Jump to content

கருணாநிதி 95-ஆவது பிறந்தநாள்...


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

Karunanidhi meets his cadres today

95-ஆவது பிறந்தநாள்: தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி... விண்ணதிர உற்சாக முழக்கங்கள்!

95ஆவது பிறந்தநாளையொட்டி தொண்டர்களை தனது கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதி சந்தித்தார்.

கருணாநிதி இன்று 95-ஆவது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஓராண்டுக்கு மேல் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த கருணாநிதியின் அடுத்தடுத்த உடல் முன்னேற்றங்கள் தொண்டர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இன்று பிறந்த தினத்தையொட்டி தமிழகமெங்கும் சாலைகளில் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் திமுகவினர் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் கோபாலபுரம் இல்லத்தில் தங்களை நிச்சயம் கருணாநிதி தங்களை சந்திப்பார் என்ற நம்பிக்கையின் பேரில் அவரது இல்லத்தில் நூற்றுக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/karunanidhi-meets-his-cadres-today-321490.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போற போக்கை பார்த்தால் அடுத்த முதல்வர் அவராக இருக்கவும் வாய்ப்பு பிரகாசமாய் இருக்கு.....!  tw_blush:

Link to comment
Share on other sites

கருணாநிதி: 95 சுவாரஸ்ய தகவல்கள்

திமுக தலைவரும், முன்னாள் தமிழக முதல்வருமான கருணாநிதி தனது 95 வயது பிறந்தநாளை இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடுகிறார். அவர் குறித்த 95 தகவல்களை இங்கே பகிர்கிறோம்.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89
  1. நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாரூருக்கு அருகில் உள்ள திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ம் வருடம் ஜூன் 3 ம் தேதி அன்று, முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்தார். இவரது இயற்பெயர் தட்சிணாமூர்த்தி ஆகும்.
  2. கருணாநிதி தம் பெற்றோருக்கு மூன்றாவது குழந்தை. அவருக்கு முன்பாக பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் உண்டு. சண்முகசுந்தரம் அம்மாளின் மகன்கள்தான் முரசொலி மாறனும் முரசொலி செல்வமும். பெரியநாயகம் அம்மாளின் மகன் அமிர்தம்.
  3. கிரிக்கெட் காதலர் கருணாநிதி என்பது அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சிறு வயதில் அவருக்கு பிடித்தமான விளையாட்டாக இருந்தது ஹாக்கி. போர்ட் ஸ்கூல் ஹாக்கி டீமிற்காக விளையாடி இருக்கிறார் கருணாநிதி.
  4. கருணாநிதியின் முதல் மேடை பேச்சு 'நட்பு' குறித்து.  எட்டாம் வகுப்பு மாணவராக இருந்த போது (1939) பள்ளியில் நடந்த பேச்சுப் போட்டியில் 'நட்பு' என்ற தலைப்பில் பேசினார்.
  5. கருணாநிதி முதன்முதலில் துவங்கிய பத்திரிகையின் பெயர் மாணவ நேசன். 1941ல் வெளியான மாணவ நேசன் ஒரு மாத இதழ்.
  6. முதன் முதலில் கருணாநிதி தொடங்கிய அமைப்பு தமிழ் மாணவர் மன்றம்.
  7. நீதிக்கட்சியை சேர்ந்த அழகிரிசாமியால் தன் சிறுவயதில் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவர் கருணாநிதி. அதன் காரணமாகவே தம் மகனுக்கு அழகிரி என்று பெயர் சூட்டினார்.
  8. தான் திராவிட சிந்தனையால் ஈர்க்கப்படாமல் இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்திருப்பேன் என்று ஒரு முறை கருணாநிதி கூறினார்.
கருணாநிதிபடத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

9. எம்.ஜி.ஆருக்கும் கருணாநிதிக்கும் நட்பு ஏற்பட்டது சேலம் மாடர்ன் தியேட்டரில்தான்.

10. மூன்று முறை திருமணம் செய்துகொண்டவர் கருணாநிதி . முதல் மனைவி பத்மாவதி. அவகுப் பிறந்தவர், மு.க.முத்து. திருமணமான சில ஆண்டுகளிலேயே மரணமடைந்தார் பத்மாவதி. கலைஞரின் இரண்டாவது மனைவியான தயாளு அம்மாளுக்கு பிறந்தவர்கள் அழகிரி, ஸ்டாலின், செல்வி மற்றும் தமிழரசு. அவரது மூன்றாவது மனைவியான ராஜாத்தியம்மாளுக்குப் பிறந்தவர் கனிமொழி.

11. கருணாநிதி எழுதி முதன் முதலில் அரங்கேற்றப்பட்ட நாடகம், 'பழனியப்பன்'. திருவாரூர் பேபி டாக்கீஸில் 1944ல் அரங்கற்றப்பட்டது.

12. 50களிலிருந்து 70கள் வரை தமிழ்த் திரையுலகில் கோலோச்சிய சிவாஜி கணேசன், எம்.ஜி. ராமச்சந்திரன் ஆகிய இருவருக்கும் மிகப் பெரிய வெற்றிப்படங்களை அளித்தவர் கருணாநிதி. சிவாஜிக்கு பராசக்தி, மனோகரா. எம்.ஜி.ஆருக்கு மந்திரி குமாரி,மலைக்கள்ளன் .

13. கருணாநிதி முதன் முதலில் வசனம் எழுதிய திரைப்படம் 1947ல் வெளியான ராஜகுமாரி. இந்தப் படம்தான் முதன் முதலில் எம்.ஜி.ஆர் முன்னணி வேடத்தில் நடித்த படம்.

14. 1947ல் வெளியான ராஜகுமாரி தொடங்கி, 2011ல் வெளியான பொன்னர் - சங்கர் வரை சுமார் 64 வருடங்கள் திரையுலகில் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் என பல்வேறு துறைகளிலும் பணியாற்றியிருக்கிறார் கருணாநிதி.

15. பராசக்தி படம் வெளிவந்தபோது, அந்தப் படத்தை கிண்டல் செய்து ஒரு இதழில் பரப்பிரம்மம் என்ற பெயரில் கார்ட்டூன் வெளியிடவே, அதே பெயரில் ஒரு நாடகத்தை எழுதி மாநிலம் முழுவதும் நடத்தினார் கருணாநிதி.

16. கருணாநிதி கடைசியாக வசனம் எழுதிய தொடர் கலைஞர் தொலைக்காட்சியில் வெளியான ஸ்ரீ ராமானுஜர் - மதத்தில் புரட்சி செய்த மகான். அந்தத் தொடருக்கு அவர் எழுத ஆரம்பித்தபோது அவரது வயது 92. எழுதிவந்தபோதே அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.

17. கருணாநிதி பத்து சமூக நாவல்களையும் 6 சரித்திர நாவல்களையும் எழுதியிருக்கிறார்.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

18. 21 நாடகங்களை கருணாநிதி எழுதியிருக்கிறார். 1957ல் தி.மு.கவுக்குக் கிடைத்த உதயசூரியன் சின்னத்தைப் பிரபலபடுத்துவதற்காக உதயசூரியன் என்ற நாடகத்தை எழுதினார்.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

19.இனியவை 20 என்ற பெயரில் பயண நூல் ஒன்றையும் கருணாநிதி எழுதியிருக்கிறார்.

20. கருணாநிதி பணியாற்றிய படங்களின் எண்ணிக்கை 69.

21. கருணாநிதி கதை - வசனம் எழுதி எம்.ஜி.ஆர். நடித்த படங்களின் எண்ணிக்கை 9.

22. கருணாநிதியை ஆரம்பகாலத்தில் எம்.ஜி.ஆர் 'ஆண்டவரே' என்று அழைத்திருக்கிறார்.

23. கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதன், 1969ல் கருணாதியிடம் பணியில் சேர்ந்தவர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளாக உதவியாளராக இருந்துவருகிறார். இரண்டு முறை கோபித்துக்கொண்டு வெளியேறி, மீண்டும் கருணாநிதியிடம் சேர்ந்திருக்கிறார்.

24. கருணாநிதிக்கு 'கலைஞர்' என்ற அடைமொழியை வழங்கியது நடிகவேள் எம்.ஆர்.ராதா தான். கருணாநிதி எழுதிய, 'தூக்குமேடை' என்ற நாடகத்தை பார்த்து இந்த பட்டத்தை வழங்கினார்.

25.இதுவரை 13 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டிருக்கும் கருணாநிதி, இதுவரை ஒரு தேர்தலில்கூட தோல்வியடைந்ததில்லை.

26.சென்னை சேப்பாக்கம் தொகுதியில்தான் அதிகபட்சமாக மூன்று முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார் கருணாநிதி. சைதாப்பேட்டை, அண்ணாநகர், திருவாரூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் தலா இரண்டு முறை தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

27.1957லிருந்து தற்போதுவரை 60 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராக இருந்துவரும் கருணாநிதி மிகக் குறுகிய காலத்திற்கு சட்ட மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.

28. 33 வயதில் முதன் முதலாக சட்டமன்ற உறுப்பினரானார் கருணாநிதி.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

29. கருணாநிதி 45 வயதில் முதலமைச்சராகப் பதவியேற்றார்.

30. கருணாநிதி சட்டமன்றக் கன்னிப் பேச்சே மிகவும் கவனிக்கப்பட்டது. அதில் நங்கவரம் பண்ணை விவசாயிகளுக்காகப் பேசினார் கருணாநிதி. பிறகு இதற்காக 20 நாட்கள் போராட்டமும் நடத்தி, பிரச்சனைக்குத் தீர்வு கண்டார்.

31. தமிழக சட்டப்பேரவையில் தி.மு.க. சட்டமன்றக் கட்சிக் கொறடா, எதிர்க் கட்சி துணைத் தலைவர், பொதுப் பணித் துறை அமைச்சர், முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகிய பதவிகளை கருணாநிதி வகித்திருக்கிறார்.

32. முதல்முதலாக (1957) குளித்தலை தேர்தலில் தொகுதியில் போட்டியிட்ட  கருணாநிதி  தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் கே.ஏ. தர்மலிங்கத்தைவிட 8,296 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

33. இரண்டாவது முறையாக அவர் வெற்றி பெற்றது தஞ்சாவூர் தொகுதியில். 1962 சட்டமன்ற தேர்தலில் அவரை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் பரிசுத்த நாடாரை 1,928 வாக்கு வித்தியாசத்தில் வீழ்த்தினார் கருணாநிதி.

34. இந்த 1962 சட்டமன்ற தேர்தல் குறித்து சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று உண்டு.தேர்தல் பிரசாரத்தை தொடங்கிய கருணாநிதி முதல் முதலாக வாக்கு சேகரிக்க சென்றது அவரை எதிர்த்து நின்ற பரிசுத்த நாடார் வீட்டிற்குதான் என்ற தகவலை தருகிறார் தஞ்சாவூரை சேர்ந்த முதியவர் ஒருவர்.

35. 1967 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுதான் திமுக முதல்முதலாக ஆட்சியை பிடித்தது.  சைதாப்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் விநாயக மூர்த்தியைவிட 20, 484 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

36. 1971 ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் அவர் சைதாப்பேட்டை தொகுதியிலிருந்துதான் போட்டியிட்டார்.  தம்மை எதிர்த்த ஸ்தாபன காங்கிரஸ் வேட்பாளர் ராமலிங்கத்தை விட  சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் கருணாநிதி வென்றார். கருணாநிதி பெற்ற வாக்குகள் 63,334.

37. 1971ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரை, திமுக மற்றும் காங்கிரஸ் இடையே இருந்த போட்டி, 1977 ஆம் ஆண்டு தேர்தலில் திமுக - அதிமுக என்று மாறியது. ஆம், எம்.ஜி ஆர் அதிமுக என்ற கட்சியை தோற்றுவித்து, தனது நீண்டகால நண்பரான கருணாநிதிக்கு எதிராக அரசியல் களத்தில் நின்றார். எம்.ஜி.ஆர் ஆதரவு அலை கடுமையாக வீசியது. இந்த அலையிலும் துடுப்பு போட்டு வென்றார் கருணாநிதி. அண்ணா நகர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி தன்னை எதிர்த்து போட்டியிட்ட கிருஷ்ணமூர்த்தியைவிட 16, 438 வாக்குகள் அதிகம் பெற்று வென்றார். ஆனால், திமுக ஆட்சியை இழந்தது.

38. கருணாநிதி மிகக் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற தேர்தல் 1980ஆம் ஆண்டு தேர்தல். அண்ணா நகர் தொகுதியில் எச்.வி. ஹண்டேவை எதிர்த்துப் போட்டியிட்ட கருணாநிதி வெறும் 699 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.

39. எம்.ஜி.ஆர் மரணத்திற்கு பின் நடந்த 1989 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டார் கருணாநிதி. அதிமுக இரண்டாக உடைந்து ஜெயலலிதா அணி, ஜானகி அணி என்று நின்றது. இந்த தேர்தலில் கருணாநிதி பெற்ற வாக்குகள் 41,632. அவரை எதிர்த்து நின்ற முஸ்லீம் லீக்கின் வஹாப் பெற்ற வாக்குகள் 9641. அதாவது 31,991 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார் கருணாநிதி.

40. ஜெயலலிதா முதல்முதலாக முதல்வரானது 1991 சட்டமன்றத் தேர்தலில்தான். ராஜீவ் மரணத்தினால் ஏற்பட்ட அனுதாப அலையினால் அதிமுக - காங்கிரஸ் கூட்டணி மாபெரும் வெற்றி கண்டது. துறைமுகம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதியும், எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம்வழுதியும் மட்டும்தான் வெற்றி பெற்றனர். கருணாநிதி பெற்ற வாக்குகள் 30932. அவரை எதிர்த்து போட்டியிட்ட இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சுப்பு பெற்ற வாக்குகள் 30042.

41. 'ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டை ஆண்டவனால் கூட காப்பாற்ற முடியாது' என்ற ரஜினி சொன்னது 1996 சட்டமன்றத் தேர்தல் சமயத்தில்தான். அதிமுகவுடனான கூட்டணி தொடர்பாக முரண்பட்ட காங்கிரஸ் தலைவர் ஜி. கே. மூப்பனார் கட்சியை விட்டு வெளியேறி தமிழ் மாநில காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடங்கினார்.  தி.மு.க மற்றும் த.மா.க கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில், சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி, காங்கிரஸ் வேட்பாளர் நெல்லை கண்ணனை 35,784 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார். மீண்டும் முதல்வரானார்.

42. தி.மு.கவும் பா.ஜ.கவும் 2001 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தன. இந்த தேர்தலிலும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 4834 வாக்கு வித்தியாசத்தில் வென்றார்.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

43. தி.மு.க 2006 சட்டமன்ற தேர்தலில் வலுவான கூட்டணி அமைத்தது. திமுக அணியில் காங்கிரஸ், பா.ம.க மற்றும் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள் இருந்தன. கருணாநிதி சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு 34,188 வாக்குகள் பெற்று வென்றார்.

44. 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில், திமுக 31 இடங்களில் மட்டுமே வென்றாலும், திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட கருணாநிதி 50, 249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

45. 2016ஆம் தேர்தலில்தான் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். திருவாரூர் தொகுதியில் 68366 வாக்கு வித்தியாசம். மாநிலத்திலேயே இது அதிக அளவு.

46. சட்டசபை விவாதங்களிலும் எப்போதும் சிறப்பாக செயல்பட கூடியவர் கருணாநிதி. ஒரு முறை, "தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் கருவறைக்குள் செல்ல உரிமை இல்லையே" என்று பேசிக்கொண்டிருந்த கருணாநிதியைப் பார்த்து, "கோயிலுக்கே போகாத கருணாநிதிக்கு இதுபற்றி எதற்குக் கவலை?" என்றார் இந்திய தேசிய காங்கிரஸை சேர்ந்த டி.என்.அனந்தநாயகி. "கொலை செய்தவர்கள் மட்டுமா கோர்ட்டுக்குப் போகிறார்கள். வாதாடுபவர்களும் தானே போக வேண்டும்?" என்றவர் கருணாநிதி.

47. கருணாநிதி முதன்முறையா சட்டமன்றத்தில் பேசிவிட்டு அமர்ந்ததும், அப்போது சட்டப்பேரவை தலைவராக இருந்த யு. கிருஷ்ணாராவ் ஒரு காகிதத்தில், 'Very Good Speech' என்று எழுதி கொடுத்தார்.

48. 1974க்கு முன்பாக முதலமைச்சர்கள் சுதந்திர தினம், குடியரசு தினங்களில் கொடியேற்ற முடியாது. ஆளுனர்தான் அதைச் செய்வார். 1974ல் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியிடம் இது குறித்துப் பேசிய கருணாநிதி, முதல்வர்கள் சுதந்திர தினத்தன்று கொடியேற்றும் வழக்கத்தை உருவாக்கினார். 1974 ஆகஸ்ட் 15ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிய கருணாநிதி, சுதந்திர தினத்தன்று கொடியேற்றிய முதல் முதலமைச்சர்.

49. மனிதர்களை மனிதர்களே இழுத்துச் செல்லும் கை ரிக்ஷா வழக்கம் இந்தியாவின் சில மாநிலங்களி்ல் இன்னும் உள்ள நிலையில், 1973லேயே தமிழகத்தில் அதைத் தடை செய்தார்.

50. 1953ல் திருப்பத்தூரில் நடந்த கார் விபத்தில்தான் கருணாநிதியின் இடது கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. அடுத்தடுத்த விபத்துகளிலும் அதே கண்ணில் அடிபட்டது.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

51. அண்ணா மறைவுக்குப் பிறகு முதல்வரான போதுதான் "உடன்பிறப்பே" என முரசொலியில் கடிதம் எழுதத் துவங்கினார் கருணாநிதி. 1971 முதல் "உயிரினும் மேலான உடன்பிறப்பே" என்று பேசவும் துவங்கினார்.

52. கருணாநிதி முரசொலியில் எழுதிவந்த "உடன்பிறப்பே" என்ற கடிதத் தொடர், உலகின் நீண்ட தொடர்களில் ஒன்று. முரசொலி துவங்கியதிலிருந்து, 2016ல் உடல்நலம் குன்றும்வரை இதனை எழுதிவந்தார் கருணாநிதி.

53. உடன்பிறப்பே என விளித்து கருணாநிதி எழுதிய கடிதங்களின் எண்ணிக்கை 7,000க்கும் மேல்.

54. `சங்­கத்­தமிழ்', `தொல்­காப்­பிய உரை', `இனி­யவை இரு­பது', `கலை­ஞரின் கவிதை மழை',உட்­பட 150-க்கும் மேலான நூல்­களை கரு­ணா­நிதி எழு­தி­யி­ருக்­கிறார்.

55. உடன்­பி­றப்­பு­க­ளுக்கு இவர் எழு­திய கடி­தங்கள் தொகுக்­கப்­பட்டு 12 தொகு­தி­க­ளாக வெளி­யி­டப்­பட்­டுள்­ளன.

56. முதல்வராக இருக்கும்போதும், இல்லாதபோதும் அதிகாலையிலேயே பத்திரிகைகளைப் படித்துவிட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு தொலைபேசியில் பேசுவது கருணாநிதியின் வழக்கம்.

57. 'நெஞ்சுக்கு நீதி' என்ற தலைப்பில் தன் வாழ்க்கை வரலாற்றை முரசொலி மற்றும் குங்குமம் இதழில்  எழுதினார் கருணாநிதி. 

58. ஒரு சினிமா வசனகர்த்தாவாக கருணாநிதியை உச்சத்திற்கு கொண்டு சென்றது 'பராசக்தி` திரைப்படம்தான்.  இத்திரைப்படம் வசனத்திற்காகவே திரும்ப திரும்ப பார்க்கப்பட்டது.

59. கல்லக்குடி போராட்டம்தான் அவரை அரசியல் தளத்தில் முக்கிய தலைவராக பரிணமிக்க செய்தது. இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கல்லக்குடியில் ரயில் தண்டவாளத்தில் தலைவைத்துப் படுத்து, ரயில் மறியலில் இறங்கினார்.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

60. இந்தி என்பது உணவு விடுதியிலிருந்து எடுத்துச் செல்லும் உணவு, ஆங்கிலம் என்பது ஒருவர் சொல்ல அதன்படி சமைக்கப்பட்ட உணவு, தமிழ் என்பது குடும்பத் தேவையறிந்து, விருப்பமறிந்து, ஊட்டமளிக்கும் தாயிடமிருந்து பெறப்பட்ட உணவு"  என்று அக்டோபர் 13, 1957 ஆம் ஆண்டு நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பேசினார் கருணாநிதி.

61. சென்னையின் மிகப் பிரபலமான ஜெமினி மேம்பாலம் எனப்படும் அண்ணா மேம்பாலம் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் 21 மாதங்களில் கட்டப்பட்டு, 1973 ஜூலை 1ஆம் தேதி போக்குவரத்துக்குத் திறக்கப்பட்டது. அந்த காலகட்டத்தில் நாட்டிலேயே இம்மாதிரி கட்டப்பட்ட மூன்றாவது பாலம் அது.

62. தன் மூளையே தனக்கு டைரி என்பார் கருணாநிதி. அந்தளவுக்கு ஞாபக சக்தி கொண்டவர் அவர்.

63. சி.என். அண்ணாதுரையின் முதலாவது நினைவு நாளின்போது, மத்திய அரசு அவரது புகைப்படத்துடன் தபால் தலை வெளியிட விரும்பியபோது, அவரது கையெழுத்தையும் அந்த புகைப்படத்தின் மீது இடம்பெறச் செய்தார் அப்போது முதல்வராக இருந்தார் கருணாநிதி. "அப்போதுதான் தமிழ் எழுத்துகள் அந்த தபால்தலையில் இருக்கும்" என்றார்.

64. மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய "நீராடும் கடலுடுத்த" பாடலை தமிழ்த்தாய் வாழ்த்தாக அரசு விழாக்களில் பாடும் வழக்கத்தை 1970ல் கருணாநிதி ஏற்படுத்தினார். முதன் முதலாக திரைப்பட விருது வழங்கும் விழாவில் இந்தப் பாடல் பாடப்பட்டது.

65. சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தில், கருணாநிதி குறித்த அனைத்து தகவல்களும் தொகுக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.

66. 1970ல் லண்டனில்கூட ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி இருக்கிறார் கருணாநிதி. பாரீசில் நடந்த மூன்றாவது உலகத் தமிழ் மாநாட்டிற்குச் செல்லும் வழியில் இந்த செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டது.

67. தமிழக முதலமைச்சர்களில் அதிக அளவில் வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணங்களை மேற்கொண்டவர் கருணாநிதி. அமெரிக்காவிற்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார்.

68. எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் என்ற பட்டத்தைக் கொடுத்தது கருணாநிதிதான்.

கருணாநிதிபடத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

69. சென்னையில் உள்ள வள்ளுவர் கோட்டத்திற்கு காரணகர்த்தாவாக இருந்தது கருணாநிதிதான்.ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உருவாக்கியதும் கருணாநிதிதான்.

70. நாட்டிலேயே முதல் முறையாக 1997லேயே தகவல்தொழில் நுட்பத் துறைக்கென ஒரு கொள்கையை அறிவித்தது கருணாநிதி தலைமையிலான அரசுதான். அந்தத் தருணத்தில் தரமணியில் கட்டப்பட்ட டைடல் பார்க், தமிழகத்தின் வளர்ச்சியில் பெரும் பாய்ச்சலையே நிகழ்த்தியது.

71. 1959ஆம் ஆண்டு நடந்த சென்னை மாநகராட்சித் தேர்தலில் 100ல் 45 இடங்களைப் பிடித்தது தி.மு.க. இதற்காக மோதிரம் ஒன்றை கருணாநிதிக்கு பரிசளித்தார் சி.என். அண்ணாத்துரை.

72. 1967ல் முதன் முதலில் சி.என். அண்ணாதுரை முதல்வரானபோது, அண்ணா, நெடுஞ்சழியன் ஆகியோருக்குப் பிறகு அமைச்சரவையில் மூன்றாவது இடத்தில் பொதுப்பணித்துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராகப் பதவியேற்றார்.

73. நெருக்கடி நிலை காலகட்டத்தில் பத்திரிகைகளுக்கு தணிக்கை முறை அமலில் இருந்ததால், கைதுசெய்யப்பட்ட தி.மு.கவினரின் பட்டியலை வெளியிட யுக்தி ஒன்றைக் கடைப்பிடித்தார் கருணாநிதி. 1976 பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணா நினைவு நாளன்று அண்ணா சதுக்கத்திற்கு மலர் வளையம் வைக்க வர இயலாதோர் பட்டியல் என்று ஒரு பட்டியலை வெளியிட்டார். அதில் மாவட்டவாரியாக கைதுசெய்யப்பட்டவர்களின் பெயர் இடம்பெற்றிருந்தது.

74. உடல்நலம் நன்றாக இருந்தவரை, காலை 4.30 மணிக்கு எழுந்து, எல்லாப் பத்திரிகைகளையும் படித்துவிடும் பழக்கம் கொண்டவர் கருணாநிதி. சில சமயங்களில் சம்பந்தப்பட்ட பத்திரிகை அலுவலகங்களுக்கும் அதிகாலையிலேயே அழைத்துப் பேசுவார்.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

75. கருணாநிதியை மிகவும் பாதித்த மரணங்களில் முரசொலி மாறனின் மரணம் முக்கியமானது. "அவனுக்கு முன்னாடி நான் போயிருக்கனும்" என்று கருணாநிதி அடிக்கடி கூறுவதாக அவரது உதவியாளர் சண்முகநாதன் சொல்கிறார்.

76. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்திற்கு யாரும் தொலைபேசியில் அழைத்து தகவல் பெறமுடியும். தொலைபேசி ஒலித்தவுடன், "வணக்கம், தலைவர் இல்லம்" என்ற குரல் ஒலிக்கும்.

77. கருணாநிதியின் கோபாலபுரம் இல்லம் வாங்கப்பட்டது, 1955ல். சரபேஸ்வரய்யர் என்பவர் இந்த வீட்டை விற்றார்.

78. கருணாநிதியின் வீட்டில் உள்ள தனி நூலகத்தில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் உண்டு.

79. தன்னுடைய கோபாலபுரம் இல்லம் தயாளு அம்மாளின் காலத்திற்குப் பிறகு மருத்துவமனையாக இயங்க வேண்டுமென்று கூறி, அன்னை அஞ்சுகம் அறக்கட்டளைக்கு எழுதிக் கொடுத்துள்ளார்.

80. தன் வீட்டை ஒட்டியுள்ள வேணுகோபலா சுவாமி கோவிலுக்கு இதுவரை சென்றதில்லை என்கிறார் கருணாநிதி.

81. தமிழ் ஆண்டு வரிசைக்கு திருவள்ளுவர் ஆண்டு என்ற பெயரை அளித்தவர் கருணாநிதிதான்.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

82. உடல் நலம் நன்றாக இருந்த காலகட்டத்தில் பெரும்பாலான நாட்களில் கட்சி அலுவலகத்திற்கு காலை, மாலை என இரு வேளையும் சென்றுவிடுவார் கருணாநிதி.

83. 2018ல்தான் இந்தியாவின் அனைத்து கிராமங்களுக்கும் மின் இணைப்பு என்ற இலக்கு எட்டப்பட்டது. ஆனால், 1969லேயே இதற்கான முயற்சிகளைத் துவங்கி, நாட்டிலேயே முதலிடம் வகித்தது தமிழ்நாடு.

84. பல காலகட்டங்களில் தேசிய அரசியலில் கருணாநிதி செல்வாக்கு செலுத்தியிருந்தாலும் ஒரு போதும் நாடாளுமன்றத் தேர்தலில் கருணாநிதி போட்டியிட்டதில்லை.

85. நேரம் தவறாமை கருணாநிதியின் முக்கியப் பண்புகளில் ஒன்று. எந்த ஒரு நிகழ்வுக்கும் குறித்த நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார் கருணாநிதி.

86. கருணாநிதி செயல்படுத்திய திட்டங்களில் அவருக்கு மிகவும் பிடித்த திட்டங்களில் ஒன்று பெரியார் நினைவு சமத்துவபுரத் திட்டம். 1998ல் மதுரை மாவட்டம் மேலக்கோட்டையில் முதல் சமத்துவபுரம் துவங்கப்பட்டது. 237 சமத்துவபுரங்கள் தமிழகத்தில் அமைக்கப்பட்டன. இதில் தலித்துகளுக்கு 40 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டன.

87. ராஜாஜியில் துவங்கி, டி பிரகாசம், ஓ.பி. ராமசாமி ரெட்டியார், பி.எஸ். குமாரசாமி ராஜா, காமராஜர், பக்தவத்சலம், சி.என். அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஜானகி ராமச்சந்திரன், ஜெயலலிதா, ஓ. பன்னீர்செல்வம் என 11 முதல்வர்களின் ஆட்சிக்காலத்தில் அரசியல் செய்திருக்கிறார் கருணாநிதி.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

88. கருணாநிதி தலைவராக இருந்த காலத்தில் இரு முறை கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டது. முதல் முறை எம்.ஜி.ஆரால். இரண்டாவது முறை வைகோவால். இரு முறையும் கட்சியை மீட்டெடுத்தார் கருணாநிதி.

89. உணவுப் பாதுகாப்பிற்காக, இந்திய உணவுக் கழகத்தைப்போல தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தை உருவாக்கி வளர்த்தெடுத்தார் கருணாநிதி.

90. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம் கருணாநிதியால் கொண்டுவரப்பட்டதுதான். ஆனால், வீடுகளுக்கு இலவச வண்ணத் தொலைக்காட்சி பெட்டி வழங்கும் அவரது திட்டம் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

91. ஒரு முறை சட்டமன்றத்தில், மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி பேச எழுந்த போது, அவரை சுருங்க பேச சொல்வதற்காக, ' அயிரை மீன் அளவுக்குப் பேசவும்' என்று துண்டு சீட்டு  எழுதி கொடுத்தார் கருணாநிதி.

92. 2001-ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே கருணாநிதியை கைது செய்யப்பட்டார். ஜூன் 30 - ஆம் தேதி நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட அந்த கைது தேசிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. மூத்த தலைவரை கண்ணியமாக நடத்தவில்லை என்று கண்டனங்களும் எழுந்தன.

கருணாநிதி 95: சுவாரஸ்ய தகவல்கள்படத்தின் காப்புரிமைFACEBOOK/PG/KALAIGNAR89

93. எம்.ஜி.ஆர் ஆட்சியில், தமிழக சட்டசபை சபாநாயகராக க.ராஜாராம் இருந்தார். அப்போது ஒரு விவாதத்தின் போது, எதிர்க்கட்சியான தி.மு.க உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து முழக்கமிடுகின்றனர். கூச்சலை கட்டுப்படுத்த முயற்சிக்கிறார் சபாநாயகர். ஆனால் கூச்சல் குறையவில்லை. "எப்படியோ போங்க. இனி உங்களை அந்த ஆண்டவன்தான் காப்பாத்தணும்" என்று கூறிவிட்டு அமைதியாகி விட்டார் சபாநாயகர். அதன்பின் எழுந்த கருணாநிதி "இவங்களை எல்லாம் ஆண்டவன்தான் காப்பாத்தணும்னு நீங்க சொன்னீங்க. அதான் நான் எல்லோரையும் அமைதிப்படுத்தினேன். ஏன்னா, இதற்கு முன்பு ஆண்டவன் (ஆட்சியில் இருந்தவன்) நான்தானே" என்கிறார். இது போன்ற பல நகைச்சுவையான தருணங்கள் அவரது சட்டமன்ற வரலாற்று பக்கத்தில் உள்ளது.

94. அரசியல் விமர்சனங்களை எள்ளலுடன் எதிர்கொள்ளக் கூடியவர் கருணாநிதி. டாஸ்மாக் கடைகள் இயங்கும் நேரத்தை ஒரு மணி நேரம் குறைத்தது குறித்து கருத்து தெரிவித்து இருந்த பா.ம.க நிறுவனர் ராமதாஸ், "நான் கேட்டது அறுவை சிகிச்சை... கருணாநிதி செய்ததோ முதலுதவி" என்று கூறி இருந்தார். இது தொடர்பாக பதில் அளித்த கருணாநிதி, "அறுவை சிகிச்சைக்கு முன்னர் முதலுதவிதான் அவசியம். சாதாரணமாக எல்லாருக்கும் தெரிந்த விஷயம் மருத்துவம் படித்த மருத்துவருக்கு புரியாமல் இருப்பது ஆச்சர்யம்" என்றார்.

95. ”மனசாட்சி உறங்கும் சமயத்தில்தான் மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது.” - இது அவர் அடிக்கடி மேற்கோள்காட்டிய வரி.

https://www.bbc.com/tamil/india-44342086

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சென்னை,
 
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான மு.கருணாநிதி ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய பிறந்தநாளை தொண்டர்களுடன் உற்சாகமாக கொண்டாடுவது வழக்கம். அவர் உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகி, கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வெடுத்து வருகிறார்.
 
இந்த நிலையில், இன்று தனது 95வது பிறந்த நாளை அவர் உற்சாகமுடன் கொண்டாடினார்.  அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர்.
 
பிரதமர் மோடி, மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி, மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இன்று டுவிட்டர் வழியே தங்களது வாழ்த்துகளை அவருக்கு தெரிவித்து கொண்டனர்.
 
கருணாநிதி 100 ஆண்டுகள் வாழ வேண்டும் என தனிப்பட்ட முறையில் ஆசைப்படுகிறேன், கட்சி ரீதியாக கருத்து சொல்ல முடியாது என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
 
இதேபோன்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி டுவிட்டர் வழியே தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டு உள்ளார்.  அவரது செய்தியில், நல்ல ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழவேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், கருணாநிதியை வாழ்த்த வயதில்லை, வணங்குகிறேன்.  ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும் வாழ இறைவனை வேண்டுகிறேன்.  அவர் அரசியல் பணியை சீரும், சிறப்புற செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளார்.
 
இதேபோன்று ஆர்.கே. நகர் தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ. டி.டி.வி. தினகரன் கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
 
நூறாண்டுகளுக்கு மேல் வாழ்ந்திட வாழ்த்துகள் என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.
www.dailythanthi.com
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலைஞ்ர் கருணாநிதி அவர்கள் 100 வயது வரை வாழ வாழ்த்துக்கள் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன பிரமாதம். அண்மையில் நான் சந்தித்த ஒரு பெண்( வெள்ளை) தனக்கு இப்ப 95 வயது என்றும் விரைவில் தான் கிழவி அகப்போறன் என்டு சொன்னா.

Link to comment
Share on other sites

’என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..!’


 

 

yen-uyirinum-melana

 

 

 

மீண்டும் ஒலிக்கட்டும் அந்தச் சூரியக்குரல்!  

கடந்த எழுபது ஆண்டுகளாக, அவரின் பெயரை ஒருநாளில் ஒருமுறையேனும் தமிழகத்தில் உச்சரித்துவிடுவார்கள். அவர் பற்றிய செய்தியோ கட்டுரையோ கடிதமோ கேள்வி பதில் பாணி பேட்டியோ, அறிக்கையோ இடம்பெறாமல் இருந்ததே இல்லை. அவர்... கலைஞர் மு.கருணாநிதி.

 

தமிழக அரசியல் சக்கரத்தின் நடுப்பாகம் இவர்தான். இவரைச் சுற்றியே எப்போது அரசியல் சூழல்கள் இருக்கும். தமிழகத்தின் ஏதோவொரு மூலையில் ஏதோவொரு சின்ன அசம்பாவிதமோ பிரச்சினையோ நடந்தால், அதை தன் கேள்விக்கணைகள் மூலம் அரசுக்கும் ஆட்சியாளர்களுக்கும் எடுத்துரைப்பதும் இடித்துரைப்பதும் கலைஞரின் தனி அரசியல்.

எத்தனை மணிக்கு மீட்டிங் தொடங்கினால் கூட்டம் வரும். எத்தனை மணிக்கு மீட்டிங் முடிந்தால், பத்திரிகையாளர்கள் அவர்கள் அலுவலகம் சென்று, நியூஸ் போடமுடியும் என்பதெல்லாம் அவர் போடுகிற துல்லிய அளவீடு. மாலை பேப்பருக்கு ஒரு செய்தி, மறுநாள் பேப்பருக்கு ஒரு அறிக்கை என உழைப்பையே சுவாசமாகக் கொண்டவர் கலைஞர். எழுதுவதையே மூச்சாகக் கொண்டவர் அவர். பேசுவதையே உயிராகக் கொண்டவர் கருணாநிதி.

போராட்டங்களுக்கு அஞ்சாத கட்சி திமுக. அதன் தலைவரின் வீரியம் அப்படி. தோல்விகளைக் கண்டு துவளாதவர் கலைஞர். தொடர்ந்து தோல்விகளையே சந்தித்து வந்த போதும், கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கட்சியை எந்த செய்கூலியும் சேதாரமும் இல்லாமல், கூடு கலையாமல் பொத்திக் காத்த நிர்வாகத் திறன், கலைஞருக்கு மட்டுமே உண்டான ஸ்பெஷல்.

எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் கேட்கலாம். எவ்வளவு பேர் வேண்டுமானாலும் கேட்டு மடக்கலாம். ஆனால் கேள்விகளை முடிக்கும் அந்தத் தருணத்தில் பதில் சொல்லும் சாதுர்யமும் அந்தக் கேள்வியைக் கொண்டெ எதிர்க்கேள்வி போடுவார் கலைஞர்.

நகைச்சுவை கலந்த பேச்சு, நற்றமிழ் தோய்ந்த பேச்சு, இலக்கியம் சார்ந்த அறிவு, அரசியலின் அரசியலையும் அறிந்துணர்ந்த புத்திசாலித்தனம், வியூகங்கள் அமைக்கும் விசால குணம், எதிர்த்தோரையும் அரவணைக்கும் சாதுர்யம், எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரின், கட்சியின் அந்த ஊரில் உள்ள ஆரம்பகர்த்தா முதல் புதிதாக சேர்ந்தவர்கள் வரை அனைவர் பெயரையும் ஞாபக டைரியில் குறித்து வைக்கிற கூர்ந்த புத்தி... என கலைஞரின் தனித்துவம், மகத்துவம் கொண்டது!

 

 

மேடையில் அமர்ந்தவர், எழுந்து, நடந்து, மைக்கின் முன்னே நின்று, பேசத் தொடங்கினால், என்ன பேசுவார், எந்த அரசியலை எடுத்துவைப்பார் என்று யோசிப்பதற்கு முன்னாலே ‘அதை எப்போது சொல்லுவார்’ என்று எல்லோரும் காத்திருப்பார்கள். அந்த ஒற்றைச் சொல்... உசுப்பிவிடும். கரவொலி எழுப்பும். தலைவா என்று அலறச் செய்யும். டாக்டர் கலைஞர் என்று கோஷமிடும். தமிழினத்தலைவர் என்று போற்றிக் கொண்டாடுவார்கள். ஒரு சொல் மகத்துவம் இது. சொல்லின் மகத்துவம் அது. சொல்லப்படுபவரின் மகத்துவமும் அதுவே!

அந்தச் சொல்... ’என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!’

அந்தக் கரகர குரல், தமிழனின் செவியில் நுழைந்து என்னவோ செய்யும். காந்தமென ஈர்க்கும். அப்படியொரு குரலும் சொல்லும் பேச்சுமான ஆற்றல் மிக்க முதுபெரும் தலைவர் கலைஞருக்கு இன்று பிறந்தநாள். 95வது பிறந்தநாள்.

இன்றைக்கு சமூகவலைதளங்களில் குவிந்துகொண்டிருக்கின்றன வாழ்த்துப் பூங்கொத்துகள்! அந்தப் பூக்களெல்லாம் கலைஞரைப் பார்த்து, அவரின் உதட்டசைவு தருணத்துக்காக ஏங்கிக் கிடக்கின்றன.

‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே!’

இதோ... இது எப்போதோ அவர் சொன்ன குரல். எப்போதும் கேட்க வேண்டுமே, சொல்லவேண்டுமே எனும் எதிர்பார்ப்புகொண்ட குரல்... கரகர குரல்.

அந்தக் குரல் மீண்டும் ஒலிக்க வேண்டும் என்பதுதான் தமிழர்களின், திமுகவினரின் எதிர்பார்ப்பு.

‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே’ என்று அவர் ஒரேயொரு முறை சொல்லிவிட்டால் போதும்... இன்னொரு சூரிய விடியல்... உதய சூரிய எழுச்சி என்று கொண்டாடுவான், உடன்பிறப்பு!

கலைஞருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

http://www.kamadenu.in/news/special-articles/3135-yen-uyirinum-melana.html?utm_source=site&utm_medium=TTH_slider_banner&utm_campaign=TTH_slider_banner

Link to comment
Share on other sites

கருணாநிதி சாதனைகளுக்கு அடித்தளமிட்ட குணங்கள்! #Karunanidhi95

 
 

த்தாம் வகுப்பு தோல்வியடைந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சிறுவன், தமிழ் நாட்டின் முதலமைச்சராக வருதல் அத்தனை எளிமையான ஒன்றல்ல. அது அவருடைய தமிழுக்குக் கிடைத்த பரிசு. அவருடைய மொத்த சாதனைக்கும் பின்னால் அவரைத் தாங்கிப் பிடித்திருந்தது அவருடைய தமிழ் ஒன்றுதான். கருணாநிதியைப் புரிந்துகொள்ளுதல், அவருடைய தமிழாற்றலைப் புரிந்துகொள்வதாகவே இருக்கும்.

கருணாநிதி

 

அவரிடம் இருந்த பேச்சாற்றல், எழுத்தாற்றல் இவைதான் அவரை இரு கரம் பிடித்து முதல்வர் பதவி நோக்கி அழைத்துச் சென்றன.

அவருடைய திரைப்பட வசனங்கள் அன்றைய ஐம்பதுகளில் அறுபதுகளில் அவரை புகழின் உச்சத்தில் நிறுத்தின. சிவாஜிக்கு ‘பராசக்தி’, ‘மனோகரா’ என்றால் எம்.ஜி.ஆருக்கு ‘மந்திரிகுமாரி’, ‘மலைக்கள்ளன்’. அன்றைய இரண்டு உச்ச நடத்திரங்களை அடையாளப்படுத்திய தமிழுக்குச் சொந்தக்காரர்.

‘‘ஆகாரத்துக்காக அழுக்கை உண்டு தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன்... அதுபோலத்தான் நானும்’’ என கால் மணிநேரம் கோர்ட் வசனம் எழுதி பிரமிக்க வைக்கத் தெரிந்தவர். அது சிவாஜி கணேசனுக்கு.

காதலியை இரவு நேரத்தில் சந்திக்க வருவார் நாயகன். வெகுநேரம் பேசியாயிற்று. ‘‘வரட்டுமா?’’ என்பார்.

காதலி, எங்கே செல்லப்போகிறீர்கள் என்பதாக ‘‘எங்கே?’’ என்பார்.

‘‘அருகே’’ என்பார் நாயகன். இது எம்.ஜி.ஆருக்கு.

‘‘ஓடினாள்... ஓடினாள் வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள்...’’ சேக்ஸ்பியர் நாடகத்தில் வரும் வசனக் காட்சி போல தமிழர்களால் இன்றும் உச்சரிக்கப்படும் மறக்க முடியாத வசன வரிகள். 

குறளோவியம் என ஒவ்வொரு குறளுக்கும் ஒரு கதை எழுதினார். குறளுக்கு உரை எழுதினார். தொல்காப்பியப் பூங்கா எழுதினார். 

‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பது வள்ளுவன் மொழி. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ கணியன் பூங்குன்றன் எழுதிய சங்க இலக்கிய வரி. இரண்டையும் இணைத்தார்... ‘‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்... பிறந்தபின்... யாதும் ஊரே யாவரும் கேளிர்.’’ என்றார் சுருக்கமாக.

சமயோசிதமாக, சுருக்கமாக, வேகமாக பதில் சொல்வது அவருக்கே உரிய திறமை.

வெளிநாட்டில் இருந்து வந்த நிருபர் ஒருவர், ‘‘நீங்கள் என்ன படித்தீர்கள்?’’ என்றார்.

‘‘எம்.ஏ., பி.எஃப்.’’ என்றார்.

‘‘அப்படி ஒரு படிப்பா?’’

‘‘மார்ச் அட்டம்ப்ட்... பட்.. ஃபெயில்’’ என்றார்.

கருணாநிதி

சட்டசபையில் அவருடைய விவாதங்கள் சுவாரஸ்யமானவை. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் ஒரு உறுப்பினர், ‘‘இப்படியே போனால் தமிழகத்தை ஆண்டவந்தான் காப்பாற்ற முடியும்’’ என்றார் ஓர் உறுப்பினர்.

‘‘தமிழகத்தை ஏற்கெனவே ஆண்டவன் நான். உறுப்பினர் என்னைத்தான் சொல்லியிருக்கிறார் என நினைக்கிறேன்’’ என்றார்.

நடிகர் ராதா ரவி, தன் தந்தை நடித்த ரத்தக்கண்ணீர் நாடகத்தை சில ஆண்டுகளுக்கு எடுத்து நடித்தார். நாடகத்தைத் தொடங்கிவைத்துப் பார்த்தார். முடிவிலே பேசினார்.

‘‘ஒப்பனையைப் பார்த்தேன். அதில் உங்கப்பனையே பார்த்தேன்’’ என ராதா ரவியை நோக்கி ஆரம்பித்தபோது அரங்கம் அதிர்ந்தது.

கவியரங்கம்... கண்ணதாசன், சுரதா, வாலி, அப்துல் ரகுமான்... என அவ்வப்போது களைகட்டும்.

ஒரு முறை கணக்கு என்றத் தலைப்பில் ஒரு கவியரங்கம். கழித்தல், பெருக்கல், வகுத்தல், பெருக்கல் என ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தலைப்பு. கண்ணதாசன் வெகுகாலம் தி.மு.க-வை விட்டுப் பிரிந்திருந்து மீண்டும் வந்து சேர்ந்தார். அவருக்குக் கொடுத்த தலைப்பு கூட்டல்.

‘‘நாட்டை ஆண்டாலும் என்னை அமைச்சர் என்றுதான் சொல்கிறீர்... கண்ணதாசனை கவியரசர் என்கிறீர்’’ என ஆரம்பித்துத் திரும்பி வந்த கவியரசரை அரவணைத்தார். 

கவியரங்கத்தில் தமிழ் விளையாடும். ஒருமுறை கவிஞர் அப்துல் ரகுமான் தாமதமாக வருகிறார். கருணாநிதி தலைமையில் கவியரங்கம் தொடங்கிவிட்டது.

தாமதமாக வந்த கவிஞரை ஜாடையாகக் கிண்டலடித்தார்கருணாநிதி.

அப்துல் ரகுமான் கவிபாட வந்தார்.

‘‘ஏன் காத்திருக்கக் கூடாதா?’’ என்றார் கருணாநிதியைப் பார்த்து.

சபையே அதிர்ச்சியுடன் கவனித்தது. அடுத்தவரி... ‘‘காத்திருக்கக் கூடாதா?... எம்மையெல்லாம் காத்திருக்கக் கூடாதா?’’ என்றார் அப்துல் ரகுமான். கருணாநிதி மகிழ்ந்து சிரித்தார்.

‘‘வெற்றி பல பெற்று 

விருது பெற நான் வரும்போது

வெகுமானம் எதுவேண்டும் 

எனக்கேட்டால்...

அப்துல் ரகுமானைத் தருக என்பேன்’’ என்றார் கருணாநிதி.

தமிழ்ச் சபைகளில் புரவலரே புலவராக இருந்து தமிழ் வளர்த்த காலம் அது.

எம்.ஜி.ஆர் இறந்தபோது அண்ணா சாலையில் இருந்த கருணாநிதியின் சிலையை எம்.ஜி.ஆரின் தொண்டர் ஒருவர் இடித்தார். அந்தப் படம் முரசொலியில் வெளியானது.

‘‘பரவாயில்லை தம்பி...

நீ என் முதுகிலே குத்தவில்லை..

நெஞ்சிலேதான் குத்துகிறாய்’’ எனப் பிரசுரித்திருந்தார்.

கருணாநிதி

கதை-  வசனம், மேடைப் பேச்சு, கவியரங்கம், சட்டசபை உரை என அனைத்திலுமே கருணாநிதியின் முத்திரை ஆழப் பதிந்திருந்தது. கடந்த 60 ஆண்டுகளில் அவருடைய படம் வெளிவராத செய்தித்தாள் இல்லை... அவரில்லாமல் செய்தியில்லை. போற்றலையும் தூற்றலையும் சமமாக பாவிக்கத் தெரிந்த ஆற்றலையும் அவர் பெற்றிருந்தார்.

ரோமாபுரி பாண்டியன், பாயும்புலி பண்டாரக வன்னியன், பொன்னர் சங்கர், தென்பாண்டிச் சிங்கம் போன்ற சரித்திரக் கதைகளையும் வெள்ளிக்கிழமை, ஒரே ரத்தம் போன்ற சமூக கதைகளையும் எழுதினார். சுமார் 80 ஆண்டு பொது வாழ்வில் அவர் எதிர்கொண்ட தலைவர்கள் ஏராளம்...

இந்திரா காந்தி, காமராஜர், மொராஜி தேசாய், வி.பி.சிங், ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய், ராஜீவ் காந்தி, எம்.ஜி.ஆர்., போன்ற பலருடனும் அரசியல் நடத்தியவர். இத்தனை பெரிய பரப்பில் அரசியல் நிகழ்த்திய தலைவர் இந்தியாவிலேயே யாரும் இல்லை. அது ஒரு சாதனை என்றால் அதனுடன் இத்தனை இலக்கிய நூல்கள், கூட்டங்கள், பத்திரிகை ஆசிரியர் பணி எனச் சுழன்று சூறாவளியாக வந்தவர். இன்று அவருடைய அமைதி, எதிரிகளைக்கூட அசைத்துப் பார்த்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். வாழ்நாளெல்லாம் ஓடிக்கொண்டே இருந்த ஒருவரின் அமைதி ஏற்படுத்திய ஆழமான உணர்வு அது.

பிரதமர் மோடி அவர் வீடு தேடிவந்து பார்த்துவிட்டுச் சென்றது அதனுடைய அடையாளம்தான். எப்போதும் சந்திக்க மறுத்த ராகுல் காந்தி வந்து பார்த்துவிட்டுச் சென்றார். புதிதாகக் கட்சித் தொடங்கிய ரஜினியும் கமலும் வந்து ஆசி பெற்றுச் செல்கிறார்கள். நூற்றாண்டை நெருங்கும் அவர் நிகழ்த்திய சாதனையில் இந்த அமைதியும்கூட முக்கியமானதுதான்.

https://www.vikatan.com/news/tamilnadu/126647-what-is-the-secret-for-karunanidhis-success.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவோ பெயரும் புகழுமாக இருந்திருக்க வேண்டியர் ஒரு குறுகிய வட்டத்திற்குள்ளேயே நிற்கிறார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, ரதி said:

கலைஞ்ர் கருணாநிதி அவர்கள் 100 வயது வரை வாழ வாழ்த்துக்கள் 

 

3 பொண்டாட்டி ஊரெல்லாம் வப்பாட்டி என கொல்லைபுறமே கொள்கையாய் கொண்டு திராவிட இனமே தலை நிமிர செய்த ஒப்பற்ற தலைவர் கருணாநிதி பிறந்தநாள் இன்று....

DevRumpXcAA1tJE.jpg

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.