• advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt
Sign in to follow this  
கிருபன்

முல்லைத்தீவில் Resort இல் தமிழரசுக்கட்சி தலைவர்கள்; இந்த வருடத்திற்குள் தீர்வாம்: சிவமோகனிற்கு கட்சி அங்கத்துவம்!

Recommended Posts

முல்லைத்தீவில் Resort இல் தமிழரசுக்கட்சி தலைவர்கள்; இந்த வருடத்திற்குள் தீர்வாம்: சிவமோகனிற்கு கட்சி அங்கத்துவம்!

June 16, 2018
128078544-696x392.jpg கூட்டம் நடைபெற்ற Ocean Park Resort

தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு, மத்தியகுழு கூட்டம் நேற்றும், இன்றும் முல்லைத்தீவில் நடைபெற்றது. முல்லைத்தீவு மாவட்டத்திலேயே உள்ள அதிசொகுசு விடுதியான Ocean Park Resort இல் இந்த கூட்டங்கள் நடைபெற்றன.

இரண்டு நாள் கூட்டங்களின் முடிவில் தமிழரசுக்கட்சி தொடர்பான பல முடிவுகள் எட்டப்பட்டுள்ளன.

 

தமிழரசுக்கட்சியின் சின்னத்தில் உள்ளூராட்சிசபை தேர்தலில் போட்டியிட்டு, கட்சியின் கட்டுப்பாடுகளை மீறி நடந்த 9 உள்ளூராட்சிசபை உறுப்பினர்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. அவர்களிடம் விளக்கம் கோரி கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதில் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த 2 உறுப்பினர்கள் தவிர்ந்த, மற்றைய ஏழு உறுப்பினர்களையும் உள்ளூராட்சி உறுப்புரிமையிலிருந்து நீக்கும்படி தேர்தல் ஆணையாளருக்கு கடிதம் எழுதுவதென முடிவாகியது.

சுன்னாகம் பிரதேசசபையில் தவிசாளர் பதவிக்கு ஆசைப்பட்ட ஜி.பிரகாஸ், வல்வெட்டித்துறை நகரசபை உபதலைவர் பதவியை குறிவைத்த சதீஸ் ஆகியோரும் இதில் அடங்குவர். ஏனையை ஐந்து உறுப்பினர்களும் கிழக்கை சேர்ந்தவர்கள்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பிலிருந்து தமிழரசுக்கட்சிக்கு தாவிய சிவமோகன் எம்.பி, மாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் ஆகியோரை தமிழரசுக்கட்சி உறுப்பினர்களாக்குவதென்றும் முடிவானது.

இன்றைய கூட்டத்தில் உரையாற்றிய இரா.சம்பந்தன், இந்த வருட இறுதிக்குள் அரசியல் தீர்வு கிடைக்குமென கூறினார். இரண்டு மூன்று நாட்களின் முன்னர் ஜனாதிபதியை சந்தித்து பேசியதாகவும், இனப்பிரச்சனை தீர்வு விசயத்தில் இப்படியே இழுபறியாகிக் கொண்டே போவதை ஏற்றுக்கொள்ள முடியாதென தான் வலியுறுத்தியதாக கூறினார். இதனை ஏற்றுக்கொள்வதாக கூறிய ஜனாதிபதி, தற்போது வெளிநாட்டில் இருக்கும் ரணில் நாடு திரும்பியதும், அனைவரும் உட்கார்ந்து பேசி, இந்த வருட இறுதிக்குள் தெளிவான இலக்கொன்றை எட்டலாமென்றதாக கூறினார்.

 

கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அரசியலமைப்பு உருவாக்க பணிகள் பற்றி விளக்கமளித்தார். வழக்கம்போல, அரசியலமைப்பு பணி வெற்றியடையுமென சுமந்திரன் விளக்கமளித்தார். அரசியலமைப்பு யாப்பு வரைபு பணிகள் நடந்து கொண்டிருப்பதாகவும், இரண்டு வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் அது சமர்ப்பிக்கப்படுமென்றும் கூறினார்.

முன்னதாக, தலைமையுரை ஆற்றிய மாவை சேனாதிராசா, வழக்கம் போல சம்பந்தமும், முற்றுப்புள்ளியுமின்றி நீண்டநேரம் உரையாற்றினார். ஆனால், இம்முறை வழக்கத்தைவிட கொஞ்சம் கறாரான தொனியில் உரையாற்றினார். அரசியல் தீர்விற்கு அவகாசம் வழங்கலாம், ஆனால் ஏனைய விடயங்களில் இனி அவகாசம் வழங்க முடியாதென தெரிவித்தார்.

காணி விவகாரங்கள் தொடர்பில் பேசப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பிக்கள் வரும் 19ம் திகதி ஜனாதிபதியை சந்தித்து இது குறித்து பேசுவதென முடிவாகியது. மாகாணசபை உறுப்பினர் ப.சத்தியலிங்கத்தையும் இந்த சந்திப்பிற்கு அழைத்து, அவரை முக்கியத்துவப்படுத்துவதென்றும் தீர்மானிக்கப்பட்டது.

அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்திய இளைஞர் அணி குறித்து யாரும் மூச்சும் விடவில்லை. ஆனால் வரும் செப்ரெம்பருக்கு முன்னர் கட்சியின் மாநாட்டை நடத்துவதென முடிவாகியது. இதற்கு வசதியாக, மாவட்ட பொறுப்பாளர்களுடன் மாகாணசபை உறுப்பினர்கள், பிரதேசசபை தவிசாளர்களை இணைத்து குழுவொன்று அமைத்து, புதிய அங்கத்தவர்களை இணைப்பதென முடிவாகியது.

 

நாம் காலையிலேயே குறிப்பிட்டபடி, உள்ளூராட்சி தேர்தல் தோல்வி குறித்து ஆராய அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை, தலைவர் குகதாசன் சமர்ப்பித்தார். கனடா அணியின் தலையீட்டால் ஏற்பட்ட சறுக்கல்கள் குறித்து தலைவர்கள் பகிரங்கமாக வாக்குமூலமளித்திருந்தபோதும், அது அறிக்கையில் இடம்பெறவில்லை. அதை மேலோட்டமாக- கட்சியின் செயற்பாட்டில் வெளிநாட்டில் இருப்பவர்கள் தலையிட்டு, குழப்பங்களை ஏற்படுத்தக்கூடாது என்று குறப்பிடப்பட்டிருந்தது.

அதேநேரம் கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டுவது குறித்தும் ஆராயப்பட்டது.

இன்றைய கூட்டம் முல்லைத்தீவின் விலையுயர்ந்த Ocean Park Resort இல் நடந்தது. முல்லைத்தீவு எம்.பி சிவமோகனே இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். ஏற்கனவே கட்சி தாவிய  சிவமோகன், தமிழரசுக்கட்சியின் அங்கத்துவத்தை பெறுவதற்காக இன்றும், நேற்றும் பெருந்தொகை பணத்தை இந்த கூட்டங்களிற்காக செலவிட்டுள்ளார்.

முல்லைத்தீவு Ocean Park Resort இன் படங்கள் சில124611949-300x169.jpg127998987-300x225.jpg127999006-300x225.jpg127999010-300x225.jpg127999016-300x225.jpg128000354-300x225.jpg128000406-300x225.jpg128078544-300x169.jpg

 

http://www.pagetamil.com/8624/

Share this post


Link to post
Share on other sites

கொழும்பில் கூடாரமிடும் இந்தக்கூட்டம்
இங்கே கூடியதற்கான காரணத்தைத் தேடுகின்றேன்

  • Like 1

Share this post


Link to post
Share on other sites
8 hours ago, வாத்தியார் said:

கொழும்பில் கூடாரமிடும் இந்தக்கூட்டம்
இங்கே கூடியதற்கான காரணத்தைத் தேடுகின்றேன்

இந்த வருட இறுதிக்குள்... மாகாண சபை தேர்தல், நடத்தப் போவதாக 🏛️ அரசு அறிவித்துள்ளது.
அதுதான்... உள்ளூருக்குள், கூடாரம் ⛰️ அடிக்கிறார்கள். :grin:

Edited by தமிழ் சிறி
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

No automatic alt text available.

சம்பந்தன் சொன்னால்.... எப்படியும் தீர்வு வரும். அண்ணாந்து 🤣  பார்த்துக் கொண்டு இருப்போம். 😁

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this