• advertisement_alt
 • advertisement_alt
 • advertisement_alt
nunavilan

இந்துக்களை கொச்சைப்படுத்தவே மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி – வடிவேல் சுரேஸ் nShare

Recommended Posts

இந்துக்களை கொச்சைப்படுத்தவே மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி – வடிவேல் சுரேஸ்

Share

vadivel-suresh

காதர் மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டிலுள்ள இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த 7 பேருக்கு இன்று பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்பட்டன. குறித்த நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் 9 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இதன்படி, காதர் மஸ்தானுக்கு வடக்கு அபிவிருத்தி, மீள்குடியேற்றம், இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளன.

இங்கு முஸ்லிமொருவருக்கு எவ்வாறு , இந்து விவகார பிரதி அமைச்சுப் பதவியை வழங்கமுடியும். நல்லாட்சியில் ஒரு இந்துக்களும் இல்லையா குறித்த அமைச்சுப்பதவியை வழங்குவதற்கு.

இந்த செயற்பாடு இந்துக்களை கொச்சைப்படுத்தும் அவமானப்படுத்தும் செயற்பாடாக அமைந்துள்ளது. இதனை எந்தவொரு இந்துவும் அனுமதிக்க முடியாது.

இது தொடர்பில் ஜனாதிபதியும் பிரதமரும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாது போனால் நாட்டிலுள்ள அனைத்து இந்துக்களின் எதிரப்பையும் சந்திக்க நேரிடும்.

இதேவேளை, காதர் மஸ்தானும் நானும் இயல்பாகவே நல்ல நண்பர்கள். எனக்கும் அவருக்குமிடையில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது. இவ்வாறு முஸ்லிம் ஒருவருக்கு இந்து விவகாரம் தொடர்பில் ஒரு அமைச்சுப்பொறுப்பை வழங்கினால் இந்துக்கள் இந்த விடயத்தை எவ்வாறு நோக்குவரென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.(ச)

http://www.dailyceylon.com/160784

Share this post

Link to post
Share on other sites

சரிவிடுங்க,

ஒரு  இந்துவுக்கு முஸ்லீம் விவகார அமைச்சு பதவி கொடுத்திருந்தால் மன்னரே நியாயம் கேட்கும் அளவிற்கு பிரச்சனை சவுதி வரை போகும்.

ஒரு முஸ்லீமுக்கு இந்து அமைச்சர் பதவி கொடுத்தால் பிரச்சனை சங்கானைவரைகூட போகாது,போனாலும் நமது லோக்கல் மன்னர்களே,  முஸ்லீம்களுக்கு நாங்கள் துரோகம் செய்கிறோம் என்று ஆரம்பிப்பார்கள்..

அந்த துணிவில்தான் இப்படி பண்ணியிருப்பார்கள், நீங்கள் மனசை உடையவிடாதீர்கள் வடிவேலு... 

Share this post

Link to post
Share on other sites

35142218_255674901644703_5596505449416359936_n.jpg?_nc_cat=0&oh=0b8ccd55772aa449f88ba7068da41c37&oe=5BB1A805

கோயிலுக்கு.. இனி,  வேட்டி  கட்டலாமா?

Edited by தமிழ் சிறி

Share this post

Link to post
Share on other sites

ஒரு தமிழன் தனது மொழியில் தனது கடவுளையே வணங்காமல் சமசுகிறிதத்தில் வணங்கும் பரந்த மனம் கொண்டவன் என்பது மைத்திரிக்கு நன்றாகவே தெரியும்.:grin:
 
 • Like 1
 • Haha 1

Share this post

Link to post
Share on other sites

“இந்துக்கள் வழிபடும் மாடுகளைக் கொன்றுஉண்ணும் இந்துக் கலாச்சார பிரதி அமைச்சர் மஸ்தான், நீறணிந்து சந்தனமிட்டுச் சிவராத்திரி விழாவுக்கு வருவாரா? மறவன்புலவு சச்சிதானந்தம் அதிரடிக் கேள்வி

இலங்கையில் இந்து கலாசார அமைச்சுக்கு இன்று (12) முதலாக இஸ்லாமியரொருவரைத் துணை அமைச்சராக்கிய கொடுமையை இந்துக்களை நசுக்கும் முயற்சியாகவே பார்க்கிறோம் எனத் தெரிவித்துள்ள இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் இந்து கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள் எனவும் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார். (Close Hindu Cultural Center forget Maravanpaluvu Satchidananthan)

இன்று செவ்வாய்க்கிழமை (12) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் காதர் மஸ்தானுக்கு இந்து விவகாரப் பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து விசேடமாகக் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏனைய சமயத்தவர்களைக் காபீர்கள் (நீசர்கள்) எனக் கற்றவர், உருவ வழிபாட்டையே ஒத்துக்கொள்ளாதவர், இந்துக்களை இஸ்லாமுக்கு மதம் மாற்றுவதையே இலக்காகக் கொண்ட குழு சார்ந்தவர், இந்துக்கள் வழிபடும் மாடுகளைக் கொன்று உண்பவர், இந்து ஒருவர் தன் சட்டைப் பைக்குள்ளேயேனும் இந்துக் கடவுளரின் படத்தை வைத்திருத்தலைக் கொடும் குற்றமாகக் கருதித் தண்டிக்கும் சவூதி அரேபிய நாட்டிற்குப் புனித வழிபாட்டுப் பயணம் மேற்கொள்பவர், மட்டக்களப்புக் கல்லடியில் அம்பாறைக் கல்முனைக்குடியில் இந்துக் கோயில்களின் மேல் இஸ்லாமியப் பள்ளிவாயில்களைக் கட்டியெழுப்பியதை எப்பொழுதும் கண்டிக்காதவர், அத்தகையவர் இந்துக் கலாசார அமைச்சின் மாண்புமிகு துணை அமைச்சர்.

மாண்புமிகு துணை அமைச்சர் நீறணிந்து சந்தனமிட்டுச் சிவராத்திரி விழாவுக்கு வருவாரா?

எனவே, இந்து கலாசார அமைச்சுக்குள் புற்றுநோய்க் கருவைப் புகுத்தி அணு அணுவாக இந்துக்களை வதைப்பதைவிட மாட்சிமை தங்கிய குடியரசுத் தலைவரே இந்து கலாசார அமைச்சை இழுத்து மூடுங்கள்.நல்ஆட்சி அரசா? இந்துக்களின் கொல் ஆட்சி அரசா இந்த அரசு? எனவும் அவர் மேலும் கேள்வியெழுப்பியுள்ளார்.

http://puttalamtoday.com

Share this post

Link to post
Share on other sites
3 minutes ago, colomban said:

சும்மா விட்டுத் தள்ளுங்க....கொழும்ப்ஸ்!

சொல்லப் போனால்....இந்து சமயமே..இலங்கையில் இல்லை!

இப்பத் தான்....கொஞ்சம் ....கொஞ்சமா...துளிர் விடத் துவங்குது!

அதுக்குப் போய்.....அரை...அமைச்சர் பதவியை...வீணாக்குவதா என்று யோசித்திருப்பார்கள்!

சைவக் கலாச்சார அமைச்சர் என்றால்....கொஞ்சம் யோசிக்கத் தான் வேணும்!

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
 
<சற்று முன் ஜனாதிபதி, பிரதமர் இருவருக்கும் தெரிவித்தேன்>

தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்த நினைக்கிறீர்களா? குளறுபடிக்கு ஜனாதிபதியும், பிரதமரும் பொறுப்பேற்க வேண்டும்.

வன்னி மாவட்ட எம்பி நண்பர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருக்கட்டும். அதில் பிரச்சினை இல்லை. ஆனால், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு அமைச்சில் இருந்து இந்து கலாச்சார அமைச்சை பிரித்தெடுத்து, அதை வேறு ஒரு பொருத்தமான அமைச்சுடன் சேர்த்து விடுங்கள்.

மீன்வள துறை அமைச்சர், மீனவராகவும், கல்வி அமைச்சர், கல்வி பேராசிரியராகவும் இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இதே விதி மத விவகார அமைச்சுகளுக்கு பொருந்தாது.

இஸ்லாமிய மத விவகாரம், அமைச்சர் சுவாமிநாதனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், நான் அதை எதிர்த்து இருப்பேன்.

மதம் என்பது ஒரு உணர்வுபூர்வமான விடயம். இதில் அரசியல் விளையாட்டு கூடாது. அவ்வந்த மத விவகாரங்கள் அவ்வந்த மதத்தை சேர்ந்தவர்களிடம் இருப்பதே பொருத்தமானது.

குறிப்பிட்ட அமைச்சர் அல்லது பிரதி அமைச்சர், அந்த அமைச்சு கையாளும் மத ஸ்தலங்களுக்குள் செல்ல வேண்டும். மத தலைவர்களுடன் உரையாட வேண்டும். மத உணர்வுகளை, முழுமையாக புரிந்துக்கொள்ள வேண்டும்.

ஆகவே இன்று நிகழ்ந்திப்பது ஒரு குளறுபடி. எங்களை அவமானப்படுத்திக்கொள்ள இந்த அரசை நாம் உருவாக்க பங்களிக்கவில்லை.

இந்து கலாச்சார அமைச்சு இதுவரை, நண்பர் டி. எம். சுவாமிநாதனிடம் இருந்தது போதும். அதை பிரித்து எடுத்து வேறு ஒரு பொருத்தமான் அமைச்சுடன் சேர்த்து விடுங்கள்.

நண்பர் மஸ்தான், மீள்குடியேற்ற, புனர்வாழ்வு பிரதி அமைச்சராக இருக்கட்டும்.

இல்லாவிட்டால், இதை தமிழ் இந்துக்களை பலவீனப்படுத்தும் செயற்பாடாகவே நாம் கருதுவோம்.

Image may contain: 6 people, people smiling, people standing and outdoor
 
 • Like 2

Share this post

Link to post
Share on other sites

ஒரு பிரதி அமைச்சர் பதவிக்கு புடுங்குப்பாடுகள் மிக அதிகம். 

ஆனால் இதற்குப்பின்னால் இருக்கும் அரசியலைப் புரிந்துகொள்ளும் பக்குவம் நமக்கு அவசியம்.

சமீப கால இந்திய தூண்டுதலில் “கத்தும்” சில காவிகளின் செயற்பாடும், இதுவரை கண்டறியா இணையங்களில் வரும் செய்திகளும், அரசின் தற்போதைய செயற்பாடும் அவர்களுக்கு தேவையான அரசியல் இலக்கை நோக்கியே இருக்கின்றன.

இதுபற்றி நாங்கள் விழிப்படையாவிட்டால்  இருண்டயுகம்  தொலைவில் இல்லை.

எனக்கென்னவோ அரசு எதை நினைத்து இதை செய்ததோ அது மிகச்சரியாக நடக்கிறது.

 • Like 1
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, புங்கையூரன் said:

சும்மா விட்டுத் தள்ளுங்க....கொழும்ப்ஸ்!

சொல்லப் போனால்....இந்து சமயமே..இலங்கையில் இல்லை!

இப்பத் தான்....கொஞ்சம் ....கொஞ்சமா...துளிர் விடத் துவங்குது!

அதுக்குப் போய்.....அரை...அமைச்சர் பதவியை...வீணாக்குவதா என்று யோசித்திருப்பார்கள்!

சைவக் கலாச்சார அமைச்சர் என்றால்....கொஞ்சம் யோசிக்கத் தான் வேணும்!

புங்கை 

எனக்கு ஓர்விடயம் விள‌ங்கவில்லை

என்னுடைய ஒ/ல் சேர்டிபிகேட்டிலேயும் நான் சைவசமய பரீட்சை எடுத்ததாகதான் சொல்கின்றது. ஆனால் அம்மம்மா நான் இந்து மதம் என்று சொல்லித்தான் வளர்த்தார்கள். 

இந்து மதமும் , சைவ சமயமும் வேறு வேறா? 
சமயம் / மதம் இடையிலான வேறுபாடு என்ன? 
புத்த மதம் என்பது சரியா? பெளத்த‌ மதம் என்பது சரியா? 

இலங்கையில் சைவமதம் என்று ஒன்றுன்டா? இந்துக்கள் என்றல்லவா அழைக்கப்ப்டுகின்றார்கள்.

தயவு செய்து விளக்குக?

Share this post

Link to post
Share on other sites
1 hour ago, colomban said:

சிவனை முழு முதல் கடவுளாகக் கொண்டது சைவ மதம்! விஷ்ணுவை முழு முதல் கடவுளாகக் கொண்டது வைஷ்ணவம். இந்து மதம் என்பது ஒரு சாம்பார் போன்றது! தனது அனுகூலங்களுக்ககச் சைவத்தையும் வலிந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டுள்ளது! வேத நாயகன் சிவனை ஒரு சுடலையில் ஆடுபவனாகவும்,  முருகனை விஷ்ணுவின் மருமகனாகவும் ஆக்கித் தங்கள் தெய்வங்களை முன்னிலைப் படுத்துவதையே நோக்கமாகக் கொண்டு செயல் படுகின்றது! அவர்களது நம்பிக்கைகளின் படிக்கு நாங்கள் அரக்கர்களின் வாரிசுகள்! அழிக்கப் பட வேண்டியவர்கள்!கறிவேப்பிலையப் போல எங்களைப் பாவித்து விட்டு எறிந்து விடுவார்கள்! ராஜ ராஜ சோழன் ஒரு நல்ல உதாரணம்! பெரிய கோவிலில் ஒரு மூலையில் ஓரமாக நிற்க கூட அவனுக்கு அனுமதியில்லை! மிசசம் பின்னர் எழுதுகிறேன்!

 • Like 8

Share this post

Link to post
Share on other sites
15 minutes ago, புங்கையூரன் said:

புலிகளும்  அரசும்  பேசிக்கொண்டிருக்கும்  போது 

இணைத்தலைமைநாடுகள்  என்றொன்று உள்ள வந்துதே

அப்படித்தானே  அண்ணா..?

Edited by விசுகு
 • Thanks 1

Share this post

Link to post
Share on other sites
17 minutes ago, புங்கையூரன் said:

கட்டாயம் எழுதுங்கள். 

இதை பற்றி அறிய மேலும் ஏது தமிழ் மொழியிலான link இருந்தால் தாருங்கள்.

Share this post

Link to post
Share on other sites
54 minutes ago, விசுகு said:

புலிகளும்  அரசும்  பேசிக்கொண்டிருக்கும்  போது 

இணைத்தலைமைநாடுகள்  என்றொன்று உள்ள வந்துதே

அப்படித்தானே  அண்ணா..?

மாணிக்க வாசகர் காலத்தில் கூட, அவர் ஒரு பிராமணராக இருந்தும்....தென்னாடுடைய சிவனே போற்றி...என் நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று தானே பாடுகிறார். சம்பந்தரும்... குரை கடலோரம் ...நித்திலம் கொழிக்கும் கோண மா மலையமர்ந்தாரே.. என்று மரியாதையுடன் தானே சிவனை விழித்துப் பாடுகிறார்! சைவத்தையும் தமிழையும் இழிவு படுத்தல் ராஜ ராஜன் பிராமணர்களைத் தலையில் தூக்கி வைத்த பின்னர் தான் தொடங்கியிருக்க வேண்டும்!

 • Like 1

Share this post

Link to post
Share on other sites
18 hours ago, nunavilan said:

காதர் மஸ்தானுக்கு இந்து விவகார பிரதி அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளமையானது நாட்டிலுள்ள இந்துக்களை கொச்சைப்படுத்தும் செயல்

சம்பந்தன்-சுமந்திரன் கும்பல் முண்டுகொடுத்து நல்லாட்சி என்ற பெயரில் இயங்கும் மைத்திரி-ரணில் தலைமையிலான சிங்கள-பௌத்த பயங்கரவாத அரசில் இதுபோன்று நடைபெறுவதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது?

கிறிஸ்தவர்களுக்கோ, இஸ்லாமியர்களுக்கோ, பௌத்தர்களுக்கோ உள்ள மதநிர்வாக (அரைகுறை நிர்வாக) கட்டமைப்பு சைவர்களிடம் (இந்துக்களிடம்) இல்லை. அதனால் ஒன்றிணைந்து குரல்கொடுக்கும் வலுவை சைவர்கள் இழந்துள்ளனர். பொதுவிடயங்களில் கூட சைவ (இந்து) அமைப்புக்கள் இணைந்து செயற்படுவது மிக மிக அரிது.  

அதீத சுயநலன்களின் வெளிப்பாடுகளில் ஒற்றுமையின்மையும்  ஒன்று!

Share this post

Link to post
Share on other sites

ஒரு நானாவை சைவம் வளர்க்க விடமாட்டியள் போல் அந்தாழும் விலக போகுதாம் என்று பார்த்தேன் செய்தி:grin:

Share this post

Link to post
Share on other sites
17 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

ஒரு நானாவை சைவம் வளர்க்க விடமாட்டியள் போல் அந்தாழும் விலக போகுதாம் என்று பார்த்தேன் செய்தி:grin:

நானா  முதலில்   தமிழன் என்று  சொல்லட்டும்

பின்னர்......??

Share this post

Link to post
Share on other sites
4 minutes ago, விசுகு said:

நானா  முதலில்   தமிழன் என்று  சொல்லட்டும்

பின்னர்......??

அவனுகள் சொன்னதில்லை ஆனால் நாங்கதான் சொல்லி கொள்கிறோம் தமிழ் முஸ்லீம் என :grin:

 • Like 2

Share this post

Link to post
Share on other sites

'எந்த மதம் சார்ந்தவராயினும் நம்பகத்தன்மை (Integrity) போதுமே' என்பது கொள்கை அடிப்படையில் சரியாகத் தோன்றலாம். ஆனால் நடைமுறை விவேகம் ( practical wisdom )  இல்லாதது. மேலும் வடிவேல் சுரேஸ் சொல்வதைப்போல தமிழர்களில் பெரும்பான்மையினரைக் கொச்சைப்படுத்தும் சிறுமதியும் சிங்களப் பேரினவாத அரசுக்கு இருக்கவே செய்யும்.

Share this post

Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now