Sign in to follow this  
நவீனன்

புலிகளை ஆதரிக்கும் பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரிய கனடாவின் தமிழ் வேட்பாளர்

Recommended Posts

புலிகளை ஆதரிக்கும் பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரிய கனடாவின் தமிழ் வேட்பாளர்

 

Vijay-Thanigasalam-300x200.jpgகனடாவின் ஒன்ராரியோ மாகாணத் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் தாம் இட்டிருந்த பதிவுகளுக்காக மன்னிப்புக் கோரியுள்ளார் என்று கனேடிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஒன்ராரியோ மாகாணசபைக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஒன்ராரியோ கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில், ஸ்காபரோ ரூஜ் ரிவர் தொகுதியில், விஜய் தணிகாசலம் போட்டியிடுகிறார்.

இவர் கடந்த செவ்வாயன்று கீச்சகத்தில் இட்டுள்ள பதிவு ஒன்றில்,“ கடந்த காலத்தில் தமிழ்ப் புலிகளுடன் தொடர்புடைய விடயங்களைப் பகிர்ந்திருந்தேன். நான் மன்னிப்புக் கோருவதுடன், அத்தகைய பார்வையைக் கொண்டிருக்கவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார் என கனேடிய ஊடகமான Global News தெரிவித்துள்ளது.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான, முகநூல் பதிவுகள் குறித்து கொன்சர்வேட்டிவ் கட்சியிடம் Global News எழுப்பிய கேள்வியை அடுத்தே, விஜய் தணிகாசம் இந்த மன்னிப்பைக் கோரியுள்ளார்.

vijay-post.jpg

vijay-post1.jpg2011ஆம் ஆண்டு, விஜய் தணிகாசம், “எமது தேசியத் தலைவருக்கு 57 ஆவது இனிய பிறந்த நாள் ” என்று குறிப்பிட்டு, சீருடையணிந்த பிரபாகரனின் படத்தை வெளியிட்டிருந்தார்.

கரும்புலிகள் தொடர்பான இன்னொரு பதிவையும் அவர் இட்டிருந்தார்.

“கரும்புலிகள் எமது இனத்தின் பாதுகாப்புக் கவசங்கள்” என்று அதில் அவர் குறிப்பிட்டிருந்தார் என்றும் Global News குறிப்பிட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2018/06/07/news/31282

Share this post


Link to post
Share on other sites

அரசியலுக்காக குத்துக்கரணம் அடிக்கதெரிந்த அடிப்படை அறிவே போதும் சகோதரா.

விரைவில் முன்னேறி கனேடிய பிரதமராக வர வாழ்த்துக்கள். அப்போ நீங்கள் தமிழனே இல்லை என்று சொன்னாலும் வியப்பில்லை.

Share this post


Link to post
Share on other sites

இந்த  மன்னிப்புக்கோரல்  தான்  தன்னை  வெல்ல  வைத்தது  என்ற  நினைப்பு வராமல்  இருக்கக்கடவது..

Share this post


Link to post
Share on other sites

அவர் எந்த தவறும் செய்யவில்லை...தனிமனிதனாக இருந்தபோது இனத்தை நேசித்தார், இனத்துக்கு வாழ்வு தந்த கனடாவின் ஒரு பிரதிநிதி ஆனபோது கனேடிய சட்டத்தை மதிக்கிறார்...எதுவும் பண்ணாமலே எவருக்கும் கூஜா தூக்கவும் இல்லை...இனத்தையும் இழிவு படுத்தவில்லை...தன்னால் முடிந்த பங்களிப்பை காலத்தால் செய்த எவருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள்...

என்ன செய்வது தூர நின்றே எச்சி துப்பி பழக்கப்பட்ட சமூகத்தில் வாழ்வதால்,

 அடுத்தவர் எந்த இடத்திலிருந்து எமக்கு ஆதரவு தந்தார் என்ற நினைப்பையே அடியோடு மறந்துவிடுகிறோம்...

  • Like 1

Share this post


Link to post
Share on other sites

இப்போது முன்னைய பார்வையைக் கொண்டிருக்கவில்லை என்று சொல்லும்போது அது புலிகளை மீதான பார்வை மட்டுமா அல்லது தமிழ் தேசிய உணர்வும் இப்போது இல்லையா என்பதில் தெளிவு இல்லை.

அரசியலில் ஈடுபடும்போது முன்னர் அலுமாரிக்குள் பூட்டி வைத்த எலும்புக்கூடுகள் வெளியே எட்டிப்பார்க்காமல் இருப்பதில் கவனம் வேண்டும்.

கனடியத் தமிழர்களுக்கு ஒரு முகமும் தமிழரல்லாதவர்களுக்கு இன்னோர் முகமும் காட்டுவது தேர்தலில் வெல்ல உதவாது!

Share this post


Link to post
Share on other sites

இவரது வெற்றியை வெறுக்கின்றேன். இவர் புலிகளை எதிர்த்ததால் அல்ல. இவர் இது நாள் வரைக்கும் புலிகளை ஆதரித்தது மட்டுமன்றி புலிகளின் அனுசரனையில் உருவாகிய அமைப்புகளில் எல்லாம் பங்கெடுத்து விட்டு தேர்தல் நாளுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாக வெறும் பதவி ஆசையில் குத்துக்கரணம் அடித்தமைக்காக

22.jpg.

இவர் தன்னை தமிழ் தேசிய வாதியாக / புலிகளின் ஆதரவாளராக காட்டிக் கொண்டு இருந்த காலத்தில் இதை பகிர்ந்து இருந்தார்

இப்படியானவர்களின் வெற்றி தமிழ் மக்களின் தோல்வி
 

Share this post


Link to post
Share on other sites
1 hour ago, valavan said:

அவர் எந்த தவறும் செய்யவில்லை...தனிமனிதனாக இருந்தபோது இனத்தை நேசித்தார், இனத்துக்கு வாழ்வு தந்த கனடாவின் ஒரு பிரதிநிதி ஆனபோது கனேடிய சட்டத்தை மதிக்கிறார்...எதுவும் பண்ணாமலே எவருக்கும் கூஜா தூக்கவும் இல்லை...இனத்தையும் இழிவு படுத்தவில்லை...தன்னால் முடிந்த பங்களிப்பை காலத்தால் செய்த எவருமே விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள்...

என்ன செய்வது தூர நின்றே எச்சி துப்பி பழக்கப்பட்ட சமூகத்தில் வாழ்வதால்,

 அடுத்தவர் எந்த இடத்திலிருந்து எமக்கு ஆதரவு தந்தார் என்ற நினைப்பையே அடியோடு மறந்துவிடுகிறோம்...

புலிகளுக்கு ஆதரவு இல்லை என்றும் ஆதரவு தெரிவித்தமைக்கு மன்னிப்பு கேட்கின்றேன் என்பதெல்லாம் இனத்துக்கு எதிராக செய்த விடயங்கள் இல்லையா? அப்ப புலிகள் தமிழ் இனத்துக்காக போராடாமல் ஆடு மாடுகளுக்காகவா போராடினார்கள்? ஒருவர் ஒரு காலத்தில் பங்களிப்பை கொடுத்து விட்டு அதற்கு பிறகு அவற்றுக்கு மன்னிப்பு கேட்டால் அவர் ஒரு காலத்தில் செய்த பங்களிப்பிற்காக விமர்சனம் செய்ய கூடாதா?
நீங்கள் இது நாள் வரைக்கும் எழுதிய தமிழ் தேசிய கருத்துகள் மீது கூட இப்ப சந்தேகம் வருகின்றது

Share this post


Link to post
Share on other sites
51 minutes ago, நிழலி said:

புலிகளுக்கு ஆதரவு இல்லை என்றும் ஆதரவு தெரிவித்தமைக்கு மன்னிப்பு கேட்கின்றேன் என்பதெல்லாம் இனத்துக்கு எதிராக செய்த விடயங்கள் இல்லையா? அப்ப புலிகள் தமிழ் இனத்துக்காக போராடாமல் ஆடு மாடுகளுக்காகவா போராடினார்கள்? ஒருவர் ஒரு காலத்தில் பங்களிப்பை கொடுத்து விட்டு அதற்கு பிறகு அவற்றுக்கு மன்னிப்பு கேட்டால் அவர் ஒரு காலத்தில் செய்த பங்களிப்பிற்காக விமர்சனம் செய்ய கூடாதா?
நீங்கள் இது நாள் வரைக்கும் எழுதிய தமிழ் தேசிய கருத்துகள் மீது கூட இப்ப சந்தேகம் வருகின்றது

இதே தளத்தில் பாடகர் சாந்தன் , ஏதோ தெரியாமல் ஒரு காலம் தவறு செய்துவிட்டோம் இனி திருந்தி வாழபோகிறோம் என்ற ரீதியில் தெரிவித்த ஒரு கருத்தை பார்தவர்கள் நாம்...

தளங்கள் வேறாயிருந்தாலும்  சந்தர்ப்பங்களும் சூழ் நிலையும் ஒன்றுதான்...

என்னோட தேசியம் சார்ந்த கருத்துக்களில் நீங்கள் சந்தேகம் கொள்வதற்கு உங்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு,

ஏனெனில் நான் ஒன்றும் அவர்களைபோல, நாலு பக்கமும் அரச நிர்வாகங்கள் கண்காணிப்பில்  உள்ள பொதுவெளியில் செயலாற்றி எது வந்தாலும் வரட்டும் என்று ஓர்காலத்தில் இனத்துக்காக செயலாற்றி நெருக்கடியில் சிக்கி கொண்டவன் இல்லையே..

 வெறும் கருத்து மட்டுமே எழுதுபவன்...இந்த களத்தில் வரும் ஒரு சிலர் போல..

ஆனாலும் காலங்கள் கடந்தாலும் எமக்கான கால கட்டத்தில் அனைத்தையும் மீறி அவர்கள் ஆற்றிய பங்களிப்பை நினைவு கூர்கிறேன்,,,இதில் தவறு என் பக்கமாக இருந்தாலும் சந்தோஷமாக ஏற்றுக்கொள்வேன்.

Share this post


Link to post
Share on other sites

கனடா தேர்தலில்- ஈழத் தமிழர் தெரிவு!!

 

ghugj-500x303.jpg

 
 
 

கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத் தேர்தலில் ஈழத் தமிழரான, விஜய் தணிகாசலம் சுமார் ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடந்தது. வாக்குகளை எண்ணும் பணி தற்போது நடந்து வருகிறது.

இதில், ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட விஜய் தணிகாசலம் என்ற ஈழத் தமிழ் இளைஞன் வெற்றி பெற்றுள்ளார்.

 

இவருக்கு, 16 ஆயிரத்து 224 வாக்குகள் கிடைத்துள்ளன. இவரை எதிர்த்துப் போட்டியிட்ட, தேசிய ஜனநாயக கட்சியின் பெலிசியா சாமுவெல், 15 ஆயிரத்து 261 வாக்குகளைப் பெற்றார்.

2,015 வாக்காளர்கள் வாக்களித்த ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் விஜய் தணிகாசலத்துக்கு 38.61 வீத வாக்குகளும், பெலிசியா சாமுவெலுக்கு 36.32 வீத வாக்குகளும் கிடைத்தன.

இவர்களை அடுத்து, லிபரல் கட்சி வேட்பாளர் சுமி சான் 8785 வாக்குகளையும், பசுமைக் கட்சியின் வேட்பாளர் பிரியன் டி சில்வா 1014 வாக்குகளையும், பெற்றனர்.

ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு ஈழத் தமிழர் ஒருவர் தெரிவு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும் என்பது பெருமைக்குரியது.

http://newuthayan.com/story/15/கனடா-தேர்தலில்-ஈழத்-தமிழர்-தெரிவு.html

Edited by நவீனன்

Share this post


Link to post
Share on other sites

ஒன்ராரியோ நாடாளுமன்றத்துக்கு இரு ஈழத் தமிழர்கள் தெரிவு

 

LOGAN-KANAPATHI-vijay-thanigasalam-300x2கனடாவின் ஒன்ராரியோ மாகாண நாடாளுமன்றத்துக்கு நேற்றுமுன்தினம் நடந்த தேர்தலில், இரண்டு ஈழத் தமிழர்கள் வெற்றி பெற்றுள்ளனர். மற்றொருவர் நூலிழையில் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார்.

ஒன்ராரியோ நாடாளுமன்றத் தேர்தலில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சி 76 ஆசனங்களுடன் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

அதேவேளை, புதிய ஜனநாயக கட்சி 40 ஆசனங்களுடன் எதிர்க்கட்சியாக வந்துள்ளது. 15 ஆண்டுகளாக ஆட்சியில் இரந்த லிபரல் கட்சி 7 ஆசனங்களை மாத்திரம் பெற்று தோல்வியடைந்தது.

முதல் முறையாக இரண்டு ஈழத் தமிழர்கள் ஒன்ராரியோ நாடாளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் விஜய் தணிகாசலம், ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில் முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்டு சுமார் 1000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

LOGAN-KANAPATHI-vijay-thanigasalam.jpg

மார்க்கம் தோன்ஹில் தொகுதியில் முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட லோகன் கணபதி வெற்றி பெற்றார். அவருக்கு, 18,943 வாக்குகள் கிடைத்தன. இது மொத்த வாக்குகளில் 50.5 வீதமாகும்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜூனிதா நாதன் 24 வீதமான வாக்குகளை மாத்திரமே பெற்றார்.

அதேவேளை, ஸ்காபரோ கில்வூட் தொகுதியில் முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ரொசான் நல்லரட்ணம், 81 வாக்குகளால் லிபரல் கட்சி வேட்பாளரிடம் தோல்வியடைந்தார்.

லிபரல் கட்சி வேட்பாளர், மிட்சி கன்டர் 11,965 வாக்குகளையும், ரொசான் நல்லரட்ணம் 11,884 வாக்குகளையும் பெற்றனர்.

இதற்கிடையே, இம்முறை ஒன்றாரியோ நாடாளுமன்றத்துக்கு இரு ஈழத் தமிழர்கள் உள்ளிட்ட 10 தெற்காசிய நாட்டவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.net/2018/06/09/news/31303

Share this post


Link to post
Share on other sites

ஆரம்பத்தில் இருந்தே புலி எதிர்ப்பு கதைப்பவர்களை நம்பலாம். ஆனால் இப்படியானவர்களை நம்ப கூடாது... இவர்கள் கனடா நாடாளுமன்றத்திற்கு போவது இவர்களுக்கு பிரயோசனமே தவிர ,தமிழ் மக்களுக்கு இல்லை 

 

  • Like 2

Share this post


Link to post
Share on other sites
20 hours ago, நிழலி said:

இவரது வெற்றியை வெறுக்கின்றேன். இவர் புலிகளை எதிர்த்ததால் அல்ல. இவர் இது நாள் வரைக்கும் புலிகளை ஆதரித்தது மட்டுமன்றி புலிகளின் அனுசரனையில் உருவாகிய அமைப்புகளில் எல்லாம் பங்கெடுத்து விட்டு தேர்தல் நாளுக்கு ஒரு சில தினங்களுக்கு முன்பாக வெறும் பதவி ஆசையில் குத்துக்கரணம் அடித்தமைக்காக

22.jpg.

இவர் தன்னை தமிழ் தேசிய வாதியாக / புலிகளின் ஆதரவாளராக காட்டிக் கொண்டு இருந்த காலத்தில் இதை பகிர்ந்து இருந்தார்

இப்படியானவர்களின் வெற்றி தமிழ் மக்களின் தோல்வி
 

அரசியலில்  இதெல்லாம்  சகசம்  என்பார்கள்

உங்களது கோபம் புரிந்து கொள்ளக்கூடியதே

அதேநேரம்  வளைந்து சுழித்து செல்லாத போராட்டம் தோற்கும் என்பதற்கும் 

நாமே தானே உதாரணம்  என்கின்றோம்

தந்திர ரீதியில்

மனரீதியில்  மாற்றங்கள்  இல்லாது இருந்தால்

வெறுக்கப்படத்தேவையில்லை  அல்லவா??

Share this post


Link to post
Share on other sites

நான் புலம்பெயர் தமிழர்கள் எவருக்குமே அரசியல் ஆதரவளிப்பதில்லை. வாக்கும் போடுவதில்லை. அத்தனை பேரும் பச்சோந்திகள் என்பதை இவர்களில் பலர் அவரவர் அசைலம் அடிக்க எழுதின கட்டுக்கதைகள் பலவற்றினை கண்டவன் என்ற வகையில்... இவர்களை ஆதரிப்பது என்பது எந்த விமோசனமும் அற்றது... என்ற உண்மை நன்கு உணரப்பட்டிருக்கிறது.

வெறும் தமிழர்.. தமிழர் விடுதலை.. தமிழீழம்.. தேசிய தலைவர் எல்லாம்.. இவர்களுக்கு தமிழர்கள் மத்தியில் விளம்பரத்துக்கும்.. தப்பிப் பிழைப்புக்கும்.. இன உணர்வூட்டி வாக்கு வாங்கவும் மட்டுமே என்பதை பல தடவைகளில் பார்த்தாயிற்று.

இவர்களின் இந்த இழிவான தந்திரத்திடம் சிக்க நாங்கள் அந்தளவுக்கு முட்டாள்கள் இல்லை. 

Edited by nedukkalapoovan
  • Like 1

Share this post


Link to post
Share on other sites

முன்பு ராகவன் பரஞ்சோதி ஸ்காபரோவில் கொன்சேவர்ட்டிவ் சார்பில் பெடரல் எலெக்சனில் போட்டியிட்டபோது இதேமாதிரியான ஒரு பிரச்சனையை குளோப் அன் மெயில் ஊடகம் கிளப்பி, கடைசியில் குறுகிய வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்து கனேடிய நாடாளுமன்றம் செல்லமுடியால் போனது. 

Share this post


Link to post
Share on other sites

தமிழ்த்தேசீயம் தமிழ் உணர்வு என்பதை முன்வைத்து எம்மவர்களிடம் வாக்கு பெற முனைபவர்களை இனி ஒதுக்கித் தள்ளுவதே சிறந்தது. அவரவர் தொகுதியில் எந்த இனத்தவராக இருந்தாலும் சேவை மனப்பான்மை உள்ளவர் எவரோ அவருக்கு வக்களிப்பதே சிறந்தது. தாம் முன்பு ஆதரித்ததுக்கு இப்போது மன்னிப்பு கோருவது என்பது பச்சோந்தித்தனம். இவரைப்பொறுத்தவரை இனி வரும் தேர்தல்களில் தோற்றாலும் அவருக்கு கவலை இருக்கப்போவதில்லை. முன்னாள் ஒன்ராறியோ நாடாள மன்ற உறுப்பினர் என்ற அடயாளமே அவருக்கு போதுமானது. இப்படியானவர்கள் தேடுவது அடயாளம் அந்தஸ்த்து தவிர மக்களுக்கான சேவையாக இல்லை. 

Share this post


Link to post
Share on other sites

Create an account or sign in to comment

You need to be a member in order to leave a comment

Create an account

Sign up for a new account in our community. It's easy!

Register a new account

Sign in

Already have an account? Sign in here.

Sign In Now
Sign in to follow this