Jump to content

நீதிபதி மா.இளஞ்செழியன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை: விசாரணைக்குழுவும் நியமிக்கப்பட்டது!

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீதிபதி மா.இளஞ்செழியன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை: விசாரணைக்குழுவும் நியமிக்கப்பட்டது!

June 17, 2018
625.500.560.350.160.300.053.800.900.160.

திருகோணமலை மாவட்ட மேல் நீதிபதி மா.இளஞ்செழியன் மீது நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நீதிபதிக்குரிய ஒழுக்ககோவைகளை கவனத்தில் கொள்ளாமல் நடந்தது உள்ளிட்ட சில குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டு, குற்றப்பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது. அதற்கான விளக்கம் இளஞ்செழியனிடம் கோரப்பட்டுள்ளது.

யாழ் மேல் நீதிபதியாக கடமையாற்றிய காலப்பகுதியில் நடந்த சம்பவங்களின் அடிப்படையிலேயே இளஞ்செழியன் மீது, இந்த துறை ரீதியிலான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முறையான முன் அனுமதி பெறாமல், அவர் பொது நிகழ்வுகளில் கலந்துகொண்டு உரையாற்றியது அவர் மீதான பிரதான குற்றச்சாட்டாக சுமத்தப்பட்டுள்ளது. சுமார் ஆறு வரையான நிகழ்வுகளில் அவர் முன் அனுமதி பெறாமல் உரையாற்றியதாக பட்டிலிடப்பட்டுள்ளது. கம்பன் கழக விழாவும் அதிலொன்று.

இவருக்கெதிரான குற்றப்பத்திரம் வழங்கப்பட்டதுடன், விசாரணைக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

நீதித்துறையின் சில ஒழுக்கவிதிகளை மா.இளஞ்செழியன் மீறியது பெரும்பாலும் நிரூபிக்கப்பட்டுள்ளதாலேயே, நீதிச்சேவைகள் ஆணைக்குழு இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு, கஞ்சா கடத்தல் கும்பல்களிற்கு சிம்மசொப்பனமாக விளங்கிய இளங்செழியன் மீது துறைரீதியான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டு, தண்டிக்கப்பட்டால், அது ரௌடிகளை மீள உற்சாகம் கொள்ள வைக்கும் என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது.

http://www.pagetamil.com/8637/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

அதெல்லாம் பிரச்னை இல்லை. 

ஆமத்துருமார் எல்லாம் வெட்டி ஆடுவினம். இவர் சிங்கள குடும்பத்தை வேற பார்க்கிறார்...

சும்மா சாதா ஜட்ஜ் ஐயா இல்லை, இவரு.. ?

சிலநேரம், இவர் திருகோணமலையில் இருந்து கொழும்புக்கு தாவப் போறார் எண்டு அலுவல் நடக்குதோ தெரியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.