Jump to content

இராணுவச்சூழலுக்கு இயல்பாக்கமடையும் வடக்கு


Recommended Posts

இராணுவச்சூழலுக்கு இயல்பாக்கமடையும் வடக்கு

S-01Page1Image0009-2ab41283b0afe2c1d461cf9f6e9f1510b6393539.jpg

 

அர­சி­யல்­வா­தி­களின் ஒத்­து­ழைப்பு பாரா­ளு­மன்­றத்தில், மாகா­ண ­ச­பையில், உள்­ளூ­ராட்சி சபை­களில் முக்­கி­ய­மா­னது. அந்த விட­யங்­களை மறந்து விட்டு. அர­சி­யல்­வா­திகள் வேண்டாம் , நாங்­களே பார்த்துக் கொள்வோம் என்று கிளம்பும் போக்கு, இப்­போ­தைய நிலையில், ஆரோக்­கி­ய­மான அர­சி­ய­லுக்கு நல்­ல­தல்ல.

அர­சியல் என்­பது சமூ­கத்­தி­னதும், அன்­றாட வாழ்­வி­ய­லி­னதும் ஒரு அங்கம். அதனைப் புரிந்து கொள்­ளா­த­வர்கள் தான், அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எதி­ரான போராட்­டத்தை கிளப்பி விடு­கின்­றனர்.

ஒரு பக்­கத்தில், அர­சி­யல்­வா­தி­களை ஓரம்­கட்ட வேண்டும் என்று தமிழ் மக்­களில் ஒரு பகு­தி­யினர் கிளம்­பி­யி­ருக்கும் நிலையில் மற்­றொரு பகு­தி­யினர், இரா­ணுவ அதி­காரி ஒரு­வரைத் தலையில் தூக்கிக் கொண்­டாடிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

 

வடக்கில் அண்­மையில் நிகழ்ந்த பல சம்­ப­வங்கள், ஆரோக்­கி­ய­மான ஜன­நா­யக அர­சி­ய­லுக்­கான சவா­லையும், அதே­நே­ரத்தில், இரா­ணுவ மய­மாக்­க­லுக்­கான சூழ­லையும் வலுப்­ப­டுத்­தி­யி­ருக்­கின்­றன.

* முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வில், நிகழ்ந்த சம்­ப­வங்கள்.

* யாழ்ப்­பா­ணத்தில், மீன­வர்­களின் பேர­ணியில் இருந்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ராசா வெளி­யேற்­றப்­பட்ட சம்­பவம்.

* விசு­வ­ம­டுவில், இரா­ணுவ அதி­காரி ஒரு­வ­ருக்கு முன்னாள் போரா­ளிகள் உள்­ளிட்­ட­வர்கள் அளித்த பிரி­யா­வி­டையின் போது இடம்­பெற்ற விட­யங்கள்.

* வடக்கு-, கிழக்கு அபி­வி­ருத்­திக்­காக உரு­வாக்­கப்­பட்­டுள்ள விசேட ஜனா­தி­பதி செய­லணி.

போருக்குப் பின்னர், தமிழச் சமூகம் எதிர்­கொண்­டுள்ள முக்­கி­ய­மா­ன­தொரு சவாலை வெளிப்­ப­டுத்­தி­யுள்ள சம்­ப­வங்கள் இவை.

முள்­ளி­வாய்க்கால் நினை­வேந்தல் நிகழ்வின் போது, அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு இட­மில்லை என்று ஆரம்­பிக்­கப்­பட்ட கோசம் இப்­போது, மீன­வர்­களின் பிரச்­சி­னைக்­கான பேர­ணியில் இருந்து பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மாவை சேனா­தி­ரா­சாவை வெளி­யேற்றும் நிலைக்கு வந்­தி­ருக்­கி­றது.

பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் தமது பிரச்­சி­னை­களில் கூடுதல் கவனம் செலுத்­த­வில்லை என்ற கவலை, தமிழ் மக்­க­ளிடம் நிறை­யவே இருக்­கி­றது.

அதே­வேளை, தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அர­சுடன் இணக்கப் போக்­குடன் செயற்­பட்­டாலும், நிறை­வேற்று அதி­காரம் அவர்­க­ளிடம் இருக்­க­வில்லை. அதனால் எந்தப் பிரச்­சி­னைக்கும் தீர்வு காணும் வல்­லமை அவர்­க­ளிடம் இல்லை. இந்த தெளிவும் தமிழ் மக்­களில் பல­ரிடம் இல்லை.

இப்­ப­டி­யான நிலையில் தான், தமது பிரச்­சி­னை­களைத் தீர்க்க முடி­யாத அர­சி­யல்­வா­திகள் தமது போராட்­டங்­களில்- நிகழ்­வு­களில் தேவை­யில்லை என்று சிலர் எதிர்ப்புக் குரல் எழுப்ப ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்கள்.

இதற்குப் பின்னால் அர­சியல் தூண்­டு­தல்கள் இருப்­ப­தாக பர­வ­லான குற்­றச்­சாட்­டுகள் இருக்­கின்­றன.

எனினும், இது ஆபத்­தா­னது. பூமராங் போல அவர்­க­ளையும் ஒரு காலத்தில் தாக்கும் என்­பதை தூண்டி விடும் தரப்­புகள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

அர­சி­யல்­வா­திகள் ஒன்றும், வானத்தில் இருந்து குதித்து வந்­த­வர்கள் அல்ல. அவர்­களும், இதே மண்ணில் பிறந்து வளர்ந்­த­வர்கள், வாழ்ந்து வரு­ப­வர்கள் என்­ப­தையும், இங்­குள்ள ஒவ்­வொ­ரு­வ­ரையும் போலவே அவர்­களும் உரி­மை­களைக் கொண்­ட­வர்கள் என்­ப­தையும் யாராலும் மறுக்க முடி­யாது.

அத்­துடன் அவர்கள் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­திகள் என்­ப­தையும் மறந்து விட­மு­டி­யாது.

தாங்கள் வாக்­க­ளிக்­காது போனால், இவர்கள் அர­சி­யலில் நிலைத்­தி­ருக்க முடி­யாது என்று எவ­ரேனும் தப்­புக்­க­ணக்குப் போட்டால், அது தவ­றா­னது.

ஏனென்றால், ஒட்­டு­மொத்த மக்­களும் தேர்­தலைப் புறக்­க­ணித்தால் கூட, வேட்­பா­ளர்கள் தமக்கு தாமே வாக்­க­ளித்­தாலும் கூட வெற்றி பெற்று விடு­வார்கள். இது தான் தேர்தல் முறை.

அர­சி­யல்­வா­தி­க­ளையும், அவர்­களின் துணை­யையும் உதறித் தள்ளிக் கொண்டு, ஒரு சமூ­கத்­தினால் முன்­நோக்கிச் செல்ல முடி­யாது. எல்­லோரும் தமது பிரச்­சி­னை­களை தாமே தீர்த்துக் கொள்ள முடியும் என்று கிளம்­பினால், எது­வுமே நடக்­காது.

தேர்­தல்கள், பாரா­ளு­மன்றம், மாகா­ண­சபை, உள்­ளூ­ராட்சி சபைகள் எதுவும் தேவைப்­ப­டாது.

அர­சி­யல்­வா­தி­களின் ஒத்­து­ழைப்பு பாரா­ளு­மன்­றத்தில், மாகா­ண­ச­பையில், உள்­ளூ­ராட்சி சபை­களில் முக்­கி­ய­மா­னது. அந்த விட­யங்­களை மறந்து விட்டு. அர­சி­யல்­வா­திகள் வேண்டாம் , நாங்­களே பார்த்துக் கொள்வோம் என்று கிளம்பும் போக்கு, இப்­போ­தைய நிலையில், ஆரோக்­கி­ய­மான அர­சி­ய­லுக்கு நல்­ல­தல்ல.

அர­சியல் என்­பது சமூ­கத்­தி­னதும், அன்­றாட வாழ்­வி­ய­லி­னதும் ஒரு அங்கம். அதனைப் புரிந்து கொள்­ளா­த­வர்கள் தான், அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு எதி­ரான போராட்­டத்தை கிளப்பி விடு­கின்­றனர்.

ஒரு பக்­கத்தில், அர­சி­யல்­வா­தி­களை ஓரம்­கட்ட வேண்டும் என்று தமிழ் மக்­களில் ஒரு பகு­தி­யினர் கிளம்­பி­யி­ருக்கும் நிலையில் மற்­றொரு பகு­தி­யினர், இரா­ணுவ அதி­காரி ஒரு­வரைத் தலையில் தூக்கிக் கொண்­டாடிக் கொண்­டி­ருக்­கி­றார்கள்.

ஒரு இரா­ணுவ அதி­கா­ரியின் பிரி­யா­விடை நிகழ்வில் நடந்­தே­றிய சம்­ப­வங்கள், தமிழ் மக்­களை தலை­கு­னிய வைத்­தி­ருக்­கி­றது. முகம்­சு­ழிக்க வைக்கும் அள­வுக்கு அங்கு நிகழ்­வுகள் நடந்­தே­றி­யி­ருக்­கின்­றன.

குறித்த இரா­ணுவ அதி­கா­ரியின் மீதான அன்பின் வெளிப்­பா­டாக- அவர் மக்கள் மத்­தியில் ஆற்­றிய பணி­களின் மீதான விசு­வா­சத்தின் வெளிப்­பா­டாக இது பார்க்­கப்­ப­டு­கி­றது. காட்­டப்­ப­டு­கி­றது.

ஆனால் இது ஒரு இரா­ணுவ மய­மாக்கல் சூழலின் ஆபத்து என்­பது பல­ருக்குப் புரி­யா­தி­ருக்­கி­றது.

கேணல் ரத்­னப்­பி­ரிய என்ற அந்த இரா­ணுவ அதி­காரி, வேலை­வாய்ப்பை பெற்றுக் கொடுத்­தி­ருக்­கிறார், வாழ்­வா­தா­ரத்­தையும், அடிப்­படைச் சூழ­லையும் ஏற்­ப­டுத்திக் கொடுத்­தி­ருக்­கிறார். அது உண்மை.

ஆனால் அதனை அவர் இரா­ணு­வ­ம­ய­மாக்கல் சிந்­த­னை­யுடன் தான் முன்­னெ­டுத்­தி­ருக்­கிறார்.

3500 முன்னாள் போரா­ளி­களை, அரச படைக் கட்­ட­மைப்பின் ஒரு அங்­க­மான, சிவில் பாது­காப்புப் படையில் இணைத்­தி­ருக்­கிறார். இரா­ணுவ மய­மாக்­க­லுக்கு எதி­ரான போராட்­டத்தை எதிர்க்கும் தரப்­பாக இவர்கள் மாற்­றப்­பட்­டுள்­ளனர்.

இரா­ணுவப் பிடியில் இருக்கும் விவ­சாயப் பண்­ணை­க­ளையும், காணி­களையும் விடு­விக்­கப்­ப­டு­வதை எதிர்ப்­ப­வர்­க­ளாக இவர்­களே மாறி­யி­ருக்­கி­றார்கள். மாற்­றப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

கல்­வித்­து­றையின் கீழ் இருக்க வேண்­டிய முன்­பள்­ளி­களை அடாத்­தாக சிவில் பாது­காப்புப் படை தன்­வசம் எடுத்துக் கொண்­டி­ருக்­கி­றது. அங்கு பணி­யாற்றும் ஆசி­ரி­யர்­க­ளுக்கு அதிக ஊதி­யத்தைக் கொடுத்து, அவர்­களை தமது பக்கம் இழுத்து வைத்­தி­ருக்­கி­றது.

இரா­ணுவப் பிடியில் இருந்து முன்­பள்­ளி­களை விடு­விக்க வேண்டும் என்ற முயற்­சி­க­ளுக்கு இப்­போது அவர்­களே தடைக்­கற்­க­ளாக உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றார்கள்.

இவ்­வா­றாக, வடக்கில் இரா­ணு­வ­மய சூழ­லுக்கு ஒத்துப் போகி­ற­வர்­க­ளாக, ஒத்து ஊது­கி­ற­வர்­க­ளாக ஒரு சமூகம் மாற்­றப்­பட்­டி­ருக்­கி­றது. இது ஒரு சூட்­சு­ம­மான இரா­ணுவ தந்­தி­ரோ­பாயம்.

அதற்குப் பலி­யாகி விட்ட தரப்­பாக முன்னாள் போரா­ளி­களும் இருக்­கின்­றனர். அவர்­களின் சூழ்­நிலை, மற்றும் நிலை­மை­களை இங்கு யாரும் குறை­ம­திப்­புக்கு உட்­ப­டுத்தி விட முடி­யாது.

ஆனாலும், ஒரு கால­கட்­டத்தில் தமிழ் மக்­களின் விடு­த­லைக்­காக போரா­டி­ய­வர்­களே இன்று ஒரு இரா­ணுவ மய­மாக்­க­லுக்கு துணை போகி­ற­வர்­க­ளாக, இரா­ணு­வ­ம­ய­மாக்­கலின் துணைக் கார­ணி­க­ளாக மாறி­யி­ருக்­கி­றார்கள் என்று பர­வ­லாக விமர்­சிக்­கப்­ப­டு­கி­றது.

தமது நலன்­களை மாத்­திரம் சிந்­திக்­கி­ற­வர்­க­ளாக தமிழ் மக்கள் இப்­போது மாறி வரு­கின்­றனர். அதனால் தான் குறு­கிய சிந்­த­னைகள், குறு­கிய வாதங்­க­ளுக்­குள்­ளேயும் அவர்கள் அமுக்­கப்­ப­டு­கின்­றனர்.

இதனால் தமிழ்த் தேசிய சிந்­தனை மழுங்­க­டிக்­கப்­படும். சாதிய, பிர­தேச, மத வாதங்கள் முனைப்­ப­டையும். அத­னையும் தாண்டி, யார் யாரையோ எல்லாம் தலையில் வைத்துக் கொண்­டா­டு­கின்ற நிலையும் உரு­வாகும்.அதற்குச் சரி­யான உதா­ர­ணமே, விசு­வ­மடு சம்­பவம்.

அந்த நிகழ்வில் பங்­கேற்­ற­வர்­கள பெரும்­பா­லா­ன­வர்கள் முன்னாள் போரா­ளிகள். ஆனால் அவர்கள் விடு­தலைப் புலிகள் இயக்­கத்தில் இருந்­த­போது ஒரு போதும் கடைப்­பி­டித்­தி­ராத கொள்­கை­க­ளையும் வழக்­கங்­க­ளையும் இங்கு பின்­பற்­றி­யி­ருக்­கி­றார்கள்.

புலிகள் இயக்­கத்தில் மாலை மரி­யாதை இருந்­த­தில்லை. காலில் விழும் கலா­சா­ரமோ கட்­டி­ய­ணைக்கும் வழக்­கமோ இருந்­த­தில்லை. காயப்­பட்­ட­வர்­க­ளையும், மாவீ­ரர்­க­ளையும் தவிர வேறெ­வ­ரையும், தோளில் தூக்கிச் செல்லும் அடிமைச் சேவக முறையும் இருந்­த­தில்லை.

ஆனால், ஒரு சில ஆண்­டு­களில் இந்த முன்னாள் போரா­ளிகள் இத­னை­யெல்லாம் செய்யக் கூடி­ய­வர்­க­ளாக மாற்­றப்­பட்­டி­ருக்­கி­றார்கள். இது இரா­ணுவ மய­மாக்­க­லுக்குள் எவ்­வாறு தமிழ்ச் சமூகம் மூழ்­க­டிக்­கப்­ப­டு­கி­றது என்­ப­தற்­கான ஒரு உதா­ர­ணமே.

பல்­வேறு வழி­களில் இதனை வலிந்து திணிக்கும் முயற்­சிகள் நடக்­கின்­றன. அதற்கு தமிழர் தரப்பில் பலர் துணை­போ­கின்­றனர் என்­ப­தையும் மறுப்­ப­தற்­கில்லை.

நல்­லி­ணக்­கத்தை உரு­வாக்­கு­வ­தற்கும் இதற்கும் வேறு­பாடு உள்­ளது, நல்­லி­ணக்கம் என்­பது பரஸ்­பர புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்­து­வது. எந்த எதிர்­பார்ப்பும் இல்­லாமல், விட்­டுக்­கொ­டுத்து செயற்­ப­டு­வது.

ஆனால், வடக்கில் இரா­ணுவம் விட்­டுக்­கொ­டுக்கத் தயா­ராக இல்லை. படைக்­கு­றைப்­புக்கு, நிலங்­களின் விடு­விப்­புக்கு அது முழு­மை­யாகத் தயா­ரில்லை.

நல்­லி­ணக்கம் என்ற பெயரில், படை­நி­லைப்­ப­டுத்­தலை- இரா­ணுவ மய சூழலை தமிழ் மக்கள் ஏற்­றுக்­கொள்ளும் நிலையை உரு­வாக்க முனை­கி­றது.

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அண்­மையில் உரு­வாக்­கி­யி­ருக்கும், வடக்கு, கிழக்கு அபி­வி­ருத்­தியைத் துரி­தப்­ப­டுத்­து­வ­தற்­கான விசேட செய­ல­ணியும் இதே நோக்­கத்தைக் கொண்­டது தான்.

48 பேர் கொண்ட இந்தச் செய­ல­ணியில் ஜனா­தி­பதி, பிர­த­ம­ருடன் 15 அமைச்­சர்கள் இடம்­பெற்­றி­ருக்­கி­றார்கள். முப்­ப­டை­களின் தள­ப­திகள் இடம்­பெற்­றி­ருக்­கி­றார்கள்.

பிராந்­திய இரா­ணுவத் தலை­மை­யக கட்­டளை அதி­கா­ரிகள் இடம்­பெற்­றி­ருக்­கி­றார்கள். ஆனால் அந்தப் பிராந்­தி­யத்தில் மக்­களால் தெரிவு செய்­யப்­பட்ட பிர­தி­நி­தி­க­ளுக்கு இட­ம­ளிக்­கப்­ப­ட­வில்லை.

மாகாண முத­ல­மைச்­சர்­க­ளுக்கு மாத்­திரம் இட­ம­ளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இது ஒரு­வ­கையில், தமிழ் மக்­க­ளிடம் இருந்து அர­சி­யல்­வா­தி­களை ஓரம்­கட்­டு­கின்ற, இரா­ணுவ செல்­வாக்கை நிலைப்­ப­டுத்­து­கின்ற நட­வ­டிக்­கை­யாகத் தான் பார்க்­கப்­ப­டு­கி­றது.

வடக்கு, கிழக்கின் அபி­வி­ருத்­தியை துரி­தப்­ப­டுத்த முப்­ப­டை­களின் ஒத்­து­ழைப்பு முக்­கியம் தான். அது எந்த வகையில் என்றால், தனியார் காணிகள், பொதுக்காணிகளை இராணுவப் பிடியில் இருந்து விடுவித்து, அவற்றை அபிவிருத்தித் தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த அவர்களின் ஒத்துழைப்பு தேவை.

அதற்கு அப்பால் அபிவிருத்தியைத் துரிதப்படுத்த முப்படை தளபதிகளோ, அதிகாரிகளோ தேவையில்லை. ஆனால் அரசாங்கம், படை அதிகாரிகளை இதில் முக்கிய தரப்பாக இணைத்திருக்கிறது.

இதன் மூலமே வடக்கு, கிழக்கை இராணுவமய சூழலுக்குள் வைத்திருக்கிறோம் என்பதை அரசாங்கம் ஒப்புக்கொள்கிறது.

இதே அரசாங்கம், கொழும்பு நகர அபிவிருத்தி செயலணியில் படை அதிகாரிகளுக்கு அதிக முக்கியத்துவமும் வகிபாகமும் வழங்கத் தயாராக இருக்கிறதா? நிச்சயமாக வடக்கு- கிழக்கு தவிர ஏனைய பகுதிகளில் படையினரை இவ்வாறான தேவைகளுக்கு அரசாங்கம் பயன்படுத்தாது.

ஒரு பக்கத்தில், தமிழ் அரசியல்வாதிகளை தமிழ் மக்களிடம் இருந்து வேறாக்குவதிலும், அதேவேளை இராணுவ மயசூழலுக்கு இயல்பாக்கம் அடைந்த சமூகமாக தமிழ்ச் சமூகத்தை மாற்றுவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டு காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

இந்த சூட்சுமங்களை புரிந்து கொள்ள முடியாத தரப்பாக தமிழர் தரப்பு மாறி வருகிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-06-17#page-1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
    • பெரிய‌வ‌ரே தேர்த‌ல் ஆனைய‌ம் யாரின் க‌ட்டு பாட்டில் இருக்குது அன்மைக் கால‌மாய் இந்தியா அள‌வில் ந‌ட‌க்கும் ச‌ம்ப‌வ‌ங்க‌ளை காது கொடுத்து கேட்ப‌து இல்லையா பெரிய‌வ‌ரே..............இந்தியாவில் எத்த‌னையோ க‌ட்சியை உடைத்து அவ‌ர்க‌ளின் சின்ன‌த்தை புடுங்கி..............த‌மிழ் நாட்டை விட‌ வ‌ட‌ நாட்டில் வீஜேப்பின் அட்டூழிய‌ம் அதிக‌ம்..............நாம் த‌மிழ‌ர் க‌ட்சி ப‌ற்றி நான் எழுதின‌தில் சிறு பிழையும் இல்லை..............க‌ட்சி தொட‌ங்கின‌ கால‌த்தில் இருந்து க‌ட்சி பெடிய‌ங்க‌ளுட‌ன் அண்ண‌ன் சீமானுட‌ன் ப‌யணிக்கிறேன்...............................................
    • இல்லை ச‌கோ வீர‌ப்ப‌னே உள்ள‌தை ஒத்து கொண்டார் தன‌க்கு கிடைச்ச‌ காசை த‌ன் ஊர் ம‌க்க‌ளுக்கே கொடுத்து விட்டேன் ஏதோ 9ல‌ச்ச‌ம் அப்ப‌டியா தான் நான் பார்த்த‌ காணொளியில் என் காதுக்கு கேட்ட‌து..............அந்த‌ ம‌னுஷ‌ன் கோடி கோடியா கொள்ளை அடிக்க‌வும் இல்லை சிறு தொகை கிடைச்சா கூட‌ அவ‌ரின் சொந்த‌ ஊர் ம‌க்க‌ளுக்கு அது போய் சேருமாம்.................. ......................அண்ண‌ன் சீமான் சொன்ன‌து போல் வீர‌ப்ப‌ன் கொள்ளைக் கார‌ன் என்றால் ஜெய‌ல‌லிதாவும் க‌ருணாநிதியும் திருடாத‌ நேர்மையாள‌ர்க‌ளா என்று ஜெய‌ல‌லிதாவின் ஆட்சி கால‌த்திலே வெளிப்ப‌டையாய் பேசின‌வ‌ர் 2012 அல்ல‌து 2013 இந்த‌ கால‌ப் ப‌குதியில்.................. என‌க்கு பெரும் ம‌கிழ்ச்சி வீர‌ப்ப‌ன் ம‌க‌ள அண்ண‌ன் சீமான் வேட்பாள‌ரா.........................
    • விவசாயியின் குளிர்சாதனப் பெட்டி .......!   😁
    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது . இப்படி இருக்கையில் சிங்களத்தில் இருந்த குரங்கு கூட தமிழர்களை பார்த்து இனவாதம் கக்கும் .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.