Jump to content

ட்ரம்ப் - கிம் சந்திப்பு வரலாற்று ஏடுகளில் புதியதொரு அத்தியாயம்


Recommended Posts

ட்ரம்ப் - கிம் சந்திப்பு வரலாற்று ஏடுகளில் புதியதொரு அத்தியாயம்

S-03Page1Image0001-e8f35de4ae0d3da1eec413b67169a47d05cbb0ef.jpg

 

சில விநா­டிகள் நீடித்த கை குலுக்கல், தசாப்த கால வர­லாற்றை மாற்­றி­யெ­ழுதும் ஆற்றல் கொண்­ட­தென எவரும் நினைத்­தி­ருக்­க­மாட்­டார்கள்.

இந்தக் கைகு­லுக்கல் 14 செக்­கன்கள் நீடித்­தது. கைலாகு கொடுத்­த­வரில் ஒருவர் அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப். மற்­றவர் வட­கொ­ரியத் தலைவர் கிம் யொங் உன்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை சிங்­கப்­பூரின் செந்­தோஸா தீவி­லுள்ள கபெல்லா ஹோட்­டலில் நிகழ்ந்த தருணம். அமெ­ரிக்­கா­விற்கும், வட­கொ­ரி­யா­விற்கும் இடை­யி­லான ஆறரை தசாப்த கால வர­லாற்றை மாற்­றி­யெ­ழு­தி­யது.

இவ்­விரு நாடு­களின் தலை­வர்கள் நேருக்கு நேர் சந்­தித்த முதல் சந்­தர்ப்பம் என்­பது வர­லாற்று ஏடு­களில் பதி­யப்­பட வேண்­டிய தகவல். இதனை உலக அர­சியல் ஒழுங்கை திசை திருப்பும் ஆற்றல் கொண்ட தருணம் என்றும் கூறலாம்.

இது­வரை அமெ­ரிக்­காவில் 44 பேர் ஜனா­தி­ப­தி­களாகக் கட­மை­யாற்­றி­யி­ருக்­கி­றார்கள். அவர்­களில் எவரும் செய்­யாத காரி­யத்தைத் துணிந்து டொனால்ட் ட்ரம்ப் வட­கொ­ரியத் தலை­வ­ருக்கு கைலாகு கொடுத்­ததைக் கண்டோம். வட­கொ­ரிய ஸ்தாபகத் தலை­வரின் பேரன் கிம் யொங் உன் தமது நாட்டின் முக்­கி­ய­மான நிகழ்ச்­சி­களில் கலந்­து­கொள்­கையில், தமது தாத்­தா­வி­னதும், தந்­தை­யி­னதும் படங்கள் பொறித்த இலச்சி­னை­களை ஷேர்ட்டில் அணிந்­தி­ருப்பார். டொனால்ட் டரம்­பிற்கு கைலாகு கொடுக்க கைநீட்­டிய சந்­தர்ப்­பத்தில், அத்­த­கைய எதுவும் அவ­ரது சட்­டையில் இருக்­க­வில்லை.

இது­வொரு சிறிய விடயம். இருந்­த­போ­திலும், இது இரு நாடுகள் சார்ந்த கடந்த கால மர­பு­களை எவ்­வாறு தகர்த்­தெ­றி­கி­றது என்­பது அவ­தா­னிக்­கப்­பட வேண்­டி­ய­தாகும். தமது முன்­னோ­டி­களின் ஆட்­சி­கா­லத்தில் தனித்து விடப்­பட்­டி­ருந்த வட­கொ­ரி­யாவை உல­க­நா­டு­க­ளுடன் புதிய உற­வு­களை ஏற்­ப­டுத்திக் கொள்ளும் தேச­மாக பரி­ண­மிக்கச் செய்யும் ஆர்வம், கிம் ஜொங் உன்னின் உடல் மொழியில் தெளி­வாக வெளிப்­பட்­டது.

ட்ரம்ப் –- கிம் உச்­சி­மாட்டில் கவ­னிக்க வேண்­டிய எத்­த­னையோ விஷ­யங்கள் இருந்­தன. ஒன்­றை­யொன்று பரஸ்­பர எதி­ரி­க­ளாகக் கரு­திய இரு தேசங்­களின் பகைமை. தனிப்­பட்ட குணா­தி­ச­யங்கள் மற்றும் உடற்­கு­றை­பா­டு­களின் அடிப்­ப­டையில் பரஸ்­பரம் அடுத்­த­வரை தரக்­கு­றை­வாக விமர்­சித்த இரு தனி­ம­னி­தர்­களின் குரோதம், இவை­யி­ரண்­டையும் கடந்த காலத்­திற்கு ஒப்­ப­டைத்­து­விட்டு, எதிர்­கா­லத்தை நம்­பிக்­கை­யுடன் எதிர்­கொள்­வ­தற்­கான திட­சங்­கற்பம் போன்­றவை முக்­கி­ய­மா­னவை.

இரு தலை­வர்­களும் மாத்­திரம் பங்­கேற்கும் பேச்­சு­வார்த்­தைக்கு முன்­ன­தாக வயதில் இளை­ய­வ­ரான வட­கொ­ரியத் தலைவர் சொன்னார்; “இந்த இடத்­திற்கு வரு­வது இல­கு­வான காரி­ய­மாக இருக்­க­வில்லை. கடந்த கால கசப்­பு­ணர்­வு­களைத் தடைக்­கற்­க­ளாக அன்றி படிக்­கற்­க­ளாக மாற்றிக் கொண்டு இன்று இந்த இடத்தில் நிற்­கின்றோம்”என்று.

இந்தப் பேச்­சு­வார்த்­தையைத் தொடர்ந்து இரு தலை­வர்­களும் தமது பரி­வா­ரங்கள் சகிதம் இரு­த­ரப்பு கலந்­து­ரை­யா­டலில் ஈடு­பட்­டார்கள். பின்னர், பிரத்­தி­யே­க­மாக தயா­ரிக்­கப்­பட்ட மதிய போச­னத்தைப் புசித்­தார்கள். அடுத்­த­தாக இரு­த­ரப்பு உடன்­ப­டிக்­கை­யொன்றில் கைச்­சாத்­திட்­டார்கள். இதனைத் தொடர்ந்து மூத்­த­வ­ரான டொனால்ட் ட்ரம்ப் பேசினார். “இவ்­வு­லகின் மிகவும் பயங்­க­ர­மான பிரச்சி­னையை இரு தலை­வர்­களும் சமா­ளிக்கப் போகிறோம்”. பின்னர், அமெ­ரிக்க ஜனா­தி­பதி தாம் கைச்­சாத்­திட்ட உடன்­ப­டிக்­கையை ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளுக்குக் காட்­டினார்.

ட்ரம்ப் –- கிம் உச்­சி­மா­நாட்டின் முக்­கி­ய­மான விடயம் யாதெனில், இரு­த­ரப்பு உடன்­ப­டிக்கை தானென சர்­வ­தேச ஊட­கங்கள் அறி­வித்­தன. இன்­றைய உலகின் மிகப் பயங்­க­ர­மான பிரச்சினை அமெ­ரிக்க, வட­கொ­ரிய பகை­யு­ணர்­வு­தானெனக் கரு­தினால், தனி­யொரு ஆவணம் எவ்­வாறு பிரச்சி­னையைத் தீர்க்கப் போகி­றது என்ற கேள்வி எழலாம்.

கூட்டு ஆவ­ணத்தின் நான்கு அம்­சங்கள் உள்ளன அவை.

1. இரு நாட்டு மக்­க­ளி­னதும் அபி­லா­ஷை­க­ளுக்கு அமைய புதிய உற­வு­களைக் கட்­டி­யெ­ழுப்­பு­வதில் கடப்­பாடு

2. கொரிய தீப­கற்­பத்தில் நிலை­யான, ஸ்திர­மான சமா­தா­னத்தை நிலை­நாட்டும் முயற்­சி­களில் இரு­நா­டு­களும் இணைந்து செயற்படும்.

3. 2018 ஏப்ரல் 27ஆம் திகதி செய்த பிர­க­ட­னத்­திற்கு அமைய, கொரிய தீப­கற்­பத்தில் முழு­மை­யான அணு­வா­யுத மய நீக்­கத்­திற்­காக வட­கொ­ரியா பாடு­ப­டுதல்

4. போர்க் கைதிகள், போரின் போது காணாமல் போன­வர்கள் விட­யத்தில் ஒத்­து­ழைத்து நடத்தல்.

இந்த ஆவணம் புதிய அமெ­ரிக்­க–­வ­ட­கொ­ரிய உற­வு­களை ஸ்தாபிப்­பது பற்றி பேசு­கி­றது. ஆனால், இரு நாடு­களும் ராஜ­தந்­திர உற­வு­களை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஆரம்­பிக்கப் போகின்­ற­னவா என்­பதைக் கூற­வில்லை.

கொரிய தீப­கற்­பத்தில் நிலை­யான சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு இரு நாடு­களும் இணைந்து பாடு­படும் என ஆவ­ணத்தின் அடுத்த ஷரத்து குறிப்­பி­டு­கி­றது. அது எத்­த­கைய கூட்டு முயற்சி என்­பது விப­ரிக்­கப்­ப­ட­வில்லை.

இந்தத் தீப­கற்­பத்தில் முழு­மை­யான அணு­வா­யு­த-­மய நீக்­கத்­திற்­காக வட­கொ­ரியா பாடு­படும் என்­பது அடுத்த ஷரத்­தாகும். அந்­நாடு எவ்­வாறு அணு­வா­யு­தங்­களைக் களைய வேண்டும் எனக் கூறப்­ப­ட­வில்லை. அதற்­கு­ரிய கால­வ­ரை­ய­றை­களும் விப­ரிக்­கப்­ப­ட­வில்லை.

இரு நாடு­களில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்கும் போர்க் கைதி­களை விடு­தலை செய்து சொந்த நாட்­டுக்குத் திருப்பி அனுப்­பு­வது பற்­றியும், போரில் மாண்­ட­வர்­களின் சட­லங்­களை மீள ஒப்­ப­டைப்­பது பற்­றியும் உடன்­ப­டிக்கை பேசு­கி­றது. இதன்­மூலம் எத்­தனை போர்க்­கை­திகள் நன்மை பெறு­வார்கள் என்ற விப­ரமும் கிடை­யாது.

அமெ­ரிக்­கா­விற்கும், வட­கொ­ரி­யா­விற்கும் இடை­யி­லான கடந்த கால பகை­மைக்கு முக்­கி­ய­மான கார­ணங்கள் இருக்­கலாம். இவற்றில் வட­கொ­ரி­யாவின் அணு­வா­யுத சோத­னைகள் முக்­கி­ய­மா­னவை.

வட­கொ­ரியா அணு­வா­யு­தங்­களை முற்­று­மு­ழு­தாகக் கைவிட வேண்டும் என்­பது அமெ­ரிக்­காவின் விருப்பம். அமெ­ரிக்­காவை சார்ந்­தி­ருக்கும் நாடு­களும் அதையே விரும்­பு­கின்­றன.

தேசத்தின் பாது­காப்பை உறுதி செய்ய அணு­வா­யு­தங்கள் முக்­கி­ய­மா­னவை என்­பது வட­கொ­ரி­யாவின் வாதம். தவி­ரவும், அணு­வா­யுத சோத­னைகள் மூலம் அச்­சு­றுத்தல் விடுத்து உலக நாடு­களை பேச்­சு­வார்த்தை மேசைக்கு கொண்டு வரு­வது வட­கொ­ரி­யாவின் உத்தி. அந்­நாடு அணு­வா­யுத சோதனை மேற்­கொள்ளும் சகல சந்­தர்ப்­பங்­க­ளிலும் தென்­கொ­ரி­யாவும், ஜப்­பானும் ஐக்­கிய நாடுகள் சபையில் முறை­யிடும். அதனைத் தொடர்ந்து கூட்­டங்கள் கூட்­டப்­படும். அணு­வா­யுத சோத­னை­களை நிறுத்த வேண்­டு­மானால், பொரு­ளா­தாரத் தடை­களை நீக்கி தமது மக்­க­ளுக்கு உதவி செய்­வது அவ­சியம் என நிபந்­தனை விதிக்கும். இந்த நிபந்­த­னை­களின் அடிப்­ப­டையில், சீனா போன்ற நட்பு நாடு­களின் தலை­யீட்­டுடன் உலக நாடுகள் வட­கொ­ரி­யா­விற்கு உதவும். இந்தப் பேச்­சு­வார்த்­தை­களில் முக்­கி­ய­மான பேரம் பேசக்­கூ­டிய விட­ய­மாக இருப்­பது அணு­வா­யு­தங்கள் தான். அதுவே அமெ­ரிக்க, வட­கொ­ரிய உற­வு­களில் உணர்­வுபூர்வமான விட­ய­மாக அமைந்­தி­ருந்­தது.

அமெ­ரிக்க ஜனா­தி­பதி நினைத்­தி­ருந்தால், ஆயு­தங்­களைக் கீழே வைத்தால் தான் பேசுவேன் என்­றி­ருக்­கலாம். அர­சியல் பேச வேண்­டு­மானால், அணு­வா­யு­தங்கள் பற்றி வாய் திறக்கக் கூடா­தென வட­கொ­ரியத் தலைவர் நிபந்­தனை விதித்­தி­ருக்­கலாம்.

இருந்­த­போ­திலும், எது பிரச்சி­னையின் மையப்­புள்­ளியோ, அதனை நேர­டி­யாகத் தொட்டு விரலை சுட்டுக் கொள்ளத் தேவை­யில்லை என்ற நியா­ய­மான விருப்பம் ட்ரம்ப், கிம் ஆகிய இரு­வ­ருக்கும் இருந்­ததை உச்­சி­மா­நாட்டில் அவர்கள் வெளிப்­ப­டுத்­திய உடல்­மொழி சுட்­டிக்­காட்­டி­யது. இதுவே கூட்டு உடன்­ப­டிக்­கை­யிலும் வெளிப்­பட்­டது எனக் கூறலாம்.

இத்­தனை நாட்­க­ளுக்குள் வட­கொ­ரியா அணு­வா­யு­தங்­களைக் களைந்து விட வேண்டும் என்றோ, இவ்­வாறு தான் ஆயு­தங்­களை முடக்க வேண்டும் என்றோ உடன்­ப­டிக்­கையில் நிபந்­தனை விதிக்­கப்­ப­ட­வில்லை. இதுவே முக்­கி­ய­மான மாற்றம்.

இரு பகைமை பூண்ட நாடுகள் உற­வு­களை ஆரம்­பிக்க முனை­கையில், சுமு­க­மான பேச்­சு­வார்த்­தையை ஆரம்­பிப்­பது முக்­கி­ய­மா­னது. அது தவிர, ஒரு தரப்பு ஏதேனும் செய்தால் மற்­றைய தரப்பு பதில் நட­வ­டிக்கை எடுத்தல் என்­பது ஆரோக்­கி­ய­மான அணு­கு­முறை ஆகாது. இதை அமெ­ரிக்க ஜனா­தி­ப­தியும், வட­கொ­ரியத் தலை­வரும் நன்­றாக புரிந்து கொண்­டுள்­ளார்கள் என்­பதை இரு­வ­ரதும் விட்டுக் கொடுப்­புக்கள் புலப்­ப­டுத்தி நிற்கின்றன.

அமெ­ரிக்க, வட­கொ­ரிய பிரச்சினை யைத் தீர்ப்­ப­தற்கு இதற்கு முன்னர் பல தட­வைகள் முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன. இந்த முயற்­சி­களில் சீனா, ரஷ்யா ஆகிய நாடு­களின் ஆத­ர­வுடன் வட­கொ­ரி­யாவும், ஜப்பான், தென்­கொ­ரியா ஆகிய நாடு­களின் ஒத்­து­ழைப்­புடன் அமெ­ரிக்­காவும் இணைந்­த­போ­திலும், எந்­த­வொரு சந்­தர்ப்­பத்­திலும் பிரச்சினை தீர­வில்லை. வட­கொ­ரியா அணு­வா­யுத சோத­னை­களை நிறுத்திக் கொள்­ளவும் இல்லை. அந்­நாட்டின் மீதான தடை­களை அமெ­ரிக்கா நீக்­கவும் இல்லை.

இன்று கடந்த கால கசப்­பு­ணர்­வு­களை ஒரு­புறம் தள்ளி வைத்து விட்டு, ராஜ­தந்­திர முயற்­சி­க­ளுக்கு ஒரு தடவை வாய்ப்­ப­ளித்துப் பார்ப்போம் என அமெ­ரிக்க, வட­கொ­ரியத் தலை­வர்கள் தீர்­மா­னித்­ததைக் காண்­கிறோம். இந்தத் தீர்­மா­னத்தை நோக்­கிய நகர்­வுகள் அத்­தனை இல­கு­வா­ன­தாக இருந்­தி­ருக்க மாட்­டாது என்­பதே உண்மை.

அமெ­ரிக்­காவைப் பொறுத்­த­வ­ரையில், தமது தேசத்தை இலக்கு வைக்­கக்­கூ­டிய ஏவு­க­ணை­களைத் தயா­ரிக்கும் மனி­த­ருடன் பேச வேண்­டுமா என்ற கேள்வி இருக்­கி­றது. இந்தக் கேள்வி உள்­நாட்டு கட்சி அர­சி­யலில் தாக்கம் செலுத்­தக்­கூ­டி­யது. ஜன­நா­யகக் கட்சி நினைத்தால் ட்ரம்ப் –- கிம் உடன்­ப­டிக்­கையை அமெ­ரிக்­காவில் வலி­தற்­றதாக்கக் கோரும் வாக்­கெ­டுப்பை மக்­க­ள­வையில் நடத்த முடியும்.

வட­கொ­ரிய மக்­களைப் பொறுத்­த­வ­ரையில், தமது நாட்டின் மீது பொரு­ளா­தாரத் தடை­களை விதித்து தம்மை வறுமை நிலைக்குள் தள்­ளிய அமெ­ரிக்­கா­வுடன் உறவு கொள்ள வேண்­டுமா என்ற கேள்வி உள்­ளது. தமது முன்­னைய ஆட்­சி­யா­ளர்­களின் பாதையில் இருந்து இளந்­த­லைவர் விலகிச் செல்­வதால் ஏற்­ப­டக்­கூ­டிய விளை­வுகள் பற்­றிய சந்­தே­கமும் வட­கொ­ரிய மக்­க­ளுக்கு இருக்­கி­றது.

இத­னை­யெல்லாம் பொருட்­ப­டுத்­தாமல், நாம் சமா­தா­னத்­திற்­காக முயன்று பார்க்­கலாம் என்ற திட­சங்­கற்­பத்­துடன் ட்ரம்ப்பும், கிம்மும் சந்­தித்­தி­ருக்­கி­றார்கள் என்றால், அது வர­வேற்கத் தக்க விஷயம்.

இந்த சந்­திப்பில் கைச்­சாத்­திட்ட ஆவ­ணத்­தையும், செய்­தி­யாளர் மாநாட்டில் டொனால்ட் ட்ரம்ப் பிரஸ்­தா­பித்த விட­யங்­க­ளையும் ஆராய்ந்தால், உச்­சி­மா­நாட்டின் நோக்­கங்­களை உணர்ந்து கொள்­ளக்­கூ­டி­ய­தாக இருக்கும்.

இவற்றில் முக்­கி­ய­மா­னது அணு­வா­யுத ஒழிப்பு. கடந்த ஆண்டு வட­கொ­ரி­யாவின் அணு­வா­யுத திட்டம் அப­ரி­மி­த­மான வளர்ச்சி கண்­டி­ருந்­தது. வலு­வான ஏவு­க­ணை­க­ளையும், அணு­மு­னைகள் தாங்­கிய வெடி பொருட்­க­ளையும் வட­கொ­ரியா தயா­ரித்­தி­ருந்­தது. பரி­சோ­தித்­தி­ருந்­தது. வட­கொ­ரி­யாவில் இருந்து அணு­வா­யு­தங்­களை முற்­று­மு­ழு­தாக அப்­பு­றப்­ப­டுத்­து­மாறு நிர்ப்­பந்­திக்க வேண்டும் என்ற நோக்­கத்­துடன் உச்சி மாநாட்­டுக்­கான ஏற்­பா­டு­களில் அமெ­ரிக்கா களம் இறங்­கி­யது. எனினும், மாநாட்டின் ஆரம்ப கட்­டத்தில் எதிர்­பார்ப்­பு­களின் தீவிரம் சற்று குறைந்­தது. இரு தலை­வர்­க­ளுக்கு இடை­யி­லான சந்­திப்பு, ஒரு சம்­பா­ஷ­ணையை ஆரம்­பிப்­ப­தற்­கான வாய்ப்­பாகக் கருதி, அதற்­கு­ரிய ஏற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

அடுத்து கொரிய தீப­கற்­பத்தின் போருக்கு முற்­றுப்­புள்ளி வைத்தல் என்ற விடயம் முக்­கி­யத்­துவம் பெறு­கி­றது. 1950ஆம் ஆண்டு தொடக்கம் 1953ஆம் ஆண்டு வரை நீடித்த கொரிய யுத்தம்.முக்கியமானது. இந்த யுத்தம் ஓய்ந்­தி­ருந்­தாலும், இதற்கு உத்­தி­யோ­கபூர்வமாக முற்­றுப்­புள்ளி வைக்­கப்­ப­ட­வில்லை. 1953இல் நிலை­நாட்­டப்­பட்ட போர் நிறுத்தம் முற்­று­மு­ழு­தான சமா­தா­ன­மாக பரி­ண­மிக்­கவும் இல்லை. இன்று வட­கொ­ரி­யாவும், தென்­கொ­ரி­யாவும் சமா­தான முயற்­சி­களை ஆரம்­பித்­துள்­ளன. அடுத்த கட்ட நகர்­வு­களைத் தீர்­மா­னித்­தி­ருக்­கின்­றன. இந்த நிலையில், வட­கொ­ரி­யாவின் நம்­பிக்­கையை தென்­கொ­ரியா வெல்ல வேண்­டிய கட்­டாயம் உள்­ளது. இதனைக் கருத்­திற்­கொண்டு, தென்­கொ­ரி­யா­வுடன் இணைந்து நடத்தும் கூட்டு இரா­ணுவ ஒத்­தி­கை­களை நிறுத்தப் போவ­தாக சிங்­கப்பூர் உச்­சி­மா­நாட்டைத் தொடர்ந்து அமெ­ரிக்க ஜனா­தி­பதி அறி­வித்­துள்ளார்.

வட­கொ­ரி­யாவின் பொரு­ளா­தா­ரத்தை வலுப்­ப­டுத்தல் என்­பது முக்­கி­யான விஷயம். அதி­க­ரித்து வரும் இரா­ணுவ ஆற்­றலும், தென்­கொ­ரி­யா­வு­ட­னான நல்­லி­ணக்க முயற்­சி­களும் வட­கொ­ரியத் தலை­வரின் பிம்­பத்தை மேம்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆனால், அவ­ரது நாட்டைச் சேர்ந்த மக்கள் வறு­மையில் வாடு­கி­றார்கள். வட­கொ­ரிய பிர­ஜை­யொ­ரு­வரின் சரா­சரி மாதாந்த சம்­பளம் 30 முதல் 40 டொல­ருக்கு இடைப்­பட்ட தொகை. வட­கொ­ரி­யாவில் இரண்­டரை கோடியை எட்டும் சனத்­தொகை. ஆனால், 30 இலட்சம் பேர் மாத்­தி­ரமே செல்­போன்­களை வைத்திருக்கிறார்கள். சர்வதேச தடைகளின் முன்னிலையில், இனிமேலும் இறுக்கமான பொருளாதாரத்தைப் பேண முடியாது. தமது நாட்டை மூடியுள்ள இரும்புத் திரையை அகற்றி உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமானால், சீனாவின் தயவுடன் மாத்திரம் தனித்து நின்று சாதிக்க முடியாது என்பதை வடகொரியத் தலைவர் உணர்ந்துள்ளார். தமது சிங்கப்பூர் விஜயத்தில் மக்களோடு மக்களாக செல்பி புகைப்படங்களை எடுத்துக் கொண்டதன் மூலமும், அரச ஊடகங்கள் வாயிலாக சிங்கப்பூரின் அழகை வடகொரிய மக்களுக்கு காட்டியதன் மூலமும் அவர் மாற்றத்திற்கான முதல் அடியை எடுத்து வைத்துள்ளார். அமெரிக்க, வடகொரிய உறவுகள் சார்ந்த சர்வதேச அரசியலின் சிக்கலை அறிந்தவர்களிடம் இப்படியெல்லாம் நடக்குமா என்று கேட்டிருந்தால், நீங்கள் கனவு காண்கிறீர்களா என்று பதில் கேள்வி கேட்டிருப்பார்கள். இருந்தபோதிலும், அடுத்த கணத்தில் என்ன செய்வார்கள் என்று அனுமானிக்க முடியாதவர்களாக கணிக்கப்பட்ட இருதலைவர்கள், கடந்த காலத்தை மறந்து விட்டு துணிச்சலுடன் முயற்சியொன்றை ஆரம்பித்துள்ளார்கள். அவர்களது முயற்சி கடினமானது என்பது வெளிப்படையாகத் தெரிந்தாலும், நல்லதொரு ஆரம்பப் புள்ளி என்பதை தெளிவாக நிரூபித்துள்ளது. மிகவும் சிக்கலான நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு மாற்று வழிகள் உள்ளன என்பதை எடுத்துக் காட்டியுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெறும் பட்சத்தில், மாற்று வழிகள் மீதான நம்பிக்கை குறித்த பாடங்களே உலகத்திற்கு படிப்பினையாக அமையும்.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-06-17#page-3

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நவீனன் said:

ட்ரம்ப் - கிம் சந்திப்பு வரலாற்று ஏடுகளில் புதியதொரு அத்தியாயம்

மண்ணாங்கட்டி.....:grin:

உலகம் கொடுப்புக்கை சிரிக்குது.....:cool:

போயும் போயும் ஒரு வல்லரசு பேட்டை ரவுடியோடை கதைச்சு பேசி....

அதை வேறை படமெடுத்து பந்தா காட்டுதாம்.?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.