Jump to content

காலா : இன்னொரு பராசக்தி - ஷோபாசக்தி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

காலா : இன்னொரு பராசக்தி

kala-169x300.jpg

இப்போதெல்லாம் திரையரங்குகளிற்குச் சென்று தமிழ்ப் படம் பார்ப்பதில் ஆர்வம் போய்விட்டது. வயதாக வயதாகச் சகிப்புத்தன்மை குறைந்துவருவது வழமைதானே. ஆனால் இன்று திரையரங்கம் சென்று காலா பார்த்தேன். 

பாரிஸில் கடந்த மூன்று மாதங்களாகவே தொடருந்து வேலைநிறுத்தம். ‘சனாதிபதி மக்ரோன் அவர்களே பிரான்ஸ் விற்பனைக்கல்ல’ என்பது போராடும் தொழிலாளர்களின் முழக்கமாயிருக்கிறது. இந்த தொடருந்துப் பிரச்சினையாலும் திரையரங்கில் முதற் சில காட்சிகளில் ரஜினி ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரக் கூச்சல்களுக்கு அஞ்சியும் சில நாட்கள் கழித்து படத்தைப் பொறுமையாகப் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் இன்று காலைவரை இருந்தேன். ஆனால் தினமலர், ‘ரஞ்சித் சூழ்ச்சி வலையில் ரஜினி’ எனச் செய்தி வெளியிட்டிருப்பதைப் பார்த்ததும் ஒத்திப்போட்டிருந்த ஆர்வம் பிடரியில் உந்தித்தள்ள தியேட்டருக்குப் போய்விட்டேன்.

அண்மையில் ஒரு நேர்காணலில் இயக்குனர் பா. ரஞ்சித், பராசக்தி திரைப்படத்தைத் தான் திரும்பத் திரும்பப் பார்ப்பதாகக் குறிப்பிட்டிருப்பார். திரையில் நிகழ்ந்திருப்பதும் அதுதான். பராசக்தி வெளியாகி எழுபது வருடங்கள் கழித்து இன்னொரு பராசக்தி. ஆனால் கருத்துவீச்சில் முன்னதிலும் சிறப்பாக, மேலும் தெளிவாக!

காலாவின் திரைப்பட வடிவம் பராசக்தியின் வடிவம்தான். மிக வெளிப்படையான இந்துத்துவ எதிர்ப்பு. கடவுள் மறுப்பு. சாதி மறுப்பு. பராசக்தி போலவே பிரச்சாரத்திற்காகவே எழுதப்பட்ட வசனங்கள். பராசக்தியையும் மீறி வெளிப்படையாக அடித்தள மக்களின் உரிமைகளைப் பேசும் படம். பராசக்தி வரும்போது சோசலிஸ்ட் நேரு ஆட்சியிலிருந்தார். காலா வரும்போது பாஸிஸ்ட் மோடி ஆட்சியிலிருக்கிறார். பராசக்தி காலத்தை விட இன்றைய காலம் அபாயமானது.

பராசக்தியில் கூட குறிப்பான குறைபாடுகளிருக்கும். ஓ ரசிக்கும் சீமானே என ஒரு ‘அய்ட்டம்’ டான்ஸிருக்கும், இதோ இந்த ஜாலக்காரி ஜாலி என்று வசனமிருக்கும். நாயகன் வாழ்ந்து கெட்ட பெரிய குடும்பத்து பிள்ளையாக இருப்பான். ஆனால் காலாவில் பெண்களை இழிவுபடுத்தியோ சீண்டியோ ஒரு வசனம் கூடக் கிடையாது. காட்சிகளில் ஆபாசம் துளியும் இல்லை. தமிழ்ச் சினிமாவில் பக்திப் படங்களில் கூட ஆபாசமிருக்கும். காலாவில் பெண்கள் போராட்டத்தில் முன்னணியில் நிற்கிறார்கள். பராசக்தியில் கல்யாணி வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள். காலாவிலோ அவள் போலிஸைப் போட்டு வெளுக்கிறாள். காலாவின் முதன்மைக் கதாமாந்தர்கள் அனைவரும் தலித்துகள் அல்லது இஸ்லாமியர்கள். ‘மாவீரன் கிட்டு’ திரைப்படத்தையும் இப்படிச் சொல்வார்கள். ஆனால் அங்கே அது கதையோடு ஒட்டிவரும். காலாவிலோ கதையும் கத்தரிக்காயும் என்று சொல்லிவிட்டு பார்த்துப் பார்த்துப் பாத்திரங்களைக் கொண்டுவந்து தங்களது நோக்கத்திற்காகப் பொருத்தியிருக்கிறார்கள். பராசக்தியின் அதே வார்ப்பு. 

இந்திய தேசமே இந்துத்துவத்திற்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் நேரத்தில், ராமர் கோயிலைக் கட்டுவதே ஆதார அரசியலாகியிருக்கும் நிலையில் ராமனை தீமையின் உருவகமாக்கி அதைத் திரும்பத் திரும்பத் திரையில் காட்டியிருப்பதெல்லாம் நாம் கொண்டாடித்தீர்க்க வேண்டிய விஷயம். 

கபாலி படத்தில் நாயகனை டான் ஆகச் சித்திரித்ததில் எனக்கு முறைப்பாடு இருந்தது. அதை ‘விகடன் தடம்’ நேர்காணலில் குறிப்பிட்டிருந்தேன். காலாவில் அந்தக் குறையும் இல்லாமற் போயிற்று. காலாவுக்கு கை எழ மாட்டேன் என்கிறது. அடிவேறு வாங்கிவிட்டு ஜாலியாகச் சமாளிக்க வேறு செய்கிறார். ஏதோ முற்காலத்தில் அடிதடிக்காரனாக இருந்தார் என்பதோடு அடிதடி அத்தியாயம் முடிந்து போகிறது. ஒரு சூப்பர் ஹீரோவாக இல்லாமல் சாதாரண மனிதனாக முடிந்துபோகிறார் காலா. 

இது ரஜினி படமா அல்லது ரஞ்சித் படமா? முழுக்க முழுக்க ரஞ்சித் படம். ரஜினியின் படங்களுக்குரிய எந்த அம்சமும் துளிகூட இந்தப் படத்தில் கிடையாது. முக்கியமாகப் பெண்களுக்கு கலாசாரம் குறித்து பாடம் நடத்தும் ரஜினி கிடையாது. ‘ஆண்டவன் சொல்றான் அருணாச்சலம் செய்றான்’ போன்ற அரை மெண்டல் வசனங்கள் கிடையாது. ரஜினியின் தன்னிலையை முன்னிலைப்படுத்தி “வர வேண்டிய நேரத்தில் வருவேன்” போன்ற பஞ்ச் வசனங்கள் கிடையாது. முக்கியமாகப் பாம்பு கிடையாது. வழமையாகத் தனது வேகமான ஜிமிக்ஸ்களால் ரஜினி திரையில் கவர்வார். ஆனால் காலாவில் நானா படேகரின் தங்கமான நடிப்புக்கு முன்னால் வேங்கையன் மகன் சத்தமில்லால் நிற்கிறார்.

சரி..பிரச்சாரம் பண்ணினால் ஆயிற்றா..இந்துத்துவ எதிர்ப்பு சொன்னால் ஆயிற்றா? அரசியல் சரிகளோடு படம் எடுத்தால் போதுமா? ஒரு சினிமாவுக்கு ஆதாரமான அழகியலும் கலையமைதியும் தர்க்கமும் என்னவாயிற்று என்ற கேள்விகள் யாருக்காவது எழலாம். ஆனால் இந்தக் கேள்விகளில் ரஞ்சித்துக்கு கிஞ்சித்தும் அக்கறையிருக்காது என்றே நினைக்கிறேன்.

ஏனெனில் பா.ரஞ்சித் தான் செல்லவேண்டிய பாதையில் தன்னுடைய சினிமா மொழியில் தன்னுடைய இலக்கில் மிகுந்த நம்பிக்கையாகவும் தெளிவாகவும் உள்ளார் என்பதைக் காலா தெரிவிக்கிறது. வெறும் வணிக வெற்றி அல்லது வெறும் கலாபூர்வமான வெற்றியல்ல அவரது இலக்கு. சாதியொழிப்பு – இந்துத்துவ எதிர்ப்பு அரசியலுக்கான கருவிதான் அவருக்குச் சினிமா. 

அதுக்காக அவர் திரையில் என்ன வேண்டுமானாலும் செய்வார், எப்படி வேண்டுமானாலும் படம் எடுப்பார் என்றுதான் தோன்றுகிறது. காலாவின் இறுதிக்காட்சியும் மாறிவரும் வண்ணங்களும் அதற்குச் சாட்சி!

ரஞ்சித்துக்கும், காலா உருவாக்கத்தில் பணியாற்றிய மற்றைய தோழர்களிற்கும் வாழ்த்துகள்!

 

http://www.shobasakthi.com/shobasakthi/2018/06/09/காலா-இன்னொரு-பராசக்தி/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாரீஸில் மட்டும் தடையை உடைத்து வெண்திரையில் காலா வெளியிடப்பட்டுளதாக்கும்!

இலண்டனில் சினிவேர்ல்ட் சினிமாவில் லைக்காகாரர்கள் படத்தை வெளியிட்டால் நானும் போய்ப் பார்ப்பேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Image may contain: 6 people, text

 

Image may contain: 1 person, meme and text

 

Image may contain: 2 people, text

 

Image may contain: 2 people, text

//ரஜினியை ஆதரித்த காவிகள் காலா கதையை ஆதரிக்க முடியாமலிருக்கும் நிலைக்கு பெயர் தான் “பாயசத்தில் பாலிடாயில்”// 

 

Image may contain: 6 people, people smiling, text

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பின்னூட்டம் தந்து கலாய்த்தவர்களைப் பாராட்டுகிறேன். ஷோபாசக்தி வெகுசன நிலைப்பாட்டிலிருந்து வித்தியாசமாய் எழுத மெனெக்கெடுபவர். காலா பட விமர்சனத்தில் கூட ரஜினியின் மீது மென்மையைக் கையாண்டு தமது நடுநிலையை நிறுவ முயல்கிறார். முள்ளிவாய்க்கால் படுகொலைக்குப் பின்னர் 'பிரபாகரன் ஜீவிக்கிறார்' என நக்கல் கட்டுரை எழுதி ஷோபாசக்தி ஈழப் போரைக் கொச்சைப்படுத்திய போது பாதி கருணாவை அவரிடம் பார்த்தேன். சகோதர போராளிக் குழுக்களின் தலைவர்கள் கொல்லப்பட்டபோது என் போன்றோர்க்கும் தலைவர் பிரபாகரனிடம் (கள நிதர்சனங்கள் தெரியாததால்) சில கேள்விகள் உண்டு. அரசியல் அணுகுமுறை சிலவற்றிலும்‌ கேள்விகள் உண்டு. ஆனால் பொது வெளியில் விட்டுத் தருகிற அளவுக்கு பிரபாகரன் சாதாரண ஆளில்லை. உலக வரலாற்றில் தலைசிறந்த போராளி. சரி, ஒரு திரை விமர்சனத்தை ஒட்டி ஏன் இவ்வளவு எனும் கேள்வி எழுவது இயல்பு. ஷோபாசக்தி பெயரைப் பார்த்ததும் குமுறி விட்டேன் ; மன்னிக்கவும். மேலும் போராடுபவர்களை சமூக விரோதிகளாய்ச் சித்தரித்த ஒருவர் படத்தைப் பார்த்ததே பாவம். இதற்கு விமர்சனம் வேறு !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/12/2018 at 8:40 AM, சுப.சோமசுந்தரம் said:

 ஆனால் பொது வெளியில் விட்டுத் தருகிற அளவுக்கு பிரபாகரன் சாதாரண ஆளில்லை. உலக வரலாற்றில் தலைசிறந்த போராளி. 

அருமையான வரிகள், இங்கேதான் உலகத்தமிழர்கள் இணைகிறார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நம்மில் பலர் சோபா சக்தியின் காலா விமர்சனத்தை பார்த்தபின்புதான் படம் பார்த்திருப்பார்கள் , ஏன் இந்தப்படத்திற்கு இவ்வளவு மிகைப்படுத்தல் என்று ஆரம்பத்தில் புரியவில்லை ஆனால் முன்பொருதடவை எங்கோ படித்தநினைவு ரஜனி  சோபா சக்தியின் கதை ஒன்றினை பாராட்டியிருந்த்தாக , கள உறவுகள் யாராவது தெளிவு படுத்தவும் தவறாயின் எனது கருத்திற்கு மன்னிப்புக்கோருகிறேன்.
பராசக்தி படமும் பார்த்ததில்லை அனால் இந்த சோபா சக்தியின் விமர்சனத்தினை வாசித்ததின் பின் பராசக்தி படமும் ஒரு குப்பை படம் என்றேநினைக்கிறேன்
அது எந்த அளவில் சரியாயிருக்கும் என்று தெரியாது ஏனெனில் ரஜினிக்கு புலிகள் என்றால் ஆகாது அதனால் புலிகளை விமர்சித்த சோபா சக்தியின் கதையினை ஆதரித்து அவரை பிரபலப்படுத்தினதிற்கு இந்த விமர்சனம் கை மாறாக இருக்கலாம்

Link to comment
Share on other sites

சும்மா இருந்த சஙகை ஊதி கெடுத்தானாம் ஆன்டி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வெண்திரையில் பார்க்கும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை! திருட்டுத்தனமாக ரஜினி படத்தை பார்க்க விருப்பமில்லை.. 

பராசக்தி சிவாஜியின் நடிப்புக்கும் கருணாநிதியின் வசனத்திற்கும் பேர்போனது. இப்போது பார்த்தால் பிடிக்குமோ தெரியாது!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் வாயை பொத்திக்கொண்டு நடிக்கவேண்டிய நடிகர். பிறர் எழுதும் வசனங்களுக்கு நடித்து அதன் மூலம் வந்த வரவேற்புகளை அரசியலாக்க நினைத்த முழுமுட்டாள். 

இன்னும் காலம் கடந்து விடவில்லை. நான் அரசியலுக்கு வரமாட்டேன் என்று பகிரங்க அறிக்கை விட எல்லாம் சுபமே.

Link to comment
Share on other sites

பராசக்தி எழுதிய கருணாநிதி ஊரைக்கொள்ளையடித்து உலையில் போட்டவர். மறுபடியும் ஒரு மன்னராட்சி என்பதுபோல அவருக்கு பின் அவரது வாரிசுகள் ஆழவேண்டும் என்ற நிலையை உருவாக்கியவர். தற்போது உதயநிதி ஸ்டாலினை தலை என்று சொல்லவேண்டும் என்று கட்சியில் பிரச்சனை போய்கொண்டிருக்கின்றது.

பாதிக்கப்பட்ட மக்கள் யாரை எதிர்க்கவேண்டுமோ அவரே பாதிக்கப்பட்ட மக்களுக்காக போராடும் தலைவராக சித்தரித்தல். ரஜனி இந்துத்துவாவின் என்னுமொரு வடிவம். ரஜனியின் சம்பளம் பல பத்துக் கோடிகள் என்றால் ரஜனி மக்களை சுரண்டுபவர். அவரை முன்நிறுத்தி ரஞ்சித் என்ன அரசியலை செய்து என்ன மாற்றத்தை கொண்டுவர முடியும்? தாழ்த்தப்பட்டவர்கள் எழைகள் சுரண்டல் அடக்குமுறைக்கு உட்பட்டவர்களின் போராட்டங்களை அவர்கள் தான் செய்யவேண்டும். அவர்களை ஒடுக்குபவர்கள் அல்ல. ரஜனி இந்த வேடம் இட்டு நடிப்பதே என்னுமொரு சுரண்டல் தான். போராட்ட காலத்தில் தலித் மாநாடுகள் என்று சோபாசத்தியும் இவ்வாறான சுரண்டல்களில் ஈடுபட்டவர்தான். வாழ்வுக்கான போராட்ட குரலை தமது சுயநலத்துக்கு பயன்படுத்துவது மிகமோசமான செயல் என்றுதான் சொல்ல முடியும்.

மேலும் தாதா அரசியல் என்பது அது நாயகனாக இருந்தாலும் தளபதியாக இருந்தாலும் சரி வேறு பல படங்களாக இருந்தாலும் இன்றய காலாவாக இருந்தாலும் அவை இந்திய அதிகாரவர்க்க இரும்புக்கரங்களில் இறுதியாக மரணிக்கும் என்பதே யதார்த்தம். ஒடுக்கப்பட்டமக்களுக்கு போராட்ட குணத்தை வளர்க்கிறன் விழிப்புணர்வை ஊட்டுகின்றேன் என்று விழக்கில் விழுந்து மடியும் விட்டில் பூச்சிகளாக மாற்றும் அடிப்படையைக் கொண்டதே ரஞ்சித்தின் அரசியல். 

பராசக்தியாலும் காலாவாலும் எந்த நன்மையும் அரசியல் மாற்றமும் அடிபபடையில் இல்லை என்பதே அடிப்படை. பராசக்திக்கு கதை வசனம் எழுதியவன் உருவாக்கிய சுரண்டல் அரசியலுக்கு  எதிராக இன்று புதிதாக ஒரு புரட்சி தேவைப்படுகின்றது. 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.