Jump to content

தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றீடு தேவை என்பதில் கூட்டமைப்புக்கே கருத்துவேறுபாடு இருக்காது. ஆனால் மாற்றீடு எது?


தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றீடு தேவை என்பதில் கூட்டமைப்புக்கே கருத்துவேறுபாடு இருக்காது. ஆனால் மாற்றீடு எது?  

7 members have voted

You do not have permission to vote in this poll, or see the poll results. Please sign in or register to vote in this poll.

Recommended Posts

அடுத்த தேர்தல் வருகிறது. மீண்டும் மீண்டும் மக்கள் இயலாமையில் அதையும் எதையும் சொல்லும் தலைவர்களியே தெரிவு செய்கிறார்கள். மக்களுக்கு வேறு தலைமை தேவை. என்ன செய்யலாம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனது தெரிவு  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தலைமையிலான, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

Link to comment
Share on other sites

மாணவர்கள்/புத்திஜீவிகள்,  இளைஞர்கள், மக்கள் பால் உணமையான அன்பு கொண்டு தொண்டாற்றிவரும் தொண்டர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் , உண்மையான ஊடகவியளாலர்கள் கொண்ட ஒரு அரசியல் அமைப்பு. அதைக்கூட பிரதேசவாரியாக தெரிவு செய்து மக்கள் வாக்களிப்புக்கு விட்டு தெரிவுசெய்யலாம்.

இதுவரை எந்த அரசியல் பின்புலமும் இல்லாதவர்கள். தேசத்தின்பால் உண்மையான பற்றுகொண்டவர்களாக அமையவேண்டும்.

Link to comment
Share on other sites

1 hour ago, தமிழ் சிறி said:

எனது தெரிவு  கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தலைமையிலான, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தலைமையிலான, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை நான் தவற விட்டுவிட்டேன்.

அதையும் சேர்க்க பார்க்கிறேன். நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் நலனில் உண்மையான அக்கறை கொண்டு இயங்கவல்ல.. முன்னாள் போராளிகள்.. பல்கலைக்கழக மாணவர்கள்.. ஒட்டுக்குழுக்கள் சாரா அரசியல் இளைஞர்கள்.. சமூக அக்கறையுள்ள இளைஞர்கள் யுவதிகள்.. ஒன்றுகூடி உருவாக்கக் கூடிய.. ஒரு தூய மக்கள் நலன் நோக்கிய அரசியல் சக்தி மட்டுமே கூட்டமைப்புக்கு மாற்றீடாக முடியும். தமிழ் மக்களுக்கு நீண்ட வழிகாட்டுதலை வழங்க முடியும்.

இவர்கள் புலம்பெயர் இளைய சமூகத்துடன் இணைந்து.. யாருக்கும் விலை போகாமல்.. இன உணர்வோடு.. அதன் நலனில் மண்ணின் நலனில் உண்மையான அக்கறை கொண்டு உழைக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக சர்வதேச நாடுகளின் தூதுவர்களுடன் நெருங்கிய வகையில்.. அவர்களுக்கு ஒவ்வொரு காலாண்டு சந்திப்பு விளக்கங்களை அளித்து.. இந்த அரசியல் நகர்வு செய்யப்படுவது அவசியம்.

அதில் லத்தீன் அமெரிக்க நாடுகள்.. ஆபிரிக்க நாடுகள்..  சீனா.. மத்திய கிழக்கு நாடுகள் உள்வாங்கப்பட வேண்டும். மேற்குலகு மற்றும் அண்டைய நாடுகளைச் சேர்த்து. ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் மகிந்தவைத் தெரிவு செய்தால் கட்டாயம் வித்தியாசமான விளைவுகள் கிட்டும். நல்லதோ, கெட்டதோ பெரும்பான்மையான சிங்கள மக்களின் ஆதரவோடு  உள்ள மகிந்தவின் கட்சிதான் நிரந்தரமான தீர்வைத் தரும்.

நல்லாட்சி என்று கூறிய மைத்திரியும் ரணிலும் சரியான தீர்வைத் தரக்கூடிய துணிச்சலற்றவர்கள். 

தமிழ்க் கட்சிகளில் அநேகமானவை அண்டிப் பிழைக்கும் சரணாகதி அரசியல் அல்லது இணைக்க அரசியல் செய்பவர்கள்.

கஜேந்திரகுமார் தமிழ்மக்களின் தற்போதைய விருப்பங்களைப் பிரதிபலிக்காமல் புலம்பெயர் தமிழரால் முன்னிறுத்தப்படும் காலாவதியான கொள்கைகளை வைத்து அரசியல் செய்பவர். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மக்களுக்கு உதவும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களும் இராணுவ அதிகாரிகளும் புலம் பெயர்ந்தவர்களும் இணைந்து உருவாகும் புதிய கட்சி.

 

இதற்குள் இராணுவம் ஏன்  வந்தது??

அரசியல்????

மற்றும்படி

புதியவர்கள் (முன்நாள் இந்நாள்  போராளிகள் என்று  அல்லாது)  வரணும்

மக்களுக்கு  முன் தமது சேவை  மற்றும் தியாகங்களால் வளரணும்

அவர்களுக்கே எனது ஆதரவு.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் நான் வாக்கு போடவில்லை இருந்தாலும் புலத்தில் நீங்கள் சொல்வது போல் இலங்கையில் செய்து முடிக்க இயலாது  செருப்பால் அடிச்சாலும் இப்பவும்  கூட்டமைப்புக்கு செம்பு தூக்கி ஆராத்தி எடுக்க ஆள் இருக்கு 

இனி தமிழர்களுக்காக பேசவல்ல சிங்களவர்களை ஆதரிக்கலாம் என நான் நினைக்கிறேன் பாராளுமன்றத்திலாவது சிங்களத்தில் சொல்லியாவது புரிய வைக்க முடியும் தமிழர்களின் பிரச்சினையை மற்றுபடி எவனும் ( தமிழன்) யாரும் மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்கவும் முடியாது தீர்க்கவும் முடியாது அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்க மட்டுமே முடியும் 

 

நான் படித்த சுதந்திர வேட்கை எனும் (அடேல் பாலசிங்கம் அம்மையின் ) புத்தகத்தில் உள்ள பந்தி ஒன்று உங்களுக்காக (2002)

 

1977 ம் ஆண்டு பொது தேர்தலில் போட்டி இட்டு தமிழ் மக்களின் நாடாளுமன்ற அரசியல் கட்சியாக தேர்வாகிய தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையின்  அடிப்படையில்  ஒரு சுதந்திர அரசுக்காக போராடத் தமிழ் மக்களின் வாக்கு ஆணையை கோரியது  வட கிழக்கில் பாரிய வெற்றி பெற்றது பெற்று பெரும்பாலான இருக்கைகளை வென்றது  அரசியல் சுதந்திரத்தையும் இறைமையுள்ள அரசையும் ஈட்டும் வகையில்  போராட்டத்தை நடத்த மக்களின் ஆணையைப்பெற்றது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி இற்கு மக்கள் ஆணை கிடைத்த போதிலும் மக்கள் ஆதரவுடனான இந்த அரசியல் இலக்கை அடைவதற்கு அதனிடம் ஒத்திசைவான கொள்கையோ தந்திரபாயமோ அர்ப்பணிப்போ இருக்க வில்லை அதனால் அந்த கட்சி செயலிழந்து மலட்டுத்தன்மை அடைந்தது இறுதியில் ஆழும் வர்க்கத்திற்கு உடந்தையாக செயற்படும்  பாதையை கடைபிடிக்க முற்பட்டது சுதந்திர அரசை உருவாக்குவதற்க்கான புரட்சிக வழிமுறையைக்கோரி நின்ற போராட்ட உணர்வுடான தமிழ் இளைஞர்கள் தமிழர் ஐக்கிய மக்கள் விடுதலை முன்னணியின் அணுகுமுறையானது கடுமையான ஏமாற்றத்தை கொடுத்தது அரசின் வன்செயலுக்கும் ஒடுக்குமுறைக்கும் பெருமளவு முகம் கொடுக்கும் இளைஞர்கள்  பொறுமை இழந்தார்கள் நாடாளுமன்ற அரசியற் போராட்டத்தின் கையாலாகாத் தன்மையிலும் விரக்தி கொண்டார்கள் :101_point_up:

Link to comment
Share on other sites

3 hours ago, விசுகு said:

மக்களுக்கு உதவும் தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்களும் இராணுவ அதிகாரிகளும் புலம் பெயர்ந்தவர்களும் இணைந்து உருவாகும் புதிய கட்சி.

 

இதற்குள் இராணுவம் ஏன்  வந்தது??

அரசியல்????

மற்றும்படி

புதியவர்கள் (முன்நாள் இந்நாள்  போராளிகள் என்று  அல்லாது)  வரணும்

மக்களுக்கு  முன் தமது சேவை  மற்றும் தியாகங்களால் வளரணும்

அவர்களுக்கே எனது ஆதரவு.

 

உங்களுடைய கேள்வி நியாயமானது. ஆனால் இதற்கான பதில் சிக்கலானது. 

இங்கே கிருபன் மகிந்த இராஜபக்ஷே அரசை தனது தெரிவாக காரணங்களை தெரிவித்து எழுதி இருக்கிறார்.

இந்த இடத்தில் இராணுவத்துக்கும் அரசுக்கும் உள்ள உறவின் தன்மை பற்றியும் போராளிகள், இராணுவம் பற்றிய எங்கள் விளக்கம் பற்றியும் நாம் சிந்திப்பது அவசியம்.

 

"நல்ல" இராணுவம், "கொடூரமான" இராணுவம்

போராளிகள் அமைப்பில் உள்ளது போல இராணுவத்திலும் "நல்ல" இராணுவம், "கொடூரமான" இராணுவம் என பாகுபடுத்தி பார்க்க தக்க பிரிவுகள் உள்ளன.

சில உதாரணங்கள் இங்கு தேவைப்படுகின்றன.

 அது புலிகளின் ஆட்சி காலம். யாழ்ப்பணத்தில் பிரதான தெருவில் சுண்டிக்குழி பெண்கள் பாடசாலையை தாண்டிய ஒரு பகுதியில் ஒரு விபத்து இடம்பெற்றது.  பாடசாலை முடிந்து வீதியால் வந்த ஆசிரியைகள் சிலர் விபத்தை கண்டார்கள். காயப்பட்டவர்களுக்கு எவ்வாறு உதவுவது என்று அவர்களுக்கு தெரியவில்லை. போகும் வழியில் போராளிகளின் வாகனம் ஒன்று நிற்பதை கண்டார்கள். அந்த வாகனம் பழுதுபட்டு போராளிகளும் களைப்பும் விரக்தியுமாக இருந்திருக்க வேண்டும். இந்த ஆசிரியைகள் அந்த போராளிகளிடம் விபத்து பற்றி தெரிவித்து உதவி தேவை என்று சொன்னார்கள். பதிலுக்கு போராளிகள் தூஷண வார்த்தைகளால் இந்த ஆசிரியைகளை தூற்றினார்கள். இதனை சற்றும் எதிர்பாராத ஆசிரியைகள் திகைத்து போனார்கள். இது பற்றி பின்னர் நாம் உயர்மட்ட தலைவர்களுடன் தொடர்பு கொண்ட போது அவர்கள் தெளிவான விளக்கம் தந்தார்கள். போராளிகளில் இருவகை. "நல்ல" போராளிகள், "கொடூரமான" போராளிகள். அறிவாளிகள், தூதுவர்கள் மதத்தலைவர்களை சந்திப்பது, மற்றும் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் "நல்ல" போராளிகள். இவர்கள் போருக்கும் போவார்கள். ஆனால் இவர்களால் நல்லவர்களாக செயற்படவும் முடியும். "கொடூரமான" போராளிகள் அதற்கென்றே பயிற்றப்பட்டவர்கள். அவர்களுக்கு இரக்ககுணம் குறைவு. எல்லை கிராமங்களில் இராணுவத்திலும் மோசமான வகையில் கொடூரமாக அழிவுகளை செய்தவர்கள். இந்த ஆசிரியைகள் சந்தித்தது இந்த "கொடூரமான" போராளிகளை.

இந்திய இராணுவம் விடுதலை புலிகளிடம் இருந்து யாழ் நகரை கைப்பற்றிய பின்னர் கொடூரமான இராணுவத்தை அகற்றி விட்டு நல்ல இராணுவத் தலைவர்களை பல முகாம்களில் நிறுவி மக்களுடன் உறவுகளை உருவாக்க முயற்சித்தது. சிறி லங்கா இராணுவமும் அவ்வாறே செய்கிறது. எப்படி போராளிகளில் நல்ல மனம் உள்ள, இரக்க குணம் உள்ள போராளிகள் இருக்கிறார்களோ அப்படியே இராணுவத்திலும் நல்ல மனம் உள்ள இரக்க குணம் உள்ள அதிகாரிகள் இருக்கிறார்கள். அண்மையில் அப்படி ஒருவரை விஸ்வமடுவில் நாம் அறிந்தோம்.

எய்தவனும் அம்பும்

இராணுவம் ஒரு இயந்திரம். போராளிகள் அமைப்பும் அப்படியானதே. உத்தரவு தரப்பட்டால் அதை நிறைவேற்றி விட்டு கேள்வி கேள் என்று சொல்லப்படுவது உண்டு. என்னுடன் படித்த ஒருவர் பாடசாலை நாட்களில் விடுதலை புலிகளில் இணைந்தார். அவரின் தந்தை போலிஸ் அதிகாரியாக இருந்தார். அவர்களின் பிரதேசத்தில் அவர் போராளிகள் பலரை கைது செய்து தெற்கு பகுதிக்கு மேலதிக விசாரணைக்காக அனுப்பி விட்டார். அவரை கொல்லும் படி இந்த சக மாணவ போராளி அனுப்பப்பட்டார். இவர் தனது தந்தை  தங்கையை பாடசாலையில் இறக்கிவிட்டு வரும் வழியில் அவரை கொன்று கண்ட துண்டமாக வெட்டி போட்டார். இது தான் இராணுவம் அல்லது போராளிகள் இயங்கும் முறை.

இயந்திரமாக இயக்கப்படுபவர்களில் குற்றம் காண்பதிலும் இயக்குபவர்களிலேயே குற்றம் காண்பது நியாயமானது. போருக்கு அப்பாற்பட்ட நாட்களில் நல்ல விதமான சேவைகளுக்காக தெரிவு செய்யப்பட்டு பயிற்றப்பட்ட இராணுவ அதிகாரிகளும், போராளிகள் தலைவர்களும் உண்மையில் உங்களிலும் என்னிலும் பார்க்க நல்லவர்கள். இரக்க குணம் நிறைந்தவர்கள். மேலும் ஆற்றலும், செல்வாக்கும் உள்ளவர்கள். அவர்களின் ஆதரவு எங்கள் மக்களுக்கு மிகவும் தேவையானது. இலங்கையில் சிங்களவர்களின் ஆதரவு இல்லாமல் தமிழர்களுக்கு அபிவிருத்தியோ நிவாரணமோ கிடைக்காது. பிச்சை எடுக்கும் நிலையில் இருந்து கொண்டு எதிர்ப்பு அரசியல் செய்வது அழிவுக்கு மட்டுமே வழி வகுக்கும்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில் கருத்து எழுதுபவர்களை தலைவர்களாக்கி ஒரு கட்சி தொடங்கி 
தேர்தலில் வெல்ல வைத்தால் கூட ........

தீர்வை பேரினவாத பௌத்த சிங்கள அரசிடம் இருந்தே பெற வேண்டும்.
அவர்கள் எவ்வாறான தீர்வை தர துணிவார்கள் என்பதுதான் இங்கு கேள்வி. 

கடந்த தேர்தலில் மகிந்த அரசை ஆதரித்து தொடர்ந்தும் அவர்களை வெல்ல 
வைப்பதன் மூலம் தமிழர்கள் எதையாவது பெற முடியுமே தவிர மைத்திரி - ரணில் 
கூட்டணி நம்ப வைத்து ஏமாற்றும் என்று இங்கு அடிக்கடி எழுதினேன். அதை நிழலி 
முதல்கொண்டு பலரும் எதிர்த்தார்கள் ...... அவர்கள் தமிழர்களுக்கு கொடுமை செய்வார்கள் 
என்று எழுதினார்கள். அதில் உண்மை இல்லாமலும் இல்லை செய்வர்கள்தான் 
ஆனால் சர்வதேச அரசியல் மட்டத்தில் ஒரு திருப்புமுனை வரவேண்டிய கட்டாயம் வந்திருக்கும். 

இப்போ சிங்கள அரசுக்கு ஒரு மூன்றாம் தரப்பு மூலம் ஒரு அழுத்தத்தை கொடுக்க கூடியவர்கள் 
யார்? எவ்வாறு கொடுக்க முடியும் ? என்பது மட்டுமே சரியான தேர்வு.
இந்தியா .... அமெரிக்கா .... சீனா  மூன்றிலும் தெற்கு ஆசியாவை பொறுத்த வரையில் 
தொடர்ந்தும் தொலைநோக்கு பார்வையுடன் வென்று வருவது சீனாதான்.
பாகிஸ்தானிலும் இலங்கையை விட பாரிய செலவில் சீனா ஒரு துறைமுகம் கட்டியது. இப்போது அங்கிருந்து 
சீனாவுக்கு நெடுஞசாலை அமைத்து வருகிறார்கள். கடந்த அமெரிக்க தேர்தலில் ட்ரம் வென்று 3 மாதங்களில் 
பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளித்துவரும் உதவிகளை நிறுத்த போவதாக கூறி குறிப்பிட்ட உதவி தொகையை நிறுத்தியும் இருந்தார். சீனாவும்- பாகிஸ்தானும் இதை எதிர்பார்த்துதான் இருந்தார்கள் 
ஓகே நன்றி என்றுவிட்டு அவர்கள் தமது வேலைகளை செய்துவருகிறார்கள். 
இங்குதான் தொலைநோக்கு அரசியலை கவனிக்க வேண்டும்.

  இந்தியா அண்ணளவாக அமெரிக்காவின் இன்னொரு மாநிலமாக மாறிவருகிறது. 100 கோடியிலும் கூடுதலான மக்கள் தொகை கொண்ட சந்தையை அமேரிக்கா ஒருபோதும் பாகிஸதானுக்காக இழக்காது என்று தெளிவாக தெரிந்த பாகிஸ்தான் சீனாவுடன் தனது உறவை நெருக்கமாக பேணுவதுடன் முன்னேறிக்கொண்டும் வருகிறது. ஐரோப்பாவுக்கும் ஆசியாவுக்கும் ஆனா வணிக போக்குவரத்தில் பாகிஸ்தான் இந்த துறைமுகம் மூலம் முக்கிய பங்கு வகிக்க போகிறது கடலால் சுத்துவதை விட .... துரித கதியில் அதிவேக ரயிலில் பொருட்களை ஏற்றி இறக்க போகிறார்கள். 

இலங்கை துறைமுகம் மைத்திரி வென்றவுடன் மூடுகிறார்கள் இடிக்கிறார்கள் என்று இங்கு 
செய்தியும் கருத்தும் பலரும் எழுதும்போதே எழுதினேன் ...... பல பில்லியன் டாலர் செலவில் 
ஒரு திட்டத்தை வெறுமனே யாரும் செய்ய மாடடார்கள் .... அவ்வளவு தொகையை திருப்பி கொடுத்து 
நீங்கள் போட்டுவாருங்கள் என்று சொல்லும் தகுதி இலங்கைக்கும் கிடையாது. இது ஒரு சிறு பிள்ளை அறிவுக்கே புரிய கூடியது என்றாலும் இலங்கை என்ற கிணத்துக்குள் இருந்து சுத்தும் நிலைமையில்தான் 
அரசியல் புரியப்பட்டு செய்திகள் பிரசுரிக்க படுகின்றன. 

சிங்களவர்கள் இப்போதைய உலக போக்கில் சீனாவை புறம்தள்ளி அமேரிக்கா ஆதரவு 
நிலை மட்டுமே கொள்வார்கள் என்றால் அதை போல மூட வேலை வேறதுவும் இருக்காது.
ரஸ்யா - சீனா உறவு மேலும் மேலும் நெருக்கம் ஆகி வருகிறது அமேரிக்கா எடுத்துவரும் 
இறக்குமதி வரி ஏய்ப்பால் ஐரோப்பிய யூனியன் சீனா பக்கம் சாய்ந்தால் கூட வியக்க ஒன்றும் இல்லை 

அமேரிக்க - ஹிந்திய கூட்டுக்கு இலங்கை சிங்கள அரசை கட்டுக்குள் வைத்திருக்க 
இருக்கும் ஒரே ஆயுதம் இன படுகொலை போர்க்குற்றம் ஒன்றுதான் ... அதை தெளிவுடன் 
புரிந்து அடுத்த அமெரிக்க - இந்திய தேர்தலில் வெல்ல கூடியவர்களுடன் உறவை வளர்த்து 
அவர்கள் மூலம் ஒரு அழுத்தத்தை கொடுக்க கூடிய ஒரு தொலை பார்வை கொண்ட நபர்கள் 
மட்டுமே ஒரு தீர்வை பெற்று தர முடியும். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.