய கருத்­துக்கள் எவ்­வாறு இருக்­க­மு­டி­யு­மென கவனம் செலுத்­த­வேண்­டி­யுள்­ளது. 

வடக்கு மாகாண சபை தேர்தல் நடை­பெற்ற காலம் தொடக்கம் அதன் தலைமை வேட்­பா­ள­ராக தமிழ் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்­பினால் விக்­கி­னேஸ்­வரன் நிறுத்­தப்­பட்ட காலந்­தொ­டக்கம் மாற்றுத் தலை­மை­ பற்­றியும் கூட்­ட­மைப்பு பதி­வு­ பற்­றியும் மாற்­றுக்­கட்­சி­யொன்றை உரு­வாக்கும் கருத்­தோட்­டங்­களும் தொடர்ந்து முன்­வைக்­கப்­பட்டு வரு­வது நாளாந்தம் பேசப்­ப­டு­கின்ற விட­யங்­க­ளா­கவே இருந்து வரு­கின்றன. மேற்­படி கருத்­துக்­களும் அபிப்­பி­ரா­யங்­களும் வடக்கு மாகா­ணத்தை மையப்­ப­டுத்தி முதன்­மைப்­ப­டுத்தும் விடயங்­க­ளா­கவும் பேசப்­படும் கருத்­தோட்­டங்­க­ளா­கவும் இருந்து வந்­துள்­ளன என்­பது பொது­வா­க­ உண்­மை­யா­கவும் இருந்து வரு­கின்றது. 

மாற்­றுத்­த­லைமை, மாற்­றுக்­கட்­சி­யென்று பேசப்­பட்ட அல்­லது பேசப்­ப­டு­கின்ற விட­யங்­க­ளெல்லாம் வடக்கு,கிழக்கு எனும் தமிழர் தாய­கத்தின் அடிப்­படை இலட்­சி­யத்­தையும் தாயக கோட்­பாட்­டையும் மறந்­து­போ­ன­ நி­லையில் பேசப்­ப­டு­கின்ற விட­ய­ங்களாகும்.இதற்கு அப்பால் கிழக்கு மக்­களை புறந்­தள்ளி அவர்­களை இன்­னொரு மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யுடன் நோக்­கு­கின்ற சில அர­சியல் தலை­வர்­களின் ஓரத்­த­ன­மான சிந்தையி­லி­ருந்து உதித்­துக்­கொண்­ட­ வ­டக்­குத்­ தத்­து­வ­மா­க­வே­யி­ருந்து வரு­கின்ற­தென்­பது கிழக்கு மக்­களின் கவ­லை­யாகும்.

மாற்றுக் கட்சி அல்­லது மாற்­றுத்­த­லை­மை­யென்னும் சிந்­தனை அண்­மைக்­கா­ல­மாக உரு­வா­கிக்­கொண்­ட­தற்­கு­ரிய நதி­மூ­லங்­களும் கார­ணங்­க­ளு­மென்ன என்­பது பற்றி சாதா­ரண குடி­ம­கனும் தெரிந்து கொண்­டி­ருக்­கின்ற சில­வுண்­மைகள் அறி­யப்­ப­டாத சிதம்­பர இரக­சி­ய­மல்ல.

மாற்று அணி­ பற்­றிய சிந்­த­னைக்கு வித்­திட்ட கார­ணங்கள் பல­வாக இருந்­தாலும் முள்­ளி­வாய்க்­கால் ­போ­ரைத் ­தொ­டர்ந்து இந்த சிந்­தனை வெடிப்­ப­தற்கு கார­ண­மாக இருந்­தவை பொதுத் தேர்தலும் மாகாண சபைத் ­தேர்த­லு­மாகும். 2004 ஆம் ஆண்டு விடு­த­லைப்­ பு­லி­களின் ஆசிர்­வா­தத்­துடன் தமிழ்த் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்டு பல கட்­சி­களின் கூட்­டாக தேர்தலில் கள­மி­றங்­கிய கார­ணத்­தினால் தமிழ்த் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்பு வட­,கி­ழக்கில் பெருந்­தொ­கை­யான ஆச­னங்­களை கைப்­பற்­றக்­கூ­டிய வலிமை கொண்­ட­தா­கவும் செல்­வாக்கு கொண்­ட­தா­கவும் காணப்­பட்­டது.

இச்­செல்­வாக்கின் பின்­ன­ணியில் யார் இருந்­தார்­க­ளென்­பதும் கூட்­ட­மைப்பின் கூட்டு கட்­சி­களின் ஒற்­று­மைக்கு யார் கார­ண­கர்த்­தாக்­க­ளாக இருந்­தார்கள் என்­பதும் அறி­யப்­பட்ட விடயம்.

2010 ஆம் ஆண்­டுக்­குப்பின் ஏற்­பட்ட அர­சியல் சிக்­கல்கள் கார­ண­மாக பொதுத் தேர்த­லைத் ­தொ­டர்ந்து தமிழ் காங்­கி­ரஸை பிர­நி­தித்­து­வப்­ப­டுத்­திய கஜேந்­தி­ர­குமார் பொன்­னம்­பலமும் அவரின் சக­பா­டி­களும் கூட்­ட­மைப்­பி­லி­ருந்து தூரச்­சென்­ற­தன் ­கா­ர­ண­மாக தமி­ழ­ர­சுக்­கட்­சிக்கும் காங்­கி­ர­ஸுக்­கு­மி­டையே ஆரம்­ப­கா­லத்­தி­லி­ருந்த விரி­சல்­போக்கு மீண்டும் பற்­றத்­தொ­டங்­கி­யது. 2010 ஆண்டில் இடம்­பெற்ற இரு­தேர்தல்­க­ளிலும் இந்த முரண்­பாடு வெளிப்­ப­டை­யா­கவே தோன்ற ஆரம்­பி­த்தது. இந்த விரிசல் பொதுத் தேர்தலை மையப்­ப­டுத்தி உடைந்­தது என்­ப­தற்கு அப்பால் யுத்த முடி­வுக்­குப்பின் தமிழ்த் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்பு தமிழ்த் ­தே­சி­யத்தின் போக்­கி­லி­ருந்து தடம் மாறிச்­செல்­கின்ற­தென்ற விமர்­ச­னங்­களும் தோற்­றப்­பா­டு­களுமே முன்­வைக்­கப்­பட்­டன.

தமிழ்த் தேசி­யக்­ கூட்­ட­மைப்பின் ஆரம்ப கூட்­ட­ணி­யாக இருந்த தமிழர் விடு­த­லைக்­ கூட்­டணி 1972 ஆம் ஆண்டு ஆரம்­பிக்­கப்­பட்­ட­போது தமி­ழர்­ வி­டு­த­லைக்­ கூட்­ட­ணிக்குள் தமி­ழ­ர­சுக்­கட்­சியும் தமிழ்க் ­காங்­கி­ரஸும் பிர­தான கட்­சி­க­ளாக விளங்­கின.2001 ஆம் ஆண்டில் தமிழர் விடு­த­லைக்­ கூட்­டணி,தமி­ழீ­ழ­ வி­டு­தலை இயக்கம், ஈழ­மக்கள் புரட்­சி­கர விடு­தலை முன்­னணி என்­ப­வற்­றுடன் இணைந்து உத­ய­சூ­ரியன் சின்­னத்தில் போட்­டி­யிட்டு 15 ஆச­னங்­களை பெற்­றுக்­கொண்­டது.

இந்த தேர்தலின்பின் தமிழ்த் ­தே­சி­யக்­ கூட்­ட­மைப்பு உரு­வா­கி­யது.கூட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­ட­போது தமிழர் விடு­த­லைக்­ கூட்­டணி,ஈ.பி.ஆர்.எல். எப்.,ரெலோ,புௌாட் ஆகிய கட்­சிகள் இணைந்து கொண்­டன.தற்­போது கூட்­ட­மைப்­புக்குள் உள்­ள­டங்கும் கட்­சிகள் மூன்­று ­மட்­டு­மே­யென்­பது வர­லாற்று­ மு­றையில் அறிந்­து­கொள்­ளக்­கூ­டிய விடயம்.

ஏலவே குறிப்­பிட்­ட­துபோல் யுத்­தத்­துக்­குப்பின் கூட்­ட­மைப்பை பதிவு செய்து கொள்­ள­வேண்டும் என்ற அழுத்­தங்கள், அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண சபை தேர்தல் ,அந்த தேர்தலுக்­காக முத­லமைச்சர் வேட்­பா­ள­ராக நீதி­ய­ரசர் விக்­கி­னேஸ்­வரன் நிறுத்­தப்­பட்­டமை, 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்பின் தேசி­யப்­ ப­ட்­டியல் விவ­காரம், தமிழ் மக்கள் பேரவை உதயம் என்ற ஏகப்பட்ட விவ­வ­காரங்கள் மாற்றுத் தலைமை, மாற்று அணி­யென்ற கருத்­தியல் உரு­வாக கார­ணங்­க­ளா­கி­யி­ருக்­கலாம் என ஊகிக்க இட­முண்டு.இது தவிர வட­மா­காண சபை மற்றும் கிழக்கு மாகா­ண­ சபை இயக்கம் தொடர்பில் ஏற்­பட்ட அதி­ருப்­திகள் கூட்­ட­மைப்­புக்கு எதி­ரான மாற்­றுக்­க­ருத்­துக்கள் உரு­வாக கார­ண­மாக இருக்­கலாம்.

2015 ஆம் ஆண்டு நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்தல்,பொதுத்­தேர்தல் என்­ப­வற்றின் பின்­ன­ணியில் ஏற்­பட்ட மாற்­றங்கள் அந்த மாற்­றங்கள் கார­ண­மாக தமிழ்த் தேசியம் .தேசிய அர­சாங்­கத்­துடன் உடன்­பட்­டுப்­போன போக்­கு­களை ஏற்­றுக்­கொள்­ளாத முரண் அபிப்­பி­ரா­யங்கள் மாற்று கருத்­துக்­க­ளுக்கும் அதி­ருப்­தி­க­ளுக்கும் கார­ணங்­க­ளாக இருந்­துள்­ளன என்ற அபிப்­பி­ரா­யமும் நில­வி­யி­ருந்­தமை தவிர்க்­க­மு­டி­யாதது. 2015 ஆம் ஆண்டு பொதுத்­தேர்தல் நடை­பெற்­றபோது கிழக்கின் கூட்­ட­மைப்பு வெற்­றியில் வடக்கு முத­ல­மைச்சர் ஆர்வம் காட்­ட­வில்லை. குறிப்­பிட்டு சொல்­வ­தானால் தலைவர் இரா.சம்­பந்­தனின் தேர்தல் பிர­சா­ரத்­தில்­கூட கலந்­து­கொள்ளும் ஆர்வம் கொண்­ட­வ­ராக வடக்கு முத­ல­மைச்சர் காணப்­ப­ட­வில்லை.

இலங்­கையின் சுதந்­தி­ரத்­துக்­குப்­பின்­னுள்ள ஒவ்­வொரு சந்­தர்ப்­பங்­க­ளிலும் வட­,கி­ழக்கு தலை­மை­களில் இரு­மு­னைப்­பண்­புகள் இருந்து வந்­துள்­ள­தென்­ப­தற்கு இலங்கை தமி­ழ­ர­சுக் ­கட்சி, அகில இலங்கை தமிழ் காங்­கிரஸ் என்ற இரு­வே­று­பட்ட போக்­கு­டைய கட்­சிகள் அதன் ஆளு­மைகள் என்­ப­தற்கு அப்பால் தேசி­யக் ­கட்­சி­களின் ஊடு­ரு­வல்­களும் சின்ன சின்ன அளவில் இருந்து வந்­துள்­ள­தென்­பதை வரலாறு மறந்­து­வி­ட­வில்லை.

ஆயு­தப்­ போ­ராட்ட காலத்தில் இந்த முனைப்­புக்கள் ஈழம் என்ற இலக்கு நோக்­கிய பல தலை­மைப் ­போ­ராட்­டங்­க­ளாக வளர்ந்­தி­ருந்­தன. அப்­போ­ராட்­டங்கள் ஈழ இலக்கு ,தாயக மண்­போ­ராட்டம் என்­ப­தற்கு மேலாக தனித்­தன்­மை­யான ஆளு­மை­களை சுற்­றி­ பின்­னப்­பட்­ட­வை­யா­கவே இருந்­துள்­ளன. இதிலும் நாம் ஒரு­தி­சை­நோக்­கிய பய­ணத்­துக்கு ஆயத்தம் செய்­ய­வில்லை.

இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் வடக்கு முத­ல­மைச்சர் மாற்று அணி­யொன்றை உரு­வாக்க இர­க­சிய முன்­னெ­டுப்­புக்­களை மேற்­கொண்டு வரு­கின்றார் என்ற செய்தி கசிந்­துள்­ளது. இந்த செய்தி வட,­கி­ழக்­கைப் ­பொ­றுத்­த­வரை ஒரு அதிர்ச்­சி­கொண்ட செய்தியென்­ப­தற்கு மாற்­றுக்­க­ருத்து இருக்­க­மு­டி­யாது.

இத்­த­கைய முனைப்­புக்­களை தமிழ் மக்கள் எவ்­வாறு எதிர்கொள்­ளப்­போ­கின்றார்கள் என்ற தர்க்­க ­ரீ­தி­யான விவாதம் இன்­றைய நிலையில் கவ­ன­மாக ஆரா­யப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாகும். மாற்று அணி­யொன்றோ அல்­லது மாற்று தலைமை­யொன்றோ உரு­வாக்­கப்­ப­டு­மானால் அது வட­,கி­ழக்கில் எத்­த­கைய தாக்­கங்­களை விளை­விக்கும் என்­ப­து­ பற்றி அறிவு பூர்­வ­மாக சிந்­திக்க முயற்­சிக்­க­வேண்டும். வடக்கு நிலை­மை­க­ளைப் ­பொ­று­த்­த­வரை இராமன் ஆண்­டா­லென்ன இரா­வணன் ஆண்­டா­லென்ன என்­ப­தற்கு விடை­கா­ண­வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

ஆனால் கிழக்­கைப் ­பொ­று­த்­த­வரை அது பார­தூ­ர­மான விளை­வு­களை உண்­டாக்கும் என்­பது சிந்­திக்­கப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாகும்.மாற்­றுக்­கட்­சி­யொன்றை கை நீட்டி வர­வேற்கும் மனோ­நி­லை­யிலோ அல்­லது ஆர்­வத்­து­டனோ கிழக்கு மக்கள் இல்ை­லை­யென்­பதை மாற்றுஅணி­ வி­ரும்­பிகள் தெரிந்­து­கொள்­ள­வேண்டும். சில சந்­தர்ப்­பங்­களில் சில குழுக்கள் சுயம்­புத்­தன்­மை­கொண்­ட­தாக ஆங்­காங்கே உரு­வா­கி­யுள்­ள­போதும் அவை காத்­தி­ர­மான செல்­வாக்கை செலுத்­தி­ய­தாக தெரி­ய­வில்லை.

கடந்த மூன்று தசாப்த கால யுத்தம் மற்றும் போருக்­குப்­ பின்­ன­ரான அர­சியல்,பொரு­ளா­தார, சமூக மாற்­றங்கள் ஆகி­யவை கார­ண­மாக கிழக்கு மக்கள் சொல்­லொணா துன்­பங்­களை அனு­ப­வித்­துக்­கொண்­டி­ருக்­கின்றார்கள்என்­பது உண்மை.

வேலை­யில்­லாப்­பி­ரச்­சினை, காணி இழப்­புக்கள், யுத்த வித­வைகள், வாழ்­வா­தார கொடு­மைகள், திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்கள்,கலா­சார சீர­ழி­வுகள், முன்னாள் போரா­ளி­களின் வாழ்வா­தா­ரப் ­போ­ராட்­டங்கள்,சமூக இடைஞ்­சல்கள்,இன­வி­ரி­சல்கள் என கன­தி­யான பிரச்­சி­னை­க­ளினால் உருக்­கு­லைந்­து­போ­யி­ருக்கும் சமூ­க­மாக கிழக்கு சமூகம் காணப்­ப­டு­கின்ற நிலையில் புதிய அணி,மாற்று தலை­மை­யென்­பதை எண்­ணிப்­பார்க்கும் நிலையில் சமூக­மில்­லை­யென்­பதே யதார்த்தம்.

வேலை­யில்­லாப்­ பி­ரச்­ச­ினை­க­ளுக்கு இன்று கிழக்கில் சொந்தக்கார­ராக காணப்­ப­டு­கின்ற­வர்கள் தமிழ் இளை­ஞர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்றார்கள்.மாகாண சபை ஆட்­சி­மு­றை­மையினால் அதிகம் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தமிழ் இளை­ஞர்கள் என்ற ஆழ­மான பதி­வு­க­ளி­லி­ருந்து மீட்­டெ­டுக்­க­மு­டி­யாத நிலையே காணப்­ப­டு­கின்றது. கடந்த நான்கு தசாப்த காலத்­துக்­குமுன் 80 வீத­மான வேலை வாய்ப்­புக்­களை பெற்­றுக்­கொண்ட தம்மால் தற்­பொ­ழுது 15 வீத­மான வேலை­வாய்ப்­புக்­க­ளைக்­கூட பெற­மு­டி­ய­வில்­லை­யென்ற அதி­ருப்­திகள் கிழக்கு இளை­ஞர்கள் மத்­தியில் வேரூன்­றிக்­கொண்­டுள்­ளன.

நில இழப்­புக்கள் தொடர்பில் கிழக்கில் பாரிய விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்கள், நிலப்­ப­றிப்­புக்கள், இராணுவ குடி­யேற்­றங்கள், படை­முகாம் விஸ்­த­ரிப்­புக்கள் என்ற கோதாவில் நிலங்­களை இழந்­த­வர்கள், பறி­கொ­டுத்­த­வர்கள் அத­ிக­மாக காணப்­ப­டு­கின்றார்கள். இது ஒரு­பு­ற­மி­ருக்க உல்­லா­சப்­ப­ய­ணத்­துறை, கைத்­தொழில் பேட்டை என்ற சூழ்ச்­சிக்­கு கீழ் நில அப­க­ரிப்­புக்கள், இது தவிர வன­ப­ரி­பா­லனம் தொல்­பொ­ருள்­ தேடல் என்ற சூட்­சு­மத்­துடன் அப­க­ரிப்­புக்கள், விகாரை விஸ்­த­ரிப்­புக்கள் என ஏகப்­பட்ட தந்­தி­ரோ­பா­யங்­களை பயன்­ப­டுத்தி மேற்­கொள்­ளப்­பட்டு வரும் நில இழப்­புக்களால் கிழக்கு மக்கள் பூர்வீ­க­மான வாழ்வு முறை­களை பறி­கொ­டுத்து நிற்­கின்றார்கள்.

இவை­யெல்­லா­வற்­றையும் விட கொடு­மை­யான விடயம் முன்­னாள்­ போ­ரா­ளி­களின் வாழ்­வா­தா­ரமும் யுத்­த­வி­த­வை­களின் வாழ்­வியல் பரி­த­விப்­புக்­க­ளு­மாகும். தாய்­மண்­ போ­ராட்­டத்­துக்கு அதிக விலை­கொ­டுத்­த­வர்கள் கிழக்கு இளை­ஞர்கள். இன்று கிழக்கில் யுத்த கெடு­தி­யினால் அவ­யவங்­களை இழந்­த­வர்கள், குடும்­பங்­களை தொலைத்­த­வர்கள், உடல் ஊன­முற்­ற­வர்கள் என ஆயி­ரக்­க­ணக்­கான முன்னாள் போரா­ளிகள் தமது வாழ்­வா­தா­ரத்­துக்­காக தினந்­தோறும் போரா­டிக்­கொண்­டி­ருக்கும் கொடுமை கிழக்கில் பாரிய பிரச்­ச­ினை­யாக விஸ்வரூபம் எடுத்­துக்­கா­ணப்­ப­டு­கின்றது.

இவர்­க­ளை அர­சாங்கம் மறு­வாழ்வு என்ற போர்­வையில் விடு­தலை செய்­தி­ருக்­கின்றதே தவிர இவர்­களின் வாழ்­வி­ய­லுக்கு உத்­த­ர­வாதம் அளிக்கும் சின்ன அள­வி­லான பரி­கா­ரங்­க­ளைக்­கூட காண­வில்லை.வழிப்­ப­டுத்­தப்­ப­ட­வு­மில்லை. ஊன­முற்­ற­வர்கள் எவ்­வி­த­மான தொழி­லையும் புரி­ய­மு­டி­யா­த­வர்­க­ளாக காணப்­ப­டு­வ­துடன் சமூகத்தில் மீண்டும் நல்­ல­தொ­ரு­வாழ்வை தேட­மு­டி­யா­த­வர்­க­ளா­கவே காணப்­ப­டு­கின்றார்கள்.இதே­போன்­ற­தொரு நிலைதான் யுத்த வித­வை­க­ளுக்கும் காணப்­ப­டு­கின்றது.

கிழக்கின் அர­சியல் போக்­கு அண்­மைக்­கா­ல­மாக ஆபத்­தான நிலை­நோக்கி நகர்ந்து கொண்­டி­ருக்­கின்ற­தென்­பதை தேர்தல் முடி­வு­க­ளி­லி­ருந்தே அறி­யக்­கூ­டி­ய­ த­க­வல்­க­ளா­கும்.தேசி­யக் ­கட்­சி­க­ளுக்குள் சோரம் போகும் நிலை­மை­யொ­ரு­பு­ற­மி­ருக்க அக்­க­ட்­சி­களை கை நீட்­டி­ வ­ர­வேற்கும் ஆர்வம் நாளுக்கு நாள் வளர்ந்­து­ கொண்­டே­யி­ருக்­கின்றது. இதற்கு கார­ணங்கள் இல்­லா­ம­லில்லை.அர­சியல் வாதி­களின் போக்கில் அதி­ருப்தி ஏற்­பட்­டதன் மறு­த­லிப்பே இதற்கு கார­ண­மாகும். இதை கார­ணங்­க­ளாக வைத்­துக்­கொண்டு கூட்­ட­மைப்பை பல­வீ­னப்­ப­டுத்­தி­வி­ட­வேண்­டு­மென்ற யுக்­தி­க­ளோடு இயங்­கி­வரும் குழுக்கள் கிழக்கில் அதி­க­ரித்து வரும் ஒரு கெடு­தி­யான போக்கு ஆழ­மாக ஊடு­ரு­வி­வரும் நிலையில் தமிழ் மக்­களின் ஒற்­றுமை மற்றும் கூட்டு உணர்­வுகள் கரைந்­து­வரும் போக்கு வளர்ந்­து­கொண்­டே­யி­ருக்­கின்றது.

2006 ஆம் ஆண்டு திட்­ட­மிட்ட முறையில் வடகிழக்கு பிரிக்­கப்­பட்­டதும் அதன் தொடர்ச்­சி­யாக கிழக்கு மாகாண சபை தேர்தல் நடத்­தப்­பட்­டமை கிழக்­கின்பால் கொண்ட கரி­ச­னை­யினால் அல்ல. வடக்கு,கிழக்கு இணைந்து விடக்­கூ­டாது என்ற ஊடு தன்­மை­யான சூழ்ச்­சியே அதற்கு பிர­தான கார­ண­மாக அமைந்­தி­ருந்­தது.

கிழக்கு மாகாண சபையின் தேர்தல் 2008 ஆம் ஆண்டு முதல்­முதல் நடத்­தப்­பட்­ட­தன்பின் மாகா­ண­ ச­பையில் பேசப்­பட்ட விட­யங்­களில் பிர­தான பங்கு வகித்த விட­யங்கள் பிர­தேசவாத­மாகும்.குறிப்­பாக வடக்­குடன் கிழக்கு இணைக்­கப்­ப­டக்­ கூ­டாது,வடக்கின் கட்­சிகள் கிழக்கில் செல்­வாக்கு செலுத்­து­வதை அனு­ம­திக்­க­ மு­டி­யா­தென்ற பச்­சைத்­த­ன­மான பிர­தேச வாதம் பேசி­ய­வர்கள் இன்றும் உள்­ளனர். இவர்­களின் பின்­ன­ணியில் ஒரு­புறம் அர­சாங்­கமும் மறு­புறம் பிள்­ளையான்,கருணா போன்­ற­வர்­களின் செல்­வாக்கும் பதிந்­தி­ருந்­த­தாக சுட்­டிக்­காட்­டப்­பட்ட சந்­தர்ப்­பங்­க­ளு­முண்டு. இந்த வாதமே இன்று விஸ்­வ­ரூ­ப­மாகி வடக்கு, கிழக்கு இணைக்­கப்­ப­டக்­கூ­டாது என்ற பிர­தேச தெறிப்பை வலுப்­ப­டுத்­தி­யுள்­ளது.இவ்­வா­றா­ன­தொரு சூழ்­நி­லையில் மாற்று அணி­யொன்றை உரு­வாக்­கு­வதன் மூலமோ அல்­லது மாற்று தலை­மை­யொன்றை விரும்­பு­வதோ எத்­த­கைய ஆபத்­துக்­களை விளை­விக்கும் என்­பதை தமிழ் தலை­மைகள் தூர­நோக்­கு­டனும் தீர்க்க தரி­ச­னத்­து­டனும் சிந்­தித்து செயல்­ப­ட­வேண்­டிய காலத்தின் கட்­டா­யத்தில் நாமி­ருக்­கின்றோம்.

சுதந்­தி­ரத்­துக்­குப்பின் பூகோ­ள ­ரீ­தி­யா­க­வும் ­சரி அர­சியல் ரீதி­யா­க­வும்­ சரி வட­, கி­ழக்கு இணைந்து செயற்­படும் மார்க்­கங்கள் மிக குறை­வா­கவே காணப்­பட்­டன. இதைக்­க­ருத்தில் கொண்­ட­தன்­கா­ர­ண­மா­கவே தீர்க்கதரி­ச­ன­மாக தந்தை செல்­வ­நாயகம் சிந்­தித்­ததன் காரண­மா­கவே வடக்கு, கிழக்கு மக்­களை ஒரு­கு­டை­யின்கீழ் கொண்­டு­வ­ரக்­கூ­டிய கட்­சி­யாக தமி­ழ­ர­சுக்­ கட்சி உரு­வாக்­கப்­பட்­டது. அந்­த­ வ­ர­லாற்­றுக்­ க­ட­மையை மிக பக்­கு­வ­மாக தந்­தை­ செய்­தி­ருந்­தார். இதற்கு அளப்­ப­ரிய பங்­காற்­றி­ய­வர்­க­ளாக மூத்த அர­சி­யல்­வா­தி­க­ளான செ.இரா­ச­துரை, ராஜ­வ­ரோ­தயம் ஏகாம்­பரம் போன்­றோரின் அர்ப்­ப­ணிப்பின் நிமித்தம் கிழக்கு தமி­ழர்கள் தேசிய கட்­சி­க­ளு­டன்­ சங்­க­மிக்­காமல் காப்­பாற்­றப்­பட்­ட­துடன் தனித்­துவம் கரை­யா­மலும் வாழ­ வ­ழி­ச­மைக்­கப்­பட்­டது. இது நடை­பெற்­றி­ருக்­கா­விட்டால் கிழக்கின் வரலா­று வேறு திசை­நோக்கி கொண்டு செல்­லப்­பட்­டி­ருக்கும் என்­பது ஒரு கசப்­பா­ன­வுண்­மையே.

கிழக்கு மக்­க­ளைப் ­பொ­றுத்­த­வரை எந்­த­வொரு தரப்­புக்கும் சோரம் போன­வர்க­ளாக காணப்­ப­டா­ததன் கார­ண­மா­கவே இன்றும் தமிழ் மக்­களின் அர­சியல் போக்­குக்­களில் நேர்மைத்­தன்­மையும் சத்­தி­யமும் இருந்து வரு­கின்றது.வடக்கை மையப்­ப­டுத்தி மாற்று அணி­யொன்று உரு­வாக்­கப்­ப­டு­மா­க­வி­ருந்தால் அது கிழக்கின் மீது கடந்த காலங்­க­ளைப்போல் ஆளுமை செலுத்­தக்­கூ­டிய நிலை­யொன்று உரு­வாக முடி­யுமா என்­பதை ஆழ­­மாக தமிழ்த் தலை­மைகள் சிந்­திக்­க­வேண்டும். வடக்கு,கிழக்கை ஒன்றுபடவிடாமல் தென்னக தலைமைகள் செய்யும் சூழ்ச் சிக்கு பலியாகிவிடக்கூடாது என்பதே தமிழ் மக்களின் இன்றைய அவசரமான வேண்டுகோளாகவும் எதிர்பார்ப்பாகவும் காணப்படுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடந்த காலத்தில் கவனத்துடனும் தீர்க்கத்தன்மையுடனும் இயங்காததன் பக்கவிளைவுகளே இன்றைய இந்த தெறிப்புக்கு காரணம் என்று கூறப்பட்டாலும் அவை பேசி தீர்க்கப்பட முடியாத ஒரு மூடு மந்திரமல்ல.பொதுவிமர்சனமும் சுயவிமர்சனமும் செய்யப்பட்டு திருத்தப்படவேண்டிய பல செயல்முறைகள் உள்ளன. அனைத்து தரப்பினரும் ஒருமேசைக்கு வரவேண்டும், பேசி தீர்வு காணவேண்டும் என்ற எதிர்பார்ப்பின் எல்லையில் தமிழ் மக்கள் காத்துக்கொண்டிருக்கின்றார்களென்பதை அனைத்து தரப்பினரும் தீவிரமாக சிந்தித்து முடிவுக்கு வரவேண்டும்.

அனைத்தும் தேர்தலை மையப்படுத்தி நகரும் போக்குக்கு விடைகொடுத்து இன்னும் கூறுவதானால் தூக்கி யெறிந்துவிட்டு தமிழ் மக்களின் எதிர்கால நிர்ணயம்பற்றி சிந்தித்து செயல்படுபவர்களாக மாறவேண்டும்.தமிழ் தலைமைகளும் சரி புத்திஜீவிக ளாயினும் சரி ஒன்றுபட்ட ஒரு தலைமையின் கீழ் அணிசேர வேண்டிய அவசியம் மட்டுமின்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்துவதன் மூலமே எதிர்காலத்தை சரிசெய்ய முடியும் என்ற கருத்துள்ளது. ஆனால், அத்தகைய நிலை ஏற்படுவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையும் விட்டுக் கொடுப்புக்களை மேற்கொள்ள வேண்டும். தான்தோன்றித்தனமாக இனியும் செயற்பட்டால் மாற்றுத் தலைமை என்பது தவிர்க்க முடியாததாகி விடும்.

இன்று வடக்கு,கிழக்கு மக்கள் திரிசங்கு சொர்க்கத்தின் நிலைக்கே கொண்டு வரப்பட்டுள்ளார்கள் என்பதேயுண்மை.இதையும் நம்பமுடியாமல் அதையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் யாருக்குப் பின்னால் செல்வது என்ற தடுமாற்ற நிலை கொண்டவர்களாகவே காணப்படு கின்றார்கள்.

2015 ஆண்டு தேசிய அரசாங்கத்துக்கு ஆதரவு நல்கியபோது 70 வருட கால போராட்டத்துக்கு விடிவு கிடைக்கும், மைத்திரி–ரணில் கூட்டின்மூலம் தேசியப்பிரச்சினைக்கு தீர்வு கிட்டும் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டவர்களாக காணப்பட்டது ஒருபுறமும் இறுதி யுத்தத்தில் ஏற்பட்ட அபத்தங்களுக்கு பரிகாரமும் கிடைக்கும் என்ற கனவுகள் இன்று குலைந்து போன நிலையில் இலவுகாத்த கிளியின் கதையாகவே தமிழ் மக்களின் எதிர்பார் ப்புக்கள். மழுங்கிய ஒரு காலக்கட்டத்தில் முரண்பாடுகளை தவிர்ப்பது நல்லது.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-06-23#page-3

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அப்போ  நான் எப்படியும்  தப்பிவிடுவேன் லிஸ்டில் நம்மடை  (Chanel, Dior) சரக்கு இல்லை   வரும் 24 அன்று இலங்கைக்கு 2 மாத விஜயம் யாழ்கள உறவுகள் நின்றால் சந்திக்கலாம் 
    • வணக்கம் வாத்தியார்......! ஆண் : மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ பெண் : சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே ஆண் : முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி பெண் : மோகம் கொண்ட மன்மதனும் பூக்கணைகள் போடவே காயம் பட்ட காளை நெஞ்சும் காமன் கணை மூடுதே ஆண் : மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ பெண் : இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே சுகமான புது ராகம் இனி கேட்கத்தான்…. ஆண் : இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள் மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மெத்தை போடுங்கள் பெண் : சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள் சந்தனத்தை தான் துடைத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள் ஆண் : பூஞ்சரத்தில் ஊஞ்சல் கட்டி லாலி லல்லி கூறுங்கள் நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள் பெண் : பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள் சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள் பெண் : சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணுமே இதமாக சுகம் காண துணை வேண்டாமோ ஓஓ .......! --- மீனம்மா மீனம்மா ---
    • ஆஹா....அற்புதம்......அற்புதம்......!  😂
    • பாகவலி நாட்டினிலே .....அநியாயம் இந்த ஆட்சியிலே இது அநியாயம்........!   😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.