Jump to content

மாதிரி சட்டசபையில் முதல்வர் யார்?


Recommended Posts

மிஸ்டர் கழுகு: மாதிரி சட்டசபையில் முதல்வர் யார்?

 
 

 

p4d_1527856943.jpg‘அவசரமாக டெல்லி போகிறேன். சில செய்திகளை உமது டேபிளில் வைத்திருக்கிறேன்’ என்று கழுகாரிடமிருந்து அதிகாலையிலேயே வாட்ஸ்அப் மெஸேஜ்கள் வந்து விழுந்தன.  அவை இதோ...

குட்கா விவகாரத்தில் மே 29-ம் தேதி சி.பி.ஐ தரப்பில் எஃப்.ஐ.ஆர் போடப்பட்டுள்ளது. அதில் உள்ள சில வரிகளைப் பூதக்கண்ணாடி வைத்து ஐ.பி.எஸ் அதிகாரிகளில் ஒரு கோஷ்டியினர் அலசுகிறார்கள். ‘‘சட்டவிரோத குட்கா வி.ஐ.பி-யிடமிருந்து மாதா மாதம் மாமூல் பணத்தைப் பலரும் ‘வாங்கினர்’ (ரிசீவ்டு) என்பதுதானே குற்றச்சாட்டு! குட்கா கணக்கு நோட்டில் இருந்ததும் அதுதான். ஆனால், நடந்ததை உல்டா ஆக்கி, பணம் ‘கேட்டதாக’ (டிமாண்ட்) எஃப்.ஐ.ஆர் போட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளைக் காப்பாற்றும் முயற்சி இது’’ என்கிறார்கள் அவர்கள். குட்கா வழக்கில் சி.பி.ஐ விசாரணை கோரி தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்ட வழக்கறிஞர் வில்சன், “எஃப்.ஐ.ஆரில் யார் பெயரும் இல்லை. ஆனால், ‘பப்ளிக் சர்வன்ட்’ என்று குறிப்பிட்டுள்ளனர். இப்படிக் குறிப்பிட்டாலே, அமைச்சர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் எல்லோருமே அடக்கம்தான். எனவே, விசாரணை தொடரும்போது சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு உண்டு. குட்கா தயாரிப்பாளர்களிடம் கைப்பற்றப்பட்ட கணக்கு நோட்டில், ‘யார், யாருக்கு எவ்வளவு லஞ்சம் கொடுக்கப்பட்டது’ என்று தெளிவாக உள்ளது. சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை செய்யும்போது, லஞ்சம் கேட்டார்களா அல்லது லஞ்சம் கொடுக்கப் பட்டதா என்ற விவரம் தெரியவரும். பொறுத்திருந்து பார்ப்போம்” என்கிறார்.

p4b_1527856963.jpg

தேனி மாவட்ட அம்மா பேரவைச் செயலாளராக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவி என்கிற ரவீந்திரநாத்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஜெயலலிதா காலத்தில் இவர், தேனி மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் செயலாளராக இருந்தார். ஒருகட்டத்தில், பன்னீரின் உறவுகள் அனைவரின் பதவிகளையும் அதிரடியாக ஜெயலலிதா பறித்தார். அப்போது, ரவியின் பதவியும் பறிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அரசியலிலிருந்து ஒதுங்கிய ரவி, தன் தந்தையின் ‘தர்மயுத்த’ காலகட்டத்தில்கூட, வெளியில் தலைகாட்டாமல் இருந்தார்.

பன்னீரும் எடப்பாடியும் இணைந்த பின்னர், தேனி மாவட்ட அரசியல் பேனர்களிலும் மேடைகளிலும் தவிர்க்க முடியாத நபராக ரவி மாறினார். இப்போது, அவருக்கு அம்மா பேரவை மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறது. ‘‘எம்.பி-யாகி டெல்லிக்குப் போகவேண்டும் என்பதுதான் ரவியின் கனவு. பன்னீருக்கு இதில் விருப்பம் இல்லை. இது தொடர்பாக ரவிக்கும் பன்னீர்செல்வத்துக்கும் பல முறை சண்டை வந்திருக்கிறது. இப்போதுகூட விருப்பம் இல்லாமல் தான் இந்தப் பதவியை வாங்கியுள்ளார் ரவி. அவரின் இலக்கு எம்.பி பதவிதான்’’ என்கிறார்கள் பன்னீருக்கு நெருக்கமானவர்கள்.

டி.டி.வி.தினகரன் தனது அ.ம.மு.க. கட்சியின் தலைமைக்கழக அலுவலகத்தை, சென்னையில் திறக்கிறார். புதிய அலுவலகக் கட்டடம் அசோக் நகரில் இருந்தாலும்,    கே.கே.நகரை ஒட்டி அந்தத் தெரு வருவதால், இதையும் கே.கே. நகர் ஏரியா என்றுதான் மக்கள் அழைப்பார்கள். ‘‘தி.மு.க தலைவர் கருணாநிதியை நினைவுபடுத்தும் ஏரியாவில் தினகரன் ஏன் கட்சி ஆபீஸைத் திறக்கிறார்? திறப்பு விழா நடத்தும் ஜூன் 3-ம் தேதி, கருணாநிதியின் பிறந்தநாள். போயஸ் கார்டனில் ஜெயலலிதா குடியிருந்த வேதா இல்லத்தின் எதிரே காலியிடம் ஒன்று உள்ளது. அந்த இடம் சசிகலாவின் நிர்வாகத்தில்தான் இருக்கிறது. அங்கேகூட சென்டிமென்ட்டாக புதிய கட்சி ஆபீஸை ஆரம்பித்திருக்கலாமே?’ என அவரின் கட்சி பிரமுகர்கள் சிலர் வெளிப்படையாகப் பேச ஆரம்பித்தனர். இதெல்லாம் தினகரன் காதுக்குப் போனதாம். அதற்கு அவர், ‘‘அசோக்நகர் நல்ல சாய்ஸ்தான். விமர்சனங்களைப் பற்றிக் கவலையில்லை” என்று சொல்லிவிட்டாராம். 

p4c_1527857006.jpg

  ப.சிதம்பரத்தை ஏதாவது ஒரு வழக்கில் ஒருமுறையாவது கைது செய்துவிட வேண்டும் என்று துடிக்கிறது பி.ஜே.பி-பிரதமர் மோடி-ஆடிட்டர் குருமூர்த்தி கூட்டணி. அதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கிலும், ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கிலும் சிதம்பரத்துக்கு எதிராக சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இரண்டு நிறுவனங்களுக்கும் வெளிநாட்டிலிருந்து விதிகளைமீறி பணம் வந்துள்ளதாகப் புகார் இருக்கிறது. ‘‘இதில், நிதியமைச்சகம் சில சட்ட திட்டங்களை மீறியது. அதற்கு அப்போது நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் அழுத்தம்தான் காரணம்’’ என்பது சி.பி.ஐ வைக்கும் குற்றச்சாட்டு. இதுதொடர்பான விசாரணைக்கு மே 31-ம் தேதிக்குள் சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்று சி.பி.ஐ நோட்டீஸ் அனுப்பியிருந்தது. விசாரணைக்குச் சென்றால், ஆதாரம் இருக்கிறதோ... இல்லையோ... கைது செய்யவும் வாய்ப்பு இருக்கிறது என்பதை சிதம்பரம் உணர்ந்துள்ளார். அதையடுத்துதான், இரண்டு வழக்குகளிலும் தன்னைக் கைதுசெய்ய அவர் தடை உத்தரவு பெற்றிருக்கிறார்.

p4a_1527857052.jpg

ரஜினி மக்கள் மன்றத்தில் உறுப்பினர்களைச் சேர்ப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார் ரஜினி. அனைத்து பூத் கமிட்டிகளையும் முழுமையாக அமைக்கும் மாவட்டத்தின் நிர்வாகிகளுடன் போட்டோ எடுத்துக்கொள்ளத் தயாராக இருப்பதாக அறிவித்தாராம். இதில், தூத்துக்குடி மாவட்டம்தான் முதலிடம். ‘‘தூத்துக்குடியில் காயம்பட்டவர்களையும், பாதிக்கப்பட்ட கிராமங்களைச் சேர்ந்தவர்களையும் நேரில் பார்க்க நீங்கள் போகலாமே?’’ என்று ரஜினிக்கு நெருக்கமானவர்கள் கேட்டுள்ளனர். ‘‘நான் போனால், நோயாளிகள், மருத்துவர்கள், நர்ஸ்கள், ஊழியர்கள் என்று திரண்டு வருவார்கள். இதனால், சிகிச்சை பெறுபவர்களுக்கு சங்கடமாகிவிடும். கொஞ்ச நாள் ஆகட்டும்’’ என்று சொல்லிவந்தாராம். மே 28 திங்களன்று இரவு ரஜினி மக்கள் மன்ற செயலாளர் ராஜு மகாலிங்கத்தை போனில் அழைத்த ரஜினி, ‘‘புதன்கிழமை காலை தூத்துக்குடிக்குப் போக நினைக்கிறேன். எனக்கும் என் உதவியாளர் சுப்பையாவுக்கும் டிக்கெட் போடுங்கள்’’ என்றாராம். அதன்பிறகுதான், ஏற்பாடுகள் துரிதமாகின. விமானத்தில் பயணித்த பலரும் ரஜினியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார்கள். விமானம் கிளம்பியதும், ரிட்டர்ன் வந்ததும் சற்று லேட்டாகிவிட்டது. சென்னை திரும்பியதும் பிரஸ்மீட்டில் டென்ஷனாகப் பேசிய ரஜினி, விமான நிலையத்திலிருந்து கிளம்பியபோது, தன் உதவியாளர் காரில் ஏறியிருக்கிறாரா என்பதைக்கூட கவனிக்காமல், வீட்டுக்குப் பறந்தார்.

p4e_1527857031.jpg

சட்டசபைக் கூட்டத்தொடரின் முதல் நாள்... தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் கறுப்புச்சட்டையில் வர, துரைமுருகன் மட்டும் நீலநிற சட்டையில் வந்திருந்தார். ‘‘காலையில் வீட்டில் பவர்கட். இருட்டில் இது கறுப்புச் சட்டை மாதிரி தெரிந்தது. அதனால்தான் தப்பு நடந்துடுச்சு’’ என்றாராம். தி.மு.க நடத்திய மாதிரி சட்டசபையிலும் ஒரு சுவாரசியம். ‘‘மாதிரி சட்டசபையில் நான் முதல்வராக உட்காருகிறேன்’’ என முன்வந்தாராம் துரைமுருகன். ஸ்டாலினிடம் இந்த விஷயம் போனபோது, ‘‘முதல்வர், துணை முதல்வர் என்பதெல்லாம் வேண்டாம். ஆளும் கட்சி வரிசை என்று மட்டும் அமைத்தால் போதும்’’ என்று சொல்லிவிட்டாராம். மாதிரி சட்டசபையில்கூட துரைமுருகனுக்கு அந்த வாய்ப்பில்லாமல் போய்விட்டது. 

படங்கள்: வீ.சக்தி அருணகிரி, கே.ஜெரோம், வி.ஸ்ரீனிவாசுலு


p4_1527857077.jpg சவுடு மண், கிராவல் மண், ஏரி மண் மற்றும் பட்டா இடத்தில் எடுக்கும் மண்... இவற்றைத் தனியார் வசமே தமிழக அரசு விட்டிருக்கிறது. இதைக் கவனிப்பவர், முதல்வர் அலுவலகம் தொடர்புடைய ‘மலை’யான பார்ட்டியாம். ஆற்றோரங்களில் நிலம் வைத்துள்ள பலர், ‘எங்கள் நிலத்தில் இருக்கும் மணலை எடுத்து விற்க அனுமதிக்க வேண்டும்’ எனப் பொய்யான காரணம் சொல்லி அனுமதி வாங்கி, ஆற்று மணலை அள்ளி விற்கிறார்களாம். பலரும் இந்த ரேஞ்சுக்குப் போகக் காரணம், முதல்வர் அலுவலக பார்ட்டிதான் என்கிறார்கள்.

சென்னையைச் சேர்ந்த மல்டிப்ளெக்ஸ் தியேட்டர் நிறுவனம் ஒன்று கோவையில் கால் பதிக்கத் திட்டமிட்டது. ஒரு ஷாப்பிங் மாலில் ஆறு தியேட்டர்களைக் கட்டி முடித்திருக்கிறது. இதற்கு முறைப்படி அனுமதி வாங்கப் போனபோது, ‘உள்ளூர் வி.ஐ.பி ஒருவரிடம் கிளியரன்ஸ் வாங்கி வாருங்கள்’ என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சொல்லிவிட்டார்களாம். இவர்களும் அங்கே போக, அந்த வி.ஐ.பி., ஆறில் மூன்று தியேட்டர்களைத்  தனக்குத் தரும்படி பேரம் பேசினாராம். மிரண்டு நிற்கிறார்கள் அந்த தியேட்டர் நிறுவனத்தினர்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் அலுவலகத்தில் பணிபுரியும் பொலிட்டிக்கல் பி.ஏ-க்களுக்கும் அரசு தரப்பு பி.ஏ-க்களுக்கும் பிரச்னை. ஒருவரை ஒருவர் வேவு பார்க்க ஆரம்பித்து, தகவல்களைத் துணை காதில் போட்டுக்கொண்டிருக்க, அவருக்கு டென்ஷன் தாங்கவில்லையாம். முதல்கட்டமாக, அரசுத் தரப்பு பி.ஏ-க்கள் இருவருக்கு கல்தா கொடுத்துவிட்டார். தலைமைச்செயலகத்தில் பவர்ஃபுல்லான துறையிலிருந்து டெபுடேஷனில் வந்தவர்கள் அந்த இருவரும். ‘அவர்கள் நம்மை என்ன செய்வார்களோ?’ என்று ஓபி.எஸ்-ஸின் பொலிட்டிக்கல் தரப்பினர் கதிகலங்கிக்கிடக்கிறார்கள்.

https://www.vikatan.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தப்பி கிப்பி பிழைத்து வந்தால் அவர்களுக்கு சிறிலங்காவில் கதாநாயக வரவேற்பு வழங்கி ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற வைத்தவிடுவார்கள் சிங்கள மக்கள்...அமெரிக்கா ஏகாதிபத்தியத்துக்கு எதிராக போராடிய சிங்கள லே (ரத்தம்)என கோசத்தை முன் வைப்பார்கள்
    • ஈரான் ரோனின் பெருமதி ஆயிரம் டொல‌ர் ர‌ஸ்சியா ஈரானிட‌ம் வாங்கும் போது இந்த‌ விலைக்கு தான் வாங்கினார்க‌ள்.....................ஈரான் ரோன்க‌ளில் ப‌ல‌ வ‌கை ரோன்க‌ள் இருக்கு 1800 கிலோ மீட்ட‌ர் தூர‌ம் போகும் அளவுக்கு கூட‌ ரோன்க‌ள் இருக்கு.....................இந்த‌ ரோன்க‌ளின் வேக‌ம் மிக‌ குறைவு......................நாச‌கார‌ ரோன்க‌ளை ஈரான் இன்னும் பய‌ன் ப‌டுத்த வில்லை...................அதை ப‌ய‌ன் ப‌டுத்தினால் அழிவுக‌ள் வேறு மாதிரி இருந்து இருக்கும் ........................2010க‌ளில் இஸ்ரேல் ஜ‌டோம்மை க‌ண்டு பிடிக்காம‌ இருந்து இருக்க‌னும் பாதி இஸ்ரேல் போன‌ வ‌ருட‌மே அழிந்து இருக்கும்....................ஹ‌மாஸ் ஒரு நாளில் எத்த‌னை ஆயிர‌ம் ராக்கேட்டை இஸ்ரேல் மீது  ஏவினார்க‌ள்............................   இர‌ண்டு நாளுக்கு முத‌ல் ஈரான் ஏவிய  ரோன்க‌ளின் விலை 3ல‌ச்ச‌ம் டொல‌ருக்கு கீழ‌ என்று நினைக்கிறேன்  ஈரான் ரோன்க‌ளை  தாக்கி அழிக்க‌ 3.3மில்லிய‌ன் அமெரிக்க‌ன் டொல‌ர் என்ப‌து அதிக‌ தொகை................நூற்றுக்கு 90வித‌ ரோன‌ அழிச்சிட்டின‌ம் 10 வித‌ம் இஸ்ரேல் நாட்டின் மீது வெடிச்சு இருக்கு அது புதிய‌ கானொளியில் பார்த்தேன் .................த‌ங்க‌ட‌ விமான‌ நிலைய‌த்துக்கு ஒன்றும் ந‌ட‌க்க‌ வில்லை என்று இஸ்ரேல் சொன்ன‌து பொய் இதை நான் இர‌ண்டு நாளுக்கு முத‌ல் எழுத‌ கோஷான் அவ‌ரின் பாணியில் என்னை ந‌க்க‌ல் அடித்தார்............ இப்ப‌ நீங்க‌ள் எழுதின‌து புரிந்து இருக்கும் பணரீதியா யாருக்கு அதிக‌ இழ‌ப்பு என்று......................................
    • அதுதான் எனக்கும் விளங்கவில்லை. அதுவும் ஆதவன் இதை தூக்கி, தூக்கி அல்லவா அடித்திருக்க வேண்டும். சுபாஷ் கவனத்துக்கு - லைக்காவில் நல்ல சம்பளத்தில் PR Director வேலை இருந்தால் - நான் தயார்🤣. தமிழ் யுடியூப் - அவர்கள் எங்கே சுயமாக செய்தி சேகரிக்கிறார்கள்- ஹைகோர்ட்டுக்கு எப்படி போவது என்பதே தெரிந்திருக்காது. எவனாவது செய்திபோடுவான் - அதை பற்றி ஒரு பத்து நிமிடம் விட்டத்தை பார்த்து யோசித்து விட்டு, பின் வாங்குகிறார்கள், பாண் வாங்குகிறார்கள் என கமெரா முன் வந்து வாயால் வடை மட்டும் சுடுவார்கள். முன்பு நிலாந்தன், அரூஸ், ரிசி, திருநாவுகரசர் பேப்பரிலும், ரமேஷ் வவுனியன், நிராஜ் டேவிட் ரேடியோவிலும் சுட்ட அதே வடைதான். இப்போ யூடியூப்பில். இவர்கள் புலம்பெயர் தமிழர் இயலுமை பற்றி  சுட்ட வடைகளை அவர்கள் நம்ப, அவர்கள் பற்றி இவர்கள் சுட்ட வடையை புலம்பெயர் தமிழர் நம்ப - இப்படி உருவான ஒரு மாய வலை - 2000 பின்னான அழிவுக்கு பெரும் காரணமானது. அத்தனை அழிவுக்கு பின்னும் இவர்கள் வடை வியாபார மட்டும் நிற்கவே இல்லை. வடைகளை வாங்க வாடிக்கையாளர் இருக்கும் போது, யூடியூப் காசும் தரும் போது - அவர்கள் ஏன் விடப்போகிறார்கள். நான் இப்போ யூடியூப்பில் தமிழ் வீடியோ என்றால் - மீன் வெட்டும் வீடியோத்தான். ஒரு சாம்பிள். நான் ஸ்பீட் செல்வம்னா ரசிகன். ஆனாலும் உங்க அளவுக்கு Artificial intelligence   இல்லை Sir.
    • இன்றைய கால கட்டங்களிலும் இப்படியான நம்பிக்கையில் ஆசிரியர்கள் இருப்பது மிகவும் கவலையளிக்கும் விடயம் ..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.