Jump to content

`முடிவெடுக்க இவர்கள் யார்?’ - காலாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் பிரகாஷ் ராஜ்


Recommended Posts

`முடிவெடுக்க இவர்கள் யார்?’ - காலாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் பிரகாஷ் ராஜ்

 

கன்னட மக்களுக்கு இது வேண்டும்; இதுவேண்டாம் என முடிவெடுக்க இந்த சமூக விரோதிகள் யார் என நடிகர் பிரகாஷ் ராஜ் காலா படத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளார். 

பிரகாஷ் ராஜ்

 

ரஜினி நடித்துள்ள காலா படத்தைக் கர்நாடகாவில் திரையிடத் தடை விதித்து அம்மாநில திரைப்பட வர்த்தக சபை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியைச் சந்தித்து ரஜினி ரசிகர்கள் மனு அளித்தனர். இருப்பினும், கர்நாடகா மக்கள் காலா படம் வெளியாவதை விரும்பவில்லை என குமாரசாமி கருத்துத் தெரிவித்திருந்தார். 

இந்தநிலையில், காலா படத்தைத் திரையிடுவதற்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்துத் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், ``மனிதனுக்கும் ஆறுக்கும் மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இதனால்தான் காவிரி விவகாரம் குறித்து பேசுகையில் நாம் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோம். காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்து பேசும்போதெல்லாம், தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநில மக்களின் உணர்வுகளும் இப்படித்தான் இருக்கும். ஆனால், உணர்ச்சிவசப்படுவது மட்டுமே ஒரு பிரச்னைக்கு தீர்வு காண முடியாது. அந்த விவகாரம் குறித்த நடைமுறையில் நாம் சிந்திக்க வேண்டும். இந்த விவகாரத்தில் இருமாநில அரசுகளும், மத்திய அரசு மற்றும் வல்லுநர் குழுவினருடன் இணைந்து பேசி நமது விவசாயிகளின் பிரச்னைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். 

இந்தசூழலில் காலா திரைப்படத்தை வெளியாகமால் தடுத்து நாம் என்ன செய்யப்போகிறோம்?. ரஜினி கூறிய கருத்து நம்மைக் கடுமையாகப் பாதித்துள்ளது உண்மைதான். அதை நான் ஒப்புக்கொள்கிறேன். அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாகக் கூறிக்கொண்டு காலா படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என சிலை அமைப்புகள் கூறி வருகின்றன. இதுதான் கன்னட மக்களான நாம் வேண்டுவது. இந்த கேள்விக்கான பதில் நமக்குத் தெரியாது. எப்போதும் நமக்குத் தெரிந்ததில்லை. ஒருவேளை அந்தப் படம் வெளியாகி, அதைப் பார்க்காமல் மக்கள் புறக்கணித்தால், அப்போது நாம் தெரிந்துகொள்ளலாம் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்று. ஆனால், மக்கள் சார்பாக இதுபோன்ற சமூகவிரோதிகள் தீர்மானிக்கிறார்கள் நமக்கு எதுவும் தெரிந்துவிடக் கூடாதென்று. 

பிரகாஷ் ராஜ்

 

மக்களுக்கு இது வேண்டும்; இது வேண்டாம் என முடிவு செய்ய இவர்கள் யார்?. நடிகர் கூறிய கருத்துக்கு எந்தத் தொடர்பும் இல்லாத, தயாரிப்பாளரின் முதலீடு என்னாவது?. படத்தில் தங்களது திறமை மற்றும் உழைப்பைக் கொட்டியுள்ள நூற்றுக்கணக்கான டெக்னீஷியன்கள், துணை நடிகர்கள் மற்றும் உழைப்பாளர்கள் பற்றி நினைத்ததுண்டா?. அதேபோல், சினிமா போஸ்டர்களை ஒட்டிக்கொண்டும், தியேட்டர்களில் சைக்கிள் ஸ்டாண்டுகளை வைத்துக் கொண்டும் இருப்பவர்கள் முதல் தியேட்டர்களில் கேண்டீன் நடத்துபவர்கள் வரையில் இருப்பவர்களின் நிலை?. விநியோகஸ்தர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் என திரைப்படம் சார்ந்து தங்கள் வாழ்வாதாரத்தை நிர்ணயித்துக் கொண்டவர்கள் பற்றி சிந்திக்க வேண்டும். இவர்கள் அனைவருக்கும் வாழ்வுதரும் சினிமா பிரியர்களின் நிலை?. இந்த அசாதாரண சூழலுக்கு சாமானியன் கொடுக்கும் விலை... வாகனங்கள் எரிப்பு, பொருட்களை அடித்து உடைப்பது, குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாத சூழல் என இந்த பட்டியல் முடிவற்றதாக நீளும். இதுபோன்ற சம்பவங்களால் கர்நாடகா மற்றும் தமிழக மக்கள் இடையிலான நல்லிணக்க சூழல் குலைந்துபோகும் நிலை பற்றி சிந்தித்ததுண்டா?. நமது உணர்ச்சிகளைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்ட பின்னர், இந்த சமூக விரோதிகள் எங்கு செல்வார்கள்?. இதுபோன்ற ஒரு வாய்ப்பு வருவதற்காக காத்திருக்கும் அவர்கள், மீண்டும் அசாதார சூழலை ஏற்படுத்துவார்கள். இறுதியில் நாமே காயமடைந்து, அந்த காயத்துடன் வாழ வேண்டி இருக்கும்’’ என்று பிரகாஷ் ராஜ், தனது பதிவில் தெரிவித்துள்ளார்

https://www.vikatan.com/news/tamilnadu/126696-prakash-raaj-raises-voice-against-ban-on-releasing-kaala-in-karnataka.html

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

காவிரிக்காக ‘காலா’வை எதிர்ப்பதா? - ரஜினி கேள்வி

 

 
kaala2jpg

காவிரி விவகாரத்திற்கும் ‘காலா’ படத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது, காவிரிக்காக, ‘காலா’ படத்தை கர்நாடக மக்கள் எதிர்ப்பது சரியல்ல என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

இயக்குநர் பா.இரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' திரைப்படம் நாளை (ஜூன் 7) வெளியாக உள்ள‌து. இந்நிலையில் ரஜினிகாந்த் காவிரி விவகாரத்தில் தமிழகத்துக்கு ஆதரவாக பேசியதால் அவரது திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிடக் கூடாது என கன்னட அமைப்பினர் போர்க்கொடி தூக்கினர். கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ், கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பின் தலைவர் பிரவீண் ஷெட்டி உள்ளிட்டோர் ரஜினியை கண்டித்து பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் கர்நாடக திரைப்பட வர்த்தக சபை, காலா திரைப்படத்தை கர்நாடகாவில் தடை செய்வதாக அறிவித்தது.

 
 

இதையடுத்து காலா திரைப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து கர்நாடகாவில் காலா திரைப்படத்தை திரையிடுவதற்கு தடையில்லை, கர்நாடக அரசு திரையிடப்படும் திரையரங்குகளுக்கு உரிய போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

‘‘காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம். காவிரி மேலாண்மை பிரச்சனையில் நீதிமன்ற தீர்ப்பை தான் செயல்படுத்த கூறினேன். அதில் என்ன தவறு உள்ளது. காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை. காலாவை உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது’’ என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.

http://tamil.thehindu.com/tamilnadu/article24093555.ece?utm_source=HP&utm_medium=hp-tslead

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.