Jump to content

அமெரிக்காவின் வெளிநடப்பும் பாதிக்கப்பட்டோருக்கான நீதியும்


Recommended Posts



 
 

அமெரிக்காவின் வெளிநடப்பும் பாதிக்கப்பட்டோருக்கான நீதியும்

 

ரொபட் அன்­டனி

ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமைகள் பேர­வையின் உறுப்­பு­ரி­மை­யி­லி­ருந்து வில­கிக்­கொள்­வ­தாக அமெ­ரிக்கா உத்­தி­யோ­கப்­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளமை பல்­வேறு தரப்­பினர் மத்­தியில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றது. குறிப்­பாக யுத்­த­கா­லத்தில் பாதிக்­கப்­பட்டு தற்­போது நீதியை எதிர்­பார்த்­தி­ருக்­கின்ற மக்கள் மத்­தியில் ஒரு­வி­த­மான ஏமாற்­றத்தை அமெ­ரிக்­காவின் இந்த அறி­விப்பு ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்றது என்று கூறலாம்.

ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமைகள் பேரவை மீது கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­து­விட்டே அமெ­ரிக்கா மனித உரிமைகள் பேர­வை­யி­லி­ருந்து வில­கு­வ­தாக அறி­வித்­தி­ருக்­கின்றது. ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமைகள் பேரவை அர­சியல் பக்­கச்­சார்­பு­டைய சாக்­க­டை­கு­ழி­யா­கி­யுள்­ள­தாக அமெ­ரிக்கா குற்­றம்­சாட்­டி­யி­ருக்­கின்றது. வெளி­வேசம் கொண்ட சேவை அமைப்­பான இந்த ஐக்­கி­ய­ நா­டுகள் மனித உரிமைகள் ­பே­ரவை மனித உரிமை­களை பரி­கா­சத்­திற்கு உள்­ளாக்­கி­யுள்­ள­தாக ஐக்­கி­ய­ நா­டுகள் சபைக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் நிக்­கி­ஹேலி தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இந்­நி­லையில் ஐக்­கி­ய­ நா­டுகள் சபையின் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ குட்டரஸ் , ஐக்­கிய நா­டுகள் மனித உரிமைகள் ஆணை­யாளர் செயிட் அல் ஹுசைன் ஆகியோர் அமெ­ரிக்­காவின் இந்த வெளி­ந­டப்பு தொடர்பில் கவலை தெரி­வித்­தி­ருக்­கின்­றனர். இதே­வேளை ஐ.நா. மனித உரிமைகள் பேர­வை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கி­யுள்­ள­மை­யா­னது உல­க­ளா­விய மனித உரிமைகள் துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்பில் கண்­கா­ணித்து அது­தொ­டர்பில் வெளிப்­ப­டுத்தும் முயற்­சி­க­ளுக்கு பாதிப்பு ஏற்­ப­டுத்­தி­யுள்­ள­தாக சர்­வ­தேச மனித உரிமைகள் செயற்­பாட்­டா­ளர்கள் தெரி­வித்­துள்­ளனர்.

இந்த நிலையில் அமெ­ரிக்கா உள்­ளிட்ட ஐந்து நாடு­க­ளினால் கொண்­டு­வ­ரப்­பட்டு நிறை­வேற்­றப்­பட்ட இலங்கை தொடர்­பான பிரே­ர­ணையின் ஊடாக அதனை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு கட்­டுப்­பட்­டுள்ள இலங்­கை­ வி­ட­யத்தில் என்ன நடக்கும்? இலங்­கையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இத­னூ­டாக நீதி கிடைக்­குமா போன்ற பல்­வேறு கேள்­விகள் தற்­போது எழுந்­தி­ருக்­கின்­றன.

2017ஆம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் அமெ­ரிக்க ஜனா­தி­பதி என்ற ரீதியில் தனது கட­மை­களை பொறுப்­பேற்ற பின்னர் நடை­பெற்ற 34 ஆவது ஐக்­கி­ய ­நா­டுகள் மனித உரிமைகள் ­பே­ர­வைக்­ கூட்டத் தொடரில் கலந்­து­கொண்ட அமெ­ரிக்கப் பிர­தி­நிதி அந்த சபை­மீது கடும் விமர்­ச­னங்­களை முன்­வைத்­தி­ருந்தார். ஆனால் மனித உரிமைகள் பேர­வை­யி­லி­ருந்து விலகும் அள­வுக்கு எந்­த­வி­த­மான கருத்­தையும் அவர் அன்று வெளி­யிட்­டி­ருக்­க­வில்லை. எனினும் தற்­போது ஒரு­வ­ருட காலத்தின் பின்னர் மனித உரிமைகள் பேர­வை­யி­லி­ருந்து வில­கு­வ­தாக அமெ­ரிக்கா அறி­வித்­துள்­ளது. அமெ­ரிக்­காவின் இந்த அறி­விப்­பா­னது உல­க­ நா­டுகள் மத்­தி­யிலும் சர்­வ­தேச மனித உரிமைகள் அமைப்புகள் மத்­தி­யிலும் பாரிய ஆச்­ச­ரி­யத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­தாலும் அமெ­ரிக்கா அந்த முடிவை எடுத்­து­விட்­டது.

இதன்­பின்னர் இருக்­கின்ற அழுத்­தங்­களைக் கொண்டு நீதியைப் பெற்­றுக்­கொள்­வ­தற்கு முயற்­சிப்­பதே அவ­சி­ய­மா­கின்­றது. குறிப்­பாக அமெ­ரிக்கா மனித உரிமைகள் பேர­வை­யி­லி­ருந்து வில­கி­ய­துடன் அர­சாங்­கத்தின் தரப்பில் வெளி­யி­டப்­பட்­டி­ருக்கும் கருத்­துக்­களைப் பார்க்­கும்­போது நீதி தொடர்பில் நிச்­ச­ய­மற்ற தன்மை ஏற்­ப­டு­கின்­றது. அமெ­ரிக்கா ஐ.நா. மனித உரிமைகள் பேர­வை­யி­லி­ருந்து வில­கி­யுள்­ளமை இலங்­கைக்கு சாத­க­மான நிலை­மை­களை ஏற்­ப­டுத்த வாய்ப்­புள்­ள­தாக அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் ராஜித சேனாரத்ன கூறி­யுள்ளார்.

 இலங்­கை தொடர்­பாக அமெ­ரிக்­கா இரண்டு பிரே­ர­ணை­களை ஜெனி­வாவில் கொண்­டு­வந்­தது. பல­மிக்க நாடுகள் இவ்­வா­றான பிரே­ர­ணை­களை கொண்­டு­வந்­த­போது நாங்கள் பல அழுத்­தங்­க­ளுக்கு முகம் கொடுக்­க­வேண்டி ஏற்­பட்­டது. எனினும் அமெ­ரிக்கா மனித உரிமைகள் பேர­வை­யி­லி­ருந்து விலக தீர்­மா­னித்ததால் அத­னூ­டாக எங்­க­ளுக்கு இருந்­து­வந்த அழுத்­தங்கள் குறை­வ­டையும். அந்த நன்மை எங்­க­ளுக்கு இருக்­கின்றது. எப்­ப­டி­யி­ருப்­பினும் சர்­வ­தேச சாச­னத்தில் நாங்கள் கைச்­சாத்­திட்டு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும் என்றும் அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்தார்.

இந்த நிலையில் அமெ­ரிக்­காவின் வெளி­ந­டப்பை இலங்கை அர­சாங்கம் சாத­க­மா­கவே பார்ப்­பதை காண­மு­டி­கின்­றது. இத­னூ­டாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்­குமா என்ற நிச்­ச­ய­மற்றத் தன்மை ஏற்­ப­டு­வதை தவிர்க்க முடி­யா­துள்­ளது. அமெ­ரிக்கா, பிரித்தானியா உள்­ளிட்ட ஐந்து நாடு­களே 2012ஆம் ஆண்டு, 2013 மற்றும் 2014 ஆம் ஆண்­டு­களில் இலங்கை தொடர்­பான மூன்று பிரே­ர­ணை­களை கொண்­டு­வந்­தன. அன்று பத­வி­யி­லி­ருந்த அர­சாங்கம் அந்தப் பிரே­ர­ணை­களை முற்­றாக எதிர்த்­த­போதும் அமெ­ரிக்கா உள்­ளிட்ட இந்த நாடுகள் பிரே­ர­ணை­களை நிறை­வேற்­றின. தொடர்ந்து 2015ஆம் ஆண்டும் இலங்­கையில் ஆட்சி மாற்றம் ஏற்­பட்ட பின்னர் அமெ­ரிக்கா உள்­ளிட்ட ஐந்து நாடுகள் இலங்கை தொடர்­பாக மற்­று­மொரு பிரே­ர­ணையை கொண்­டு­வந்­தன. அந்தப் பிரே­ரணை இலங்­கையின் அனு­ச­ர­ணை­யுடன் வாக்­கெ­டுப்­பின்றி ஏக­ம­ன­தாக நிறை­வேற்­றப்­பட்­டது. அதன்­பின்னர் அமெ­ரிக்கா உள்­ளிட்­ட ­மேற்கு நாடுகள் இந்தப் பிரே­ர­ணையை இலங்கை அர­சாங்கம் அமுல்­ப­டுத்தி அத­னூ­டாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை வழங்­க­வேண்­டு­மென வலி­யு­றுத்தி வந்­தன. அர­சாங்­கமும் குறிப்­பி­டத்­தக்க அளவில் இந்­தப்­பொ­றுப்­புக்­கூ­ற­லுக்­கான முயற்­சி­களை முன்­னெ­டுத்­தது. இது­வரை கடந்த மூன்­றரை வரு­டங்­க­ளாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கான நட­வ­டிக்­கைகள் முழு­மை­யாக எடுக்­கப்­ப­டா­வி­டினும் ஒரு­சில நட­வ­டிக்­கைகள் நல்­லாட்சி அர­சாங்­கத்­தினால் எடுக்­கப்­பட்­டன. குறிப்­பாக காணிகள் விடு­விப்பு, காணா­மல்­போனோர் அலு­வ­லகம் நிய­மிப்பு, நட்­ட­ஈடு வழங்­கு­வ­தற்­கான அலு­வ­ல­கத்­துக்­கான வரைவு தயா­ரித்தல் போன்ற சில ஆரோக்­கி­ய­மான விட­யங்­க­ளையும் குறிப்­பி­டலாம். ஐரோப்­பிய நாடு­களைப் பொறுத்­த­வ­ரையில் இலங்கை மீது கடந்த காலம் முழு­வதும் ஐ.நா. பிரே­ர­ணையை முழு­மை­யாக அமுல்­ப­டுத்­து­மாறு அழுத்தம் பிர­யோ­கித்து வந்­தன. அமெ­ரிக்கா இதற்கு தலை­மை­தாங்­கி­யி­ருந்­தமை ஒரு முக்­கிய கார­ண­மாக இருந்­தது. ஆனால் தற்­போது அமெ­ரிக்கா மனித உரிமைகள் பேர­வை­யி­லி­ருந்து வில­கி­யுள்­ள­மை­யினால் ஐரோப்­பிய நாடுகள் பழைய அழுத்­தங்­களை அதே­போன்று பிர­யோ­கிக்­குமா என்­பது கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது. அத்­துடன் சர்­வ­தேச நிலை­மை­களும் எவ்­வா­றான போக்கை சென்­ற­டையும் என்­பது கேள்­விக்­கு­றி­யா­கின்றது. இந்த நிலையில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்­குமா என்­பதே பாரிய கேள்­விக்­கு­றி­யாக மாறு­கின்றது. இலங்­கையைப் பொறுத்­த­வ­ரையில் பாதிக்­கப்­பட்ட மக்கள் தமக்­கான நீதி விட­யத்தில் சர்­வ­தேச சமூ­கத்தின் மீது பாரிய நம்­பிக்கை வைத்­தி­ருக்­கின்­றனர். குறிப்­பாக பொறுப்­புக்­கூறல் பொறி­மு­றை­கூட சர்­வ­தே­சத்தின் பங்­க­ளிப்­பு­டன்தான் இடம்­பெ­ற­வேண்­டு­மென பாதிக்­கப்­பட்ட மக்கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். ஆனால் தற்­போது அமெ­ரிக்­காவின் இந்த நிலைப்­பா­டா­னது பாதிக்­கப்­பட்ட மக்கள் மத்­தியில் ஒரு­வி­த­மான சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றது. அதா­வது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி­வ­ழங்கும் விட­யத்தில் இது­வ­ரை­கா­லமும் சர்­வ­தே­சத்­தினால் பிர­யோ­கிக்­கப்­பட்டு வந்த அழுத்தம் குறைந்­து­வி­டுமா என்­பது பாதிக்­கப்­பட்ட மக்­களின் சந்­தே­க­மாக இருக்­கின்­றது.

இது­தொ­டர்பில் தேசிய சமா­தான பேர­வையின் நிறை­வேற்று பணிப்­பாளர் கலா­நிதி ஜெகான் பெரேரா குறிப்­பி­டு­கையில், அமெ­ரிக்கா மனித உரிமைகள்­ பே­ர­வை­யி­லி­ருந்து வில­கி­விட்­டது என்­ப­தற்­காக சர்­வ­தேச அழுத்­தங்கள் குறையும் என்று நாம் எதிர்­பார்க்க முடி­யாது. அமெ­ரிக்கா வில­கி­னாலும் ஐரோப்­பிய நாடுகள் இலங்கை நீதியை நிலை­நாட்­ட­வேண்­டு­மென்று தொடர்ந்து அழுத்தம் பிர­யோ­கிக்கும் என்­பதில் சந்­தே­க­மில்லை.

ஐரோப்­பிய நாடு­களும் மிகவும் பலம்­பொ­ருந்­தி­யதா­கவே உள்­ளன. குறிப்­பாக பொரு­ளா­தார ரீதியில் ஐரோப்­பிய நாடுகள் பாரிய பலம்­பொ­ருந்­திய நிலையில் உள்­ளன. எனவே பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்டும் என்­பது தொடர்பில் ஐரோப்­பிய நாடு­களின் அழுத்தம் தொடரும் என்று நாம் எதிர்­பார்ப்போம். கடந்த மூன்று வரு­டங்­க­ளாக சர்­வ­தேச சமூகம் அழுத்­தத்தைப் பிர­யோ­கிக்­க­வில்லை. மாறாக இலங்கை நீதியை நிலை­நாட்­ட­வேண்­டு­மென வலி­யு­றுத்­தல்­க­ளையே முன்­னெ­டுத்து வந்­தன. எனவே அந்த வலி­யு­றுத்­த­லுடன் கூடிய அழுத்தம் தொடரும் என்­பதை நாம் எதிர்­பார்க்­கலாம் என்றார். கலா­நிதி ஜெகான் பெரேரா கூறு­வதைப் போன்று அமெ­ரிக்­காவின் வெளி­ந­டப்பின் பின்னர் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் அழுத்தம் குறைந்­தாலும் முன்­னை­ய­தைப்­போன்று வலு­வாக இருக்­குமா என்­பது கேள்­விக்­கு­றி­யாக உள்­ளது. எப்­ப­டி­யி­ருப்­பினும் இலங்கை அர­சாங்கம் வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். சர்­வ­தேச சமூ­கத்­துக்­காக இலங்கை வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முன்­வ­ராமல் தனது பிர­ஜை­களின் நலன்­க­ருதி இந்த வாக்­கு­று­தி­களை நிறை­வேற்ற முன்­வ­ர­ வேண்டும். அர­சாங்கம் என்ற ரீதியில் தனது பிர­ஜை­களின் ஒரு ­ப­கு­தி­யினர் கவ­லை­யு­டனும் விரக்­தி­யு­டனும் இருப்­பதை பார்த்­துக்­கொண்டு வெறு­மனே இருக்க முடி­யாது. மாறாக அவர்­க­ளுக்­கான நீதியை பெற்­றுக்­கொ­டுக்க நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும். அர­சாங்கம் இந்த விட­யத்தில் அச­மந்­தப்­போக்­குடன் செயற்­ப­டு­வது சர்­வ­தே­சத்­துடன் முரண்­ப­டு­கின்­றதோ இல்­லையோ தனது நாட்டு மக்கள் மத்­தியில் நம்­பிக்­கை­யி­ழக்கும் நிலைமை ஏற்­படும். எனவே இது­தொ­டர்பில் அர­சாங்கம் சிந்­தித்து செயற்­ப­ட­வேண்டும்.

இதே­வேளை தமிழ் தேசி­யக் ­கூட்­ட­மைப்பின் பேச்­சாளர் சுமந்­திரன் அமெ­ரிக்­காவின் இந்த விலகல் தொடர்பில் இவ்­வாறு கருத்து வெளி­யிட்­டி­ருக்­கின்றார். அதா­வது ஐக்­கி­ய­ நா­டு­கள்­ ம­னி­த­ உரிமைகள் ­பே­ர­வை­யில்­ இ­ருந்­து­ அ­மெ­ரிக்கா வெளி­யே­றி­ய­தா­க­ கூ­றி­ய­போ­தி­லும் ­உ­றுப்­பு ­நா­டு­க­ளு­டன்­ இ­ணைந்­து­ த­ம­து­ ந­ட­வ­டிக்­கை­க­ளை­ கை­யாள்­வ­தா­க ­கூ­றி­யுள்­ளது. ஆகவே அதனை ஆரோக்­கி­ய­மா­ன ­வி­ட­ய­மா­க­வே ­க­ரு­த­வேண்டும். இலங்கை விட­யங்­க­ளில்­ அ­வர்­க­ளி ன்­ ந­கர்­வு­கள் ­தொ­டர்ச்­சி­யா­க­ இ­ருக்­கும்­ எ­ன­வும்­ தெ­ரி­வித்­துள்­ளனர். இந்­நி­லையில் அர­சாங்­கம்­ கூ­றி­யுள்­ள­தை­ப்போ­ல­ அ­மெ­ரிக்­கா­ வெ­ளி­யே­று­வ­தால்­ இ­லங்­கை­ அ­ர­சாங்­கத்­தை­ பா­து­காக்­கும்­ அல்­ல­து­ இ­லங்­கை­ அ­ர­சாங்­கம்­ தப்­பித்­துக்­கொள்­ளும் ­வாய்ப்­பு­கள்­ அ­மை­யப்­போ­வ­தில்லை.

இலங்­கைக்கு சாத­க­மா­க­ இ­தில்­ எ­து­வும்­அ­மை­யாது. இலங்கை கொடுத்­த­ வாக்­கு­று­தி­க­ளை­ நி­றை­வேற்­ற­ வேண்­டி­ய­ பொ­றுப்­பு­ அ­ர­சாங்­கத்­துக்கு ­உள்­ளது. மனித உரிமைகள்­­பே­ர­வை­யில்­ அ­வர்­கள் ­வாக்­கு­று ­தி­க­ளை­ வ­ழங்­கி­யுள்­ளனர். அமெ­ரிக்கா முன்­னெ­டுத்­த­ ப­ணி­யை­ அ­வர்­க­ளின்­ பின்­னர்­ பி­ரித்­தா­னி­யா­

அல்­ல­து­ ஐ­ரோப்­பி­ய­ ஒன்­றி­ய­ நா­டு­கள்­ கை­யில்­ எ­டுக்­க­வேண்டும். அது குறித்­து­ நாம் ­எ­ம­து­ கா­ர­ணி­க­ளை முன்­வைப்போம். மனித உரிமை­கள் பே­ர­வை­யில் ­ப­லம்­பொ­ருந்­தி­ய­ மற்­றொ­ரு­ நா­டு­ இ­லங்­கை­ த­மி­ழர்­ வி­ட­யங்­க­ளை­ க­ருத்­தில் ­கொண்­டு­ ம­னி­த­ உரிமைகள் ­பே­ர­வை­யில் அ­ழுத்­தம் ­கொ­டுக்­கும் ­பொ­றுப்­பை ­ எ­டுக்­க­வேண்டும் என்று குறிப்பிட் டிருக் கின்றார்.

அந்த வகையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையிலும் இன்னும் சர்வதேச சமூகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளமையை அவதானிக்க முடிகின்றது. அதாவது அமெரிக்கா விலகினாலும் பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இலங்கை விடயத்தில் அழுத்தத்தை பிரயோகிக்கும் வகையில் செயற்படும் என நம்புவதாக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகமும் இலங்கையானது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்யும் என்று தெரிவித் திருக் கின்றது.

எது எப்படியி ருப்பினும் தமக்கு இதுவரை காலமும் நீதி கிடைக்க வில்லை என்று ஏக்கத்துடன் இருக்கின்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்காவின் இந்த வெளிநடப்பு நிச்சயம் மகிழ்ச்சியை தரப்போவதில்லை என்பது மட்டும் உண்மையாகும். ஆனாலும் இங்கு இரண்டு விடயங்களை கருத்தில்கொள்ளவேண்டும். தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் இந்தப் பிரச்சினையில் அக்கறை கொண்டுள்ள தரப்பினர் கூறும் வகையில் இந்த விடயத்தில் ஐரோப்பிய நாடுகளுக்கு பாரிய பொறுப்பிருக்கின்றது. அதனை அவர்கள் புறக்கணித்து செயற்பட முடியாது. எனவே நீதி விடயத்தில் அவர்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் இருப்பார்கள் என நம்புகின்றோம்.

அதேபோன்று இலங்கை அர சாங்கத்துக்கும் தனது பிரஜைக ளுக்காக வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறை வேற்றவேண்டிய பொறுப்பு இருக்கின்றது. அதைப் புறக்கணித்து அரசாங்கம் செயற்பட முடியாது. எப்படியிருப்பினும் பாதிக்கப்பட்ட மக்கள் நீதிக்காக தொடர்ந்து விரக்தியுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அந்த மக்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டியது அதிகாரத்தில் இருக்கின்ற அனைவரதும் பொறுப்பாகுபொறுப்பாக

http://www.virakesari.lk

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.