Jump to content

உரும்பிராயில் பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்:


Recommended Posts

உரும்பிராயில்  பொன் சிவகுமாரனின் 44ஆம் ஆண்டு நினைவேந்தல்:

 

pon-sivakumaran-d06fdf44-e38a-4013-8236-

 

இன விடுதலைக்காக முதன் முதலில் சயனைட் அருந்தி தன்னை மாய்த்துக் கொண்ட மாவீரன் பொன் சிவகுமாரனின் நினைவேந்தல் நிகழ்வு நாளை யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் உரும்பிராயில் உள்ள பொன் சிவகுமரன் நினைவிடத்திலேயே இந்த நிகழ்வு நடைபெறுகிறது.

ஜூன் 5 1974இல் பொன் சிவகுமாரன் வீரமரணம் அடைந்தார். தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டச் செயல்களைப் புரிந்த சிவகுமாரன் பிற்கால ஈழ விடுதலைப் போராட்ட எண்ணத்திற்கும் இயக்கங்களுக்கும் வழிகாட்டியாக செயற்பட்டார். இவரது 44ஆவது நினைவு தினம் நாளை ஆகும்.

இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள், முன்னாள் போராளிகள், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் நிகழ்வு ஏற்பட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். யுத்தம் நிறைவடைந்த பின்னர் முதன் முதலில் பகிரங்மான முறையில் சிவகுமாரன் நினைவுகூரப்படுவது இதுவே முதற்தடவையாகும்.

http://globaltamilnews.net/2018/82211/

Link to comment
Share on other sites

பொன்.சிவ­கு­மா­ர­னின் நினை­வேந்­தல் இன்று

Capture-70.jpg
 
 
 

தமி­ழி­னத்­தின் விடு­த­லைக்­கான முதல் தற்­கொ­டை­யா­ளர் தியாகி பொன்­னுத்­துரை சிவ­கு­மா­ர­னின் 44ஆம் ஆண்டு நினை­வேந்­தல் யாழ். உரும்­பி­ரா­யி­லுள்ள சிவ­கு­மா­ர­னின் நினை­வி­டத்­தில் இன்று காலை 9.30 மணிக்கு நடை­பெ­ற­வுள்­ளது.

தமிழ் மாண­வர்­கள் மீது திணிக்­கப்­பட்ட ஒடுக்­கு­மு­றைக்கு எதி­ரா­கக் கிளர்ந்­தெ­ழுந்து, தமிழ் மக்­க­ளின் உரி­மை­களை மீட்­ப­தற்­காக ஆயு­தம் ஏந்­திப் போராடி இறு­தி­யில் சய­னைட் அருந்தி தன்­னைத் தானே மாய்த்த யாழ்ப்­பா­ணம் இந்­துக் கல்­லூ­ரி­யின் மாண­வன் தியாகி பொன். சிவ­கு­மா­ரனை நினை­வு­கூர்ந்து ஆண்­டு­தோ­றும் தமி­ழீழ மாண­வர் எழுச்சி நாளும் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கின்­றது.

சிவ­கு­மா­ர­னின் நினைவு நாளா­கிய ஜூன் 5ஆம் திகதி (இன்று) உலக சூழல் தினம் என்­ப­தால் அதற்கு மதிப்­ப­ளித்து ஜூன் 6ஆம் திகதி சிவ­கு­மா­ரன் நினை­வாக தமி­ழீழ மாண­வர் எழுச்சி நாள் பேரெ­ழுச்­சி­யு­டன் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது.

 

தியாகி பொன். சிவ­கு­மா­ரன் ஈழ விடு­த­லைப் போராட்ட வீரர்­க­ளில் ஒரு முன்­னோ­டி­யா­வார். யாழ்ப்­பா­ணம், உரும்­பி­ரா­யில் பொலி­ஸா­ரின் சுற்­றி­வ­ளைப்­பில் சய­னைட் அருந்தி வீரச்­சா­வ­டைந்­தார். ஈழப் போராட்ட வர­லாற்­றில் முதன்­மு­த­லில் சய­னைட் அருந்தி உயிர் நீத்­த­வர் இவரே.

சிங்­கள இன­வா­தத்­தால் தமிழ் மக்­க­ளுக்­கெ­தி­ரான கொடு­மை­க­ளும் படு­கொ­லை­க­ளும் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்டு, தமிழ் மக்­க­ளின் சுதந்­திர இருப்பு சிதைக்­கப்­பட்­டது. அன்று மாண­வ­னா­க­வி­ருந்த தியாகி பொன்.சிவ­கு­மா­ரன் தமிழ் மக்­க­ளின் உரி­மை­கள் மீட்­கப்­ப­டு­வ­தற்­கும் சுதந்­திர இருப்பை உறு­தி­செய்­வ­தற்­கும் ஆயு­தப் போராட்­டமே சரி­யான மார்க்­கம் என்­பதை உணர்ந்து சிங்­கள இன­வா­தத்­திற்­கெ­தி­ராக ஆயு­த­மேந்­திய போராட்­டத்தை முன்­னெ­டுத்­தார்.

தமி­ழீழ மக்­கள் மனங்­க­ளில் விடு­த­லைத் தீப்­பொ­றியை இட்­டுச்­சென்ற அந்த மாண­வ­னின் அந்த மாவீ­ர­னின் நினைவு நாளை நினை­வு­கூர்ந்து ஆண்­டு­தோ­றும் தமி­ழீழ மாண­வர் எழுச்சி நாள் கொண்­டா­டப்­ப­டு­கின்­றது.

தியாகி பொன். சிவ­கு­மா­ரனை நினை­வு­கூ­ரும் தமி­ழீழ மாண­வர் எழுச்சி நாளில், தமி­ழீழ விடு­த­லைக்­காக இறு­தி­வரை பாடு­பட்டு, கள­மாடி உயிர்­நீத்த அனைத்து தமிழ் மாண­வர்­க­ளும் நினை­வு­கூ­ரப்­ப­டு­கின்­ற­னர்.

http://newuthayan.com/story/09/பொன்-சிவ­கு­மா­ர­னின்-நினை­வேந்­தல்-இன்று.html

Link to comment
Share on other sites

விடுதலை போராட்டத்தில் வீரச்சாவடைந்த முதல் தியாகியின் நினைவு!

 

IMG20180605101009-718x450.jpg

 

விடுதலைப் போராட்ட ஆரம்ப காலகட்டத்தில் களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது வீரச்சாவடைந்த தியாகி பொன் சிவகுமாரின் 44வது நினைவு தினம் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.

யாழ். உரும்பிராய் சந்தியில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு முன்னால் ஈகைச்சுடரேற்றி அஞ்சலி நிகழ்வை, அவரது சகோதரி சிவகுமாரி ஆரம்பித்து வைத்தார்.

அதனை தொடர்ந்து அவரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அஞ்சலி நிகழ்வில் தமிழீழ விடுதலைக் கழகத்தின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய தர்மலிங்கம் சித்தார்த்தன், வடமாகாண எதிர்க்கட்சி தலைவர் தவராசா, வடமாகாண அமைச்சர் அனந்தி சசிதரன், வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம், பிரதேச சபை உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துக் கொண்டனர்.

தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப காலகட்டத்தில் களச்செயற்பாட்டில் ஈடுபட்டிருந்தபோது இலங்கை படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட போது தியாகி பொன் சிவகுமார், 1974ஆம் ஆண்டு இதே நாள் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

IMG20180605100419.jpg

http://athavannews.com/?p=682934/விடுதலை-போராட்டத்தில்-வீரச்சாவடைந்த-முதல்-தியாகியின்-நினைவு!/

Link to comment
Share on other sites

தனியொருவானாய் அநீதிகளை எதிர்த்த பொன். சிவகுமாரன்!

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

Sivakumaran.jpg?resize=652%2C418

இந்த உலகில் தனியொருவனாய் போராடியவர்கள் வெகு சிலரே. பெருங்கதைகளில் வரும் தனித்த நாயகன் போல எவரும் போராட முன் வருவதில்லை. அநீதிகளை கண்டு, அதற்கெதிராய் கொதித்தொழுந்து தனி ஒருவனாய் போராடிய வெகு சிலரில் பொன். சிவகுமாரனும் ஒருவர். சிவகுமாரன் ஈழப் போராட்டத்தின் முன்னோடி. ஈழ இளைஞர்களின் முன்னோடி. தமிழ் மாணவர் சமூகத்தின் முன்னோடி. இலங்கை அரசியலில் ஏற்பட்ட சமத்துவமின்மை, அநீதிச் செயற்பாடுகளுக்கு எதிராக போராட்டத்தை மிகவும் முக்கிய காலமொன்றில் கையில் எடுத்தவர் சிவகுமாரன்.

 

இலங்கை சுதந்திரமடைந்து இரு வருடங்களின் பின்னர், அதாவது 1958இல் ஓகஸ்ட் 26ஆம் திகதி பொன். சிவகுாமரன் பிறந்தார். பொன்னுத்துரை, அன்னலட்சுமி இவரது பெற்றோர். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் உயர்தர மாணவனாக இவர் கல்வி பயின்றார். அக் காலத்தில் கல்வி தரப்படுத்தல் கொண்டுவரப்பட்டது. இது சிவகுாமரனுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. ஒரு மாணவனாய் தன்னுடைய மாணவ சமூகத்தின் உரிமை மறுக்கப்பட்டு தாம் ஒடுக்கப்பட்டபோது சிவகுமாரன் போராடத் துணிந்தார். கல்வித் தரப்படுத்தலுக்கு எதிராக தொடங்கிய மாணவர் பேரவையில் அவர் தன்னையும் இணைத்தார்.

ஈழ விடுதலைப் போராட்டத்தின் முதல் தாக்குதலையும் பொன். சிவகுமாரனே நடத்தினார். கல்வித் தரப்படுத்தலை மேற்கொண்டசிறிமா ஆட்சியில் அமைச்சரவையில் இடம்பிடித்த யாழ் நகரத் தந்தை அல்பிரட் துரையப்பாவை கொல்வதற்கு அவரது வாகனத்தில் சிவகுமாரன் குண்டு பொருத்தினார். எனினும் துரையப்பா வருவதற்கு முன்பாகவே அந்தக் குண்டு வெடித்தமையால் அதிலிருந்து அவர் தப்பினார். பின்னர் துரையப்பா கொலை முயற்சிக்காக இரண்டு வருடங்கள் சிவகுமாரன் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதன் பின்னர் சிறையிலிருந்து வெளியேறிய சிவகுமாரன் தனித் தாக்குதல் முயற்சிகளுடன் உண்ணாவிரதப் போராடட்டம் போன்றவற்றில் தன்னை இணைத்தார். இளைஞர் பேரவையின் உண்ணாவிரதப் போராட்டங்களில் பங்கெடுத்தார். 1970களில் அப்போதைய சிறிமாவோ பண்டாரநாயக்க அரசில் அமைச்சரவையில் இடம்பெற்ற சோமவீர சந்திரசிறியின் வாகனத்திற்கு குண்டு வைத்தார் என்ற குற்றச்சாட்டில் சிவகுமாரன் கைதுசெய்யப்பட்டார்.

யாழ்ப்பாணம் தமிழரராய்ச்சி மாநாட்டுப் படுகொலைகள் சிவகுமாரனிடத்தில் கடும் சீற்றத்தை ஏற்படுத்தியது. படுகொலைகளை நடத்திய சந்திரசிறியை கொலை செய்ய வேண்டும் என்று சிவகுமாரன் வெளிப்படையாக கூறும் நிலையை அடையுமளவில் சினத்திற்குள்ளானார். இதனால் சிவகுமாரன் தேடப்படும் நபரானார். கோப்பாயில் தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்ட சிவகுமாரன் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டபோது சயனைட் அருந்தி தன்னை தானே மாய்த்துக்கொண்டார். ஜூன் 05, 1974இல் தன்னுடைய 24ஆவது வயதில் தன்னை மாய்த்த சிவகுமாரனின் 44 ஆவது நினைவுதினம் இன்றாகும்.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் முதன் முதலில் சயனைட் அருந்தி உயிர்நீத்தவர் சிவகுமாரனே. இவரே ஈழவிடுதலைப் போராட்டத்தின் முதல் மாவீரர் என்றும் முக்கியம் பெறுகிறார். தமிழ் மக்கள்மீது நிகழ்த்தப்பட்ட இலங்கை அரசின் அநீதிகளுக்கு எதிராக போராடும் வல்லமையை இளைஞர்களிடத்தில் சிவகுமாரன் ஏற்படுத்தினார். இவரது மரண நிகழ்வின்போது முதன் முதலில் பெண்கள் சுடலைக்கு வருகை தந்த மாற்றமும் இடம்பெற்றது. மாணவர்கள், இளைஞர்கள் மத்தியில் சிவகுமாரனின் மரணம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஈழத் தமிழ் மக்கள் இரண்டாம் தரப் பிரஜைகளாகவும் ஈழத் தமிழ் மாணவர்கள் திட்டமிட்ட ரீதியில் ஒடுக்கப்பட்டபோதும் சிவகுமாரன் போராட்டத்தை கையில் எடுத்தார். இலங்கை அரசியலில் ஏற்பட்ட இனப்பிரச்சினையும் அதனால் ஏற்பட்ட கல்வித் தரப்படுத்தல் போன்ற செயற்பாடுகள் குறித்தும் தமிழ் மிதவாத தலைமைகளால் எதுவும் செய்ய முடியாதபோது சிவகுமாரன் அகிம்சைப் பாதையிலிருந்து விலகி ஆயுதப் பாதையில் சென்றார். தமிழ் அரசியல் தலைமைகளின் கோரிக்கைகளை ஆளும் சிங்களத் தரப்புக்கள் ஏற்றுக்கொள்ளாமல் ஒடுக்குமுறையை ஈழ மக்களிடத்தில் பிரயோகித்த போது சிவகுமாரன் ஆயுதப் பாதையை கையில் எடுத்தார்.

சிவகுமாரனின் வாழ்வையும் மரணத்தையும் கையில் எடுத்த போராட்டத்தையும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமானது. சாதாரணமாக எல்லா மாணவர்களையும் போல தன் படிப்பில் மாத்திரம் அவன் கவனம் செலுத்தியிருக்கவில்லை. அவன் எல்லா மாணவர்களின் படிப்பிலும் கவனம் செலுத்தினான். அவன் எல்லா மாணவர்களின் நலனினும் கவனம் செலுத்தினான். அவன் ஈழ மக்களின் நலனின் கவனம் செலுத்தினான். தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்காது, தொடர்ந்தும் அவர்களை ஒடுக்கியபோது சிவகுமாரன் இப்படியான போராட்டம் ஒன்றே தேவை என உணர்ந்தான்.

தனி ஒருவனாய் சிவகுமாரன் முன்னெடுத்த போராட்டமே பின்னர் ஈழவிடுதலை ஆயுதப் போராட்டமாக விரிந்தது. சிவகுமாரன் ஏன் ஆயுதத்தை கையில் எடுத்தான் என்பதையும் அவன் எப்படியான காலத்தில் தன் தாக்குதல்களை நடத்தினான் என்பதையும் இன்றைய நாளில் ஆராய்வது மிகவும் அவசியமானது. சிவகுமாரனின் தனிமனித போராட்ட சரித்திரம் நினைவுகூரவும் மதிப்பிடவும் பாடங்களை கற்றுக்கொள்ளவும் வேண்டிய ஒன்றாகும்.

FB_IMG_1528169347695.jpg?resize=547%2C72
 

குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்

http://globaltamilnews.net/2018/82338/

Link to comment
Share on other sites

2 hours ago, நவீனன் said:

இலங்கை சுந்திரமடைந்து இரு வருடங்களின் பின்னர், அதாவது 1958இல் ஓகஸ்ட் 26ஆம் திகதி பொன். சிவகுாமரன் பிறந்தார்

தயவு செய்து மீளாய்வு செய்து செய்திகளை வெளியிடுங்கள் தீபச்செல்வன்/குருபரன்.

வரலாறு முக்கியம் ஆசிரியரே.

சிவகுமாரன் பிறந்தது 26 ஓகஸ்ட் 1950.

Link to comment
Share on other sites

தியாகி பொன் சிவகுமாரனின் 44ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு

9ef6cc5e-ee3e-4e78-b58d-44834f257097.jpg

 

தமிழினத்தின் விடுதலைக்கான முதல் தற்கொடையாளர் தியாகி பொன்னுத்துரை சிவகுமாரனின் 44ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் உரும்பிராயில் நடைபெற்றது. யாழ். உரும்பிராய் சந்திக்கருகில் அமைந்துள்ள பொன்.சிவகுமாரனின் நினைவிடத்தில் காலை 09.30 மணியளவில் நடைபெற்றது.

தமிழ் மாணவர்களுக்கு தரப்படுத்தல் மூலம் திணிக்கப்பட்ட ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர்களின் உரிமைகளை மீட்பதற்காகவும் கிளர்ந்தெழுந்து ஆயுதம் ஏந்தி போராடினார். அதனால் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த பொன்.சிவகுமாரன் கடந்த 1974ஆம் ஆண்டு ஜீன் மாதம் 05ஆம் திகதி யாழ். உரும்பிராய் பகுதியில் காவல்துறையினரின் சுற்றிவளைப்பினுள் சிக்கிக்கொண்ட போது சயனைட் அருந்தி தன் உயிரை மாய்த்துக்கொண்டார். ஈழ போராட்ட வரலாற்றில் முதல் முதலாக சயனைட் அருந்தி உயிர் நீத்தவர் இவர் என்பது குறிப்படத்தக்கது.

81bef273-f0ad-41f8-82f9-f768538ab52d.jpg1893c77c-7d85-4f1c-90d3-89b454871ce2.jpg7061fc13-6664-4c9c-9549-463ad6aab6a9.jpga6b92f3b-58ec-4b5c-95da-df16281ff458.jpgdaa15d11-a09e-4c48-b479-b8578dfeff22.jpg

http://globaltamilnews.net/2018/82368/

மேலும் சில படங்கள்....

Bild könnte enthalten: 2 Personen, Personen, die stehen und im Freien

Bild könnte enthalten: eine oder mehrere Personen, Personen auf einer Bühne und im Freien

 

Bild könnte enthalten: 1 Person, steht, Hochzeit und im Freien

Bild könnte enthalten: 3 Personen, Personen, die stehen und im Freien

Bild könnte enthalten: 1 Person, steht und im Freien

Bild könnte enthalten: 1 Person

நன்றி முகநூல்

Link to comment
Share on other sites

பொன்.சிவகுமாரனுக்கு -உரும்பிராயில் நினைவேந்தல்!!

De5weBQVQAAVQBg-750x430.jpg
 
 

தமி­ழி­னத்­தின் விடு­த­லைக்­கான முதல் தற்­கொ­டை­யா­ளர் தியாகி பொன்­னுத்­துரை சிவ­கு­மா­ர­னின் 44ஆம் ஆண்டு நினை­வேந்­தல் யாழ். உரும்­பி­ரா­யி­லுள்ள சிவ­கு­மா­ர­னின் நினை­வி­டத்­தில் இன்று நடை­பெ­ற்றது.

இதில் அரசியல் பிரமுகர்களும், சமூகப்பிரதிநிதிகளும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

De5weBSU8AAvlgh-300x225.jpg

http://newuthayan.com/story/12/பொன்-சிவகுமாரனுக்கு-உரும்பிராயில்-நினைவேந்தல்.html

De5weBRU0AAciEU-300x212.jpg

De5weBWUEAAf2eD-300x225.jpg

Link to comment
Share on other sites

பொன்.சிவகுமாரனுடன்- அனுபவப் பகிர்வு!!

 
 
sivakumaran-300x182-670x406.jpg
 

 

 

ஜன­நா­ய­கப் பாரம்­ப­ரிய வழி­யில் எமது உரி­மை­களை வென்­றெ­டுக்க முடி­யாது ஆயு­தப் போராட்­டத்­தின் மூலமே அதனை அடைய முடி­யு­மென்று 1970களி­லேயே ஆயு­தப் போராட்­டத்­திற்­கான வித்­தினை இட்­ட­வர் தியாகி சிவ­கு­மா­ரன்.

அது­மட்­டு­மல்ல ஏற்­க­னவே பொலி­சா­ரி­னால் கைது செய்­யப்­பட்டு அவர்­க­ளின் கைக­ளில் பட்ட அனு­ப­வத்­தின் விளை­வாக பிறி­தொரு சந்­தர்ப்­பத்­தில் அவ்­வாறு நிக­ழு­மே­யா­னால் தன்­னு­யிரை தானே மாய்த்­துக்­கொள்­வேன் என்று பல முறை எங்­க­ளி­டம் கூறி­ய­தனை நிரூ­பித்­தும் காட்­டி­யி­ருக்­கின்­றார்.

தீண்­டாமை மத மாற்­றச் செயற்­பா­டு­கள் போன்­ற­வற்றை சிவ­கு­மா­ரன் கண்­டித்­தது மட்­டு­மல்­லா­மல் அவற்­றிற்­கெ­தி­ராக நாம் தீவி­ர­மாக செயற்­பட வேண்­டும் என்­றும் எம்­மு­டன் வாதா­டு­வார். அத்­து­டன் ஜன­நா­யக வழி­யி­லான போராட்­டங்­க­ளி­னால் எமது இனத்தை சிங்­கள அரசு தங்­க­ளி­னு­டைய பொலிஸ் மற்­றும் இரா­ணு­வப் பலத்­தி­னால் அடக்­கு­கின்­றது. இதற்­கெ­தி­ராக நாமும் வன்­முறை செயற்­பா­டு­க­ளில் ஈடு­ப­ட­வேண்­டு­மென்ற கருத்து அவ­ரது உரை­யா­டல்­க­ளின்; போது அவ­தா­னிக்­கப்­ப­டக் கூடி­ய­தாக இருக்­கும்.

 
 

உரும்­பி­ரா­யில் பொன்­னுத்­துரை அன்­ன­லட்­சுமி தம்­ப­தி­யி­ன­ரிற்கு 26.08.1950ஆம் ஆண்டு நான்­கா­வது புதல்­வ­னாக உதித்த சிவ­கு­மா­ரன் செல்­ல­மாக ‘திர­வி­யம்’ என எல்­லோ­ரா­லும் அழைக்­கப்­ப­ட்டார். யாழ். இந்­துக் கல்­லூ­ரி­யில் தனது படிப்பை முடித்­துக் கொண்டு யாழ். தொழி­ல்நுட்­பக் கல்­லூ­ரி­யில் அவர் கல்வி கற்­கும் காலப்­ப­கு­தி­யில்­தான் (1970ஆம் ஆண்டு ஆரம்­பத்­தில்) சிவ­கு­மா­ர­னு­ட­னான நட்பு எனக்கு ஏற்­பட்­டது.

கொக்­கு­வி­லில் முத்­து­கு­மா­ர­சு­வாமி என்ற ஆங்­கில ஆசி­ரி­யர் இருந்­தார். தொழில்நுட்­பக் கல்­லூ­ரி­யில் படித்­துக் கொண்­டி­ருந்த சிவ­கு­மா­ரும் அங்கு ஆங்­கி­லம் படிக்க வந்­தார். நானும் அங்கு படித்­தேன். அங்­கு­தான் சிவ­கு­மா­ர­னு­டன் நெருக்­க­மான நட்பு ஆரம்­பித்­தது. அப்­போதே ரின்­பால் பேணி­யில் வெடி­குண்டு செய்­வது பற்­றி­யெல்­லாம் பேசு­வார். எங்­க­ளுக்கு இந்த கதை­கள் புதிது. அத­னால் ஆச்­ச­ரி­ய­மாக கேட்­டுக்­கொண்­டி­ருப்­போம். தனது வீட்­டுக்கு எங்­களை கூட்­டிக்­கொண்டு சென்று வெடி­குண்டு தயா­ரிப்­பது பற்றி எங்­க­ளுக்­கும் பழக்­கி­னார்.

ஆசி­ரி­யர் முத்­து­கு­மா­ர­சு­வா­மி­யும் தமிழ் அர­சுக்­கட்­சிக்­கா­ரர். அர­சி­யல் போராட்­டத்­தில் ஆர்­வ­முள்­ள­வர். அவ­ரும் எமக்கு பல விட­யங்­களை சொல்­லித்­த­ரு­வார். அத­னால் அவ­ரது வீட்­டில் அதி­க­நே­ரம் இருப்­போம். முத்­து­கு­மா­ர­சு­வா­மி­யின் தம்பி ஆனந்­த­கு­மா­ர­சு­வா­மி­யும் தீவிர இனப்­பற்­றா­ளர். அது­போல ஞான­சுந்­த­ரம் என்ற பொலிஸ்­கா­ரர் ஒரு­வர் இருந்­தார். வன்­முறை பாதை­தான் தமி­ழர்­க­ளிற்கு தீர்வு தரு­மென்று இளை­ஞர்­கள் மத்­தி­யில் தீவி­ர­மாக பிர­சா­ரம் செய்து வந்­த­வர். இந்த மூன்று இடங்­க­ளி­லும்­தான் சிவ­கு­மா­ரன் இருப்­பார்.

எனக்கு அறி­மு­க­மாக முன்­னர் சிவ­கு­மா­ரன் வாழ்­வில் நடந்த சில சம்­ப­வ­மென நான் கேள்­விப்­பட்­டதை முத­லில் பதிவு செய்­கி­றேன். குட்­டி­ம­ணி­யின் அண்­ண­னின் மகன் ஒரு­வ­ரும் தொழில்­நுட்ப கல்­லூ­ரி­யில் படித்­துள்­ளார். இரு­வ­ருக்­கு­மி­டை­யில் நெருக்­கம் ஏற்­பட்டு, குட்­டி­ம­ணி­யின் வல்­வெட்­டித்­து­றை­யி­லுள்ள கோழிப்­பண்­ணைக்கு சென்­றி­ருக்­கி­றார்.

அப்­பொ­ழுது வல்­வெட்­டித்­து­றை­யி­லி­ருந்து கடத்­த­லில் ஈடு­ப­டு­வார்­கள். இத­னால் கடற்­ப­டை­யு­டன் முரண்­பாடு ஏற்­ப­டும். இந்த முரண்­பாட்­டை­ய­டுத்து கடற்­ப­டை­யைத் தாக்க குட்­டி­ம­ணி­யின் கோழிப்­பண்­ணை­யில் வெடி­குண்­டு­கள் செய்­துள்­ள­னர். சிவ­கு­மா­ரன் அங்கு சென்று வெடி­குண்­டு­கள் தயா­ரிக்க பழ­கி­யுள்­ளார். அவ­ரி­ட­மி­ருந்து கந்­த­கம், பொட்­டா­சி­யம் போன்ற வெடி­குண்டு தயா­ரிக்­கும் பொருள்­க­ளை­யும் சிவ­கு­மா­ரன் பெற்­றுக் கொண்­டுள்­ளார்.

சில வெடி­குண்டு, தயா­ரிக்­கும் பொருள்களை ஆனந்­த­கு­மா­ர­சு­வா­மி­யின் வீட்­டில்­தான் சிவ­கு­மா­ரன் பதுக்கி வைத்­தி­ருந்­தார். ஒரு­நாள் திடீ­ரென ஆனந்­த­கு­மா­ர­சு­வா­மி­யி­டம் வந்து, யாழ்ப்­பா­ணத்­திற்கு வரும் அமைச்­ச­ருக்கு குண்டு வைக்­கப்­போ­கி­றேன் என்­றுள்­ளார். ஆனந்­த­கு­மா­ர­சு­வாமி தடுத்­தும் சிவ­கு­மா­ரன் மனம்­மா­ற­வில்லை. பொருள்­களை எடுத்­துக்­கொண்டு போய்­விட்­டார்.

சிறிமா அர­சில் கலா­சார அலு­வல்­கள் பிர­தி­ய­மைச்­ச­ராக இருந்த சோம­வீர சந்­தி­ர­சிறி உரும்­பி­ரா­யில் உள்ள பாட­சா­லை­யொன்­றின் நிகழ்­வொன்­றிற்­காக வந்­தி­ருந்­தார். அவ­ரது காரின் பின் ரய­ரிற்கு கீழே குண்டை வைத்­துள்­ளார் சிவ­கு­மா­ரன். பிர­தி­ய­மைச்­சர் மேடை­யில் பேச்சை முடித்­த­தும், சாரதி காரை இயக்கி, பின்­னால் செலுத்த முயல, குண்டு வெடித்­துள்­ளது. வெடி­குண்டு தயா­ரிப்­பின் முதல் கால­கட்­டம் அது. அவற்­றால் பெரிய பாதிப்­புக்­கள் வராது.

சிவ­கு­மா­ரன் உரும்­பி­ராய் சந்­தி­யில் நின்று வழக்­க­மாக வீராப்­பாக பேசு­ப­வர். அத­னால் இதை செய்­தது யார் என்­ப­தில் ஊரில் சந்­தே­க­மி­ருக்­க­வில்லை. பொலி­சுக்­கும் தக­வல் போய், சிவ­கு­மா­ரன் கைதா­னார். பொலி­சார் அடித்­த­தில் தன்­னு­டன் தொடர்­பில் இருந்­த­வர்­கள் பற்றி சிவ­கு­மா­ரன் சொல்­லி­விட்­டார்.

சிவ­கு­மா­ரன் பிடி­பட்­ட­தால் எங்­க­ளுக்­கும் பிரச்­சனை வரு­மென எல்­லோ­ரும் பயந்­தோம். மறு­நாள் முத்­துக்­கு­மா­ர­சு­வா­மி­யின் வீட்­டில் கூடி, அடுத்து என்ன செய்­ய­லா­மென பேசிக்­கொண்­டி­ருந்­தோம். அப்­பொ­ழுது வீட்டு வாச­லுக்கு பொலி­சார் வந்­த­னர்.

விப­ரீ­தம் என்­பதை உணர்ந்து எல்­லோ­ரும் பின்­பக்­கத்­தால் ஓடிச்­சென்று வேலி கடந்து தப்­பித்து விட்­டோம். முத்­துக்­கு­மா­ர­சு­வாமி தானொரு ஆசி­ரி­யர் என்­ப­தால் பிரச்­ச­னை­யில்­லை­ யென நினைத்­தார். ஆனந்­த­கு­மா­ர­சு­வா­மியை தேடிய பொலி­சார், அவரை வரச்­செய்­வ­தற்­காக முத்­து­கு­மா­ர­சுவாமியை கைது செய்­து­கொண்டு சென்­ற­னர். நாங்­கள் நான்­கைந்து பேர் அதில் தப்­பித்­த­தற்கு கார­ணம், எங்­க­ளது வீடு­கள் சிவ­கு­மா­ர­னுக்குத் தெரி­யாது.

சில­நாள் தலை­ம­றை­வாக இருந்த ஆனந்­த­கு­மா­ர­சு­வாமி பின்­னர் பொலி­சில் சர­ண­டைந்­தார். விசா­ர­ணை­யின் பின் ஆனந்­த­கு­மா­ர­சு­வா­மி­யை­யும், சிவ­கு­மா­ர­னை­யும் அனு­ரா­த­புர சிறைக்கு மாற்­றி­விட்­ட­னர். சிவ­கு­மா­ரனை பிணை­யில் எடுப்­ப­தற்­காக அவ­ரது தாயா­ரு­டன் பல இடங்­க­ளுக்கும் சென்று முயற்­சி­கள் செய்­தேன். அப்­போ­தைய சட்­டத்­தின்­படி பிணை­யெ­டுப்­ப­ தென்­றால் கொழும்­பி­லுள்ள மேல்­நீ­தி­மன்­றத்­திற்­கு­தான் செல்ல வேண்­டும். அப்­பொ­ழுது மாகாண மேல்­நீ­தி­மன்­றங்­கள் கிடை­யாது. மேல்­நீ­தி­மன்­றங்­க­ளில் எல்லா சட்­டத்­த­ர­ணி­க­ளும் வாதா­ட­வும் முடி­யாது.

சிவ­கு­மா­ர­னின் தாயா­ரும் நானும் அமிர்­த­லிங்­கத்­தி­டம் சென்று விட­யத்தை சொன்­னோம். நீலன் திருச்­செல்­வத்­தின் தந்­தை­யார் திருச்­செல்­வத்­திற்கு ஒரு கடி­தம் தந்து அனுப்­பி­னார்.

கொழும்­பி­லி­ருந்த திருச்­செல்­வத்­தின் வீட்­டுக்கு சென்­றோம். அது பெரி­ய­தொரு மாளிகை. அழைப்பு மணியை அழுத்த, வெளி­யில் வந்­தார். கடி­தத்தை கொடுத்­தோம். படித்­து­விட்டு, ‘எங்­களை கேட்டோ குண்டு வைச்­ச­னீங்­கள்’ என பேசி­னார். ஒரு மாதிரி அவரை சமா­ளித்து, அவரை முன்­னி­லை­யாக வைத்­தோம். சிவ­கு­மா­ரன் பிணை­யில் விடு­த­லை­யா­னார்.

என்­னு­டைய அப்பா ஒரு ஆசி­ரி­யர். சாத்­தி­ர­மும் பார்ப்­பார். பிர­ப­ல­மான உல­கத்­த­லை­வர்­கள் பற்­றிய சோதிட குறிப்­பை­யும் அப்பா வைத்­தி­ருந்­தார். எனக்கு இன்­று­வரை சாத்­தி­ரத்­தில் நம்­பிக்­கை­யில்லை. மகன் சிறை­யில் இருந்­த­போது, அவ­ரது குறிப்பை எனது தந்­தை­யா­ரி­டம் காட்ட சிவ­கு­மா­ர­ னின் தாய் விரும்­பி­னார்.

சிவ­கு­மா­ர­னின் தாய் எனது வீட்­டுக்கு வந்­தால், நான் வீட்­டில் அகப்­பட்டு விடு­வேன். நான் படிக்­கி­றேன் என்று மட்­டும்­தான் வீட்­டில் நினை த்­தார்­கள். அத­னால் சிவ­கு­மா­ர­ னின் குறிப்பை என்­னி­டம் தாருங்­கள், கேட்டு சொல்­கி­றேன் என வாங்­கிக்­கொண்டு வந்­தேன். அப்­பா­வி­டம் அந்த குறிப்பை கொடுத்­தேன். பார்த்­து­விட்டு முதல் சொன்ன வார்த்தை- ‘இவ­னின் சாத­க­மும் ஹிட்­ட­ல­ரின் சாத­க­மும் ஒன்­று­தான்’. திடீ­ரென எல்­லோ­ர­தும் கவ­னத்தை ஈர்த்து மறை­வான் என்­றார்.

ஒரு­நாள், பல்­க­லை­க­ழ­கத்­தில் தமிழ் மன்ற செயற்­பா­டு­க­ளில் ஈடு­பட்­டுப் படிப்பை முடித்து வந்­தி­ருக்­கும் உரும்­பி­ரா­யைச் சேர்ந்த நண்­பர் ஒரு­வரை சந்­திக்க வரு­மாறு சிவ­கு­மா­ரன் கேட்­டார். அந்த நண்­ப­ரும் போராட்­டத்­தில் தீவிர ஆர்­வ­முள்­ள­வர் என்­றார். அவ்­வாறு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­ட­வர் சத்­தி­ய­சீ­லன் என்­ப­வ­ரா­வார்.

அந்­தக் கால­கட்­டத்­தில் சிறி­மாவோ பண்­டா­ர­நா­யக்க அர­சி­னால் பல்­க­லை­க­ழ­கத் தரப்­ப­டுத்­தல் முறை அறி­மு­க­மா­னது. இன­ரீ­தி­யான தரப்­ப­டுத்­தல்­தான் முத­லில் அறி­மு­க­மா­னது. இத­னால் எனது பல்­க­லை­க­ழக வாய்ப்­பும் தவ­றி­யது. தரப்­ப­டுத்­தலுக்கு எதிர்ப்புத் தெரி­விக்க வேண்­டு­மென முடி­வு­செய்­தோம். இது தொடர்­பாக ஆர்­வ­முள்ள பலரை இணைத்து ஒரு ஆலோ­சனை கூட்­டம் நடத்­தி­னோம்.

மலா­யன் கபேக்கு மேலி­ருந்த மண்­ட­பத்­தில் கூட்­டம் நடந்­தது. சத்­தி­ய­சீ­லன், மாவை, லோரன்ஸ், மகா உத்­த­மன், அரி­ய­ரட்­ணம் (புன்­னா­லை­கட்­டு­வன்), இலங்கை மன்­னன், முத்­து­கு­மா­ர­சு­வாமி, சந்­தி­ர­கு­மார் (பிரான்ஸ்), சபா­லிங்­கம், பல­ந­ட­ராஜ ஐயர் எனப் பலர் கூட்­டத்­திற்கு வந்­தி­ருந்­த­னர். மாண­வர் பேர­வை­யென செயற்­ப­டு­வது, தரப்­ப­டுத்­த­லுக்கு எதி­ராக போராட்­டம் செய்­வ­தென முடிவு செய்­தோம்.

இந்த மாண­வர் பேரவை உயர்­தர மாண­வர்­கள் பலரை ஒன்­று­தி­ரட்டி தரப்­ப­டுத்­த­லிற்கு எதி­ராக மாபெ­ரும் ஊர்­வ­லத்­தினை நடாத்­தி­யது மட்­டு­மல்­லா­மல் அத­னைத் தொடர்ந்து ஆயு­தப் போராட்­டத்­தினை தொடர்ந்து சுமந்து சென்ற அமைப்­பா­க­வும் அமை­கின்­றது. மாண­வர் பேர­வை­யின் தரப்­ப­டுத்­த­லிற்­கெ­தி­ரான போராட்­டங்­க­ளில் சிவ­கு­மா­ர­னின் பங்­க­ளிப்பு அளப்­ப­ரி­யது.

1976ஆம் ஆண்டு சிங்­கள அர­சு­டன் சேர்ந்து நடக்­கும் தமிழ் அர­சி­யல்­வா­தி­களை எதிர்க்க வேண்­டு­மென்ற நோக்­கில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யினை யாழ்ப்­பா­ணத்­தில் ஏற்­ப­டுத்த அனு­ச­ர­ணை­யா­கச் செயற்­பட்ட யாழ் மேயர் அல்­பி­ரட் துரை­யப்­பா­வி­னைக் கொலை செய்­வ­தற்கு யாழ் வேம்­படி பெண்­கள் உயர்­த­ரப் பாட­ச­லை­யின் முன்பு எடுத்த முயற்­சி­யும் வாக­னம் சேத­ம­டைந்­த­தோடு துரை­யப்பா கால­தா­ம­த­மாக வந்­த­தால் உயிர் பிழைக்க வைத்­தது.

இந்­தக் கொலை முயற்­சி­யைத் தொடர்ந்­தும் சிச­வ­கு­மா­ரன் யாழ் சிறை­யி­லும், அனு­ரா­த­பு­ரம் சிறை­யி­லும் ஒன்­றரை வரு­டங்­க­ளிற்கு மேலா­கக் கைதி­யாக இருந்­தார்.

1974ஆம் ஆண்டு தை மாதத்­தில் யாழ்ப்­பா­ணத்­தில் நடை­பெற்ற உல­கத் தமிழ் ஆராய்ச்சி மகா­நாட்­டில் தீவிர தொண்­ட­னா­கக் கட­மை­யாற்­றிய சிவ­கு­மா­ரன் மகா நாட்­டின் இறுதி நாள் அன்று பொலி­சா­ரி­னால் நடத்­தப்­பட்ட அடா­வ­டித்­த­னத்­தினை நேரில் பார்­வை­யிட்ட சிவ­கு­மா­ரன் அதற்­குப் பொறுப்­பா­ன­வர்­க­ளைப் பழி வாங்­கியே தீரு­வே­னென்று அன்றே சப­த­மெ­டுத்­துக் கொண்­டார்.

அந்த உள்­ளக் கொதிப்­பின் விளைவே தமிழ் ஆராய்ச்சி மகா­நாட்டு அசம்­பா­வி­தத்­திற்­குப் பொறுப்­ப­தி­கா­ரி­யாக இருந்த உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் சந்­தி­ர­சிறி மீது சிவ­கு­மா­ரன் குண்டு வீச்சு நடத்தி சுட முற்­பட்­ட­ மைக்­குக் கார­ண­மா­கும். அந்தச் சம்­ப­வம் வெற்­றி­ய­ளிக்­கா­விட்­டா­லும் எப்­ப­டியோ பழி­வாங்­கியே தீரு­வேன் என்ற முனைப்­பு­டன் செயற்­பட்­ட­தன் விளைவே சிவ­கு­மா­ரன் தமிழ் ஆராய்ச்சி மகா­நாடு நடை­பெற்று ஆறு மாதத்­திற்­குள்­ளேயே தன்­னு­யி­ரைக் காவு கொடுக்­கும் நிலைக்கு இட்­டுச் சென்­றது.

பொலிஸ் தேடு­தல்­க­ளி­லி­ருந்து ஒழிந்து வாழ வேண்­டிய நிலை மற்­றும் தனது தீவிர செயற்­பா­டு­க­ளிற்கு நிதி ஒரு தடை­யாக இருந்த சூழ­லில் பல­ரி­டம் சென்று நிதி­யு­த­வி­கேட்­டும் எல்­லோ­ரும் கைவி­ரித்த நிலை­யி­லேயே கோப்­பாய் கிரா­மிய வங்­கி­யில் பணத்­தைத் திரு­டு­வ­தற்கு சிவ­கு­மா­ரன் முடி­விற்கு வந்­தார்.

அது­வும் அந்த வங்­கி­யில் வேலை செய்த ஒரு ஊழி­ய­ரின் தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில்­தான்; அங்­குள்ள பணத்­தைக் கொள்­ளை­யி­டு­வ­தற்­குத் திட்­ட­மிட்­டார். இருந்­தும் அந்­தச் செயற்­பாடு அவ­ரிற்­குக் கால­னாக மாறி­விட்­டது. காலில் ஏற்­க­னவே இருந்த காயத்­து­டன் வங்­கி­யில் கொள்­ளை­யிட முற்­பட்ட போது உசா­ர­டைந்த ஊழி­யர்­க­ளின் செயற்­பாட்­டி­னால் இவர் வங்­கி­யி­லி­ருந்து ஓடிச் செல்ல வேண்­டிய நிலை ஏற்­பட்­டது.

அப்­போது பொலி­சா­ரும் பின் தொட­ரவே தோட்­டங்­களுக்கு கூடாக ஓடிய சிவ­கு­மா­ரன் காலில் ஏற்­க­னவே இருந்த காயத்­தில் மர­வள்­ளிக் கட்டை ஏறி­ய­தன் விளை­வா­கத் தொடர்ந்து ஓட முடி­யா­மல் நின்ற போது பொலி­ஸார் அவரை நெருங்­கிய போது சிவ­கு­மா­ரன் பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வ­ரின் தன்­னி­யக்­கத் துப்­பாக்­கி­யி­னைப் பறித்து அவ­ரைச் சுட முயன்­றி­ருக்­கி­றார்.

அப்­போது பொலிஸ் அதி­காரி தனக்கு மூன்று பெண் பிள்­ளை­கள் என்­றும் அவர்­க­ளு­டைய தாயா­ரும் இறந்து விட்­ட­தா­க­வும் தானும் இறந்­தால் அந்தப் பிள்­ளை­கள் அநா­தை­க­ளாகி விடு­வார்­க­ ளென்று கெஞ்­சி­ய­தன் அடிப்­ப­டை­யில் அவ­ரைச் சுடாது தன்­னி­ட­மி­ருந்த சய­னைட்டை தானே அருந்­தித் தன்­னு­யிரை மாய்த்­துக் கொண்­டார்.

சிவ­கு­மா­ரன் வைத்­தி­ய­சா­லை­யில் இறந்த பின்பு அவ­ரது கைக் கடி­கா­ரம் மற்­றும் அவ­ரது காற்­சட்­டைப் பையி­லி­ருந்த பணம் ஆகி­ய­வற்றை சிவ­கு­மா­ர­னின் தந்­தை­யி­டம் கைய­ளித்­து­விட்டு ‘‘உங்­கள் மகன் ஓர் தெய்­வப் பிறவி நினைத்­தி­ருந்­தால் என்­னைச் சுட்­டி­ருக்­க­லாம்’’ எனக் கூறி அவ­ரது காலில் வீழ்ந்து வணங்­கி­னா­ராம் அந்­தப் பொலிஸ்.
சிவ­கு­மா­ரன் ஓர் ஆயு­தப் போராளி மட்­டு­மல்ல.

தமி­ழர்­கள் மத்­தி­யி­லி­ருந்த சீர்­கே­டு­ களை, குறிப்­பாக சாதிக் கொடு­மை­களை இள வய­தி­லி­ருந்தே எதிர்த்து வந்த ஒரு­வர். தன் இளம் வய­தி­லேயே உரும்­பி­ராய் வை­ர­வர் கோவி­லில் சம­பந்தி போஷ­னத்தை நடாத்தி இளை­ஞர்­க­ளி­டையே எழுச்­சியை உரு­வாக்­கி­ய­வர். அத்­து­டன் சாவு வீடு­க­ளில் பறை மேளம் அடிப்­ப­தைத் தடுத்து நிறுத்த வேண்­டு­மென்ற முயற்­சி­யில் உரும்­பி­ரா­யி­லுள்ள அந்த சமூ­கத்­தைச் சேர்ந்­த­வர்­க­ளு­டன் கலந்­து­ரை­யாடி பறை மேளங்­களை உரும்­பி­ராய் சந்­தி­யில் போட்டு உடைத்து எரித்­தார்.

தமிழ் மக்­கள் போராட்ட வளர்ச்சி என்­பது ஒரு வகை­யான அஞ்­ச­லோட்­டம். அந்த அஞ்­ச­லோட்­டத்­தில் ஆயு­தப் போராட்­ட­மென்ற அஞ்­ச­லோட்­டத்தை ஆரம்­பித்து வைத்­தது சிவ­கு­மா­ர­னென்­றால் அது மிகை­யா­காது. தியாகி சிவ­கு­மா­ரன் தமிழ் மக்­க­ளின் உரி­மைப்­போ­ராட்­டத்­தின் வர­லாற்­றுச் சின்­ன­மாக நிலைத்து நிற்­பா­னென்­பது திண்­ணம்.

கட்­டு­ரை­யா­ளர்:எதிர்க்­கட்­சித் தலை­வர்
வடக்கு மாகாண சபை

http://newuthayan.com/story/13/பொன்-சிவகுமாரனுடன்-அனுபவப்-பகிர்வு.html

Link to comment
Share on other sites

"தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு அடித்தளமிட்ட முதற் தற்கொடையாளி பொன். சிவகுமாரன்"

 

 
 

"அல்பிரேட் துரையப்பா முதல் இன்று வரை பல துரோக கும்பல்கள் எங்கள் இனத்தின் மக்களை நசுக்கிவருகின்றனர். இவ்வாறான அடக்குமுறைக்கு எதிராக முதலாவதாக தற்துணிவாக எதிர்த்து போரடி தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு அடித்தளமிட்ட முதற் தற்கொடையாளி பொன். சிவகுமாரன். எனவே தமிழர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துகின்ற இன்றுள்ள துரோக கூட்டங்கள் இனத்திற்காக இப்படிப்பட்ட புனிதர்கள் செய்த தியாகங்கள் போராட்டங்களை படித்துப் பார்க்கவேண்டும்." என தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.  

நேற்று மாலை மட்டக்களப்பு தாமரைக்கேணியிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற  தமிழ் தேசிய விடுதலைக்காக தன்னைத் தியாகம் செய்த பொன். சிவகுமாரின் 44 ஆவது நினைவேந்தலில்  கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தர்மலிங்கம் சுரேஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

dharmalingam_suresh.jpg

நினைவேந்தலில் தர்மலிங்கம் சுரேஸ்,

"தமிழ் மக்கள் மீது முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறைக்கு எதிராக தற்துணிவாக பல போராட்டங்கள் நடாத்தி தமிழினத்திற்காக தன்னுடைய உயிரை தியாகம் செய்த ஒரு மாவீரன்

1970 சிறிமாவோ பண்டார நாயக்காவின் அரசினால்  கல்வி தராதரம் பார்க்கப்பட்டு தமிழ் மக்களுக்கு மிகவும் ஒரு புறம்பான கல்வி தரம் நடைபெற்றது அது தமிழ் மக்கள் மீது முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை அந்த நிலைமையில் பொன்.சிவகுமாரன் தனது முழு எதிர்பபையும் வெளிப்படுத்தி கல்விக்காக உண்ணதமான போராட்டத்தை மேற்கொண்டார்.

அப்போது பொலிஸார் பல்வேறு இன்னல்களை கொடுத்தும் அதனை முறியடித்து பல தற் துணிவான போராட்டங்களை செய்து தமிழ்  மக்களின் விடியலுக்காக  ஆயுதம் ஏந்தியவர். இதன்போது பல தமிழ் துரோக கும்பல்கள் ஆரம்பத்தில் இருந்தே சிங்கள அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மழுங்கடிக்கின்ற பல செயற்பாடுகளில் ஈடுபட்டபோது அவ்வப்போது பல எதிர்ப்புக்களையும் இந்த அரசுக்கு தலையிடியை கொடுத்துவந்தார்.

இந்த நிலையில் பொன். சிவகுமாரன் பல இடங்களில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து பல துன்பங்களை அனுபவித்தும் கூட விடுதலையாகிய பின்பு இனத்திற்காக தியாகங்களை செய்ததுமட்டுமன்றி பொலிஸார் கைது செய்தபோது தன்னிடம் இருந்து எந்த உண்மையும் எடுக்ககூடாது என சயனைற் அருந்தி தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.

அப்படிப்பட்ட ஒரு பெரும் மகாணை நினைவு கூறுவது இன்றியமையாததொன்று. எனவே அவரின் வரலாறு என்பது மிகவும் முக்கியமானது அண்ணன் திலீபன் போல சிவகுமாரன் எந்த நிலையிலும் சோரம் போகாத கொள்கையைக் கொண்டவர். அவரின் தியாகங்களை இன்றைய இளைஞர்கள் படிக்கவேண்டும்." என்றார் 

http://www.virakesari.lk/article/34531

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.