Jump to content

விஜய் விருதும் – நடந்த சுவாரசியங்களும்!!


Recommended Posts

விஜய் விருதும் – நடந்த சுவாரசியங்களும்!!

 

De1G0k8VMAEqspV-657x430.jpg

 
 

 

 

10- ஆவது ஆண்டு விஜய் விருது வழங்கும் நிகழ்வு, சென்னையில் நேற்றுகோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், சிவகுமார், விஜய்சேதுபதி, அனிருத், தனுஷ், நயன்தாரா
உள்ளிட்ட திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியை கோபிநாத், டிடி மற்றும் மா.கா.பா. ஆனந்த் ஆகியோர் தொகுத்து வழங்கினா். ‘பலே பலே பாகுபலி’ என்ற பின்னணி இசையோடு, பாய்- தலையணையுடன் மேடையேறினார் மா.கா.பா.ஆனந்த்.

முதலாவதாக சிறந்த பாடலாசியர் விருது கொடுக்கப்பட்டது. இந்த விருதுக்கு தனுஷ், நா.முத்துக்குமார், தாமரை, உமாதேவி, விவேக் ஆகியோர் போட்டியிட்டார்கள். இதில் ‘அறம்’ படத்தின் ‘தோரணம் ஆயிரம்’ பாடலுக்காக உமாதேவி விருதினை வென்றார். சிநேகன் இந்த
விருதினை வழங்கினார்.

 

* சிறந்த எடிட்டருக்கான விருதுக்கு லாரன்ஸ் (அவள்), பிலோமின் ராஜ் (மாநகரம்), ரிச்சர்ட் கெவின் (விக்ரம் வேதா), ரூபன் (விவேகம்), சிவானந்த ஈஸ்வரன் (தீரன் அதிகாரம் ஒன்று) ஆகியோர் போட்டியிட்டார்கள். இதில் ‘மாநகரம்’ படத்துக்காக சிறந்த எடிட்டருக்கான விருதினை வென்றார் பிலோமின் ராஜ். நடிகர் ராஜேஷ் விருதினை வழங்கினார்.

* மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படத்துக்காக மெர்சல், சிங்கம் 3, தீரன் அதிகாரம் ஒன்று, வேலைக்காரன், விக்ரம் வேதா மற்றும் விவேகம் ஆகிய படங்கள் போட்டியிட்டன. இதில் ‘மெர்சல்’ தேர்வானது. இயக்குநர் கே. பாக்யராஜ் விருதினை வழங்க, தயாரிப்பாளர் ஹேமா
ருக்மணி பெற்றுக் கொண்டார்.

* சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதுக்கு ஜி.கே.விஷ்ணு (மெர்சல்), பி.எஸ்.வினோத் (விக்ரம் வேதா), சத்யன் சூரியன் (தீரன் அதிகாரம் ஒன்று), ரவிவர்மன் (காற்று வெளியிடை) ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ‘காற்று வெளியிடை’ படத்துக்காக ரவிவர்மன் விருதினை
வென்றார். நடிகை ராதா வழங்கினார்.

* சிறந்த இயக்குநருக்கான விருதுக்கு அறிவழகன் (குற்றம் 23), வினோத் (தீரன் அதிகாரம் ஒன்று), மோகன் ராஜா (வேலைக்காரன்), புஷ்கர் – காயத்ரி (விக்ரம் வேதா) மற்றும் ராம் (தரமணி) ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ‘விக்ரம் வேதா’ படத்துக்காக புஷ்கர் – காயத்ரி
விருதினை வென்றார்கள். இயக்குநர் பாலா விருதினை வழங்கினார்.

* சிறந்த உறுதுணை நடிகருக்கான விருதுக்கு அழகம் பெருமாள் (தரமணி), பாரதிராஜா (குரங்கு பொம்மை), எம்.எஸ்.பாஸ்கர் (8 தோட்டாக்கள்), விவேக் பிரசன்னா (மேயாத மான்) ஆகியோர் போட்டியிட்டார்கள். இதில் ‘மேயாத மான்’ படத்துக்காக விவேக் பிரசன்னா விருதினை வென்றார். இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் மனோபாலா விருதினை வழங்கினார்.

* சிறந்த புதுமுக நடிகைக்கான விருதுக்கு அதிதி பாலன் (அருவி), அக்‌ஷரா ஹாசன் (விவேகம்), அனு இம்மானுவேல் (துப்பறிவாளன்), ப்ரியா பவானி சங்கர் (மேயாத மான்), சாயிஷா சைகல் (வனமகன்) ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ‘அருவி’ படத்தில் தனித்துவமான
நடிப்பின் மூலம் கவனம் ஈர்த்த அதிதி பாலன் வென்றார். இவருக்கு கீர்த்தி சுரேஷ் விருதினை வழங்கினார். மேலும், படம் பார்த்தவுடனே தொலைபேசி வாயிலாக அதிதியைப் பாராட்டியதாகவும்
கீர்த்தி சுரேஷ் தெரிவித்தார்.

* சிறந்த காமெடி நடிகருக்கான விருதுக்கு முனீஸ்காந்த் (மாநகரம்), ஆர்.ஜே.பாலாஜி (இவன் தந்திரன்), சதீஷ் (பைரவா), சூரி (சங்கிலி புங்கிலி கதவ தொற) மற்றும் விடிவி. கணேஷ் (சக்க போடு போடு ராஜா) ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ‘சங்கிலி புங்கிலி கதவ
தொற’ படத்துக்காக சூரி விருதினை வென்றார். நடிகர் கார்த்தி விருதினை வழங்கினார்.

* ‘கடைக்குட்டி சிங்கம்’ குழுவினர் மேடையேறி படத்தின் டீஸரை வெளியிட்டனர். முழுக்க  முழுக்க விவசாயிகளை முன்னிலைப்படுத்தி இப்படத்தை எடுத்திருப்பதாக இயக்குநர் பாண்டிராஜ்
தெரிவித்தார்.

* வாழ்நாள் சாதனையாளர் விருதினை வென்றார் நடிகர் சிவகுமார். அவரைப் பற்றிய பிரத்யேக வீடியோ திரையிடப்பட்டு மேடைக்கு அழைக்கப்பட்டார். ரூபினி, ராதா, அம்பிகா மற்றும் ரேவதி
அவருக்கு விருதினை வழங்கினார்கள். அப்போது அவரது மனைவியும், மகன் கார்த்தியும் உடனிருந்தனர். விழா அரங்கமே எழுந்து நின்று சிவக்குமாருக்கு கரவொலி எழுப்பி மரியாதை செலுத்தியது.

* சிறந்த நடிகைக்கான விருதுக்கு அதிதி ராவ் (காற்று வெளியிடை), ஆண்ட்ரியா (தரமணி), நயன்தாரா (அறம்), ஷ்ரதா ஸ்ரீநாத் (விக்ரம் வேதா) மற்றும் தன்யா (கருப்பன்) ஆகியோர் போட்டியிட்டனர். இதில் ‘அறம்’ படத்துக்காக நயன்தாரா விருதினை வென்றார். கார்த்தி விருதை வழங்கினார்.

* சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை வழங்க அனிருத், சந்தோஷ் நாராயணன் மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் மேடையேறினார்கள். மூவருமே ஏ.ஆர்.ரஹ்மானிடம் தங்களுக்கு பிடித்தது என்ன என்று பகிர்ந்து கொண்டார்கள். ‘காற்று வெளியிடை’ படத்துக்காக இவ்விருதினை வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான்.

* ஏ.ஆர்.ரஹ்மான் மேடையில் இருக்க, இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா மேடையேறி ‘மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பாடல்’ என்ற பிரிவில் ‘ஆளப்போறான் தமிழன்’ பாடலுக்கான விருதினை வழங்கினார். அப்போது அவர் எழுப்பிய சில கேள்விகளுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்தார்.

* ஏ.ஆர்.ரஹ்மான் மேடையிலே இருக்க, சிறந்த பின்னணி பாடகருக்கான விருது அறிவிக்கப்பட்டது. ‘வேலைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘இறைவா’ பாடலுக்காக அனிருத் வென்றார். ஏ.ஆர்.ரஹ்மான் கையால் பெற்றிருப்பதால் இந்த விருது மிகவும் ஸ்பெஷல் என்றார் அனிருத்.

* சிறந்த பாடகருக்கான விருதினை வென்றால் ‘கோலமாவு கோகிலா’ படத்திலிருந்து ‘கல்யாண வயசு’ பாடலை பயங்கர ஆரவாரத்திற்கு இடையே பாடினார். அதனைத் தொடர்ந்து எந்தவொரு விழா நடந்தாலும், அதில் தனுஷுடன் பாடுவது வழக்கம். அவரை மேடைக்கு அழைக்கிறேன் என்று கேட்டவுடன் தனுஷ் மேடையேறினார். இருவரும் இணைந்து ‘ஊதுங்கடா சங்கு’ பாடலைப் பாடினார்கள்.

* தனுஷ் மேடையை விட்டு இறங்கிய போது ரசிகர் ஒருவர் யாருமே எதிர்பாராத வண்ணம், அவரோடு செல்ஃபி எடுத்துக் கொண்டார். அப்போது அங்கிருந்த பலரும் ரசிகரைப் பிடித்து இழுக்க, தனுஷ் அவர்களிடமிருந்து ரசிகரை விடுவித்து, அவரோடு செல்ஃபி எடுத்துக் கொண்டார்.

* சிறந்த நடன இயக்குநருக்கான விருதுக்கு பிருந்தா (காற்று வெளியிடை), ஷெரிஃப் (மேயாத மான்), ஷோபி (மெர்சல், வேலைக்காரன்) உள்ளிட்டோர் போட்டியிட்டனர். ‘காற்று
வெளியிடை’ படத்துக்காக பிருந்தா இந்த விருதினை வென்றார். அருண் விஜய் மற்றும் ஹரிஷ் கல்யாண் இருவரும் இணைந்து விருதை வழங்கினார்கள்.

* ‘அறம்’ படத்துக்காக சிறந்த நாயகிக்கான விருதினை வென்றார் நயன்தாரா. துல்கர் சல்மான் இவ்விருதை வழங்கினார். அப்போது ‘ராஜா ராணி’ படத்தில் ஜெய் பேசும் பிரபலமான வசனத்தை
நயன்தாராவிடம் பேசி அப்ளாஸ் அள்ளினார்.

* சிறந்த பொழுதுப்போக்காளருக்கான விருதினை வென்றார் தனுஷ். துல்கர் சல்மான் இவ்விருதை வழங்கினார். தனுஷ் மேடையிலேயே இருக்க, ‘ப.பாண்டி’ படத்துக்காக சிறந்த உறுதுணை
நடிகைக்கான விருதினை வென்றார் ரேவதி. தனுஷ் விருதினை வழங்கினார்.

* சிறந்த புதுமுக இயக்குநருக்கான விருதினை ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வென்றார். பார்த்திபன் விருதினை வழங்கும் முன், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக தனது கருத்துக்களைக் கூறி கைத்தட்டல்களை அள்ளினார்.

* சிறந்த கதைக்கான விருதினை ‘ரங்கூன்’ படத்துக்காக ராஜ்குமார் வென்றார். பார்த்திபன் விருதினை வழங்கினார்.

* சிறந்த புதுமுக நடிகருக்கான விருதினை ‘தரமணி’ படத்துக்காக வசந்த் ரவி வென்றார். அவருக்கு பிந்து மாதவி மற்றும் தேவயானி இணைந்து விருதினை வழங்கினார்கள்.

* சிறந்த திரைக்கதைக்கான விருதினை ‘விக்ரம் வேதா’ படத்துக்காக புஷ்கர் – காயத்ரி வென்றார்கள். இவர்களுக்கு விஜய் சேதுபதி விருதினை வழங்கினார்.

* சிறந்த வசனக்கர்த்தாவுக்கான விருதினை ‘ஒரு கிடாயின் கருணை மனு’ படத்துக்கு கிடைத்தது. யூகி சேது விருதினை வழங்க இயக்குநர் சுரேஷ் சங்கையா மற்றும் குருநாதன் இணைந்து பெற்றுக் கொண்டார்கள்.

* சிறந்த பின்னணி இசைக்கான விருதினை ‘விக்ரம் வேதா’ படத்துக்காக சாம் சி.எஸ். வென்றார். அவருக்கு யூகி சேது விருதினை வழங்கினார்.

* சிறந்த படத்துக்கான விருதினை ‘அருவி’ திரைப்படம் வென்றது. படக்குழுவினர் ஒன்றிணைந்து விருதினை தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் மற்றும் சஷிகாந்த் ஆகியோரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.

* சிறந்த பின்னணி பாடகிக்கான விருதினை ‘செந்தூரா’ பாடலுக்காக லட்சுமி வென்றார். அவருக்கு ரூபினி மற்றும் ரைசா இணைந்து விருது வழங்கினார்கள்.

Screenshot_2-1-700x382-300x164.pngmaxresdefault-3-300x169.jpgmaxresdefault-2-300x169.jpgmaxresdefault-1-300x169.jpgDeyQqWOVQAAw9Up-300x200.jpgDe1G0mNVMAAXvjR-300x159.jpgVijay-360-vikatan-part-1-3-300x169.jpeg

http://newuthayan.com/story/13/விஜய்-விருதும்-நடந்த-சுவாரசியங்களும்.html

Link to comment
Share on other sites

 


 

 

vijay-awards-bits

 

1528097796.jpg

 

1528097913.jpg

 

1528097966.jpg

 

1528098125.jpg

 

1528098179.jpg

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கொந்தளித்த பார்த்திபன்


 

 

parthiban-condemns-tuticorin-incident

 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் கோபமாக தனது கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டார் பார்த்திபன்.

10-வது ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி சென்னையில் கோலகலமாக நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், சிவகுமார், விஜய்சேதுபதி, அனிருத், தனுஷ், நயன்தாரா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றார்கள்.

 

இவ்விழாவில் சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை ‘மாநகரம்’ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பெற்றார். இவ்விருதை நடிகர் மற்றும் இயக்குநர் பார்த்திபன் வழங்கினார். இதற்காக மேடையேறிய பார்த்திபன், லோகேஷ் கனகராஜ் பெயரை அறிவிக்கும் முன்பு சில வார்த்தைகள் பேசினார். அதில் அவர் கூறியதாவது:

விருது வாங்குபவர் பெயரை அறிவிப்பதற்கு முன்பு விஜய் அவார்ட்ஸ் குழுவினருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். சிறந்த முறையில் துப்பாக்கியில் சுட்டவருக்கு விருது கொடுக்க வேண்டும். பொதுமக்களுக்கு நடுவிலே, ரொம்ப தூரம் தாண்டி வேன் மீது ஏறி நின்று கரெக்டா குறிப்பார்த்து சுட்ட, உரிமைக்காக குரல் கொடுத்தவங்களை வாயிலேயே சுட்ட, வயித்துக்காக போராடியவர்களின் வயித்துலேயே சுட்ட, ஈவு இரக்கமே இல்லாம இதயத்துல சுட்ட அந்த துப்பாக்கி சுடுபவருக்கு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் விருது கொடுக்க வேண்டும்.

யாரை அழைத்து கொடுக்க வேண்டுமானால், பாதிக்கப்பட்ட அந்த மக்களை மேடைக்கு அழைத்தே கொடுக்க வைக்க வேண்டும். இது எனது வேண்டுகோள். பிறகு, சமூகவிரோதிகள் அனைவரையும் சுட்டுத்தள்ளி விட வேண்டும். நான் பொதுமக்களைச் சொல்லவில்லை, சமூகவிரோதிகளைச் சொல்கிறேன். இந்த மாதிரி பெரிய மேடையில் நல்ல விஷயம் சொல்லவேண்டும் என விருப்பப்பட்டேன். 
இவ்வாறு அவர் பேசினார்.

பார்த்திபனின் பேச்சை விழாவுக்கு வந்திருந்தவர்கள் மிகவும் ரசித்தார்கள். பலத்த ஆரவாரங்களுக்கு இடையே பார்த்திபனின் பேச்சை, ‘அறம்’ இயக்குநர் கோபி நயினார் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றார்.

http://www.kamadenu.in/news/cinema/3146-parthiban-condemns-tuticorin-incident.html?utm_source=site&utm_medium=TTH_slider_banner&utm_campaign=TTH_slider_banner

Link to comment
Share on other sites

வீரனுக்கும் தலைவனுக்கும் என்ன வித்தியாசம்? - விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் தனுஷ் ருசிகரம்


 

 

dhanush-speech-in-vijay-awards

 

வீரனுக்கும் தலைவனுக்கும் என்ன வித்தியாசம்? என்ற கேள்விக்கு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் தனுஷ் ருசிகரமாக பதிலளித்தார்.

10-வது ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், சிவகுமார், விஜய்சேதுபதி, அனிருத், தனுஷ், நயன்தாரா உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் பங்கேற்றார்கள்.

 

இந்த விழாவில் 2017-ம் ஆண்டிற்காக 'Best Entertainer of the Year' விருதினை வென்றார் தனுஷ். துல்கர் சல்மான் விருதினை வழங்கினார். அதனைத் தொடர்ந்து தனுஷ் பேசியதாவது:

2000-ம் ஆண்டில் நடிக்க வந்தேன். இப்போ 18 வருஷமாகிவிட்டது. வெற்றி, தோல்வி என மாறி மாறி வந்து கொண்டுதான் இருக்கின்றன.  எல்லாவற்றையும் என் தோளில் சுமந்து கொண்டு, இந்த சுமாரான மூஞ்சியை வைத்துக் கொண்டு நடித்து வருவதற்கு இவர்களுடைய (ரசிகர்களுடைய) அன்பு, பாசமெல்லாம்தான் காரணம். இந்த ஆண்டு இந்த விருது கிடைத்தது இன்னும் பெரிய சந்தோஷம். ஏனென்றால் ’ப.பாண்டி’ இயக்கியுள்ளேன். அதற்காகக் கிடைத்த விருதாக எடுத்துக் கொள்கிறேன். 

பொதுவாக நாம் ஒரு கட்டத்தில் பிஸியாகி விடுவோம். அப்போது அப்பா - அம்மா என்றாலே நம் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கும், குழந்தைகளை பள்ளியில் கொண்டு போய் விடுவதற்கும், சமைத்துக் கொடுப்பதற்கும் மட்டுமே இருப்பதை சமூகத்தில் பார்க்கத் தொடங்கினேன். சம்பளம் வாங்காத வேலைக்காரர்களாக இருப்பது போல் ஒரு வலி உண்டானது. 60-வயதைத் தாண்டினாலும் அவர்களுக்கு ஒரு வாழ்க்கை இருப்பதைச் சொல்ல வேண்டும் என்ற ஆசை வந்தது. அதற்காக எழுதிய கதையே ‘ப.பாண்டி’. 2 ஆண்டுகள் கழித்து மீண்டும் விஜய் அவார்ட்ஸ் நடைபெறுகிறது. அதற்கு வாழ்த்துகள். 

இவ்வாறு அவர் பேசினார்.

இதனைத் தொடர்ந்து விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கோபிநாத், டிடி சில கேள்விகளை தனுஷிடம் கேட்டனர்.
கோபிநாத்: திறமையை மட்டுமே நம்பி இவ்வளவு பெரிய வளர்ச்சி. எப்படி இது சாத்தியமானது?

தனுஷ்: சரியான ஆசிர்வாதமும், முயற்சியும் இல்லாமல் எவ்வளவு தான் கூவிக்கூவி அழைத்தாலும், யாருமே கூப்பிட மாட்டார்கள். நம்ம வேலையை நாம சரியாக செய்து, முயற்சி செய்தோம் என்றால் தானாக வரும். ஆனால், நம்பிக்கையை மட்டும் இழக்கவே கூடாது. எந்த ஒரு விஷயமும் எளிதாக கிடைக்காது. எளிதாக கிடைத்த விஷயம் நிலைக்காது என்று சொல்வார்கள். பொறுமையாக முயற்சி செய்துக்கொண்டே இருங்கள்.   

கோபிநாத்: ‘காலா’ பற்றி உங்களுக்கு மட்டுமே தெரிந்த ஒரு ரகசியம்...

தனுஷ்: இது ரகசியமா என்று தெரியாது. ஆனால், தலைவர் (ரஜினி) இப்படத்தில் இறங்கி செஞ்சிருக்கார். ‘சிவாஜி’ படத்தில் தொடங்கி தலைவரை பயங்கர ஸ்டைலாக கோர்ட் சூட் போட்டே பார்த்துவிட்டோம். இதுல  தரை லோக்கலாக இறங்கி செஞ்சிருக்கார்.

டிடி: வீரனுக்கும் தலைவனுக்கும் என்ன வித்தியாசம்?

தனுஷ்: ஒருத்தன் 10 பேரை எதிர்த்தான் என்றால் அவன் வீரன். 10 பேர் சேர்ந்து ஒருத்தனை எதிர்த்தால் அவன் தலைவன். இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கும் நிலைமையைப் பார்க்கும் போது, நான் என்ன சொல்றேன்னு எல்லாருக்கும் புரியும்.

http://www.kamadenu.in/news/cinema/3149-dhanush-speech-in-vijay-awards.html?utm_source=site&utm_medium=TTH_slider_banner&utm_campaign=TTH_slider_banner

Link to comment
Share on other sites

எனக்கும் சச்சினுக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா? : விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் கலகல!


 

 

ar-rahman-sachin

 

கா.இசக்கிமுத்து                                  

எனக்கும் சச்சினுக்கும் உள்ள ஒற்றுமை என்ன என்று விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான் கலகலப்பாக பதிலளித்தார்.

 

10-வது ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று (ஜுன் 4)  கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், சிவகுமார், விஜய்சேதுபதி, அனிருத், தனுஷ், நயன்தாரா உள்ளிட்ட திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றார்கள்.

இந்த விழாவில் சிறந்த இசையமைப்பாளர் மற்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பாடல் என்ற இரண்டு விருதுகளை வென்றார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான். அவருக்கு அனிருத், சந்தோஷ் நாராயணன் மற்றும் விஜய் ஆண்டனி இணைந்து விருதுகளை வழங்கினார்கள்.

விருதுகளைப் பெற்றுக் கொண்ட ஏ.ஆர்.ரஹ்மானிடம் சில கேள்விகளை எழுப்பினார்கள் தொகுப்பாளர் கோபிநாத் மற்றும் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா. அவற்றுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் பதிலளித்தார். அவை பின்வருமாறு:

கோபிநாத்: உங்களுடைய அமைதி, பணிவு எல்லாம் பார்க்கும் போது சச்சினை ஞாபகப்படுத்துகிற மாதிரியே தோணுதே...

.ஆர்.ரஹ்மான்: இதுவரைக்கும் எவ்வளவு விருதுகள் வாங்கியிருக்கிறீர்கள் என தனுஷ் கேட்டார். இந்த மாதிரி விருது வழங்கும் விழாக்களுக்கு வருவதே, தமிழகத்தில் தான் இருக்கிறேன் என்று தெரியப்படுத்துவதற்காகத் தான். ஹாலிவுட் போயிட்டார் என்று சொல்லிவிடுகிறார்கள். எனக்கும் சச்சினுக்கும் மீசையில்லை. அது தான் ஒற்றுமை. நிறையப் பேர் இந்தக் கேள்வியை கேட்டிருக்கிறார்கள். இன்னொரு தாயின் வயிற்றில் பிறந்த சகோதரர் அவர்.

கோபிநாத்: ‘ஆளப்போறான் தமிழன்’ மாதிரியான உற்சாகம் ததும்பும் பாடல்களை எப்படி உருவாக்குகிறீர்கள்?

.ஆர்.ரஹ்மான்: மேலோட்டமாக அப்பாடலைச் செய்தால் வேலைக்கு ஆகாது. ஒரு சில பாடல்களுக்கு பயங்கர எனர்ஜி தேவைப்படும். ஆனால், அந்தச் சமயத்தில்நால் ம்ம் நம்ம அப்செட்டாக இருப்போம். அந்த மாதிரியான நேரத்தில் தான் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அதை எல்லாம் மீறி அன்பும், ஆதரவும் மட்டுமே என்னை இயக்கிக் கொண்டிருக்கிறது. 

எஸ்.ஜே.சூர்யா: ரொம்ப சிறுவயதிலேயே பெரிய வெற்றி, பணம் என அனைத்துமே வந்துவிட்டது. அப்போது சிலர் காணாமல் போய்விடுவார்கள், சிலர் தடுமாறி எழுந்து இனிமேல் ஒழுங்காக இருக்க வேண்டும் என நினைப்பார்கள். எந்த ஒரு சலனத்திலும் சிக்காமல் இருக்கிறார்களே. எப்படி?

.ஆர்.ரஹ்மான்: ரொம்ப கஷ்டமான கேள்வி தான். கடல் மீதிருக்கும் எண்ணெய், தாமரைப்பூ மீதிருக்கும் தண்ணீர் மாதிரி இருக்கணும். அதன் மீது படாமல், அதன் மீதிருக்க வேண்டும். 

எஸ்.ஜே.சூர்யா: உங்களை ரொம்ப டார்ச்சர் பண்ணிய இயக்குநர்? 

ஏ.ஆர்.ரஹ்மான்: எப்போதுமே டார்ச்சராக நினைப்பதில்லை. படம் ஒப்புக் கொள்ளும் போதே,  டாச்சராக தெரிந்தால் ஒப்புக் கொள்ளமாட்டேன். முதலில் எதற்கு டார்ச்சர் செய்கிறார்கள் என யோசிப்பேன். அவர்களுடைய படத்துக்கான வேலைக்காகத் தானே கேட்கிறார்கள் என நினைத்துவிட்டால் டார்ச்சராகத் தெரியாது. 

’ஆளப்போறான் தமிழன்’ பாடலுக்கான இடத்தைக் கொடுத்த இயக்குநர் அட்லீ, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

http://www.kamadenu.in/news/cinema/3170-ar-rahman-sachin.html?utm_source=site&utm_medium=TTH_slider_banner&utm_campaign=TTH_slider_banner

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ரு 80 வடை போல பாரிய களவு எண்டால் கூட பரவாயில்லை🤣
    • வயது குறைந்த பிள்ளைகள் விளையாட்டுத்தனமாக செய்திருக்கலாம்.
    • ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா அமைப்பு 19 APR, 2024 | 12:04 PM   இஸ்ரேலின் தாக்குதல் காரணமாக ஈரானின் அணுநிலையங்கள் எவற்றிற்கும் பாதிப்பு ஏற்படவில்லை என சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பு தெரிவித்துள்ளது. நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக தெரிவித்துள்ள அந்த அமைப்பு அனைத்து தரப்பினரும் கடும் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்கவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இராணுவமோதல்களின் போது அணுசக்தி நிலையங்கள் ஒருபோதும் இலக்காக கருதப்படக்கூடாது என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/181443
    • Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM   (எம்.நியூட்டன்) போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது. இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம். மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர்.  குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/181451
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.