கிருபன்

ஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?

Recommended Posts

கருணாவிற்கு அதிர்ச்சி வைத்தியமளித்த பிரபாகரன்!- இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 33

September 21, 2018
UNSET.jpg

பீஷ்மர்

2004 மார்ச் 25ம் திகதி.

இந்த நாள் மிக முக்கியமான நாள். கருணா பிரிவை எப்படி கையாள்வதென சிந்தித்துக்கொண்டிருந்த புலிகள், பிளவு பகிரங்கமாக முன்னர் அதை சமரச முயற்சிகளின் மூலம் சரி செய்ய முயன்றதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். சமரச முயற்சிகளின் மூலம் பிளவை சரிசெய்ய முடியாதென்பதை தெரிந்த பின்னர், மார்ச் 25ம் திகதி அதிரடியான ஒரு அறிவிப்பை வெளியிட்டனர்.

“எங்கள் தேசத்தையும், அதன் மக்களையும் பாதுகாப்பதற்காக கருணாவை எங்கள் மண்ணைவிட்டு அகற்ற முடிவுசெய்யப்பட்டுள்ளது“ என்பதே புலிகளின் அறிவிப்பு. அதாவது கடுமையான போரொன்று ஆரம்பிக்கப் போகிறது என்பதற்கான கட்டியமாக அது அமைந்தது.

 

அத்துடன் தமது பாணியில் இன்னொரு எச்சரிக்கையையும் இதில் இணைத்திருந்தனர். “கருணாவிற்கு எதிராக மேற்கொள்ளப்படும் ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்க்கும் எவரும் எங்கள் பாதைக்கு எதிரான துரோகிகளாக கருதப்படுவார்கள்“ இதுதான் அந்த அறிவித்தல்.

கருணா குழுவிற்கு எதிரான புலிகளின் போர் ஏப்ரல் 09ம் திகதி ஆரம்பித்தது என்று கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

கருணாகுழுவின் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னர், அவர்களின் பலத்தை புலிகள் மதிப்பிட்டனர். தலைமை செயலக புள்ளிவிபரங்களின்படி 5,750 வரையான போராளிகள் இருந்தனர். ஆனால் இதில் 2,000 பேர் கட்டாயமாக சேர்க்கப்பட்டவர்கள். இவர்கள் இதுவரை துப்பாக்கியால் ஒரு உயிருள்ள மனிதனை குறிவைத்து சுட்டே இருக்க மாட்டார்கள்.

ஏற்கனவே 200 வரையானவர்கள் வன்னிக்கு தப்பி சென்றுவிட்டனர். இவர்களைவிட ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள், இரண்டு பக்கத்தையும் சாராமல் நடுநிலை வகித்து ஒதுங்கியிருக்க முடிவு செய்தனர். அவர்ளை ஒன்றாக்கி சந்திப்பொன்றை நடத்தினார் கருணா. ஆனால் அவர்கள் யாரையும் ஆதரிக்க தயாராக இருக்கவில்லை. அவர்களை வைத்து போரிட முடியாது, முக்கியமான கட்டத்தில் காலைவாரி விடுவார்கள் என்பது கருணாவிற்கு தெரியும். அதனால் அவர்களை வீட்டுக்கே அனுப்பி வைத்தார்.

 

இப்பொழுது 2,500 பேர்தான் கருணாவின் கட்டுப்பாட்டில் உருப்படியாக இருந்தவர்கள். இதைவிட, கட்டாயமாக பிடிக்கப்பட்டவர்கள், இளையவர்கள், காயமடைந்தவர்கள் என 500 பெண்களை ஏற்கனவே வீட்டிற்கு அனுப்பியிருந்தார்கள். தேவை ஏற்பட்டால் மீண்டும் அழைப்போம், எம்மிடம் வரவேண்டுமென்றுதான் அவர்களிற்கு கூறப்பட்டிருந்தது.

கருணாவின் போரிடும் ஆட்களின் எண்ணிக்கை 2,000 ஆக சுருங்கியது.

இதில் 500 வரையானவர்களை நம்ப முடியாத நிலையில் இருந்தார்கள். தனக்கு விசுவாசமான தளபதிகளின் மூலம் செய்த கணக்கெடுப்பில் இவர்களை அடையாளம் கண்டிருந்தார்கள்.

கடும் நெருக்கடியான கட்டத்தில், தன்னிடமிருந்த படையணிகளை கருணா ஏன் குறைத்தார்?

இதற்கு இரண்டு காரணம். முதலாவது- விசுவாசமாக செயற்படுவார்கள் என்ற உத்தரவாதமில்லாத படையணிகளை கூடவே வைத்திருப்பது ஆபத்தானது. அவர்களிடமிருந்து ஆயுதங்களை களைந்து வீடுகளிற்கு அனுப்பிவிட்டால் சிக்கலிருக்காது. எப்பொழுதும் அவர்களில் ஒரு கண் வைத்திருந்தால் போதும். புலிகள் மட்டக்களப்பிற்குள் புகுந்து திடீரென அவர்களை ஒழுங்கமைக்க முடியாது. அவர்களால் உடனடி ஆபத்து ஏற்படப்போவதில்லை.

 

Frances-with-Col-Karuna-282x300.jpg

ஆனால், இதில் கருணா கவனிக்காமல் விட்ட விசயம் ஒன்றுள்ளது. கருணாவுடன் இணைந்திருக்க விருப்பமில்லாமல் வெளியேறியவர்கள், புலிகளின் இரகசிய அணிகள் உள்நுழையும்போது, அவர்களிற்கு இரகசியமாக உதவ வாய்ப்பிருந்தது. புலிகளின் இரகசிய அணிகளை உள்ளே விடாமல் தடுக்கலாமென கருணா நம்பினார். ஆனால், அதை சில நாட்கள் மட்டுமே செய்யலாமென்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை. விடுதலைப்புலிகளின் முக்கிய தளபதியாக இருந்தும், புலிகளின் ஆற்றல் எப்படியானதென்பதை கருணா புரிந்து கொள்ளவில்லை. பொட்டம்மானுடன் இருந்த தனிப்பட்ட தகராற்றினால், புலனாய்வுத்துறையின் ஆற்றலை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் அவரிற்கு ஏற்படாமல் போயிருக்கலாம்.

 

கிழக்கு பிரிவு நடந்ததும், கருணாவின் பேட்டிகள் அடிக்கடி ஊடகங்களில் வெளியாகிக் கொண்டிருந்தது. எல்லா பேட்டிகளிலும் கருணா தவறாமல் சொன்ன ஒரு விசயம்- “புலிகளின் போர் வெற்றிகளிற்கு நான்தான் காரணம். நான் இல்லையென்றால் புலிகளால் அவ்வளவு வெற்றிகளை பெற்றிருக்க முடியாது“ என்பது.

இதன்மூலம், புலிகளின் போர்த்தந்திர மூளை பிரிந்துவிட்டதென்ற பிம்பம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. புலிகளால் கருணாவுடன் மோத முடியாதென்ற அபிப்பிராயமும் சிலரிடம் இருந்தது. கருணாவை எமது மண்ணிலிருந்து அகற்றப்போகிறோம் என புலிகள் அறிவித்ததும், கருணாவுடன் மோதி புலிகள் மூக்குடைபட போகிறார் என்று ஒரு பகுதியினர் நினைத்தனர். ஒருவேளை புலிகள் தோற்றுவிட வாய்ப்பிருக்குமோ என்று பதற்றப்பட்டவர்கள் இன்னொரு சாரர்.

அதனால்தான் போர்த்தந்திரத்தில் சிறந்தவர் யார் என்ற கேள்வியெழுந்தது. இந்த கேள்விக்கு, அந்த மோதல் பதில் தந்துவிடுமென்பதால், எல்லோரும் உச்சக்கட்ட டென்ஷனில் மோதலை கவனித்துக் கொண்டிருந்தார்கள். இந்த மோதலில் வெல்பவரே ஈழ யுத்தத்தில் புலிகள் பெற்ற வெற்றிகளின் உண்மையான கதாநாயகன் என்று அர்த்தமாகும் என்றுதான் ஆய்வாளர்களும் எழுதினார்கள்.

புலிகள் மட்டக்களப்பிற்குள் எப்படியெல்லாம் ஊடுருவ வாய்ப்புள்ளதென, தனது தளபதிகளுடன் உட்கார்ந்து கருணா ஆலோசனை நடத்தினார். திருகோணமலையில் நிலைகொண்டுள்ள சொர்ணம் தலைமையிலான அணி, வெருகல் ஆற்றை கடந்து வர முயலும், போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி பொலன்னறுவ பிரதான வீதியால் வருவார்கள், அடர்ந்த காட்டுக்குள் இருந்த பெய்ரூட் பாதையால் (மட்டக்களப்பிற்கும் வன்னிக்குமான இரகசிய காட்டுப்பாதைக்கு புலிகள் வைத்திருந்த பெயர் பெய்ரூட் பாதை) இரகசியமான பதுங்கி வருவார்கள் என்று கருணாவின் தளபதிகள் ஆளாளுக்கு சொன்னார்கள். அத்தனை பாதைகளையும் கவனமாக பார்க்கும்படி கருணா உத்தரவிட்டார்.

கருணாவிடம் சில ஆட்லறிகளும், 120 mm மோட்டார்களும் இருந்தன. அவற்றையும் வெருகல் ஆற்றை குறிவைத்து நிறுத்தினார்கள்.

மட்டக்களப்பிற்கு வரும் பிரதான வீதிகள் அனைத்திலும் கடுமையான சோதனைகள் நடத்தப்பட்டன. அதேபோல கடற்புலிகளின் முகாம்களான வாகரை, பால்சேனை, சாலைத்தீவு ஆகியவற்றிலும் கருணா தனது படையணிகளை நிறுத்தினார்.

சிலநாளில் அந்த முகாம்களை அகற்றினார். கடல்வழியாக புலிகளின் பெரும் படையணிகள் நகர முடியாது, அது போர்நிறுத்த மீறலாக அமையும் என்பதால் புலிகள் அப்படியொரு முடிவை எடுக்கமாட்டார்கள் என நினைத்தார். அதேபோல பிரதான வீதிகளாலும் புலிகள் வர முடியாது, ஆயுதங்களுடன் இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளிற்குள்ளால் நுழைய முடியாதென கணக்கு போட்டார். தனது படையணிகளை, மட்டக்களப்பின் வடக்காக உள்ள கோரளைப்பற்று பகுதியில் நிறுத்தி, கடுமையான பாதுகாப்பு வலயமொன்றை உருவாக்கினார். செங்கலடிக்கு வடக்காக உள்ள பகுதிகள், கடலேரியின் மேற்கு கரை பிரதேசங்கள், தரவை-குடும்பிமலை பகுதிகளை வலுப்படுத்தினால், கிழக்கை தக்கவைக்கலாமென நினைத்தார்.

ஆனால் புலிகள் போட்டது வேறு திட்டம்.

புலனாய்வுத்துறை, மற்றும் கிழக்குடன் பரிச்சயமுள்ள போராளிகளை இரண்டு, மூன்று பேர் கொண்ட சிறுசிறு குழுக்களாக்கி, மட்டக்களப்பிற்குள் அனுப்பி வைத்தனர். அவர்கள் கிழக்கிற்குள் குழப்பங்களை ஏற்படுத்தினர். மட்டக்களப்பில் முக்கிய பொறுப்புக்களில் இருந்த யாழ்ப்பாணத்தவரை இலக்கு வைத்து கருணா குழு தாக்குதலை ஆரம்பித்திருந்தது. இப்படி இரகசியமாக ஊடுருவி சென்றவர்கள், கருணா அணிக்கு பதிலடி கொடுத்தார்கள். தாக்குதல், பதிலடியென இருதரப்பும் மாறிமாறி தாண்டவமாடியதில் கிழக்கில் பெரும் உயிரனர்த்தங்கள் ஏற்பட்டன.

இந்த ஆடுபுலியாட்டத்தை தொடர விடாமல், புலிகள் கிழக்கை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் படை நடவடிக்கையை ஆரம்பித்தனர். அது ஏப்ரல் 09ம் திகதி.

 

திருகோணமலையில் ஒழுங்கமைக்கப்பட்ட அணிகள், வெருகல் ஆற்றை சிறு தோணிகளில் கடந்து, முகத்துவாரத்தில் இறங்கினார்கள். இந்த தாக்குதலின் முன்னர் புலிகள் இன்னொரு ஏற்பாட்டை செய்திருந்தனர்.

கருணாவின் இரண்டாம் மட்ட தளபதிகள் பலர் புலிகளுடன்தான் இணைந்திருந்தனர். அவர்கள் தொலைத்தொடர்பு கருவிகள் மூலம் கருணா அணியினரை தொடர்பு கொண்டு பேசினார்கள். இந்த பிரிவு கொள்கையினடிப்படையில் ஏற்பட்டதல்ல- தனிநபர் பலவீனங்களால் ஏற்பட்டது, அமைப்பை பலவீனப்படுத்தாமல் மீண்டும் இணைந்து கொள்ளுங்கள், மீண்டும் இணைபவர்களிற்கு மன்னிப்பு உண்டு என பேசினார்கள். இதற்கு நல்ல பதில் கிடைத்தது.

கருணா அணியிலிருந்த கீழ்மட்ட போராளிகளில் பலர் தவிர்க்க முடியாமல் அங்கிருந்தவர்கள். தளபதிகளை போல அவர்களால் நினைத்த நேரத்தில் மட்டக்களப்பிலிருந்து வெளியேற முடியாது. வசதியில்லை. அதைவிட முக்கிய காரணம், பலருக்கு கிளிநொச்சி தெரியாது. இராணுவ கட்டுப்பாட்டு பகுதிகளிற்குள்ளால் செல்வதில் எப்படியான ஆபத்திருக்குமென்பது அவர்களிற்கு தெரியாமலிருந்தது. அதனால் ஒன்றும் செய்ய முடியாத நிலையில், கருணா ஆதரவாளர்களை போல தம்மை காட்டிக்கொண்டு இருந்தார்கள்.

தமது பொறுப்பாளர்கள் பலர் கிளிநொச்சிக்கு தப்பி சென்றதை அவர்கள் அறிந்திருந்தனர். தப்பிச்சென்ற பொறுப்பாளர்கள், இப்பொழுது தமக்கு எதிர்முனையில் படையணிகளுடன் வந்து நிற்கிறார்கள் என்றதும், கருணா அணியிலிருந்த பலரின் மனது மாறியது. “உங்களிற்கு எதிராக எம்மால் சண்டைபிடிக்க முடியாது. எந்த முனையில், எத்தனை மணிக்கு வருகிறீர்கள் என்று சொல்லுங்கள். நாங்கள் உங்களுடனேயே இணைந்து கொள்கிறோம்“ என்றுதான் பெரும்பாலானவர்கள் சொன்னார்கள்.

வெருகல் முகத்துவாரத்தை புலிகள் கடந்ததும், கருணா அணியிலிருந்த ஒரு தொகுதி போராளிகள் புலிகளுடன் இணைந்து கொண்டனர். புலிகளை எதிர்த்தவர்கள் சிறு தொகையினரே. அவர்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்த, மரணமானவர்கள் போக, எஞ்சியவர்கள் தப்பியோடிவிட்டனர்.

வெருகலில் ஊடுருவும் புலிகளை குறிவைத்து பத்து 120 MM பீரங்கிகளை காட்டுப்பகுதியொன்றில் கருணா அணியினர் மறைத்து வைத்திருந்தனர். புலிகளுடன் இணைந்த கருணா அணியினர், அந்த பீரங்கி நிலைகளை பற்றிய தகவல்களை சொல்லிவிட்டனர்.

2nd-lef-300x225.jpg

 

கருணாவின் அதி தீவிர விசுவாசிகளே பீரங்கி அணியில் இருந்தனர். தாக்குதல் கட்டளைக்காக காத்திருந்தார்கள். அவர்களிற்கு தெரியாமல், அவர்களின் நிலைகளின் பின்பக்கத்தால் இரகசியமாக சென்ற புலிகள், எந்த எதிர்ப்புமில்லாமல் பீரங்கிகளை கைப்பற்றினர். இதற்கு பின்னர்தான் பல்சேனையில் தரையிறக்கம் நடந்தது.

 

வாகரையை அண்டிய பகுதிகளை புலிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததும், கருணா அணியினர் ஏ 11 வீதியை கடந்து தொப்பிக்கல காட்டுப்பக்கமாக பின்வாங்கினர்.

வாகரையை இழந்தாலும் பரவாயில்லை, புலிகளை சமாளிக்க முடியுமென கருணா நினைத்தார். அதற்கு போர்நிறுத்த ஒப்பந்தத்தின் சில சரத்துக்கள் உதவுமென நினைத்தார். கருணாவின் பிரதான மறைவிடங்களாக மீனகம், தேனகம், மருதம் மற்றும் தொப்பிக்கல காட்டு பகுதிகளிற்கு புலிகளின் படையணிகள் செல்வதென்றால், மட்டக்களப்பு- பொலன்னறுவ வீதியான ஏ 11 வீதியை கடந்து செல்ல வேண்டும். பெருந்தொகையான ஆயுதங்களுடன், அதிகளவான போராளிகள் வீதியை கடப்பது போர்நிறுத்த மீறலாகும், புலிகளால் வீதியை கடக்க முடியாது. அதையும் மீறி கடக்க முயன்றாலும், இராணுவம் அதை அனுமதிக்காது என கருணா கணக்கு பண்ணினார். கருணாவின் கணக்கை உறுதிப்படுத்தும் விதமாக இராணுவமும் ஒரு நகர்வை செய்தது. ஏ 11 வீதியில் அதிகளவான இராணுவம் குவிக்கப்பட்டது.

ஆனால் புலிகள் ஏ 11 வீதியை கடக்க முடிவெடுத்தார்கள். என்ன நடந்தாலும் பரவாயில்லை வீதியை கடப்பதென புலிகள் தீர்மானித்தனர்.

உடனடியாக அரச உயர்மட்டத்திற்கு ஒரு தகவல் அனுப்பினார்கள். “எங்கள் அமைப்பிற்குள் ஏற்பட்ட உள்வீட்டு பிரச்சனையொன்றை சரி செய்துகொண்டிருக்கிறோம். இதில் இராணுவம் நேரடியாகவோ மறைமுகமாகவோ தலையிட்டால் விளைவு பாரதூரமாக இருக்கும். அது போர் நிறுத்த உடன்படிக்கையை முறித்துக்கொண்டாலும் பரவாயில்லை“. இதுதான் புலிகள் அனுப்பிய மெசேஜ்.

கருணா விவகாரத்தை புலிகள் எவ்வளவு சீரியசாக எடுத்துக்கொண்டுள்ளார்கள் என்பது அரசாங்கத்திற்கும் தெரிந்திருந்தது. தமது உள்வீட்டு சிக்கலை தீர்ப்பதில் இராணுவம் குறுக்காக நின்றால், அதை வைத்தே புலிகள் சமாதான உடன்படிக்கையை முறித்துவிடலாமென அப்போதைய ரணில் விக்கிரமசிங்க அரசு நினைத்தது. அதனால், ஏ 11 வீதியை கடக்கும் புலிகளை தடுக்காதீர்கள் என்ற உத்தரவை இராணுவத்திற்கு பிறப்பித்தார்கள்.

610x-300x199.jpg முகாம் காவலில் கருணா குழு

இந்த சமயத்தில் புலிகளின் இன்னொரு அணி, அம்பாறையின் திருக்கோவிலில் தரையிறங்கியது. அதில் கிழக்கில் முக்கியஸ்தர்கள் பலர் இருந்தனர். திருக்கோவிலில் ஒருநாள் தங்கியிருந்தபடி, மட்டக்களப்பின் கஞ்சிகுடிச்சாறில் இருந்த கருணாவின் தளத்திற்கு தொடர்பை ஏற்படுத்தினார்கள். அங்கிருந்த தளபதிகளிற்கு, இந்த பிளவின் அடி முதல் நுனி வரை புரிய வைத்தனர். வீணாண சகோதர யுத்தம் எப்படியான விளைவை ஏற்படுத்தும் என்பதையும், கருணா இனி தமிழர்களின் விடுதலைக்காக செயற்படும் வாய்ப்பில்லையென்பதையும் புரிய வைத்தனர். கிட்டத்தட்ட ஒருநாள் முழுக்க இந்த பேச்சுவார்த்தை நடந்தது. முடிவில், கஞ்சிகுடிச்சாறு முகாமில் இருந்த அனைவரும் புலிகளுடன் இணைந்தனர்.

கருணாவின் அரசியல்துறை செயலகமான தேனகம், கரடியனாற்றில் இருந்தது. இராணுவ அணிகள் நிலைகொண்டிருந்த மீனகம், தரவையில் இருந்தது. கருணாவின் தங்குமிடமான மருதம் முகாம், குடும்பிமலையில் இருந்தது. கஞ்சிகுடிச்சாறு முகாம் புலிகளிடம் வீழ்ந்ததையடுத்து, இத்தனை முகாம்களும் புலிகளின் நேரடி தாக்குதல் இலக்கிற்குள் வந்தன. ஆனால் கஞ்சிகுடிச்சாறு விவகாரம் கருணாவின் காதிற்கு போகவில்லை. காரணம், அத்தனைபேரும் ஒட்டுமொத்தமாக புலிகளுடன் இணைந்து விட்டனரே!

 

கஞ்சிகுடிச்சாறு முகாமிலிருந்தவர்களிடம் கிடைத்த தகவல்களினடிப்படையில், கருணாவின் மிக முக்கியமான இரண்டு முகாம்களை புலிகள் குறிவைத்தனர். ஒன்று தரவை. மற்றையது, வடமுனையிலிருந்த முகாம். இந்த வடமுனை முகாமில்தான், விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பிரிவு போராளிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாமென புலிகள் நம்பினார்கள்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/16784/

Share this post


Link to post
Share on other sites

கருணாவிற்கு புலிகள் வழங்கிய இரகசிய வாக்குறுதி!- இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 34

September 23, 2018
karuna_pillaiyan.jpg

கருணா தப்பிச்செல்வதற்கு முன்னர் இரகசிய உடன்பாடு எட்டப்பட்டது

பீஷ்மர்

விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்த கருணா, அதிக நம்பிக்கை வைத்தது போர்நிறுத்த ஒப்பந்தத்திலேயே. போர்நிறுத்த ஒப்பந்தத்தின் ஏற்பாடுகளை மீறி, புலிகள் பெருமளவு படையணியை, கனரக ஆயுதங்களுடன் நகர்த்த மாட்டார்கள் என கருணா நினைத்தார். ஏ 11 வீதி இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. விடுதலைப்புலிகள் அந்த வீதியை கடக்க இராணுவம் அனுமதிக்காதென கருணா நம்பினார். இந்தளவு விசயங்களையும் கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்.

புலிகள் ஏ 11 வீதியை கடந்ததுடன், அம்பாறையின் திருக்கோவிலிலும் தரையிறங்கினார்கள். அங்கிருந்தபடி கருணாவின் இளநிலை தளபதிகளுடன் தொலைத்தொடர்பு கருவிகளின் ஊடாக பேச்சு நடத்தினார்கள். கிட்டத்தட்ட ஒருநாள் முழுவதும் இந்த பேச்சு நடந்தது. களுவாஞ்சிக்குடியில் அமைந்துள்ள கருணாவின் முகாமில் இருந்தவர்களுடனேயே இந்த பேச்சு நடந்தது. கருணாவின் இரண்டாம் நிலை தளபதிகள் பலர் இந்த சமயத்திலேயே, இரண்டு மனநிலைக்கு மாறினார்கள்.

 

கருணாவிற்கு அடுத்த நிலையில் இருந்த தளபதிகள் ஜிம்கெலி தாத்தா, ரெபோர்ட் உள்ளிட்ட பலரை புலிகளின் பக்கம் மீண்டும் திருப்பியது இந்த பேச்சுத்தான். ஆனால் அந்த பேச்சு நடந்த உடனே அவர்கள் புலிகளின் பக்கம் வரவில்லை. அதன் பின்னரும் கருணாவுடன் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்களின் இரண்டு மனநிலை மூலம் கருணாவை பலவீனப்படுத்துவதையும் புலிகள் உத்தியாக பாவித்தார்கள்.

ஒரு நாள் முழுவதும் நடந்த பேச்சின்பின் களுவாஞ்சிக்குடி முகாமில் இருந்த கருணா அணியினர், மனம்மாறி புலிகளுடன் இணைந்தனர். அவர்களின் மூலமே தரவை மற்றும் வடமுனை முகாம்கள் மீது புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினார்கள்.

விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்தபோது, தனது படையணிகளை கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, கிழக்கை முழுவதும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கலாமென்றுதான் கருணா கணக்குப் போட்டார். ஆனால் அது நடக்கவில்லை. கருணாவின் கனவை புலிகளின் தொடர் நடவடிக்கைகள்தான் கலைத்தன என்றாலும், கருணாவிற்கு உயிர்ப்பயத்தை ஏற்படுத்தி, இனி கிழக்கில் நிற்க முடியாதென்ற நிலைமையை ஏற்படுத்தியது, மேலே சொன்ன இரண்டு முகாம்கள் மீதான தாக்குதலே.

%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%

 

தரவை, வடமுனையில் கருணா இரகசியமாக முகாம் அமைத்திருந்தார். ஆயுதங்களும் அங்கு சேமிக்கப்பட்டிருந்தன. கருணா அணியின் அதிஉயர்மட்ட இரகசிய முகாம்களாக அவை இருந்தன.

 

அந்த முகாம்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியபோதுதான், நிச்சயமற்ற தன்மையை கருணா உணர்ந்தார்.தனக்கு விசுவாசமானவர்கள் என யாரை அடையாளப்படுத்தலாமென்பதில் அவருக்கு குழப்பம். நம்பிக்கையானவர்கள் என அவர் நம்பியவர்கள் இப்பொழுது புலிகளுடன். கூடவே, பாதுகாப்பானதென கருதிய முகாம்களையும் புலிகளிடம் காட்டி கொடுத்து விட்டார்கள்!

தரவை, வடமுனையில் புலிகள் தாக்குதல் நடத்தியபோது, கருணா குடும்பிமலையில் இருந்த மருதம் முகாமில் இருந்தார். இரண்டு பிரதேசங்களிற்குமிடையில் அதிக தூரம் இருக்கவில்லை. எந்த நேரமும் புலிகள் மருதம் முகாமை தாக்கலாம் என்ற நிலைமை ஏற்பட்டது.

இப்படியொரு நிலைமையை கருணா எதிர்பார்க்கவில்லை. 09,10,11ம் திகதிகளில் கருணா எதிர்பாராத திருப்பங்கள் ஏற்பட்டு, அவர் மிக குழம்பிய நிலையில் காணப்பட்டார். அவர் எதிர்பார்த்ததொன்று, ஆனால் நடந்தது தலைகீழாக.

 

கிழக்கில் தனது படையணிகளுடன் நிற்க முடியாதென்ற நிலைமை ஏற்பட்டபோது கருணாவிற்கு மிக குறைந்த தெரிவுகளே இருந்தன. மீண்டும் புலிகளுடன் இணைய முடியாது. தனக்கு மரணதண்டனை விதிப்பார்கள் என கருணா நினைத்தார். வெளிநாட்டுக்கு தப்பிச்செல்வதும் ரிஸ்க் ஆனது. ஆயுள் முழுவதும் வீட்டுக்கு வெளியே தலைகாட்டாமல் பதுங்கியிருக்க வேண்டும். அப்படியிருந்தும் புலிகள் மோப்பம் பிடித்தால், போட்டுதள்ளி விடுவார்கள். அடுத்தது, அரச கட்டுப்பாட்டு பகுதிக்கு செல்வது. இதற்குள்ளும் இரண்டு தெரிவுகள் இருந்தன. ஒன்று இராணுவத்துடன் இணைந்து செயற்படுவது. இரண்டு, வெளிப்படையாக இணைந்து செயற்படாமல் இருப்பது. (இராணுவக்கட்டுப்பாட்டு பகுதிக்கு சென்றுவிட்டு, அரசுடன் எனக்கு தொடர்பில்லையென கூறினாலும் யாரும் நம்பப்போவதில்லை. ஆனால் தனித்து இயங்குகிறோம் என சொல்லிக்கொள்ளலாம்)

என்ன செய்வதென்ற குழப்பத்தில் தனது உயர்மட்ட தளபதிகளை மருதம் முகாமிற்கு 10ம் திகதி அழைத்தார். எல்லோரும் பதற்றத்துடன் இருந்தார்கள். அடுத்து என்ன செய்யலாமென்ற ஆலோசனை நடந்தது. கருணாவிற்கு மிக விசுவாசமான ஒருவர் சொன்னார்- “நாங்கள் மட்டக்களப்பில் இனி தனித்து நிலங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது. அதனால் இராணுவத்துடன் சேர்ந்து செயற்படுவோம். அப்படியென்றால்தான் புலிகளை சமாளிக்கலாம்“ என.

 

அவர் சொல்லிக்கொண்டிருந்தபோது, அங்கு சலசலப்பு உருவாகிவிட்டது. “புலிகள் எங்களுக்கு சரியான அங்கீகாரம் தரவில்லை, எம்மை வைத்தே யுத்தம் செய்கிறார்கள், எமது பகுதியை நாமே கவனிக்க வேண்டும் என்று சொன்னீர்கள். சரி, அதை ஏற்றோம். ஆனால், அதற்காக இராணுவத்துடன் எம்மால் இணைய முடியாது. நாம் காட்டுக்குள் தலைமறைவாக இருந்து புலிகள், இராணுவம் இரண்டு தரப்புடனும் போராடுவோம்“ என்றார்கள் பல தளபதிகள். இதனால் அந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

கூட்டத்தின் பின் கலந்துபேசிய தளபதிகள் பலர், கருணாவின் முடிவுடன் உடன்படுவதில்லையென்ற முடிவை எடுத்தனர். இந்த சமயத்திலேயே களுவாஞ்சிக்குடி முகாமுடன் புலிகள் தொடர்பை ஏற்படுத்தி பேசினார்கள். கருணாவை நம்பி புலிகளையும் பகைத்தாகி விட்டது, கருணாவின் முடிவுடன் தொடர்ந்து உடன்பட முடியாமலிருக்கிறதென்ற தத்தளிப்பில் தளபதிகள் இருந்த சமயத்தில், புலிகள் தரப்பிலிருந்து சாதகமான சிக்னல் கிடைக்க, பல தளபதிகள் புலிகளிடம் சரணடைய ஆரம்பித்தனர்.

மொத்தத்தில் கருணாவின் சாம்ராஜ்யம் உடைந்து கொட்டுப்பட ஆரம்பித்தது. அவருக்கு என்ன செய்வதென்று தெரியாத நெருக்கடியை, ஒவ்வொரு நாளும் அதிகம்அதிகமாக புலிகள் ஏற்படுத்தினார்கள்.

கருணா விவகாரத்தை இயன்றவரை சமரசமாக முடிக்கவே புலிகள் விரும்பினார்கள் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறோம். மிகப்பெரிய அமைப்பாக வளர்ச்சியடைந்த புலிகள், இராணுவரீதியிலான எந்த விட்டுக் கொடுப்பையும் கருணாவுடன் செய்துகொள்ள தயாராக இருக்கவில்லை. ஆனால், கருணாவிற்கு பொதுமன்னிப்பளித்து, கருணா எடுத்துக்கொண்ட சொத்துக்களுடன் வெளிநாட்டிற்கு சென்று வாழ அனுமதித்தார்கள். ஆனால் அப்பொழுது கருணா அதை ஏற்றுக்கொள்ளவில்லை.

புலிகள் கருணாவின் மீது இறுதி தாக்குதலை ஆரம்பித்த சமயத்தில், கிழக்கிலுள்ள சில பிரமுகர்கள், வெளிநாடுகளில் இருந்த சில பிரமுகர்கள், சில அமைப்புக்கள் என பல முனையில் சமரச பேச்சுக்கள் ஆரம்பித்தன. இரண்டு தரப்பிற்குள்ளும் ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்த அவர்கள் முயன்றனர். கருணா கிழக்கை விட்டு வெளியேற வேண்டுமென்ற நிலைப்பாட்டில் இருந்து புலிகள் பின்வாங்கவில்லை. ஆரம்பத்தில் இதற்கு கருணா உடன்படாததாலேயே கடுமையான மோதல் ஏற்பட்டது. ஆனால், புலிகளின் அதிரடி தாக்குதல் ஆரம்பித்த பின்னர், சமரசத்திற்கு கருணா இறங்கி வந்தார். அவருக்கு அதைவிட வேறு தெரிவுகள் இருக்கவில்லை.

இதன்மூலம் இரண்டு தரப்பும் தலா எட்டு வாக்குறுதிகளை வழங்கி, இரகசிய உடன்படிக்கைக்கு இணங்கினார்கள். இவை அனைத்துமே வாய்மூலமான இரகசிய வாக்குறுதிகள். உயர்மட்ட அளவில் நடந்த பேச்சுக்களில் பரிமாறப்பட்டவை. மிகச்சில பேர் மட்டுமே சம்பந்தப்பட்ட விசயங்கள் அவை. தமிழ்பக்கம் வாசகர்களிற்காக இப்போது அவற்றை தருகிறோம்.

karuna-300x225.jpg கருணா குழு

கருணா தரப்பிலிருந்து புலிகளிற்கு எட்டு வாக்குறுதிகள் வழங்கப்பட்டன.

♦ உடனடியாக கருணா போராட்டத்தை நிரந்தரமாக நிறுத்திக்கொள்வார்.

 

♦ கிழக்கிலுள்ள முகாம்களில் நிலைகொள்ள வைக்கப்பட்ட படையணிகளை மீளப்பெற்று, அவற்றை கலைத்து, அவர்கள் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

♦ கருணா அணியிடமுள்ள அனைத்து ஆயுதங்களையும் புலிகளிடம் மீள ஒப்படைப்பார்கள். புலிகளின் எந்தவித இராணுவ சொத்தும் கருணா தரப்பினர் வைத்திருக்க முடியாது.

♦கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், போராளிகளை உடனடியாக ஆபத்தின்றி விடுதலை செய்வார்கள்.

♦வடக்கு, கிழக்கில் இருந்து கருணா (இந்த இடத்தில் தமிழீழம் என்ற சொல்லை பாவித்திருந்தார்கள்) உடனடியாக வெளியேறுவார். எந்த காலத்திலும் இங்கு திரும்பி வர மாட்டார்.

♦எதிர்காலத்தில் நேரடியாக அல்லது மறைமுகமாக இராணுவ அல்லது அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடாமல் ஒதுங்கியிருப்பார்.

♦வெளியேறிய பின்னர் புலிகளை விமர்சிக்கமாட்டார். புலிகள் பற்றிய அனைத்து விசயங்களிலும் மௌனம் சாதிப்பார். ஊடக பேட்டிகளிலிருந்து ஒதுங்கியிருப்பார்.

♦உடனடியாக வடக்கு, கிழக்கிலிருந்து வெளியேறி, ஸ்ரீலங்கா பகுதிக்கு சென்றாலும், இயன்ற விரைவில் இலங்கைக்கு வெளியே ஒரு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்.

இதற்கு பின்னர் விடுதலைப்புலிகள் தரப்பிலிருந்து எட்டு வாக்குறுதிகள் கருணாவிற்கு வழங்கப்பட்டன. அவை-

♦ கிழக்கை விட்டோ அல்லது இலங்கையை விட்டோ கருணா வெளியேறுவதற்கு எந்த இடையூறும் செய்யமாட்டோம்.

♦ கிழக்கிலிருந்து வெளியேறி இலங்கையின் ஏனைய பகுதியில் இருக்கும்போதோ, அல்லது இலங்கையை விட்டு வெளியேறி வெளிநாட்டில் இருக்கும் போதோ, கருணாவை கொல்லும் எண்ணம் இல்லை. அப்படியொரு முயற்சி நடக்காது.

♦ கருணாவால் எடுக்கப்பட்டுள்ள புலிகளின் சொத்துக்களான பணம் மற்றும் பெறுமதியான ஏனையவற்றை திரும்ப ஒப்படைக்கும்படி கேட்கப்போவதில்லை.

 

♦ கருணாவுடன் பிரிந்து சென்ற போராளிகளிற்கு எந்த கெடுதலும் செய்யமாட்டோம். அவர்களின் இயல்பு வாழ்க்கையை தொடர அனுமதிப்போம்.

♦ அதேநேரம், கருணா அணியிலிருந்த யாராவது, மீண்டும் எம்முடன் இணைய விரும்பினால் அதை எங்களால் தடுக்க முடியாது.

♦ விடுதலைப்புலிகளின் தலைமைக்கு எதிராக, கருணாவுடன் இணைந்து சாதாரண போராளிகளை வழிநடத்திய கருணாவின் கீழிருந்த தளபதிகளையும் தண்டிப்பதில்லை. சிறிய விசாரணையின் பின்னர், அவர்கள் விரும்பிய முடிவை எடுக்கலாம்.

♦ கிழக்கை விட்டோ அல்லது இலங்கையை விட்டோ அவர்கள் செல்ல விரும்பினால், அதற்கு எந்த தடையும் விதிக்கமாட்டோம்.

♦ கருணாவிற்கு ஆதரவு தெரிவித்த மற்றும் புலிகளின் அலுவலகங்களிற்கு நெருப்பு வைத்த, கொடும்பாவிகளை எரித்த கிழக்கு பொதுமக்களிற்கும் நிபந்தனையற்ற மன்னிப்பு வழங்குவோம். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது.

இரண்டு தரப்புடனும் பேச்சு நடத்திய சில இடைத்தரகர்களின் மூலமே இந்த வாக்குறுதிகள் பரிமாறப்பட்டன. கிழக்கு விசயத்தை சுமுகமாக முடிக்க வேண்டுமென்பதில் பிரபாகரன் எவ்வளவு அக்கறையாக இருந்தார் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம். ஆனால் புலிகள் ஒரேயொரு நிபந்தனை வைத்திருந்தார்கள். இந்த உடன்பாடு நடைமுறைப்படுத்தப்பட ஆரம்பிப்பதென்றால், கருணா தரப்பிலிருந்து ஒரு விசயம் நடக்க வேண்டும். தனது அமைப்பை கலைத்துவிட்டு, கிழக்கிலிருந்து வெளியேறுகிறேன் என எழுத்துமூலம் கருணா அறிவிக்க வேண்டும் என்பதே அந்த நிபந்தனை!

2004 ஏப்ரல் 11ம் திகதி காலை. கிளிநொச்சியிலுள்ள புலிகளின் அரசியல்துறை நடுவப்பணியகத்திற்கு கருணா ஒரு தொலைநகல் அனுப்பினார். தனது அமைப்பை கலைத்து விட்டு, கிழக்கைவிட்டு வெளியேறிச் செல்வதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.

புலிகள்- கருணாவிற்கிடையிலான எழுதப்படாத உடன்படிக்கை 2004 ஏப்ரல் 11ம் திகதி காலையில் ஆரம்பித்தது!

அன்றுதான் கிழக்கை விட்டு வெளியேறிச் செல்லும் இறுதிக்கட்ட நடவடிக்கைகளை கருணா ஆரம்பித்தார். தனது கட்டுப்பாட்டில் இருந்த தாக்குதல் அணிகளை ஒரு இடத்தில் ஒன்றுகூட வைத்து, தனது முடிவை அறிவித்தார். உயர்மட்ட தளபதிகள் இதை மௌனமாக ஏற்றுக்கொண்டனர். அடிமட்ட போராளிகள் சிலர்தான் கருணாவிற்காக கதைத்து, இந்த முடிவை ஏற்க முடியாதென்றார்கள். ஆனால், அண்ணளவாக 3,000 வரையான போராளிகளை கருணா வீடு செல்ல பணித்தார். அவர்களின் ஆயுதங்களும், சீருடைகளும் ஒரு இடத்தில் குவிக்கப்பட்டது. அடையாள அட்டை, சயனைட் குப்பி மற்றும் புலிகளின் உடமைகள் அனைத்தும் வாங்கப்பட்டது. முகாமிலிருந்த புலிகள் சாதாரண உடையுடன் வெளியேறிக் கொண்டிருந்தார்கள். விசயத்தை கேள்விப்பட்ட பல பெற்றோர், முகாம் வாசலுக்கு வந்து தமது பிள்ளைகளை அழைத்து சென்றனர்.

இன்னொரு முகாமில் நிலாவினி தலைமையில் 400 பெண் போராளிகள் நின்றார்கள். ஆண் போராளிகளை போல, பெண் போராளிகளை இந்த விசயத்தில் கருணாவால் சமாளிக்க முடியவில்லை. “கிழக்கில் இயங்கிய விடுதலைப்புலிகள் அமைப்பை கலைக்கிறேன். நான் புலிகளில் இருந்து விலகி கொழும்பிற்கு செல்கிறேன். நீங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புங்கள். இப்போது, உங்களின் ஆயுதங்கள், சீருடை, குப்பி, தகடு என்பவற்றை ஒப்படையுங்கள்“ என கருணா அவசரகதியில் உரையாற்றினார். ஆரம்பத்தில் இதை, பெண் போராளிகள் நம்பவில்லை. கருணா விளையாட்டாக பேசுகிறார் என்றுதான் நினைத்தார்கள்.

alizahir_karuna-300x138.jpg அலிசாஹிர் மௌலானா- கருணா

அவர்கள் புரியாமல் பேசிக்கொண்டிருந்தது கருணாவிற்கு எரிச்சலையூட்டியது. விடுதலைப்புலிகள் தாக்க வருகிறார்கள், ஒரு நிமிடம் தாமதித்தால்கூட உயிராபத்தாகிவிடும் என கருணா எச்சரித்தார். ஆனால் அந்த பெண்போராளிகள் வீட்டுக்கு செல்ல சம்மதிக்கவில்லை. இறுதியில் வேறு வழியில்லாமல், தனது மெய்ப்பாதுகாவலரை அழைத்து, அவரிடமிருந்த கைக்குண்டு ஒன்றை அந்த போராளிகளிற்கு அண்மையில் வெடிக்க வைத்தார். பெண் போராளிகள் கூச்சலிட்டபடி சிதறி ஓடினார்கள்.

2004 ஏப்ரல் 12ம் திகதி. கிழக்கை விட்டு வெளியேறிச் செல்லும் ஏற்பாட்டை கருணா செய்திருந்தார். அப்போதைய ஐ.தே.க எம்.பி அல்சாஹிர் மௌலானாவின் ஏற்பாட்டில், கருணா மட்டக்களப்பிலிருந்து கொழும்பை நோக்கி புறப்படவிருந்தார். புறப்படுவதற்கு சற்று முன்னதாக ஒரு சம்பவம் நடந்தது.

 

அதுதான் புலிகள்- கருணா உடன்படிக்கையின் முதலாவது மீறல். அந்த உடன்படிக்கை வலுவிழக்க காரணமாக இருந்ததும் அதுதான். அந்த தவறை கருணா தரப்பே செய்தது.

அது என்ன தவறு?

அடுத்த பாகத்தில் சொல்கிறோம்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/16935/

 

Share this post


Link to post
Share on other sites
On 10/7/2018 at 8:22 AM, தனிக்காட்டு ராஜா said:

தொடர் சுவாரஸ்யமாக போகிறது  30 வருட கால போராட்டம்  எழுத்துக்களால் மட்டுமே .........................

என்ன செய்வது ஊடகம்களுக்கும் புதுசா அரைப்பதுக்கு ஒன்றும் இல்லை இருந்தாலும் மொழியாக்கம் செய்யும் பஞ்சி எங்களுக்கோ கண்ணுக்கு முன்னே அழிந்த விடுதலை போர்.உண்மையில் ஒன்றும் இல்லையாயினும்  இன்னும் மர்மம் இருக்கும் என்று நம்பும் மனது .பீஸ்மர் எழுதும் கதை 2004களில் எல்லோரும் அறிந்த ஒன்றுதான் புதிதாக ஒன்றும் சொல்லவில்லை ஆனாலும் 17ஆயிரம் முறைக்கு மேல் இந்த திரி பார்க்கபட்டுள்ளது இன்றுவரை .

Share this post


Link to post
Share on other sites

கருணாவால் சுட்டுகொல்லப்பட்டதாக கருதப்படும் போராளி செஞ்சுடர் பற்றியும் சில வசனங்கள் சொல்லி இருக்கலாம். 

Share this post


Link to post
Share on other sites
28 minutes ago, பகலவன் said:

கருணாவால் சுட்டுகொல்லப்பட்டதாக கருதப்படும் போராளி செஞ்சுடர் பற்றியும் சில வசனங்கள் சொல்லி இருக்கலாம். 

வாகரைக்குள் நடந்ததும் வரலையே கட்டுரையில் :35_thinking:

Share this post


Link to post
Share on other sites

கிருபன்,சிவராமின் தொடரையும் கொண்டு வந்து இணைக்கலாமே!...எப்படி அவர் எல்லோரையும் சுழிச்சார் என்று இங்கு சில பேருக்குத் தெரியாது. 

 


 

45 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

வாகரைக்குள் நடந்ததும் வரலையே கட்டுரையில் :35_thinking:

அது வராது ...எப்படி வரும்?...வந்தால் யாருக்கு அவமானம் ?
 

Share this post


Link to post
Share on other sites
22 minutes ago, ரதி said:

கிருபன்,சிவராமின் தொடரையும் கொண்டு வந்து இணைக்கலாமே!...எப்படி அவர் எல்லோரையும் சுழிச்சார் என்று இங்கு சில பேருக்குத் தெரியாது. 

அது வராது ...எப்படி வரும்?...வந்தால் யாருக்கு அவமானம் ?
 

 யாருக்கும் அவமானம்  இல்லை  இரு பக்க இழப்புக்களையும் மூடி மறைத்துள்ளதை சொல்ல வந்தேன் இறந்தது அனைவரும் தமிழீழம் என்ற தேசம்  அமைக்க ப்போராடியவர்கள் ஒரு சிலரின் நடத்தை  தன்னை காத்துக்கொள்ள வேண்டிய தேவையில் இறந்து போனவர்கள் 

 

கிழக்கு  மாகாணம் போர் தொடங்கிய பின் (சமாதான உடன் படிக்கை முறிந்த பிறகு)  கிழக்கை பிடிக்க உதவியவர்கள்  யார்  அதுவும் அவமமானம் சொல்ல போனால்  

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, ரதி said:

கிருபன்,சிவராமின் தொடரையும் கொண்டு வந்து இணைக்கலாமே!...எப்படி அவர் எல்லோரையும் சுழிச்சார் என்று இங்கு சில பேருக்குத் தெரியாது

சிவராமின் தொடருக்கு கொப்பிரைட் போட்டுள்ளதால் ஏன் பொல்லாப்பு என்று இணைக்கவில்லை!

Share this post


Link to post
Share on other sites
3 hours ago, கிருபன் said:

சிவராமின் தொடருக்கு கொப்பிரைட் போட்டுள்ளதால் ஏன் பொல்லாப்பு என்று இணைக்கவில்லை!

அங்கு எந்தவித ஆதாரம்களும் இன்றி சகட்டுமேனிக்கு சிவராமை புலிதான் போட்டது என்று பீஸ்மர் சடையபார்க்கிறார் அத்துடன் பழையபடி kp யின் புகழ் பாடுகிறார் திரும்ப திரும்ப பீஸ்மர் பொய்களையே சொல்லி உண்மையாக்க படாத பாடு படுகிறார் பார்ப்பம் அவர் எந்தளவுக்கு அவிக்கிறார் என்று .

Share this post


Link to post
Share on other sites

புலிகளை பற்றி புகழ்ந்து எழுதும் போது பீஷ்மார் உண்மையை எழுதுகின்றார்...சிவராமை பற்றி எழுதுவது எல்லாம் கட்டுக் கதை...உண்மை எப்பவும் சுடும் 

 

Share this post


Link to post
Share on other sites

பொய்யை நம்ப வைக்கணும் என்றால் பல உண்மைகளை சொல்லி பொய்யை செருகிவிட்டால் காணும் மக்கள் நம்புவார்கள் என்று சாணக்கிய தந்திரம் சொல்லுது .

Share this post


Link to post
Share on other sites

அதிஷ்டக்காரர்  தாராகி இன்று உயிரோடு இருந்திருந்தால் ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பார்.

 

Share this post


Link to post
Share on other sites

கைதான புலிகளின் தளபதி தோல் உரித்து கொல்லப்பட்டார்!: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 34

September 29, 2018
200-696x464.jpg

பீஷ்மர்

விடுதலைப்புலிகள் அமைப்பிற்குள் கலகம் செய்து, தனிவழி செல்ல கருணா முடிவெடுத்ததன் பின்னணி, இதனால் ஏற்பட்ட குழப்பங்கள் பற்றி இந்த தொடரின் கடந்த அத்தியாயங்களில் விரிவாக எழுதியிருந்தோம். புலிகளை எதிர்த்து போரிட முடிவெடுத்த கருணா, பின்னர் போரிட முடியாத நெருக்கடி நிலைமையை சந்தித்தது… அவருக்கு தப்பிச்செல்வதை விட வேறு எந்த மாற்றுவழியையும் புலிகள் ஏற்படுத்திக் கொடுக்காதது… கருணா தப்பிச்செல்வதைவிட வேறு வழியில்லையென்றபோதும், கருணாவுடனான உடன்பாட்டில் புலிகள் நிறைய விட்டுக்கொடுப்புக்கள் செய்தார்கள், கருணாவும், புலிகளும் பரஸ்பரம் எட்டு வாக்குறுதிகள் கொடுத்திருந்தார்கள் என்பதை கடந்த அத்தியாயத்தில் விரிவாக குறிப்பிட்டிருந்தோம்.

கருணாவுடனான யுத்தத்தில் வெற்றிபெறும் கடைசிப்புள்ளியில் இருந்து கொண்டும், கருணாவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி, அமைதியாக பிரச்சனையை முடிக்க புலிகள் முயன்றார்கள். வழக்கமாக புலிகள் இப்படி நடந்து கொள்வதில்லை. கருணா விசயத்தில் மட்டுமே பிரபாகரன் இப்படி முடிவெடுத்தார்.

 

ஆனாலும், பிரபாகரனின் இந்த நகர்வை கருணா உதாசீனம் செய்தார். கருணா- புலிகள் பிளவு நடப்பதற்கு முன்னர், இராணுவ புலனாய்வுத்துறை அதிகாரிகள் என நம்பப்படும் சிலர், கிரமமாக கருணாவை சந்தித்து வந்தார்கள், மட்டக்களப்பிலிருந்த தமிழ் வர்த்தகர் ஒருவரே இந்த தொடர்பிற்கு காரணமாக இருந்தார் என்ற தகவலொன்றும் புலனாய்வு தகவலாக அப்போது இருந்தது. இப்போதும் இருந்து வருகிறது. ஆனால், அந்த வர்த்தகர் விவகாரத்திற்கு இன்றுவரை வெளியாட்களிடம் சாட்சியெதுவுமில்லை. அந்த “அநாமதேய“ நபர்களின் சந்திப்பிற்கான சாட்சிகள் சிலர் இருக்கிறார்கள்.

புலிகளின் நல்லெண்ண நகர்வு நிராகரிக்கப்பட்டு, போர் நோக்கத்துடன் கருணா நடந்து கொண்டது, அந்த “அநாமதேய“ நபர்களின் வழிகாட்டுதலா என்பதற்கு இன்றுவரை பதிலில்லை.

கருணா- புலிகள் உடன்படிக்கை வலுவிழக்க காரணமாக அமைந்தது, கருணா தரப்பு செய்த ஒரு செயல் என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டு, அதைப்பற்றி இந்த வாரம் எழுதுவதாக கூறியிருந்தோம்.அதைப்பற்றி இப்போது குறிப்பிடுகிறோம்.

விடுதலைப்புலிகளிற்கு கருணா தரப்பிலிருந்து வழங்கப்பட்ட எட்டு வாக்குறுதிகளில், நான்காவது வாக்குறுதி இது-

 

கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள், போராளிகளை உடனடியாக ஆபத்தின்றி விடுதலை செய்யப்படுவார்கள்.

DSC00821-300x225.jpg

ஆனால் இந்த வாக்குறுதியை கருணா தரப்பு காப்பாற்றவில்லை. பதிலாக புலிகளை சீண்டும் விதமாக நடந்தார்கள். கருணா தரப்பு அப்படி நடந்து கொண்டதுதான், பின்னாளில் பெரும் இரத்தகளரி ஏற்பட பிள்ளையார்சுழி போட்டது. அது என்ன சம்பவம்?

இந்த தொடரை வாசித்து வருபவர்களிற்கு, சில பாகங்களின் முன்னர் நீலனை பற்றி குறிப்பிட்டது நினைவிருக்கலாம். புலிகளின் மட்டு.அம்பாறை துணை புலனாய்வுத்துறை பொறுப்பாளராக இருந்தவர். கருணா குழப்பம் விளைவிக்க தொடங்கியதும், அதை ஆரம்பத்திலேயே முறியடிக்க, புலிகளின் பாணியிலான இரகசிய ஒப்ரேசன் ஒன்றிற்கு தயாரானவர். ஆனால், அவரது அணியிலிருந்த ஒரு சாதாரண போராளியின் காதல் சமாச்சாரத்தால் விசயம் லீக் ஆகி, மட்டக்களப்பில் தங்கியிருந்த புலனாய்வுத்துறை உறுப்பினர்கள் அத்தனை பேரையும் கருணா அணியினர் வளைத்துப் பிடித்திருந்தனர். சந்திப்பொன்றிற்காக வருமாறு அழைத்து, சூட்சுமமாக அவர்களை வளைத்து பிடித்தனர்.

அவர்களை வளைத்து பிடித்த கருணா அணியின் ஒப்ரேசனிற்கு பொறுப்பாக இருந்தவர்- இன்று கிழக்கில் வெள்ளை வேட்டி, சட்டை அரசியல் செய்யும் ஒருவர்.  வார்த்தைக்கு வார்த்தை அகிம்சை போதிக்கும் ஆள்!

 

இப்போது வெளியிலும் இல்லை. மிகுதி உங்கள் ஊகத்திற்கு!

நீலனையும் சில புலனாய்வு போராளிகளையும் கருணா அணியினர் விலங்கிட்டு, அடைத்து வைத்திருந்தனர் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம்.

கிழக்கிலிருந்து தப்பி செல்ல முடிவெடுத்ததும் கருணா செய்தது இரண்டு விசயங்கள். முதலாவது- தளபதிகளை அழைத்து தனது முடிவை சொன்னார். பல தளபதிகள் அதற்கு உடன்படவில்லை. இராணுவத்துடன் இணைந்து செயற்படுவது அவர்களிற்கு உடன்பாடாக இருக்கவில்லை. “ நமது எதிரி இலங்கை அரசுதான். விடுதலைப்புலிகளின் நடவடிக்கை பிழையாக இருக்கிறது- கிழக்கை சேர்ந்தவர்களிடமும் நிர்வாகத்தை தர வேண்டும்- என நீங்கள் சொன்னீர்கள். நாம் ஒன்றும் தெரியாதவர்கள் அல்லவே, அதனால் எமக்கான அங்கீகாரத்தை அவர்களிடம் கேட்டு, போராடுவோம். புலிகளிற்கு எதிராக போராடுங்கள் என்று நீங்கள் சொன்னால்- அவர்களிற்கு எதிராகவும் போராடுவோம். ஆனால் விடுதலைப்புலிகளுடனான முரண்பாட்டை காரணமாக சொல்லி, அரசாங்கத்துடன் இணைய நாங்கள் தயாராக இல்லை“ என பல தளபதிகள் நேரடியாக சொல்லிவிட்டனர்.

DSC00840-300x225.jpg 2008- கருணா குழுவின் வெலிகந்த முகாம் சந்திப்பு

அந்த சமயத்தில் விடுதலைப்புலிகளுடன் கருணாவின் கணிசமான தளபதிகள் தொடர்பு கொண்டு விட்டனர் என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். எடுத்தேன் கவிழ்த்தேன் என விடுதலைப்புலிகளுடன் மோதலை ஆரம்பித்தது, இராணுவத்துடன் நெருங்கிச் செல்கிறார் என தளபதிகளால் உணரக்கூடியதாக இருந்தது போன்ற காரணங்களால் கருணாவில் அதிருப்தியடைய தொடங்கினார்கள் தளபதிகள்.

தப்பிச்செல்ல முன்னர் கருணா செய்த முதலாவது விசயம்- தளபதிகளிடம் தனது முடிவை அறிவித்தது என்பதை குறிப்பிட்டிருந்தோம். கருணா செய்த இரண்டாவது விசயம்- தடுத்து வைக்கப்பட்டிருந்த விடுதலைப்புலிகளின் போராளிகளை கொல்ல முடிவெடுத்தது.

 

மீனகம் முகாமில் சந்திப்பொன்றிருப்பதாக கூறி அழைத்த நீலன் தலைமையிலான புலனாய்வுப்பிரிவு போராளிகளை 01.03.2004 அன்று கருணா அணியினர் கைது செய்திருந்தனர். 12.04.2004 அன்று காலையில் தனது மருதம் முகாமிலிருந்து கருணா தப்பியோடினார். கைது செய்யப்பட்டதிலிருந்து, கருணா தப்பியோடும் வரை நீலனும் போராளிகளும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். மீனகம், வடகாடு என பல இடங்களில் மாற்றி மாற்றி தடுத்து வைத்திருந்தனர்.

12ம் திகதி அதிகாலையில் தனது உதவியாளர்களை அழைத்த கருணா, தடுத்து வைக்கப்பட்டிருந்த நீலனை தனது மருதம் முகாமிற்கு கொண்டு வரும்படி கட்டளையிட்டார்.

12ம் திகதி காலையில் தனது கட்டுப்பாட்டில் இருந்த கடைசி அணியான, மகளிர் படையணியினரை வீட்டுக்கு செல்லுமாறு கருணா கூறினார். ஆனால் அவர்கள் அதை ஏற்கவில்லை. அதற்கு முக்கிய காரணம்- கருணா தம்முடன் பகிடி விடுகிறார் என்றுதான் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், தனது நெருக்கடி நிலைமையை அவர்களிடம் சொன்ன கருணா, வீட்டுக்கு செல்லுங்கள் என்றார். அவர்களில் சிலர் அதை ஏற்கவில்லை. ஒரு கைக்குண்டை வீசியெறிந்து வெடிக்க வைத்து, அவர்களை கலைத்தார். பின்னர், முகாமின் இன்னொரு அறைக்குள் தடுத்து வைக்கப்பட்டிருந்த நீலனை இழுத்து வந்தனர். அவரது கையில் விலங்கிடப்பட்டிருந்தது. கண் கட்டப்பட்டிருந்தது. அவரை சுட்டுக் கொன்றனர்.

கருணா அணியினரால் கொல்லப்பட்ட முதலாவது விடுதலைப்புலி போராளி நீலன் அல்ல. அதற்கு முன்னரே, தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் ஐவர் கொல்லப்பட்டனர். 07ம் திகதி இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 10ம் திகதி- அதாவது புலிகளின் ஒப்ரேசன் ஆரம்பிக்கப்பட்டதற்கு மறுநாள் மூவர் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்பட்ட விசயத்தை உடனுக்குடன் தொலைத்தொடர்பு சாதனங்களின் ஊடாக விடுதலைப்புலிகளிற்கு அறிவித்து, கோபமூட்டும் காரியத்தையும் செய்துகொண்டிருந்தனர். இந்த வரிசையில் கொல்லப்பட்டவரே நீலன்.

Neelan-238x300.jpg லெப்.கேணல் நீலன்

தடுத்து வைக்கப்பட்டவர்கள் கொல்லப்பட்டால், உடனே அதை தொலைத் தொடர்பு கருவி மூலம் புலிகளிற்கு அறிவித்து, கருணா அணி சீண்டிக் கொண்டிருந்தது. தடுத்து வைக்கப்பட்டிருந்த போராளிகள் கொல்லப்பட்ட கால ஒழுங்கை கவனித்தால், இதை புரிந்து கொள்ளலாம்

நீலன் கொல்லப்பட்டதும் கொடூரமான நிகழ்வுதான். நீலனை உயிரோடு வைத்து, அவரது உடலில் இருந்த தோலை உரித்தார்கள்.

“உங்கள் ஆளை உப்புக்கண்டம் போடுகிறோம். முடிந்தால் தடுத்து பாருங்கள்“ என சவால் விட்டுவிட்டே அதை செய்தார்கள்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/17514/

 

Share this post


Link to post
Share on other sites
On 10/25/2018 at 9:11 PM, ரதி said:

அதிஷ்டக்காரர்  தாராகி இன்று உயிரோடு இருந்திருந்தால் ஆனந்தக் கண்ணீர் வடித்திருப்பார்.

 

கூறு கெட்ட கருணாவை இன்னுமா சிலர் புகழ் மாலை சாத்துகிறார்கள் ....

Share this post


Link to post
Share on other sites

பொட்டம்மானின் காலில் விழுந்து கதறியழுத கருணாவின் தளபதிகள்: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 35

September 30, 2018
UNSET.png

பீஷ்மர்

கருணாவின் பிடியிலிருந்து விடுதலைப்புலிகளின புலனாய்வுத்துறை பொறுப்பாளர் நீலன் உள்ளிட்ட போராளிகள் கொல்லப்பட்ட சம்பவத்தை கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் விடுதலையாகுவார்கள் என உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தபோதும், கருணா தரப்பு அதை மீறியது.

அதாவது, தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகளின் போராளிகளை விடுவிப்பேன் என வாய்மூல உத்தரவாதத்தை இடைத்தரகர்கள் ஊடாக விடுதலைப்புலிகளிற்கு கருணா வழங்கியதற்கு மறுநாள் காலையில், அவர்களின் பிடியிலிருந்து முக்கிய புலிகளின் தளபதி கொல்லப்பட்டார்.

கருணா தப்பியோடிய பின்னர், மருதம் முகாமிற்குள் நுழைந்து புலிகள் தேடுதல் நடத்தியபோது, சிறிய பதுங்குகுழியொன்றிற்குள் நீலனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. கருணாவுடன் நெருக்கமாக இருந்து, கருணா தப்பியோடிய பின்னர் புலிகளுடன் இணைந்து கொண்ட போராளிகள் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே நீதனின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

கருணா குழுவுடன் எந்த இணக்கப்பாடும் சரியாக வராதென புலிகள் முடிவெடுத்த கணம் அது.

blogger-image-69580438-300x199.jpg

 

இதற்கு பின்னர் என்ன நடந்ததென்பதை நாம் எழுத வேண்டியதில்லை. இரு தரப்பும் மாறிமாறி சன்னதமாடியதில் கிழக்கில் தொடங்கிய இரத்த ஆறு, கொழும்புவரை ஓடியது. நாளொரு கொலை, கடத்தல் என நாடே அதிர்ந்தது.

 

மட்டக்களப்பில் இருந்து தனக்கு மிக நெருக்கமானவர்கள், முக்கிய தளபதிகளுடன் கொழும்பின் புறநகர் பகுதிக்கு கருணா தப்பிச்சென்றார். ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா இதற்கான ஏற்பாடுகளை செய்தார். கொழும்பில் சில வாரங்கள் தங்கியிருந்த கருணா, பின்னர் எங்கிருக்கிறார் என்பதை புலிகளால் அறிய முடியாமல் போனது.

கருணாவுடன் தப்பிச் சென்றவர்களின் ஒரு தொகுதியினர்- சாதாரண போராளிகள்- மின்னேரியா இராணுவ முகாமில் தங்கியிருந்தனர்.

தமது உயர்மட்ட தொடர்புகளின் ஊடாக புலிகளின் புலனாய்வுத்துறை முழு மூச்சில் கருணாவை தேடியபோது, ஒரு அதிர்ச்சி செய்தி கிடைத்தது.

கருணா இந்தியாவில் தங்கியிருக்கிறார் என்பதே அந்த செய்தி!

விடுதலைப்புலிகளில் இருந்து பிரிந்து வந்த தளபதியை இந்திய புலனாய்வு அமைப்பான றோ அதிகாரிகள் நேர்காணல் செய்ய விரும்பியிருந்தார்களாம். இதையடுத்து, தமிழகத்திலுள்ள றோவின் இரகசிய முகாம் ஒன்றில் கருணா தங்கவைக்கப்பட்டு, றோ அதிகாரிகளால் தகவல்கள் பெறப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று கிடைத்த செய்தி, புலிகளை உண்மையில் கொஞ்சம் பயமுறுத்தியது.

 

மட்டக்களப்பில் இருந்து வெளியேறிய பின்னர், எந்தவிதமான இராணுவ செயற்பாட்டிலும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஈடுபட மாட்டேன், புலிகளுக்கு எதிராக செயற்படமாட்டேன், வெளிநாடு சென்றுவிடுவேன் என வாக்குறுதி வழங்கிவிட்டு சென்ற கருணா, எதற்காக இந்திய புலனாய்வு அமைப்பின் இரகசிய முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளார்?

கருணா தமக்கு வழங்கிய உத்தரவாதம், பாதுகாப்பாக தப்பிச்செல்வதற்கான சூழலை ஏற்படுத்த கையாண்ட உத்தியென்பதை புலிகள் புரிந்து கொண்டார்கள். இந்த சமயத்தில் இலண்டனில் இருந்த தமது தொடர்பாளர்கள் மூலம், இந்தியாவிற்கு தமது அதிருப்தியை புலிகள் தெரிவித்தனர். எனினும், கருணா தமது நாட்டில் இல்லையென இந்தியா தரப்பில் பதிலளிக்கப்பட்டது.

இதற்குள் இன்னொரு சம்பவத்தையும் குறிப்பிட வேண்டும். கருணாவின் இளநிலை தளபதிகள் சிலர்- ஜிம்கெலி தாத்தா, ராபர்ட் உள்ளிட்டவர்கள்- விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டு இன்றும் வைக்கப்படுகிறது. அவர்கள் சரணடைந்த பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டனர் என்பது உண்மைதான்.

ஆனால், மட்டக்களப்பு தளபதி ரமேஷால் சுட்டுக்கொல்லப்படவில்லை. கருணாவுடன் சதி முயற்சியில் ஈடுபட்ட பின்னர், விடுதலைப்புலிகளுடன் ரமேஷ் இணைந்தார், பிரிவில் ரமேஷின் பங்கும் உள்ளது, கருணாவின் தளபதிகளை உயிரோட விட்டால் தனது பங்கு வெளியில் தெரிந்துவிடும் என்பதற்காகவே ரமேஷ் அவர்களை சுட்டுக் கொன்றார் என்ற அப்பிராயம் உள்ளது. உண்மையில் அது தவறானது.

அப்படியானால் என்ன நடந்தது?

karadiyarau_5-300x225.jpg

 

கருணாவுடன் இருந்து தப்பித்து விடுதலைப்புலிகளிடம் சரணடைந்த போராளிகள் மட்டக்களப்பில் வைத்தே அவசரஅவசரமாக புலனாய்வுதுறை போராளிகளால் வாக்குமூலம் பெறப்பட்டனர். இதற்காக பெரியதொரு புலனாய்வுத்துறை அணி மட்டக்களப்பிற்கு சென்று இரவுபகலாக இயங்கியது. கருணா தப்பிச்செல்லும் வரை அவரது இளநிலை தளபதிகள் செயற்பட்ட விதம் குறித்து போராளிகள் வாக்குமூலம் அளித்திருந்தனர். நீதன் அணியை கைது செய்து, தடுத்து வைத்து, கொலை செய்தது, போராளிகளை சிதறடித்தது என்பவற்றில் இளநிலை தளபதிகளின் முக்கிய பங்கிருப்பது தெரியவந்தது.

ஆனால், அவர்கள் சரணடைய நடந்த பேச்சுவார்த்தையில் உயிர் உத்தரவாதம் வழங்கப்பட்டிருந்தது. அது ரமேஷால் வழங்கப்பட்டிருந்தது. கருணாவுடன் இருக்க கொள்கைரீதியில் உடன்படாத, இனியும் இருக்க வாய்ப்பில்லாத தளபதிகள் அவரிலிருந்து வெளியேறியிருந்தனர். இடைத்தரகர்கள் மூலமும், தொலைத்தொடர்பு கருவிகள் ஊடாகவும் புலிகளுடன் அவர்கள் பேசி சரணடைந்தனர். இதில் ராபர்ட், ஜிம்கொலி தாத்தா உள்ளிட்ட பன்னிரண்டு இளநிலை தளபதிகள் புலிகளால் ஒரே சந்தர்ப்பத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

 

அவர்கள் புலிகளிடம் சரணடைந்ததும் மருதம் முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டனர். விலங்கிடப்பட்டு, சிறைக்கைதிகளாகவே அவர்கள் வைக்கப்பட்டிருந்தனர். அப்பொழுதே அவர்களிற்கு தமக்கு நடக்கவிருந்தது தெரிந்திருக்கும். மருதம் முகாமிற்கு பொட்டம்மான், சொர்ணம், பானு, ரமேஷ் உள்ளிட்ட தளபதிகள் ஒருமுறை சென்றபோது, தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுடன் பேசினார்கள்.

அந்த மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை, அவர்கள் வேறுவிதமாக கையாளப்பட்டிருக்கலாமென்ற அபிப்பிராயம் இந்த கட்டுரை ஆசிரியருக்கு இருப்பதால், அந்த மரணங்கள் தொடர்பில் துல்லியமாக பேசவில்லை. அவர்களும் தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்துடன் தம்மை அர்ப்பணித்து போராட வந்த, போராடியவர்கள். அந்த மரணங்கள் ஒரு விபத்துத்தான்.

கொல்லப்படப் போகிறோம் என்பதை தெரிந்ததும், கருணாவின் மூத்த தளபதிகளில் இருவர், அங்கு வந்த புலிகளின் தளபதிகளின் முன்னால் நிலத்தில் வீழ்ந்து கதறி அழுதனர். தாம் கொண்ட கறையை கழுவி, அமைப்பின் மீதான விசுவாசத்தை நிரூபிக்க சந்தர்ப்பமொன்றை தருமாறு கேட்டார்கள். ஆனால், அந்த சந்தர்ப்பம் அவர்களிற்கு வழங்கப்படவில்லை.

அவர்களிற்கு உயிருத்தரவாதம் வழங்கியது ரமேஷே தவிர, மரணதண்டணைக்கான உத்தரவிடும் அல்லது மன்னிக்கும் அதிகாரமுடன் கிழக்கிலிருந்த ஒரே ஆள் பொட்டம்மான்தான்!

இந்த சமயத்திலேயே கொழும்பில் தங்கியிருந்த கருணா அணியினரின் மீது தாக்குதல்களை ஆரம்பித்தனர் புலிகள். கருணா அணியில் இருந்தவர்கள் அனைவருமே அங்கு விசுவாசமாக இருந்தவர்கள் அல்ல. சிலர் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் அங்கு சிக்கிகொண்டவர்கள். சிலர் தப்பிவர வழியில்லாமல் அங்கிருந்தவர்கள். இன்னும் சிலர், விடுதலைப்புலிகளின் ஆட்கள். அவர்கள் இரகசியமாக கருணா குழுவிற்குள் ஊடுருவியிருந்தனர்!.

தப்பிவர வழியில்லாமல் கருணா குழுவிற்குள் சிக்கியிருந்தவர்களை புலிகள் இரகசியமாக தொடர்புகொண்டு, தமது பக்கம் இழுத்தெடுத்தனர். சும்மா இழுத்தெடுக்கவில்லை. நடுஇரவில் கருணா குழுவினர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, அவர்களை சுட்டுக்கொன்றுவிட்டு, புலிகளிடம் தப்பிவர தொடங்கினார்கள்.

கருணாவின் சகோதரரான றெஜி இப்படித்தான் கொல்லப்பட்டார். கொழும்பு கொட்டாவ பகுதியில் கருணா அணியின் இரகசிய மறைவிடத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், அவர்களின் நிதி பொறுப்பாளராக இருந்த குகனேசன் என்பவர் உள்ளிட்ட எட்டுப்பேர் கொல்லப்பட்டனர்.

 

இந்த தாக்குதல்கள் கருணா அணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்பத்தியது. நிம்மதியில்லாத நிலைமையை ஏற்படுத்தியது.

இந்த சமயத்தில் கருணா இந்தியாவிலிருந்து திரும்பி வந்து, பொலன்னறுவ எல்லையிலுள்ள மின்னேரியா முகாமில் தங்கியிருக்கிறார் என்ற தகவல் புலிகளிற்கு சென்றது. இதன்பின்னரே, வெலிகந்த பகுதிகளில் இராணுவ முகாமிற்கு அருகில் கருணா அணி பிரமாண்ட முகாம்களை அமைத்து தங்கியிருக்க தொடங்கியது. இப்படி பிரமாண்ட முகாமாக இருந்தால், நடு இரவில் சுட்டுவிட்டு செல்வதை தவிர்க்கலாமென நினைத்தார்கள். இதுதான் கருணா பிரிவு, அதன்பின் நடந்த சம்பவங்களின் முழுமையான விபரம்.

இந்த கதையுடன் தொடர்புடைய இன்னொரு பெரிய பிளாஷ்பேக் உள்ளது. அதையும் சொன்னால்தான் கருணா விவகாரம் முழுமையடையும். இதற்காக உங்களை கருணாவின் ஆரம்ப காலத்திற்கு அழைத்து செல்கிறோம்.

1983ஆம் ஆண்டில் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்தவர் கருணா. இந்தியாவின் மூன்றாவது பயிற்சி முகாமில் பயிற்சியை முடித்துக் கொண்டு, இலங்கைக்கு திரும்பினார். சிறிதுகாலத்தில் மட்டக்களப்பிலிருந்து பத்து வரையான போராளிகளை அழைத்து தன்னுடன் வைத்திருந்தார். அதில் கருணாவும் ஒருவர்.

தன்னுடைய மெய்க்காவலர் அணியில் உள்ள திறமையானவர்களிற்கு பெரிய பொறுப்புக்கள் வழங்குவது பிரபாகரனின் வழக்கம். கருணாவில் ஏற்பட்ட நம்பிக்கை, அவரின் செயற்பாடுகளில் உண்டான திருப்தியெல்லாம் சேர, அமைப்பில் சேர்ந்து வெறும் மூன்றரை வருடத்தில் அவரை மாவட்ட தளபதியாக்கினார். அந்த சமயத்தில் மட்டக்களப்பில் குமரப்பா, ராம், றீகன், அன்ரனி உள்ளிட்ட பல தளபதிகள் இருந்தனர். ஆனால், கருணாவை மட்டக்களப்புக்கு தளபதியாக நியமிக்க பிரபாகரன் முடிவெடுத்தார். 1986ஆம் ஆண்டின் பிற்பகுதி. தன்னுடன் நின்ற கருணாவை மட்டக்களப்பிற்கு பிரபாகரன் அனுப்பி வைத்தார்- சும்மா அல்ல, தளபதியாக!

அனுப்பும்போதே, மட்டக்களப்பு தளபதியாக கருணா செயற்படுவார் என பிரபாகரன் அறிவித்திருந்தார். அப்போது குமரப்பா மட்டக்களப்பில் தளபதியாக இருந்தார். கருணாவிடம் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, அவர் சரியாக செயற்படுகிறாரா என்பதை அவதானிக்க சிறிதுகாலம் அங்கேயே தங்கியிருந்தார். ஏனெனில் கருணா புதியவர். பல சீனியர்கள் அங்கிருந்தார்கள். அவர்கள் கருணாவிற்கு ஒத்துழைக்காமல் விடலாம். அல்லது, மாவட்ட தளபதியாக செயற்பட்டு அனுபவமில்லாத கருணா ஆரம்பத்தில் தடுமாறலாம். இதையெல்லாம் யோசித்துத்தான், குமரப்பாவை மட்டக்களப்பில் தங்கியிருக்குமாறு பிரபாகரன் உத்தரவிட்டிருந்தார். கருணா தனித்து செயற்படுவார் என குமரப்பா உறுதிசெய்த பின்னர்தான் யாழ்ப்பாணம் வந்தார்.

கருணா மட்டக்களப்பிற்கு தளபதியாக செயற்பட்ட காலத்தில் அம்பாறை தளபதியாக இருந்தவர் அன்ரனி. (இவரது பெற்றோர் கனகசூரியம்- சௌந்தரி தம்பதியினர் கல்முனை 1ம், 2ம் வார்ட் உறுப்பினர்களாக இருந்தவர்கள்) 5வது பயிற்சிமுகாமில் பயிற்சியெடுத்தவர். பயங்கர திறமைசாலி. கிழக்கு தளபதியாக அவர் வருவார் என அப்போது புலிகளின் தளபதிகள் பலரிடம் ஒரு அபிப்பிராயம் இருந்தது. கிட்டு அதை பலமுறை சொல்லியிருக்கிறார். ஆனால் அவரது துரதிஸ்டம்- அன்ரனியை விட கருணாவில் பிரபாகரனிற்கு சற்று கூடுதல் நம்பிக்கையிருந்தது. பிரபாகரனின் மெய்பாதுகாவலர் அணியில் கருணா இருந்தார். அன்ரனி அவ்வளவு நீண்டகாலம் பிரபாகரனுடன் நெருங்கியிருக்கவில்லை.

கிழக்கின் தளபதியாக வருவார் என எதிர்பார்க்கப்பட்ட, அன்ரனியின் அதிர்ஸ்டமின்மை, அவரை 1990 இல் யாழ்ப்பாணத்திற்கு அழைத்தார் பிரபாகரன். அன்ரனி யாழ்ப்பாணம் வந்தபின்னர், மட்டு-அம்பாறை தளபதியாக கருணா நியமிக்கப்பட்டார். கருணாவிற்கு அப்படியொரு பொறுப்பை வழங்குவதற்காகவே, அன்ரனி யாழ்ப்பாணத்திற்கு அழைக்கப்பட்டிருக்க வேண்டும். இரண்டாம் ஈழப்போரில், வசாவிளான்  முகாமிலிருந்த இராணுவம் மேலும் முன்னேறாமல் புன்னாலைக்கட்டுவன் பகுதியில் அன்ரனி பொறுப்பாக நியமிக்கப்பட்டார். 1990 ஒக்ரோபரில் அந்த பகுதியில் மரணமானார். அவருக்கு புலிகள் மேஜர் தரநிலை வழங்கினார்கள்.

அந்த பகுதி மக்களுடன் அவர் நெருக்கமாக பழகியதால், அங்குள்ள ஆஸ்பத்திரி வீதிக்கு அன்ரனி வீதியென மக்கள் பெயரும் சூட்டினர். அன்ரனி கிழக்கிலிருந்து வடக்கிற்கு வந்தது, கருணாவிற்கு சாதகமாகவே அமைந்தது.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/17515/

 

Share this post


Link to post
Share on other sites
4 hours ago, கிருபன் said:

அவர்கள் புலிகளிடம் சரணடைந்ததும் மருதம் முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டனர். விலங்கிடப்பட்டு, சிறைக்கைதிகளாகவே அவர்கள் வைக்கப்பட்டிருந்தனர். அப்பொழுதே அவர்களிற்கு தமக்கு நடக்கவிருந்தது தெரிந்திருக்கும். மருதம் முகாமிற்கு பொட்டம்மான், சொர்ணம், பானு, ரமேஷ் உள்ளிட்ட தளபதிகள் ஒருமுறை சென்றபோது, தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுடன் பேசினார்கள்.

அந்த மரணங்கள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டியவை, அவர்கள் வேறுவிதமாக கையாளப்பட்டிருக்கலாமென்ற அபிப்பிராயம் இந்த கட்டுரை ஆசிரியருக்கு இருப்பதால், அந்த மரணங்கள் தொடர்பில் துல்லியமாக பேசவில்லை. அவர்களும் தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்துடன் தம்மை அர்ப்பணித்து போராட வந்த, போராடியவர்கள். அந்த மரணங்கள் ஒரு விபத்துத்தான். 

கொல்லப்படப் போகிறோம் என்பதை தெரிந்ததும், கருணாவின் மூத்த தளபதிகளில் இருவர், அங்கு வந்த புலிகளின் தளபதிகளின் முன்னால் நிலத்தில் வீழ்ந்து கதறி அழுதனர். தாம் கொண்ட கறையை கழுவி, அமைப்பின் மீதான விசுவாசத்தை நிரூபிக்க சந்தர்ப்பமொன்றை தருமாறு கேட்டார்கள். ஆனால், அந்த சந்தர்ப்பம் அவர்களிற்கு வழங்கப்படவில்லை. 

அவர்களிற்கு உயிருத்தரவாதம் வழங்கியது ரமேஷே தவிர, மரணதண்டணைக்கான உத்தரவிடும் அல்லது மன்னிக்கும் அதிகாரமுடன் கிழக்கிலிருந்த ஒரே ஆள் பொட்டம்மான்தான்!

கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது எல்லாம் தெரிந்ததே.

கருணாவையும், அவரது மிகவும் நெருங்கிய வட்டத்தையும் தவிர, ஏனையோரை  இவ்வாறு நடத்தியது புலிகளின் குற்றம்.

கருனாவையே, இணக்கத்துடன் விலகிச் செல்வததிற்கான உடன்பாடிட்ற்கு வந்த புலிகள், கருணாவின் கீழ், கட்டுப்பாட்டை தாரக மந்திரமாக போதித்த புலிகள், இவர்களை ஓர் மிலிட்டரி கோர்ட் மூலமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இதை, புலனாய்வுத் துறை தீர்மானிக்க விட்டது, முக்கியமாக ஓரே ஒருவர், அதாவது போட்டுவை  தீர்மானிக்க விட்டது, புலிகளின், மற்றும் பிரபாகரனின் தவறும், குற்றமும்.   

Share this post


Link to post
Share on other sites
31 minutes ago, Kadancha said:

கட்டுரையில் சொல்லப்பட்டிருப்பது எல்லாம் தெரிந்ததே.

கருணாவையும், அவரது மிகவும் நெருங்கிய வட்டத்தையும் தவிர, ஏனையோரை  இவ்வாறு நடத்தியது புலிகளின் குற்றம்.

கருனாவையே, இணக்கத்துடன் விலகிச் செல்வததிற்கான உடன்பாடிட்ற்கு வந்த புலிகள், கருணாவின் கீழ், கட்டுப்பாட்டை தாரக மந்திரமாக போதித்த புலிகள், இவர்களை ஓர் மிலிட்டரி கோர்ட் மூலமாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.

இதை, புலனாய்வுத் துறை தீர்மானிக்க விட்டது, முக்கியமாக ஓரே ஒருவர், அதாவது போட்டுவை  தீர்மானிக்க விட்டது, புலிகளின், மற்றும் பிரபாகரனின் தவறும், குற்றமும்.   

அந்த நேரத்தில் பல விதமான கதைகள் இலங்கை இந்திய அரசுகளின் மறைமுக ஊடககங்கள் மூலமாக பரப்பபட்டன இந்த பீஸ்மர் கதையும் ஏற்கனவே வந்த கதைதான் சிறு மாற்றம்களுடன் ஒரே மாற்றம் "வாசகர்களுக்கு நாம் சொல்வது அதிர்ச்சியாக இருக்கும் இதுதான் நடந்தது" இப்படி ஒரு வசனம் மாத்திரம் இடையிடையே செருகி விளையாடி இருக்கினம் .எமக்கு இருந்த தரவுகள் அழிக்கபட்ட நிலையில் இவ்வாறான கட்டுக்கதைகளை வைத்து நாங்களா முடிவு எடுப்பது பல பிழையான தகவல்களை எதிர்காலத்துக்கு நம்பும்படி போய் விடும் . 

Share this post


Link to post
Share on other sites

மின்னேரியா முகாமில் உருவான கருணா குழு!: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 36

October 4, 2018
72a.jpg

பீஷ்மர்

விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணா பிரிந்து சென்ற நாட்கள், அப்போது நடந்த உள்விவகாரங்களையெல்லாம் கடந்த பாகங்களில் குறிப்பிட்டிருந்தோம். விடுதலைப்புலிகளின் பகுதியை விட்டு கருணா வெளியேறி சென்ற பின்னர் என்ன நடந்தது என்பது ஓரளவு எல்லோருக்கும் தெரிந்த சங்கதிதான்.

கொழும்பில் கருணா சில நாட்கள் தங்கியிருந்த பின், இந்தியா சென்றார் என்பதை கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். றோ அதிகாரிகளின் நேர்முகம் முடிந்ததும், மீண்டும் இலங்கை கொண்டு வரப்பட்ட கருணா, மின்னேரியா இராணுவ முகாமிற்கு அனுப்பப்பட்டார். புலிகளிலிருந்து பிரிந்த உறுப்பினர்கள் அங்கு ஏற்கனவே கொண்டு வந்து தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

அங்குதான் கருணா குழு என்ற துணை இராணுவக்குழு முதன்முதலில் உருவாக்கப்பட்டது. பின்னாளில் கிழக்கு முதலமைச்சராக இருந்த பிள்ளையான், அவரது முக்கியஸ்தர்கள் எல்லோரும் மின்னேரியா இராணுவ முகாமில் தங்கியிருந்தவர்கள்தான்.

இதன் பின் என்ன நடந்ததென்பது வாசகர்களிற்கு ஓரளவு தெரிந்ததே. அதனால் இத்துடன் கருணா பிளவை முடித்துக் கொள்கிறோம். வாய்ப்பிருந்தால், ஒரு மின தொடராகவோ, அல்லது இதே பகுதியிலோ கருணா குழுவின் உள்வீட்டு விவகாரங்கள் சிலவற்றை குறிப்பிடுகிறோம்.

இறுதியுத்தத்தில் நடந்தது என்ன என்ற இந்த தொடரில், இடையீடாக கருணா பிளவை குறிப்பிட்டோம். புலிகளின் தோல்விக்கு பல்வேறு உபகாரணங்கள் இருந்தாலும், முதன்மையானது – வெளிநாட்டிலிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்ய முடியாமல் போனது. புலிகளின் உயிர்நாடியாக இருந்தது கடல்வழியாக இறக்குமதியாகும் ஆயுதங்கள்தான். அந்த உயிர்நாடி அறுக்கப்பட்டபோது புலிகளின் அழிவு ஆரம்பித்தது.

 

151011132831_pillayan_karuna_512x288_bbc

 

தமிழீழ விடுதலை இயக்கங்கள் ஆரம்பித்தபோது, அவற்றை ஊதிப்பெருப்பிக்க வைப்பதில் இந்திய புலனாய்வுத்துறை தீவிரமாக ஈடுபட்டது. இயக்கங்கள் கோட்பாட்டுரீதியில் தம்மை வலுவாக்கி, முறையான கட்டமைப்புக்களுடன் மக்கள் இயக்கமாக வளர்பதை இந்தியா விரும்பவில்லை. சிங்கள அரச தலைமைகளை வழிக்கு கொண்டுவர, இந்தியாவின் பிராந்திய நலன்களை அடைவதற்கே இயக்கங்களை கையாள நினைத்தது. இதனால், இயக்கங்கள் முறையாக உருவாகுவதை இந்தியா விரும்பவில்லை.

 

1980களின் தொடக்கத்தில் இயக்கங்கள் திடீர் வளர்ச்சியடைந்து, ஜே.ஆர் அரசுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டுமென இந்திய உளவு அமைப்பான றோ விரும்பியது. எல்லா இயக்கங்களும் அவசரகதியில் ஆட்சேர்ப்பு செய்து, ஆளணியில் உப்பி பெருக்க வேண்டுமென றோ விரும்பியது. ஆளணியை சேர்க்க இயக்கங்கள் தயங்குவதற்கு இரண்டு காரணங்கள்தான். போராளிகளை பராமரிக்க பணமும், ஆயுதமும் தேவை. இயக்கங்கள் இவற்றை யோசிக்காமல் இருக்க, பணமும் ஆயுதமும் றோ வழங்கியது.

றோ கொடுத்த பணம், ஆயுதங்களால் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ போன்ற கட்சிகள் நிலைதடுமாறி விட்டன. அதிக ஆளணியை உள்வாங்கி, தடுமாறிக் கொண்டிருந்தன. இந்தியா எல்லா இயக்கங்களிற்கும் ஆயுதம் வழங்கியது. என்றாலும், கவனமாக வழங்கியது. நீண்டகால பாவனைகளற்ற, ஆபத்து குறைந்த ஆயுதங்களையே வழங்கினார்கள். அதிலும் ஒருமுறை- பாவித்து, பழுதடைந்த துப்பாக்கிகளை புலிகளிற்கு வழங்க முயன்றனர். எனினும், புலிகள் அதை மறுத்து விட்டனர். ஆளணி விஸ்தரிப்பிலும், ஆயுத விஸ்தரிப்பிலும் புலிகள் மிக கவனமாக இருந்தனர்.

றோ ஆயுதம் வழங்குவது, குறிப்பிட்ட இயக்கத்தை கைக்குள் வைத்திருப்பதற்கு. உங்களிற்கு எது தேவையென்றாலும் நாங்கள் தருவோம், நீங்கள் முயற்சிக்க தேவையில்லையென்பது றோ சொல்லாமல் சொன்ன செய்தி. இயக்கங்கள் வெளிநாடுகளில் இருந்து ஆயுத தளவாடங்களை இறக்குமதி செய்யாமலிருக்க வைப்பதற்காக இப்படி பழுதடைந்த ஆயுதங்களை கொடுத்து சமாளித்துக் கொண்டிருந்தது.

ஆயுத பலத்திற்கு தம்மை நம்பி இயக்கங்கள் இருப்பது றோவிற்கு வசதி. ஒவ்வொரு இயக்கத்தின் பலம் என்ன, பலவீனம் என்னவென்பது றோவின் விரல்நுனியில் இருக்கும். இந்தியாவிற்கு அருகில் ஆயுதப்போராட்ட இயங்களை வளர்த்தாலும், அவர்களின் பலம் பற்றிய மதிப்பீட்டை வைத்திருந்ததால், ஆபத்தில்லையென றோ நம்பியது.

pandithar-610x380-300x187.jpg பண்டிதர்

ஆரம்பத்தில் இருந்தே றோவின் திட்டங்களிற்குள் சிக்குப்படாத இரண்டு தலைவர்கள் உமாமகேஸ்வரனும், பிரபாகரனும். உடாமகேஸ்வரன் இந்திய கொலனித்துவத்திற்கு எதிராக இருந்தாரே தவிர, பிரபாகரன் அளவிற்கு இராணுவ நுட்பம் நிறைந்தவராக இருக்கவில்லை. இதில் இன்னொரு ஒற்றுமையையும் வாசகர்கள் கவனிக்க வேண்டும். இந்தியா ஆயுதங்கள் வழங்கிய போது, இந்த இரண்டு இயக்கங்களுமே சந்தோசமாக அவற்றை வாங்கிக்கொண்டார். ஆனால், அத்துடன் இன்னொரு உத்தியையும் கைக்கொண்டார்கள். அதாவது, வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்வது. இந்த சமயத்தில் இரண்டு தலைவர்களும் எதிர்எதிரானவர்களாக இருந்தபோதும், இந்தியாவில் மட்டும் தங்கியராது, வெளிநாட்டிலிருந்தும் ஆயுதங்களை இறக்க வேண்டுமென திட்டமிட்டார்கள்.

ஆரம்பத்தில் சிறியளவில் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை புலிகள் இறக்குமதி செய்ய தொடங்கினார்கள். அது மிகச்சிறிய அளவானது. சில துப்பாக்கிகள், உந்துகணை செலுத்திகள் போன்றவை. 1980களின் மத்திய காலம்வரை புலிகளிற்கு உகந்த- பாதுகாப்பான பின்தளமாக தமிழகம் இருந்தது. வெளிநாடுகளில் கொள்வனவு செய்யப்பட்ட ஆயுதங்களை தமிழகம் கொண்டுவந்து, அங்கிருந்துதான் இலங்கைக்கு கொண்டு வந்தனர். தமிழக சுங்கத்திற்கு தெரிந்தோ, தெரியாமலோ இது நடந்தது. அப்போது ஈழவிடுதலை இயக்கங்கள் என்றால் தமிழகத்தில் மிக பயபக்தியாகி விடுவார்கள். இயக்கங்களின் எல்லா நடவடிக்கைகளையும் அங்கீகரிப்பார்கள். சற்று பாரதூரமான விடயம், சட்டப்பிரச்சனைகள் வரும், சம்பந்தப்பட்டவர்களின் அதிகாரத்திற்கு அப்பாலான பிரச்சனையென்றால் மட்டும்தான் தயங்குவார்கள். ஆனால், அதுவும் இயக்கங்களிற்கு பிரச்சனையில்லை. தமிழக அரசு, அரசியல்வாதிகள் இயக்கங்களுடன் நெருக்கமான இருந்தனர்.

 

இயக்கங்கள் தமிழகத்தை பின்தளமாக பாவித்த சமயத்தில் எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக இருந்தார். அவருக்கு பிரபாகரனில் அலாதி பிரியம். ஒருமுறை தமிழக காவல்துறை புலிகள் இறக்குமதி செய்த தொலைத்தொடர்பு கருவிகளை பறிமுதல் செய்துவிட்டது. அதை மீள ஒப்படைக்க வேண்டுமென பிரபாகரன் உண்ணாவிரதம் இருந்தார். இந்த விடயத்தில் உடனடியாக எம்.ஜி.ஆர் தலையிட்டு, தொலைத்தொடர்பு கருவிகளை மீள ஒப்படைக்க வைத்தார்.

1984இல் இன்னொரு சம்பவம் நடந்தது. புலிகள் தமது சொற்படி நடக்கமாட்டார்கள் என்பதை இந்திய உளவுப்பிரிவு மெல்லமெல்ல நாடிபிடித்து அறிந்து கொள்ள ஆரம்பித்த சமயம். புலிகளை தவிர்த்து மற்றைய இயக்கங்களை பலப்படுத்தலாமென றோ நினைத்தது. இதன்படி ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கங்களிற்கு ஒரு தொகை ஆயுதங்களை கொடுத்தது. புலிகளிற்கு கொடுக்கவில்லை. இலங்கையில் அப்போதிருந்த இயக்கங்களை ஊட்டிவளர்த்து, கோட் ஃபாதராக இருந்தது றோ தான். பணம், ஆயுதம் வழங்கும்போது யாருக்கும் அதிகமாக வழங்கினால், அதிருப்திகள் வருமென்பதை றோ அறிந்திருந்தது. அதனால் அப்படி பாரபட்சம் காட்டாது. தமது சொல்படி புலிகள் நடக்கவில்லையென்றதும், றோ இப்படி செயற்பட்டது. இதன்மூலம் புலிகளை வழிக்கு கொண்டு வரலாமென றோ நினைத்திருக்கலாம்.

என்றாலும் றோவின் கணக்கிற்குள் புலிகள் அகப்படவில்லை. எம்.ஜி.ஆரின் உதவியை புலிகள் நாடினார்கள். ஒருநாள் சங்கரும் (புலிகளின் வான்படை தளபதியாக இருந்தவர்), பிரபாகரனும் சென்று எம்.ஜி.ஆரை சந்தித்தனர். றோவின் நடவடிக்கைகளை பற்றி எம்.ஜி.ஆரிடம் விளங்கப்படுத்தினார் பிரபாகரன். அனைத்து பிரச்சனைகளையும் ஆறுதலாக கேட்ட எம்.ஜி,ஆர், நான்கு கோடி ரூபாவை புலிகளிற்கு வழங்கினார். அந்த சமயத்தில் இது பெருந்தொகை பணம்.

இந்த பணத்தை பயன்படுத்தித்தான் புலிகள் முதன்முதலாக வெளிநாட்டில் பெருமளவு ஆயுதங்களை வாங்கினார்கள். இந்த ஆயுதங்கள் தமிழகத்தின் ஊடாகவே யாழ்ப்பாணத்திற்கு வந்தது. அப்போது புலிகள் வாங்கிய ஆயுதங்களில் ஒன்று ஆர்.பி.ஜி. பண்டிதர்தான் அப்பொழுது புலிகளின் நிதி, ஆயுத களஞ்சிய பொறுப்புக்களை கவனித்துக் கொண்டிருந்தார்.

1985 ஜனவரியில் அச்சுவேலியில் இருந்த பண்டிதரின் முகாமை இலங்கை இராணுவம் சுற்றிவளைத்து தாக்கியதில் பண்டிதர் மரணமாகியிருந்தார். அந்த முகாமில் இருந்து ஆர்.பி.ஜியை இராணுவம் முதன்முதலில் கைப்பற்றியது. கைப்பற்றிய போது, அது என்ன ஆயுதம் என்பதே இராணுவத்திற்கு தெரிந்திருக்கவில்லை. பின்னர் கொழும்பிற்கு அனுப்பப்பட்டுத்தான், ஆர்.பி.ஜி என்பதை கண்டறிந்தார்கள். ஈழப்போராட்ட வரலாற்றில் புலிகள் அறிமுகப்படுத்திய ஆயுதங்கள் அனேகம். அது பற்றி கால ஒழுங்கில் பின்னால் குறிப்பிடுகிறோம்.

புலிகள் முதன்முதலில் ஆர்.பி.ஜி கொள்வனவு செய்தபோது, அதை இயக்க திடகாத்திரமான போராளி தேவையென கருதினார்கள். ஆர்.பி.ஜியை இயக்க பொருத்தமானவர் என பிரபாகரன் கணித்தவர்- சொர்ணம்.

soorn-300x215.jpg பிரபாகரன், கிட்டு உடன் சொர்ணம்

சொர்ணம்தான் புலிகளின் முதலாவது ஆர்.பி.ஜி சூட்டாளர். அவரது உதவியாளர் தேவன். பின்னாளில் கடற்புலிகள் அமைப்பில் இருந்தவர். கிட்டு இவரில் அன்பாக இருந்தவர். கிட்டு நாட்டைவிட்டு போகும்போது தனது ரிவோல்வரை இவரிடம்தான் கொடுத்துவிட்டு சென்றார். தேவன் கடைசிவரை அதை வைத்திருந்தார்.

ஆர்.பி.ஜியுடன் தொடர்புபட்ட இன்னொரு கதையுள்ளது. பிரபாகரனின் நகைச்சுவை உணர்விற்கு நல்ல உதாரணம் இது. அடுத்த பாகத்தில் அதை பார்ப்போம்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/17838/

Share this post


Link to post
Share on other sites

வெளிநாட்டிலிருந்து புலிகள் இறக்கிய இரகசிய ஆயுதம்… தூஷணத்திற்கு தடைவிதித்த பிரபாகரன்!

October 6, 2018
LTTEsports_5-696x462.jpg

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன 37

பீஷ்மர்

ஆர்.பி.ஜிக்கும் புலிகளிற்குமான உறவு அளவிட முடியாதது. கணிசமான சண்டைகளில் புலிகள் ஆர்.பி.ஜியின் மூலமே வென்றார்கள். இலகு ஆயுதங்களில் ஆர்.பி.ஜி அவ்வளவு வலிமையானது. ஈழப்போரில் புலிகள்தான் முதன்முதலில் ஆர்.பி.ஜி யை பயன்படுத்தினார்கள் என்று கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் இலங்கைப் படைகளுடனான மோதலில் புலிகளால் ஆர்.பி.ஜியால் குறிப்பிடும்படியான இலக்கொன்றை தாக்கியழிக்க முடியவில்லை. சந்தர்ப்பமும் அமையவில்லையென்றும் சொல்லலாம்.

இந்தியப்படையினரின் டாங்கியை தகர்த்ததுதான் ஆர்.பி.ஜியை புலிகள் கச்சிதமாக பாவிக்க ஆரம்பித்த முதலாவது சந்தர்ப்பம்.

ஆர்.பி.ஜிக்கும் புலிகளிற்குமான உறவில் கட்டாயம் குறிப்பிட வேண்டியது இந்திய இராணுவ காலம். பிரபாகரன் வன்னிக்காட்டில் முகாமைத்திருந்தபோது, அவரை அழிக்க செக்மேற் என்ற படை நடவடிக்கையை இந்திய இராணுவம் செய்தது.

அப்பொழுது இந்திய படைகளை இலங்கையில் வழிநடத்திய லெப்டினன்ட் ஜெனரல் கல்கட் நித்திகைக்குளம் முகாமில் ஹெலிகொப்ரரில் வந்திறங்கிய போது, புலிகள் ஹெலி மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டனர். நித்திகைகுள வெட்டைக்கு கிட்டவாக காட்டுக்குள்ளால் நகர்ந்து சென்ற புலிகளின் அணி, காட்டோரமாக மறைந்திருந்தது.

குறிப்பிட்ட சமயத்தில் ஹெலி தரையிறங்கியபோது, ஆர்.பிஜியால் புலிகள் தாக்கினார்கள். குறிதவறி விட்டது. ஹெலிக்கு சிறிய சேதம் மட்டும்தான். கல்கட் பல்டியடித்து, மறைவிடமொன்றிற்கு சென்று விட்டார்.

 

அன்று ஹெலியை இலக்கு வைத்து ஆர்.பி.ஜி யை இயக்கியது சொர்ணம்!

இரண்டாம் ஈழப்போர் ஆரம்பித்த பின்னர், புளோப்பளை ஊடாக முன்னேறிய பலவேகய நடவடிக்கை படையினரின் டாங்கி தகர்க்கப்பட்டதில் தொடங்கி, இறுதி யுத்தம் வரை புலிகள் ஆர்.பி.ஜியை கச்சிதமாக பாவித்தார்கள். இலங்கை இராணுவத்தின் டாங்கிகள் பெருமளவானவை இதனால்தான் அழிக்கப்பட்டன.

1997இல் இலங்கைப்படையினர் ஜெயசிக்குறு படைநடவடிக்கைக்கு திட்டமிட்டனர். மிகப்பிரமாண்டமாக திட்டமிட்டார்கள். காடுகள், வெளிப்பிரதேசங்களினூடாக நகர டாங்கிகளைதான் அதிகம் நம்பினார்கள். கவசப்படையணியை புனரமைத்து தீவிர பயிற்சிகளை ஆரம்பித்தனர். அதை எதிர்கொள்ள புலிகள் செய்த மாற்றுதிட்டமே விக்ரர் கவச எதிர்ப்பு படையணி. இராணுவத்தின் கவசப்படையணியை எதிர்கொள்ள புலிகள் உருவாக்கிய ஆர்.பி.ஜி படையணி அது.

LTTE-300x197.png விக்ரர் கவச எதிர்ப்பு படையணி

அப்போது இம்ரான் பாண்டியன் படையணியிலிருந்த போராளிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட அணியை கொண்டு விக்ரர் கவச எதிர்ப்பு படையணியை உருவாக்கினார்கள்.

இம்ரான் பாண்டியன் படையணி நிர்வாகங்களில் இருந்த போராளிகளை அங்கு கொண்டு சென்று, முதலில் தேர்வுப்பயிற்சி ஆரம்பித்தது.  100 மீற்றரில் தொடங்கி 10 கிலோமீற்றர் தூரங்களை குறிப்பிட்ட நேரத்தில் ஓடி முடிக்க வேண்டும், குறிப்பிட்ட நிறையை சுமந்துகொண்டு ஓடி முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல பயிற்சிகள் அதில் தேர்ச்சியடைந்தவர்களை கொண்டுதான் விக்ரர் கவச எதிர்ப்பு படையணி உருவாக்கப்பட்டது. இந்த பயிற்சிகள் எல்லாம் புதுக்குடியிருப்பிலிருந்து ஒட்டுசுட்டான் செல்லும் சாலையில், மன்னாகண்டல் சந்தியிலிருந்து பிரிந்து முத்தையன்கட்டு செல்லும் சாலையோரமாக இருந்த காட்டோரத்தில்- ஏழு கன்னிகைகள் குளக்கரையில்- நடந்தது. விக்ரர் கவச எதிர்ப்பு படையணியின் தலைமையகமாக இறுதிவரை அந்த முகாம்தான் இருந்தது. முன்னர் மாத்தையாவினால் உருவாக்கப்பட்ட முகாம் அது.

 

அப்பொழுது இம்ரான் பாண்டியன் படையணியில் புதிய நட்சத்திர தளபதியாக உருவெடுத்த அக்பரின் பொறுப்பில்தான் (லெப்.கேணல் அக்பர்- மட்டக்களப்பு. முகாமாலை முன்னரணில் போராளிகளின் நிலைகளை பரிசோதித்து கொண்டு சென்றவர் திடீரென காணாமல் போனார். ஓரிரண்டு நாளின் பின், முன்னரணிற்கு பின்பாக சடலமாக மீட்கப்பட்டார். இராணுவத்தின் எறிகணை வீச்சில் மரணமாகியிருக்க வேண்டும். தனிமையில் சென்றதால் உடனடியாக விடயம் தெரிய வரவில்லை) கவச எதிர்ப்பு படையணி உருவாக்கப்பட்டது.

இந்தப்படையணிதான் ஜெயசிக்குறு நடவடிக்கையில் இராணுவத்தின் கவசப்பிரிவை சுக்குநூறாக்கியது. ஒவ்வொரு நகர்விலும் இராணுவம் கவச வண்டிகளை இழந்து கொண்டிருந்தது.

விக்ரர் கவச எதிர்ப்பு படையணியை பற்றி, எல்லோரும் புரிந்துகொள்ளும் விதமாக இலகுவாகவும் ஒரு அடையாளம் சொல்லலாம். விடுதலைப்புலிகளின் வழக்கமான சீருடையில் வரிப்புலி கோடுகள் கிடையாக இருக்கும். விக்ரர் கவச எதிர்ப்பு படையணியின் சீருடையில் செங்குத்தாக கோடுகள் இருக்கும். (ஆரம்பத்தில் விக்ரர் கவச எதிர்ப்பு படையணியில் ஆர்.பி.ஜி, எஸ்.பி.ஜி 9 மட்டுமே இருந்தது. பின்னாளில் சினைப்பர் உள்ளிட்ட வேறு சில அணிகளும் இணைக்கப்பட்டன)

விக்ரர் கவச எதிர்ப்பு படையணியில் ஆர்.பி.ஜியை விட இன்னொரு கவச எதிர்ப்பு ஆயுதமும் இருந்தது. அது தோளில் காவிச்சென்ற தாக்கவல்ல இலகு ஆயுதமல்ல. புலிகளால் இறக்குமதி செய்யப்பட்ட எஸ்.பி.ஜி 9 என்ற கவச எதிர்ப்பு ஆயுதம். சிறிய ஜீப் வண்டியிலேயே விரைவாக நகர்த்த முடியும். தோளில் காவிச் செல்ல முடியாது. ஆர்.பி.ஜியை விட பலமடங்கு பலமானது. 2000 இல் யாழ்ப்பாண சமரில் ஒரு எஸ்.பி.ஜி 9ஐ புலிகள் இழந்தனர். அதுவரை அப்படியொரு ஆயுதத்தையே இராணுவம் கண்டதில்லை.

73 மில்லிமீற்றர் குழல் விட்டத்தை கொண்ட இந்த ஆயுதம் ரஷ்ய தயாரிப்பு. சோவியத் ஒன்றியத்தின் பிளவின் பின்னர் உக்ரைன் வழியாக புலிகளை வந்தடைந்தது. மூன்றாம் உலகநாடுகளின் அனேக யுத்தங்களில் பாவிக்கப்படுகிறது. இலகுரக கவச எதிர்ப்பு ஆயுதங்களில் தலைசிறந்தது இதுதான். நிலையான இடத்தில் இருந்து, அல்லது வாகனங்களில் நகர்த்தி சென்று தாக்கலாம். புலிகளில் இருந்த வகை ஆயுதத்தின் மூலம் ஒன்றரை கிலோமீற்றர்கள் வரையுள்ள இலக்குகளை அழிக்கலாம். அதிகபட்சமாக நான்கரை கிலோமீற்றர்கள் வரையான இலக்குகளை அழிக்கும் எஸ்.பி.ஜி 9கள் இருந்தன.

lt_col_akbar4-300x195.jpg லெப்.கேணல் அக்பர் (மட்டு- கதிரவெளி)

மரபு யுத்தங்களிற்கே இவை உகந்தவை. புலிகளின் பாணியில் நடமாடிக்கொண்டிருக்கும் யுத்தவகைக்கு உகந்ததல்ல. அதற்கு ஆர்.பி.ஜிதான் சிறந்தது. விரைவாக, தனியொருவரால் நகர்த்திச்செல்லலாம். இதனால்தான் உலகெங்கிலுமுள்ள கெரில்லாக்கள், ஆயுதக்குழுக்கள் ஆர்.பி.ஜியை அதிகம் விரும்புகின்றனர். 750 மீற்றர்கள் வரை துல்லியமாக தாக்கி பேரழிவை ஏற்படுத்தவல்ல ஆயுதம். கட்டிடங்கள், கவசங்களை அழிக்க போராளி இயக்கங்களிற்கு கிடைத்த வரப்பிரசாதம் இது. ரஷ்யா, சீனா தயாரிப்பு ஆர்.பி.ஜிக்கள்தான் புலிகளிடம் இருந்தன. எஸ்.பி.ஜி 9களை புலிகள் அதிகமாக பாவித்தது கிடையாது. சத்ஜெய, ஜெயசிக்குறு களங்களின் பின் அதிகமாக வலிந்த தாக்குதல்களின்போது, இராணுவத்தின் முன்னரணை தகர்ப்பதற்கு பாவித்தனர்.

புலிகள் எஸ்.பி.ஜி 9 ஐ முதலில் பாவித்தது, 1996 கிளிநொச்சி சத்ஜெய 2 நடவடிக்கையின் போது. அந்த நடவடிக்கையில் புலிகள் இரண்டு டாங்கியை அழித்தார்கள். அந்த சமரில் எஸ்.பி.ஜி 9 பாவிக்கப்பட்டது. ஆனால் முதன்முதலில் போராளிகளால் அதை இலக்கு தவறாமல் தாக்க முடியவில்லை. ஆர்.பி.ஜி தான் டாங்கிகளை அழித்தது. ஆனால் ஜெயசிக்குறுவில் எஸ்.பி.ஜி 9 முதன்முதலில் டாங்கிகளை வேட்டையாடியது. “புளியங்குளம் புரட்சிக்குளம்“ என போராளிகள் இறுமாந்திருந்த முன்னரண் ஒன்று தீபன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்தது. அதை ஊடறுத்து இராணுவத்தின் கவச வண்டிகள் ஒருமுறை ஊடுருவின. ராங்கிகள் மீது விக்ரர் கவச எதிர்ப்பு படையணியின் ஆர்.பி.ஜி, எஸ்.பி.ஜி 9 தாக்குதல் நடந்தது. எஸ்.பி.ஜி 9 குண்டொன்று ஒரு டாங்கியை தாக்கியது. சுழல் மேடைக்கும் ராங்கியின் மேல்தளத்திற்குமிடையில் குண்டு தாக்கியது. சுமார் 80 மீற்றரிற்கு சுழல் மேடை தூக்கியெறியப்பட்டது. மேலும் இரண்டு ராங்கிகள் தாக்கப்பட, இராணுவத்தின் கவசப்படை பின்வாங்கியது.

 

எஸ்.பி.ஜி 9களை புலிகள் தமது அமைப்பிற்குள்ளேயே இரகசியமாக வைத்திருந்தனர். விக்ரர் கவச எதிர்ப்பு பிரிவை தவிர்ந்த மற்றையவர்கள் யுத்தத்தின்போது மட்டும்தான் அதை கண்டனர். மிகுதி நேரங்கில் அதை மூடிக்கட்டி மறைத்துதான் வைத்திருந்தார்கள். அந்த ஆயுதத்தை இயக்குபவர்கள், அதைப்பற்றி ஏனைய போராளிகளிடம் பகிர்ந்து கொள்வதுமில்லை.

இடையீடாக இன்னொரு தகவலையும் குறிப்பிடலாம். விக்ரர் கவச எதிர்ப்பு படையணியை எப்படி, பார்த்து பார்த்து பிரபாகரன் கட்டியெழுப்பினார் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக இருக்கும்.

புலிகளிற்குள் பல படையணிகள். ஆனாலும் எல்லா படையணிகளிற்குள்ளும் ஒரே மாதிரியான தலையீட்டை பிரபாகரன் காட்ட வாய்ப்பிருக்கவில்லை. அவருக்கிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் சில விசயங்களை தடுத்தது. இம்ரான் பாண்டியன் படையணியிலிருந்து உருவான படையணிகளுடன் பிரபாகரன் எப்பொழுதும் கொஞ்சம் நெருக்கம் காட்டுவார். காரணம்- அது அவரது பாதுகாப்பு படையணி.

யுத்த களத்தில் ஆயுதங்கள் அளவிற்கு முக்கியமானதாகவும், தாராளமாகவும் பயன்பாட்டில் இருப்பது- தூஷண வார்த்தைகள். அந்த வார்த்தைகளை பாவிக்காத தளபதிகள் என்றால் மிகச்சிலர்தான். விக்ரர் கவச எதிர்ப்பு படையணியின் முதலாவது களம் ஜெயசிக்குறு எதிர்நடவடிக்கை. அப்போது நடந்த மோதல்களில் ராங்கிகளை தகர்த்து படையணி பெரும் உற்சாகத்தில் இருந்தது. படையணியின் வளர்ச்சியில் எல்லோருக்கும் பெரிய திருப்தி.

ஒருநாள் மன்னாகண்டல் பிரதான முகாமிற்கு களமுனைகளில் இருந்த விக்ரர் கவச எதிர்ப்பு போராளிகள் அழைக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டனர். பிரபாகரன் எல்லோரையும் சந்தித்தார். படையணியின் நடவடிக்கைகளில் முழு திருப்தியும், பாராட்டும் சொன்னார். ஆனால் ஒரேயொரு வருத்தம் இருப்பதாக சொன்னார்.

எல்லோருக்கும் அதிர்ச்சி.

அந்த சந்திப்பில் பிரபாகரன், அவருக்கு அருகில் படையணி தளபதி கடாபி, விக்ரர் கவச எதிர்ப்பு படையணி தளபதி அக்பர் இருந்தார்கள்.

ஒரு டிவி, டெக், ஜெனரேற்றர் எல்லாம் தயாராக இருந்தது. அதில் விக்ரர் கவச எதிர்ப்பு படையணியின் சண்டை வீடியோ காட்சிகள் ஒளிபரப்பாகியது. எல்லோரும் தாம் எப்படி களத்தில் செயற்பட்டோம் என்பதை வீடியோவில் பார்த்தனர். சாதாரணமாக அர்.பி.ஜி கன்னரில் (Gunner) தொடங்கி படையணி தளபதி அக்பர் வரை தாராளமாக தூஷணம் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

 

களத்தில் தூஷணம் பாவித்ததை கடுமையாக கண்டித்த பிரபாகரன், படையணி தளபதிகளே இப்படியிருந்தால், சாதாரண போராளிகளை எப்படி கட்டுப்படுத்துவதென அக்பரை கண்டித்தார்.

அன்றிலிருந்து விக்ரர் கவச எதிர்ப்பு படையணியில் யாரும் தூஷணம் பேசக்கூடாதென்ற கட்டுப்பாடு வந்தது. அக்பரும் அவற்றை தவிர்த்துக் கொண்டார்.

கடந்த அத்தியாயத்தில் ஆர்.பி.ஜி பற்றிய சுவாரஸ்ய சம்பவமொன்றை சொல்வதாக குறிப்பிட்டிருந்தேன் அல்லவா. பிரபாகரனின் நகைச்சுவை உணர்விற்கு உதாரணமான அந்த சம்பவம் இதுதான்.

புலிகள் ஆர்.பி.ஜியை வாங்கிய பின், பண்டிதரின் முகாம் சுற்றிவளைக்கப்பட்ட சமயத்தில் ஒரு ஆர்.பி.ஜியை இராணுவம் கைப்பற்றிவிட்டது. இது புலிகளிற்கு பெரிய இழப்பு. அதை எப்படியாவது ஈடுசெய்ய வேண்டும். அதேவேளை, புதிதுபுதிதாக ஆயுதங்கள், தளபாடங்களையும் உற்பத்தி செய்ய வேண்டுமென புலிகள் முயன்றுகொண்டிருந்தனர். இந்திய இராணுவத்தின் வருகைக்கு முன்னரே புலிகள் அலுமினியத்தில் செல்களை செய்ய முயன்றுகொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

v1-300x189.jpg எஸ்.பி.ஜி 9 வகையொன்று

அந்த சமயத்தில் மோட்டார்சைக்கிள் இயந்திரத்தை பயன்படுத்தி ஹெலிகொப்ரர் தயாரிப்பதில் சில போராளிகள் ஈடுபட்டிருந்தனர்.

பண்டிதரின் இழப்பின் பின் 1985இல் நடந்த சம்பவம் இது. அப்பையா அண்ணை (ஐயாத்துறை இராசதுரை- மானிப்பாய்) என போராளிகளால் அழைக்கப்பட்ட ஒரு வயதான போராளி அமைப்பில் இருந்தார். வெடிமருந்துகளுடன் பரிச்சயமான அவர், புதிய கண்டுபிடிப்புக்களில் ஆர்வம்மிக்கவர். அவர் உருப்படியாக ஒன்றையும் தயாரிக்காவிட்டாலும், தயாரிப்பு முயற்சிகளில் தொடர்ந்து இருந்தார். பின்னாளில் வன்னிக்கு சென்று, வயது முதிர்வால் வீட்டில் ஓய்வில் இருந்தார். 1997இல் மல்லாவி காட்டுக்குள் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். கடத்திச்செல்லப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளது.

1985இல் பரீட்சார்த்த முயற்சியாக ஒரு ஆர்.பி.ஜியை அப்பையா அண்ணை தயாரித்திருந்தார். அதை இயக்க வேண்டும். சில சமயம் வெற்றிகரமாக எறிகணை பாயலாம். சில சமயம் அந்த இடத்திலேயே வெடிக்கலாம்.

ஒருநாள் கொக்குவிலில் அமைந்துள்ள முகாம் ஒன்றில் போராளிகளுடன் உட்கார்ந்து பிரபாகரன் பேசிக்கொண்டிருக்க, அப்பையா அண்ணை விடயத்தை சொல்லி- “இயக்கத்தில இனி இல்லையென்ற விசுவாசமான ஒருவன், அதேநேரம் இயக்கத்திற்கு தேவையில்லாத ஒருவனை எனக்கு தர வேண்டும். அதை பரீட்சித்து பார்க்க“ என கேட்டார். அவர் கேட்டதன் அர்த்தம், பரீட்சார்த்த முயற்சியின் ஆபத்தை தெரிந்து இதற்கு சம்மதிப்பவன் எனில் இயக்க விசுவாத்தால் உயிரையும் கொடுக்க தயாராக இருப்பான். அதேநேரம் அவன் இறந்தாலும், இயக்கத்திற்கு நட்டம் இருக்காது.

அப்பையா அண்ணை சொன்னதும், பிரபாகரன் ஒரு புன்முறுவலுடன் சுற்றவர போராளிகளை பார்த்தார். பிறகு சிரித்தபடி சொன்னார்- “அண்ணை… அப்பிடியான ஒராள் என்றால் நீங்கள்தான் அதுக்கு சரி“.

LTTE_cropped_2_web-1-300x177.jpgபின்னர், மரத்தில் சுடுகுழலை கட்டிவைத்து, செல்லை பொருத்திவிட்டு, சுடுவிசையில் நூல் கட்டி சற்று தொலைவில் நின்று இழுத்து இயக்கி அது பரீட்சிக்கப்பட்டது. அந்த இடத்திலேயே வெடித்து சிதறிவிட்டது!

(தொடரும்)

 

 

http://www.pagetamil.com/18170/

Share this post


Link to post
Share on other sites

புலிகளிற்கு ஆயுதம் கொடுத்த நாயகன் பட ஹீரோ வேலு நாயக்கர்!- இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 38

October 11, 2018
20-2.jpg

பீஷ்மர்

கமல்ஹாசன் நடித்த நாயகன் படத்தை பெரும்பாலானவர்கள் பார்த்திருப்பார்கள். வேலு நாயக்கர் என்ற தாதாவை மையப்படுத்திய திரைப்படம். வேலுநாயக்கராக கமல் நடித்திருப்பார். மும்பையை ஆட்டிப்படைத்த தாதா வேலு நாயக்கர். மும்பையில் சேரிகள் நிறைந்த தாராவி பகுதியில் ஒரு ராஜ்ஜியத்தையே அமைத்து, சிற்றரசர் போல வாழ்ந்த வரதா பாய் பற்றிய கதையை கற்பனை கலந்து நாயகன் படம் உருவானது. வரதா பாய்தான் படத்தில் வேலு நாயக்கர் ஆனார்.

சிலபல கற்பனை சம்பவங்களுடன் படத்தின் கதையும், முடிவும் அமைக்கப்பட்டிருந்தன. வரதா பாய் தமிழர். நிஜப்பெயர் வரதராஜ முதலியார். மும்பையில் வரதா பாயாக அறியப்பட்டார். அவர்தான் புலிகளிற்கு முதலில் ஆயுதங்கள் விற்றவர்!

இது சற்று ஆச்சரியமான தகவல்தான். அவரது தொடர்பின் மூலம்தான் புலிகளின் ஆயுதக்கடத்தல் வலையமைப்பு முளைவிட ஆரம்பித்தது. பின்னாளில் உலகத்திற்கே தலைசுற்றவைத்த வலையமைப்பின் தொடக்க புள்ளியாக வரதா பாயும் இருந்தார்.

விடுதலைப்புலிகளின் ஆயுதவிநியோக வலையமைப்பு எப்படி உருவாக்கப்பட்டது? யார் யார் சம்பந்தப்பட்டார்கள்? எப்படி இயங்கியது? எப்படி வீழ்ந்தது? என்பதை பற்றிய முழுமையான தகவல்களை அடுத்தடுத்த பகுதிகளில் குறிப்பிடவுள்ளோம்.

விடுதலைப்புலிகளை அழிப்பதென்றால், முதலில் எதை செய்ய வேண்டும் என்பதை சரியாக புரிந்து கொண்டு, அமெரிக்கா, கனடா புலனாய்வு அமைப்புக்கள் ஐரோப்பிய புலனாய்வு அமைப்புக்களுடன் இணைந்து கச்சிதமாக செய்ததே- புலிகளின் ஆயுத விநியோகத்தை நிறுத்தியது. இது புலிகளின் ஆணிவேரையே அறுத்தது.

 

தமது ஆணி வேர் அறுக்கப்பட்டமைக்கு புலிகளின் சில தவறான முடிவுகளும் காரணமாக அமைந்தன என்பதே இங்கு குறிப்பிட வேண்டிய விடயம். அவசரகதியில் புலிகள் எடுத்த சில முடிவுகள், சமநேரத்தில் வெளிநாட்டு புலனாய்வு அமைப்புக்களின் பிடி புலிகள் மீது இறுகியதெல்லாமே நடந்தது. சம்பவ ஒழுங்கில் இவை பற்றி பார்ப்போம்.

varth-bai-300x200.jpg வரதா பாய்

புலிகளின் ஆயுதக்கொள்வனவு 1980களின் தொடக்கத்தில் நடந்ததென்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டோம். அப்பொழுது புலிகள் உள்ளிட்ட எல்லா இயக்கங்களுமே இந்தியாவில் தங்கியிருந்தன. யாழ்ப்பாணத்தை சேர்ந்த செல்வராசாவை பத்மநாதன் (குமரன் பத்மநாதன்- கே.பி) ஆங்கில அறிவுடன் இருந்தார். அதனால் அவரையே இந்த பணிக்கு புலிகள் நியமித்தனர்.

இந்தியாவில் இருந்த சில கள்ளச்சந்தை வியாபாரிகளுடன் இவருக்கு ஏற்பட்ட தொடர்பின் மூலம், வரதா பாயின் அறிமுகம் ஏற்பட்டது. இந்த அறிமுகத்தை வளர்த்து, அவர் மூலம் ஆயுதங்களை கொள்வனவு செய்ய பிரபாகரன் விரும்பினார். வரதா பாயுடன் ஒரு டீலை முடித்து கொஞ்ச ஆயுதங்களை வாங்கும் பொறுப்பு கே.பியிடம் வழங்கப்பட்டது. இதுதான் கே.பி புலிகளின் ஆயுதக் கொள்வனவாளராக மாறிய சம்பவம். இந்த பணியில் அவர் தேர்ச்சியானவராக மாறி, உலகத்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டியது பின்னர் நடந்தது.

1983களில் இது நடந்தது.

தமிழ் இளைஞர்களின் போராட்டத்தை வரதா பாய் (வரதராஜா முதலியார்) மனப்பூர்வமாக ஆதரித்தார்.  தமிழ் தேசிய உணர்வுள்ளவர். இந்தியாவில் தங்கியிருந்து இயக்கங்கள் தம்மை ஒழுங்கமைத்துக் கொண்டிருந்த சமயத்தில், அவர்களிற்கு பெரிய நிதித்தேவை இருந்தது. ஈழப்போராளிகளை ஆதரித்த தனவந்தர்கள், அரசியல் பிரமுகர்களை சந்தித்து ஒவ்வொரு அமைப்பும் நிதி சேகரித்துக் கொண்டிருந்தார்கள். ஈழப்போராளிகளை இந்தியாவில் மரியாதையாக பார்த்த காலம் அது. புகையிரதத்தில் டிக்கெற் இல்லாமல் போராளிகள் பயணிப்பார்கள். டிக்கெற் பரிசோதகர்கள் வந்தால், போராளிகளிற்கு தேனீர் வாங்கிக் கொடுத்துவிட்டு செல்லும் சம்பவங்களும் நடந்துள்ளன.

வரதா பாய் யாரும் கேளாமலே இயக்கங்களிற்கு உதவியர். புலிகள், புளொட் ஆகிய இரண்டு இயக்கங்களிற்கும் நிதியுதவி செய்தார். மும்பை தாராவி பகுதியில் போதைப்பொருள் கடத்தல், ரியல் எஸ்டேட், கட்டப்பஞ்சாயத்து என ஒரு முகத்தையும், மக்களின் காவலன், ஏழை எளியவர்களின் கல்வி, திருமணத்திற்கு நிதியுதவி அளிப்பது, வீடற்றவர்களிற்கு வரும் பிரச்சனைகளை சமாளிப்பதென இன்னொரு முகமுமாக ஒரு கலவையான ஆளுமையாக வாழ்ந்தவர் வரதா பாய். இயக்கங்களிற்கு நிதியளித்து, போராட்டத்தை ஊக்கப்படுத்தியது அவரது இன்னொரு பக்கம். சிங்களவர்களிடமிருந்து தமிழர்கள் விடுதலையடைய வேண்டுமென அவர் மனப்பூர்வமாக விரும்பினார்.

 

வரதா பாய்க்கு சட்டவிரோத பிஸ்னஸ்களில் மிகப்பெரிய நெட்வேர்க் இருந்தது. வரதா பாயின் இன்னொரு நண்பரான, மும்பையின் இன்னொரு புகழ்பெற்ற தாதா ஹாஜி மஸ்தான் (இவரும் தமிழர்தான்) ஆப்கானிஸ்தானில் இருந்து போதைப்பொருட்களையும் கடத்திக் கொண்டிருந்தார். வரதா பாய்க்கும் அப்படியான நெட்வேர்க் இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இயக்கங்களிற்கு தன்னிடம் அப்படியான நெட்வேர்க் இருப்பதாக காட்டிக் கொள்ளவில்லை.

அப்பொழுது ஆப்கானிஸ்தானில் சோவியத் ஒன்றியப்படைகள் நிலைகொண்டிருந்தன. சோவியத் படைகளிற்கு எதிராக போரிட்ட ஆப்கான் முஜாகிதீன்களிற்கு பாகிஸ்தான் ஊடாக அமெரிக்க நிதியும், ஆயுதமும் அளித்துக் கொண்டிருந்தது. ஆப்கான், பாகிஸ்தானை மையமாக கொண்ட நிழல் உலக தாதாக்கள், போதைப்பொருள் கடத்தல்காரர்களிற்கு அந்த சமயத்தில் இன்னொரு வர்த்தகம் பிடிபட்டது. சோவியத்திற்கு எதிராக அமெரிக்கா தாராளமாக விநியோகித்த ஆயுதங்களை கள்ளசந்தையில் விற்பதே அது. அதுபோல சோவித் ஒன்றியத்தின் ஆயுதங்களும் ஆப்கானில் தாராளமாக வாங்க முடிந்தது. மொத்தத்தில் ஆயுதக்கடத்தல், விற்பனை சொல்லப்பட்ட பணமீட்டும் வழியாக ஆப்கானில் அறிமுகமானது. தென்னாசியாவின்- ஆப்கான், பாகிஸ்தானிற்கு அண்மையாக இருந்த தாதாக்கள் ஓஹோவென்ற வாழ்க்கை வாழ ஆரம்பித்தனர்.

400662_553119771407566_1058275950_n-300x

 

வரதா பாய் அப்பொழுது அனைத்திலிருந்தும் ஒதுங்கி, சென்னைக்கு வந்துவிட்டார்தான். ஆனால் ஹாஜி மஸ்தான் ஊடாக சில தொடர்புகளை ஏற்படுத்தி இதை செய்து கொடுத்தார். புலிகளும், புளொட்டும் ஆயுதங்கள் வாங்க விரும்பியபோது, அவர் தயக்கமின்றி உதவினார். ஆப்கான், பாகிஸ்தான் கள்ளச்சந்தைகளில் இருந்து சிறிய தொகையான துப்பாக்கிகளையும், கையெறி குண்டுகளையும் இரண்டு இயக்கங்களும் வாங்கின. இப்படித்தான் புலிகளிடம் முதன்முதலில் அமெரிக்க தயாரிப்பான எம்.16 துப்பாக்கிகள் வந்தன. சோவியத்திற்கு எதிராக பாவிக்க அமெரிக்க கொடுத்த துப்பாக்கிகள், இந்தியா வழியாக இலங்கைக்கு வந்தது!

 

வரதா பாய் ஏற்படுத்திக் கொடுத்த லிங் வழியாக புளொட், புலிகள் இரண்டு இயக்கங்களை சேர்ந்தவர்களும் ஆயுதம் வாங்க அப்போது ஆப்கானிஸ்தான் சென்றார்கள். இதில் சுவாரஸ்யம் என்ன தெரியுமா?- இரண்டு இயக்கங்களிலும் ஆயுதம் வாங்க ஆப்கான் சென்ற பிரமுகர்கள் இன்றும் உயிருடன் இருக்கிறார்கள்!

ஆப்கான் லிங்கின் மூலம் அறிமுகமான சில கள்ள சந்தை வியாபாரிகள் மூலம், ஆர்.பி.ஜிக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து புலிகள் வாங்கினார்கள். புளொட்டும் ஆர்.பி.ஜி வாங்க முயன்றது. ஆனால் அப்பொழுது பாகிஸ்தானிலிருந்து அவர்களால் வாங்க முடியவில்லை.

ஆப்கான், பாகிஸ்தான் சந்தையிலிருந்து ஆயுதங்களை இரண்டு இயக்கங்களும் சிறியளவில்தான் வாங்கின. அதற்கு காரணம்- முதன்முதலில் அந்த உலகத்திற்குள் இயக்கங்கள் அப்பொழுதுதான் சென்றன. அனுபவம், பணம் போதியளவில் இருக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக ஆயுதம் வாங்கவாங்கத்தான் ஆர்வம் அதிகரித்தது.

சும்மா கோடு போட்டாலே றோடு போடும் ஆள் கே.பியென்பதை அப்பொழுதுதான் நிரூபித்தார். ஆப்கானிற்கு சில தடவை போய் வந்ததுமே, அவருக்கு நிறைய தொடர்புகள் கிடைத்து விட்டன. அதில் முக்கியமானது, தென்கிழக்காசிய கறுப்புச்சந்தை வியாபாரிகளின் தொடர்பு.

தாய்லாந்து, இந்தோனேசியா, பர்மா, கம்போடியாவை உள்ளடக்கிய தென்கிழக்காசிய நாடுகளும் அப்போது கறுப்புச்சந்தை வியாபாரிகளின் சொர்க்கபுரியாக இருந்தது. கம்போடியா, லாவோஸ், வியட்நாமில் நடந்த போர்களால் ஆப்கானை போலவே, அங்கும் மிகப்பெரிய கறுப்புச்சந்தை நெட்வேர்க் ஒன்று இயங்கியது. அந்த நெட்வேர்க் தொடர்பு கே.பிக்கு கிடைத்தது.

kp-300x203.jpg

 

இதனால் 1984இன் தொடக்கத்திலேயே அவர் தாய்லாந்து சென்றுவிட்டார். இந்த தொடர்புகளின் மூல காரணம், வரதா பாய்தான்.

தென்கிழக்காசிய நாடுகளில் இருந்து ஆயுதங்களை கொள்வனவு செய்து அனுப்ப கே.பி முயன்று கொண்டிருந்தார். இந்த சமயத்தில் புளொட்டும் தாய்லாந்து வந்து விட்டது. இரண்டு இயக்கங்களிற்கும் கறுப்புச்சந்தை நெட்வெர்க்கை அறிமுகப்படுத்தியது வரதா பாய் என்பதால், இரண்டு இயக்கங்களின் ஆரம்ப தொடர்புகளும் கிட்டத்தட்ட ஒரேவிதமானவைதான்.

இதனால் இரண்டு இயக்கங்களிற்கும் மற்றவர் என்ன செய்கிறார், ஆயுதம் வாங்க முயல்கிறாரா என்பது தெரிந்தது. அதனால், யார் முதலில் ஆயுதம் வாங்கி இலங்கைக்கு கொண்டு போய் சேர்ப்பது என்பதில் பயங்கரமான போட்டி நிலவியது.

இரண்டு இயக்கங்களுமே ஆயுதம் வாங்கி, எப்படி இலங்கைக்கு கொண்டு வருவதென்பதை தீவிரமாக திட்டமிட்டுக் கொண்டிந்தன. இதில் முந்தியது புளொட்!

ஆனால் அவர்களிடம் சரியான திட்டமிருக்கவில்லை. முன் அனுபவமும் இல்லையென்றாலும், முறையாக திட்டமிட்டிருந்தால், இன்னும் பொறுப்பாக நடந்து கொண்டிருந்தால் புளொட்டின் ஆயுதங்கள் இலங்கைக்கு வந்திருக்கும். ஆனால் வரவில்லை. சென்னை துறைமுகத்தில் சுங்கப்பிரிவினால் தடுத்து வைக்கப்பட்டு விட்டது. 1984இல் இது நடந்தது.

அதற்கு அடுத்த வருடம்-1985 தொடக்கத்திலேயே புலிகள் ஆயுதங்களை கப்பலில் ஏற்றி வந்து கச்சிதமாக இறக்கினார்கள். இந்த இடத்தில்தான் கே.பியின் துல்லியமான திட்டமிடலும், புத்திசாலித்தனமும் வெளிப்பட்டது.

(தொடரும்)

http://www.pagetamil.com/18687/

Share this post


Link to post
Share on other sites

என்னைப் பற்றி பீஷ்மார் புகழ்ந்து எழுதினால் கட்டாயம் அது உண்மை....ஆனால் அதற்கு மாறாக எழுதினாலோ அவர் காதில பூ சுத்துறார் ,பசப்பிறார்...அவர் எழுதுறது எல்லாம் உங்களுக்கு தெரிந்த விடயம் என்டால் அவர் எழுத முதல் யாழில் வந்து எழுத வேண்டியது தானே ?
 

Share this post


Link to post
Share on other sites

சுயெஸ் கால்வாயில் காத்திருந்த புலிகளின் கப்பல்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 39

October 17, 2018
175jpg.jpg

பீஷ்மர்

இயக்கங்கள் முதன்முதலில் ஆயுதம் இறக்க முயன்ற கதையின் முன்னோட்டத்தை கடந்த வாரம் கூறியிருந்தோம். வரதா பாயின் தொடர்பின் ஊடாக விடுதலைப்புலிகளும், புளொட்டும் ஆப்கானிஸ்தானில் இருந்து கொஞ்ச ஆயுதங்களை வாங்கியிருந்தன. நூலைப்பிடித்து நகர்வதை போல, அந்த லிங்கின் மூலம் தென்கிழக்காசிய நாடுகளிற்கு அந்த இயக்கங்கள் வந்ததையும் குறிப்பிட்டிருந்தோம்.

ஆனால், மற்றைய இயக்கங்களான ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் போன்றவை இந்திய புலனாய்வுத்துறை கொடுத்து ஆயுதங்களில் மட்டுமே தங்கியிருந்தன. மேற்கொண்டு முயற்சிகள் எடுக்கும் வல்லமை அவற்றிடம் இருக்கவில்லை.

வரதா பாயின் தொடர்பின் மூலம் கிடைத்த அறிமுகங்களுடன் 1984இல் குமரன் பத்மநாதன் (கே.பி) தாய்லாந்திற்கு சென்றுவிட்டார். இதே காலத்தில் புளொட்டும் வெளிநாட்டிலிருந்து கப்பல் மூலம் ஆயுதங்களை இறக்க முயற்சித்தது.

புளொட்டிற்கு அப்பொழுது இலண்டனில் நல்ல தொடர்பிருந்தது. மற்ற எல்லா இயக்கங்களைவிட பாலஸ்தீன விடுதலை இயக்கம், லெபனான் ஹிஸ்புல்லா அமைப்புக்களுடன் புளொட்டிற்கு நெருங்கிய தொடர்பிருந்தது. ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் மகாஉத்தமன் லெபனானில் நல்ல தொடர்புகளுடன் இருந்தார். ஆனால், அந்த தொடர்பை அமைப்பிற்கு அதிகபட்ச அனுகூலமாக மாற்றுவது எப்படியென்பது மகாஉத்தமனிற்கோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்கோ தெரியவில்லை. இந்த தொடர்புகளின் மூலம் அங்கு ஆயுதப்பயிற்சி பெற மட்டுமே அவர்களால் முடிந்தது.

இந்தக் காலப்பகுதியில் இந்தியாவில் தங்கியிருந்த உமாமகேஸ்வரன் கள்ள பாஸ்போர்ட்டில் பல தடவைகள் லெபனானிற்கு சென்று வந்தார். லெபனானில் தங்கியிருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருடனான தொடர்புகளின் மூலம், ஒரு தொகை ஆயுதங்களை புளொட் வாங்கியது. இதற்கான பணத்தை இலண்டனில் இருந்த புளொட் செயற்பாட்டாளர்கள் திரட்டிக் கொடுத்திருந்தார்கள்.

 

ஏ.கே துப்பாக்கிகள் 2000, ஆர்.பி.ஜி 200, பிஸ்டல் 50 என்பன வாங்கப்பட்டு, கப்பலில் ஏற்றப்பட்டு சிங்கப்பூரிற்கு வந்து, சிங்கப்பூரில் இருந்த இந்தியாவிற்கு கொண்டு வருவதே திட்டம். ஈழவிடுதலை இயக்கமொன்று முதன்முறையாக கப்பலில் ஆயுதம் இறக்கிய நிகழ்விது. புளொட்டின் உயர்மட்ட உறுப்பினர்கள் உமாமகேஸ்வரன் உள்ளிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே விடயம் தெரிந்திருந்தது. ஆயுதம் என்பதை சுங்கப்பிரிவினர் கண்டுபிடிக்காமல் இருக்க, நுணுக்கமாக திட்டமிடப்பட்டிருந்தது.

ஆந்திராவில் உள்ள காகிதங்கள் மீள்சுழற்சி செய்யும் நிறுவனமொன்றிற்கு பழைய காகிதங்கள் கப்பல் மூலம் கொண்டு வரப்படுகிறதென்ற பெயரில் ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டன. சென்னை துறைமுகத்திற்கு கப்பல் வந்து சேர்ந்ததும், அங்குள்ள சுங்க அதிகாரியொருவர் கொஞ்சம் இலஞ்சப் பணம் கேட்டிருக்கிறார். அவருக்கு தெரியாது கப்பலில் வந்தது ஆயுதங்கள் என்பது. பழைய காகிதங்கள்தான் வந்துள்ளதென்றே சுங்கப்பிரிவினர் நினைத்திருந்தனர். பணம் வரும்வரை சில காரணங்களை சொல்லி பொருட்களை விடுவிக்காமல் தடுத்துவிட்டார்.

சுங்கப்பிரிவினருக்கு இலஞ்சம் கொடுத்து பொருட்களை இறக்குவதில் உமா மகேஸ்வரனிற்கு உடன்பாடு இருக்கவில்லை. சிலநாட்கள் பொறுத்தால் சுங்கப்பிரிவினர் விடுவித்து விடுவார்கள் என நினைத்தார். இந்த சிக்கல் பற்றி அவர் யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை. உமாமகேஸ்வரனில் இருந்த பிரதான பிரச்சனையே இதுதான். கட்சி விடயங்களை கலந்தாலோசிக்க மாட்டார்.

kp-1-300x203.jpg பிரபாகரன், கே.பி. அன்ரன் பாலசிங்கம், சங்கர்

சென்னை துறைமுகத்தில் பொருட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயத்தில், சுங்கப்பிரிவு ஊழியர்கள் சிலர் எதேச்சையாக கப்பலில் இருப்பது என்னவென பரிசோதித்து பார்த்தனர். அவர்களிற்கு பேரதிர்ச்சி. அத்தனையும் ஆயுதங்கள்.

செய்தி பத்திரிகைகளிற்கு பரவி, இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில் மத்திய அரசே அந்த ஆயுதங்களை கையகப்படுத்தியது. புளொட்டிற்கு பெரிய ஏமாற்றமாகி விட்டது. இவ்வளவு ஆயுதங்களையும் கொண்டு வந்தும், இறக்க முடியாமல் போய்விட்டதே என்ற கவலை அவர்கள் எல்லோரிடமும் இருந்தது. இந்த ஆயுதங்கள் சிக்கலில்லாமல் புளொட்டின் கையில் கிடைத்திருந்தால், 1985 இல் நிலைமை வேறுவிதமாக மாறியிருக்கும்.

 

கொஞ்சம் பணத்தை இலஞ்சமாக கொடுக்காததால், மொத்த ஆயுதத்தையும் பறிகொடுத்தார்கள்!

இயக்களிற்கிடையில் மோதல் ஏற்பட்ட சமயத்தில் புலிகளின் கை ஓங்கியதற்கு இரண்டு காரணம். ஒன்று, புலிகள் முதலில் தாக்க ஆரம்பித்தது. இரண்டு, புலிகளிடம் இருந்த ஆயுதபலம். புளொட்டின் ஆயுதக்கப்பல் வெற்றிகரமாக பொருட்களை இறக்கியிருந்தால், சகோதர யுத்தத்தில் பேரழிவு ஏற்பட்டிருக்கும்.

இந்த ஆயுதங்களை மீளப்பெற புளொட் பலவழிகளிலும் முயன்றது. றோவின் அதிகாரிகளுடன் பேசினார்கள். மத்திய அரசுடன் பேசி, ஆயுதங்களை திரும்ப தர முயல்வதாக றோ அதிகாரிகள் வாக்களித்தனர். அதன்பின் மத்திய அரசுடன் பேசி, றோ அதிகாரிகள் வேறுவிதமாக செயற்பட்டார்கள். அந்த ஆயுதங்களை எல்லா இயக்கங்களிற்கும் பிரித்து கொடுத்தார்கள். ஈழ விடுதலை இயக்கங்களிற்கு இந்தியா கொடுத்த ஆயுதங்களின் பின்னணி இதுதான்!

ஈழவிடுதலை இயக்கங்களின் கடல்மார்க்க ஆயுத கொள்வனவு முயற்சியில் முதலாவதாக நடந்த சம்பவம் இதுதான் . இதன்பின் புளொட் இப்படியான முயற்சிக்கு துணியவில்லை. புளொட்டின் வீழ்ச்சிக்கும் இந்த இயல்பும் ஒரு காரணமாக இருக்கலா். இயக்க மோதல்கள் உள்ளிட்ட பல காரணங்களால் புளொட்டால் தனித்துவமாக சிந்திக்கவும் முடியாமல் போய்விட்டது.

ஆனால் இதன் பின்னர்தான் புலிகளின் ஆட்டம் ஆரம்பித்தது. தாய்லாந்திற்கு போன கே.பி அங்குள்ள முகவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, ஆயுதங்களை கொள்வனவு செய்தார். புலிகளின் முதலாவது ஆயுதக் கப்பல் 1985இன் தொடக்கத்தில் சென்னை துறைமுகத்திற்கு வந்தது. கச்சிதமாக அவை இறக்கப்பட்டு புலிகளின் கைக்கு சேர்ந்தது.

ஆயுதக்கொள்வனவு, கறுப்புசந்தை பணம் விழுங்கும், காய்க்கும் இடம். சாதாரண விடுதலை அமைப்புக்களால் ஈடுகொடுக்க முடியாது. புலிகள் தவிர்ந்த மற்றைய இயக்கங்கள் இதில் அவ்வளவாக ஈடுபடாதது இதனால்தான். ஒரு சூதாட்டத்தை போன்றது ஆயுத கொள்வனவு. ஒரு முகவரை நம்பி பணம் கொடுத்தால், சில சமயம் ஆயுதம் வரும். சில சமயம் ஆளை காணமுடியாது. தலைமறைவாகி விடுவார். மலைவிழுங்கிகள்தான் இந்த தொழிலில் ஈடுபடுவார்கள். எவ்வளவுதான் சமார்த்தியசாலியென்ற போதும், அடிக்கடி காசை இழக்க வேண்டிவரும். அதற்கு சில உதாரணங்களை சொல்கிறோம்.

1998இல் புதுக்குடியிருப்பிற்கு அண்மையில் ஆழஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதலில் மரணமானவர் கேணல் சங்கர். புலிகளின் விமானப்படை தளபதியாக இருந்தவர்.

 

அவரது போராளிகள் பலர் வெளிநாடுகளில் தங்கியிருந்து விமானப்பயிற்சி பெற்றனர். இப்படியான சந்தர்ப்பமொன்றின் மூலம் ஆயுத முகவர் ஒருவரின் தொடர்பு சங்கரிற்கு ஏற்பட்டது. இது 1990களின் முற்பகுதியில் நடந்தது. ஆயுத முகவர் அல்ஜீரிய பிரஜை. சிறிய ரக விமானம், விமான எதிர்ப்பு ஆயுதங்கள் வாங்கித் தருவதாக வாக்களித்திருந்தார். அவர் ஒரு எமகாதகன். சங்கருக்கோ, சங்கரின் போராளிகளிற்கோ இது தெரியாது. அல்ஜீரியன் பேசியதை அப்படியே நம்பினார்கள். இந்த ஆயுதபேரத்தை முழுவதும் சங்கரே செய்தார். சங்கரின் ஆட்கள் ஆயுதங்களை வாங்கி கே.பியின் குறூப்பிடம் ஒப்படைப்பது, கே.பி குறூப் முல்லைத்தீவிற்கு அண்மையாக கடற்புலிகளிடம் கையளிப்பது. இதுதான் திட்டம்.

uma-184x300.jpg

 

குறிப்பிட்ட தினமொன்றில் கே.பிக்கு அறிவிக்கப்பட்டது, சுயெஸ் கால்வாயில் கப்பலை கட்டி வைத்திருங்கள், அழைக்கும் போது உடனடியாக எகிப்திற்கு செல்லுங்கள் என. இதன்படி கே.பியின் அணியொன்று சுயெஸ் கால்வாயில் காத்திருந்தது. மூன்று, நான்கு நாட்கள் காத்திருந்தும் பலனில்லை. முகவரின் தொடர்பும் இல்லை. அவரிடம் அரைவாசி பணம் கொடுக்கப்பட்டு விட்டது. இதன் மீதி காசு இலண்டனில் ஒருவரிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்தது.

1987 இல் நாவற்குழியில் நடந்த வெடிவிபத்தில் மரணமான கண்ணாடி வாசுவின் (கப்டன் வாசு) நெருங்கிய உறவினரான அவர்- இலண்டனில் இருக்கிறார்- மிகுதி பணத்தை புலிகள் கொடுத்து வைத்தனர். ஆயுதங்கள் கப்பலில் ஏற்றப்பட்டதும், அவர் காசை குறிப்பிட்ட ஒருவரிடம் ஒப்படைப்பதென்பது திட்டம்.

அவர் ஆயுத முகவரிடமும் பணத்தை கொடுக்கவில்லை. புலிகளிடமும் கொடுக்கவில்லை. கேட்டால், திருட்டு போய்விட்டதாக காரணம் கூறினார். வீட்டின் பின்பகுதி சுவரில் ஒரு ஓட்டையையும் காட்டி, “இந்தா.. இதற்குள்ளால்தான் கள்ளன் புகுந்து, பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான்“ என்றார்.

(தொடரும்)

 

 

http://www.pagetamil.com/19441/

Share this post


Link to post
Share on other sites

உக்ரேனில் இருந்து ஆயுதங்களுடன் புறப்பட்ட புலிகளின் விமானம் எங்கே போனது?

October 21, 2018
ananthapuram-05.jpg

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 40

பீஷ்மர்

ஆயுதச்சந்தையில் இருக்கும் எமகாதகர்களை பற்றி கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தோம். அனுபவமற்றவர்கள் இந்த உலகத்திற்குள் புகுந்தால், புங்குடுதீவாருக்கு புகையிலை விற்றவரின் கதையாகத்தான் முடியும். கட்டியிருக்கும் கோவணத்தையும் உருவிக்கொண்டு போய்விடுவார்கள்.

இந்த தொடரில் காலஒழுங்கின்படி வந்தால், இப்பொழுது கே.பி எப்படி சர்வதேச ஆயுதக்கடத்தல்காரர்களுடன் தொடர்பை ஏற்படுத்தினார், எப்படி ஆயுதங்கள் வாங்கினார், எப்படி அவற்றை இலங்கைக்கு அனுப்பினார், எந்தெந்த நாடுகள் புலிகளுடன் உறவில் இருந்தன என்பதை பற்றித்தான் எழுத வேண்டும். ஆனால் ஒரு சிறு பாய்ச்சலாக பாய்ந்து, கே.பிக்கு பின்னரான புலிகளின் ஆயுதக்கடத்தல் பற்றிய விடயங்களை எழுதவுள்ளோம். அனுபவமற்றவர்கள் ஆயுதக்கடத்தல்காரர்களுடன் தொடர்பை ஏற்படுத்தினால் என்ன நடக்குமென்பதற்கான உதாரணத்தை புரியவைக்கவே இதை இப்பொழுது குறிப்பிடுகிறோம். இதன் பின்னர் கே.பியின் ஆரம்பகாலம் பற்றி குறிப்பிடலாம்.

சிலபல காரணங்களால் கே.பியை புலிகள் ஆயுதக்கொள்வனவு, சர்வதேச விவகாரங்களை கவனிக்கும் பொறுப்பில் இருந்து ஒதுங்கியிருக்க செய்தார்கள். (அந்த சமயத்தில் கே.பி ஒரு சென்டிமென்டான கடிதத்தை பிரபாகரனிற்கு எழுதியிருந்தார். அந்த சம்பவங்களை பற்றி பின்னர் குறிப்பிடுகிறோம்) இதன்பின் அனைத்துலக தொடர்பக பொறுப்பாளர் கஸ்ரோ (இவர் வல்வெட்டித்துறையை சேர்ந்தவர். யாழ் மாவட்ட துணைத்தளபதியாக இருந்தவர். 1991இல் ஆனையிறவு யுத்தத்தில் இடுப்பின் கீழ் செயலிழந்து, இறுதிவரை சக்கர நாற்காலியிலேயே நடமாடினார். ஹாட்லிக்கல்லூரியின் பழைய மாணவன்) மற்றும் பொட்டம்மான், சூசையின் ஆட்களிடம் ஆயுதக்கொள்வனவு, வெளிநாட்டு விவகாரங்கள் கையளிக்கப்பட்டன.

18555859_10155292098764054_3850349610381 கஸ்ரோ, இம்மானுவேல் அடிகளார்

இப்படி புதிதாக அந்த பொறுப்பை ஏற்றவர்கள் தென்னாசியா, ஐரோப்பிய, கனடாவில் தங்கியிருந்தார்கள். இவர்கள் யாரெனில், 1996 தொடக்கம் 2000 ஆண்டுகளில் கடல் மார்க்கமாக வன்னியிலிருந்து அனுப்பப்பட்டு அந்த நாடுகளில் கல்விகற்றவர்கள். கே.பியை போல ஆயுதக்கடத்தல் உலகில் மெல்லமெல்ல நுழைந்தவர்கள் அல்ல. கே.பியின் கதை வேறு. அவர் ஒரு கைக்குண்டை, கைத்துப்பாக்கியை வாங்க அலைந்து திரிந்து, பல இடங்களில் அடிபட்டு இந்த உலகத்தை படித்தவர். அதனால்தான் சந்துபொந்தெல்லாம் அத்துபடியாக வைத்திருந்தார். அவர் ஏமாந்தது ஆரம்பகாலத்தில். கொஞ்ச பணம் விரயமாகியிருக்கும். ஆனால், கஸ்ரோ, பொட்டம்மானின் ஆட்கள் அப்படியல்ல. அவர்கள் அந்தந்த நாடுகளில் பல்கலைகழகங்களில் படித்துவிட்டு, கூகிளில் குரூஸ் ஏவுகணையின் படத்தை நகல் எடுத்துக்கொண்டு நேரடியாக ஏவுகணை வாங்க டீல் செய்தவர்கள்.

2006 தொடக்கம் 2007இல் கணிசமான புலிகளின் ஆயுதக்கப்பல்கள் அழிக்கப்பட்டு விட்டன. எஞ்சியவை தென்னாசியாவிற்கு அப்பால் தரித்து நின்றன. இனி கப்பலில் ஆயுதங்களை கொண்டு வருவதென்பது சாத்தியமேயில்லாத விடயம் என்பது புலிகளிற்கு தெரிந்து விட்டது. கஸ்ரோவின் ஆட்கள் பலர் பல நாடுகளில் புலனாய்வுபிரிவுகளால் கைது செய்யப்பட்டு விட்டனர். வன்னியில் யுத்தம் இறுகிவிட்டது. ஏதாவது புதிய ஆயுதங்கள் வந்தால்தான் மாற்றம் நிகழும்.
பொட்டம்மான் ஒரு திட்டம் தீட்டினார். விமானம் மூலம் வன்னிக்கு ஆயுதம் கொண்டு வரலாம்!

 

ஐரோப்பாவில் இருந்த பொட்டம்மானின் ஆட்கள் ஒரு உக்ரேனியனை பிடித்தார்கள். நீண்டகாலம் ஆயுதக்கடத்தலில் இருக்கிறான் என்றுதான் அவர்களிற்கு அறிமுகமாகினான்.

அப்பொழுது புலிகளிற்கு உக்ரேன் நிறைய ஆயுதங்கள் கொடுத்தது. புலிகளிற்கு முதன்முதலில் விமானத்தை தாக்கும் இயங்குநிலை ஏவுகணை கிடைத்தது உக்ரேனிலிருந்துதான். யுத்தம் முடிவில் சில ஏவுகணைகளை இராணுவம் கைப்பற்றியிருந்தது. அவையெல்லாம் புலிகள் உக்ரேனில் வாங்கியவை. 

இதன்மூலமே சில விமானங்கள், ஹெலிகொப்ரர்களை சுட்டுவிழுத்தியிருந்தனர். பின்னர், இலங்கை அரசிடம் புலிகளிற்கு என்ன ஏவுகணை வழங்கினோம் என்பதை தெரிவித்து, அதற்கான எதிர்ப்பு உபகரணங்களை விற்ற வியாபார தந்திரத்தையெல்லாம் உக்ரேன் கையாண்டது.

சில ஏவுகணைகள், ஆட்லறி செல்கள், ரோபிடோக்கள் உள்ளிட்ட ஆயுதங்களைதான் புலிகள் வாங்க விரும்பினார்கள். தேவையான ஆயுதங்களின் பட்டியலை வாங்கிப்பார்த்த உக்ரேனியன், இதெல்லாம் ஒரு மேற்றரேயில்லை. ஆனால் காசு உடனே வைக்க வேண்டுமென்றான். டீல் பேசிய புலனாய்வுத்துறைக்காரர்கள் உடனே பொட்டம்மானிடம் விடயத்தை சொன்னார்கள். பொட்டம்மான் பிடிகொடுக்காமல் பதில்கொடுத்தார். காசை முதலில் கொடுத்து ஏமாந்து விடக்கூடாது. அதற்காக காசை கடைசியில்தான் தருவோம் என அடம்பிடித்து டீலை குழப்பவும் வேண்டாம். களத்தில் உள்ளவர்களிற்குத்தான் நிலவரம் தெரியும், அவதானமாக நடக்க வேண்டும் என்றார்.

 

atta-300x135.pngஆயுதங்களை அனுப்பிய பின்னர் காசு தரலாமென புலிகள் சொல்ல உக்ரேனியன் ஒரேயடியாக மறுத்து விட்டான். ஆயுதம் வாங்க, விமான நிலைய அதிகாரிகளை கைக்குள் போட தேவையான காசை பட்டியல்படுத்தி அந்த பணம் முற்பணமாக தேவை. இல்லாவிட்டால் இந்த டீலிற்கு தான் வரலில்லையென்றுவிட்டான்.

வன்னிக்கு ஒரு விமானத்தில் ஆயுதம் அனுப்பினால் அந்த விமானம் திரும்பி வருமென்பதற்கு உத்தரவாதமில்லை. அதனால் விமானங்களை வாடகைக்கு தர எந்த நிறுவனமும் சம்மதிக்கவில்லை. ஆக, விமானமொன்றும் வாங்க வேண்டும். இதற்கு உக்ரேனியனே ஒரு யோசனை சொன்னான்.

தனக்கு தெரிந்த சில ஏஜெண்ட்கள் மூலம் உக்ரேனிய நிறுவனமொன்றிடம் உள்ள ஆகப்பழைய அவ்ரோ விமானமொன்றை வாங்கலாமென்றான். இனி இரும்புக்குத்தான் பயன்படுத்தலாமென்ற நிலையில் உள்ளதை வாங்கினால் நட்டமுமில்லை, இலகுவாக வாங்கவும் முடியுமென்றான். அங்குள்ள புலிகளும் அதற்கு சம்மதித்தார்கள். ஆயுதம், விமானம் வாங்க, விமானநிலைய ஊழியர்களை கைக்குள் போட தேவையான பணத்தின் வழங்கினார்கள்.

இதற்குள் இடையீடாக இன்னொரு விடயத்தையும் சொல்ல வேண்டும். விடுதலைப்புலிகள் இரண்டு பெரிய விமான ஓடுபாதைகளை பாவித்தார்கள். இரணைமடுவிற்கு அப்பால் பனிக்கன் குளத்திற்கு அருகிலும், கேப்பாபிலவிலும். புலிகளின் சாதாரண சிலின் ரக விமானங்களிற்கு எதற்கு அத்தனை பெரிய ஓடுபாதைகள்?

புலிகளின் சிலின் விமானங்கள் தாக்குதல் பறப்பை செய்தபோதோ, அல்லது திரும்ப வந்து தரையிறங்கும்போதோ இந்த ஓடுதளங்களை பாவித்ததேயில்லை. இப்போது இராணுவத்தின் கையில் உள்ள- அவர்கள் வெளியில் தகவல் சொல்லாத- வேறும் சில ஓடுதளங்கள் புலிகளிடம் இருந்தன. சிலின் போன்ற சிறிய ரக விமானங்களிற்கான சிறிய தளங்கள்.

2000களில் இருந்தே புலிகள் பெரிய ஓடுதளங்களை அமைக்க தொடங்கியது, கடல்வழி விநியோகம் தடுக்கப்பட்டால், விமானங்கள் மூலமாக ஆயுதங்களை கொண்டு வருவதற்காகவும் இருக்கலாம். இது ஒரு ஊகம் மாத்திரமே. ஏனெனில், கடல்வழி விநியோகங்கள் நெருக்கடியாக, புலிகளின் அடுத்த தெரிவாக வான்வழி விநியோகமே இருந்தது. 2007இலேயே புலிகள் அந்த தெரிவிற்கு சென்றிருந்தார்கள்.

ஆயுதங்களுடன் வரும் விமானத்தை இரணைமடுவில் தரையிறக்குவதென புலிகள் முடிவெடுத்தனர்.

 

உக்ரேனிலிருந்து புறப்பட்டு, தென்னாசிய நாடொன்றில் தரித்து எரிபொருள் நிரப்பி ஒரு அதிகாலை நேரம் இரணைமடுவில் விமானம் இறங்குவதாக திட்டமிடப்பட்டது.
வாங்கிய ஆயுதங்கள் என ஒரு களஞ்சியசாலைக்கு புலிகளை அழைத்து சென்று உக்ரேனியன் காட்டினான். சில நாட்களின் பின்னர் உக்ரேனிலுள்ள விமான நிலையமொன்றிற்கு புலிகளின் பிரதிநிதிகளை அழைத்து சென்று தரித்து நின்ற அவ்ரோ விமானமொன்றை காண்பித்தான். விமானத்தில் ஏறி ஆயுதங்களை பார்க்க புலிகள் விரும்பியபோதும், உக்ரேனியன் சாமர்த்தியமாக தவிர்த்துவிட்டான்.

தற்போது கடமையில் உள்ள ஒருவன் சிக்கலானவன், விமானத்தில் ஏறினால் எல்லா திட்டமும் சிக்கலாகிவிடும் என்றான். எப்படியோ விமானநிலையத்திற்குள் அழைத்து சென்றிருக்கிறானே, அதனால் மற்றதெல்லாவற்றையும் கச்சிதமாக செய்வான் என புலிகளின் பிரதிநிதிகள் நம்பினார்கள். ஒப்ரேசன் சக்ஸஸ் என்ற தகவல் வன்னிக்கு அனுப்பப்பட்டது!

குறிப்பிட்ட நாளில் விமானம் அங்கிருந்து புறப்பட்டது.

இரணைமடுவில் விமானம் தரையிறங்கும் என குறிக்கப்பட்டிருந்த நேரத்திற்கு சற்று முன்னதாகவே புலிகளின் சில முக்கிய தளபதிகள் நேரில் சென்றிருந்தனர். அவர்களில் பொட்டம்மானும் ஒருவர். விமானம் தரையிறங்குவதற்கான நேரம் நெருங்கி, ஒரு சில நிமிடங்கள்தான் இருந்தது.

அந்த காலத்தில் விமானப்படையின் கிபிர், மிக் மிகையொலி விமானங்கள் புலிகளிற்கு சிம்மசொப்பமனமாக விளங்கின. புலிகளின் முகாம்கள் மீது இவை நடத்திய தாக்குதலில் பெரும் இழப்புக்கள் ஏற்பட்டன. இதற்கு பின்னர் புலிகள் ஒரு மாற்று ஏற்பாடு செய்தனர். மன்னாருக்கு சமீபமாக புலிகளின் ராடர் நிலையம் நிறுவப்பட்டு, விமானங்களின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டது. தாக்குதல் விமானங்கள் வன்னியை நோக்கி புறப்பட்டால் அனைத்து முகாம்களிற்கும் எச்சரிக்கை பறக்கும் ஏற்பாடொன்றை புலிகள் செய்திருந்தனர். அதனால் கட்டுநாயக்காவிலிருந்து விமானங்கள் புறப்பட, புதுக்குடியிருப்பில் உள்ள முகாம்களில் இருந்த போராளிகளும் முகாம்களை விட்டு வெளியேறி விடுவார்கள். அல்லது பதுக்குகுழிக்குள் சென்றுவிடுவார்கள். விமானம் வருவதற்கு ஐந்து நிமிடங்களிற்கு முன்னராவது இந்த எச்சரிக்கை வந்துவிடும்.

வன்னியில் திடீர் தாக்குதலை நடத்துவதற்கு கடல்வழியாக பயணித்து, திடீரென்றுதான் நிலப்பரப்பிற்குள் ஊடுருவும் வழக்கத்தையும் இலங்கை விமானப்படை வைத்திருந்தது. எதிர்பாராத சமயத்தில், உச்சந்தலையில் குண்டு வீச வேண்டுமென்பதே விமானப்படையின் நோக்கமாக இருந்தது.

இரணைமடுவில் ஆயுத விமானத்திற்காக காத்திருந்த தளபதிகளிற்கும் இந்த எச்சரிக்கை வந்தது.

3-3-300x149.jpg விமானப்படையால் புனரமைக்கப்பட்ட பின்னர் இரணைமடு ஓடுபாதை

ஆயுத விமான விபரம் மிக இரகசியமாக இருந்ததால், ராடர் நிலையத்தில் இருந்தவர்களிற்கோ, அந்த எச்சரிக்கையை பகிர்ந்தவர்களிற்கோ விசயம் தெரிந்திருக்காது. ஒரு விமானம் வருகிறது என்றளவில் மட்டும்தான் தெரிந்திருக்கும்.

முல்லைத்தீவு கடல் மார்க்கமாக நுழையும் நமது விமானத்தை அறியாமல் எச்சரிக்கை தருகிறார்களா, அல்லது கட்டுநாயக்காவிலிருந்து வரும் விமானப்படை விமானத்திற்குத்தான் எச்சரிக்கை தருகிறார்களா என தெரியாமல் தளபதிகள் குழம்பிவிட்டனர்.
(தொடரும்)

 

 

http://www.pagetamil.com/20028/

Share this post


Link to post
Share on other sites

தொடர்ந்து  இணைக்கும் கிருபனுக்கு நன்றி ...... :)

Share this post


Link to post
Share on other sites
7 hours ago, sathiri said:

தொடர்ந்து  இணைக்கும் கிருபனுக்கு நன்றி ...... :)

வரலாறு முக்கியம் அமைச்சரே!?

 வாசிப்பவர்கள் உண்மைகளை உய்த்தறிவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது?

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now