Jump to content

அமெ­ரிக்­காவின் வில­கலும் இலங்­கையின் நிலைப்­பாடும்


Recommended Posts

அமெ­ரிக்­காவின் வில­கலும் இலங்­கையின் நிலைப்­பாடும்

 

ஐ.நா. மனித உரிமை பேர­வை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கி­யுள்­ளமை இலங்­கையின் மனித உரிமை விவ­கா­ரத்­திலும் பொறுப்­புக்­கூறல் விட­யத்­திலும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும் என்று எதிர்­வு­கூ­றப்­பட்­டுள்­ளது. மனித உரிமை பேர­வையின் அங்­கத்­து­வத்­தி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கிக்­கொண்­ட­தாக பேர­வைக்­கான அமெ­ரிக்கத் தூதுவர் நிக்­கி­ஹேலி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்ளார்.

ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழு­வா­னது அர­சியல் பக்­கச்­சார்­பு­டைய சாக்­க­டைக்­கு­ழி­யாக உள்­ள­தா­கவும் அவர் குற்­றம்­சாட்­டி­யுள்ளார். இஸ்ரேல் விவ­கா­ரத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு அமெ­ரிக்கா இந்த முடி­வினை எடுத்­துள்­ள­தா­கவே தெரி­கின்­றது. அமெ­ரிக்­காவின் இந்த முடி­வு ­தொ­டர்பில் சர்­வ­தேச ரீதியில் பெரும் விமர்­ச­னங்கள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றன.

இந்த நிலையில் இலங்கை விவ­கா­ரத்தில் அமெ­ரிக்­காவின் இந்த முடிவு எத்­த­கைய தாக்­கத்தை செலுத்தும் என்ற கேள்வி தற்­போது எழுந்­தி­ருக்­கின்­றது. ஐ.நா. மனித உரிமை பேர­வை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வெளி­யே­றி­யமை இலங்­கைக்கு நன்மை பயக்கும் என்றும் இதன்­மூலம் இலங்­கை­ மீ­தான சர்­வ­தேச அழுத்­தங்கள் பெரு­ம­ளவு குறை­வ­டையும் எனவும் அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான ராஜித சேனா­ரத்ன சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்றார்.

அமைச்­ச­ரவை முடி­வு­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாடு நேற்று முன்­தினம் தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­ற­போது ஊட­க­வி­ய­லாளர் எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே அமைச்சர் இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

இலங்­கையில் மனித உரி­மைகள் மீறப்­ப­டு­வ­தாக தெரி­வித்து ஐ.நா. மனித உரிமை பேர­வையின் இரண்டு பிரே­ர­ணை­களை அமெ­ரிக்கா கொண்­டு­வந்­தி­ருந்­தது. அதில் முத­லா­வது பிரே­ர­ணையின் போது பேர­வை­யா­னது எங்­க­ளுக்கு ஆத­ரவு அளித்­தது என்­றாலும் நாங்கள் வாக்­கு­று­தி­ய­ளித்­ததன் பிர­காரம் செயற்­ப­டா­மை­யினால் இரண்­டா­வது பிரே­ர­ணையும் கொண்­டு­வ­ரப்­பட்­டது. பலம்­மிக்க நாடுகள் இவ்­வா­றான பிரே­ர­ணை­களை கொண்­டு­வந்­த­போது நாங்கள் பாரிய அழுத்­தங்­க­ளுக்கு முகம்­கொ­டுக்­க­வேண்­டிய நிலை ஏற்­பட்­டது. அதனால் பலம்­மிக்க நாடான அமெ­ரிக்கா வில­கு­வது எமக்­கான அழுத்­தங்கள் பாரிய அளவில் குறை­வ­தற்கு வழியை ஏற்­ப­டுத்தும் என்றும் அமைச்சர் ராஜி­த­ சே­னா­ரத்ன கருத்து தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இறுதி யுத்­தத்­தின்­போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் விசா­ரணை நடத்­தப்­பட்டு நீதி வழங்­க­வேண்­டி­யதன் அவ­சியம் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்­தப்­பட்­டு­ வ­ரு­கின்­றது. யுத்தம் முடி­வ­டைந்து மூன்­று­வ­ரு­டங்கள் கடந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு பொறுப்­புக்­கூ­றலை வலி­யு­றுத்தி ஐ.நா. மனித உரிமை பேர­வையில் அமெ­ரிக்­கா­வினால் முத­லா­வது தீர்­மானம் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இந்தத் தீர்­மா­னத்தை உரிய வகையில் நடை­மு­றைப்­ப­டுத்த அன்­றைய இலங்கை அர­சாங்கம் தவ­றி­ய­தை­ய­டுத்து 2013ஆம் ஆண்டு, 2014ஆம் ஆண்­டு­க­ளிலும் தீர்­மா­னங்கள் அமெ­ரிக்­காவின் ஆத­ர­வுடன் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருந்­தன.

இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணையின் அவ­சியம் குறித்து இந்த பிரே­ர­ணை­களில் முன்­மொ­ழி­யப்­பட்­டிருந்­தன. ஆனாலும் அன்­றைய அர­சாங்­க­மா­னது அத்­த­கைய விசா­ர­ணையை நடத்­து­வ­தற்கு உள்­நாட்டில் இட­ம­ளிக்­க­வில்லை. இதன்­கா­ர­ண­மாக சர்­வ­தே­சத்தின் பெரும் அழுத்­தங்­க­ளுக்கும் அர­சாங்கம் முகம்­கொ­டுத்து வந்­தது.

இந்த நிலையில் 2015ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­ற­தை­ய­டுத்து பொறுப்­புக்­கூறும் விட­யத்தில் செயற்­பாட்டை மேற்­கொள்­வ­தற்கு ஆறு­ மா­த­கால அவ­காசம் மனித உரிமை பேர­வை­யினால் அர­சாங்­கத்­திற்கு வழங்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து அந்த வருடம் செப்­டெம்பர் மாதம் ஐ.நா. மனித உரிமை பேர­வையின் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய உள்­ளக விசா­ர­ணையை வலி­யு­றுத்தி தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது. இந்தப் பிரே­ர­ணைக்கு அமெ­ரிக்­காவும் இலங்­கையும் இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தன. 30/1 என்ற இந்த தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டி­யதன் அவ­சியம் வலி­யு­றுத்­தப்­பட்­டது.

கடந்த வருடம் இந்த பிரே­ர­ணை­யினை அமுல்­ப­டுத்­து­வ­தற்கு அர­சாங்­கத்­திற்கு இரண்­டு­வ­ருட கால அவ­கா­சமும் வழங்­கப்­பட்­டது. இதற்கும் அமெ­ரிக்­கா­வா­னது இணை அனு­ச­ரணை வழங்­கி­யி­ருந்­தது. ஐ.நா. மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் இலங்­கையின் மனித உரிமை விவ­கா­ரங்கள் தொடர்பில் அமெ­ரிக்­கா­வா­னது தொடர்ச்­சி­யான அக்­கறை செலுத்­தி­ வந்­தி­ருந்­தது.

இன்­னமும் இலங்கை தொடர்­பான தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­ப­டாத நிலையில் அமெ­ரிக்­கா­வா­னது ஐ.நா.மனித உரிமை பேர­வை­யி­லி­ருந்து தற்­போது வில­கி­யி­ருக்­கி­றது. சர்­வ­தேச அழுத்­தங்கள் தொடர்ந்தும் இருந்து வரு­கின்­ற­போ­திலும் சர்­வ­தேச நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய உள்­ளக விசா­ர­ணைக்­கான பொறி­மு­றை­யைக்­கூட இன்­னமும் அர­சாங்கம் நிறு­வ­வில்லை. சர்­வ­தேச நீதி­ப­தி­களை கொண்ட விசா­ரணை என்­பது சாத்­தி­ய­மற்­றது என்ற நிலைப்­பாட்­டி­லேயே அர­சாங்கம் இருந்து வரு­கின்­றது.

யுத்­தத்தில் பேரி­ழப்­புக்­களை சந்­தித்த தமிழ் மக்கள் தமக்கு நடந்த அநீ­தி­க­ளுக்கு ஐ.நா. சபை மூல­மா­வது நீதி­கி­டைக்கும் என்று நம்­பிக்கை கொண்­டி­ருந்த போதிலும் அந்த நம்­பிக்­கை­யா­னது தற்­போது மிகவும் குறை­வ­டைந்­தி­ருக்­கின்­றது. ஏனெனில் ஐ.நா. மனித உரிமை பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­க­ளைக்­கூட அர­சாங்கம் நிறை­வேற்­று­வ­தாக இல்லை. கடந்த மார்ச் மாதம் இடம்­பெற்ற பேர­வையின் அமர்வில் கூட ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் அல் ஹூசைன் இவ்­வி­டயம் குறித்து கடும் அதி­ருப்­தியை தெரி­வித்­தி­ருந்தார். இலங்கை விவ­கா­ரத்தில் மாற்­றுப்­பொ­றி­மு­றையை கையா­ள­வேண்டும் என்றும் அவர் சர்­வ­தே­சத்­திடம் அறை­கூவல் விடுத்­தி­ருந்தார்.

உண்­மை­யி­லேயே இலங்கை விவ­கா­ரத்தில் ஐ.நா. மிகப்­பெ­ரிய தவ­றி­ழைத்­த­மையை தற்­போ­தைய அதன் செய­லாளர் நாயகம் அன்­டோ­னியோ குட்­டரஸ் ஏற்­றுக்­கொண்­டுள்ளார். முன்னாள் செய­லாளர் நாயகம் பான் கீ மூனும் இதனை தெரி­வித்­தி­ருந்தார். நோர்­வேயில் நடை­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில் இலங்கை விவ­காரம் தொடர்பில் கேள்வி எழுப்­பப்­பட்­ட­போது இலங்கை விட­யத்தில் ஐ.நா. தவ­றி­ழைத்­து­விட்­டது. இந்த தவ­று­களை ஆராய்ந்து எங்­க­ளது அணு­கு­மு­றை­களை நாம் மாற்­றி­வ­ரு­கின்றோம். இலங்கை விட­யத்தில் தவ­றி­ழைத்­த­மை­யினால் நாம் எமது நிர்­வாக செயற்­பா­டு­க­ளிலும் நட­வ­டிக்­கை­க­ளிலும் மாற்­றங்­களை கொண்­டு­வந்­துள்ளோம் என்று செய­லாளர் தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

இலங்­கையின் பொறுப்­புக்­கூறல் உறு­தி­ப்ப­டுத்தும் பொறி­முறை மூலங்கள் இனங்­கா­ணப்­பட்டு குற்­றச்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் தண்­டிக்­கப்­ப­ட­வேண்டும் என்­பதில் நாம் தெளி­வாக உள்ளோம் என்றும் அவர் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார்.

பொறுப்­புக்­கூ­ற­லுக்­கான தமது பொறி­மு­றை­களில் தவறு இருப்­ப­தனை ஐ.நா. செய­லா­ளரே ஏற்­றுக்­கொண்­டுள்ள நிலையில் இலங்கை விவ­கா­ரத்தில் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி கிடைக்­குமா என்ற சந்­தேகம் தற்­போது மேலெ­ழுந்­தி­ருக்­கின்­றது. இந்த நிலை­யில்தான் இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணை­களை முன்­வைத்து வந்த அமெ­ரிக்­காவும் பேர­வை­யி­லி­ருந்து வில­கி­யி­ருக்­கின்­றது. மனித உரிமை பேரவை அர­சியல் பக்­கச்­சார்­பு­டைய சாக்­க­டைக்­கு­ழி­யாக செயற்­ப­டு­வ­தா­கவும் அமெ­ரிக்கா குற்­றம்­சாட்­டி­யி­ருக்­கின்­றது.

பேர­வை­யி­லி­ருந்து அமெ­ரிக்கா வில­கி­னாலும் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்கள் தொடர்­பாக கொடுத்த வாக்­கு­று­தி­களை காப்­பாற்­று­வ­தற்கு இலங்­கைக்கு அமெ­ரிக்கா முழு­மை­யான ஒத்­து­ழைப்பை வழங்கும். அனைத்து இலங்­கை­யர்­க­ளுக்கும் நல்­லி­ணக்கம் மற்றும் நிலை­யான அமை­தியை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கு அனைத்­து­லக சமூ­கத்­திற்கு அளித்த வாக்­கு­று­தி­களை தொடர்ந்து காப்­பாற்­று­வ­தற்கு இலங்கை அரசாங்கத்திற்கு நாம் தொடர்ந்தும் எமது ஆதரவை வழங்குவோம் என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கேசாப் உறுதியும் அளித்திருக்கின்றார்.

இந்த நிலையில் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகியமை இலங்கைக்கான அழுத்தங்களை குறைக்கும் என்ற நிலைப்­பாட்டிலேயே அரசாங்கம் உள்ளமை தெளிவாகியிருக்கின்றது. ஏற்கனவே ஐ.நா. மனித உரிமை பேரவையின் தீர்மானங்களை நிறை­­­­­­­­வேற்றும் விடயத்தில் இழுத்தடிப்புக்களை மேற்கொண்டுவந்த அரசாங்கமானது எதிர்காலத்தில் இந்த விடயத்தில் அக்கறை செலுத்தாது விடும் நிலையே தற்போது உருவாகியிருப்பதாகவே தெரிகின்றது.

எனவே பொறுப்புக்கூறும் விடயத்தில் அரசாங்கமானது அக்கறை செலுத்தும் வகையில் அமெரிக்கா தொடர்ச்சியான அழுத்தங்களை கொடுக்கவேண்டியது இன்றியமையாததாகும். ஐ.நா. மனித உரிமை பேரவையின் செயற்பாடுகளை அரசாங்கமானது தொடர்ந்தும் உதாசீனம் செய்தால் ஐ.நா. மீதான தமிழ் மக்களின் நம்பிக்கை இல்லாதுபோய்விடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-06-22#page-6

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.