Jump to content

ஈழப்போர்: இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, அக்னியஷ்த்ரா said:

அக்கோய் ....கும்மான் தாக்குதல்/ கட்டளை தளபதி ...பொட்டர் புலனாய்வுப்பிரிவு தளபதி எல்லோரையும் உளவு பார்ப்பது அவரது Duty 
கும்மானின் நாற்றத்தை முதலிலேயே மோந்து பிடித்தாரா இல்லையா பொட்டர் ....?.அவர் அவரது கடமையை சரியாகத்தான் செய்திருக்கிறார்.
புலிகளின் பிரதித்தலைவர் மாத்தையாவின் நாற்றத்தையும் ஈகோ,பீகோ என்று பார்த்து  மோந்து பிடிக்காமல் விட்டிருந்தால் போராட்டம் எப்போதோ காலி  

என்னத்தை மோந்து பிடித்தார் பொட்டர்?... நான் பொட்டராய் இருந்திருந்தால் கருணாவின் மேல் சந்தேகம் வந்தவுடனேயே மண்டையில் போட்டு இருப்பன் அல்லது வன்னியில் கூப்பிட்டு என்ட பக்கத்தில் வைச்சிருப்பன்...மாத்தையாவின் அனுபவத்த்திற்கு பிறகும், கருணாவை உளவு பார்த்தும்,கருணா பிரிந்து போகும் மட்டும் பொட்டர் என்ன செய்தார்?

நான் திரும்பவும் சொல்றேன் கருணா துரோகி இல்லை...துரோகி ஆக்கப்பட்டார்...அதற்கு தெரிந்தோ/தெரியாமலோ பொட்டர் துணை போய்ட்டார்...இதில் இருவருக்கும்  போராட்டத்தை விட  தனிப்படட  பகை தான் பெரிசாய்ப் போட்டுது

Link to comment
Share on other sites

  • Replies 315
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பொட்டர் தன்னால் முடிந்ததைச் செய்தார். ஆனால் தலைவரின் இறுதி முடிவுகளை மட்டுமே செயற்படுத்தினார். முடிவு எடுக்கப்படாத  வேளையில் முடிவுக்காக காத்திருந்தார். ஆனால் கருணா அம்மான் அப்படி இல்லை என்றுதானே கண்முன் நடந்த வரலாறு சொல்லுகின்றது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரிந்து போக மட்டும் கருணா தலைவருக்கு எதிராகவோ ,அமைப்புக்கு எதிராகவோ பாதகமாய் ஏதாவது செய்தவரா?...தலைவருக்கு கருணவைப் பற்றி பொட்டிலும் பார்க்க நன்றாய் தெரியும்.....எனக்கு பொட்டுவில் எந்த வித காழ்ப்புணர்வும் இல்லை...இன்று வரை மதிப்பிற்கு உரிய தலைவராய் இருக்கிறார் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, Kadancha said:

புலிகளின் உளவுப் பிரிவு, புலிகளின் இராணுவ கட்டமைப்பை விட கூடிய காலத்துக்கு முன்பு ஓர் சிறப்பு தேர்ச்சி அடிப்படையிலான (specialised professional)   முறையில் இயங்காத தொடங்கி விட்டது.

டெலோ இல் ஒப்பீட்டளவில் மூத்த உறுப்பினராகவும் அதே நேரத்தில் டெலோ இன்டெலிஜென்ஸ் இல் தொடங்குவதற்கு முயறசித்தவர்களில் ஒருவருடன் உரையாட சந்தர்ப்பம் கிடைத்தது.

அவரின் கூறுப் படி, மற்ற எல்லா இயக்கங்ளிற்கும் உளவு என்பது ஓர் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலையிலே தேவையாக நோக்கப்பட்டது. மற்றும் மற்ற எல்லா இயக்கங்ளிற்கும் உளவு அறிதல் பயிற்சி என்பது ராணுவ பயிற்சியின் ஓர் அங்கமாகவே வழங்கப்பட்டது, அதுவும் இந்தியா அல்லது லெபனான் மற்றும் பலஸ்தீனின் தொடர்புகளூடாகவே வழங்கப்பட்டது. அதுவும் இந்தியாவின் உளவு பயிற்சி கிந்தியாவின் தேவைகளுக்காக வழங்கப்பட்டது என்பதை ஓர் கணிசமான காலத்தின் பின்பே மற்ற இயக்கங்கள் உணர்த்தின என்றும் சொன்னார். 

புலிகளும் அப்படி படர்ச்சி பெற்றுக்கொண்டார்கள். ஆனால், இறுதியில் மற்ற இயங்கங்கள் அறிந்தது, புலிகள் அதை விட வேறு ஓர் மிகவும் திறமை வாய்ந்த உளவு பிரிவிடம் பயிட்சி பெற்றார்கள் என்று தாம் வெகு காலம் பின்பு அறிந்ததாகவும், அதை புலிகள் கனகச்சிதமாக மறைத்துவிட்டதாகவும்.  

அந்த டெலோ மூத்த உறுப்பினர் அதை இஸ்ரேல் என்றும், அது mossad என்றும்  கூறினார். அனாலும் புலிகளின் உலவுப் பிரிவின் செயற்பாடுகள், அது மொசாட் மட்டுமல்ல, ஷின் பெட் (இஸ்ரேல் இன் உள்ளக புலனாய்வு துறை) மற்றும் அமான் (இஸ்ரேல் இன்  ராணுவ புலனாய்வு) இடமும் புலிகள் பயிட்சி பெற்றானோரோ என்று தாம்  சந்தேகிப்பதாக சொன்னார்.        

அவர் மேலும், புலிகள் சிக்னல் இன்டெலிஜென்ஸ் இல் பயிட்சி பெற்றவர்கள் (அந்த நேரத்தில்  மிகவும் அருமையும், மிகவும் செலவு கூடியதும்) தனிப்பட்ட காரணங்களிற்காக விலகியதாகவும், அவர்களை புலிகள் அரசியல் பிரிவில் உறக்க நிலையில் நீண்ட கால வைத்திருந்து, உளவு அமைப்பு  மாற்றிய பின்பே விடுவிக்கப்பட்டதாகவும்.          

எனவே, இதை புலிகல் சரியானா தொழில் முறை (PROFESSIONaL )ஆலோசனை பெற்றே செய்திருக்கின்றனர் என்பது தெளிவு.

இதை நான் இங்கு சொல்வத்திடற்கு காரணம், புலிகளின் புலனாய்வு அமைப்பு professional  ஆகவே செயற்றப்பட்டது.

அதாவது துல்லியமான தகவல்களை நேரத்திற்குள் தலைமையிடம்  கொண்டு செல்லுதல். தலைமை எடுக்கும் முடிவை செயற்ப்படுத்துவது. 

 

 

 

இவ்வளவு பெரிய புலனாய்வு அமைப்பை வைச்சுருந்தவையால், மு.வாய்க்காலில்  இப்படி முடங்கப் போறது தெரியாமல் போயிட்டுது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

இவ்வளவு பெரிய புலனாய்வு அமைப்பை வைச்சுருந்தவையால், மு.வாய்க்காலில்  இப்படி முடங்கப் போறது தெரியாமல் போயிட்டுது 

 

4 hours ago, ரதி said:

ன்னத்தை மோந்து பிடித்தார் பொட்டர்?... நான் பொட்டராய் இருந்திருந்தால் கருணாவின் மேல் சந்தேகம் வந்தவுடனேயே மண்டையில் போட்டு இருப்பன் அல்லது வன்னியில் கூப்பிட்டு என்ட பக்கத்தில் வைச்சிருப்பன்...மாத்தையாவின் அனுபவத்த்திற்கு பிறகும், கருணாவை உளவு பார்த்தும்,கருணா பிரிந்து போகும் மட்டும் பொட்டர் என்ன செய்தார்?

உங்கள் பதிலே உங்கள் கேள்விக்கான விடையும் ஆகும். புலனாய்வு அமைப்பு முடிவு எடுப்பதில்லை.

புலிகள் முழு அமைப்பும் வினைத்திறன் கூடியது வளம் குறைந்ததது (optimum force). இதை நான் சொல்லவில்லை. சிவராமின் (அவரும் கிழக்கு பூர்வீகம்), மற்றும் ராணுவ-அரசியல் ஆய்வாளர்களின் முடிவும் கருத்தும்.   

கருணாவின் சிறிலங்கா புலனாய்வு தொடர்பு தலைமைக்கு நேரத்திற்குள் தெரியப்படுத்தி இருந்தது.

மற்றது, புலிகளுக்கு தங்கள் அழிக்கப்படுவதத்திற்கு முயட்சி எடுக்கப்படும் என்று வெட்ட வெளிச்சமான அறிக்கையே விட்டிருந்தனர்.

உங்களின் வாதம் கருணா,  பொட்டு  போட்டி மற்றும் மோதலே.  

கருணா சிறிலங்கா புலனாய்வுடன் சேர்ந்து இயங்கும் முடிவை தானே எடுத்திருந்தார், இந்த மோதல் காரணமல்ல.

ஒன்றை நீங்கள் சிந்தித்து பாருங்கள். மோதலாக வெடித்து அதனை சொற்ப்ப  நாட்களுக்குள் கருணா எவ்வாறு அத்தகைய நம்பிக்கையான உறவை அதுவும் தனது வாழ்நாள் எதிரியுடன் ஏற்ப்படுத்திக்கொள்ள முடியும்?   

அதன் மறு வளமாக, கருணாவுடன் சேர்ந்து இருந்தவர்கள்ளுக்கு கருணாவின் சிறி இலங்கை புலனாய்வு தொடர்பை நம்ப முடியவியலை, கருணா தானாகவே அப்படி காட்டிக்கொள்ளாதவரை. அவர்கள் நினைத்தது, தனி பிரதேசமாக இயங்குவதத்திற்கே கருணாவின் முயற்சி என்று.  

இதற்கு காரணம், சிறிலங்கா புலனாய்வு எல்லாவற்றையும் தனமனித புலனாய்வு ஊடாகவே (Humint) செய்தது. இது சிறிலங்கா புலனாய்வின் MI5, MI6 இன் தொடர்பும், பயிற்சியும்.     

முன்பு சொன்னது போலவே மேலும் இரு முக்கிய உறுப்பினர்கள் அல்லது தளபதிகள் அப்படி  சிறிலங்கா புலனாய்வுடன் சேர்ந்து இயங்கும் முடிவை தானே எடுத்திருந்தார்.

மற்றது, கருணா  கேட்டதன்  நிர்வாகம், நிதி எல்லாவற்றையும் கருணாவிற்கு ஏறத்தாழ அவருக்கு கிடைத்து விட்டது.

கருணாவின் புலனாய்வு அமைப்பை பிரிப்பது என்ற வலியுறுத்தல், சிறிலங்கா புலனாய்வின் தூண்டுதலில் கருணா எடுத்த முடிவு, இதை ஆயுத மோதலாக மாற்றியது.    

இது எல்லாவற்றையும் நீங்கள் மறுத்தாலும், ரணிலின் கூற்றை உங்களால் மறுக்க முடியுமா?

எதிரியிடம் உளவு அறிய அனுப்பப்பட்டவர் ஒருவரை, எதிரி அப்படி அறிந்தும், சொற்ப்ப  நாட்களுக்குள் எதிரிக்கு  அப்படி அனுப்பப்பட்டவரின் பிரிவு நம்பப்படக்கூடியதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, ரதி said:

என்னத்தை மோந்து பிடித்தார் பொட்டர்?... நான் பொட்டராய் இருந்திருந்தால் கருணாவின் மேல் சந்தேகம் வந்தவுடனேயே மண்டையில் போட்டு இருப்பன் அல்லது வன்னியில் கூப்பிட்டு என்ட பக்கத்தில் வைச்சிருப்பன்...மாத்தையாவின் அனுபவத்த்திற்கு பிறகும், கருணாவை உளவு பார்த்தும்,கருணா பிரிந்து போகும் மட்டும் பொட்டர் என்ன செய்தார்?

நான் திரும்பவும் சொல்றேன் கருணா துரோகி இல்லை...துரோகி ஆக்கப்பட்டார்...அதற்கு தெரிந்தோ/தெரியாமலோ பொட்டர் துணை போய்ட்டார்...இதில் இருவருக்கும்  போராட்டத்தை விட  தனிப்படட  பகை தான் பெரிசாய்ப் போட்டுது

அதுதான் பொட்டராக நீங்க இருக்கயில்ல ....கும்மான் என்ன சொன்னாலும் திறமான அடிகாரன் ...ஜெயந்தன் படையணியை ஓர்மம் மிக்க படையணியாக வளர்த்து வைத்திருந்தவர் , சேதம் அதிகமாக இருந்தாலும் ஒரு பக்கம் சவட்டிக்கொண்டு போய்விடுவினம். இதுவெல்லாம் இயக்கத்திலிருந்த எல்லோருக்கும் தெரியும் ...சும்மா தெரிந்தவுடன் போட கும்மான் குப்பனோ சுப்பனோ இல்லை, பொட்டர் கும்மானின் ஜித்து ஜில்லாடிகளை தொடர்ந்து கண்டறிந்து தலைவருக்கு போட்டுகொடுத்துகொண்டு தான் இருந்தார் ...தலைவர் தான் விட்டு பிடித்தவர்...நீங்க மேலே சொன்னவற்றை செய்திருக்கவேண்டியது பொட்டரல்ல....... தலைவர்   
என்ன ஒருகட்டத்தில் தலைவராலேயே விட்டதை பிடிக்க முடியாமல் போய்விட்டது   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பல விடயங்களில் கருணா அம்மானுக்கு விட்டுக்கொடுத்தது ஒரு பலவீனமே. ஆனால் பிரதேசவாதத்தை கையில் எடுக்கும் ஆபத்து இருந்ததால் இலகுவாக தீர்க்கக்கூடிய விடயமாகவும் இருக்கவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருணாவின் தலையில் பிஸ்டலை வைத்த தளபதி: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 17

May 27, 2018
black-tigers1.jpg

பீஷ்மர்

பொட்டம்மான் கிழக்கு தளபதியாக தற்காலிகமாக பணியாற்றிய சமயத்தில், மட்டக்களப்பு மாவட்ட தளபதியாக கருணா செயற்பட்டார், திருகோணமலை தளபதியாக சஞ்சய் செயற்பட்டார் என்பதை நேற்று குறிப்பிட்டிருந்தோம்.

பொட்டம்மான் கிழக்கு தளபதியாக செயற்பட்ட காலத்தில், மட்டக்களப்பில் ஏற்கனவே செயற்பட்டு கொண்டிருந்த போராளி கண்ணனுடன் நெருக்கமாகி விட்டார். கிழக்கின் ஒரு முக்கிய போராளியாக கண்ணனும் இருந்தார். கண்ணனின் போர்க்கள திறமை பொட்டம்மானிற்கு பிடித்து விட்டது.

 

ஆனால், மட்டக்களப்பு தளபதியாக கருணாவை நியமிப்பதென பிரபாகரன் பல மாதங்களின் முன்னரே திட்டமிட்டு, அதற்கேற்ப கருணாவை தயார்படுத்தி வந்தார்.

புதியவர்களாக கருணா. சஞ்சையை கவனிக்கவே பொட்டம்மானை மட்டக்களப்பிற்கு அனுப்பினார் பிரபாகரன். யார் தளபதி என பிரபாகரன் எடுத்த முடிவை பொட்டம்மானால் மாற்றம் செய்ய முடியாது. ஆனால் கண்ணனை பொட்டம்மானிற்கு பிடித்திருந்ததால், கருணாவிற்கு தெரியாமலே கண்ணனின் மூலம் சில விசயங்களை பொட்டம்மான் செய்தார்.

கண்ணனின் சகோதரிமுறையானவருடன் அந்த காலத்தில்தான் பொட்டம்மானிற்கு காதல் உண்டானது.

427954_460004174051158_447697400_n-300x1

கண்ணனை தளபதியாக்கலாமா என பிரபாகரனுடன் பொட்டம்மான் பேசினாரா என்பது யாருக்கும் தெரியாது. கருணாவிற்கு போட்டியாக அவரை வளர்க்கும் விதமாக செயற்படவில்லை. ஆனால் அவருக்கு ஓரளவு முக்கியத்துவம் கொடுத்தார். இது கருணாவிற்கு பிடிக்கவில்லை!

கண்ணனை தளபதியாக்க பொட்டம்மான் விரும்புகிறார், முயற்சிக்கிறார் என்றுதான் கருணா நினைத்தார். அதனால் இயல்பாகவே கண்ணன் மேல் அவருக்கு வெறுப்பு ஏற்பட்டது.

 

பொட்டம்மான் யாழ்ப்பாணம் வந்த சிறிதுநாளின் பின்னர், மட்டக்களப்பிலிருந்து ஒரு அறிவித்தல் புலிகளின் தலைமைக்கு சென்றது. “இந்திய இராணுவத்தின் பதுங்கித்தாக்குதலில் கண்ணன் மரணமடைந்து விட்டார்“ என்பதே அந்த தகவல்.

புலிகள் இதில் சந்தேகப்படவில்லை. உண்மையான பதுங்கித்தாக்குதல் என்றுதான் நினைத்தனர். ஆனால் பொட்டம்மான் மட்டும் இதில் ஏதோ சம்திங் இருப்பதாக நினைத்தார்.

இந்திப்படைகள் அப்பொழுது உள்ளூரில் சில முக்கிய சோஸ்களை ஏற்படுத்தி வைத்திருந்தனர். புலிகளின் நடவடிக்கைகள், அறிவித்தல்களை மொனிட்டர் பண்ணி, அதை இந்தியப்படைக்கு சொல்வதெ அவர்களின் வேலை.

400662_553119771407566_1058275950_n-300x தளபதி புலேந்திரன்

“இந்திப்படையின் பதுங்கித்தாக்குதல் வெற்றியளித்துள்ளது, நேற்றை உங்களின் தாக்குதலில் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவரே மரணமாகியுள்ளார்“ என அவர்களிடம் இருந்து ஒர தகவல் வந்தது. இந்த தகவல் இந்தியப்படைக்கு பெரிய குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது. காரணம் அவர்கள் அப்படியொரு தாக்குதலையே செய்யவில்லையே!

அப்படியானால் யார் தாக்கியது?

அப்பொழுது மட்டக்களப்பில் ரெலோ, புளொட் இரண்டும் இந்தியப்படைகளுடன் நெருக்கமாக இருந்தனர். அவர்கள் தாக்கினார்களா என இந்தியப்படை கேட்க, அவர்களிற்கும் தலைசுற்றியது.

427954_460004174051158_447697400_n-300x1

இந்த இயக்கங்கள் பின்னாளில் புலிகளுடன் தொடர்பில் இருந்தார்கள். அடுத்த சில வருடங்களில் நடந்த சம்பவத்தை அப்படியே பொட்டம்மானிடம் தமது ஆட்கள் மூலம் குறிப்பிட்டிருந்தனர்.  கண்ணனின் மரணத்தில் ஏற்கனவே பொட்டம்மானிற்கு சந்தேகம் இருந்தது. கண்ணனின் தலையின் பின்பக்கமே துப்பாக்கி ரவை துளைத்திருந்தது. பதுக்கித்தாக்குதலில் பின்பக்கத்தால் ரவை துளைக்க வாய்ப்பு குறைவே!

 

அதன்பின்னரே பொட்டம்மான் இந்த விசயத்தில் தீவிர அக்கறை காண்பித்தார். மட்டக்களப்பின் ஏனைய சில முக்கியஸ்தர்களை அழைத்து பேசியபோது, அவருக்கு கிடைத்ததெல்லாம் அதிர்ச்சி தகவல்கள்!

ஒரு தாக்குதல் ஏற்பாடு செய்து, கண்ணன் எதிர்பாராத நேரத்தில் பின்னாலிருந்து அவர் சுட்டுக்கொல்லப்பட்டார் என கருணாவிற்கு நெருக்கமானவர்கள் சொன்னார்கள். பொட்டம்மானின் சந்தேகம் சரிதான். கண்ணன் இந்தியப்படைகளுடனான மோதலில் இறக்கவில்லை, துரோகத்தால் அவர் வீழ்த்தப்பட்டிருந்தார்!

28166326_1837802776272586_37502879364324

இந்த தகவலை அறிந்ததும், பிரபாகரனிடமும் அவர் கூறினார். ஆனால், அப்பொழுது புலிகளிற்குள் கருணா ஒரு நம்பிக்கையான ஆளாக உருவாகி விட்டார். கிழக்கில் புலிகளின் கட்டுமானங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார். இதனால் பிரபாகரன் இதில் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. இப்பொழுது-காலம் தாழ்த்தி- இதை பேச வேண்டியதில்லையென அவர் நினைத்தார். தவிரவும்- பிரபாகரனிற்கு நெருக்கமானவரும், அவர் அறிந்தவரும் கருணாவே தவிர, கண்ணன் அல்ல!

 

நேற்றைய பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம்- திருகோணமலை தளபதியாக நியமிக்கப்பட்ட சஞ்செய் பற்றி. அவர் பற்றி சம்பந்தமில்லாவிட்டாலும் கொஞ்சம் அதிகமாக விபரம் தந்திருந்தோம். காரணம்- இப்பொழுது அவரைப்பற்றிய ஒரு தகவல் தருவதற்காக!

கருணா, சஞ்செய் ஆகிய இருவரையும் கண்காணிப்பவராக பொட்டம்மான் கிழக்கில் சிறிதுகாலம் செயற்பட்டுவிட்டு, அவர்கள் தனியாக செயற்படுவார்கள் என்ற நிலைமை உருவான பின்னர் அவர் யாழ்ப்பாணம் வந்துவிட்டார். அப்பொழுது-1988 இல் ஒரு சம்பவம் நடந்தது.

இரண்டு மாவட்டங்களிற்கும் எல்லையோரமாக உள்ள இந்திய படைமுகாமொன்றை தாக்குதவற்கு சஞ்சய் திட்டமிட்டார். அதற்கான வேவு தரவுகளை திரட்ட ஆரம்பித்தார்.

இந்த சமயத்தில், கருணாவும் இந்தியப்படை முகாமொன்றை தாக்க திட்டமிட்டார்.  அது எந்த முகாம் தெரியுமா?

திருகோணமலை மாவட்ட தளபதி சஞ்சய் வேவு பார்த்த அதே முகாம்தான்!

இந்த விளையாட்டில் முந்திக்கொண்டது கருணா. திடீரென ஒருநாள் முகாம் மீது தாக்குதல் நடத்தி ஆயுதங்களையும் கைப்பற்றிவிட்டார். அது அவ்வளவாக பலப்படுத்தப்பட்டிருக்காத முகாம். இந்த தாக்குதல் வெற்றிகரமாக அமையுமென திருகோணமலை மாவட்டக்காரர்களும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கருணா முந்தி விட்டார்.

Image result for பà¯à®à¯à®à®®à¯à®®à®¾à®©à¯

தாங்கள் வேவு பார்த்த முகாமை கருணா தாக்கியது சஞ்சயை கடும் கோபமடைய வைத்தது. உடனடியாக கருணாவை தொடர்புகொண்டு, நேரில் சந்திக்க வேண்டுமென்றால். அடுத்த சிலநாட்களில் மட்டக்களப்பு எல்லைக்கிராமமொன்றில் இரண்டு தளபதிகளும் சந்தித்து கொண்டனர்.

நாங்கள் வேவு பார்த்த முகாம் மீது எப்படி தாக்குவீர்கள் என சஞ்சய் எகிறி விழுந்தார். கரணாவும் ஏதோ பேச- சஞ்சய், கருணா சந்திப்பு கடும் வாய்த்தர்க்கமாகியது. வாய்த்தர்க்கத்தின் உச்சத்தில் சஞ்சய் தனது இடுப்பிலிருந்த பிஸ்டலை உருவியெடுத்து, கருணாவின் தலையில் வைத்தார்.

 

கருணா ஆடாமல் அசையாமல் இருந்தார். பின்னர் தனது இடுப்பில் கட்டியிருந்த பிஸ்டலை கழற்றினார்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/6245/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎6‎/‎27‎/‎2018 at 7:16 PM, அக்னியஷ்த்ரா said:

அதுதான் பொட்டராக நீங்க இருக்கயில்ல ....கும்மான் என்ன சொன்னாலும் திறமான அடிகாரன் ...ஜெயந்தன் படையணியை ஓர்மம் மிக்க படையணியாக வளர்த்து வைத்திருந்தவர் , சேதம் அதிகமாக இருந்தாலும் ஒரு பக்கம் சவட்டிக்கொண்டு போய்விடுவினம். இதுவெல்லாம் இயக்கத்திலிருந்த எல்லோருக்கும் தெரியும் ...சும்மா தெரிந்தவுடன் போட கும்மான் குப்பனோ சுப்பனோ இல்லை, பொட்டர் கும்மானின் ஜித்து ஜில்லாடிகளை தொடர்ந்து கண்டறிந்து தலைவருக்கு போட்டுகொடுத்துகொண்டு தான் இருந்தார் ...தலைவர் தான் விட்டு பிடித்தவர்...நீங்க மேலே சொன்னவற்றை செய்திருக்கவேண்டியது பொட்டரல்ல....... தலைவர்   
என்ன ஒருகட்டத்தில் தலைவராலேயே விட்டதை பிடிக்க முடியாமல் போய்விட்டது   

 

சரியாய் சொன்னிங்கள் அக்னி,,இதைத் தான் எதிர் பார்த்தேன்...கருணா என்பவர் அந்த நேரம் தனி மனிதன் இல்லை...அவருக்கு பின்னால் 6000 போராளிகள் இருந்தார்கள்...அதை விட அவரால் தான் இயக்கத்திற்கு பல பேரை நுழைக்க முடிந்தது/....இது தலைவருக்கு தெரியும்.

கருணாவை பிரிப்பதற்கு பலர் முயற்சி செய்தார்கள்.ஆனால் அவர் வளைந்து (ஒருத்தருக்கும்)  கொடுக்கவில்லை ...அவரை கண பேர் வந்து சந்தித்தார்கள்...அதை வைத்து பலனாய்வுத் துறை அவரை தப்பாய் எடை போட்டுள்ளார்கள்...  கடையாய் நடந்த பேச்சு வார்த்தையின் பின்னர் தான் திரு  பாலசிங்கமும் ,கருணாவும் இனி மேல் போரிடுவதில் பயனில்லை என்று சுயேட்சி முறையிலான{ஞாபகம் இல்லை } ஏற்போம் என்று பேசி விட்டு சு.பாணா இங்கே ஒத்து ஊதி விட்டு அங்கே போய்  இறங்க முன்னர் போட்டுக் கொடுத்தது தான் பிரச்சினையின் ஆரம்பம்.

அன்றிலிருந்து பாலசிங்கத்தை விலத்தி வைத்தார்கள்.கருணாவை துரோகியாக்கினார்கள்...அதன் பின்னர் அவரை வன்னிக்கு கூப்பிட அவர் போகவில்லை?... அவர் என்ன அவ்வளவு முடடாளா?...அதன் பிறகும்,அவர் கிழக்கு மாகாணப் போராளிகளை இயக்கத்தை விட்டே அனுப்பினார்.பலவந்தமாய் சண்டையை தொடங்கி கருணாவை பழி வாங்க வெளிக்கிட்டு சொந்தப் போராளிகளையே கொண்டது யார்?

எல்லாரும் பிழை விட்டுப் போட்டு பழியை மட்டும் ஓராளில் தூக்கிப் போடுவது கேவலமாய் இல்லை 

Link to comment
Share on other sites

6 minutes ago, ரதி said:

எல்லாரும் பிழை விட்டுப் போட்டு பழியை மட்டும் ஓராளில் தூக்கிப் போடுவது கேவலமாய் இல்லை 

நானும்தான் பிழைவிட்டேன். நாட்டைவிட்டே ஓடிட்டன் + நீங்களும்தான். நடந்த பிழைகளை விட்டுவிட்டு இன்று நடுத்தெருவில் உங்களால் + எம்மால் விடப்பட்ட மக்களைப் பற்றி கொஞ்சமாவது சிந்திப்பமா. இன்னமும் புலி வரும் தமிழ் ஈழம் கிடைக்கும் என்ற கனவில் இருந்து கொஞ்சமாவது வெளியில வாங்கோ. நடுத்தெருவில் விடப்பட்டவர்களுக்கு அறுபதினாயிரம் வீடுகளும் அம்போ, இப்ப நாற்பதினாயிரம் வீடுகளுக்கும் ஆப்பு இறுக்கியாச்சு. 

நானும் நினைத்தேன் போராட்டம் மக்களுக்காக என்று - ஆனால் அது இல்லை என்று நன்றாகவே புரிந்தது + புரிகிறது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரியாக நடந்திருந்தால் தனிநாடு எப்போதோ கிடைத்திருக்கும். ஆனால் போராளிகளாக இருந்தவர்களும் எமது சமூகத்தில் இருந்து வந்தவர்களே. குத்துவெட்டுக்கள், குழிபறிப்புக்கள் நிறைந்த சமூகத்தினை பிரதிபலிக்கத்தானே செய்வார்கள்.

எல்லோரும் தலைவர் பிரபாகரனின் குணநலன்களுடன் இருந்திருக்கமுடியாது. இயக்க விதிகள் இறுக்கமாக இருந்தும் அதனை மீற, வளைக்க சிலர் முனைந்திருப்பார்கள். அதிலும் சில தளபதிகள் “காற்று போய்” இருக்க விரும்பியிருக்கமாட்டார்கள்தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து வருடங்களிற்கு முன்னரே கருணாவை கணக்குபோட்டு வைத்த பிரபாகரன்!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன? 18

May 30, 2018
theepan-696x464.jpg

பீஷ்மர்

இந்தியப்படையினர் மீதான தாக்குதல் ஒன்றினால் விடுதலைப்புலிகளின் மட்டக்களப்பு தளபதி கருணா, திருகோணமலை தளபதி சஞ்சய் இடையே வாய்த்தர்க்களம் ஏற்பட்டதையும், இதன் உச்சத்தில் சஞ்சய் தனது பிஸ்டலை எடுத்து கருணாவின் தலையில் வைத்ததையும் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தேன்.

இப்படியொரு சம்பவம் நடந்ததா என்பதை கணிசமான விடுதலைப்புலி போராளிகளே அறிந்திருக்கவில்லை. 80களின் இறுதியில் புலிகளின் உள்வட்டத்தில் இருந்த கொஞ்சப்பேர்தான் இதை அறிந்து வைத்திருந்தனர். பின்னர் ஒரு கதையாக புலிகளிற்குள் இந்த சம்பவம் ஓரளவு பரவியது. கடந்த வார கட்டுரையை படித்துவிட்டு பல வாசகர்கள் எம்மை தொடர்பு கொண்டிருந்தனர். இதில் பலரும் ஆச்சரியமாக பேசினார்கள்.

இனி கடந்த வார தொடர்ச்சிக்கு வருவோம். சஞ்சய் கோபத்தில் பிஸ்டலை எடுத்து கருணாவின் தலையில் வைத்தாலும், அது சுடுவதற்காக வைக்கப்பட்டதல்ல. கோபத்தில் நிதானமிழந்து அப்படி செய்துவிட்டார். போராளிகளின் கையில் துப்பாக்கி கொடுக்கும்போது புலிகள் கற்பிக்கும் பாலபாடம்- எந்த சந்தர்ப்பத்திலும் சக போராளிகளின் பக்கமே துப்பாக்கியை திருப்பக்கூடாது என்பதையே.

சஞ்சய் ஒரு கணத்தில் தனது தவறை உணர்ந்து தடுமாற, கருணா ஒரு காரியம் செய்தார். தனது இடுப்பில் இருந்த பிஸ்டல் கோள்சரை கழற்றி, முன்னால் வைத்துவிட்டு சொன்னார்- “என்னைச்சுடு. பிரச்சனையில்லை. ஆனால் என்னுடைய பிஸ்ரலை அண்ணையிடம் கொடுத்துவிடு“ என.

அந்த சமயத்தில் புலிகள் ஆயுதத்தை உயிரைவிட பெறுமதியானதாக பாவித்தார்கள். ஒவ்வொரு துப்பாக்கியையும் பெற்றுக்கொள்ள பல உயிர்களை கொடுத்துள்ளோம், உயிரைவிட துப்பாக்கியை பாதுகாப்பதிலேயே கவனமாக இருக்க வேண்டுமென்பதே அமைப்பு நடைமுறை.

 

இதையடுத்து சஞ்சய் திரும்பிச்சென்றுவிட்டார். இந்த சம்பவம் நடந்தபோது பிரபாகரன் மணலாற்றில் இருந்தார். இந்தியப்படைகளுடனான மோதல் ஆரம்பித்ததும், யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறி மணலாற்று காட்டுக்குள் முகாம் அமைத்து தங்கியிருந்தார். மட்டக்களப்பில் இருந்து கருணா செற் மூலம் விடயத்தை பிரபாகரனிற்கு அறிவித்தார். உடனடியாக சஞ்சயுடனும் பேசி என்ன நடந்ததென்ற விபரத்தை அறிந்தார்.

Related imageதுப்பாக்கியை எடுத்து இன்னொரு போராளியின் தலையில் சுடுவதற்கு வைத்தது பாரதூரமான தவறு. அதிலும், ஒரு தளபதியே அப்படி செயற்பட்டது இன்னும் தவறு. உடனடியாக சஞ்சயை மணலாற்றுக்கு வரும்படி கட்டளையிட்டார் பிரபாகரன்.

மணலாற்று காட்டுக்குள் அப்பொழுதுதான் முகாம்கள் அமைக்கப்பட்டு கொண்டிருந்தன. ஒரு காலத்தில் மணலாற்று காட்டுக்குள் சுற்றுலா செல்ல உங்களிற்கு வாய்ப்பு கிடைத்தால் சென்று பாருங்கள், இந்தியப்படைகளின் காலத்திலேயே அடர்ந்த காட்டுக்குள் புலிகள் எப்படியான முகாம்களை அமைத்திருந்தார்கள் என்பதை. செஞ்சோலை, ஜீவன், கமல் என மரணமான போராளிகளின் பெயர்களில் ஒரு வலைப்பின்னலைபோல முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. சீமெந்து கட்டிடங்கள், அண்டகிரவுண்ட் என அசத்தியிருக்கிறார்கள்.

 

சஞ்சயை மணலாற்றிற்கு அழைத்த பிரபாகரன், அவரது பிஸ்டலை வாங்கிவிட்டு, காட்டில் தடி வெட்டி அந்த முகாம் அமைக்கும் வேலையில் ஈடுபட உத்தரவிட்டார். அதுதான் சஞ்சய்க்கு தண்டனை. புதிய போராளிகளுடன் சேர்ந்து தளபதியாக இருந்த சஞ்சயும் முகாம் அமைக்கும் வேலையில் ஈடுபட்டார்.

இந்த சஞ்சய் யாரென்றால், இறுதியுத்த சமயத்தில் முள்ளியவளை கோட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த உமைநேசன்.

1987இல் அவரிடமிருந்து பிஸ்டலை வாங்கி, பொறுப்புக்களை பறித்த பின்னர் அவருக்கு குறிப்பிடும்படியான எந்த பொறுப்பும் பிரபாகரனால் வழங்கப்படவில்லை. பிஸ்டலும் வழங்கப்படவில்லை. அமைப்பின் விதிகளிற்கு முரணணாக நடந்தால், அவரை எந்தக்காலத்திலும் பிரபாகரன் திரும்பிக்கூட பார்ப்பதில்லை.

கருணா பிளவு விடயத்தில் பிரபாகரன் ஏன் இறுக்கமான நடவடிக்கை எடுத்தார் என்பதை இப்பொழுது புரிந்து கொள்கிறீர்களா?

புலிகளின் பிளவிற்கு இரண்டு காரணங்கள் இருப்பதாக கடந்த வார கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்தேன். அதில் ஒன்றுதான் பொட்டம்மான்- கருணா மோதல்.

கருணா 1997இல் வன்னிக்கு வந்தபோது பொட்டம்மான்தான் இரண்டாம் நிலை தலைவர் என்ற எழுதப்படாத கட்டமைப்பொன்று இருந்தது. கருணாவிற்கு பிரபாகரன் அதீத முக்கியத்துவம் கொடுக்க, இரண்டாம் நிலை தலைவராக கருணா  தன்னை உணரத்தொடங்கினார்.

மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறையில் புலிகள் அமைப்பில் இணைபவர்கள் கணிசமானவர்கள் பிரபாகரனையே கண்டதில்லை. திருகோணமலை ஓரளவு பரவாயில்லை. அந்த போராளிகள் மணலாற்றின் ஊடாக அடிக்கடி வன்னிக்கு வருவார்கள். ஆனால் மட்டக்களப்பு, அம்பாறை போராளிகள் பெரும்பாலானவர்கள் 1996 இல் வன்னிக்கு வந்தபோதுதான் பிரபாகரனை நேரில் கண்டார்கள். அவர்களிற்கு பிரபாகரன்தான் தலைவர். அவருக்காக உயிரையும் விட தயாராக இருந்தார்கள். ஆனால் கருணாவும் அவர்களை கவர்ந்த தலைவர். ஏனெனில் பல வருடங்களாக கருணாவைத்தான் பிரபாகரனின் பிரதிநிதியாக கண்டவர்கள்.

கருணாவின் நடவடிக்கை, வார்த்தைகள் அவர்களிடம் அதிக செல்வாக்கை செலுத்தும். வன்னியில் கருணாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க, ஏனைய தளபதிகளை விட தன்னை உயர்ந்தவராக அவர் உணரத்தொடங்கினார். போதாதற்கு இரண்டாம் நிலையில் இருந்த பொட்டம்மானுடனும் முறுகல். வன்னியில் இயங்கிய படைக்கட்டுமானம், சிவில் நிர்வாகத்துடன் தனது அணிகளை ஒத்துழைத்து செயற்பட கருணா இடமளிக்கவில்லை.

 

கருணாவின் எண்ணவோட்டம் அடுத்த நிலை தளபதிகளிற்கு கடத்தப்பட்டு, ஒவ்வொரு படிமுறையாக கீழிறங்கி, அடி மட்ட போராளி வரை அந்த உணர்வு வளரத்தொடங்கியது. ஜெயந்தன் படையணியின் கோசம் “எங்கும் செல்வோம். எதிலும் வெல்வோம்“. வன்னியை காத்தது தாங்கள்தான் என அவர்கள் உணரத் தொடங்கினார்கள். ஜெயந்தன் படையணிக்குள் இந்த உணர்வு வளர்க்கப்பட்டது. இரண்டாம் நிலை தளபதிகளே நேரடியாக இதை செய்தார்கள்.

புலிகளின் தாக்குதல்களை நுணுக்கமாக அவதானிப்பவர்கள், பிரபாகரன் இந்த விடயத்தில் எச்சரிக்கையடைந்ததை கண்டுபிடித்திருக்கலாம். புரியாதவர்களிற்காக அதை சொல்கிறேன்.

Image result for தளபதி தà¯à®ªà®©à¯

கருணா தலைமையில் கிழக்கு போராளிகள் வன்னிக்கு வந்தது 1997 இல். வன்னி தெற்கில் வவுனியா முனையிலிருந்து ஜெயசிக்குறு நடவடிக்கை ஆரம்பித்தபோது, அதன் முறியடிப்பு தளபதியாக கருணாவே செயற்பட்டார். 1997 முழுவதும் புலிகள் அந்த முனையிலேயே போரிட்டார்கள். அத்தனை சமருக்கும் கருணாதான் தளபதி. தீபன் துணைத்தளபதி.

ஆனால் 1998 இன் பின்னர் இதில் மாற்றம் நடந்தது. 97 ஜனவரியில் ஆனையிறவு தாக்குதலிற்கு பால்ராஜ் தளபதி. அது தோல்வி. பால்ராஜையும் கருணாவின் கீழ் செயற்பட பிரபாகரன் உத்தரவிட்டார். ஆனையிறவு வடபோர்முனையென்பதால் கருணாவிடம் அந்த பொறுப்பு வழங்கப்படாமல் விடப்பட்டது.

ஆனால் ஜெயசிக்குறுவுடன் தொடர்புடைய கிளிநொச்சி நகர இராணுவ முகாம் மீதான தாக்குதல் 1998 பெப்ரவரி, செப்ரெம்பரில் நடந்தது. இரண்டிற்கும் தீபன்தான் தளபதி. அதாவது, கருணாவின் கீழ் செயற்பட்ட தீபன். கருணாதான் போர்க்கள நாயகன் என்றால், எதற்காக அவரிடம் இந்த பொறுப்புக்கள் வழங்கப்படாமல், அவரின் கீழ் துணைத்தளபதியாக இருந்த தீபனிடம் வழங்கப்பட்டது?

 

http://www.pagetamil.com/6490/

Link to comment
Share on other sites

On 6/27/2018 at 7:40 PM, ரதி said:

என்னத்தை மோந்து பிடித்தார் பொட்டர்?... நான் பொட்டராய் இருந்திருந்தால் கருணாவின் மேல் சந்தேகம் வந்தவுடனேயே மண்டையில் போட்டு இருப்பன் அல்லது வன்னியில் கூப்பிட்டு என்ட பக்கத்தில் வைச்சிருப்பன்...மாத்தையாவின் அனுபவத்த்திற்கு பிறகும், கருணாவை உளவு பார்த்தும்,கருணா பிரிந்து போகும் மட்டும் பொட்டர் என்ன செய்தார்?

நான் திரும்பவும் சொல்றேன் கருணா துரோகி இல்லை...துரோகி ஆக்கப்பட்டார்...அதற்கு தெரிந்தோ/தெரியாமலோ பொட்டர் துணை போய்ட்டார்...இதில் இருவருக்கும்  போராட்டத்தை விட  தனிப்படட  பகை தான் பெரிசாய்ப் போட்டுது

உண்மையில் பொட்டர் மூலம் இயக்கம் அழிந்தது அதுதான் உண்மை பொட்டர் யாருடன் தான் முருகவில்லை  உதாரணத்துக்கு பொட்டர் பெரிதாக கொள்ளுபட்ட தளபதி மார்களின் பின்புலம் ஆராய்ந்தால் உண்மை விளங்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, spyder12uk said:

உண்மையில் பொட்டர் மூலம் இயக்கம் அழிந்தது அதுதான் உண்மை பொட்டர் யாருடன் தான் முருகவில்லை  உதாரணத்துக்கு பொட்டர் பெரிதாக கொள்ளுபட்ட தளபதி மார்களின் பின்புலம் ஆராய்ந்தால் உண்மை விளங்கும் .

பொட்டர் நாலாம் ஈழ யுத்தம் ஆரம்பிக்கவேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்றவரா?

தளபதிகள் இயக்கத்தின் கட்டுப்பாடுகளை மீறக்கூடாது என்பதில் இறுக்கமாக இருந்தால் பலருடன் கொல்லுப்படவேண்டும்தான். ஆனால் பொட்டர் எல்லாவற்றையும் இயக்கத்துக்காகத்தானே செய்தார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 6/29/2018 at 11:14 PM, ரதி said:

கருணாவை பிரிப்பதற்கு பலர் முயற்சி செய்தார்கள்.ஆனால் அவர் வளைந்து (ஒருத்தருக்கும்)  கொடுக்கவில்லை ...அவரை கண பேர் வந்து சந்தித்தார்கள்...அதை வைத்து பலனாய்வுத் துறை அவரை தப்பாய் எடை போட்டுள்ளார்கள்...  கடையாய் நடந்த பேச்சு வார்த்தையின் பின்னர் தான் திரு  பாலசிங்கமும் ,கருணாவும் இனி மேல் போரிடுவதில் பயனில்லை என்று சுயேட்சி முறையிலான{ஞாபகம் இல்லை } ஏற்போம் என்று பேசி விட்டு சு.பாணா இங்கே ஒத்து ஊதி விட்டு அங்கே போய்  இறங்க முன்னர் போட்டுக் கொடுத்தது தான் பிரச்சினையின் ஆரம்பம்.

அன்றிலிருந்து பாலசிங்கத்தை விலத்தி வைத்தார்கள்.கருணாவை துரோகியாக்கினார்கள்...அதன் பின்னர் அவரை வன்னிக்கு கூப்பிட அவர் போகவில்லை?... அவர் என்ன அவ்வளவு முடடாளா?...அதன் பிறகும்,அவர் கிழக்கு மாகாணப் போராளிகளை இயக்கத்தை விட்டே அனுப்பினார்.பலவந்தமாய் சண்டையை தொடங்கி கருணாவை பழி வாங்க வெளிக்கிட்டு சொந்தப் போராளிகளையே கொண்டது யார்?

அக்கோய் ...கொஞ்சம் pagetamil இற்கு போய் பீஷ்மர் எழுதுவதை சுடச்சுட வாசியுங்கோ ...கும்மான் நாத்தம் தாங்கமுடியவில்லை 
நீங்க இங்க அவருக்கு அரச்சனை போட அங்கே கிழிந்து தொங்குகிறார் கும்மான் ...
தலைவரிடம் இருந்தும் விடுதலை புலிகள் அமைப்பிடமிருந்தும் பிரிந்த கும்மான் வெருகலில்  நிண்டு கொண்டு சண்டை வலிந்ததை வசதியாக மறந்துவிடீர்கள் போல , கிழக்கு மாகாண போராளிகளை இயக்கத்தை விட்டு அனுப்பமுன் வெருகலிலும்  வாகரையிலும் நின்று சிங்கள ராணுவத்திற்கு முட்டு கொடுத்து உலகத்தை விட்டே அனுப்பினார் (அத்தனை பேரும்  வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்கள், இந்தக்காலகட்டத்தில் கிழக்கில் மூன்று பிள்ளைகள் ஒருகுடும்பத்தில் இருந்தால் ஒருபிள்ளையை கொடுக்கவேண்டும் இல்லாவிட்டால் பணமாக 10 லட்சங்கள் கொடுக்க வேண்டும்) இதுவெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை , இயக்கத்தோடு பிரச்சினை என்றால் உங்களுக்கு இராணுவத்தோடு என்ன வேலை ...?. சிங்களவன் கொடுத்த சுதியில் சும்மா வாய்ச்சவடால் பேசி வடக்கிலிருந்து வந்த புலிகளின்  சிறப்பு படைப்பிரிவுடன் மோதி அப்பாவி பெடிகளை காவுகொடுத்து மிச்சப்பேர் துவக்கை தூக்கியெறிந்து விட்டு ஓட வைத்தது தான் மிச்சம் ...இன்னும் பெட்டி பெட்டியாக உள்ளது கும்மானின் வண்டவாளங்கள் போகப்போக தருகிறேன்   
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உட் கொலைகள் - எம் இயக்கங்கள் அனைத்தையும் உள்ளிருந்து கொண்ட ஆலகால விடம்.

கண்ணன் கொலையை பிரபா பெரிது படுத்தவில்லை. இந்த ஒரு நிகழ்வு காணும். நாம் அழிந்தற்க்கான காரணத்தை அறிய.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, அக்னியஷ்த்ரா said:

அக்கோய் ...கொஞ்சம் pagetamil இற்கு போய் பீஷ்மர் எழுதுவதை சுடச்சுட வாசியுங்கோ ...கும்மான் நாத்தம் தாங்கமுடியவில்லை 
நீங்க இங்க அவருக்கு அரச்சனை போட அங்கே கிழிந்து தொங்குகிறார் கும்மான் ...
தலைவரிடம் இருந்தும் விடுதலை புலிகள் அமைப்பிடமிருந்தும் பிரிந்த கும்மான் வெருகலில்  நிண்டு கொண்டு சண்டை வலிந்ததை வசதியாக மறந்துவிடீர்கள் போல , கிழக்கு மாகாண போராளிகளை இயக்கத்தை விட்டு அனுப்பமுன் வெருகலிலும்  வாகரையிலும் நின்று சிங்கள ராணுவத்திற்கு முட்டு கொடுத்து உலகத்தை விட்டே அனுப்பினார் (அத்தனை பேரும்  வலுக்கட்டாயமாக இயக்கத்தில் சேர்க்கப்பட்டவர்கள், இந்தக்காலகட்டத்தில் கிழக்கில் மூன்று பிள்ளைகள் ஒருகுடும்பத்தில் இருந்தால் ஒருபிள்ளையை கொடுக்கவேண்டும் இல்லாவிட்டால் பணமாக 10 லட்சங்கள் கொடுக்க வேண்டும்) இதுவெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை , இயக்கத்தோடு பிரச்சினை என்றால் உங்களுக்கு இராணுவத்தோடு என்ன வேலை ...?. சிங்களவன் கொடுத்த சுதியில் சும்மா வாய்ச்சவடால் பேசி வடக்கிலிருந்து வந்த புலிகளின்  சிறப்பு படைப்பிரிவுடன் மோதி அப்பாவி பெடிகளை காவுகொடுத்து மிச்சப்பேர் துவக்கை தூக்கியெறிந்து விட்டு ஓட வைத்தது தான் மிச்சம் ...இன்னும் பெட்டி பெட்டியாக உள்ளது கும்மானின் வண்டவாளங்கள் போகப்போக தருகிறேன்   
 

 

 

அப்படியா! அக்கினி ,கருணா அவ்வளவு கெடடவரா?...தெரியாமல் போய்ச்சே ....பீஷ்மார்  தொடர்ந்து எழுதுவதை நம்போனும் ...இடையில் துரோகி  ஆக்கக் கூடாது சரியா?...அவர் எழுதுவதை பார்த்தால் தலைவரை முடடாள் ஆக்கிய மாதிரி இல்லை?......நான் மட்டுவில் இருந்தானான் வடக்கு புலிகளுக்கும் ,மட்டு புலிகளுக்கும்  இருந்த வேறுபாடடை  கண்டனான் ...மற்றாக்களுக்கு கழுவி ஊத்திற மாதிரி எனக்கு ஊத்த வேண்டாம் 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ரதி said:

 

அப்படியா! அக்கினி ,கருணா அவ்வளவு கெடடவரா?...தெரியாமல் போய்ச்சே ....பீஷ்மார்  தொடர்ந்து எழுதுவதை நம்போனும் ...இடையில் துரோகி  ஆக்கக் கூடாது சரியா?...அவர் எழுதுவதை பார்த்தால் தலைவரை முடடாள் ஆக்கிய மாதிரி இல்லை?......நான் மட்டுவில் இருந்தானான் வடக்கு புலிகளுக்கும் ,மட்டு புலிகளுக்கும்  இருந்த வேறுபாடடை  கண்டனான் ...மற்றாக்களுக்கு கழுவி ஊத்திற மாதிரி எனக்கு ஊத்த வேண்டாம் 

 

 

 

 அப்படியா அக்கோய் .... நீங்கள் மட்டுவில் இருந்தநீங்களோ ...நான் பிறந்து வளர்ந்து வாழ்வதே இங்கேதான் .உங்களை போலத்தான் மட்டுவில் எல்லோரும் கருணா பிரிந்து பிரதேசவாதத்தை கையிலெடுக்க புழுகி புளங்காகிதமடைந்து அடுத்த தேர்தலில் வாக்குகளையும் அள்ளிப்போட்டினம். பிறகு தான் தெரிந்தது dog ஐ குளிப்பாட்டி நடுவீட்டில்  வைத்தாலும்  எங்கே போகும் என்று... கும்மானின் வால்களின் கட்டப்பஞ்சாயத்தையும் நாட்டாமைத்தனத்தையும் கேட்டு கேட்டு வாங்கி அனுபவித்ததும் மட்டுதான், மட்டுவிலிருந்த வலம்புரி என்ற தமிழ் கடைக்கு என்ன நடந்தது என்று கொஞ்சம் சொல்வீர்களோ உங்கடை கும்மானிடம் கேட்டு...? , யாழ் தமிழர்களின் கடைகளை எல்லாம் குடிகிளப்பி அங்கே முஸ்லிம்களை உட்கார வைத்தது தான் உங்கள் கும்மானின் சாதனை என்று மட்டுவில் இருந்த உங்களுக்கு தெரியாதோ ....? முதலிலிருந்தே சொல்கிறோம்  அடிச்சு விடுவதையெல்லாம் தமிழ் வின் பார்த்து எழுதும் புலம்பெயர்களுடன் வைத்துக்கொள்ளுங்கள் ..ஊரிலிருந்து எழுதுபவர்களுக்கு ஊரைப்பற்றி பாடம் எடுக்கும் போது கவனம் தேவை ...பப்பு அவ்வளவாக வேகாது கண்டியளோ ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலியை கட்டியணைத்தபடி குண்டை வெடிக்கவைத்த புலிகளின் மூத்த தளபதி!

June 3, 2018
4md5.jpg

கருணாவின் பெண் தளபதிக்கு இருந்த வித்தியாசமான சிக்கல்

பீஷ்மர்

1999 ஓயாத அலைகள் 03 சமரில் தளபதி பால்ராஜின் கட்டளையை மட்டக்களப்பு ஜெயந்தன் படையணி இளநிலை தளபதியொருவர் ஏற்க மறுத்தார் என்பதை கடந்தவாரம் குறிப்பிட்டிருந்தோம். அதைப்பற்றிய விபரங்களை இந்த வாரம் குறிப்பிடுவதாக கூறியிருந்தோம்.

ஆ.க.வெ சமரில்ஆனையிறவு இராணுவ முகாமை வீழ்த்துவதற்கு புலிகள் பலமுறை- பலகாலமாக முயன்றும் முடியாமலிருந்தது. எந்த பலத்திலும் ஒரு பலவீனம் உள்ளது. ஆனையிறவின் தரைத்தோற்றம்தான் இராணுவத்திற்கு பலமாக இருந்தது. நீண்ட வெட்டைவெளியை கடந்து புலிகளால் முன்னேறி சென்று, இராணுவத்தின் முன்னரணை உடைக்க முடியாமல் இருந்தது.இந்த தரையமைப்பில் இருந்த ஒரு பலவீனத்தையே தமக்கு சாதகமாக புலிகள் பயன்படுத்தினார்கள்.

அது குடிநீர்!

ஆனையிறவு, இயக்கச்சி பகுதி இராணுவ முகாம்களில் நல்ல குடிநீர் கிடையாது. அதிலும் ஆனையிறவில் உப்பளம், வாடிவீட்டு முகாம்களில் மருந்துக்கும் குடிநீர் கிடையாது. குமாரபுரத்தில் இருந்து பவுசர்களில்தான் குடிநீர் கொண்டு செல்லப்படும். (இப்பொழுது பளை பிரதேசசபை இராணுவத்தின் வசமுள்ள குடிநீர் கிணறுகளை விடுவிக்க வேண்டுமென ஒரு கோரிக்கை வைத்துள்ளதே, அந்த குடிநீர் கிணறுகளில் இருந்துதான் ஆனையிறவிற்கான குடிநீர் வழங்கப்பட்டது. இப்பொழுதும் அந்த குடிநீர் கிணற்றில் இருந்துதான் யாழ் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான இராணுவ முகாம்களிற்கு- பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் உள்ள முகாம்கள் உட்பட- குடிநீர் வழங்கப்படுகிறது)  உப்பளம், வாடிவீட்டு பகுதிகள்தான் இராணுவத்தின் பலமான முன்தளம்.

அந்த பகுதியால் பயணம் செய்பவர்களிற்கு, அந்த தரைத்தோற்றத்தை புரிந்து கொள்ள முடியும். அதற்கப்பால் பரந்தன் வரை வெட்டவெளி. இதற்குள்ளால் வரும் புலிகளின் படையணிகளை குருவி சுடுவதை போல இராணுவம் சுட்டு வீழ்த்தும்.

 

1991இல் புலிகள் ஆகாய கடல் வெளி இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ஆனையிறவின் மீது முதலாவது தாக்குதலை நடத்தினார்கள். அப்பொழுது வெட்டைவெளியை கடப்பதற்கு, புலிகள் பலவிதமாக உத்திகளை பாவித்தார்கள்.

மண்ணெண்ணெய் பரலிற்குள் மணலை நிரப்பி, அந்த பரலை உருட்டியபடி பரலிற்கு பின்னால் தவழ்ந்தபடி முன்னேறியது, ட்ரக்ரர், டோசர்களில் கவசம் அமைத்து அதன் பின்னால் நகர்ந்தது என பலவிதங்களில் முயன்று பார்த்தனர். இப்பொழுது ஆனையிறவில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கவசவாகனத்தை பார்த்தால் புரியும்- புலிகள் எப்படி கவசங்களை அமைத்தார்கள் என.

Image result for தளபதி பாலà¯à®°à®¾à®à¯ பால்ராஜ்

குடாரப்பில் தரையிறங்கிய பால்ராஜ் தலைமையிலான 1200 பேர் கொண்ட படையணி, இத்தாவிலில் BOX அடித்தது. இந்த BOXஇற்குள் நிலைகொண்ட போராளிகளை மூன்று டிவிசன் படையினர் சுற்றிவளைத்து தாக்கினர். இப்படியான நெருக்கடியில் இருந்த பால்ராஜிற்கு, BOXற்கு வெளியில் நின்ற ஜெயந்தன் படையணியின் ஒரு அணியும் வழங்கப்பட்டது.

தாளையடியில் நிலைகொண்டிருந்த ஜெயந்தன் படையணியை எப்படியாவது உபயோகித்து, BOXற்குள் நிற்பவர்களின் அழுத்தத்தை குறைப்பதே திட்டம்.

 

ஆனால் பால்ராஜின் கட்டளையை தாளையடியில் நின்ற ஜெயந்தன் படையணியின் இளநிலை தளபதி ஏற்கவில்லை. ‘எங்களுக்கு அம்மான் மட்டும்தான் கொமாண்ட் பண்ணலாம். வேற யார் கொமாண்ட் பண்ணியும் நாங்கள் செய்யமாட்டம்’. இதுதான் அவரது பதிலாக இருந்தது.

யார் அந்த இளநிலை தளபதி தெரியுமா?

அக்கினோ.

கருணாவின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக இருந்தவர். தாளையடி அணிக்கு உமாரமணன் பொறுப்பாக இருந்தார். அவரின் கீழ் செயற்பட்டவர் அக்கினோ. அப்பொழுது அவர் மீது புலிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சரி, ஜெயந்தன் படையணி யாழ்ப்பாண சண்டையில் முக்கிய பங்கு வகிக்காமல், உதவி அணியாக செயற்படட்டும் என பிரபாகரன் முடிவெடுத்தார்.

ஓயாத அலைகள் 03 சண்டை உக்கிரமாக நடந்து கொண்டிருந்ததால், இந்த விவகாரத்தை அப்போதைக்கு பெரிதுபடுத்தாமல், சண்டை முடியட்டும் என்பதே புலிகளின் எண்ணம். ஆனால், அக்கினோவை பொறுப்பிலிருந்து நீக்கி வைக்குமாறு மட்டும் கருணாவிற்கு ஒரு அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்கள்.

அக்கினோ விசயத்தில் புலிகள் உடனடியாக கடுமையாக நடந்து கொள்ளாததற்கு இன்னொரு காரணமும் உள்ளது.

கிழக்கு மகளிர் படையணியான அன்பரசி படையணியின் தளபதியாக இருந்த நிலாவினி/ சாளியை நீங்கள் அறிந்திருக்கக்கூடும். கருணா பிரிவின்போது அவருடன் சென்றவர். கொழும்பிற்கு கருணா அணி தப்பிச்சென்றபோது தனது முக்கியஸ்தர்கள் பலரை அழைத்து சென்றார். ஆனால் கொழும்பிற்கு சென்ற சிலநாளிலேயே, மிக நெருக்கமானவர்களை மட்டும்தான் தன்னுடன் வைத்திருக்கலாமென்ற நிலை அவருக்கு ஏற்பட்டது. கருணாவுடன் இருந்தவர்களை பரா மிலிட்டரியாக தம்முடன் இயங்கவைக்கலாமென்ற எண்ணம் இராணுவத்திற்கு இருந்தாலும், பெண்களை வைத்து எதுவும் செய்ய முடியாதென்பது அவர்களிற்கு தெரியும்.

இதனால் கருணாவுடன் தப்பிச்சென்ற மகளிர் படையணி முக்கியஸ்தர்களை மத்திய கிழக்கு நாடுகளிற்கு பணிப்பெண்களாக செல்லுமாறு கேட்கப்பட்டது. ஆனால் அவர்களிற்கு அதில் துளியும் உடன்பாடில்லை. தளபதிகளாக செயற்பட்டவர்கள், திடீர் திருப்பங்களால் கொழும்பில் நின்று என்ன செய்வதென தெரியாமல் விழித்துக்கொண்டிருந்தவர்கள்… பணிப்பெண்களாக செல்லுமாறு கூறியதை அவர்கள் விரும்பவில்லை. இந்த சமயத்தில் அவர்களின் உறவினர்களை கைது செய்து, அவர்கள் மூலம் தொடர்புகொண்டு கொழும்பில் நின்ற முன்னாள் மகளிர் படையணி தளபதிகளை தமது கட்டுப்பாட்டு பகுதிக்கு வருமாறு புலிகள் அழுத்தம் கொடுத்தனர்.

 

கருணாவுடனும் நிற்க முடியாது, உறவுகளும் புலிகளின் பிடியில் என்ற நெருக்கடியான நிலைமையில் மகளிர் படையணி தளபதிகள் புலிகளிடம் சரணடைந்தனர். இப்படி திரும்பி வந்த நிலாவினி, இராசாத்தி போன்றவர்கள் பகிரங்கமாக ஊடகங்களின் முன் பேட்டியெல்லாம் கொடுத்தனர். பின்னர், புலிகளின் புலனாய்வுப்பிரினால் விசாரணை செய்யப்பட்டு, சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்த நிலாவினி விடயத்தில் 1997 இல் நடந்த ஒரு சம்பவத்தை மனதில் வைத்துதான், அக்கினோ விடயத்தில் புலிகள் உடனடியாக அவ்வளவாக இறுக்கிப்பிடிக்கவில்லை.

புலிகளிடம் சரணடைந்த கருணாவின் மகளிரணி முக்கியஸ்தர்கள் புலிகளிடம் சரணடைந்த கருணாவின் மகளிரணி முக்கியஸ்தர்கள்

இப்பொழுது நாம் சொல்லப்போகும் விசயம் சில சமயங்களில் சிலருக்கு சங்கடத்தை ஏற்படுத்தவும்கூடும். ஆனால் உண்மைகளை யாராலும் மறைக்க முடியாது. சரியும், தவறுமாக பலதும் இணைந்ததுதானே வரலாறு.

ஜெயசிக்குறு களத்திற்கு கிழக்கு படையணிகள் வந்த புதிதில் ஜெயந்தன் படையணியை ரமேசும், அன்பரசி படையணியை நிலாவினியும் வழிநடத்தினார்கள். நிலாவினி குறித்து அரசல்புரசலாக பலரும் ஒரு தகவலை அறிந்திருப்பார்கள். நிலாவினி சில தனிமனித பலவீனமுடையவர். அவருக்கு ஜெயந்தன் படையணியின் சில முக்கியஸ்தர்களுடன் உடல்ரீதியான தொடர்பு இருந்தது. ஜெயசிக்குறு களமுனையில் இப்போதும் உயிரோடு உள்ள கருணா அணியின் மிகப்பிரபலமான ஒருவருடன், நிலாவினிக்கு இருந்த தொடர்பு களமுனையில் பகிரங்கமாக அடிபட்டது.

மற்றைய படையணிகளின் தளபதிகள் மூலம் விசயம் புலிகளின் உயர்மட்டத்திற்கு போனது. அப்படியே, பிரபாகரனின் காதிற்கும் சென்றது. விடுதலைப்புலிகள் அமைப்பின் கண்டிப்பான விதிகளில் ஒன்று- போராளிகளிற்குள் பாலியல் தொடர்புகள் இருக்ககூடாதென்பது. பாலியல் தொடர்பு வைத்திருந்ததற்காகவே மரணதண்டனை விதிக்கப்பட்ட பல சம்பவங்கள் உள்ளன.

புலிகளின் மோட்டார் படையணி புலிகளின் மோட்டார் படையணி

புலிகளிற்குள் தனிமனித ஒழுக்கம் எப்படியிருந்ததென்பதற்கு உதாரணமாக இரண்டு சம்பவங்களை குறிப்பிடுகிறோம்.

புலிகளின் குட்டிசிறி மோட்டார் படையணி உருவாக்கப்பட்டபோது அதில் முக்கிய பங்காற்றிய தளபதி சோ. அவரது பெயர் அவ்வளவாக வெளியில் தெரியாது. ஆனால், புலிகளின் மோட்டார் படையணி வளர்ச்சியடைந்ததற்கு அவர்தான் மிக முக்கிய காரணம். புலிகளில் இருந்தவர்களிலும், ஓரளவு அனுபவமுள்ளவர்கள்தான் அவரை அறிந்திருப்பார்கள்.

 

தளபதி சோ முதலில் புலிகளின் ராங்கி பிரிவிற்கு பொறுப்பாக இருந்தார். துல்லியமாக ராங்கியால் சுடுவதில் மிகமிக தேர்ந்தவர். அவரது துல்லிய சூட்டிற்கு ஒரு உதாரணம், புலிகள் முல்லைத்தீவு கடலில் ஐரிஸ்மோனா கப்பலை பணயமாக வைத்து இரண்டு டோறா படகுகளை தாக்கியழித்த சம்பவம்.

டாங்கி, மோட்டார் படையணிகளின் ஆணி வேர் சோ தான். பிரபாகரனிற்கும் அவரில் அலாதியான பிரியமும், நம்பிக்கையும் இருந்தது. அவர் தற்கொலை செய்துகொண்டார்.

அதுவும்- தனது காதலியான மோட்டார் படையணியின் இன்னொரு முக்கியஸ்தரான பெண் போராளியுடன் சேர்ந்து.

சோவும், காதலியும் ஏன் தற்கொலை செய்தார்கள்?

அதை அடுத்த பாகத்தில், வரும் புதன்கிழமை குறிப்பிடுகிறோம்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/6983/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/2/2018 at 4:44 PM, ரதி said:

 

அப்படியா! அக்கினி ,கருணா அவ்வளவு கெடடவரா?...தெரியாமல் போய்ச்சே ....பீஷ்மார்  தொடர்ந்து எழுதுவதை நம்போனும் ...இடையில் துரோகி  ஆக்கக் கூடாது சரியா?...அவர் எழுதுவதை பார்த்தால் தலைவரை முடடாள் ஆக்கிய மாதிரி இல்லை?......நான் மட்டுவில் இருந்தானான் வடக்கு புலிகளுக்கும் ,மட்டு புலிகளுக்கும்  இருந்த வேறுபாடடை  கண்டனான் ...மற்றாக்களுக்கு கழுவி ஊத்திற மாதிரி எனக்கு ஊத்த வேண்டாம் 

 

 

 

சியாமாசெற்றி குண்டுவீச்சு விமானமாகக் கண்டவர்கள் மிக் போர்விமானம் குண்டுபோடுவதைப் பற்றி வெளுத்துவாங்குவதைப் போல நீங்கள் சொல்லுகின்றீர்கள்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படைக்கு புலிகள் வைத்த பொறி… துல்லியமாக தாக்கிய புலிகளின் ராங்கிகள்; மாட்டியது ஈ.பி.டி.பி!- இறுதியுத்தத்தில் நடந்தது என்ன 20

June 6, 2018
1075131_587548481296791_864440329_n-696x

விடுதலைப்புலிகளின் ராங்கி, மோட்டார் படையணியின் ஆணி வேராக இருந்தவர் சோ. அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தார் என கடந்த பாகத்தில் குறிப்பிட்டிருந்தோம். மோட்டார் படையணியில் இருந்த பெண் போராளியொருவரை சோ காதலித்து வந்தார். காதலியும், சோவும் குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்து கொண்டனர்.

சோ எவ்வளவு முக்கியமானவர் என்பதை சில சம்பவங்களின் மூலமும் குறிப்பிட்டிருந்தோம். சோவின் தாக்குதல்களில் முக்கியமானது ஈ.பி.டி.பியின் வழங்கல் கப்பல் மீது நடத்தப்பட்ட தாக்குதல். அதை இந்த பாகத்தில் குறிப்பிடுவதாக சொல்லியிருந்தோம்.

 

Image result for srilanka fighting boat dora

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு பொருட்களை கொண்டு செல்லும் பணியில் ஐரிஸ்மோனா என்ற கப்பல் ஈடுபட்டிருந்தது. அப்போது குடாநாட்டிற்கான விநியோகப்பணிகள் எல்லாம் கப்பல் மூலமே நடத்தப்பட்டது. ஒருமுறை ஈ.பி.டி.பி அமைப்பிற்கு உணவும், துணிகளும் எடுத்துக்கொண்டு கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு சென்றது. முல்லைத்தீவு கடற்பரப்பில் வைத்து கடற்புலிகள் கப்பலை மடக்கி, நாகர்கோவில் கடற்கரைக்கு கொண்டு வந்தார்கள். புலிகள் இந்த நடவடிக்கையை செய்தது இரண்டு நோக்கங்களிற்காக.

 

முதலாவது- உணவு, உடுதுணிகள் எடுக்கலாம். இது அவ்வளவு பெரிய நோக்கம் கிடையாது. உப நோக்கம். அதில் எடுத்த துணி, பற்றிக் வகையை ஒத்தது. நன்றாக மினுங்கும். 1996 தொடக்கத்தில் போராளிகளிற்கு இந்த துணி சேர்ட்டே வழங்கினார்கள். நன்றாக மினுங்க மினுங்க, ஒரேவிதமான சேர்ட்டுடன் அப்பொழுது போராளிகள் திரிந்தது சிலருக்கு நினைவிருக்கலாம். இந்த சேர்ட் புலிகளிற்கு இழப்பையும் ஏற்படுத்திய சம்பவமொன்றும் உள்ளது. அதை அடுத்த பாகத்தில் கொசுறு தகவலாக குறிப்பிடுகிறோம்.

ஐரிஸ்மோனாவை புலிகள் கடத்தியதற்கு இரண்டாவது காரணம்- ஒரு பொறி வைப்பதற்கு. கப்பல் கடத்தப்பட்டதற்கு பிரதான காரணம் இதுதான். ஐரிஸ்மோனாவை கடற்கரையில் கட்டிவைத்தால், அதை மீட்க கடற்படை முயலும். முதலில் மீட்க முயன்று, முடியாமல் போனால்தான், அதை தாக்கி அழிக்க முயற்சிப்பார்கள்.

இப்படி மீட்க முயற்சிக்க வைப்பது புலிகள் கடற்படைக்கு வைத்த பொறி!

இப்படியொரு பொறியை அதற்கு முன்னர் புலிகள் வைத்ததில்லை. இதுதான் முதல் முயற்சி. ஆனால், நிச்சயம் இரை மாட்டும் என புலிகள் எதிர்பார்த்தார்கள்.

அதுதான் நடந்தது!

ஐரிஸ்மோனா கப்பல் கடத்தப்பட்ட விசயம் கடற்படை தளபதியால், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிற்கு அறிவிக்கப்பட்டது. ‘என்னசெய்தாவது ஐரிஸ்மோனாவை உடனடியாக மீட்டெடுங்கள், அது முடியாவிட்டால் தாக்கி அழியுங்கள். இதை செய்யாமல் எனக்கு தகவல் தந்துகொண்டிருக்கிறீர்களா?’ என கடற்படைக்கு சந்திரிகா செம டோஸ் கொடுத்தார். உடனே திருகோணமலையிலிருந்து ஒரு டோறா அதிவேக பீரங்கிப்படகு புறப்பட்டது. ஐரிஸ்மோனாவை மீட்க ஒரு டோறாவே போதுமென கடற்படை கணக்குப்போட்டது.

டோறா படகுதான் அப்பொழுது கடற்படையிடமிருந்த கரையொர தாக்குதல் படகு.

 

அதுதான் கரைக்கு வருமென்பதை புலிகளும் எதிர்பார்த்திருந்தனர். புலிகளிடம் அப்பொழுது ஒரேயொரு ராங்கிதான் இருந்தது. 1993 இல் பூநகரியில் கைப்பற்றியிருந்தனர். வடமராட்சி கிழக்கில், நாகர்கோவிலிற்கும் குடாரப்பிற்கும் இடைப்பட்ட இடத்தில், கடற்கரையில் இருந்த பற்றை மறைவில் ராங்கியை நிறுத்தி, அதை சுற்றி மூன்று திசையிலும் மண் மூட்டைகள் அடுக்கி, அதன் மேல் மணலை குவித்தனர். கடலில் இருந்து பார்த்தால், பற்றை மறைவில் சிறிய மணல்திட்டு இருப்பதை போலத்தான் தெரியும்.

ஐரிஸ்மோனாவை கரையிலிருந்து ஒன்றேகால் கடல்மைலில் (ஒரு கடல்மைல் என்பது 1852 மீற்றர் ஆகும்) நிறுத்தி வைத்திருந்தார்கள் புலிகள். ஐரிஸ்மோனாவை கட்டியிழுத்துக் கொண்டு செல்வதே கடற்படையின் நோக்கம்.

டோறா படகு திருகோணமலையிலிருந்து புறப்பட்டதுமே நாகர்கோவிலில் இருந்த புலிகளின் ராடர் திரையில் காண்பித்தது. வெறும் குருவிப்படகுகள் இரண்டை புலிகள் ஐரிஸ்மோனாவை சுற்றிச்சுற்றி வருமாறு அனுப்பிவைத்தனர்.

நாகர்கோவில் கடற்பரப்பிற்குள் நுழைந்த டோரா, அங்கு நின்றவாறு நிலைமையை அவதானித்தது. டோராவில் இருந்த கடற்படையினர்- ஐரிஸ்மோனா தப்பிச்செல்லாமல் புலிகளின் இரண்டு படகுகள் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கிறது என நினைத்தார்கள்.

இரண்டு படகுகளையும் மூழ்கடித்துவிட்டு, ஐரிஸ்மோனாவை இழுத்து செல்வோம் என முடிவெடுத்தார்கள்.

32698202_873272979511120_662345040927077 யுத்தத்தின் இறுதியில் சிதைவடைந்த நிலையில் புலிகளின் கவச வாகனம்

டோறா படகு தம்மை நோக்கி வருவதை கவனித்த கடற்புலி படகுகள் இரண்டும் சும்மா சத்தவெடி வைத்தார்கள். அதாவது டோராவை தாக்குகிறார்களாம்!

டோரா படகிலிருந்து பதில் தாக்குதல் நடத்த தொடங்கினார்கள். டோரா தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் தப்பியோடுவதை போல, கடற்புலிகளின் இரண்டு படகுகளும் கரையை நோக்கி வேகமாக சென்றன. தமது தாக்குதலை சமாளிக்க முடியாமல் கடற்புலிகள் தப்பிச்செல்கிறார்கள் என டோராவிலிருந்த கடற்படையினர் நினைத்தனர். உற்சாகமாக ஐரிஸ்மோனாவை நோக்கி வந்தனர்.

 

டோரா படகு, ஐரிஸ்மோனாவை நெருங்கும் சமயத்தில் கரையில் மறைவான இடத்தில் நின்ற ராங்கியிலிருந்து முதலாவது செல் அடிக்கப்பட்டது. டோரா படகு தீப்பற்றி எரிந்தது.

ராங்கி செல் டோராவை தாக்கியது, கப்பல் தீப்பற்றி எரிந்தது எல்லாம் ஒரு சில நிமிடங்களிற்குள் முடிந்து விட்டது. இதனால், அதன் கொமியுனிகேசன் சிஸ்டம் செயலிழந்திருக்க வேண்டும். கடற்படை கொன்ரோல் ரூமிற்கு சரியான தகவல் போய் சேர்ந்திருக்க வாய்ப்பு குறைவாக இருந்திருக்க வேண்டும்.

அந்த டோராவிற்கு என்ன நடந்ததென்பதை தெரியாமல் இன்னொரு அணி வந்தது. இம்முறை எச்சரிக்கையாக நான்கு டோராக்கள் வந்திருந்தன. இரண்டு டோராக்கள் தொலைவில் நிற்க, இரண்டு ஐரிஸ்மோனாவை கட்டியிழுக்க வந்தன. முதலாவது டோரா ஐரிஸ்டோனா கப்பலை தொட்டுவிடும் தூரத்திற்கு வந்துவிட்டது. கரையிலிருந்த ராங்கி அதை குறிவைத்து சுட்டது. அந்த டோராவும் தீப்பற்றி எரிந்தது. மற்றைய டோரா வந்த வேகத்தில் திரும்பி ஓடத் தொடங்கியது. அதையும் குறிவைத்து அடித்தார்கள். தூரத்தில் வேகமாக தப்பிச்சென்று கொண்டிருந்ததால், சிறிய சேதத்துடன் தப்பிச்சென்றுவிட்டது.

ராங்கிக்குள் இருந்து குறிவைத்து சுட்டவர்தான், தளபதி சோ. அன்று இரண்டு டோராவையும் அடித்து மூழ்கடித்தவர் அவர்தான்.

Related image புலிகளின் ராங்கி

1996 இல் முல்லைத்தீவிலும் இதே மாதிரியான ஒரு தாக்குதலை செய்து, டோரா படகொன்றை மூழ்கடித்திருந்தார். இதன்பின்னர்தான் கரையில் புலிகள் வைக்கும் பொறியைப்பற்றி கடற்படையினர் தெரிந்து கொண்டனர்.

புலிகள் மோட்டார் படையணியை ஆரம்பித்தபோது, அதற்கு தளபதி பானு பொறுப்பாக இருந்தார்.  அவருக்கு அடுத்த பொறுப்பாளர் சோ. புலிகளின் ஆட்லறி படையணி வளர்ச்சியடைந்ததற்கு அவரும் முக்கிய காரணம்.

 

ஒருவரது முக்கியத்துவத்தை புரிய வைக்க புலிகளிற்குள் ஒரு வசனம் பாவிக்கப்பட்டது. ‘தடுக்கிவிழுந்து செத்தாலும் லெப்.கேணல்தான்’ என்பதே அந்த வசனம். களத்தில் ஏற்படும் மரணங்களை மட்டும் வீரச்சாவு என்றும், ஏனையவற்றை சாவு என்றும் புலிகள் வகைப்படுத்திய பின்னர், தர நிலை வழங்குவதிலும் சில மாறுதல்களை ஏற்படுத்தினர். மரணத்தின் பின்னரான தரநிலை வழங்குவதில், அவர் களத்தில் மரணிக்கிறாரா, வேறுவிதமாக மரணிக்கிறாரா என்பதும் தாக்கம் செலுத்தியது. சோ தடுக்கி விழுந்து மரணமானாலும் லெப்.கேணல் என்றுதான் பேசிக்கொண்டனர். ஆனால், இறுதியில் அவரது பெயர் புலிகளின் மாவீரர் பட்டியலில் சேர்க்கப்படவேயில்லை. காரணம்- அவரது மரணம் அப்படி.

அவர் தற்கொலை செய்து கொண்டார்!

அதுவும் காதலுக்காக. அவரும், காதலியும் கட்டியணைத்தபடி கைக்குண்டை வெடிக்கவைத்து தற்கொலை செய்துகொண்டனர். அவரது காதலியும் போராளிதான். மோட்டார் படையணியிலேயே பொறுப்பாளராக இருந்தவர். சிறிய கோயிலொன்றுக்குள் இருவரும் குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டனர்.

புலிகள் அவர்களை மாவீரர் பட்டியலில் இணைக்கவில்லையே தவிர, அவர்களின் காதலின் மகோன்னதத்துவத்தை புரிந்து கொண்டனர். இருவரது உடல்களையும் அருகருகேதான் புதைத்தனர்.

சோவிற்கு இப்படியொரு காதல் விடயம் இருந்தது பிரபாகரனிற்கு தெரியாது. சோ தனது காதலை இயக்கத்தில் பதிவுசெய்து வைக்கவில்லை. அவர் கடமையுணர்வுமிக்கவர். நேரம் வரும்போது காதலை இயக்கத்திடம்  சொல்லலாம் என நினைத்திருந்தார். சோவின் மரணச்செய்தியை கேட்ட பிரபாகரன் மிக வருந்தினார். ‘இந்த விடயம் ஆரம்பத்திலேயே தெரிந்திருந்தால், திருமணமே செய்து வைத்திருப்பேன். அவசரப்பட்டுவிட்டார்’ என வருந்தினார்.

சோவின் மரணத்திற்கு காரணமாக அமைந்த சம்பவம் என்ன? மாலதி படையணி தளபதி விதுஷாதான் அந்த மரணத்திற்கு காரணமா? அக்கினோவை புலிகள் ஏன் விட்டுப்பிடித்தனர்? நிலாவினி விசயத்தில் நடந்தது என்ன? இதையெல்லாம் அடுத்த பாகத்தில் குறிப்பிடுகிறோம்.

(தொடரும்)

 

http://www.pagetamil.com/7347/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காதலர்களை ஒன்றாக அடக்கம் செய்ய உத்தரவிட்ட பிரபாகரன்: உத்தரவை மீறிய கருணா!

June 10, 2018
raju5.jpg

இறுதி யுத்தத்தில் நடந்தது என்ன? 21

பீஷ்மர்

விடுதலைப்புலிகளின் முக்கி தளபதி சோவின் தற்கொலை பற்றிய சில தகவல்களை மேலோட்டமாக கடந்த இதழில் குறிப்பிட்டிருந்தோம். பால்ராஜின் கட்டளையை ஏற்காத ஜெயந்தன் படையணி தளபதியொருவரை பற்றி குறிப்பிட்டு, அவரை ஏன் புலிகள் விட்டுப்பிடித்தார்கள் என்பதற்கான காரணங்களை குறிப்பிடும்போது மட்டக்களப்பு மகளிர் படையணி தளபதி நிலாவினி, சோ பற்றிய கிளைச் சம்பவங்கள் விரிந்து வந்துள்ளன. இரண்டு கிளைச்சம்பவத்தையும் குறிப்பிட்டு விட்டு, இந்த அத்தியாயத்திலேயே பிரதான விசயத்துக்குள் நுழைந்து விடுவோம்.

குட்டிசிறி மோட்டார் படையணி தளபதியாக இருந்த சோ விற்கும், அந்த படையணியின் மகளிர் அணியின் பொறுப்பாக இருந்த பெண் தளபதியொருவருக்கும் காதல் இருந்தது. சில வருடங்களாக அந்த காதல் இருந்தது. ஆனால் அவர் அதை இயக்கத்தில் பதிவு செய்யவில்லை. இருவரும் பெரியவர்கள், பொறுப்பான பதவியில் இருந்தவர்கள். அதனால் அது நாகரிகமான காதலாக இருந்தது. திருமணம் செய்யும்படி இயக்கம் சொல்லும்போது இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்ற, இருவருக்கிடையிலான உடன்படிக்கையாக அது இருந்தது. எப்பொழுதாவது இருவரும் சந்தித்து பேசிக்கொள்வார்கள். அவ்வளவுதான். இப்போதே பதிவு செய்தால், ஒரே படையணியை சேர்ந்த பொறுப்பாளர்கள் காதலிக்கிறார்கள் என, படையணிக்குள்ளேயே கதை வரலாமென சோ நினைத்திருக்கலாம்.

Image result for தளபதி விதà¯à®à®¾ போராளிகளுடன் தளபதி விதுசா

விடுதலைப்புலிகள் அமைப்பில் இணையும் ஒவ்வொருவரையும் பற்றிய தனிப்பட்ட விபரங்கள் பதிவு செய்யப்படும். அதில் ஒரு முக்கியமான கேள்வி- நீங்கள் யாரையாவது காதலித்திருக்கிறீர்களா? என்பது. பின்னர் வருடாந்தம் இந்த பதிவு புதுப்பிக்கப்படும். அமைப்பில் இணைந்த பின்னர் காதலில் சிக்கினால் அடுத்த வருட பதிவில் பதிவுசெய்யலாம். சோ இதை செய்யவில்லை.

அவரது காதல் விசயம் எப்படியோ வெளியில் கசிந்து விட்டது. இது அவர்களிற்கு பெரிய அசௌகரியமாக இருந்திருக்க வேண்டும். ஒரே பிரிவில் இருப்பவர்கள், இரகசியமாக காதலித்த விசயம் வெளியில் வந்ததை அவர்கள் ஏன் அவ்வளவு சீரியசான பிரச்சனையாக எடுத்துக் கொண்டார்கள் என்பது தெரியவில்லை.

 

இந்த விசயம் வெளியில் கசிந்ததை தொடர்ந்து, மாலதி படையணி தளபதி விதுசா, சோவின் காதலியை அழைத்து சில அறிவுரைகள் சொன்னதாகவும் அப்போது ஒரு பேச்சிருந்தது. சோவின் காதலி மாலதி படையணி நிர்வாகத்திற்கு கீழ்ப்பட்டவர் அல்ல. ஆனால் பொதுவாக மகளிர் படையணி போராளிகள், தளபதி விதுசாவில் பெரிய மரியாதை வைத்திருந்தனர். அவர் என்ன சொன்னாலும் கேட்பார்கள். இந்த அடிப்படையில் சோவின் காதலியை விதுசா அழைத்து பேசியிருக்கலாம். ஆனால் சோவின் காதலியை விதுசா அழைத்து பேசிய விசயம் போராளிகள் மட்டத்தில் வெறும் பேச்சளவில்தான் இருந்ததே தவிர, உறுதிப்படுத்தப்படவில்லை.

Image result for à®à®¯à®¾à®¤ à®à®²à¯à®à®³à¯ 3 à®à®©à¯à®¯à®¿à®±à®µà¯ வà¯à®±à¯à®±à®¿

காதல் விசயம் வெளியில் வந்தது அவமானம் என நினைத்து அவர்கள் தற்கொலை செய்துகொண்ட படியால் புலிகளும் இந்த சம்பவம் பற்றி அவ்வளவாக விசாரணை செய்யவில்லை.

 

அம்பகாமத்தில் இருந்த சிறிய அம்மன் ஆலயமொன்றிற்கு சென்ற இருவரும் தற்கொலை செய்யும் முடிவை எடுத்துள்ளனர். அந்த சம்பவத்தை நேரில் கண்ட சாட்சி யாருமே இல்லை. ஒரு கைக்குண்டு வெடித்த சத்தம் கேட்டு போராளிகள் அந்த இடத்திற்கு சென்று பார்த்தபோது, இருவரும் கட்டியணைத்தபடி குண்டை வெடிக்க வைத்து தற்கொலை செய்துகொண்டிருந்தனர்.

இந்த சம்பவம் பிரபாகரனின் காதிற்கு சென்றதும் மிகுந்த வருத்தப்பட்டார். காதல் விசயம் வெளியில் கசிந்ததை ஏன் இவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டும்? என்னிடம் சொல்லியிருந்தால் இருவருக்கும் திருமணம் செய்து வைத்திருப்பேனே என்றுதான் கூறினாரே தவிர, சோ மீது கோபப்படவில்லை. வாழ்வில் இணைய முடியாத அந்த காதலர்களின் உடல்களை ஒன்றாக அடக்கம் செய்ய உத்தரவிட்டதும் பிரபாகரன்தான்.  அவர்கள் இருவரும் மாவீரர் பட்டியலில் இணைக்கப்படவில்லை. ஆனால் அருகருகாக, முழுமையான மரியாதையுடன் புலிகள் அவர்களின் உடல்களை அடக்கம் செய்தனர்.

புலிகள் அமைப்பிற்குள் பின்னாளில் ஒரு விதி ஏற்படுத்தியிருந்தார்கள். சொந்த காரணங்களினால் தற்கொலை செய்து கொள்பவர்களை மாவீரர் பட்டியலில் இணைப்பதில்லை. துயிலுமில்லங்களிலும் விதைப்பதில்லை. அவர்களின் உடலை வீட்டிற்கே கொடுத்து விடுவார்கள்.

 

சோவின் சம்பவத்தை ஏன் குறிப்பிட்டோம் என்றால், புலிகளிற்குள் காதல் விசயங்களில் எப்படியான இறுக்கமான நடைமுறை இருந்தது என்பதை குறிப்பிடவே. இப்பொழுது நான் சொல்லப்போகும் விசயம் சிலருக்கு அசௌகரியமாக இருக்கலாம். ஆனால் இதை அந்த களத்தில் நின்ற யாருமே மறுக்க மாட்டார்கள்.

மேலே சொன்ன இதே இறுக்கமான நடைமுறை கிழக்கு படையணிகளில் அவ்வளவாக இருக்கவில்லை. களமுனையில் தொடர்ச்சியாக நிற்கும் போராளிகளிற்கு அதிகமான கட்டுப்பாடு விதிப்பது அவர்களை சோர்வடைய செய்து, களத்தை விட்டு ஓட வைக்குமென அதன் தளபதிகள் நினைத்தார்கள். இதனால் களமுனையில் சில விசயங்களில் கண்டும்காணாமலும் இருந்து விட்டார்கள்.

அன்பரசி படையணி தளபதி நிலாவினியும் இந்த இயல்புடையவர்தான். அவருக்கும் ஜெயந்தன் படையணி முக்கியஸ்தர்கள் சிலருக்குமிடையில் உடல்ரீதியான தொடர்பிருப்பதாக களமுனையில் பேச்சு எழுந்தது. இது புலிகளின் உயர்மட்டம் வரை சென்றது.

இந்த விசயத்தை விசாரணை செய்த புலனாய்வுத்துறையினர், வந்த தகவல் உண்மைதான் என்பதை உறுதி செய்தனர். இது பிரபாகரனிற்கு தெரியவந்ததும், கோபமடைந்தார். ஜெயசிக்குறு களமுனை தளபதியாகவும், கிழக்கு படையணிகளின் தளபதியாகவும் இருந்த கருணாவை அழைத்து, இந்த சம்பவத்தை குறிப்பிட்டு கண்டித்தார். உடனடியாக நிலாவினியை இயக்கத்தை விட்டு நீக்குமாறும் அறிவுறுத்தினார்.

 

ஆனால் கருணா அதை செய்யவில்லை. அன்பரசி படையணி பொறுப்பாளராக வேறு ஒருவரை நியமித்துவிட்டு, நிலாவினிக்கு பொறுப்புக்கள் வழங்காமல் விட்டு வைத்திருந்தார். பிரபாகரன் சொன்னது, நிலாவினியை வீட்டுக்கு அனுப்பும்படி. ஆனால், கருணா அதை செய்யாமல், நிலாவினியின் பொறுப்புக்களை மட்டும் எடுத்து புதியவருக்கு வழங்கினார். இந்த விடயம் பிரபாகரனிற்கும் போனது. அவர் சத்தமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தார்.

கருணா ஏன் நிலாவினியை வீட்டுக்கு அனுப்பவில்லை?

Image result for à®à®¯à®¾à®¤ à®à®²à¯à®à®³à¯ 3 à®à®©à¯à®¯à®¿à®±à®µà¯ வà¯à®±à¯à®±à®¿இது கொஞ்சம் சிக்கலான விசயம். இது தொடர்பில் உத்தியோகபூர்வமான எந்த விசாரணையும் நடக்காததால், ஒரு தலைப்பட்சமான தகவல்கள்தான் உள்ளன. விடுதலைப்புலிகளால் நிலாவினி விசாரணை செய்யப்பட்டபோது, சில தகவல்களை குறிப்பிட்டிருந்தார். எனினும், சூழ்நிலை கருதி அவற்றை இப்போது குறிப்பிடாமல் தவிர்த்து விடுகிறோம். வாசகர்கள் புரிந்துகொளவார்கள் என நம்புகிறோம்.

ஓயாத அலைகள் மூன்றின்போது பால்ராஜின் கட்டளையை ஏற்க மறுத்த அக்கினோவை பற்றிய தகவல் புலிகளின் தலைமைக்கு போனபோது, அவர் மீது உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லையென தீர்மானித்தார்கள். இன்னொருமுறை தலைமையின் கட்டளையை கருணா மீறும் சூழலை ஏற்படுத்தாமல் இருப்போம், கருணா விடயத்தில் விரைவாக ஒரு முடிவெடுக்கலாம் என்பதே புலிகளின் எண்ணம்.

 

கிழக்கு தளபதிகளில்- தனது சிஷ்யர்களாக, நம்பிக்கையானவர்களாக- கருணா கருதும் ஒரு சிலர் கட்டுப்பாடுகளை மீறி நடப்பதும், கருணா அதை கண்டும் காணாமலுமிருப்பதையும் புலிகள் அவதானித்திருந்தனர். அக்கினோ விசயத்திலும், பிரச்சனையை உடைக்கும் வரை செல்லாமல், வளைந்து கொடுத்து செல்வோம், நேரம் வரும்போது கவனிப்போம் என புலிகள் நினைத்தார்கள்.

அக்கினோ விசயத்தை பெரிதுபடுத்தாததைபோல அப்போது புலிகள் நடந்து கொண்டார்கள். ஆனையிறவை வீழ்த்தும் உக்கிர சண்டையும் நடந்து கொண்டிருந்தது. இந்த சூழலில் அக்கினோ என்ற ஒருவரின் சிக்கலை முதன்மைப்படுத்தவில்லை. ஆனால் அக்கினோ விசயம் புலிகளின் “கையாளப்பட வேண்டிய விசயங்கள்“ பட்டியலிற்கு போனது. அத்துடன், ஓயாத அலைகள் மூன்றில் அதன்பின்னர் ஜெயந்தன் படையணியை களமிறக்குவதையும் தவிர்த்துக் கொண்டனர். உப படையணியொன்றை போலவே பயன்படுத்தினார்கள். ஓயாத அலைகள் மூன்று, நான்கில் வடக்கை சேர்ந்த படையணிகள்தான் மிகப்பெரும் பங்கு வகித்தன. கிழக்கு படையணிகள் உப படையணிகளாகவும், ஓய்விலும் இருந்தன.

புலிகள் படையணிகளிற்குள் பேதம் காட்டுவதில்லை. ஆனால் ஜெயந்தன் படையணி விசயத்தில் இப்படியான முடிவெடுத்ததற்கு காரணமிருக்கிறது. அக்கினோ விசயத்தை தளபதி தீபன் உடனடியாக கருணாவிற்கு அறிவித்தார். ஆனால் கருணா அதை பெரிய விசயமாக எடுத்துக்கொள்ளவில்லை. “அவர்கள் அப்படி நடப்பதில் தவறில்லை“ என்பதை போன்ற பதிலொன்றையும் சொல்லியிருக்கிறார். கிழக்கு இளநிலை தளபதிகளின் முறுகலின் பின்னணி என்னவென்பதை புலிகள் சரியாக கணித்ததால், தொடர்ந்து நிலைமைய சிக்கலாக்காமல் விடுவோம் என்றுதான் ஜெயந்தன் படையணியை அவ்வளவாக களமிறக்கவில்லை.

Image result for à®à®¯à®¾à®¤ à®à®²à¯à®à®³à¯ 3 à®à®©à¯à®¯à®¿à®±à®µà¯ வà¯à®±à¯à®±à®¿ ஆனையிறவில் புலிக்கொடியை ஏற்றும் பானு

2000 ஆம் ஆண்டில் புலிகளிற்குள் நடந்த இவ்வளவு பெரிய சிக்கலை இதுவரை பெரும்பாலானவர்கள் அறிந்து கொண்டிருக்க வாய்ப்பில்லை. ஆனால் அப்பொழுது நடந்த சில சம்பவங்களை இப்பொழுது குறிப்பிட்டால், அனைத்தையும் பொருத்திப் பார்த்து நீங்கள் ஒரு முடிவிற்கு வர வாய்ப்பாக அமையும்.

ஓயாத அலைகள் 3 இன் யாழ்ப்பாண முனைக்கான சமரில் கிழக்கு படையணிகளின் பங்கு மிக குறைவு. வடக்கை சேர்ந்தவர்கள்தான் இந்த சமரில் ஈடுபட்டனர். இந்த சமர் தொடங்க முன்னர் தளபதிகள் மட்டத்திலான கலந்துரையாடலில் பிரபாகரன் சொன்ன விசயத்தை கவனிக்க வேண்டும். “யாழ்ப்பாணத்திற்கான சமரை யாழ்ப்பாணத்தவர்களே செய்யட்டும். கிழக்கு போராளிகளை எல்லா முனைகளிலும் களமிறக்குவது சரியல்ல. அவர்களிற்கு தமது பிரதேசங்களை மீட்க வேண்டிய தேவையும் உள்ளது“.

 

ஆனையிறவை புலிகள் கைப்பற்றியதும், 2000 ஏப்ரலில். 22ம் திகதி தளபதி பானு ஆனையிறவில் புலிக்கொடியை ஏற்றினார். இன்றும் புலிகளிற்கு எதிரானவர்கள் சொல்வார்கள், தளபதி கருணா ஆனையிறவில் கடுமையாக போராடியும் புலிக்கொடி ஏற்றும் பொறுப்பு யாழ்ப்பாணத்தை சேர்ந்த பானுவிற்கு வழங்கப்பட்டது என. ஆனால் உண்மையில் விசயம் அதுவல்ல. இவர்கள் சிந்திப்பதை போல “அவர் மட்டக்களப்பு, நான் யாழ்ப்பாணம்“ என சின்னத்தனமாக புலிகள் சிந்தித்ததில்லை.

அப்படியென்றால் உண்மையில் நடந்தது என்ன?

(தொடரும்)

 

http://www.pagetamil.com/7880/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On ‎7‎/‎2‎/‎2018 at 6:16 PM, அக்னியஷ்த்ரா said:

 அப்படியா அக்கோய் .... நீங்கள் மட்டுவில் இருந்தநீங்களோ ...நான் பிறந்து வளர்ந்து வாழ்வதே இங்கேதான் .உங்களை போலத்தான் மட்டுவில் எல்லோரும் கருணா பிரிந்து பிரதேசவாதத்தை கையிலெடுக்க புழுகி புளங்காகிதமடைந்து அடுத்த தேர்தலில் வாக்குகளையும் அள்ளிப்போட்டினம். பிறகு தான் தெரிந்தது dog ஐ குளிப்பாட்டி நடுவீட்டில்  வைத்தாலும்  எங்கே போகும் என்று... கும்மானின் வால்களின் கட்டப்பஞ்சாயத்தையும் நாட்டாமைத்தனத்தையும் கேட்டு கேட்டு வாங்கி அனுபவித்ததும் மட்டுதான், மட்டுவிலிருந்த வலம்புரி என்ற தமிழ் கடைக்கு என்ன நடந்தது என்று கொஞ்சம் சொல்வீர்களோ உங்கடை கும்மானிடம் கேட்டு...? , யாழ் தமிழர்களின் கடைகளை எல்லாம் குடிகிளப்பி அங்கே முஸ்லிம்களை உட்கார வைத்தது தான் உங்கள் கும்மானின் சாதனை என்று மட்டுவில் இருந்த உங்களுக்கு தெரியாதோ ....? முதலிலிருந்தே சொல்கிறோம்  அடிச்சு விடுவதையெல்லாம் தமிழ் வின் பார்த்து எழுதும் புலம்பெயர்களுடன் வைத்துக்கொள்ளுங்கள் ..ஊரிலிருந்து எழுதுபவர்களுக்கு ஊரைப்பற்றி பாடம் எடுக்கும் போது கவனம் தேவை ...பப்பு அவ்வளவாக வேகாது கண்டியளோ ...

அக்கினி, இங்கே நாம் கதைப்பது கருணா பிரிவதற்கு என்ன காரணம் என்பதை பற்றித் தான்...அதற்கு பொடடரின் நேரடி அல்லது மறை முக பங்களிப்பு பற்றித் தான் இப்ப நான் கதைக்கிறேன் ...பிரிந்த பிறகு கருணா என்ன செய்தார் என்பதை பிறகு கதைப்போம்


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ரதி said:

அக்கினி, இங்கே நாம் கதைப்பது கருணா பிரிவதற்கு என்ன காரணம் என்பதை பற்றித் தான்...அதற்கு பொடடரின் நேரடி அல்லது மறை முக பங்களிப்பு பற்றித் தான் இப்ப நான் கதைக்கிறேன் ...பிரிந்த பிறகு கருணா என்ன செய்தார் என்பதை பிறகு கதைப்போம்


 

பிரிவதற்கு என்ன காரணம் என்று அவரே கூறியுள்ளாரே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 7/11/2018 at 5:42 PM, ரதி said:

அக்கினி, இங்கே நாம் கதைப்பது கருணா பிரிவதற்கு என்ன காரணம் என்பதை பற்றித் தான்...அதற்கு பொடடரின் நேரடி அல்லது மறை முக பங்களிப்பு பற்றித் தான் இப்ப நான் கதைக்கிறேன் ...பிரிந்த பிறகு கருணா என்ன செய்தார் என்பதை பிறகு கதைப்போம்

அக்கோய் ...நீங்கதான் மட்டுவில் இருந்ததாகவும் யாழ் புலிகளையும் மட்டு புலிகளையும் நன்றாக தெரிந்திருந்ததாகவும் சொன்னீங்கோ 
இது பிரிவதற்கு முன்னோ பின்னோ என்று நீங்கள் தான் குறிப்பிடவேண்டும், பிரிவதற்கு முன் என்றால் மட்டு புலி ,யாழ் புலி எப்பிடி வேறுபடுத்தி கண்டுபிடித்தீர்கள் என்றும் நீங்கள் தான் சொல்லவேணும் , இது கிடக்க கருணா எதோ விரல் சூப்பும் பாப்பாவும் பொட்டு தான் எதோ கிள்ளி விட்டவாரகவும் விடாதயுங்கோ ..கும்மானின்  கும்பலில் கிடந்த வால்களில் அனைவருடன் எங்களுக்கு பழக்கம் இருந்தது கும்மானின் வண்டவாளம் தண்டவாளம் ஏறியதும் அவர்தூக்கிய அஸ்திரம் தான் பிரதேசவாதம் அதை தூக்கிப்பிடிக்க பாவித்த ஒரு காரணி தான் பொட்டு  வேவு பார்த்தது ,மூக்கை நுழைத்தது போன்ற குழந்தைப்பிள்ளை காரணங்கள் , கும்மானின் குஜால்ஸ் டசின் கணக்கில் இருக்கு ஆறுதலாக ஆற அமர தருகிறேன் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.