Jump to content

ராஜீவ் கொலை – முக்கிய குற்றவாளி இத்தாலியில் – 7 தமிழர் விடுதலை மறுப்பு சுப்பர் வரவேற்பு….


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலை – முக்கிய குற்றவாளி இத்தாலியில் – 7 தமிழர் விடுதலை மறுப்பு சுப்பர் வரவேற்பு….

June 15, 2018

subramanian-swamy.jpg?resize=600%2C450

ராஜீவ் கொலை வழக்கு தொடர்பாக, 7 தமிழர் விடுதலை கோரிய மனு ஜனாதிபதியால் நிராகரிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், அதனை பாஜக சிரேஸ்ட்ட தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள, பேரறிவாளன் உள்பட 7 பேர் 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையிலேயே இருப்பதால், அவர்களைக் கருணை அடிப்படையில், விடுதலை செய்ய வேண்டும் என, தமிழக அரசு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியிருந்தது. தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு இந்தக் கோரிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழக அரசின் கோரிக்கையை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆலோசனைப்படி இந்த நிராகரிப்பு நிகழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது

இதுகுறித்து ருவிட்டரில் சு.சாமி கூறுகையில், தமிழக அரசு சட்டசபையில் நிறைவேற்றியது சட்ட விரோத தீர்மானம். அதனை ஜனாதிபதி நேரடியாகவே தள்ளுபடி செய்துள்ளார். தூக்கில் இருந்து தப்பியுள்ள கொலையாளிகள் அதிருஷ்டசாலிகள். இத்தாலியில், முக்கிய குற்றவாளி வசித்து வருகிறார். அவர் தீவிர உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் என சு.சாமி தெரிவித்துள்ளார்.

tw.png?resize=502%2C247

 

http://globaltamilnews.net/2018/83733/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர் விடயத்தில், இந்தியாவின் எந்த அரசாக இருந்தாலும்... 
நீதி  கிடைக்கப் போவதில்லை என்பது... மீண்டும் நிரூபிக்கப் பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 முக்கிய குற்றவாளிகள் இந்த சுப்புவும், அன்றய கூட்டத்தில் கலந்து கொள்ளாத மற்றய காங்கிரஸ் பிரதிநிதிகளுமே !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழின விரோதிகளின் தலைவரே இந்த சுப்பிரமணிய சுவாமிதான். இம்மை , மறுமை என்பது உண்மையென வைத்துக் கொண்டால், உறுதியாய்ச் சொல்லலாம் -  முற்பிறவியில் ஆரிய இன வெறியனான ஹிட்லரின் கோயபல்ஸ் இந்த சு.சுவாமிதான் என்று.

Link to comment
Share on other sites

ராஜீவ் கொலையில் சம்பநதம் இல்லாமல் கைதாகி இருக்கும் அந்த அப்பாவிகள் விடுதலை பற்றி கதைக்கும்போது எல்லாம் செயற்கையாக உயிர் கொடுக்கப்படுகிறது பொட்டுவுக்கும் ,பிராபகரனுக்கும் .

Link to comment
Share on other sites

பேரறிவாளன், நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்ய இந்திய மத்திய அரசு விரும்பவில்லை

தமிழக அரசின் மனுவை ஏற்க மறுத்தார் இந்திய ஜனாதிபதி
 
பதிப்பு: 2018 ஜூன் 17 04:01
புலம்: சென்னை, தமிழ்நாடு
புதுப்பிப்பு: ஜூன் 17 15:59
main photomain photomain photo
  •  
இந்தியாவி்ன் முன்னாள் பிரதமர் ராஜீவ் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டு கடந்த 27 வருடங்களாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்டோரை கருணை அடிப்படையில் விடுதலை செய்யக் கோரி தமிழக மாநில அரசு அனுப்பிய மனுவை இந்திய ஒன்றிய அரசின் ஜனாதிபதி நிராகரித்துள்ளார். இந்திய மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் முடிவின் அடிப்படையிலேயே ஜனாதிபதி இம்முடிவை எடுத்தாக புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் அண்ணா பிறந்த நாளில், 10 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ளோரை கருணை அடிப்படையில் விடுவித்து வருகின்றது.

 

 

தமிழக அரசாங்கம் ஏழுபோ் விடுதலை தொடர்பாக தொடர்ந்து தனது முயற்சிகளை எடுத்து வருகின்றது. ஆனால் இந்திய மத்திய அரசு தொடர்ந்து நிராகரிக்கின்றது.

 

இந்த ஆண்டும் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு நினைவு கூரலைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறைத்தண்டனை அனுவித்து வரும் கைதிகளை விடுவிக்க முயன்றது.

உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால், பேரறிவாளன், நளினி உள்ளிட்ட எழுவரை விடுவிக்கும் முடிவு தொடர்பான மனுவை இந்திய மத்திய அரசாங்கத்தின் உள் துறை அமைச்சரகத்திற்கு அனுப்பியதும், ஏழுபேரின் விடுதலை தொடர்பான நம்பிக்கை துளிர்க்கத் தொடங்கியது.

ஆனால், மத்திய அரசாங்கத்தின் முடிவின்படி இந்திய ஜனாதிபதி, தமிழக அரசின் மனுவை நிராகரித்துள்ளார்.

1991 ஆம் தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது தமிழகத்தின் சிறிபெரும்புத்தூரில் நடந்த குண்டுவெடிப்பில், இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையுண்டதைத் தொடர்ந்து, 27 பேர் கைது செய்யப்பட்டு, விசாரணையின் பின்னர் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.

அதன் பின்னர் 1999ஆம் ஆண்டில், 19 பேர் குற்றமற்றவர்கள் என விடுதலை செய்யப்பட்டு, ஏழு பேருக்கு மாத்திரமே தூக்குத் தண்டனை உறுதிசெய்யப்பட்டது.

அதன்பின்னர், பேரறிவாளன், சாந்தன், முருகன் உள்ளிட்டோருக்கு தூக்குத் தண்டனையும், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் உள்ளிட்டோருக்கு ஆயுள் தண்டனையாக தீர்ப்பு மாறியது.

2011ஆம் ஆண்டு மூவருக்கான தூக்குத் தண்டனையும் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு, ஏழுபேர் விடுதலை தொடர்பான வழக்கு பல்வேறு நிலைகளில் தொடர்ந்து நடத்தப்பட்டும் வருகிறது.

1991லிருந்து விசாரணையில் ஈடுபட்டு வந்த காவல் அதிகாரி தியாகராசன், “பேரறிவாளன் தான் வாங்கிக்கொடுத்த மின்கலன் (Battery) எதற்கானது என்பதை தான் அறிந்திருக்கவில்லை” என சொன்ன முக்கியப் பகுதியை தான் பதிவு செய்யவில்லை என்றும், ஒருவேளை பதிவு செய்திருந்தால், பேரறிவாளனுக்கு விடுதலை என்றோ கிடைத்திருக்கும் என்று 2013இல் கூறியிருந்தார்.

இதனையடுத்து, 2018 ஜனவரி மாத விசாரணையின்போது, பேரறிவாளன் இக்கருத்தை முன்னிறுத்தி, தனக்கான விடுதலையை உறுதி செய்ய வேண்டும் என கோரியிருந்தார். உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, சிபஐ விளக்கம் கேட்டது. சி.பி.ஐ யிடம் இதற்கான விளக்கத்தை உச்சநீதிமன்றம் கோரியபோதும், மத்திய அரசாங்கத்தின் சார்பில், இம்மனு மீதான கடும் எதிர்ப்போக்கே கடைப்பிடிக்கப் பட்டது.

2017 இறுதிக் காலக்கட்டத்தில் பேரறிவாளனும் ரவிச்சந்திரனும் 26 ஆண்டுகளுக்கு பிறகு, கடும் விதிமுறைகளுடன், 60 நாட்கள் அவரவர் வீட்டிற்கு பிணையில் விடுக்கப்பட்டிருந்தனர். ஏனையோருக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. இருப்பினும், இன்றைய ஆளும் தமிழக அரசாங்கம் ஏழுபோ் விடுதலை தொடர்பாக தொடர்ந்து தனது முயற்சிகளை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.koormai.com/pathivu.html?vakai=1&therivu=98

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது சுப்பிரமணிய சுவாமியின் கருத்து மட்டுமல்ல. தமிழ் நாட்டில் பல பிஜேபி, காங்கிரஸ் ஆதரவாளர்களின் கருத்துக்களும் இதுபோலவே இருப்பதை பலதடவைகள் விகடனில் கருத்தாடும்போதும் நான் பார்த்திருக்கிறேன். அவர்களுக்கு நினைப்பு எதோ ராஜீவ் காந்தி மிகச்சிறந்த  தலைவர் என்று.  JR க்கு மட்டுமே தெரிந்திருந்தது ராஜீவ் அரசியலில் ஒரு கத்துக் குட்டி என்று..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இயற்கை வரைந்த ஓவியம் அழகு 
    • 👍.......... தமிழில் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிக்கூடங்களே இல்லை என்று சொன்னாரே பாருங்கள்......அது தான் ஆகக் கூடிய கொடுமை....🫣 சில மாதங்களின் முன் கூட, ஒரு மாவட்ட கலெக்டர் தன் மகனை அரசுப் பள்ளியில் தமிழில் படிக்க வைக்கின்றார் என்ற செய்தி இருந்தது. ஜெயமோகன் அவரது மகன் அஜிதனை அரசுப் பள்ளியிலே படிக்க வைத்ததாக எழுதியிருந்ததாக ஒரு ஞாபகம். 25 வருடங்களின் மேல் தமிழ்நாடு மற்றும் இந்திய மக்களுடன் வேலை செய்து வருகின்றேன். இதில் தமிழ் மொழி மூலம் படித்தவர்கள் எக்கச்சக்கமானவர்கள். அவர்களில் சிலர் பள்ளிப் படிப்பின் பின் அண்ணா பல்கலைக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். வேறு சிலர் மிகச் சிறந்த அரசு பொறியியல் கல்லூரிகளுக்கு போய் இங்கு வந்திருக்கின்றார்கள். அவர்களில் எவரும் எந்த விதத்திலும் எவருக்கும் குறைந்தவர்கள் அல்லர். மனமிருந்தால் இடம் உண்டாக்கும்...............
    • In the aftermath of the highly contested 2000 Presidential election, Congress funded three billion dollars for states to replace voting machines that in some cases had been in use for fifty years. Old machines were replaced with machines designed with the latest technology. Despite efforts to make voting fair and transparent, some claim that these new machines are vulnerable to both software glitches and hackers and provide no paper trail for how voters cast their ballots. https://ny.pbslearningmedia.org/resource/ntk11.socst.civ.polsys.elec.ballotbox/ballot-boxing-the-problem-with-electronic-voting-machines/
    • கவிதை நன்றாக உள்ளது.....👍 சில வருடங்கள் இப்படியான பனி பொழிந்து, தெருவெங்கும் நிரம்பி வழியும் இடத்தில் இருந்தேன். பின்னர் ஒரே ஓட்டமாக தென் கலிபோர்னியாவிற்கு ஓடி வந்து விட்டேன். அழகான பனி, வழமை போல, அழகின் பின் பெரும் சங்கடமும் இதனால் இருக்கின்றது.......😀
    • பத்திரப்பதிவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் Indian Non Judicial முத்திரைத்தாள்களைப் பயன்படுத்தித்தான் வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நேர்மாறாக, நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்படும் India Court Fee முத்திரைத்தாளில் வேட்புமனுத்தாக்கல் செய்திருக்கிறார் அண்ணாமலை. இதுவே மிகத் தவறானது. இதற்காகவே அண்ணாமலையின் வேட்புமனுவை நிராகரிக்கலாம். ஆனால், ஏற்கப்பட்டிருக்கிறது. இது அப்பட்டமான முறைகேடு இல்லையா? நாம் தமிழர்கட்சி தேர்தல் ஆணையத்தில்  முறையீடு.Bரீம்aAரீமுக்க எதிராக முறைப்பாடு செய்யுமா?    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.