Jump to content

வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயல்


Recommended Posts

வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் செயல்

 

ஜன­நா­ய­கத்தை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்கு அல்­லது அதற்கு உயிர்ப்­பிப்­ப­தற்கு பல்­லின மக்­களின் உரி­மைகள் மதிக்­கப்­பட வேண்­டி­யதும், அவர்­க­ளுக்­கான உரி­மை­களைப் பகிர்ந்­த­ளிப்­பதும் அடிப்­ப­டையில் அவ­சியம். அவ்­வாறு உரி­மைகள் மதிக்­கப்­ப­டா­விட்டால், அந்த உரி­மைகள் பகிர்ந்­த­ளிக்­கப்­ப­டா­விட்டால், ஜன­நா­யகம் உறு­திப்­ப­டுத்­தப்­பட முடி­யாது. ஜன­நா­ய­கத்தை உயிர்ப்­பிக்­கவும் முடி­யாது. இந்த வகையில் ஜன­நா­ய­கத்தை மீண்டும் நிலை­நி­றுத்தப் போவ­தாக உறு­தி­ய­ளித்து ஆட்­சிக்கு வந்த நல்­லாட்சி அர­சாங்கம் தோல்­வியைத் தழு­வி­யி­ருப்­ப­தா­கவே கருத வேண்டி இருக்­கின்­றது.

ஊழல்கள் மலிந்த, சர்­வா­தி­காரப் போக்கில் சென்ற சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் முன்­னைய ஆட்­சியை மாற்றி, ஜன­நா­யக வழி­யி­லான நல்­லாட்­சியை நிறு­வு­வதே 2015 ஆம் ஆண்டின் ஜனா­தி­பதித் தேர்­த­லி­னதும், அதனைத் தொடர்ந்து வந்த பொதுத் தேர்­த­லி­னதும் ஆணை­யாக இருந்­தது. அந்த ஆணைக்கு – அந்தத் தேர்தல் உறு­தி­மொ­ழிக்­கா­கவே மக்கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவை ஜனா­தி­ப­தி­யாகத் தேர்ந்­தெ­டுத்­தார்கள். தொடர்ந்து சிறி­லங்கா சுதந்­தி­ரக்­கட்­சியும், ஐக்­கிய தேசிய கட்­சியும் இணைந்த கூட்­டாட்­சிக்கு மக்கள் வாக்­க­ளித்து வெற்­றி­பெறச் செய்­தி­ருந்­தார்கள். 

ஜனா­தி­பதி தேர்­த­லி­லும்­சரி, பொதுத்­தேர்­த­லி­லும்­சரி அப்­போது கூட்டுச் சேர்ந்­தி­ருந்த ரணில் விக்­கி­ர­ம­சிங்க, முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்கா மற்றும் ஜனா­தி­பதி தேர்­தலில் பொது வேட்­பா­ள­ராகக் கள­மி­றக்­கப்­பட்­டி­ருந்த மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகிய மூவர் மீதும் சிறு­பான்மை தேசிய இனத்­த­வ­ரா­கிய தமிழ் மக்கள் நம்­பிக்கை வைத்து வாக்­க­ளித்­தி­ருந்­தார்கள். அந்த வாக்­க­ளிப்பின் கார­ண­மாக அந்தத் தேர்­தல்கள் இரண்­டிலும், இந்தத் தலை­வர்­க­ளுக்கு வெற்றி கிட்­டி­யி­ருந்­தது.

முன்­னைய அர­சாங்­கத்தின் கீழ் ஜன­நா­யகம் படிப்­ப­டி­யாகக் குழி­தோண்டி புதைக்­கப்­பட்டுக் கொண்­டி­ருந்­தது. தனி­ம­னித அர­சியல் அதி­கார செல்­வாக்கும், நிரந்­த­ர­மான குடும்ப அர­சி­ய­லுக்­கான அடித்­த­ளமும், அர­சி­ய­ல­மைப்புச் சட்­டத்தின் ஊடாக நிலை­நி­றுத்­தப்­ப­டு­வ­தற்­கான முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி ஆட்சி முறையைப் பயன்­ப­டுத்தி, எதேச்­ச­தி­காரம் எல்லா விட­யங்­க­ளிலும் தலை­தூக்கி இருந்­தது. 

அத்­த­கைய ஒரு சூழ­லில்தான் ஆட்சி மாற்றம் ஏற்­பட வேண்டும். குழி­தோண்டிப் புதைக்­கப்­ப­டு­கின்ற ஜன­நா­ய­கத்­திற்குப் புத்­து­யி­ர­ளிக்க வேண்டும் என்ற தேவை சிவில் அமைப்­பு­க­ளுக்கும், ஜன­நா­ய­கத்தின் மீது பற்­று­கொண்­ட­வர்­க­ளுக்கும் ஏற்­பட்­டி­ருந்­தது. அதற்­காகக் குரல் கொடுத்து அவர்கள் செயற்­பட்­டி­ருந்த பின்­ன­ணி­யி­லேயே இந்த மூன்று தலை­வர்­களும் தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­தனின் நிபந்­த­னை­யற்ற ஆத­ர­வோடு, தமது தேர்தல் வெற்­றி­களைச் சாத­க­மாக்கிக் கொண்­டார்கள். 

ஊழல்­களை ஒழிப்­ப­தா­கவும், பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கண்டு, நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஆட்சி முறையில் மாற்­றங்­களை ஏற்­ப­டுத்தி, ஜன­நா­ய­கத்தை நிலை­நாட்­டு­வ­தா­கவும் உறு­தி­ய­ளித்து ஆட்­சிக்கு வந்­த­வர்கள், மூன்று வரு­டங்­களின் பின்னர், நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­திக்­கான அடுத்த தேர்­தலில் எவ்­வாறு வெற்றி பெறு­வது என்­பது குறித்து சிந்­திப்­ப­திலும், அதற்­கான காய் நகர்த்­தல்­களை மேற்­கொள்­வ­திலும் தீவிர கவனம் செலுத்­தி­யி­ருக்­கின்­றார்கள். 

நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­பதி பத­வியை எவ்­வாறு கைப்­பற்றிக் கொள்­ளலாம் என்­ப­தற்­கான தேர்தல் வியூ­கங்­களை வகுப்­பதில் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் தலை­வர்­க­ளான ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் ஈடு­பட்­டி­ருக்­கின்­றார்கள். 

இந்த அர­சாங்­கத்தின் ஆட்சிக் காலம் முடி­வ­டை­வ­தற்கு இன்னும் ஒன்­றரை வரு­டங்கள் இருக்­கின்­றன. நல்­லாட்சி அர­சாங்கம் மூன்று வரு­டங்­களைக் கடந்­துள்­ளது. எஞ்­சி­யுள்ள ஆட்­சிக்­கா­லத்தில் தங்­க­ளது தேர்தல் கால ஆணை­களை எவ்­வாறு நிறை­வேற்­று­வது, நாட்டில் புரை­யோடிப் போயுள்ள இனப்­பி­ரச்­சி­னைக்கு எவ்­வாறு அர­சியல் தீர்வு காண்­பது என்­ப­வற்றைச் சிந்­தித்து, அவற்­றுக்­கான முயற்­சி­களை மேற்­கொள்­வ­திலும் பார்க்க, ஒன்­றரை வரு­டங்­களின் பின்னர் வர­வுள்ள ஜனா­தி­பதி தேர்தல் குறித்து, இந்தத் தலை­வர்கள் சிந்­தித்து, அதில் அக்­க­றையும், ஆர்­வமும் கொண்­டி­ருப்­பது வேடிக்­கை­யாக இருக்­கின்­றது. அதே­வேளை அர­சியல் ரீதி­யாக வேத­னை­யா­கவும் உள்­ளது. 

நிலை­மை­களும் மாற்­றங்­களும்

முன்னைய ஆட்­சியில், மஹிந்த ராஜ­பக்ச யுத்­தத்தில் வெற்­றி­பெற்ற வர­லாற்று நாய­க­னாகத் திகழ்ந்தார். யுத்த வெற்­றியின் மூலம், சிங்­கள மக்கள் மத்­தியில் தன்­னிக­ர­கற்ற தலை­வ­னா­கவும்  நினைத்­த­வற்றை எல்லாம் நிறை­வேற்றிக் கொள்­ளத்­தக்க சாத­னை­யா­ள­னா­கவும் அவர் ஆட்சி புரிந்தார்.

அவரை அர­சியல் ரீதி­யாக எதிர்த்­த­வர்கள், அவ்­வாறு எதிர்க்கத் துணிந்த மாத்­தி­ரத்­தி­லேயே அர­சியல் களத்­திலும், அதி­கார நிலை­யிலும் நிர்­மூ­ல­மாக்­கப்­பட்­டார்கள். அவ்­வாறு பலிக்­க­டாக்­க­ளாகிப் போன­வர்­களில், அவரை எதிர்த்து ஜனா­தி­பதி தேர்­தலில் போட்­டி­யிட்ட முன்னாள் இரா­ணுவத் தள­பதி சரத்பொன்­சே­காவும், முன்னாள் தலைமை நீதி­ய­ரசர் ஷிராணி பண்­டா­ர­நா­யக்­காவும் முக்­கி­ய­மா­ன­வர்கள். அவர்கள் இரு­வரும் அர­சியல் பொது­வெ­ளியில் சிறு­மைப்­ப­டுத்­தப்­பட்­டார்கள். அவர்­களின் தனி­ம­னித கௌர­வத்­திற்கு இழுக்கு ஏற்­படும் வகையில் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­டார்கள். இதனால் நாடே அதிர்ச்­சி­ய­டைந்­தது. சர்­வ­தேசம் திகைப்­போடு ஏறிட்டு நோக்­கி­யது. சுய அர­சியல் நலன்­க­ளுக்­காக அதி­காரத் துஷ்பி­ர­யோ­கமும், குடும்ப நலன்­க­ளுக்­காக ஊழல்­களும் தாரா­ள­மாக இடம்­பெற்­றி­ருந்­தன. இந்த வகையில் பல்­வேறு நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. அவற்­றுக்கு எதி­ராக எவரும் குரல் கொடுக்­கவோ நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளவோ முடி­யாத பின்­ன­ணி­யி­லேயே 2015 ஆம் ஆண்டு நடத்­தப்­பட்ட ஜனா­தி­பதி தேர்­தலை ஜன­நா­ய­கத்தின் மீது பற்றுக் கொண்­டி­ருந்­த­வர்கள் சரி­யான முறையில் பயன்­படுத்திக் கொண்­டார்கள். 

ஆட்சி மாற்­றத்­தை­ய­டுத்து, வடக்­கிலும் கிழக்­கிலும் நில­விய இரா­ணுவ மய­மான நெருக்­கடி நிலை­மைகள் தளர்த்­தப்­பட்­டன. அர­சாங்­கத்தின் அனைத்து விட­யங்­க­ளிலும் இரா­ணு­வத்­திற்கு அளிக்­கப்­பட்­டி­ருந்த  முதன்மை நிலைமை குறிப்­பி­டத்­தக்க அளவில் நீக்­கப்­பட்­டது. அரச நிர்­வா­கத்தில் கடைப்­பி­டிக்­கப்­பட்­டி­ருந்த எதேச்­ச­தி­கார முறை­மையும் முடி­வுக்கு வந்­தி­ருந்­தது. மக்கள் மனம் மகிழ்ந்­தார்கள். நல்­லாட்சி அர­சாங்­கத்தின் மீதான அவர்­க­ளு­டைய தேர்தல் கால நம்­பிக்கை, தேர்தல் கால வாக்­கு­று­தி­களை இந்த அரசு நிறை­வேற்றி நல்­லாட்சி புரியும் என்ற எதிர்­பார்ப்­பாக மாறி­யது.

ஆயினும், ஆட்சி மாற்­றத்தின் பின்னர், நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­திக்கு அந்த ஆட்சி உரு­வாக்­கத்­தின்­போது அர­சி­ய­ல­மைப்பு ரீதி­யாக வழங்­கப்­பட்­டி­ருந்த அதி­கா­ரங்­க­ளுக்கு மேலாக, 18 ஆவது அர­சியல் திருத்தச் சட்­டத்தின் மூலம் முன்­னைய ஜனா­தி­பதி பெற்­றுக்­கொண்­டி­ருந்த மேல­திக அதி­கா­ரங்­களை 19 ஆவது திருத்தச் சட்­டத்தின் மூலம் இல்­லாமல் செய்­ததே முக்­கிய நட­வ­டிக்­கை­யாகும். 

ஜனா­தி­பதி ஆட்சி முறையில் மாற்­றத்தைக் கொண்டு வரப்­போ­வ­தாக அளித்த வாக்­கு­று­தியின் ஒரு முக்­கிய செயற்­பா­டாக இது நோக்­கப்­பட்­டது. அதே­வேளை, நிறை­வேற்று அதி­காரம் கொண்ட ஜனா­தி­ப­தியின் அதி­கா­ரங்­களைக் குறைத்து பாராளு­மன்­றத்­திற்கு அதி­கா­ரங்­களை வழங்­கு­வ­தற்கும், விகி­தா­சார தேர்தல் முறையில் மாற்­றங்­களைக் கொண்டு வரு­வ­தற்கும், இனப் பிரச்­சி­னைக்கு அர­சியல் தீர்வு காண்­ப­தற்­கு­மான பல மாற்­றங்­களைச் செய்­வ­தற்­காக, புதிய அரசி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­படும் என்ற வாக்­குறு­தியை நிறை­வேற்­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களும் ஆரம்­பிக்­கப்­பட்­டன. 

மறு­பக்­கத்தில் இறுதி யுத்­தத்தின் போது இடம்­பெற்ற மனித உரிமை மீறல்­க­ளுக்கும், சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­மீ­றல்­க­ளுக்கும் பொறுப்பு கூறு­வ­தற்­காக ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் தீர்­மா­னங்­க­ளுக்கு அமை­வாக நிலை­மா­று­கால நீதியை நிலை­நாட்­டு­வ­தற்­கான பொறி­மு­றை­களை உரு­வாக்கும் நட­வ­டிக்­கைகள், முடிந்த அளவில் இழுத்­த­டிக்­கப்­பட்டு, வேண்டா வெறுப்­புடன் மேற்­கொள்­வது போன்ற செயற்­பா­டு­களே  முன்­னெ­டுக்­கப்­பட்­டி­ருந்­தன. இந்த நட­வ­டிக்­கைகள் ஐ.நா.­வையும், சர்­வ­தே­சத்­தையும் மட்­டு­மல்­லாமல் போரினால் பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­களின் எதிர்­பார்ப்­புக்­க­ளையும் ஏமாற்­றத்­திற்கு உள்­ளாக்­கவே வழி வகுத்­தி­ருந்­தது.

நல்லாட்சி அர­சாங்­கத்தின் உரு­வாக்­கத்­திற்கு, தமிழர் தரப்பில் இருந்து முக்­கி­ய­மாக முன்­னின்று செயற்­பட்ட தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்தன் அளித்­தி­ருந்த நிபந்­த­னை­யற்ற ஆத­ர­வுக்கு எதிர்­ம­றை­யான நட­வ­டிக்­கை­யா­கவே அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை நோக்க வேண்டி இருந்­தது. 

இருப்­பினும், இந்த எதிர்­ம­றை­யான நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதிர் வினை­யாக தமிழர் தரப்பில் இருந்து எதிர்ப்புகள் தெரி­விக்­கப்­பட்டால், அல்­லது அர­சாங்­கத்தை வழிக்குக் கொண்டு வரு­வ­தற்­கான போராட்­டங்­களை முன்­னெ­டுத்தால், அது, மீண்டும் ஆட்சி அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வ­தற்­கான அர­சியல் செயற்­பா­டு­களை இன­வாத நோக்கில் முன்­னெ­டுத்­துள்ள முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவின் செயற்­பா­டு­க­ளுக்கு ஊக்­க­ம­ளிப்­ப­தாக அமைந்­து­விடும். அத்­துடன் நல்­லாட்சி அர­சாங்­கத்தின் இருப்­புக்கே ஆபத்­தாக முடிந்­து­விடும் என்ற நோக்கில் பாதிக்­கப்­பட்ட தரப்­பி­ன­ரா­கிய தமிழ் மக்­களை அமைதி காக்க வேண்டும். அரசு மீது அதி­ருப்தி தெரி­வித்து, போராட்­டங்­களில் ஈடு­படக் கூடாது. பாரா­ளு­மன்­றத்­தில்­கூட, அர­சுக்கு எதி­ரா­கவோ அல்­லது அர­சாங்­கத்தின் செயற்­பா­டு­களை விமர்­சிக்கும் வகை­யிலோ தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள் உரை­யாற்றக் கூடாது என்­பதில் கூட்­ட­மைப்பின் தலைவர் இறுக்­க­மா­கவே நடந்து கொண்­டி­ருந்தார். 

அர­சாங்­கத்­திற்கு ஆத­ர­வ­ளித்து, அதற்கு தமிழர் தரப்பில் இருந்து அர­சியல் ரீதி­யாக ஊறு நேரி­டாமல் பாது­காத்து ஒத்­து­ழைப்­பதன் மூலம், இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வை எட்­டி­வி­டலாம் என்­பது அவ­ரு­டைய நம்­பிக்­கை­யா­கவும், அர­சியல் ரீதி­யான உத்­தி­யா­கவும் இருந்­தது. ஆனால், அந்த அர­சியல் உத்தி அவ­ரு­டைய எதிர்­பார்ப்­புக்கு அமைய சாத­க­மான விளை­வு­களை ஏற்­ப­டுத்தத் தவ­றி­விட்­டது.

நடப்­ப­தென்ன......?

அர­சாங்­கத்­திற்குப் பாதிப்பு ஏற்­பட்­டு­விடக் கூடாது. அதன் இருப்­புக்குப் பங்கம் ஏற்­பட்­டு­விடக் கூடாது என்ற நோக்­கத்தில் தமிழ்த் தரப்பில் இருந்து அர­சுக்கு அளித்து வந்த நிபந்­த­னை­யற்ற ஆத­ரவும் ஒத்­து­ழைப்பும் தமிழ் மக்­க­ளுக்கு மட்­டு­மல்ல, அந்த ஆத­ரவில் அழுங்குப் பிடி­யாகச் செயற்­பட்டு வந்த கூட்­ட­மைப்பின் தலை­வ­ருக்கும் நன்­மை­ய­ளிக்­க­வில்லை. 

ஆனால், தீட்­டிய மரத்தில் கூர் பார்த்­ததைப் போன்று, வளர்த்த கடாவே மார்பில் பாய்ந்­ததைப் போன்று அர­சாங்­கத்­துக்­கான நிபந்­த­னை­யற்ற ஆத­ரவு என்ற அர­சியல் சாணக்­கியம் பாத­க­மான விளை­வு­க­ளையே ஏற்­ப­டுத்தி இருக்­கின்­றது. 

ஆட்சி மாற்றம் ஏற்­பட்டு மூன்று வரு­டங்கள் கழிந்த நிலையில், வடக்கு, கிழக்கு மாகா­ணங்­களின் அபி­வி­ருத்திச் செயற்­பா­டுகள் குறித்த பணிப்­பு­ரை­களை வழங்­கு­வ­தற்கும், அந்தச் செயற்­பா­டு­களை ஒன்­றி­ணைப்­ப­தற்கும், கண்­கா­ணிப்­ப­தற்­கு­மாக 48 பேர் கொண்ட உயர் மட்ட செய­ல­ணிக்­குழு ஒன்று அர­சாங்­கத்­தினால் உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மையில் அமைக்­கப்­பட்­டுள்ள இந்த செய­லணி யுத்தம் முடி­வ­டைந்­த­தை­ய­டுத்து, கடந்த 9 வரு­டங்­களில் வடக்கு கிழக்கில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்ள அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்­களை மீளாய்வு செய்து, அவற்றின் செயற்­பா­டு­களைத் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் என்று அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. 

ஆயினும், வடக்கு கிழக்குப் பிர­தே­சங்­களின் மீள் கட்­ட­மைப்­பிலும், புனர்­வாழ்­விலும், அபி­வி­ருத்­தி­யிலும் நேர­டி­யாக சம்­பந்­தப்­பட்­டுள்ள தமிழ் மக்­களின் ஜன­நா­யக ரீதி­யான அதி­முக்­கிய பிர­தி­நி­தி­க­ளா­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவரும் இந்த செய­ல­ணியில் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. இதில் வேடிக்கை என்­ன­வென்றால், இந்த செய­லணி உரு­வாக்­கப்­பட்டு, அது தொடர்­பான அறி­வித்தல் அர­சாங்க வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­பட்ட பின்பே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு இது­பற்றி தெரி­ய­வந்­துள்­ளது. வர்த்­த­மானி அறி­வித்­தலைப் பார்த்­துத்தான் தாங்கள் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­து­கின்ற வடக்கு கிழக்குப் பிர­தே­சங்­களின் அபி­வி­ருத்­திக்­கான இந்த அதி உயர் மட்ட செய­லணி உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பதை கூட்­ட­மைப்­பினர் தெரிந்து கொண்­டனர். 

அர­சி­ய­ல­மைப்பு விதி­க­ளுக்­க­மைய நாட்டின் பிர­த­ம­ருக்கு அடுத்­த­தாக அர­சியல் அந்­தஸ்து பெற்­றுள்ள நாட்டின் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக உள்­ள­வரும், வடக்கு கிழக்குப் பிர­தேச மக்­களின் முக்­கிய தலை­வ­ரு­மா­கிய, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்­குக்­கூட, இந்த செய­லணி பற்றி வர்த்­த­மானி அறி­வித்தல் வெளி­யா­வ­தற்கு முன்னர் தெரி­ய­வில்லை. அர­சாங்­கத்­தினால் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை. இது பார­தூ­ர­மா­னது. மிகவும் இர­க­சி­ய­மாக மேற்­கொள்­ளப்­பட்­டுள்ள இந்த நட­வ­டிக்­கை­யா­னது, எதிர்­க்கட்சித் தலைவர் என்ற அந்­தஸ்தில் உள்ள தமிழ் மக்­களின் ஜன­நா­யக ரீதி­யான அதி முக்­கிய பிர­தி­நி­தியை திட்­ட­மிட்டு அலட்­சி­யப்­ப­டுத்­தி­யி­ருப்­ப­தையே காட்­டு­கின்­றது. ஒரு வகையில் இதனை ஜன­நா­யக வரை­மு­றை­களை மீறிய, நாட்டின் எதிர்க்­கட்சித் தலை­வ­ரா­கிய தமிழ் மக்­களின் முக்­கிய தலை­வரை உதா­சீனம் செய்து அர­சியல் ரீதி­யாக அவ­ம­தித்­த­தாகக் கரு­து­வ­தற்கும் இட­முண்டு. 

அது மட்­டு­மல்ல. தமிழ் மக்­களின் உரி­மைகள், யுத்­தத்­தினால் மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்ள அந்த மக்­க­ளுக்­கான அபி­வி­ருத்திச் செயற்­பா­டு­களில் அர­சாங்கம் கொண்­டுள்ள இர­க­சிய நிகழ்ச்சி நிரலின் ஓர் அம்­ச­மா­கவே நோக்க வேண்­டி­யுள்­ளது.

இந்த செய­ல­ணியில், ஜனா­தி­ப­தியின் தலை­மையில், பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள அமைச்­சர்கள் 15 பேர், வடக்கு கிழக்கு மாகா­ணங்கள் இரண்­டி­னதும், இரண்டு ஆளு­நர்கள், அவற்றின் இரண்டு முத­லமைச்சர்கள், பல்­வேறு அமைச்சுக்­களின் செய­லா­ளர்கள், மற்றும் இரா­ணுவம், கடற்­படை, விமா­னப்­படை ஆகி­ய­வற்றின் தள­ப­தி­களும் இடம்­பெற்­றி­ருக்­கின்­றார்கள். ஆனால் சட்ட ரீதி­யாக ஜன­நா­யக முறைப்­படி தெரிவு செய்­யப்­பட்­டுள்ள அந்தப் பிர­தே­சங்­களின் முத­ல­மைச்சர் தவிர, ஏனைய பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள் எவரும் உள்­ள­டக்­கப்­ப­ட­வில்லை. 

மாகாண சபை முறை­மையின் கீழ் வடக்கும் கிழக்கும் தனித்­தனி சபை­க­ளினால் நிர்­வ­கிக்­கப்­ப­டு­கின்­றன. அந்த மாகாண சபை­க­ளுக்கு மேலாக மத்­திய அர­சாங்­கத்தின் அதி உயர் பீடங்­களின் தலைமை நிலை அந்­தஸ்து உள்­ள­வர்­களும், அதி­கா­ரி­களும், அமைச்­சர்­களும் இந்த செய­ல­ணியில் உள்­ள­டக்­கப்­பட்­டுள்­ள­போது, நாட்டின் முக்­கிய அந்­தஸ்­து­டைய எதிர்­கட்சித் தலை­வரும் சம்­பந்­தப்­பட்ட பிர­தேச மக்­களின் முக்­கிய பிர­தி­நிதித் தலை­வ­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் உள்­ள­டக்­கப்­ப­டா­தது ஏன் என்­பது முக்­கிய கேள்­வி­யாகும். 

அதி உயர் அந்­தஸ்தும், அதி உயர் அரச அதி­கார வலுவும் கொண்ட இந்த செய­லணி தொடர்­பான தக­வல்­களை எதிர்க்­கட்சித் தலை­வ­ருக்கும், சம்­பந்­தப்­பட்ட பிர­தேச மக்­க­ளினால் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற பிர­தி­நி­தி­க­ளுக்கும் தெரி­விக்­காமல் மறைத்து, மறை­மு­க­மாகச் செயற்­பட்ட செய­லா­னது, நாட்டின் எதிர்க்­கட்சித் தலை­வ­ரையும், பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளையும் அர­சியல் ரீதி­யாக அவ­மா­னப்­ப­டுத்­திய ஒரு கைங்­க­ரி­ய­மா­கவே நோக்க வேண்டி உள்­ளது.

எதிர்க்­கட்சித் தலை­வ­ராக இருந்த போதிலும், நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கு எந்த விதத்­திலும் பாதிப்பு எற்­ப­டாத வகையில், ஆளுந்­த­ரப்பின் ஒரு முக்­கிய தலை­வ­ரா­கவே இரா.சம்­பந்தன் அநே­க­மாக அர­சாங்­கத்தின் எல்லாச் செயற்­பா­டு­க­ளுக்கும் ஆத­ர­வ­ளித்து வந்­துள்ளார். 

அது மட்­டு­மல்­லாமல் போரினால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் எரியும் பிரச்­சி­னை­க­ளா­கி­யுள்ள அர­சியல் கைதி­களின் விடு­தலை, வலிந்து காணாமல் ஆக்­கப்­பட்­டோ­ருக்கு பொறுப்பு கூறல், இரா­ணு­வத்­தினர் ஆக்­கி­ர­மித்­துள்ள பொது­மக்­களின் காணி­களை விடு­வித்து, அவற்றின் உரி­மை­யா­ளர்­க­ளான இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்றம் செய்தல் போன்ற பிரச்­சி­னை­க­ளுக்கு, அர­சாங்­கத்­துடன் நல்­லு­றவைக் கொண்­டுள்ள தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு தீர்வு பெற்­றுக்­கொ­டுக்­காத கார­ணத்­தினால் தாங்­களே வீதி­களில் இறங்கி போரா­டு­வ­தற்குப் பாதிக்­கப்­பட்ட மக்­களும் அர­சியல் கைதி­களின் உற­வி­னர்­களும் வீதி­களில் இறங்கிப் போராட நேர்ந்­துள்­ளது. 

வீதிப் போராட்­டங்­களில் தொடர்ச்­சி­யாக ஈடு­பட்­டுள்ள மக்கள், தங்­களால் தேர்தல் மூல­மாகத் தெரிவு செய்­யப்­பட்ட தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் மீதும், கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மா­கிய இரா.சம்­பந்தன் மீது நம்­பிக்கை இழந்து எதிர்ப்­பு­ணர்வை வெளிப்­ப­டுத்­தி­யுள்ள நிலை­யிலும், அர­சாங்­கத்­திற்குப் பாதகம் ஏற்­பட்­டு­விடக் கூடாது என்று அர­சாங்­கத்­திற்கு ஒத்­து­ழைப்பு வழங்கி வரு­கின்ற நிலையில், வடக்கு கிழக்கு அபி­வி­ருத்­திக்­கான உயர் மட்ட செய­ல­ணியில் அவரை உதா­சீனம் செய்து புறக்­க­ணித்­தி­ருப்­பது ஏற்­பு­டை­ய­தல்ல. 

யுத்­தத்தின் பின்னர், நாட்டில் ஐக்­கி­யத்­தையும், சமா­தா­னத்­தையும் உரு­வாக்­கு­வ­தற்­காக மேற்­கொண்­டுள்ள நல்­லி­ணக்க முயற்­சிக்கு அர­சாங்­கத்தின் இந்த நட­வ­டிக்கை நேர்­மு­ர­ணான செய­லாகும். அது தொட்­டி­லையும் ஆட்டி குழந்­தையைக் கிள்­ளி­வி­டு­வது போன்­றது. 

முன்னாள் போரா­ளி­க­ளுக்­கான

 நிவா­ரண உதவி மறுப்பு

வடக்கு கிழக்குப் பிர­தேச அபி­வி­ருத்­திக்­கான செய­லணி உரு­வாக்கம் மட்­டு­மல்ல. இந்து சமய விவ­கா­ரத்­திற்கு முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஒரு­வரைப் பிரதி அமைச்­ச­ராக நிய­மித்­தது, அமைச்சர் சுவா­மி­நாதன் சமர்ப்­பித்த முன்னாள் போரா­ளி­க­ளுக்­கான நிவா­ரண உத­விக்­கான அமைச்­ச­ரவைப் பத்­திரம் நிரா­க­ரிப்பு போன்ற வேறு சில நட­வ­டிக்­கை­க­ளும்­கூட, நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி வரு­கின்ற தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பையும், அவர்­களால் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தப்­ப­டு­கின்ற தமிழ் மக்­க­ளையும் திட்­ட­மிட்ட வகையில் அர­சியல் ரீதி­யாகப் புறக்­க­ணிக்­கின்ற செயற்­பா­டா­கவும், அவர்­களை வேண்­டு­மென்றே உதா­சீனம் செய்­கின்ற ஒரு செய­லா­கவும் நோக்க வேண்­டி­யுள்­ளது.

முப்­பது வரு­டங்­க­ளாகத் தொடர்ந்த அர­சியல் உரி­மைக்­கான ஆயுதப் போராட்­டத்தை - அந்த உள்­நாட்டு யுத்­தத்தை சர்­வ­தேச அளவில் பயங்­க­ர­வா­த­மாகச் சித்­தி­ரித்து, அள­வுக்கு அதி­க­மான ஆயுதப் பலத்­தையும், மிக மோச­மான எதிரி நாடு ஒன்­றுடன் நடத்­திய யுத்­தத்தைப் போன்று இர­சா­யன ரீதி­யான அழி­வு­களை ஏற்­ப­டுத்த வல்ல ஆயுத பலத்­தையும் பிர­யோ­கித்து வெற்றி கொண்டு, முன்­னைய அர­சாங்கம் யுத்­தத்­திற்கு முடிவு கண்­டி­ருந்­தது. 

அந்த அர­சாங்­கத்தின் தலை­வரே அர­சாங்­கத்தின் வேண்­டு­கோளை ஏற்று இரா­ணு­வத்­தி­ன­ரிடம் சர­ண­டைந்­த­வர்­களில் பன்­னீ­ரா­யிரம் பேரை புனர்­வாழ்வுப் பயிற்­சிக்கு உட்­ப­டுத்தி பின்னர் சமூக வாழ்க்­கையில் இணைத்­தி­ருந்­தது. இந்த நட­வ­டிக்­கையை முன்னாள் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்­கான பொது மன்­னிப்பு நட­வ­டிக்­கை­யாக அர­சியல் ரீதி­யாக அப்­போது பிர­சா­ரமும் செய்­யப்­பட்­டி­ருந்­தது. ஆனால், அந்த அர­சாங்­கத்­திற்கு அடுத்­த­தாக ஆட்சிப் பொறுப்பை ஏற்­றுள்ள நல்­லாட்சி அர­சாங்கம், சமூ­கத்தில் இணைக்கப்­பட்டு சாதா­ரண குடும்ப வாழ்க்­கைக்குத் திரும்­பி­யுள்ள முன்னாள் போரா­ளி­களின் வாழ்க்கை மேம்­பாட்­டிற்­காக அளிக்­கப்­ப­டு­கின்ற நிவா­ரண உதவி, இல்­லா­தொ­ழிக்­கப்­பட்ட பயங்­க­ர­வா­தத்தை ஆத­ரிக்­கின்ற ஒரு செயற்­பா­டாகக் கரு­தப்­படும் என குறிப்­பிட்டு, அந்த உத­விக்­கான அமைச்­ச­ரவைப் பத்­தி­ரத்தை ஜனா­தி­பதி நிர­ாக­ரித்­துள்ளார். 

இந்தச் செயற்­பா­டா­னது, இரா­ணுவ போக்கில் எதேச்­ச­தி­கார முறையில் செயற்­பட்­டி­ருந்த அர­சாங்­கத்­திலும் பார்க்க மோச­மான செயற்­பா­டா­கவே நோக்­கப்­ப­டு­கின்­றது. யுத்தம் முடி­வ­டைந்து ஒன்­பது வரு­டங்­க­ளா­கின்­றன. முன்னாள் போரா­ளிகள் சமூ­கத்தில் இணைக்­கப்­பட்டு வரு­டங்கள் பல கடந்­து­விட்­டன. இக்­காலப் பகு­தியில் அழிக்­கப்­பட்­ட­தாகக் கூறப்­ப­டு­கின்ற பயங்­க­ர­வா­தத்­துக்கு உயிர் கொடுக்­கத்­தக்க செயற்­பா­டுகள் எதுவும் இடம்­பெ­ற­வில்லை. இதனை அர­சாங்கத் தரப்­பி­னரே உறு­திப்­ப­டுத்தி கூறியிருக்கின்றனர். 

இந்த நிலையில் முன்னாள் போராளிகளுக்கு வாழ்வாதாரத்துக்காக, சமூக வாழ்க்கை மேம்பாட்டுக்காக கோரப்படுகின்ற நிவாரண உதவியை வழங்கினால், பயங்கரவாதத்திற்கு உதவியதாக முடியும் என்றும், பயங்கரவாதிகள் மீண்டும் உருவாகுவதற்கு உதவியதாக முடியும் என்று கருதுவதும், அவ்வாறு கருதப்படும் என்ற அனுமானத்தில் அந்த உதவியை வழங்க மறுப்பதும் ஒரு ஜனநாயக அரசுக்கு அழகல்ல. 

முன்னாள் போராளிகள் எங்கிருந்தோ ஏதோ தேவைகளுக்காக இங்கு வழிப்போக்கர்களல்ல. வேறு ஒரு நாட்டு அரசாங்கத்தினால் அல்லது எதிரி நாடு ஒன்றினால் இங்கு அனுப்பி வைக்கப்பட்ட கூலிப்படையினரும் அல்ல. அவர்கள் இந்த நாட்டின் பரம்பரை குடிமக்களின் வழித்தோன்றல்கள். அவர்கள் இந்த நாட்டின் ஏனைய மக்களைப் போன்று பிறப்புரிமை வழியாக உரித்துள்ள குடிமக்கள். இயற்கை நீதியின் அடிப்படையில் இந்த நாட்டில் வாழ்வதற்குரிய அடிப்படை உரிமை பெற்றவர்கள். தேசிய சிறுபான்மை இனமாகிய தமது சமூகத்தின் அடிப்படை அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டதன் காரணமாக, சாத்வீகப் போராட்டங்கள் வலுவிழக்கச் செய்யப்பட்டு, அடக்கி ஒடுக்கப்பட்ட ஒரே காரணத்திற்காக ஆயுதமேந்தி அரசியல் உரிமைக்காகப் போராடியவர்கள். 

யுத்தம் முடிவுக்கு வந்ததும், அரசாங்கத்தின் பாதுகாப்பு உத்தரவாதத்தை ஏற்று இராணுவத்திடம் சரணடைந்து பல்வேறு துன்பங்களுக்கும், சிறுமைகளுக்கும் ஆளாகி அரசாங்கத்தின் புனர்வாழ்வுப் பயிற்சியின் பின்னர் சமூக வாழ்க்கை வாழ்வதற்காக அனுமதிக்கப்பட்டவர்கள். அவர்களுக்கு நிவாரண உதவி வழங்குவது பயங்கரவாதத்திற்கு உதவியதாகக் கருதப்படும் என்று கூறுவது, வெந்த புண்ணில் வேல்பாய்ச்சுவதற்கே ஒப்பானதாகும். 

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், நல்லாட்;சி புரிவதற்காக இரண்டு தேசிய கட்சிகளும் இணைந்து அமைத்துள்ள நல்லாட்சி அரசாங்கமானது, மோசமான யுத்த அழிவுகளுக்குப் பின்னணியில் பல்வேறு விட்டுக்கொடுப்புக்களைச் செய்து இணைந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ள தேசிய சிறுபான்மை இன மக்களின் மனங்களைக் காயப்படுத்தும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுப்பது நல்லதல்ல. 

சுய அரசியல் இலாபத்திற்காக தேசிய மட்டத்தில் சிங்களப் பேரினவாதிகளின் ஆதரவைப் பெறுவதற்கான இனவாத முயற்சிகளிலும், அந்த மக்களை உதாசீனம் செய்யும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுவது ஒரு ஜனநாயக அரசுக்கு அழகல்ல. ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதாகவும், அதனை மேம் படுத்துவதாகவும் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றியதன் பின்னர் இத்தகைய நடவடிக் கைகளை மேற்கொள்வது ஜனநாயக விரோத நடவடிக்கையாகவே கருதப்படும். இந்தச் செயற்பாடுகள் நாட்டை இருண்டதோர் அரசி யல் சூழலுக்கு இட்டுச் செல்வதற்கே வழி வகுக் கும் என்பதிலும் ஐயமில்லை.  

பி.மாணிக்கவாசகம்

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-06-16#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்தியாவுக்கு சுத‌ந்திர‌ம்  கிடைச்சு 75ஆண்டு ஆக‌ போகுது இந்தியா இதுவ‌ரை என்ன‌ முன்னேற்ற‌த்தை க‌ண்டு இருக்கு சொல்லுங்கோ நாட்டான்மை அண்ணா 😁😜............................ அமெரிக்க‌ன் ஒலிம்பிக் போட்டியில் 100ப‌த‌க்க‌ங்க‌ள் வெல்லுகின‌ம் இந்தியா வெறும‌னே ஒரு ப‌த‌க்க‌ம்............இந்திய‌ர்க‌ள் எந்த‌ விளையாட்டில் திற‌மையான‌வ‌ர்க‌ள் சொல்ல‌ப் போனால் கிரிக்கேட் விளையாட்டை த‌விற‌ வேறு விளையாட்டில் இந்திய‌ர்க‌ள் பூச்சிய‌ம்.................ஹிந்தி தினிப்ப‌தில் காட்டும் ஆர்வ‌ம்  பிள்ளைக‌ளுக்கு விளையாட்டு அக்க‌டாமி திற‌ந்து அதில் திற‌மையை காட்டும் வீர‌ர்க‌ளை புக‌ழ் பெற்ற‌ ஒலிம்பிக் போட்டிக்கு அனுப்ப‌லாமே................28கோடி இந்திய‌ ம‌க்க‌ள் இர‌வு நேர‌ உண‌வு இல்லாம‌ தூங்கின‌மாம்................யூடுப்பில் ம‌த்திய‌ அர‌சு இந்தியாவை புக‌ழ் பாட‌ சில‌ர‌  அம‌த்தி இருக்கின‌ம்.....................பெரும்பாலான‌ ப‌ண‌த்தை போர் த‌ள‌பாட‌ங்க‌ளை வேண்ட‌ ம‌ற்றும் இராணுவ‌த்துக்கே ம‌த்திய‌ அர‌சு ப‌ண‌த்தை ஒதுக்குது................ இந்தியாவே நாறி போய் கிட‌க்கு..........இந்தியா வ‌ள‌ந்து வ‌ரும் நாட்டு ப‌ட்டிய‌லில் எத்த‌னையாவ‌து இட‌த்தில் இருக்குது..............இந்தியா என்றாலே பெண்க‌ளை க‌ற்ப‌ழிக்கும் நாடு என்று தான் ஜ‌ரோப்பிய‌ர்க‌ள் சொல்லுவார்க‌ள்.................   இந்தியாவை விட‌ சின்ன‌ நாடுக‌ள் எவ‌ள‌வோ முன்னேற்ற‌ம் அடைந்து விட்டார்க‌ள்..............இந்தியா அன்று தொட்டு இப்ப‌ வ‌ரை அதே நிலை தான்.............இந்தியா 2020இல் வ‌ல்ல‌ர‌சு நாடாக‌ ஆகிவிடும் என்று போலி விம்ப‌த்தை க‌ட்டு அவுட்டு விட்டார்க‌ளே இந்தியா வ‌ல்ல‌ர‌சு நாடா வ‌ந்திட்டா..............இந்திய‌ர்க‌ளுக்கு வ‌ல்ல‌ர‌சுசின் அர்த்த‌ம் தெரியாது.................இந்திய‌ர்க‌ள் ஒற்றுமை இல்லை அத‌னால் தான் சிறு முன்னேற்ற‌த்தையும் இதுவ‌ரை அடைய‌ வில்லை..............த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ள் டெல்லிக்கு போனால் டெல்லியில் அவைச்சு த‌மிழ் நாட்டு பிள்ளைக‌ளுக்கு ஊமை குத்து குத்தின‌ம் ..................இந்தியா ஏற்றும‌தி செய்வ‌தை விட‌ இற‌க்கு ம‌தி தான் அதிக‌ம்................டென்மார்க் சிறிய‌ நாடு டென்மார்க் காசின் பெரும‌திக்கு இந்தியாவின் ரூபாய் 11 அடி த‌ள்ளி நிக்க‌னும்   இந்தியா ஊழ‌ல் நாடு அன்டை நாடான‌ சீன‌னின் நாட்டு வ‌ள‌ர்சியை பார்த்தும் இந்திய‌ர்க‌ளுக்கு சூடு சுர‌ணை வ‌ர‌ வில்லை.............மொத்த‌த்தில் இந்தியா ஒரு குப்பை நாடு.............அர‌சாங்க‌ ம‌ருத்துவ‌ம‌னைக‌ளை நேரில் போய் பாருங்கோ எப்ப‌டி வைச்சு இருக்கிறாங்க‌ள் என்று..................   ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாட்டு அர‌சிய‌ல் வாதிக‌ள் ஊழ‌ல் செய்வ‌தில்லை அது தான் டென்மார் நோர்வே சுவிட‌ன் பின்லாந் ந‌ல்ல‌ முன்னேற்ற‌ம் அடைந்து இருக்கு...............இந்த‌ நாளு நாட்டிலும் டென்மார்க் சிட்டிச‌ன் வைத்து இருப்ப‌வ‌ர்க‌ள் லோன் எடுக்க‌லாம்..................அப்ப‌டி ப‌ல‌ விடைய‌ங்க‌ளில் ஸ்க‌ன்ரினேவிய‌ன் நாடுக‌ளுக்கு உல‌க‌ அள‌வில் ந‌ல்ல‌ பெய‌ர் இருக்கு............இந்தியா  வெறும‌ன‌ குப்பை தொட்டி நாடு..............த‌மிழ‌க‌ ம‌க்க‌ள் ஒரு விசிட் அடிக்க‌னும் ஜ‌ரோப்பாவுக்கு ம‌ற்ற‌ நாடுக‌ளுக்கு அப்ப‌ உண‌ருவின‌ம் இந்திய‌ம் திராவிட‌ம் என்ற‌ போர்வைக்குள் இருந்து நாம் ஏமாந்து விட்டோம் என்று இதை யாரும் மூடி ம‌றைக்க‌ முடியாது இது தான் உண்மையும் கூட‌......................இந்தியாவை த‌விர்த்து விட்டு உல‌க‌ம் இய‌ங்கும் சீன‌ன் இல்லாம‌ இந்த‌ உல‌க‌ம் இய‌ங்காது.............இதில் இருந்து தெரிவ‌து என்ன‌ சீன‌னின் முன்னேற்ற‌ம் இந்தியாவை விட‌ ப‌ல‌ ம‌ட‌ங்கு அதிக‌ம்...........நீங்க‌ள் பாவிக்கும் ஜ‌போனில் கூட‌ சீன‌னின் பொருல் இருக்கும்............இப்ப‌டி சொல்ல‌ நிறைய‌ இருக்கு..............................................................
    • இங்கே நான் சீமானையோ அவர் மகனையே பற்றி பேசவில்லை. தமிழ்நாட்டில் தமிழின் நிலை எங்கே எப்படி இருக்கிறதென்பதை சுருக்கமாக சிவகுமார் சொல்கிறார் என்பதற்காக இணைத்த காணொளி.
    • இதைவிட முக்கியமானது புலனாய்வுப் பிரிவுகளின் அச்சுறுத்தல் என எண்ணுகிறேன்.
    • 1. அரசியலில் வாதிகள் மீது நம்பிக்கையீனம்.  2. முதலாமது - அந்த அரசியல் மீதே நம்பிக்கயீனமாக மாறி வருகிறது. 3. நியாபக மறதி. திட்டமிட்ட மறக்கடிப்பு. 4. இப்பவே நானும், குடும்பமும் ஓக்கே தானே….ஏன் அல்லப்படுவான் என்ற மனநிலை. 5. யாழில் 1995 க்கு பின் பிறந்த ஒருவருக்கு இப்போ 29 வயது. அவருக்கு புலிகள், போராட்டத்துடன் எந்த நேரடி அனுபவமுமில்லை. 6. அறிவூட்டாமை - 2009 க்கு பின் வெளிநாட்டில் பிறந்த பிள்ளைகளை விட நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு 1948-2009 என்ன நடந்தது என்றே யாரும் சொல்லவில்லை. நடந்தது அநியாயம் என்பதே உறைக்காவிடின் - உணர்ச்சி எப்படி வரும். இருக்கும் சனத்தொகையில் கணிசமானோர் இவ்வகையினரே.  
    • பாகம்3 துரையப்பா சுடப்பட்டது.   பாகம் 4 தமிழ் புதிய புலிகள்  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.