Sign in to follow this  
கிருபன்

கேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்:துரோகிகளும் தியாகிகளும்

Recommended Posts

கேர்ணல் ரத்னப்பிரியவின் பின்னால் மறைந்திருக்கும் உண்மைகள்:துரோகிகளும் தியாகிகளும்

bandu3-300x170.jpg

விஸ்வமடு இராணுவ முகாமிலிருந்து இடமாற்றம் பெற்றுச் செல்லும் இராணுவ அதிகாரியை தமிழ் மக்கள் கதறியழுது கண்ணீர் மல்கி வழியனுப்பிய காட்சி கடந்த இரண்டு நாட்களாக தமிழ் ஊடகங்களை ஆக்கிரமித்துக்கொண்டது. கதறியழுதவர்களை துரோகிகள் என புலம்பெயர் முகநூலில் பஞ்ச் பேசி தமது ‘தேசிய’ உணர்ச்சியை பொரிந்து தள்ளினார்கள். இதன் மறுபக்கத்தில் இராணுவ அதிகாரி இரத்தினப்பிரிய உலகமகா மனிதாபிமானியாக இன்னும் ஒரு குழு மக்களோடு சேர்ந்து கசிந்து கண்ணீர் மல்கியது. இவை இரண்டிற்கும் இடையில் இன்னொரு உண்மை இச் சம்பவங்களின்பின்னால் உறைந்து கிடப்பதை சில ஊடகங்கள் மறைத்தன, மற்றும் சில தமது பிரதியெடுக்கும் திறனை மேலும் வளர்த்துக்கொண்டன.

உண்மையில் நடந்தது இதுதான்:

வன்னி இனப்படுகொலை முடிவின் பின்னர் முன்னை நாள் போராளிகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குகிறோம் என்ற பெயரில் சிவில் பாதுகாப்பு ஆணையம் (civil security department(CSD))என்ற இராணுவ அமைப்பு ஆயிரக்கணக்கான ஆண்களையும் பெண்களையும் இணைத்துக்கொண்டது.

சீ.எஸ்.டி இன் பொறுப்பதிகாரியாக கேணல் பந்து ரத்னப்பிரிய நியமிக்கப்பட்டார். இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் அச்சத்தின் காரணமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் இணைந்துகொள்ளவில்லை, அங்கு வழங்கப்பட்ட கவர்ச்சிகரமான ஊதியம் காரண்மாக காலப்போக்கில் பல முன்னை நாள் விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களும் இணைந்துகொண்டனர். சீ.ஸ்.டி திட்டத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டவர்கள் நிரந்தர அரச உத்தியோகத்தர்கள் ஆக்கப்பட்டனர். 31 ஆயிரம் ரூபா ஊதியம் வழங்கப்படுகிறது. இரண்டு வகையான வேலைகள் வழங்கப்படுகின்றன, முதலாவதாக முன்பள்ளி ஆசிரியர்கள். இரண்டாவதாக பண்ணைத தொழிலாளர்கள். வேலையாட்களுக்குப் பொறுப்பாக நியமிக்கப்பட்டவர்களில் பலர் முன்னை நாள் விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள்.

bandu2.jpg

இத்திட்டத்தில் இணைக்கப்பட்டவர்களின் தொகை சரியாகத் தெரியாவிட்டாலும், ஊடகங்களின் தகவல்களின் அடிப்படையில் அண்ணளவாக 3500 பேர் இருக்கலாம் எனத் தெரியவருகிறது இவர்களில் சீ.எஸ்/டி முன்பள்ளிகள் 600 வரையிலானவை. மிகுதி வலையக் கல்விப்பணிப்பாளரின் கீழ் இயங்குகிறது. வலையக் கல்விப்பணிப்பாளரின் கீழ் இயங்கும் முன்பள்ளிகளில் ஆசிரியர்களுக்கான ஊதியம் மூவாயிரம் ரூபா, அதேவேளை சீ.எஸ்.டி ஆசிரியர்களுக்கு முப்பத்தோராயிரம் ரூபா.

இக் கணக்கின் அடிப்படையில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இராணுவத்தால் நடத்தப்படும் பண்ணைகளில் வேலைசெய்கிறார்கள்.

இத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு சில காலங்களுக்கு உள்ளாகவே வேலையாட்களின் பொறுப்பாளர்கள் ஊடாக இராணுவ அதிகாரி ரத்னப்பிரிய தனது சொந்தத் திட்டத்தை முன்வைக்கிறார். அதன் அடிப்படையில் விரும்பியவர்கள் வேலைக்கு வராமல் வீட்டில் இருந்தபடியே 31 ஆயிரம் ஊதியத்தைப் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், அந்த 31 ஆயிரத்தில் பத்தாயிரத்தைப் பொறுப்பாளரிடம் இரகசியமாக ஒப்படைக்க வேண்டும்.

ஏறக்குறைய ஆயிரம் பேர் வரையிலானவர்கள் அதனை ஏற்றுக்கொண்டு, மாதம் முடிவில் பத்தாயிரத்தைத் தமது பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு பண்ணையில் வேலை செய்வதற்குப் பதிலாக வேறு வேலைகளில் இணைந்துகொண்டார்கள். இப்போது அவர்கள் இலவசமாக 20 ஆயிரமும் அதைவிட வேறு வேலைகளில் கிடைக்கும் ஊதியத்தையும் பெற்றுக்கொண்டார்கள்.

ஆக, அரசாங்கம் ஊதியமாகக் கொடுக்கும் பணத்தில் 1000×10000 = 10,000,000 ரூபா ரத்தினப்பிரியவின் கீழ் இயங்கிய மாபியக் கொள்ளைக்கூட்டத்திற்குக் கிடைத்தது. இராணுவ அதிகாரிக்கு நெருங்கிய முன்னை நாள் போராளியான பொறுப்பாளர் ஒருவர் சில காலங்களிலேயே பல மில்லியன்கள் பெறுமதியான மாடிவீடு ஒன்றைத் தனக்காக உருவாக்கிக்கொண்ட சம்பவத்தை சீ.எஸ்.டி ஊழியர் ஒருவர் நினைவுபடுத்தினார்.

2017 ஆம் ஆண்டு மாசி மாதம் அரசாங்கத்திற்கு ஏற்பட்ட சந்தேகங்களின் அடிப்படையில் சீ.எஸ்.டி பண்ணைகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. வேலையாட்களின் வரவு போதிய அளவு இல்லாமல் இருந்ததால், சில காலம் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்ட பின்னர், மீண்டும் ரத்னப்பிரியாவின் மாபியக் குழுவின் கைகளிலேயே சீ.ஏஸ்.டீ. ஒப்படைக்கப்பட்டது.

bandu-300x233.jpg

இவை அனைத்திற்கும் மேலாக ரத்னப்பிரிய மிகவும் சாதுரியமான வியாபாரி, தனது குழுவிற்கு மாதம் பத்தாயிரத்தை ஒப்படைக்கும் ஊழியர்களுக்கு எலும்புத்துண்டுகளை வழங்கி அவர்களை தனது எல்லைக்குள் வைத்துக்கொண்டார். ஒவ்வொரு மாதமும் கலை கலாச்சார நிகழ்ச்சிகள், விருந்துபசாராம் போன்றவற்றை நடத்தி கலகலப்பான சூழலை ஏற்படுத்தினார். அவரது குழு கொள்ளையடிக்கும் பணத்தில் தவறி விழும் பணமே இதற்குப் போதுமானதாகவிருந்தது.

இந்த வருட ஆரம்பத்தில் மீண்டும் விழித்துக்கொண்ட ரத்னப்பிரியவின் தலைமையகம் மீண்டும் கேள்விகளைத் தொடுக்க ஆரம்பித்தது. அவ்வேளையில் தாம் பண்ணை வேலையாட்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்குவதாலேயே வேலை நேரம் குறைந்துவிட்டதாக பொய்க் கணக்கு ஒன்றைச் சமர்ப்பித்த ரத்னப்பிரிய, பத்தாயிரம் ‘டீல்’ வேலையாட்களை தற்காலிக இராணுவப் பயிற்சிக்கு வருமாறு அழைத்தார். இது தொடர்பான செய்தி இனியொருவில் வெளியாகியிருந்தது. இதன் பின்னணியில் சந்தேகம் கொண்ட சீ,எஸ்,டீ தலைமையகம் ரத்னப்பிரியவை இடமாற்றம் செய்துவிட்டது.

இதுவே இன்றைய சம்பவங்களின் பின்னணி.

இனி, கடந்த பல வருடங்களாக வேலைக்குப் போகாமல், இராணுவ அதிகாரியின் கண்காணிப்பு இல்லாமல், இடைக்கிடை களியாட்ட நிகழ்வுகளுக்கு மட்டுமே சென்றுவந்துவிட்டு 20 ஆயிரம் ரூபாவை இலவசமாகப் பெற்றுக்கொண்டவர்களின் நிலை என்னாவது?

பல வருடங்களாக 20 ஆயிரம் இலவசத்தோடு இணைந்த புதிய வாழ்கைக்குப் பழக்கபடுத்திக்கொண்ட ஊழியர்களின் கதி இனி எனாவது? தமது முழு வாழ்க்கையையும் மீழமைத்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதுவே அவர்களின் கண்ணீருக்குக் காரணம். தவிர, கண்ணீர் விட்டால், அதிகாரியின் இடமாற்றம் திரும்பப் பெற்றுக்கொள்ளப்படும் என்ற நம்பிக்கையும் அவர்களிடமிருந்தது.

ஆக, இராணுவ அதிகாரி தியாகியோ, மக்கள் துரோகிகளோ இல்லை.

இவை அனைத்திற்கும் மேலாக, இராணுவம் என்பது அரசின் ஒடுக்குமுறைக்கருவி. அதுவும் இலங்கை இரணுவம் பேரினவாதத்தால் நச்சூட்டப்பட்ட இயந்திரம். இதனை ஆழமாகப் புரிந்துகொண்டு புரட்சிகரச் சிந்தனையை நோக்கி மக்களை வழிநடத்த அரசியல் தலைமைகள் கிடையாது. புலம்பெயர் நாடுகள், முகநூல்,தமிழ் நாடு, மிஞ்சிப்போனால் பாராளுமன்ற அரசியல்வாதிகள் என்ற எல்லைக்குள் முடக்கப்பட்யடு முடமாக்கப்பட்ட அரசியல் மக்களைத் துரோகிகளாக்குவது புதிதல்ல.

 

http://inioru.com/truth-about-panthu-ratnapriya/

Share this post


Link to post
Share on other sites

வெளியாக மற்றும் உள்ளக காலனியாதிகத்திற்குமிடையில் மிகவும் சிறிதளவு வேற்றுமைகளே உண்டு.

எல்லாவற்றிலும், வேறு எவரினும் உழைப்பை மற்றும் வளத்தை சுரண்டி இலாபம் ஈட்டுவதே முக்கிய நோக்கம்.

ஆயினும், சொறி சிங்கள லங்காவும் அதன் முதுகு சொறியம் கிந்திய, மற்றும் கேரளா நம்பபத்திரி மாஃபிய்யாக்களும் எப்படியாவது ஈழ தமிழ் தேசத்தின் பொருளாதாரம்  கொழும்பில் தங்கியிருப்பதை நிரந்தரமாக்குவதுவும் அதன் மூலம் ஈழ தமிழ் தேசத்தை  சிங்களத்திடற்குள் சீரழிப்பதுவுமே நீண்ட கால நோக்கங்கள் ஆகும்.

இது எல்லாம் ஓர் விதமான சலுகைகள், உரிமைகளை மறக்கடிப்பதற்கு.

Share this post


Link to post
Share on other sites

அப்பாடா! ஒரு மாதிரி அந்த மக்கள் மீதும் குற்றம் சுமத்தியாசசு 

 

 

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

எமது தமிழ் அரசியல் பிரதிநிதிகள் மக்களுக்கான பணத்தை ஆட்டைபோட்டது மற்றும் மாகாண சபைக் கூட்டங்களுக்கு உறுப்பினர்கள் ஐம்பது சதவீதற்குமேலாக சமூகமளிக்காதது, சி வி கே சிவஞானம் அவர்கள் யாழ் கூட்டுறவு அமைப்பின் பணத்தை தனியார் நிதி நிறுவனத்தில் சட்டத்துக்குப் பிறம்பாக வைப்பிலிட்டது, முதலமைச்சரி செயலாளராகவிருந்த விஜயலட்சுமி வருமானத்துக்குமேல் பணம் சம்பாதித்தது. அங்கயன் இராமநாதன் வடக்கின் வாந்தம் எனும்பெயரில் ஒதுக்கப்பட்ட பணத்தில் பெற்றோல்செற் கட்டியது, வடக்குக் கிழக்கு அதிகாரிகள் அரசபணத்தைக் கையாடல் செய்வது இவைகளைப்பற்றியும் இனியொரு எழுதினால் நல்லது. 

சிங்களவன் பேரினவாதி அவன் தனக்கு எடுத்தில் மிஞ்சியதையாவது முன்னைநாள் போராளிக்குக் கொடுக்கிறான் யாழ் உடாநாட்டில் வாழும் எத்தனை தொழில் அதிபர்கள் முன்னைநாள் போராளிகளுக்கு வேலை கொடுத்தவர்கள் எண்ணிச்சொல்லுங்கோ. தேர்தல் செலவுக்குப் பணம்சேர்க்க கனடா ஐரோப்பிய செல்லும் தமிழ் அரசியல்வாதிகள் இதுவரை போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிதியம் ஒன்றை ஆரம்பிபது தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடாத்தியிருக்கா சரி அப்படியான யோசனையாவது யாரிடமும் இருக்கிறதா? போரில் பாதிக்கப்பட்டவர்க்கான ஒரு சட்ட வல்லமைகொண்ட நிதி அமைப்பை உருவாக்கி தேர்தல் செலவுக்கு விமான ஏறுமாப்போல் புலம்பெயர் நாடுகளில் போய் தமிழர்களிடமும் அந்தந்த நாடுகளிடமும் இதுவரை இவர்கள் கோரவில்லையே.

அப்போது சிங்களவன் செய்தால் அதில் ஓரளவாவது நன்மைபெற்ற பாதிக்கப்பட்டவன் அவனுக்கு நன்றியாக இருப்பாந்தானே அதுக்கு ஏன் இப்படி முறுகுகிறியள்.

துக்காக சிங்கள ஏகாதிபத்யம் தமிழர்க்குச் சரியானதைச் செய்கிறது என வாதிடவில்லை நாம் இதுகூடச் செய்யவில்லையே.

  • Like 2
  • Thanks 1

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this