Jump to content

வ.ஐ.ச.ஜெயபாலன்


Recommended Posts

புல்லுமலையும் யாழ்ப்பாணம் முஸ்லிம் தெருவும். - வ.ஐ.ச.ஜெயபாலன்
.
கிழக்கில் புல்லுமலையில் முஸ்லிம் நிறுவனமொன்று குடிநீர் அடைக்கும் தொழிற்சாலை அமைக்க முனையும் பிரச்சினையும் இதேபோல வடக்கில் யாழ்ப்பாணத்தில் முஸ்லிம் தெருவில் தமிழர்கள் கோட்டல் கட்டும்பிரச்சினையும் கவலை தருகிறது. உள்ளூர் மக்களால் நியாயமான சூழலியல் கலாச்சார காரணங்களுக்காக எதிர்க்கபடும் நிலையில் இரண்டு தரப்பிலும் முதலீடு செய்கிறவர்கள் காணி உரிமம் அனுமதி என்பவை பெற்றுள்ளதாக கூறுகிறார்கள். மாறிவரும் தேசிய சர்வதேச அரசியல் சூழலில் மக்களின் சமதமில்லாமல் இத் திட்டங்கள் நெடுங்காலத்துக்கு இயங்கும் வாய்ப்பில்லை. 
. 
,படுவான்கரையை நன்கு அறிந்தவன் என்கிற வகையில் குறித்த பிரதேசங்களில் ஏராவூர் ஓட்டமாவடி முஸ்லிம்களுக்கும் நிலமும் கால்நடை வளங்களும் இருந்தது என்பதை அறிவேன். யுத்தத்தால் வெளியேறிய படுவான்கரை முஸ்லிம்களை ஏறாவூரில் தோழன் பசீர் சேகுதாவுத் மூலமும் ஓட்டமாவடியில் எஸ்.எல்.எம் ஹனீபா மச்சான் மூலமும் தொடர்புகொண்டு பேசி இருக்கிறேன் குறித்த நிலம் முஸ்லிம்களுடையதாக இருக்கலாம். தமிழர் ஒருவர் 1985ல் பதிவுபெற்ர ஆவனத்தின் அடிப்படையில் உரிமை கோருவதாக தெரிகிறது. இப்பிரச்சினை மக்கள் மன்றத்திலல்ல நீதிமன்றத்தில்தான் தீர்த்து வைக்கமுடியும். ஆனால் சூழலைபாதிக்கும் வகையிலான நிலப்பயன்பாட்டு பிரச்சினை மக்கள் மன்றப் பிரச்சினையாகும். கிழக்குமாகாண சூழலியல் பிரச்சினைகளில் நாளைக்கு இணைந்து பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வாழப்போகிற தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் ஆர்வம் காட்டவேண்டும். 
.
யாழ்பாண முஸ்லிம்கள் தங்கள் காணிகளை தமிழருக்கு விற்க்கவேண்டாமென தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கிறேன். எனினும் தொடர்ந்தும் காணிகள் தமிழருக்கு விற்கப்பட்டுகிறது. கிழக்கிலும் இனம்மாறி நிலம் விற்க்கபடுவது தொடர்பான விவாதங்கள் உண்டு. காணிச் சந்தை பொதுவானது. யாரும் விற்று வாங்கலாம். எனினும் சில இன முரண்பாடுகள் உருவாகினால் சந்தை அதனை கருத்தில் கொள்ளவாண்டும், இவை அடிப்படையில் நாளைய தமிழ் முஸ்லிம் சந்ததிகள் முகம்கொடுக்கபோகிற பிரச்சினை, . இவைபற்றியெல்லாம் தமிழ் முஸ்லிம் இளஞர்கள் பேசி முடிவுகாணவேண்டும். கிழக்குமாகாணக் காணிகள் யாருக்கு சொந்தமாக இருப்பினும் பிரதேச மக்களைப் பாதிக்கக்கூடிய வகையில் பயன்படுத்தப்படுவது தமிழர்களாலும் முஸ்லிம்களாலும் எதிர்க்கப் படவேண்டும். யாழ்பான முஸ்லிம் தெருவாக இருந்தாலென்ன அல்லது கிழக்கில் புல்லுமலையாக இருந்தாலென்ன அந்த அந்த பகுதி மக்களின் எதிர்ப்பை மீறி ஒரு கோட்டல் அல்லது குடிநீர் தொழிற்சாலை கட்டும் முயற்ச்சி ஏற்றுக்கொள்ள முடியாதது என தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் இணைந்து குரல் கொடுக்கவேண்டும். இவை இனரீதியான கலாச்சார பிரச்சினை மட்டுமல்ல மகளின் வாழ்வாதரங்களை அழிக்கும் பிரதேசத்தை மாசுபடுத்தும் சூழலியல் பிரச்சினையும்கூட.. 
. 
ஏற்கனவே அதிக கோட்டல்கள் கட்டப்பட்டுள்ள நிலையில் யாழ்பாண நகரம் அதிகரித்த சூழல்மாசுபட்ட நகரமாக மாறிவிட்டது. யாழ்பாண நகர எல்லைக்குள் திடக்கழிவு குப்பை அகற்றுதல் குடிநீர் வளங்குதல் உட்பட பல சூழல் பிரச்சினைகள் பூதாகரமாகி வருகிறது. .படுவான் கரை மேற்க்கு எல்லைப் பிரதேசத்தில் வர்த்தக ரீதியாக நீர்டுக்கும் பிரச்சினை பாரதூரமான சூழலியல் பிரச்சினைகளை ஏற்படுத்தும். நிலத்தடி நீர்பிரச்சினை தொடர்பான நெருக்கடிகள் உன்னிச்சை நீர்பாசன திட்டத்தின் நீர் ஆதாரங்களில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்தும். இத்தகைய அழுத்தங்கள் நிச்சயமாக உன்னிச்சைக் குழத்தில் இருந்து எழுவான்கரை தமிழ் முஸ்லிம் கிராமங்களுக்கு குடிநிர் வழங்கும் திட்டத்தை பாதிக்கும்.
.
தமிழ் முஸ்லிம் சமூக சக்திகளிடையே முரண்பாடுகள் கூர்மையடைந்துவரும் இந்த தருணத்தில் இளைஞர்களூக்கிடையில் ஏற்படக்கூடிய நீதியும் நடுநிலையும் கொண்ட பேச்சுவார்த்தை உறவுகளும் அமைப்புகளுமே தீர்வாகும். 
.
வல்லமையற்ற மக்கள் ஆதரவில்லாத ஏழைக் கவிஞனான என்னால் யாழ்ப்பாணம் முஸ்லிம் தெருவில் மக்களை எதிர்த்து கோட்டல் காடுகிறவர்களையும் புல்லுமலையில் மக்களை எதிர்த்து தண்ணீர் அடைக்கும் தொழிற்சாலை கட்டுகிறவர்களையும் பூண்டோடு நாசமாய் போகவென மனம் நொந்து சபிக்க மட்டுமே முடியும். அறம்பாடத்தான் முடியும்.
. 
கிழக்கு மாகாணத்தில் இத்தகைய பொதுப்பிரச்சினையை எப்படி அணுகுவது? வளங்கள்பற்றிய பொதுப்பிரச்சினையை அணுக இதுவரை கிழக்கு மாகாண நீராதரங்களில் அக்கறையுள்ள தமிழ் முஸ்லிம் இணைஞர்களுக்கிடையில் பேச்சுவார்த்தைகளோ பொது அமைப்புகளோ உருவாகவில்லையென்பதுதான் கால துயரம். .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.   கை காட்டலும் தொடரும்🤣
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.