Jump to content

ஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2018 at 1:12 PM, ரதி said:

அக்கினி, இங்கே நாம் கதைப்பது கருணா பிரிவதற்கு என்ன காரணம் என்பதை பற்றித் தான்...அதற்கு பொடடரின் நேரடி அல்லது மறை முக பங்களிப்பு பற்றித் தான் இப்ப நான் கதைக்கிறேன் ...பிரிந்த பிறகு கருணா என்ன செய்தார் என்பதை பிறகு கதைப்போம்


 

கருணா பிரிவதற்கு கருணாதான் காரணம். அம்மான் கிழக்கின் குறுநில மன்னராக ஆளவேண்டும் என்று சகல அதிகாரங்களையும் தனது கையில் எடுக்க வெளிக்கிட்டார். பிரிந்தபின்னர் அவருக்கும் பிள்ளையான் ஒரு சவாலாக வந்து சேர்ந்தார்.

Link to comment
Share on other sites

  • Replies 315
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அண்மையில் ஒரு இணையத்தில், முன்னாள் புலிகளின் புலநாய்வுத்துறையிலிருந்த ஒருவரின் செவ்வி என்று ஒன்று வெளிவந்திருந்தது. இறுதிப்போரில் நடந்தது பற்றி அவர் பேசுகிறார் என்று சொன்னார்கள். அதுவும், இங்கே எழுதப்படுவதும் ஒரே நபரினால் சொல்லப்பட்ட விடயங்கள் தானா?

ரோவினால் கே பீ வாங்கப்பட்டதும், அவரினூடாக இந்தியா உலங்குவானூர்தியொன்றினை அனுப்பி பிரபாகரனை நம்பவைத்து ஏற்றிச்சென்று சித்திரவதைகள் செய்து ஈற்றில் இலங்கையரசிடம் கொடுத்ததாக ஒருவர் அண்மையில் சொல்லியிருந்தார். 

இவையெல்லாம் என்ன, ஏன் இப்போது வெளிவருகின்றன? இதனால் யார் என்ன லாபம் அடையப் போகிறார்கள், இவர்களின் நோக்கமென்ன?

எல்லாமே ஒரு புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

Link to comment
Share on other sites

On 7/1/2018 at 1:15 PM, கிருபன் said:

பொட்டர் நாலாம் ஈழ யுத்தம் ஆரம்பிக்கவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றவரா?

தளபதிகள் இயக்கத்தின் கட்டுப்பாடுகளை மீறக்கூடாது என்பதில் இறுக்கமாக இருந்தால் பலருடன் கொல்லுப்படவேண்டும்தான். ஆனால் பொட்டர் எல்லாவற்றையும் இயக்கத்துக்காகத்தானே செய்தார்.

என்னை பொறுத்தவரை ஒரு திறமையான உளவுத்துறை தொடங்கபோகும் சண்டையை துல்லியமாக கணிப்பது பலம் பலவீனம் சகலதும் விரல் நுனியில் இருக்கணும் உலகில் சிறிய படைகள் கூட போரில் வெற்றிகொண்டு இருந்தன காரணம் திறமையான் உளவு அமைப்பு . கிட்டர் மரணத்துக்கு முன்பே இயக்கத்தின் மெயின் கோட் வேர்ட் இந்திய உளவுத்துறை கொண்டு இருந்தது .அப்பவே பொட்டரை மாத்தனும் எனும்போது மாத்தையாவை அவசரமாய் பலி கடாவாய் மாத்தி அத்துடன் பொட்டரை மாத்தனும் எனும் கருத்து கொண்ட யோகி போன்றவர்களையும் சந்தேக வட்டத்துள் கொண்டுவந்து கடும் சித்திரைவதை செய்தது .எதிரிக்கு எதிராக உளவு வலையமைப்பை செய்வதுக்கு பதிலாக உள் இயக்க முரண்பாடுகளில் ஆர்வம் காட்டி கொண்டது போன்ற பாரிய தவறுகள்  தான் பிழை விட்டால் கேட்க்க பாட்க்க ஆட்கள் இல்லைஎன்ற மமதையில் இருந்தவரால் இன்று எல்லாத்தையும் இழந்து நிக்கிறம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, spyder12uk said:

அப்பவே பொட்டரை மாத்தனும் எனும்போது மாத்தையாவை அவசரமாய் பலி கடாவாய் மாத்தி அத்துடன் பொட்டரை மாத்தனும் எனும் கருத்து கொண்ட யோகி போன்றவர்களையும் சந்தேக வட்டத்துள் கொண்டுவந்து கடும் சித்திரைவதை செய்தது .எதிரிக்கு எதிராக உளவு வலையமைப்பை செய்வதுக்கு பதிலாக உள் இயக்க முரண்பாடுகளில் ஆர்வம் காட்டி கொண்டது போன்ற பாரிய தவறுகள்  தான் பிழை விட்டால் கேட்க்க பாட்க்க ஆட்கள் இல்லைஎன்ற மமதையில் இருந்தவரால் இன்று எல்லாத்தையும் இழந்து நிக்கிறம் .

 

மாத்தையாவை ஆதாரம் இல்லாமல், வெறும் குற்றச்சாட்டின் அடிப்படையில், எப்படி ஓர் உளவு துறை கைது செய்ய முடியும்?

Link to comment
Share on other sites

1 minute ago, Kadancha said:

 

மாத்தையாவை ஆதாரம் இல்லாமல், வெறும் குற்றச்சாட்டின் அடிப்படையில், எப்படி ஓர் உளவு துறை கைது செய்ய முடியும்?

ஏனென்றால் கோர்ட் வேர்ட் எடுத்து கைமாறிய குழு மாத்தையாவின் ஆட்கள் நீங்க வேறை அங்கு என்ன விசாரணை மக்கள் முன்பா நடத்தபட்டது ?

இல்லை இயக்க நலன் விரும்பிகளின் முன்பாவது நடத்தனும் எனும் கடைசி கட்ட கோரிக்கையும் நிராகரிக்கபட்டது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, spyder12uk said:

எதிரிக்கு எதிராக உளவு வலையமைப்பை செய்வதுக்கு பதிலாக உள் இயக்க முரண்பாடுகளில் ஆர்வம் காட்டி கொண்டது போன்ற பாரிய தவறுகள்  தான் பிழை விட்டால் கேட்க்க பாட்க்க ஆட்கள் இல்லைஎன்ற மமதையில் இருந்தவரால் இன்று எல்லாத்தையும் இழந்து நிக்கிறம் . 

புலிகளின் உளவுத்துறை எப்படியான தகவல்களை வழங்கினாலும், அதை பிரபாகரனின் பார்வைக்கும், சிந்தனைக்கும் மட்டுமா விடப்பட்டிருந்தது?

ஆரம்ப காலங்களில் அப்படி இருந்திருக்கலாம்.

பிரபாகரன் வெளிப்பார்வைக்கு சகல அதிகாரமுள்ள, பிரபாகரனின் விருப்பிற்கு  புலிகளில் எல்லாம் நடத்தப்படும் என்ற தோற்றம் இருந்தாலும், புலிகளில் ஓர் மத்திய அதிகாரமுள்ள அமைப்பு இருந்ததாகவே நான் கேள்விப்பட்டேன்.

இந்த மத்திய அதிகாரமுள்ள அமைப்பு, மிக முக்கியமான விடயங்களை கையாள்வதும், அத்துடன் ஓர் check & balance ஆக மிகவும் வலிமை வாய்ந்த அதிகார பீடங்களான பிரபாகரன், புலிகளின் ராணுவ அமைப்பு, உளவு அமைப்பு மீது செயற்றப்பட்டது என்றே கேள்விப்பட்டேன். 

பின்னைய காலங்களில், புலனாய்வு நடவடிக்கையையும், தகவல்களையும், பலகோணங்களில் ஆய்வு செய்யும், மற்றும் மதிப்பீடு செய்யும் ஓர் பெயரிடப்படாத, அனாமதேயக் குழு இருந்ததாகவே கேள்வியுற்றேன்.

மாத்தையா, கருணா விடயங்கள், மற்றும் முக்கிய விடயங்களில் பிரபாகரன் மட்டுமே முடிவெடுத்தார் என்பதை நம்பமுடியாமல் உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 மாத்தையாவுக்கு வழங்கப்பட்ட முடிவு இயக்க நலனுக்கு சரியானதே.ஆனையிறவு தாக்குதல் தோல்வியின் பின்னர்,கிட்டுவின் வீரச்சாவின் பின்னர் இவர் மீதான பார்வை மாறியது.யோகியுடன் சேர்ந்து மட்டுவிலில்  மாத்தையா போராளிகளுக்கு கூட்டம் நடாத்தினார். போராளிகளின் குறைகேட்பு கூட்டமாக தொடங்கி கடைசியில் யோகிக்கு ஆமா போடும் கூட்டமாக மாத்தையா முடித்து வைத்தார். போராளிகள் என்ன கேள்வி கேட்டாலும் முந்திரிக்கொட்டையாக யோகி மாத்தையாவின் காதில் ஓதுவார். அதேயே மாத்தையா வெளியில் போராளிகளுக்கு முடிவாக அறிவிப்பார். என்ன மண்ணாங்கட்டிக்கு யோகிக்கு பயப்படுவான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, நந்தன் said:

போராளிகள் என்ன கேள்வி கேட்டாலும் முந்திரிக்கொட்டையாக யோகி மாத்தையாவின் காதில் ஓதுவார். அதேயே மாத்தையா வெளியில் போராளிகளுக்கு முடிவாக அறிவிப்பார். என்ன மண்ணாங்கட்டிக்கு யோகிக்கு பயப்படுவான்

யோகிக்கு பயந்தல்ல. அவர் அரசியல் துறை என்பதால் மாத்தயாவுக்கு மதியுரைஞராக இருந்திருப்பார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, spyder12uk said:

ஏனென்றால் கோர்ட் வேர்ட் எடுத்து கைமாறிய குழு மாத்தையாவின் ஆட்கள்

ஆதாரத்தின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதா அல்லது அப்படி நிரூபிக்கப்பட்டதாக கேள்வியுற்றீர்களா?

 

2 hours ago, spyder12uk said:

நீங்க வேறை அங்கு என்ன விசாரணை மக்கள் முன்பா நடத்தபட்டது ?

இது பகிரங்கமாக செய்ய முடியாத விடயம்.

ஏனெனில் முழு அமைப்புயுமே கூறு போடக்கூடிய வாய்ப்புகளை எதிரிகளுக்கு ஏற்றப்படுத்திக் கொடுப்பதாக அமைந்து விடும். போராளிகளில்  மனச்சோர்வை ஏற்றப்படுத்தக்கூடியது.

நிகழ்கால மற்றும் எதிர்கால புலனாய்வு முறைகள் மற்றும்  தரவு சேகரிப்பது, தனிப்பட்ட ஆள் அடையாளங்களை எதிரி ஊகிப்பதற்கு கூட எதுவாக அமைந்துவிடும்.   

இனொன்று, உபதலைவர் நிலையில் இருந்தவரை அப்படி விசாரிப்பது அவரின் சுய கெரவத்திற்கும், தலைபமைப்பீடத்திட்ற்கும், என் முழு அமைப்புக்குமே அவமானமும் மானபங்கமம் ஆகும்.

இதனாலேயே, இப்படி பட்ட விசாராணிகள் பொதுவாக அப்படி விசாரணை செய்யப்படுபவரிலும் பார்க்க ஆகிருதி (stature) உள்ள ஓர் அமைப்பாலோ அல்லது பிரத்திதேயகமாக நியமிக்கப்பட்ட குழுவாலோ நடத்தப்படும்.

புலிகள் எந்த விதத்தில் இந்த விசாரணையை முன்னெடுத்து நடத்தினார்கள் என்பதை  அறிந்தவர்கள் இங்கே சொல்லுங்கள். 

2 hours ago, spyder12uk said:

இல்லை இயக்க நலன் விரும்பிகளின் முன்பாவது நடத்தனும் எனும் கடைசி கட்ட கோரிக்கையும் நிராகரிக்கபட்டது .

இந்த முடிவு சரி என்பத்தே எனது அபிப்பிராயம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

யோகிக்கு பயந்தல்ல. அவர் அரசியல் துறை என்பதால் மாத்தயாவுக்கு மதியுரைஞராக இருந்திருப்பார்.

நீங்கள் செய்தி வழி, நாங்கள் அனுபவ வழி 

Link to comment
Share on other sites

17 minutes ago, Kadancha said:

ஆதாரத்தின் அடிப்படையில் நிரூபிக்கப்பட்டதா அல்லது அப்படி நிரூபிக்கப்பட்டதாக கேள்வியுற்றீர்களா?

குற்றத்தை ஒப்புகொண்டுஉள்ளம் என்று மகளிர் பள்ளி (இடம் புரிந்தவர்களுக்கு மட்டும் ) ஒன்றில் பலியாடுகள் போல் வரிசையாக நின்று ஒப்புதல் குடுத்தார்கள் உடனே அவசர அவசரமாய் கொண்டு போனார்கள் அதன் பின் இன்றுவரையிலும் நான் காணவில்லை அவர்களை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, spyder12uk said:

குற்றத்தை ஒப்புகொண்டுஉள்ளம் என்று மகளிர் பள்ளி (இடம் புரிந்தவர்களுக்கு மட்டும் ) ஒன்றில் பலியாடுகள் போல் வரிசையாக நின்று ஒப்புதல் குடுத்தார்கள் உடனே அவசர அவசரமாய் கொண்டு போனார்கள் அதன் பின் இன்றுவரையிலும் நான் காணவில்லை அவர்களை .

நீங்கள் சொல்வது ஒரு விதமான ஜூரி (Jury) மற்றும் பார்வையாளர்கள்.

நீங்கள் சொல்வதின் படி, விசாரணையை நீங்கள் காணவில்லை அல்லது  அதை அறியவில்லை.

இந்த ஜூரி, உங்களை பொறுத்தவரையில், பலதரப்பட்டவர்கள், முக்கியமாக அறிவிக்கப்படும் முடிவினால் ஏதாவதுஉ ஓர் விதத்தில் பாதிக்கப்படுபவர்களாக இருந்ததா?

நீங்கள் எந்தவொரு அந்தரங்கமான அல்லது உணர்திறனுடைய விடயங்களை முற்றாக தவிர்க்கவும்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/3/2018 at 7:16 AM, அக்னியஷ்த்ரா said:

 அப்படியா அக்கோய் .... நீங்கள் மட்டுவில் இருந்தநீங்களோ ...நான் பிறந்து வளர்ந்து வாழ்வதே இங்கேதான் .உங்களை போலத்தான் மட்டுவில் எல்லோரும் கருணா பிரிந்து பிரதேசவாதத்தை கையிலெடுக்க புழுகி புளங்காகிதமடைந்து அடுத்த தேர்தலில் வாக்குகளையும் அள்ளிப்போட்டினம். பிறகு தான் தெரிந்தது dog ஐ குளிப்பாட்டி நடுவீட்டில்  வைத்தாலும்  எங்கே போகும் என்று... கும்மானின் வால்களின் கட்டப்பஞ்சாயத்தையும் நாட்டாமைத்தனத்தையும் கேட்டு கேட்டு வாங்கி அனுபவித்ததும் மட்டுதான், மட்டுவிலிருந்த வலம்புரி என்ற தமிழ் கடைக்கு என்ன நடந்தது என்று கொஞ்சம் சொல்வீர்களோ உங்கடை கும்மானிடம் கேட்டு...? , யாழ் தமிழர்களின் கடைகளை எல்லாம் குடிகிளப்பி அங்கே முஸ்லிம்களை உட்கார வைத்தது தான் உங்கள் கும்மானின் சாதனை என்று மட்டுவில் இருந்த உங்களுக்கு தெரியாதோ ....? முதலிலிருந்தே சொல்கிறோம்  அடிச்சு விடுவதையெல்லாம் தமிழ் வின் பார்த்து எழுதும் புலம்பெயர்களுடன் வைத்துக்கொள்ளுங்கள் ..ஊரிலிருந்து எழுதுபவர்களுக்கு ஊரைப்பற்றி பாடம் எடுக்கும் போது கவனம் தேவை ...பப்பு அவ்வளவாக வேகாது கண்டியளோ ...

தேவையற்று சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாதீர்கள் சகோ

இன்னும் கோரப்பற்கள்  அங்கே  உள்ளன

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தன் said:

நீங்கள் செய்தி வழி, நாங்கள் அனுபவ வழி 

எனக்கு அனுபவ வழி இருந்திருந்தால் ஏன்  வரலாறுகளைத் தேடி வாசிக்கப்போகின்றேன்.

யோகி இறுதிவரை இயக்கத்திற்கு விசுவாசமாக இருந்து முள்ளிவாய்க்காலில் பாதிரியார் மூலம் சரணடைந்தவர்களில் ஒருவர்தானே. மாத்தயாவின் சதியில் பங்காளராக இருந்திருந்தால் எப்போதோ சுசீலன் மாதிரி காணாமல் போயிருப்பார்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, கிருபன் said:

கருணா பிரிவதற்கு கருணாதான் காரணம். அம்மான் கிழக்கின் குறுநில மன்னராக ஆளவேண்டும் என்று சகல அதிகாரங்களையும் தனது கையில் எடுக்க வெளிக்கிட்டார். பிரிந்தபின்னர் அவருக்கும் பிள்ளையான் ஒரு சவாலாக வந்து சேர்ந்தார்.

கிருபன், நீங்களும் மற்றவர்கள் மாதிரி விதண்டாவாதம் கதைக்கத் தொடங்கி விடடீர்கள்... நான் இந்தக் கருத்தாடலின் ஆரம்பத்திலேயே இருவரிலும் பிழை என்று  சொல்லி   விட்டேன். 

////////////////////////////////////////////////////////////////
அக்னி போய் திரியை திரும்பவும் வடிவாய் வாசித்துப் பாருங்கள் யார் திசை திருப்பினது என்று தெரியும்....நீங்கள் சொல்வது மாதிரி கருணா பதவி ஆசை பிடித்தவராக இருக்கலாம். அப்படி இருந்தாலும் என்ன தப்பு? அவருக்கு அந்தத் தகுதி இல்லையா?

நிற்க,கருணா பதவி ஆசை பிடித்தவர் எண்டால் பொட்டு என்ன மாதிரி?...இயக்கம் பிரியக் கூடாது.கொண்ட கொள்கை தான் முக்கியம் என்று அவர் நினைத்திருந்தால் கருணாவுக்கு பதவியைக் கொடுத்து பக்கத்தில் வைத்திருப்பார்...இவருக்கும் பதவி தான் முக்கியம் 

…………………………………………………………………………………………………………………………………………..

மாத்தையா,துரோகம் செய்யும் ஆள் இல்லை என்று தான் அவரை நன்கு தெரிந்தவர்கள் சொல்கிறார்கள்...திருமணம் முடித்த அன்றே மனைவியின் சங்கிலியையோ/தாலியையோ வித்து அந்தக் காசை இயக்கத்திற்கு கொடுத்தவராம்..


ஆரம்பத்தில் இருந்தே எதிரியின் சதி வலையில் மாட்டுப்பட்டு எப்போது இயக்கத்தை அழிக்க நினைத்தார்களோ அப்போது அழித்தார்கள்...எதிரியை குறைவாய் நினைத்தால் இது தான் நடக்கும் 

 

 

 

 

 

 

6 hours ago, நந்தன் said:

 மாத்தையாவுக்கு வழங்கப்பட்ட முடிவு இயக்க நலனுக்கு சரியானதே.ஆனையிறவு தாக்குதல் தோல்வியின் பின்னர்,கிட்டுவின் வீரச்சாவின் பின்னர் இவர் மீதான பார்வை மாறியது.யோகியுடன் சேர்ந்து மட்டுவிலில்  மாத்தையா போராளிகளுக்கு கூட்டம் நடாத்தினார். போராளிகளின் குறைகேட்பு கூட்டமாக தொடங்கி கடைசியில் யோகிக்கு ஆமா போடும் கூட்டமாக மாத்தையா முடித்து வைத்தார். போராளிகள் என்ன கேள்வி கேட்டாலும் முந்திரிக்கொட்டையாக யோகி மாத்தையாவின் காதில் ஓதுவார். அதேயே மாத்தையா வெளியில் போராளிகளுக்கு முடிவாக அறிவிப்பார். என்ன மண்ணாங்கட்டிக்கு யோகிக்கு பயப்படுவான்.

அரசியற் துறையால் தான் இயக்கம் அழிந்தது என்று புலனாய்வுத் துறையினர் சொல்லினம்..இது பற்றி உங்கள் கருத்து என்ன நந்தன்?...சுனா பனாவை காட்டிக் கொடுத்ததே புலனாய்வுத் துறையினராமே  கேள்விபட்டனிங்க்ளா அனுபவசாலி 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தைக் காட்டிக் கொடுப்பவனும்

பெற்ற தாயை கூட்டிக் கொடுப்பவனும் ஒன்று தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

அரசியற் துறையால் தான் இயக்கம் அழிந்தது என்று புலனாய்வுத் துறையினர் சொல்லினம்..இது பற்றி உங்கள் கருத்து என்ன நந்தன்?...சுனா பனாவை காட்டிக் கொடுத்ததே புலனாய்வுத் துறையினராமே  கேள்விபட்டனிங்க்ளா அனுபவசாலி

உங்களின் விடுப்பு கேட்கும் ஆர்வம் புரிகின்றது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ரதி said:

கிருபன், நீங்களும் மற்றவர்கள் மாதிரி விதண்டாவாதம் கதைக்கத் தொடங்கி விடடீர்கள்... நான் இந்தக் கருத்தாடலின் ஆரம்பத்திலேயே இருவரிலும் பிழை என்று  சொல்லி   விட்டேன். 

யார் சரி, யார் பிழை என்று நாம் ஈசிச்சேரில் இருந்து தீர்ப்புக்கூற முடியாது.

கருணா அம்மான் பிரிந்ததற்கு அவரைத் தவிர எவரும் காரணமில்லை என்பது உங்களுக்கு விதண்டவாதமாகத் தெரிந்தால்  வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ragunathan said:

அண்மையில் ஒரு இணையத்தில், முன்னாள் புலிகளின் புலநாய்வுத்துறையிலிருந்த ஒருவரின் செவ்வி என்று ஒன்று வெளிவந்திருந்தது. இறுதிப்போரில் நடந்தது பற்றி அவர் பேசுகிறார் என்று சொன்னார்கள். அதுவும், இங்கே எழுதப்படுவதும் ஒரே நபரினால் சொல்லப்பட்ட விடயங்கள் தானா?

ரோவினால் கே பீ வாங்கப்பட்டதும், அவரினூடாக இந்தியா உலங்குவானூர்தியொன்றினை அனுப்பி பிரபாகரனை நம்பவைத்து ஏற்றிச்சென்று சித்திரவதைகள் செய்து ஈற்றில் இலங்கையரசிடம் கொடுத்ததாக ஒருவர் அண்மையில் சொல்லியிருந்தார். 

இவையெல்லாம் என்ன, ஏன் இப்போது வெளிவருகின்றன? இதனால் யார் என்ன லாபம் அடையப் போகிறார்கள், இவர்களின் நோக்கமென்ன?

எல்லாமே ஒரு புரியாத புதிராகத்தான் இருக்கிறது.

அந்த செவ்வியைக் கேட்கவில்லை. எல்லோரும் யானை பார்த்த குருடர்கள் என்றுதான் நினைக்கின்றேன்.

இந்திய உலங்குவானூர்தியில் தலைவர் 87 இல் ஏறிப்பட்ட அனுபவத்திற்குப் பின்னரும் ஏறியிருப்பாரா? இது இன்னொரு புலுடாக் கதை!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

எனக்கு அனுபவ வழி இருந்திருந்தால் ஏன்  வரலாறுகளைத் தேடி வாசிக்கப்போகின்றேன்.

யோகி இறுதிவரை இயக்கத்திற்கு விசுவாசமாக இருந்து முள்ளிவாய்க்காலில் பாதிரியார் மூலம் சரணடைந்தவர்களில் ஒருவர்தானே. மாத்தயாவின் சதியில் பங்காளராக இருந்திருந்தால் எப்போதோ சுசீலன் மாதிரி காணாமல் போயிருப்பார்.

Image may contain: one or more people

இறுதிப் போர் முடிந்த வேளையில்,  யோகி அண்ணாவை....  ஸ்ரீலங்கா புலனாய்வுத் துறையினர்,
குடிவரவு,  குடி அகல்வு திணைக்களத்தில்  (Department of Immigration and Emigration), 
எமது பாசையில்....  "பாஸ் போட்"  எடுக்கும் இடத்தில்... பலர் கண்டதாக  யாழ். களத்தில்  சிலர் அதனை  உறுதிப் படுத்தினார்கள். 

யோகி அண்ணா... தெரிந்தவர்களை கூட, தெரியாத மாதிரி.... முகத்தை வைத்துக் கொண்டிருந்தார் என்றும் எழுதியதை, இதே களத்தில்  வாசித்தேன். 

அன்றில் இருந்து, யோகி அண்ணாவின் மேல் உள்ள மதிப்பு, மேலும் உயர்ந்தது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணுக்கு முன்னாலே நடந்த போராடத்திலேயே 
ஈழ தமிழனுக்கு இவ்வளவு குழப்பம்.

ஏன் சிங்கள ... இந்திய உளவு துறைகள் பாதுகாப்பு பட்ஜெட்டில் இருந்து 
பல கோடிகளை உளவுக்கு ஒதுக்குகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. 

இன்னும் கொஞ்ச நாளில் ...
பிரபாகரன் பாகிஸ்தான் காரன் என்று எழுதினாலும் 
இல்லை இல்லை அவர் இந்திய பீகாரை சேர்ந்தவர் என்று மல்லு கட்ட 
ஒரு கூட்டம் யாழ் களத்திலேயே இருக்கு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கிருபன் said:

எனக்கு அனுபவ வழி இருந்திருந்தால் ஏன்  வரலாறுகளைத் தேடி வாசிக்கப்போகின்றேன்.

யோகி இறுதிவரை இயக்கத்திற்கு விசுவாசமாக இருந்து முள்ளிவாய்க்காலில் பாதிரியார் மூலம் சரணடைந்தவர்களில் ஒருவர்தானே. மாத்தயாவின் சதியில் பங்காளராக இருந்திருந்தால் எப்போதோ சுசீலன் மாதிரி காணாமல் போயிருப்பார்.

 

யோகி தப்பியது விசுவாசத்தால் அல்ல, பொன்னம்மானால்

Link to comment
Share on other sites

1 hour ago, நந்தன் said:

யோகி தப்பியது விசுவாசத்தால் அல்ல, பொன்னம்மானால்

அப்படி பார்த்தால் குமரப்பாவின் மருமகனும் பொட்டரிடம் தப்பியிருக்க வேணும் .

Link to comment
Share on other sites

2 hours ago, Maruthankerny said:

கண்ணுக்கு முன்னாலே நடந்த போராடத்திலேயே 
ஈழ தமிழனுக்கு இவ்வளவு குழப்பம்.

ஏன் சிங்கள ... இந்திய உளவு துறைகள் பாதுகாப்பு பட்ஜெட்டில் இருந்து 
பல கோடிகளை உளவுக்கு ஒதுக்குகிறார்கள் என்பதுதான் புரியவில்லை. 

இன்னும் கொஞ்ச நாளில் ...
பிரபாகரன் பாகிஸ்தான் காரன் என்று எழுதினாலும் 
இல்லை இல்லை அவர் இந்திய பீகாரை சேர்ந்தவர் என்று மல்லு கட்ட 
ஒரு கூட்டம் யாழ் களத்திலேயே இருக்கு. 

பொட்டர் எனும் ஆளுமையற்ற ஒருவரால் போராட்டம் தோல்வி அடைந்தது வேணுமென்றால் ஜெயதேவன் முதல் கொண்டு தலதா மாளிகை குண்டு வெடிப்பு (உலகம் தடை செய்ய முக்கிய காரனம்களில் ஒன்று ) வரை செய்த அறிவற்ற வேலைகள் சாட்சி .

சிவனின் கழுத்தில் இருக்கும் பாம்பு போல் .

Link to comment
Share on other sites

இங்கு இருக்கும் நிறையபேருக்கு பொட்டண்ணை ல காழ்ப்புணர்வு இருக்கு என்பது தெரிகிறது ஒருவர் சொல்கிறார் ஆளுமையற்றவராம் ,சிரிக்க தான் முடியும் இப்படியான கருத்துக்களை கேட்டு,

இலங்கை புலனாய்வுத்துறை மற்றும் இந்தியா ரா வை்சேர்ந்தவர்களிடம் தான் கேட்டு ஒரு certificate வாங்கி வந்து காட்டினால் ஒரு வேளை நம்புவார்களோ என்னவோ, கடைசி யுத்தத்தில் தப்பி புலம்பெயர்ந்த அவருக்கு கீழ் வேலை செய்தவர்கள் இருக்கிறார்கள் இங்கு யாழ் களத்திலும் ஒருவர் இருக்கிறார் எனக்கு தெரிந்து,

எனது நண்பன் ஒருவன் சொன்னான் பூசாவில பொட்டம்மான் எங்கையடா என்டு  கேட்டு கேட்டு தான் அடிச்சாங்கள்டா என்டு...

அண்மையில் சுப்ரமணியசுவாமி கூட அரசல் புரசலாக அவர் இத்தாலியில் இருப்பதாக ட்வீட்டர்ல சொல்லி இருந்தார் 

 எமது இனத்தின் சாபக்கேடுகளில் ஒன்று  திறமை உள்ளவர்களையும் மேதைகளையும் அவர்கள் உயிருடன் இருக்கும் போது கொண்டாடுவதில்லை ,இப்போது இல்லாமல் ஆன பிறகும் கூட புழுதி வாரி தூற்றுகிறோம் ,

 

கதிர்காமர் மீதான தாக்குதல் அவர் ஒரு soft target  ( அரசியல் சம்பந்தம் என்பதால் / இராணுவ இலக்கு அல்ல) ஆக இருந்தபோதும் அவரை அடிப்பது கடினமாக இருந்தது, அவர் ஒரு பேட்டியின் போது சொல்லி இருந்தார் என்ன நேரம் ஆனாலும் இரவில் நீச்சல் பயிற்சி எடுத்து விட்டு தான் நித்திரை செய்வது என,அவரின் தங்குமிடங்களில் ஒன்றில் தான் நீச்சல் குளம் இருக்கும்  அவர் பேட்டி கொடுத்து 1கிழமைக்குள் வேலை முடிக்கப்பட்டது ஒன்றால் முடிக்க முடியாவிட்டால் இன்னொன்று என இரண்டுவகையான ஆயுதங்கள் நகர்தப்பட்டிருந்தன அவரின் இருப்பிடத்திற்கு அருகாமையில் 

கட்டுநாயக்கா மீதான தாக்குதல் பற்றி பொட்டண்ணரே எழுதி இருந்தார் சாள்ஸ் க்கும் அதை தலைமை ஏற்று நடத்திய கேணல் கண்ணன் க்கும் ஒரு ஆயுதம் கொண்டு செல்வது தொடர்பில்(guess R.P.G) முறுகல் ஏற்பட்டது அதை தான் தீர்த்து வைத்ததாகவும் கொழும்பின் மீதான தாக்குதல்கள் தொடர்பில் இன்னும் சில விபரம்களும் அதில் இருந்தன,

புளொட் மோகன் மீதான தாக்குதல் இன்னொரு LRRP ல இருந்தவர் மீதான தாக்குதல்கள் இன்னும் எங்களிற்கு தெரியாமல் இன்னும் எவ்வளவோ

இப்ப கடைசில அவர் ஆளுமை அற்றவராம் ஆனால் ஒன்று இயக்கத்தில அதிகளவு திறமைசாலிகளை கொண்ட பிரிவு புலனாய்வு துறை்தான் 

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.